Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 01. உங்களின் பெயர்களை சங்க காலத்து தமிழியிலும் , பல்லவர் காலத்து தமிழ் வட்டெழுத்திலும் எழுதிப்பார்த்துக்கொள்ளுங்கள். 02. உங்களின் சூழலிலுள்ள பழந்தமிழ்க்கல்வெட்டுகள் , ஏடுகளை நீங்களாகவே உச்சரித்து வாசியுங்கள். உங்கள் நண்பர்களோடும் பகிருங்கள் 247 எழுத்துக்களையும் பார்க்க - https://drive.google.com/.../1KJRwelxSbZeRr.../view

  2. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். மலர்மிசை ஏகினாள் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார். கொல்லாள் புலாலை மறுத்தாளை கைகூப்பி எல்லா உயிரும் தொழும். +++ நீங்களும் மிச்சம் சொல்லுங்கோ.

  3. Started by nunavilan,

    செம்மொழி உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6760 என கணக்கிட்டுள்ளனர். இவற்றில் இந்தியாவில் மட்டும் 1652 மொழிகள் பேசப்படுவதாக மொழியிலாளர்கள் கூறுகின்றனர். மொழிகள் எண்ணிக்கை உலக அளவிலும் நம் நாட்டளவிலும் கூடுதலாக இருக்க ஒரே காரணம் ஆயிரக்கணக்கான பழங்குடி இன மக்கள் கொண்டது இந்த உலகம் என்பதே. மேற்காணும் ஆராயிரத்து எழுநூற்று அறுபது மொழிகளுக்கும் மொழிக் குடும்பம் உண்டு. அந்த மொழிக் குடும்பத்தில் தாய்மொழி எனும் மூலமொழியும் உண்டு. அம்மூலமொழிக்கு அடிப்படையான பிறிதொரு மொழிக் குடும்பத்துடன் உறவும் உண்டு. ஆக உலகம் பல மொழி பேசும் பல இனக் குழுக்களின், பல நிறத்தவர்க…

    • 0 replies
    • 1.4k views
  4. தமிழர் புலமை மரபு: ஏற்றமும் இறக்கமும் பேரா. கி. நாச்சிமுத்து, தலைவர், இந்திய மொழிகள் புலம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது டெல்லி தமிழர் புலமை மரபு என்று சொல்லும்போது மொழி இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமல்லாமல் பொதுவாக எல்லா அறிவுத்துறைப் புலமை மரபைப் பற்றிய விரிந்த பொருளை மனதில் கொண்டே இங்கு சிந்திக்கப் புகுகின்றோம். அறிவுத்துறைகளுள் இயல் பிரிவில் மொழிக்கும் இலக்கியத்திற்கும் தொல்காப்பியரின் இலக்கண நூல் ஒர் அரிய சாதனை. இது போன்றே இசை நாடகம் போன்ற துறைகளுக்கும் அறிவியல் நூல்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் சிலவே தப்பி வந்திருக்கின்றன. கணக்கு தர்க்கம் தத்துவம் மருத்துவம் சிற்பம் சோதிடம் போன்ற துறைகளில் ஒரு சிலவே நமக்குக் கிடைக்கின்றன. கணக்கு போன்ற துறைகளில…

    • 0 replies
    • 1.4k views
  5. பழந்தமிழர் போர் மரபும் கொற்றவை வழிபாடும் . பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாட்டில் மிக இன்றியமையாத இடம், கொற்றவை வழிபாட்டிற்கு உண்டு. பழந்தமிழர் வழிபட்ட பல்வேறு பெண்தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் சங்க அகப்புற இலக்கியங்களில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அத்தகு குறிப்புகளைத் திரட்டி ஒருங்கு வைத்து ஆய்கையில் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் பெண்தெய்வங்கள் கன்னித் தெய்வங்கள், தாய்த் தெய்வங்கள் என இருவேறு நிலைகளில் குறிப்பிடப்பட்டாலும் அவை தாய்த் தெய்வங்களே. பி.எல்.சாமி அவர்களின் கூற்று இக்கருத்துக்கு துணை நிற்பதாகும். “தாய்த் தெய்வத்தைத் தாயாகவும் கன்னியாகவும் உருவகப்படுத்திக் கூறுவது மிகப் பழங் காலத்திலிருந்தே மரபாக உள்ளது. அவளை எல்லோரையும் பெற்ற தாயாகக் கருதுவதும் அழி…

