Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழினம் பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு ஒன்றிய வாழ்வைக் கொண்டிருந்த பெருமைக்குரியதாகும். பண்டைத் தமிழ் நூல்களான * அகத்தியம், * செயிற்றியம், * சயந்தம், * குணநூல் போன்ற நூல்களில் தமிழ்க் கூத்து வகைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இசையும், கூத்தும், பிரிக்க இயலாத வகையில் பின்னிப் பிணைந்தே மக்களை மகிழ்வித்து வருவதாகக் கூறலாம். இசை, ஆட்டம், தாளம் ஆகிய மூன்றும் சேர்ந்ததன் தொகுப்பே "கூத்து" எனலாம். பொதுவாக சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு கூத்தினை, வேந்தியல் (மன்னர்களுக்காக ஆடுவது), பொதுவியல் (பொது மக்களுக்காக ஆடுவது) என இருவகைப்படுத்தலாம். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதை "அபிநயம்" பற்றி விளக்குகிறது. பெண்கள் ஐந்து வயதிலிருந்து பன்னிரெண்டு…

  2. கொட்டாவி விட்ட காக்கை! அஃறிணை உயிரினங்களை அதிகமாக உற்றுநோக்குபவர்கள் கவிஞர்கள் தான் என்பது என் கருத்து. இதோ ஒரு கவிஞனின் ஒப்பீட்டைப் பாருங்களேன்.. அழகியதொரு கடற்கரைச் சோலை.. ஆங்கே வலிமையான காற்று வீசுகிறது.. அதனால்.. கண்டல் மரத்திலிருந்து பசுமையான காய்கள் நேராகக் கீழிருக்கும் நீர்நிலையில் வளர்ந்திருக்கும் ஆம்பல் மலர்களின் மீது வீழ்கின்றன... அதனால் ஆம்பலின் அரும்பு சாய்ந்து சிறிய வெண்ணிறக் காக்கை கொட்டாவி விட்டது போல வெண்ணிறமாய் மலர்ந்து நிற்கும். என்கிறார்.... இப்பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது. பாடல் இதுதான்.. கானற் கண்டல் கழன்று உகு பைங்காய் நீர் நிற இருங்கழி உட்பட வீழந்தென உறுகால் தூக்க தூங்கி ஆம்பல் சிறு வெண் காக்…

  3. "தமிழுடன் ஒரு விளையாட்டு" - 01 கைத்தொலை பேசி, முகநூல் போன்ற எந்த வசதியும் இல்லாத பண்டைய தமிழ் நகரம் ஒன்றில், ஒரு இளைஞன், தனது காதலை ஒரு இளம் பெண்ணிடம் தனிமையில் சந்தித்து சொல்ல விரும்பினான். அவளோ அவளின் தந்தையுடன் சென்று கொண்டிருந்தாள். தந்தைக்கும் மற்றும் வீதியால் செல்லும் மற்றவர்களுக்கும் தெரியாமல் தனது விருப்பத்தை அவளிடம், அவளின் பின் நடந்து கொண்டே உரையாடலாக கூறினான். அவளும் அதை நன்றாக விளங்கிக்கொண்டு, தானும் தமிழில் சளைத்தவள் இல்லை என்பது போல, விடுகதை யாகவே பதிலைக் கூறினாள். அதை புரிந்துகொண்டு, "நான் எப்போது வரட்டும்? " என்ற அவனின் அடுத்த கேள்விக்கும் அவள் மீண்டும் விடுகதையாகவே தமிழுடன் அழகாக விளையா…

  4. காதலினால் தும்மல் செய்வீர் உலகத்தீரே ! பொதுவாக தும்மல் நுரையீரலில் நேர்ந்த சிறிய / பெரிய அசௌகரியத்துக்கான அடையாளமே. எனவே நான் தொடர்ச்சியாய் தும்மும் போது என் ஆச்சி ('பாட்டி'க்கான என் வட்டார வழக்கு; வட்டார வழக்கு அவரவர்க்குரிய பெருமையான அடையாளம்தானே!), அம்மா, அத்தை போன்ற மூத்தோர் நூறு, இருநூறு......என வாழ்த்துவர். அதற்குப் பொருள் 'குறையொன்றுமில்லை. நீ நூறு வருடங்கள் வாழ்வாய்! இருநூறு வருடங்கள் வாழ்வாய்!....' என்பதாம். எனது ஒவ்வாமை காரணமாய் நான் இவர்களிடம் இரண்டாயிரத்து ஐநூறு வருடங்கள் ஆயுள் பெற்றுள்ளேன் என்பது ஒரு புறம் இருக்கட்டும். தும்மல் தொடர்பாக வேறொரு நம்பிக்கையும் உண்டு. அது 'யாரோ உன்னை நினைக்கிறார்' என்பது. அது இலக்கிய மரபாகக் கூட தோன்றியிருக்கலாம். எவ்வாற…

