சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
988 topics in this forum
-
மகள் சோம. அழகு 'திண்ணை' இணையத்தில் எழுதிய 'தனித்திரு' எனும் கட்டுரை அவளுக்கே உரிய அங்கத நடையில் : தனித்திரு சோம. அழகு கோவிட் காலம், அதுவல்லாத காலம், இளமை, முதுமை என எல்லா நிலைகளிலும் எனக்கு மட்டும்தான் ‘தனித்திரு’ என்னும் இச்சொல் இன்பத்தேனாகப் பாய்கிறதா? “‘கொடிது கொடிது தனிமை கொடிது; அதனினும் கொடிது முதுமையில் தனிமை’. வயசானாதான் அதுலாம் தெரியும். இப்போ அதுபற்றி உனக்குப் புரியாது” – இதைத்தானே சொல்லப் போகிறீர்கள்? ஒப்புக்கொள்கிறேன். முதல் வரியில் ‘முதுமை’யைச் சேர்த்துக் கொள்ள எனக்குத் தகுதி இல்லைதான். ஆனால் ‘முதுமையில் நாம் தனித்திருக்க இயலாது’ என்னும் ஒற்றைக் காரணத்திற்காக ந…
-
-
- 6 replies
- 885 views
- 2 followers
-
-
காதல் கடை மண்ணெண்ணை, பெற்றோல் வித்தவனும் , சைக்கிள் வித்தவனும் முதலாளியா மாறின காலம் அது, அதே பவுசு மோட்டச் சைக்கிள் சைக்கிள் திருத்திற ஆக்களுக்கும் வந்திச்சுது. பவுண் வித்து பாண் வாங்கின நிலமை அப்ப . ஆசுபத்திரிக்கு போறதை கூட அடுத்த மாசம் தள்ளிப்போட்டிட்டு ஓடிறதுக்கு ரெடியா உடுப்பெல்லாம் கட்டி வைச்சிருந்த காலம். எல்லாருக்கும் அடிக்கடி அவசரத்துக்கு இடம்பெயர்ந்து ஓடிப்போக ஒரே போக்குவரத்து சைக்கிள் எண்ட படியால் மருந்துக்கடையிலும் பாக்க இருக்கிற ஒரே வாகனமான சைக்கிள் கடைக்கு உடன ஓடிப் போய் காட்டின நிலமை இருந்த நாட்கள் அவை. மோட்டச் சைக்கிள் பேருக்கு ஏத்த மாதிரி மோட்டுச் சைக்கிளாத்தான் இருக்கும்; ஒரு நாள் ஓடினா ஒரு கிழமை கராஜ்ஜில இருக்கும். ஆட்டிறைச்சிக்கடையில ஒ…
-
-
- 2 replies
- 884 views
- 1 follower
-
-
ஒரு குமரை கரை சேக்கிறது….. நீளமான ஒரு மட்டப் பலகை , சின்ன கைபிடி போட்ட மட்டப் பலகை ( மணியாஸ் கட்டை), சாந்தேப்பை மற்ற எல்லாச் சாமாங்களையும் எடுத்துக்கொண்டு வயிரவர் கோயிலடிக்கு வந்து ,”இண்டைக்கு பத்துப்பேராவது வேணும் எண்டனான் சின்ராசு “எண்டு நான் ஞாபகப்படுத்த , ஓம் எடுபிடிக்கும் இன்னுமொருத்தன் புதுசா வாறான்” எண்டார் சின்ராசு . புதுசா வாறவன் கீழ மட்டும் வேலை செய்யட்டும் நல்லாப் பழகும் வரை சாரத்தில ஏற விட வேண்டாம் . அவனுக்கும் சேத்து அரை றாத்தல் பாண் வாங்கும் எண்டு சொல்லி புது வரவை apprentice ஆக சேத்துக்கொண்டு வேலைக்கு வெளிக்கிட விடிய ஆறு மணி தாண்டீட்டு. கல்லுண்டா வெளியால கஸ்டப் பட்டு எதிர்க்காத்தில சைக்கிள் உழக்கி கட்டிற வீட்டடிக்கு வர ,அராலி மேசன் மார் எண்டா…
-
- 0 replies
- 881 views
-
-
அன்பர்கள் அனைவருக்கும் நன்றியும் வணக்கமும். தனித்தனியாக உங்கள் ஒவ்வொருவருடனும் உரையாட ஆசைதான். ஒரேநாளில் இயலாதுதானே? இரண்டு மாதங்கள் தாயகத்தில் இருந்தேன். பேரின்பம். உற்றார் உறவினர் நண்பர்களெனக் கிட்டத்தட்ட 500 பேருக்கும் மேலானவர்களை நேரில் சென்று சந்தித்து உரையாடினேன். திருமணங்கள், உறவினர் மறைவு முதலானவற்றிலும் பங்கு கொண்டேன். அணுக்கமானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கின்றது. முன்பெல்லாம் தாத்தா, பாட்டி எனும் வகையில் அங்கொன்றும் இங்கொன்றுமான இழப்புகளை உணர முடிந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக, அப்பா, சித்தப்பா, மாமனார் என்பதான இழப்புகள் என்றிருந்த நிலையில், தற்போது சம வயதுடையோரும் விடைபெறுவது இடம் பெற்று வருகின்றது. திரண்டிருந்த ஊரகத்திண்ணைகளும் சத்…