  6. பீமனையே அழவைத்த தர்மத்தின் மனிதன் தர்மத்தின் மனிதன் என்று ஒருவனையாவது உங்களால் சுட்ட முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஒன்றிலோ அல்லது மற்றொன்றிலோ அவர்கள் தம் தர்மத்தை விட்டு விலகி இருப்பார்கள். ஆனால் மகாபாரதத்தில் தர்மத்தின் மனிதன் என்று சுட்டிக்காட்டும்படி ஒருவன் இருந்தான். இராமாயணத்தில் கும்பகர்ணனைப் போலத் தன் அண்ணன்களிடம் அபரிமிதமான பாசம் கொண்டவன், கர்ணனைப் போலச் செஞ்சோற்றுக் கடன் கழித்தவன், தன் குடும்பப் பாரம்பரியத்தின் மேல் கொண்ட மரியாதையால் தன் அண்ணிக்கு ஒரு அக்கிரமம் நிகழ்ந்த போது அதைத் தட்டிக் கேட்டவன் அவன். அப்படிப்பட்ட தர்மவான் யார் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே. திருதராஷ்டிரனின் மகன்களில் ஒருவர் விகர்ணன். இவரது காதுகள் பெரிதாக இருந்தமையால…

  7. முத்தொள்ளாயிரம் ஒரு பார்வை கனிமொழி உலா இலக்கியங்களுக்கு முன்னோடி முத்தொள்ளாயிரம் எனும்நூல். இது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்பாடல்கள் பெரும்பாலும் சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களைப் பற்றியது. இந்நூல் பெயர்க்காரணம் மூன்று வேந்தர்களைப் பற்றிய 900 பாடல்கள் என்றும், மூவேந்தருள் ஒவ்வொருவருக்கும் 900 பாடல்கள் என்ற இரு வேறு கருத்துகள் உண்டு. ஆக இந்த நூலின் மொத்த பாடல்கள் 2700 ஆக இருந்திருக்க வேண்டும், ஆனால் நமக்கு 108 பாடல்களே கிடைத்துள்ளன. புறத்திரட்டு என்பதில் இருந்துதான் இந்த 108 செய்யுள்களையும் தொகுத்துள்ளனர். இந்த பாடல்கள் பெரும்பாலும் கைக்கிளையில் அதாவது ஒருதலைக்காதல் கொண்டு பாடப்பட்டது. மூவேந…

  8. கர்நாடக இசை தமிழிசையிலிருந்து திருடப்பட்டதா? - பொ.வேல்சாமி இருபதாம் நூற்றாண்டிலிருந்துதான் தமிழகத்துக்கு வரலாறு தொடங்குகிறது. ஏன் அதற்கு முன்னர் வரலாறு இல்லையா என்ற ஐயம் எழுவது இயல்புதான்.அதற்கு முந்தைய காலங்களில் வரலாறும் புராணங்களும் செவிவழிச்செய்திகளும் ஒன்றாகக் கலக்கப்பட்டுக் கர்ண பரம்பரைக் கதைகள்தான்வழக்கிலிருந்தன. இதனால் கரிகால் சோழனுக்கு இளங்கோவடிகள் பேரனானார். 1 ஒளவையாரும் புகழேந்திப் புலவரும் நூற்றாண்டுகள் தோறும்அவதரித்தனர். திருவள்ளுவர் நக்கீரரோடு இணைக்கப்பட்டார். 2 பேராசிரியர் உரை எது, நச்சினார்க்கினியர் உரை எது, பரிமேலழகர் உரை எதுஎன்னும் வேறுபாடு தெரியாமல் எல்லோரும் ஒன்றாகப் போட்டுக் குழப்பப்பட்டனர்.…

