தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
கந்தபுராணம் தெரிந்த தமிழனுக்கு கந்தப்பனை தெரியுமா? மணி ஸ்ரீகாந்தன். ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று ஆரம்பித்து ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் மாபெரும்; படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், அய்யன் திருவள்ளுவர். உலகத்தின் ஒட்டுமொத்த தத்துவத்தையும் ஒரே நூலில் முப்பாலாக பிரித்து உலக அரங்குகளில் தமிழனின் பெருமையை பறைசாற்றியவர் வள்ளுவர். “தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்…” என்று குறளின் பெருமையை அக்கால புலவரான கபிலர் வியந்து பாடியிருக்கிறார். அதிகாலை நேரம், கபிலர் பசும் புல் ஒன்றைப் பார்க்கிறார்.தரையுடன் ஒட்டிக் கிடக்கும் அந்தச் சிறிய புல்லின் …
-
- 0 replies
- 2k views
-
-
பாமரர் வழக்கே பாவலர் வழக்கு தேர்வு முடிவு வெளியானதும் மாணவன் ஒருவன் “அஞ்சும் (ஐந்தும்) பாஸ்” என மகிழ்ச்சியில் குதிக்கிறான். அவன் ஐந்தும் எனச் சொன்னதை வைத்து அவன் எழுதிய தேர்வுத் தாள்கள் மொத்தமே ஐந்து என்பது நமக்குப் புலனாகிறது. “இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்” என நவில்வது தொல்காப்பியம். மேற்கூறிய எடுத்துக்காட்டில் மொத்தம் இவ்வளவுதான் என (இனைத்தென) அறிந்த சினை முதற்சொல் (ஐந்து) வினைச்சொல்லுடன் இணையும் இடத்தில் (‘பாஸ்’ செய்தல் என்ற வினைப்படு தொகுதியில்) “உம்” வேண்டும். “அஞ்சும் பாஸ்” எனச் சொன்னவன் தொல்காப்பியனை அறிந்திலன்; அதனைக் கேட்டு மொத்தம் ஐந்து தாள்கள் எனப் பு…
-
- 2 replies
- 943 views
- 1 follower
-
-
வாழ்வியல் தடமாற்றமும் வள்ளு வரின் தடுமாற்றமும் மானுட வாழ்வியல் காட்டுமிராண்டி நிலையிலிருந்து கணினி, இணைய நிலையை வந்தடைந்திருக்கிறது. இதற்கிடைப்பட்ட பல்லாயிரமாண்டு காலப் பரிணாம வளர்ச்சியையும் பரிமாண நிலைகளையும் உள்ளடக்கிக் கொண்டு உயர்ந்துள்ளது. தனிமனித குடும்ப, சமூக, அரசு நிலைகளில் மானுட வாழ்வியல் தத்தமக்கென ஒழுகலாற்று நெறிகளை உருவாக்கிச் செம்மைப்படுத்திக் கொண்டே இயங்குகிறது. மரபுகள், விழுமியங்கள், அறநெறிகள் மனிதனின் இயல்புநிலைகளைச் செம்மைப்படுத்து கின்றன. தமிழர்களின் வாழ்வியலைச் சங்காலச் சமூக அகம், புறம் என்ற பாகுபாட்டுமுறை பல்வேறு இலக்கிய, இலக்கணங்களின்வழி உயிர்ப்புமிக்கதாக நிலவச்செய்யும் வல்லமையுடன் வாழ்கிறது. எனினும், காலந்தோறும் மானுட வாழ்வியல் தன் இயல்புக்கேற்ற …
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
முன்னோர் மொழி பொன்னே போல் - சுப.சோமசுந்தரம் அறநெறிகளும் உவமைகளும் மீண்டும் மீண்டும் இலக்கியங்களில் மாறுதலின்றி கையாளப்படுவதும் எடுத்தாளப்படுவதும் தொன்று தொட்ட நிகழ்வே. இவற்றில் ஒருவரைப் பார்த்துதான் இன்னொருவர் எழுத வேண்டும் என்றில்லை. இடமும் காலமும் மாறுபடாத போது அறநெறிகள் மாறுபட வாய்ப்பில்லை. மங்கை நல்லாளின் ஒளிரும் முகம் மதிமுகமாய் பாமரனுக்கும் தோன்றும். அதனை முழுநிலவெனச் சொல்வதற்கு ஒரு புலவனிடம் இன்னொரு புலவன் கேட்க வேண்டியதில்லை. ஆனால் ஒரு புலவனின் ஒரு குறிப்பிட்ட வருணனையோ கூற்றோ அவனுக்கு முந்தையோரை நினைவு படுத்துதல் உண்டு. அவ்வாறான சில இடங்களில் அம்முந்தைய கூற்று கல்வி கேள்விகளிற் சிறந்த இப்புலவனுக்குத் தெரியாதிருக்க வாய்ப்பில்லை என்று அறுதியிட்டுச் சொல…