  5. தமிழர்தம் உடம்பொடு உயிரிடையென்ன வள்ளுவம் -சுப.சோமசுந்தரம் இப்போதெல்லாம் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வள்ளுவம் தமிழர்தம் வாசிப்பில் கலந்ததோ என்னவோ, சுவாசிப்பில் கலந்தாற் போன்ற உணர்வு. இதற்கெல்லாம் தமிழ் உணர்வாளர்க்கு நன்றி சொல்ல வேண்டியதில்லை; அவர்கள் எக்காலத்தும் வாழ்ந்தவர்தாமே! நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களாய், திடீரென உறவாடிக் கெடுக்க நினைக்கும் உன்மத்தர்க்கே நம் நன்றி உறித்தாகுக! ‘ மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்…

  6. "ஓரெழுத்து சொற்கள்" / "ONE-LETTER WORDS" The total letters in Tamil are 247, out of these 45 letters are one letter word. That means these 45 letters have a separate meaning. Let us know them!! / 247 தமிழ் எழுத்துக் களில் 45 க்கும் மேலான எழுத்துக்களுக்கு தனியாக பொருள் உண்டு என்பது எத்தனை பேருக்கு தெரியும்? தமிழில் உள்ள அந்த ஓரெழுத்து வார்த்தைகளும் பொருளும் கிழே தரப்பட்டுள்ளன. வாசித்து மகிழவும். ஆங்கில மொழியில் அப்படி ஒரு 2 அல்லது 3 சொல் மட்டுமே உண்டு. அவை: 'A' – used when mentioning someone or something for the first time in a text or conversation. 'I' – Used to refer to oneself as speaker or writer. 'O' – Used to express surprise or strong emotion, …

  7. அகிலம் போற்றும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்து 27ஆம் திகதியுடன் 125வருடங்களாகின்றன. அவர் மட்டக்களப்பின் தென்கோடியிலுள்ள காரைதீவு எனும் நெய்தலும் மருதமும் ஒருங்கே அமையப்பெற்ற பழந்தமிழ்க் கிராமத்தில் பிறந்தார். சாமித்தம்பி கண்ணம்மை தம்பதியினர் தவமிருந்து 1892-03-27 இல் அடிகளாரைப் பெற்றெடுத்தனர். அப்பகுதியில்தான் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயமும் உள்ளது. காரைதீவின் காத்தல் தெய்வமாம் பத்தினித்தெய்வம் கண்ணகியைக் குலதெய்வமாகவும் அவ்வம்மையின் நாமத்தைத் தாங்கியவருமாகிய கண்ணம்மையின் வயிற்றில் முதலாவது உதித்தவர் அடிகளார். இன்றும் கண்ணகை அம்மனாலயத்தைப் பரிபாலித்து வருகின்ற விஜயராஜன் குடியார் என்று சொல்லப்படுகின்ற வம்வத்தைச் சேர…

    • 2 replies
    • 7.8k views
  8. பாமரர் வழக்கே பாவலர் வழக்கு தேர்வு முடிவு வெளியானதும் மாணவன் ஒருவன் “அஞ்சும் (ஐந்தும்) பாஸ்” என மகிழ்ச்சியில் குதிக்கிறான். அவன் ஐந்தும் எனச் சொன்னதை வைத்து அவன் எழுதிய தேர்வுத் தாள்கள் மொத்தமே ஐந்து என்பது நமக்குப் புலனாகிறது. “இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்” என நவில்வது தொல்காப்பியம். மேற்கூறிய எடுத்துக்காட்டில் மொத்தம் இவ்வளவுதான் என (இனைத்தென) அறிந்த சினை முதற்சொல் (ஐந்து) வினைச்சொல்லுடன் இணையும் இடத்தில் (‘பாஸ்’ செய்தல் என்ற வினைப்படு தொகுதியில்) “உம்” வேண்டும். “அஞ்சும் பாஸ்” எனச் சொன்னவன் தொல்காப்பியனை அறிந்திலன்; அதனைக் கேட்டு மொத்தம் ஐந்து தாள்கள் எனப் பு…