    • 5 replies
    • 1.4k views
  9. ராவணன் தமிழன் "தமிழர் காதல்", ஆயிரம் வருடங்களிற்கு முன்னரே தமிழர், தம் காதலை பாடி வைத்தார்கள், இப்படிதான். "யாயும் ,ஞாயும் யாரா கியரோ" , (நானும், நீயும் யார், எவர் என்று அறியாதவர்களாக இருக்கட்டும், நானும், நீயும், முன் ,பின்ன தெரியாதவர்களாக இருக்கட்டும், எப்படி யாவது இருதுட்டு போகட்டும், இழவு ) "எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்", ( எம் இருவரது ,அப்பன், ஆத்தாள் முன்ன, பின்ன , எப்போதும், ஒருவருக்கு ,ஒருவர் அறிந்திருக்கு மாட்டார்கள், அதற்கான வாய்ப்பே இல்லை) "யானும், நீயும் எவ்வழி யறிதும்", ( நான் எப்படி பட்டவன், நீ எப்படி பட்டவள், பணம் , இருக்க, பந்தம் இருக்கா, சொந்தம் , இருக்கா, வேலை இருக்க, வெட்டி இருக்கா, கடவுள், இருக்கா, மதம், இருக…

  10. மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு சடங்குகள் வளமும் நலமும் வேண்டி மக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகையச் சடங்குகள் வாழ்வியல் சடங்குகள் எனப்படுகின்றன. பிறப்புச் சடங்கு, பூப்புச் சடங்கு, திருமணச் சடங்கு, போன்றவை மங்கலச் சடங்குகள் என்றும் இறப்புச் சடங்கை அமங்கலச் சடங்கு என்றும் பகுத்துள்ளனர். சமுதாயத்தில் இறப்பு என்பது ஒரு துக்க நிகழ்ச்சியாகவும், இறப்பு நடந்த வீட்டார் தீட்டுப்பட்டவர்களாகவும் கருதப்படுகின்றனர். இத்தீட்டினைச் சடங்குகளால் மட்டுமே போக்க முடியும் என்ற நம்பிக்கையில் பல்வேறு செயல்பாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. இச்சடங்குகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் புனிதத் தன்மை வாய்ந்தவையாகவும் தனித்த அர்த்தமுடையவையாகவும் கருதப்படுகின்றன. இக் கட்டுரை மள்ளர் இன மக்க…

  11. நந்தவனங்களை கடந்திருக்கிறேன் சிந்தை சிதறவில்லை. நினைவும் மனமும் நிறையவில்லை. ஆனால் என்றோ உரசிச் சென்ற அவள் சேலையின் வாசம் ஏன் மூக்கின் நுனியில் இன்னும் எஞ்சியிருக்கிறது. கூடினால் ஓடிவிடும் உடலால் கொண்ட மோகம். அணையாமலே எரிந்து கொண்டிருக்கிறது உள்ளத்தில் அவள் சேலை தீண்டிய சின்னஞ் சிறிய நெருப்பு. எண்ணக் கதுப்புகளில் அணைய விரும்பி அவள் தீண்டிச் சென்ற இந்தக் கரங்களை தடவிப் பார்க்கிறேன்.....இனிமையான அந்த இறந்த காலத்தை இந்தக் கவிகள் இன்னமொருமுறை மீட்டுத் தருகிறது விசும்பின் வெண்துளிகள் பூமியைப் நிரப்பும் இன்னிலவுப் பொழுதில், சுனையில் நனைந்து பூக்கள் புணைந்து நெற்றித் தரள நீர் உருளும் அவள் இளமேனி அழகை அள்ளிப் பருகி, இடை தழுவி இமை மூடி இதழ் ஒற்றி இன்பம் துய்க்காமல் இன்னும்…

  12. தமிழின் வியத்தகு மாண்புகளும், அதன் வளர்ச்சித் திசைவழியும் முனைவர்.வே. பாண்டியன் சற்றேறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழில் புழக்கத்தில் இருந்த சொற்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் சமற்கிருத சொற்களாகவே இருந்தன. ஆயிரம் ஆண்டுகளான பார்ப்பன மேலாதிக்கத்தின் விளைவு இது. தங்களது மேலாண்மையை நிலைப்படுத்து வதற்காக திட்டமிட்டே செய்யப்பட்ட சமற்கிருத மயமாக்கல், ஆரியமயமாக்கலின் விளைவு இது. தமிழனின் தனித்த அடையாளங்களை அழித்தொழித்து, மொழியைச் சிதைத்து அதன்வழி தமிழின் மூலத்தை சமற்கிருதம் சார்ந்ததாகக் கொச்சைப் படுத்தி, தமிழன் என்றென்றும் அடிமைப்பட்ட, அனாதை குமூகமாக நிறுவுவதே ஆரியர்களின் பிழைப்பு உத்தி. இந்த உத்தியில் பெருமளவும் வெற்றியும் கண்டனர். அதோடல்லாமல், தமிழின் உண்மை…