-
- 2 replies
- 2.1k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தின் பெருமை! '...ஏறி உயர்ந்த மலைகள் இல்லையாயினும் என்ன இருந்தன தோள்கள் என்று கூறி உழைத்து பின் ஆறி கலைகளில் ஊறிச் சிறந்தது யாழ்ப்பாணம்' -மகாகவி-
-
- 1 reply
- 784 views
-
-
காதலினால் தும்மல் செய்வீர் உலகத்தீரே ! பொதுவாக தும்மல் நுரையீரலில் நேர்ந்த சிறிய / பெரிய அசௌகரியத்துக்கான அடையாளமே. எனவே நான் தொடர்ச்சியாய் தும்மும் போது என் ஆச்சி ('பாட்டி'க்கான என் வட்டார வழக்கு; வட்டார வழக்கு அவரவர்க்குரிய பெருமையான அடையாளம்தானே!), அம்மா, அத்தை போன்ற மூத்தோர் நூறு, இருநூறு......என வாழ்த்துவர். அதற்குப் பொருள் 'குறையொன்றுமில்லை. நீ நூறு வருடங்கள் வாழ்வாய்! இருநூறு வருடங்கள் வாழ்வாய்!....' என்பதாம். எனது ஒவ்வாமை காரணமாய் நான் இவர்களிடம் இரண்டாயிரத்து ஐநூறு வருடங்கள் ஆயுள் பெற்றுள்ளேன் என்பது ஒரு புறம் இருக்கட்டும். தும்மல் தொடர்பாக வேறொரு நம்பிக்கையும் உண்டு. அது 'யாரோ உன்னை நினைக்கிறார்' என்பது. அது இலக்கிய மரபாகக் கூட தோன்றியிருக்கலாம். எவ்வாற…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
கள்வன் மகனும் உள்ளம்கவர் கள்வனும் பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி தமிழ்த் திரைப்படங்களில் காதல் வயப்பட்ட ஆணின் செயல்களை நாம் நடைமுறையில் காணாத மிகைக் காட்சிகளாகக் காட்டுவர்; இப்படியும்கூட ஒருவனால் செய்யமுடியுமா என்று பலவேளைகளில் விவாதங்கள் வந்துபோவதுண்டு. காட்டாக, மணிரத்னத்தின் மௌனராகம்(1986) திரைப்படத்தில், கதாநாயகி ரேவதியை அருகில் வைத்துக்கொண்டே ரேவதியின் அப்பாவை, "மிஸ்டர் சந்திரமௌலி", என்று அட்டகாசமாக அழைப்பார் கதாநாயகன் கார்த்திக். அமர்க்களம்(1999) திரைப்படத்தில் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு! என் உள்நெஞ்சு சொல்கின்றது!" பாடல் காட்சியில், பரபரப்பானதொரு காலைவேளையில், ஷாலினியின் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி உள்ளிட்டோர…
-
- 0 replies
- 2.6k views
-
-
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி அன்பர்களே! இலக்கிய நயம் உணர்ந்து ரசிக்கவும், ருசிக்கவும், இலக்கியத் தமிழ் நயத்தில் நனைந்து தமிழுணர்வில் திளைக்கவும் யாழ் இனிய அற்புதக்களம் அமைத்துள்ளது என்றால் மிகையன்று. உலகெங்கும் வாழும் தமிழர்களின் இணைய-யுக தமிழ்ச்சங்கம் யாழ். 'தி இந்து' தமிழ் இதழில் வந்த எனது திருவாசகக் கட்டுரைகளின் தொகுப்பை யாழ் இணையத்தில் தற்செயலாகக் கண்டபின்னர் 'யாழ்' முத்தமிழ் கண்டேன். அறிவார்ந்த தமிழர்களின் யாழ் சங்கமத்தில் பதிவிடுவதும், அவர்தம்மோடு கூடிக் கலப்பதுவும் ஈடு இணையற்ற உயிர்ப்பு. சில நாட்களுக்கு முன் எழுத்தாளர் ஷங்கர்பாபு அவர்களிடமிருந்து "ஒரு சந்தேகம். . . என்று குறிப…
-
- 0 replies
- 6.3k views
-
-