  9. நாம் சிறுவயதில் திருக்குறள் படிக்கும் போது அதில் ஓரிடத்தில் பொருட்பால் பற்றி படித்திருப்போம். அந்த பொருட்பாலில் உள்ள படைமாட்சி அதிகாரத்தில் உள்ள 767 ஆவது குறள் இவ்வாறாக வரும். "தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து." இதற்கு பரிமேலழகர் இவ்வாறாக ஓர் உரை எழுதியிருக்கின்றார்:- தலை வந்த போர் தாங்கும் தன்மை அறிந்து - மாற்றாரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரைவிலக்கும் வகுப்பு அறிந்து வகுத்துக் கொண்டு; தார் தாங்கிச் செல்வது தானை - அவர் தூசியைத் தன்மேல் வாராமல் தடுத்துத்தான் அதன் மேற்செல்வதே படையாவது. (படை வகுப்பாவது: வியூகம். அஃது எழுவகை உறுப்பிற்றாய், வகையான் நான்காய், விரியான் முப்பதாம். உறுப்பு ஏழாவன: உரம் முதல் …

  10. கார் மயக்கம் -சுப.சோமசுந்தரம் களவியலிலும் கற்பியலிலும் பிரிவாற்றாமை எனும் நோய் தரும் வலி அக இலக்கியங்கள் முழுவதும் விரவிக் கிடப்பது. குறிப்பாக இலக்கியங்களில் அந்நோய் பெண்ணையே தாக்குவதாய் உணர்கிறோம். நிதர்சனமும் அவ்வாறே இருக்கலாம். அது ஆணாதிக்க சிந்தனையின் விளைவு என எளிதாய்ப் புறந்தள்ளுவதற்கில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலியல் வேறுபாட்டைப் போல் உளவியல் வேறுபாடும் உண்டே! பொருளாதாரம், பாதுகாப்பு முதலியவை குறித்து ஆணுக்குப் பொறுப்புணர்வு அதிகமாகவும் பெண்ணுக்கு மென்மையான உள்ளுணர்வுகள் அதிகமாகவும் அமைந்தது இயற்கையே. எனவே நாட்டிற்கும் வீட்டிற்கும் தனது பொறுப்புணர்வு காரணமாக அவன் அவளை அ…

  11. நன்னீரை வாழி அனிச்சமே ! --- சுப. சோமசுந்தரம் நம் பாட்டுடைத் (!) தலைவன் சங்கமருவிய காலத்தவனாய்த் தோன்றுகிறான். சான்றோர் கேண்மையினாலும் நிரம்பிய நூலுடைமையினாலும், சங்க கால வாழ்வியலும் சங்கத்தமிழும் சற்று அறிந்தவன் போலும். "நெய் பெய் தீம்பால் பெய்து நீ இனிது வளர்த்த இம்மரம் உனது உடன் பிறப்பாவாள்" என்று நற்றிணைத்தாய் தன் மகளிடம் இயம்பியதை நூல்வழி அறிந்தவன். "தலைவனே! தன் உடன்பிறப்பான இம்மரத்தின் நிழலில் உன்னோடு மகிழ்ந்திருக்க தலைவி நாணுகிறாள்" என்ற நற்றிணைத் தலைவிதன் தோழியின் கூற்றும் அறிந்தவன் அவன். "கரி பொய்த்தான் கீழிருந்த மரம் போலக் …

  12. பைபிள் மொழியில் சங்க இலக்கியம்! சமஸ் படம் : என்.விவேக் டேவிட் ஷ§ல்மன்... இவருக்கு அறிமுகக் குறிப்பு எழுதுவது கடினம். உலகின் மிக முக்கியமான இந்தியவியலாளர்களில் ஒருவர். அமெரிக்காவில் பிறந்த யூதரான டேவிட், ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையில் பணியாற்றுகிறார். ஹீப்ரு, சம்ஸ்கிருதம், தமிழ், அரபி, பாரசீகம், கிரேக்கம் என உலகின் புராதன மொழிகள் பலவற்றில் புலமை மிக்கவர். இந்தியக் கலை மற்றும் கலாசாரம் குறித்து நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறார். ஒருபுறம் இப்படிப் பல்வேறு மொழிகள், கலாசாரம் தொடர்பான ஆய்வுகளில் தன் வாழ்வைக் கழிக்கும் ஷ§ல்மன் மறுபுறம், இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னையில், அமைதியை உருவாக்கும் பணியில் 'தாயுஷ்’ அமைப்பின் மூலமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்…