  13. ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை யாழ்ப்பாணத்து வசாவிளானில் கந்தப்பிள்ளை வள்ளியம்மை தம்பதியருக்கு 1860ம் ஆண்டு பங்குனி மாதம் 6ம் திகிதி கல்லடி வேலுப்பிள்ளை பிறந்தார். அவரது இயற்பெயர் வேலுப்பிள்ளை. அவர் வீட்டருகே இருந்த ஒரு பெரிய கல் அவரது வீட்டைக் குறியீடு செய்ய வாய்ப்பாகியதோடு, அவர் பெயருடன் சேர்ந்து கல்லடி வேலுப்பிள்ளை என வழங்கச் செய்து விட்டது. இயல்பாக பாடக்கூடிய திறன்வாய்ந்தவராயிருந்ததால் ஆசுகவி எனும் அடைமொமியும் அவர் பெயருடனாயது. இவ்வாறாக இவர் பெயர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை என்று வழங்கலாயிற்று. சிறுவயதில் அகஸ்டின் என்பாரிடமும் பின்னர் பலாலி வேலுப்பிள்ளை உபாத்தியாயரிடமும் ஆரம்பக்கல்வியை பெற்ற பின்னர், ஆவரங்கால் நமசிவாயப் புலவரிடமும், புன்னாலைக்கட்டுவன் கதிர்காம…

  14. சந்தேகத்திற்குரிய மதவாதியான ”சத்குரு” ஜக்கி வாசுதேவ் தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பாரா அல்லது அமைதி காத்து குற்றவாளி என ஒத்துக் கொள்வாரா? மடங்கள் என்றாலே மர்மங்கள் நிறைந்த டிராகுலா குகை என்றாகிவிட்டது. சாயிபாபா, மாயி, ஐக்கி துவங்கி பல்வேறு கார்ப்பரேட் சாமியார்களின் அரண்மனைகளில் கொலைகள் துவங்கி பல்வேறு வன்முறைகள் அரங்கேறியிருக்கின்றன. மக்களை மூடர்களாக்கி பதப்படுத்தும் வேலையை சாமியார்கள் செய்வதால் அவர்களது மோசடி, தகிடுதத்தங்களை ஆளும் வர்க்கம் கண்டு கொள்ளாமல் விடுகிறது. ஜக்கி வாசுதேவின் அத்தகைய மோசடி ஒன்றை இனியவன் ஆதாரப்பூர்வமாக எழுதியிருக்கிறார். பலருக்கும் ஜக்கியின் இந்த கருப்புப் பக்கம் தெரியாது என்பதால் இங்கு வெளியிடுகிறோம். -வினவு …

  15. Started by nunavilan,

    09 மார்ச் By அகரம் அமுதா 38 விளாங்காய்! பொதுவாக வெண்பா எழுதும் நம்மில்பலர் தம்மையறியாமலேயே விளாங்காய்ச்சீரை அமைத்து எவெண்பா எர்களுக்கு இவ்விளாங்காய்ச்சீர் மிக அதிகமாக அமைந்துவிடுகிறது. ன விளாங்காய்? அசைபிரித்துச் சொல்கையில் விளங்காய்ச்சீர் என்றல்லவா எழுதுகிறோம். அப்படியே அல்லவா படித்தும் இருக்கிறோம் என்கிறீர்களா? உண்மைதான். அதென்ன விளாங்காய்ச்சீர்? பார்த்துவிடுவோமா? ஈரசைச்சீர்கள்:- நேர்நேர் -தேமா நிரைநேர் -புளிமா நிரைநிரை -கருவிளம் நேர்நிரை -கூவிளம் மூவசைச்சீர்கள்:- நேர்நேர்நேர் -தேமாங்காய் நிரைநேர்நேர் -புளிமாங்காய் நிரைநிரைநேர் -கருவிளங்காய் நேர்நிரைநேர் -கூவிளங்காய் ப் பொருத்தவரை இவ்வெட்டுச் சீர…