என்னடா இது! இந்த மதுரைக்கு வந்த சோதனை! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி திருவிளையாடல் புராணத்தில் வரும் பாண்டிய மன்னன் - ஏமனாதப் புலவர் - பாணபத்திரர் - மதுரைச் சொக்கநாதர் சோமசுந்தரக் கடவுள் போன்று அண்மையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை பகிரலாம் என்றிருக்கிறேன். எடுத்துக்காட்டுகள் ஒரு பொது-ஒப்புமைக்காகச் சொல்லப்பட்டதே தவிர அதை அப்படியே எடுத்து, இதில் யார் மன்னன், யார் ஏமனாதப்புலவர், யார் அவைக்களப் புலவர், யார் சொக்கநாத சோமசுந்தரக்கடவுள் என்று ஆராய்ச்சியில் இறங்க வேண்டாம் என்று அன்புடன் வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இனி கதைக் களத்துக்கு வருவோம். கடவுட்கொள்கை சார்ந்த தத்துவ நிலைப்பாடுகளில் வடதுருவமும், தென் துருவமும் போன்று கருத்து நி…
-
- 8 replies
- 3k views
- 1 follower
-
-
மாணிக்கவாசகரின் 'ஐயா'-வும் கம்பனின் 'ஐயோ'- வும் பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி படைப்பாளியான கவிஞன், தன் பாடுபொருளுக்குச் சொற்கள் கிடைக்கப் போதாமையால் கையறு நிலை அடைந்து தவிக்கும்போது பயன்படுத்துவது 'ஐயோ!' என்னும் சொல். மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டான மாணிக்கவாசகரின் காலத்தில் இறைவனைப் பாடும்போது, மங்கலமான சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் என்னும் கவிதை மரபு இருந்தது. எனவே, திருவாசகம் - சிவபுராணத்தில் "உய்ய என் உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யா! விமலா! விடைப்பாகா! வேதங்கள் ஐயோ! எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!" என்று எழுதவேண்டிய இடத்தில் 'ஐயோ' என்பது அமங்கலமாகக் கருதப்பட்டதால், அச்சொல்லுக்குப் பதிலாக 'ஐயா' என்ற சொல்லை இ…
-
- 2 replies
- 1.9k views
-
-
பின்வரும் குறுந்தொகைப் பாடலை நம்மில் பலரும் வாசித்திருப்போம். பாடலின் பொருளை எளிமையாக்கும் நோக்கில், நான் அறிந்த தமிழில் விளக்கங்களுடன் இங்கு படைத்துள்ளேன். இணைய நண்பர்கள் அனைவரும் இப்பாடலை வாசித்துச் சுவைத்து, தங்களின் கருத்துரையை இணைக்க வேண்டுகிறேன். பாடலுக்குச் செல்லும் முன் பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்தது. குறிஞ்சித் திணை என்பது ``மலையும் மலை சார்ந்த இடமும்’’, அதாவது இயற்கை எழில், வளம் கொண்ட நிலப்பரப்பாகும். அந்நிலப்பரப்பில் நிகழும் வாழ்வியல் பற்றிக் கூறுவது குறிஞ்சித் திணையாகும். பொதுவாக குறிஞ்சித் திணையாவது - தனித்திருக்கும் தலைவனும் தலைவியும் அல்லது வேட்டைக்குச் செல்லும் ஒரு இளைஞனும…
-
- 11 replies
- 11.8k views
- 1 follower
-
-
ஈழத் தமிழரோடு பழகி பாருங்கள், அழகிய தமிழ் கேட்கலாம். -சுகி சிவம்.-
-
- 12 replies
- 2.6k views
-
-
மாமா - மாமி மச்சான் - மச்சாள் சித்தப்பா - சின்னம்மா அத்தை - ? அத்தான் - ? எமது பாடசாலை வகுப்பு வட்ஸ் அப் குழுமத்தில் இந்த வினாக்களை வினாவினேன். திருப்தியான பதில் கிடைக்கவில்லை. பின்னர், யாழ் கருத்துக்களத்திலும் திண்ணையில் கேட்டுப்பார்த்தேன். பதில்கள் திருப்தி இல்லை. இங்கு எனது சந்தேகங்கள் எவை என்றால் இவை 1- தூய தமிழ்ச்சொற்களா, 2- பழந்தமிழர் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டு உள்ளனவா, 3- அத்தை, அத்தான் ஆகிய சொற்பதங்கள் இந்திய தமிழ்சினிமாவின் இறக்குமதிகளில் சிலவோ என்பது. ******* யாரிடம் கேட்கலாம்? இன்று மாலை இணுவில் தமிழ் பண்டிதர், கவிஞர் ச. வே. பஞ்சாட்சரம் அவர்களை தொலைபேசியில் அழைத்து அவரிடம் எனது வினாக்களை கேட்டேன். அவர் சொன்னவை …