  13. சங்கத் துறைமுகம் - முசிறி முன்னுரை ஒரு நாட்டில் கடல் வணிகம் அதன் துறைமுகங்களைப் பொருத்தே அமையும். சாதகமான காற்று, இயற்கையானத் துறைமுகங்கள், பாதுகாப்பான வணிகநிலை, ஆதரவான அரசுகள், தேவையான கச்சாப்பொருள்கள், நெகிழ்வான வரிவிதிப்பு முறை போன்றவை வணிகத்திற்குச் சாதகமான அம்சங்களாகும். அவற்றில் மிகவும் இன்றியமையாதது இயற்கையான துறைமுகங்களேயாகும். தமிழ்நாட்டில் இவ்வாறான இயற்கை துறைமுகங்கள் மிகவும் குறைவு. இருந்த போதிலும் பழந்தமிழ் சேரநாட்டில் உள்ள துறைமுகங்கள் தம் வணிகத்தினால் சிறப்பிடம் பெற்றன. முசிறி, தொண்டி போன்ற சிறந்த துறைமுகங்களின் புகழ் உலகம் முழுவதும் பரவிக் கிடந்தது. சேர நாட்டில் கிடைத்த வாசனைப் பொருட்களான மிளகு (Pepper) போன்றவையே அவர்களின் உலகளாவிய வணிகத்திற்…

  14. Started by Vaasha,

    aluthu-1.doc

    • 1 reply
    • 1.2k views
  15. தமிழின் வேர் மொழி எது தெரியுமா? வியப்பூட்டும் செய்திகள்!!!😇 -முனைவர் தமிழ்ப்பரிதி மாரி

      • Like
    • 1 reply
    • 1.3k views
  16. தமிழிலக்கிய அறிமுகம் பேராசிரியர். க.பூரணச்சந்திரன் கலம்பக இலக்கியம்: தமிழில் தலையாய இலக்கியம் சங்க இலக்கியம். அது தனிப்பாடல்களால் ஆனது. சங்க காலத்திற்குப் பிறகு தோன்றிய நூல்களில் முதன்மையானவை காப்பியங்கள். இவற்றைத் தவிர சிற்றிலக்கியங்கள் என்னும் நூல்களும் இடைக் காலத்தில் அவ்வப்போது எழுந்தன. காலப்போக்கில் நூல்வகையில் ஏற்படும் மாற்றங்களை விருந்து என ஏற்றுக் கொள்கிறது சங்ககால இலக்கண நூலாகிய தொல்காப்பியம். குறைந்த பாடல் எண்ணிக்கையைக் கொண்டவற்றைப் பிரபந்தங்கள் அல்லது சிற்றிலக்கியங்கள் என்று பிற்காலத்தினர் வழங்கத் தொடங்கினர் ஆகலாம். காப்பியங்கள் பேரிலக்கியங்கள் ஆதலின் இவற்றிலிருந்து வேறுபடுத்தச் சிறிய அளவில் எழுந்த நூல்களைச் சிற்றிலக்கியங்கள் என்றனர் போலும். அல்லது …

  17. தமிழ் நூல்களுக்கு உயிர் கொடுக்கும் முதியவர் ..! கோவையில் தமிழ் மொழிகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான தமிழ் நூல்களை ஒருங்கிணைக்கும் ஓய்வுப்பெற்ற அரசு அலுவலர் தமிழப்பன். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். சுப்ரமணியன் என்ற பெயரை "ஈழம் தமிழப்பன் " என்று மாற்றிக்கொண்ட இவர், தற்போது கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். பள்ளி படிப்பை முடித்தவுடன் சென்னையில் வருவாய் அலுவலராக பணியில் சேர்ந்தவர், தமிழ் மொழி மேல் கொண்ட ஈர்ப்பால் புத்தகங்களையும், நூல்களையும் படிக்க துவக்கியுள்ளார். தொடர்ந்து தமிழ்மொழியில், இளநிலை முதல் முனைவர் பட்டம் வரை பெற்றவர், புத்தகம் எழுத துவங்கியுதுடன், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தமி…