-
- 0 replies
- 881 views
- 1 follower
-
-
*பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக் கொடுத்த பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் கீழ்கண்ட பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வின் கடைசி பக்கங்கள் மிகவும் சுவாரசியமாகவும் இனிமையாகவும் இருக்கும்* 1- எந்த நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசி பகுதியில் உங்க பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள். (உங்கள் சுதந்திரம் அனைத்தும் பறிபோகும்) 2- உங்க பேரக்குழந்தைகளின் மேல் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம். குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள். உங்கள் அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள். (ம…
-
- 0 replies
- 881 views
-
-
ஈழக் கவிஞரும் தமிழக கவிஞரும் இணையும் நூல்.! "கவிதை அனுபவம்" என்ற நூலை, ஈழத்து கவிஞர் வ.ச. ஜெயபாலனும் தமிழக் கவிஞர் இந்திரனும் இணைந்து உருவாக்கியுள்ளனர். இருவரதும் கவிதை அனுபவம் பற்றிய கலந்துரையாடலை புத்தகமாக தொகுத்திருக்கிறார் சுந்தர புத்தன். இது பற்றி கவிஞர் இந்திரன் முகநூலில் கூறியுள்ளதாவது, “ஈழத்துக் கவிஞர் ஒருவரும் தமிழகத்துக் கவிஞர் ஒருவரும் என்றைக்காவது நிம்மதியாக அமர்ந்து இலக்கியம் பற்றி பேசியிருக்கிறார்களா ? அது அப்படியே பதிவாகி புத்தகமாக வந்திருக்கிறதா ? ஓம் இதோ வர இருக்கிறது . இந்தியக் கவிஞர் இந்திரன் மற்றும் இலங்கைக் கவிஞர் வ.ஐ. ச. ஜெயபாலன் ஆகியோர் இரண்டு நாட்கள் உரையாடியதை பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் அப்படியே பதிவு செய்து தொகுத்து ப…
-
- 0 replies
- 877 views
-
-
-
- 0 replies
- 874 views
-
-
Published By: PRIYATHARSHAN 09 MAR, 2024 | 10:36 AM நாளுக்கு நாள் சமூக ஊடகங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், அவற்றில் ஏமாற்றுப் பேர்வழிகளின் செயல்களும் அதிகரித்துக்கொண்டே காணப்படுகின்றது. அண்மைக்காலமாக பேஸ்புக்கின் மேசஞ்சரில் (Messenger) தொடர்புகொள்ளும் சில ஹக்கர்களின் ஏமாற்று வித்தை அரங்கேறி வருகின்றது. இவ்வாறான ஹக்கர்கள் பேஸ்புக் கணக்குகளுக்குள் நுழைந்து மேசஞ்சர் ஊடாக குறித்து நபரின் மேசஞ்சருக்கு தொடர்புகொள்கின்றார். பேஸ்புக்கை ஹக்செய்து அவர்களுக்குப் பரீட்சயமான நண்பர்களின் போலி கணக்குகள் ஊடாக மேசஞ்சரில் தொடர்புகொண்டு அவர்களை ஒரு குழுவில் இணைக்க விரும்புவதாகவும் அதற்கு அவர்கள் தொலைபேசி எண் வேண்டும் எனவ…
-
- 0 replies
- 874 views
- 1 follower
-
-