  16. "புயல்காட்டுங் கூந்தல் சிறுபுறங்காட்டப் புனமயிலின் இயல்காட்டி இடைஒதுங்க வினங்காட்டு முழத்தியர்கள் முயல்காட்டு மதிதோற்கு முகங்காட்ட கண்மூரிக் கயல்காட்டுந் தடங்கள்பல கதிர் காட்டுந் தடம் பணைகள்" - தேவாரம் புயல்காட்டுங் கூந்தல் சிறுபுறங்காட்டப் - பிடரியில் படர்ந்து அலைந்து திரியும் கூந்தல் புயல் உருவாகும் முன் அலைந்து திரியும் மேகங்களைக் காட்ட புனமயிலின் இயல்காட்டி இடைஒதுங்க - அவள் நடக்கும்போது அசையும் இடையானது நிலத்தில் இருக்கும் மயில்களின் சாயலை ஒத்து அசைய வினங்காட்டு உழத்தியர்கள் முயல்காட்டு மதிதோற்கு முகங்காட்ட - கூட்டமாக அங்கு இருக்கும் உழத்தியர்களின் முகம் நிலவு போன்றதாயினும் நிலவில் உள்ள கறை இவள் முகத்தில் இல்லாமையால் அம்மதியானது…

  17. தமிழில் இருந்து கடன் வாங்கப்பட்ட ஆங்கில வார்த்தைகள்!

  18. காதலின் எடையை அறிந்துகொள்ள... காதல் வாழ்வின் பொருளை உணரச் செய்கிறது! காதல் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத ஓடம் !! காதல் பற்றிப் பாடாத கவிஞர்களே இல்லை. பெரும்பாலும் காதலின் உயரத்தையும்,அகலத்தையும், ஆழத்தையும் திருமணத்துக்கு முந்தைய காலப்பகுதியிலேயே அதிகமாகப் பாடியுள்ளனர். காதலித்தல் என்பது திருமணத்துக்கு முந்தைய வாழ்க்கை என்றே பலரும் வாழ்ந்து வருகிறோம். இதனையே கவிஞர் கண்ணதாசனும்... காதல் என்பது எதுவரை? கல்யாண காலம் வரும் வரை கல்யாணம் என்பது எதுவரை? கழுத்தினில் தாலி விழும் வரை பெண்ணுக்கு இளமை எது வரை? பிள்ளைகள் பிறந்து வரும் வரை கழுத்தினில் தாலி விழுந்த பின்னும் தன் மனைவியைக் காதலிப்பவர்கள் உலகில் எத்தனைபேர்? பெண…

  19. 1610 ல் கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கி மூலம் அதன் வளையங்களை கண்டுபிடித்தார்.ஆனால்,முதன் முதலில் சனிக்கிரகத்தை கண்டுபிடித்தவர் கபிலர் காலம்:கி.மு 3-ம் நூற்றாண்டு! கபிலர் சங்க காலத்து தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். ... இன்னா நாற்பது என்ற பதினெண் கீழ்கணக்குத் தொகுதியில் உள்ள நூலின் ஆசிரியரான ”கபிலரும்” இவரும் ஒருவரல்லர். சங்க கால புலவர் கபிலரின் காலம் கி. மு 3 ம் நூற்றாண்டின் ஆரம்ப காலமாகும்.எந்தவொரு தொழில் நுட்பமும் இல்லாத காலத்திலேயே சனிக்கிரக்தை கணடறிந்தவர்கள் நம் முன்னோர்கள். சனிக் கோளை மைம்மீன் என்று சங்கத்தார் அழைத்துள்ளனர். மைம்மீன் என்றால் கருமையான கோள் என்று பொருள். ‘‘மைம்மீன் புகையினும் ’’ ( புறம் 117) என்ற…