  18. தவளை கத்தினால் மழை. அந்தி ஈசல் பூத்தால்அடை மழைக்கு அச்சாராம். தும்பி பறந்தால் தூரத்தில் மழை. எறும்பு ஏறில் பெரும் புயல். மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. தை மழை நெய் மழை. மாசிப் பனி மச்சையும் துளைக்கும். தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு. புற்று கண்டு கிணறு வெட்டு. வெள்ளமே ஆனாலும்பள்ளத்தே பயிர் செய். காணி தேடினும் கரிசல் மண் தேடு. களர் கெட பிரண்டையைப் புதை. கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னிகெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு. நன்னிலம் கொழுஞ்சிநடுநிலம் கரந்தைகடை நிலம் எருக்கு. நீரும் நிலமும் இருந்தாலும்பருவம் பார்த்து பயிர் செய். ஆடிப்பட்டம் பயிர் செய். விண் பொய்த்தால் மண் பொய்க்கும். மழையடி புஞ்சைமதகடி நஞ்சை. களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. உழவில்ல…

    • 1 reply
    • 1.6k views
  19. கலித்தொகையில் நகைச்சுவைக் காட்சிகள் -முனைவர். மா. தியாகராசன். முன்னுரை சங்ககால அக இலக்கிய நூல்களில் கலித்தொகை தனிச்சிறப்பு மிக்க நூலாக விளங்குகிறது. இந்நூல் சொற்சுவையால் பொருட்சுவையால் உயர்ந்து நிற்கின்றது. பண்டைத் தமிழர் கண்ட ஐந்தினைப் பாகுபாட்டின் மேன்மையும் அவர்தம் ஒழுக்கமும் விழுப்பமும் இந்நூலைக் கற்பார்க்குத் தெள்ளிதின் பிலனாகும். கலிப் பாவகையுள் சிறந்த ஒத்தாழிசையாலியன்ற நூற்றைம்பது பாக்களைக் கொண்ட இந்நூல் தேன் சிந்தும், இனிய சொற்களாலும் வானார்ந்த கற்பனைகளாலும், தெளிந்த உவமைகளாலும் சீர்சால் உருவகங்களாலும் உயந்தோங்கி நிற்கின்றது. சொல்வதைச் சுவைபடச் சொல்லும் பாங்கில் இந்நூல் வெல்லும் நூலாக விளங்குகின்றது. அதனால் தான் சுவைகளுள் மிகச் சிறந்த சுவ…

  20. என் உலகம்: கடலோரத்துக் கதைகள் இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப் பட்டணம் எங்களது சொந்த ஊர். 1944-ம் ஆண்டு பிறந்தேன் என்பது பதிவேடுகளில் உள்ளது. ஆனால், நிச்சயமாக அதற்கு ஓரிரு ஆண்டுகள் முன்பு பிறந் திருப்பேன். என் தகப்பனார் அப்துல் காதர்; தாயார் பாத்திமா. இருவருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. தகப்பனாருக்குக் கருவாடு வியாபாரம். இங்கிருந்து இலங்கைக்குக் கருவாடு ஏற்றுமதி செய்துவந்தார். என் தகப்பனாருக்கு எங்களைப் படிக்கவைக்க வேண்டும் என்ற ஆர்வமெல்லாம் கிடையாது. ஆங்கிலக் கல்வி இஸ்லாத்தில் விலக்கப்பட்டது என்ற நம்பிக்கை அப்போது பரவலாக இருந்தது. அதனால் நாங்கள் சகோதரர்கள் பள்ளிக்குப் போய்ப் படிப்பது எங்கள் தகப்பனாரு…

  21. கீழே நான் கைத்துப்பு(pistol)/ சுடுகலன்(gun)/ துமுக்கி(rifle) சிதறுசுடுகலனிலும்(scatter gun) போட்டு சுடும் வெடிபொதிகளின் உறுப்புகளுக்கான தமிழ்ப்பெயர்களை கொடுத்துள்ளேன்.. படித்து மகிழவும்…. கைத்துப்பு(pistol)/ சுடுகலன்(gun)/ துமுக்கி(rifle) வெடிபொதிகளின் உறுப்புகள்: படிமப்புரவு(image courtesy): NOQ Report வெடிபொதி - cartridge நடுவடி வெடிபொதி - centerfire cartridge விளிம்படி வெடிபொதி - rimfire cartridge கோது - case சன்னம் - bullet வெடிமருந்து - gun powder (propellant) எரியூட்டி - primer எரியூட்டி கொண்ட விளிம்பு - rim with primer சிதறு சுடுகலன்(scatter gun) எறியத்தின்(project…