இந்த பதிவை எழுதும் போது என்னுள் இருக்கும் வலியும் அழுகையும் எனக்கு மட்டுமே தெரியும் !-Dr Karthik Bala: மூன்று நாட்களுக்கு முன் ராஜபாளையத்தில் என் சொந்த தாய் மாமாவிற்கு காய்ச்சல், இருமல் மற்றும் உடல் அசதி ஏற்பட்டது. காய்ச்சலுக்கு மருத்துவம் பார்த்தும் குணமாகாதலால், மதுரை மருத்துவக் கல்லூரியில் பணி புரியும் என்னிடம் வினவினார்கள். ராஜபாளையத்தில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் செக் அப் செல்ல சொன்னேன். அங்கே சென்று பார்த்த போது, OXYGEN LEVEL, கம்மியாக இருந்தது என்று கூறியவுடன், கொரோனா வாக இருக்கும் என்று ஊகித்தேன். அடுத்து சிறிது நேரத்திலேயே என் மாமாவின் நிலை இன்னும் மோசமாக அங்கேயே oxygen கருவி பொருத்தப்பட்டது. ராஜபாளையத்தில் தனியார் மருத்துவமனைகள் அவ்வளவு பிரமாதம் என…
-
- 0 replies
- 874 views
-
-
வெளிநாடுகளில எப்பிடி தேவையான பழங்களை ஒரு பெரிய பண்ணைக்கு போய் புடுங்குவாங்களோ அதே மாதிரி நானும் யாழ்ப்பாணத்தில இருக்க ஒரு திராட்சை தொட்டத்துக்கு போய் அங்க என்க வீட்டுக்கு தேவையான பழங்களை புடுங்கினம், அங்க என்ன நடந்த எண்டு பாப்பம் வாங்க.
-
- 5 replies
- 873 views
-
-
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் - சுப.சோமசுந்தரம் நேற்றைய (23-06-2024) ஒரு அனுபவப் பகிர்வு : உறவினர் மகளின் திருமண வரவேற்புக்குச் சென்றிருந்தேன். கல்லூரியொன்றில் கணிதப் பேராசிரியையாய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்த நண்பரின் கணவர் வந்திருந்தார். "சார், மேடம் வரவில்லையா ?" என்று கேட்டேன். "அவளுக்கு சுமார் ஒரு வருடமாக சுயநினைவு இல்லை. அல்சீமர் (Alzheimer) ஆட்கொண்டுள்ளது" என்றார். "பலரை நினைவில்லை. ஆனால் உங்கள் mathematics மீது அவளுக்குப் பெரிய அபிமானம் உண்டு. உங்களைப் பார்த்தால், epsilon delta எல்லாம் நினைவு வரலாம். ஒருநாள் வீட்டிற்கு வாருங்கள்" என்றார். மேடத்திற்கு பக்தி நெறியில் ஈடுபாடு உண்டு. ஒரு முறை அவரிடம் பெரியாழ்வார் பாசுரம் ஒன…
-
-
- 4 replies
- 872 views
- 1 follower
-
-
#யாழ்ப்பாண பேச்சு வழக்கு யாழ்ப்பாண பேச்சு வழக்கு என்பது இங்குள்ள மக்களால் அன்றாடம் பாவிக்கப்படும் சொற்பிரயோகங்களே. மெய்யே! இச் சொல் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் பலவிதமாகப் பயின்று வந்திருக்கிறது. உண்மையா? என்பது அதன் நேரடிக் கருத்தாக இருந்தாலும் ஒரு விடயத்தைச் சொல்ல ஆரம்பிப்பதற்கு இச் சொல் ஒரு தொடக்கமாக அமையப் பெறுதல் ஒரு யாழ்ப்பாண பேச்சு வழக்கு விஷேஷம். கணவன்மாரை மனைவிமார் பெயர் சொல்லி அழைக்காத பண்பாடு நிலவிய (2 சந்ததிக் காலத்துக்கு முன்னர் என்று சொல்லலாமோ?) காலத்தில் கணவர்மாரை அழைப்பதற்கும் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிப்பதற்கும் மெய்யே? / கேட்டீரே? என்ற இவ் விழிப்புச் சொற்கள் பயன்பாட்டில் இருந்தன. இன்றும் கூட கிராமங்களில் இது பாவனையில் உள்ளது. …
-
- 1 reply
- 871 views
-
-
மனித குலமே அழிந்துவிடுமா ? இயற்கையின் அடுத்த அடி எப்படி இருக்கும் ? ஒரு வித்தியாசமான முறையில் விளக்கியுள்ளார். பாருங்கள்.