-
- 21 replies
- 10k views
-
-
மய்யம் என்றால் என்ன? மையம் என்றால் எங்களுக்கு என்ன? தமிழல்லாத சொற்களுக்காக ஏன் இந்த சொற்போர்?.. நடுவம் என்பது தான் தமிழ் .. எழுத்துச் சீர்திருத்தம் என்ற போர்வையில் பெரியார் செய்த வேலையே ஐ உருபுச் சொற்களை அய் ஆக்கும் முறைமை. ஆனாலும் முதலில் தமிழ்ச் சொல்லில் கலந்திருக்கும் சமசுக்கிருதத்தை அறிந்து கொள்வது நல்லது என நினைக்கிறேன். தமிழர் தாயகப் பகுதிகளில் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலுமே இந்து மதத்தின் தாக்கத்தினால் மொழிக்கலப்பு மிக அதிகமாகவிருக்கிறது. தொன்மையான வழிபாட்டு முறைகளைப் பேணும் தென் தமிழீழத்தில் மொழிக்கலப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே நிகழ்ந்திருக்கிறது. தமிழகத்தில் ஆங்கிலம் கலந்த வழக்கு இருப்பதால் ஆங்கிலம் கலக்காத யாழ்ப்பாணத் தமிழ், அதற்கென ஒரு உயர்வைப் பெற்றுக்கொண்டது…
-
- 10 replies
- 7.7k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
நீங்கள் படித்த பாடசாலையின் கீதங்களை தயவுசெய்து பகிர்ந்து கொள்ளவும். நன்றி. எனது கல்லூரிக் கீதம் கார்மேல் பாத்திமாக் கல்லூரி இறையருளிலே பாரிலொளி வீச வேண்டும் தங்கக் கதிரிலே மங்கிடாதன்னொளி பொங்க என்றும் வாழவே செங்கழல் பொன்மலர் கொண்டு போற்றினோமே. கார்மேல் பாத்திமாக் கல்லூரி இறையருளிலே ஒளிருவாய்! ஒளிருவாய்! ஒளிருவாய்! எங்கள் கலைக்கோயில் கார்மேல் பாத்திமா உந்தன் ஒளிபரப்பி ஈழமணிநாடு மிளிரவே எந்த நாளும் இன்புடனே இயங்குவாய்... கார்மேல் பாத்திமாக் கல்லூரி இறையருளிலே ஒளிருவாய்! ஒளிருவாய்! ஒளிருவாய்! தூய்மை நேர்மை என்பன உன் கொள்கையே தாயாம் ஈழம் நிறைவுறத் தன்னிகரில் சேவையே நேயமாக ஆற்றி நீடு வாழ்கவே... கார்மேல் பாத்திமாக் கல்லூ…
-
- 40 replies
- 10.3k views
- 1 follower
-
-
தமிழில் இருந்து கடன் வாங்கப்பட்ட ஆங்கில வார்த்தைகள்!
-
- 1 reply
- 1.4k views
-
-
என்னே நம் தமிழர்களின் ஒரு கணிதவியல்... செயற்கைக்கோள் உதவியில்லை தொலைக்காட்சிகளின் துணையுமில்லை ஆனாலும் பன்னிரு மாதங்களின் காலநீட்டிப்பினை அறுதியிட்டு கூறியுள்ளனர் நம் பண்டைய தமிழர். பண்டைய வானவியலில் ஒரு நாளினை 60 நாழிகையாக பிரித்துள்ளனர். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிப்பதாகும் ஆக 60 நாழிகை என்பது 1440 நிமிடங்களை குறிப்பதாகும். நாம் ஒரு நாளினை 24 மணி நேரமாக பிரித்து இருக…்கிறோம் அப்படியெனில் ஒரு நாளுக்கு கிடைக்கும் நிமிடங்கள் 24*60=1440 ஆகும். வருடத்தின் சில நாட்களில் பகல் நீண்டு இருக்கும் சில நாட்களில் இரவு நீண்டு இருக்கும் என நாம் பள்ளியில் அறிவியல் பாடத்தில் படித்து இருப்போம் ஆனால் நம்முடைய முன்னோர்கள் எந்த உபகரணங்களும் இல்லாமல் 12 மாதங்களை…
-
- 1 reply
- 861 views
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
எதிரிகளை மிரள வைத்த ராஜேந்திர சோழனின் ஒட்ட தேச போர் எப்படி இருந்தது தெரியுமா?