    • 6 replies
    • 1.4k views
  20. தமிழின் வேர் மொழி எது தெரியுமா? வியப்பூட்டும் செய்திகள்!!!😇 -முனைவர் தமிழ்ப்பரிதி மாரி

    • 1 reply
    • 1.4k views
  21. காரணம் ஏன் தெரியுமா? தேன் கொண்டுவந்தவரை பார்த்து நேற்று ஏன் தேன் கொண்டு வரவில்லை என்று ஒருவர் கேட்க்கிறார்.அதற்கு அவர் கூறிய இனிமை பொருந்திய விடை ஐயா நீங்கள் கூறியதை நினைத்தேன் கொல்லி மலைக்கு நடந்தேன் . பல இடங்களில் அலைந்தேன் . ஓரிடத்தில்பார்த்தேன் உயரத்தில் பாறைத்தேன் எப்படி எடுப்ப தென மலைத்தேன் கொம்பொன்று ஒடித்தேன் ஒரு கொடியை பி டித்தேன் ஏறிச்சென்று கலைத்தேன் பாத்திரத்தில் பிழிந்தேன் . வீட்டுக்கு வந்தேன் . கொண்டு வந்ததை வடித்தேன் கண்டு நான் மகிழ்ந்தேன் ஆகையால் சிறிது குடித்தேன் மீண்டும் சுவைத்தேன் உள்ளம் களித்தேன் உடல் களைத்தேன் உடனே படுத்தேன் கண் அயர்ந்தேன் அதனால் மற…

  22. மிகத்தொன்மையான பாரம்பரியத்தைக்கொண்ட தமிழ் முன்னோர்கள் மருத்துவ பயன்பாடு மற்றும் நீண்ட ஆழமான சிந்தனையின் வெளிப்பாடாக பல ஆபரணங்களை தங்கத்தில் உருவாக்கி அவற்றை அணிவதற்கு எம்மை வழி நடத்தினார்கள் என்றால் அது மிகையாகாது. இதனால் தமிழர் சமுதாயம் தமது வளமான வாழ்விற்கு மேலும் வளம் சேர்க்கும் முகமாக தங்க ஆபரணங்களை அணிந்து மகிழ்ந்தது. மூக்குத்தி ஆபரணத்தைப் பெரும்பாலும் இந்துப் பெண்கள் மற்றும் இஸ்லாமியப் பெண்கள் ஆகியோர் அதிகமாக அணிந்தார்கள் என்பதை பழைய இலக்கியங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ளமுடியும். மேலும் பழைய இலக்கியங்களில் இருந்து பெண்கள் மூக்கின் நடுவில் அணிந்த ஆபரணமாக 'முல்லாக்கு' எனப்படும் ஆபரணம் தொடர்பான செய்தியும் எமக்குக் கிடைக்கிறது. பொதுவாக அக்காலத்துப் பெ…

    • 2 replies
    • 1.4k views
  23. நீலிக்கண்ணீரின் தொல்கதை: சில இலக்கியப் பதிவுகள். சுயாந்தன் September 20, 2018 நீலிக்கண்ணீர் என்ற தொல்லெச்சம் எப்படி நமது அன்றாட வாழ்வில் உரையாடுகிறது என்பதற்கு நீண்டகால ஆதாரப் பதிவுகள் உள்ளன. எப்படி நற்றிணையில் இருந்த முலை அறுத்தெறியும் காதை கண்ணகி காதைக்கு இளங்கோவுக்கு பாடுபொருளானதோ, அதுபோல தமிழ் வாழ்வியல் வரலாற்றில் நீலி என்ற பெண் பாத்திரம் போலியின் ரூபமானது.அதாவது காஞ்சிபுரத்து வணிகன் தனது முதல் மனைவியை வஞ்சகமாகக் கொலை செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்கிறான். அவன் வணிக நோக்கமாக பழையனூர் வழியாகப் பயணமாகிறான். அப்போது அவனது முதல் மனைவி பேயாக மாறி அவனைப் பழிவாங்கத் துடித்து மனைவி போல உருமாற்றம் கொள்கிறாள். ஒரு தீய்ந்த கட்டையைப் பிள்ளையாக்கி இடுப்பில் வைத்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.