  22. சிறந்த எழுத்துகள் பழந்தமிழில் மட்டும் இருந்தால், இன்றைய தமிழுக்குக் காலி பெருங்காய டப்பா என்ற பெயரே இருக்கும். ‘தமிழ் கூறு நல்லுலகு’ என்னும் தொடர் தமிழ் உலகத்தைக் குறிக்கிறது. தமிழ் உலகம் என்பது பூமியில் தமிழ் வழங்கும் பகுதி. இந்தப் பகுதி உலகம் முழுவதிலும் பரவியிருக்கிறது என்னும் பொருளில் ‘உலகளாவிய தமிழ்’ என்னும் தொடர் வழங்குகிறது. இதிலிருந்து பிறந்ததுதான் உலகத் தமிழ் என்று புதிதாக வழக்குக்கு வந்துள்ள தொகைச்சொல். தமிழ் உலகத்தை உலகத் தமிழ் என்று மாற்றிப் போட்ட சொல். தமிழர்கள் பிழைப்பைத் தேடி உலகம் முழுவதும் சென்று குடியேறியிருக்கிறார்கள் என்னும் நிதர்சனத்தைப் பிரகடனப்படுத்தும் சொல். தமிழர் வரலாற்றில் புலப் பெயர்வு புதிது அல்ல. ஆனால், பொருளாதாரத்தில் வளர்ந்துள்ள அம…

  23. 'கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்' : வேந்தன் சரவணன் on 01-07-2009 06:23 Published in : சிறப்புக்கட்டுரை, சிறப்புக்கட்டுரை தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற பழமொழி இது. இப் பழமொழியின் தாக்கம் பெண்களிடையே மிகுதி என்றால் அது மிகையாகாது. இந்தப் பழமொழியின் தவறான பொருள் விளக்கத்தால் நேர்ந்த விளைவுதான் இது. இந்தத் தவறுக்குக் காரணம் ஒரே ஒரு எழுத்துப் பிழைதான். அந்தப் பிழை என்ன என்று அறிந்து கொள்ளும் முன்னர் இப்பழமொழிக்கு தற்போது கூறப்படும் பொருள் என்ன என்று காண்போம். 'கல்நெஞ்சன் (முரடன்) ஆக இருந்தாலும் அவன் உன் கணவனே; புல்நெஞ்சன் (கெட்டவன்) ஆக இருந்தாலும் அவன் உன் புருசனே' ஆண்-பெண் இணைந்து வாழ்க்கை நடத்தும் இல்லறத்தில் மணமான ஒரு…

  24. Started by nunavilan,

    மடசாம்பிராணி சற்று புத்திக்குறைவாக நடந்து கொள்பவர்களை நாம் பலவாறாகத் திட்டுவது வழக்கம். முட்டாள், மூளை கெட்டவன், கூமுட்டை, அறிவிலி, வீணாப்போனவன் என்பன சில அடைமொழிகள். மடசாம்பிராணி என்பதும் அப்படிப்பட்ட வசவே. எனக்கு இந்த மடசாம்பிராணி எனும் வார்த்தை காதில் விழும் போதெல்லாம் (என்னை யாரும் இவ்வளவு உயர்வாக விளித்ததில்லை) இவ்வார்த்தை குறித்த சந்தேகம் எழும். மட+சாம்பிராணி = மடசாம்பிராணி. மட என்றால் மடத்தனம், சாம்பிராணி என்றால் அது தூபப்புகை போடும் சாம்பிராணியா அல்லது ஓணான் வகையைச் சேர்ந்த சாம்பிராணி எனும் ஊர்வன ஜந்துவா என ஐயம் எழும். என்ன யோசித்துப் பார்த்தும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. எனக்குப் பழக்கமான அனைத்து அறிவு ஜீவிகளிடமும் கேட்டுப்பார்த்ததில் ஒருவழியாக ஒன்ற…

    • 1 reply
    • 4.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.