-
- 0 replies
- 1.3k views
-
-
இன்று சரஸ்வதி பூசை நிறைவு நாள். கல்வி / ஞானம் / அறிவு இவற்றிற்கு அதிபதியாகவும், கலைத்தெய்வமாகவும் போற்றப்படும் கலைமகளை நன்றியுடன் போற்றும் தினமாகும். இப்படியான ஒரு தினத்திலே ஒவ்வொரு நவராத்திரி காலத்திலும் என்னை ஆக்கிரமித்த, சரஸ்வதியின் புகழ் பாடும் ஒரு பாடல் பற்றிய எனது எண்ணங்களை பகிர வேண்டும் என்று தோன்றியதன் விளைவே இப்பதிவு. 'வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாரதி பாடல் என்னைப் பொறுத்தவரை ஒரு நவராத்திரி கால தீம் பாடல் (Theme song) ஆகிவிட்டது என்பது விந்தையல்ல! பாரதியாரின் கவிதைகள் பாமரரும் புரிந்து கொள்ளும் எளிமையான ஆனாலும் அர்த்தம் பொதிந்த வரிகளுக்காகப் புகழ் பெற்றவை. அந்த வகையில் ஏறத்தாழ 90 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்தப்பாடல்…
-
- 4 replies
- 3.3k views
-
-
தமிழ் மரபு இயற்கைக்கும் மனிதருக்குமான உறவுதான்
-
- 1 reply
- 743 views
-
-
அறிவோம் நம் மொழியை: போக வேண்டிய தூரம் ஒரு மொழியின் தொன்மை எவ்வளவு பெருமைக்குரியதோ அதே அளவுக்கு அதன் இளமையும் பெருமைக்குரியது. மொழியில் இளமை என்பது சமகாலத்துடன் அதற்கு இருக்கும் உயிரோட்டமுள்ள உறவைக் குறிப்பது. தொன்மைச் சிறப்பு மிக்க தமிழ் மொழி எந்த அளவுக்கு இளமையாக இருக்கிறது? இன்றைய சூழலில் தமிழை எப்படி அணுகுவது? மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கேற்பத் தமிழை எப்படிப் பயன்படுத்துவது? உலகின் எல்லா அறிவுத் துறைகளும் தமிழில் வருவதற்கான முயற்சிகள் நடக்கின்றனவா? அன்றாட வாழ்வில் தமிழின் இடம் என்ன? உலக நடப்புகளைப் புரிந்துகொள்வதில் தமிழின் திறன் என்ன? அந்த விஷயத்தில் ஆங்கிலத்துடன் ஒப்பிடுகையில் தமிழ் எங்கே இருக்கிறது? …
-
- 30 replies
- 9.4k views
-
-
தமிழுக்கு பெருமை சேர்த்த ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்! Posted By: 0333on: August 12, 2017In: உலகம்No Comments Print Email உலக மொழிகளில் சொற்களஞ்சிய அகராதிகளை உருவாக்கிவரும் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் விதமாக ஒக்ஸ்போட் தமிழ் இணைய அகராதியை வெளியிட்டுள்ளது. உலகத்திலுள்ள 100 மொழிகளில் அகராதிகளை உருவாக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ள ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம், முதலில் கிந்தி மொழியில் அகராதியை வெளியிட்டது. தற்போது தமிழ், மற்றும் குஜராத்தி மொழிகளில் அகராதிகளை வெளியிட்டுள்ளது. அகராதியை பார்க்க விரும்புபவர்கள்https://ta.oxforddictionaries.com/ இந்த லிங்கில் சென்று பார்வையிடலாம். http://thuliyam.com/?p=76091
-
- 0 replies
- 550 views
-