-
- 0 replies
- 870 views
-
-
சன்ரியாகோவும் நானும் (கொரோனா அனுபவம்) ரவி கோவிட்-19 இலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். 12 நவம்பர் 2020. வழமைபோல் வேலைசெய்து கொண்டிருக்கிறேன். உடலில் ஒரு சோர்வு தெரிகிறது. மதியச் சாப்பாட்டின் பின்னர் மீண்டும் தயக்கத்துடன் வேலையைத் தொடங்குகிறேன். உடல் பலமிழப்பது போலவும் மனம் எதிலும் பற்றற்று நழுவுவது போலவும் தெரியத் தொடங்குகிறது. இடையில் வேலையை நிறுத்திவிட்டு வீட்டுக்கு வருகிறேன். விழுந்து படுக்கிறேன். அன்றிரவே உடலின் மூட்டுகளை கழற்ற எத்தனித்துக் கொண்டிருக்கிற உளைவுப் படை உடலை உலுக்கி உலுக்கி அடித்துப் போடுகிறது. சுகவீனகால வழமையான அனுபவமல்ல இது. தெரிந்துவிட்டது. கொரோனாதான். ஏற்கனவே நண்பர்கள் தமது அனுபவத்தை சொல்லியிருந்தது நினைவுக்கு வர ‘ரபல்கான்’ வலி மாத்த…
-
- 0 replies
- 869 views
-
-
வாங்க இண்டைக்கு, நாம பழங்களின் அரசன், இல்ல மிக மோசமான வாசம் உள்ள பழம் எண்டு பல்வேறு விதமா சொல்லுற தூரியன் பழம் வாங்கி சாப்பிட்டு பாக்க போறம், வாங்க எப்பிடி இருந்த எண்டு பாப்பம், நீங்க முதல் இந்த பழம் சாப்பிட்டு இருந்தா உங்க அனுபவம் எப்பிடி இருந்த எண்டும் சொல்லுங்க.
-
- 3 replies
- 869 views
-
-
தேவாலய குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள் ஜோசெப் பராராசசிங்கம் கொலை பல அரசு இயந்திரங்களில் கொள்ளை என பல கோப்புக்களை தூசிதட்டி எடுத்துள்ளனர். மந்திரியின் வண்டி சாரதிக்கு கொழும்பு 7 இல் மாடிவீடு.
-
-
- 5 replies
- 868 views
- 1 follower
-
-
அது நடந்தது அமெரிக்காவில் புளோரிடாவில் ஒரு நீதிமன்றத்தின் மையத்தில். அதுவும் வழக்கு நடந்து கொண்டிருந்த போது. Joseph Zieler குனிந்து தனது சட்டத்தரணியின் காதில் ஏதோ சொல்வதற்கு எத்தனித்தார். யாருமே எதிர்பார்க்கவில்லை அதுவும் நீதிமன்றில் இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று. கைகளில் விலங்கிடப்பட்டிருந்த நிலையிலும் Joseph Zieler தனது முழங்கையினால் சட்டத்தரணி Kevin Shirleyஇன் முகத்தின் நடுவில் தாக்கினார். சுற்றி நின்ற பாதுகாவலர்கள் Joseph Zielerஐ உடனடியாக மடக்கிப் பிடித்துக் கொண்டார்கள். சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்குப் பின்னர் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் கொடூரமான குற்றம் பரிந்தார் என 61 வயதான Joseph Zielerக்கு நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 199…
-
- 0 replies
- 865 views
-
-
மேகநாதன் முனுசாமி · உண்மை நிகழ்வு.. தமிழரை திருமணம் செய்த நியுசிலாந்து வெள்ளைகார பெண் தன் தமிழ் கணவர் மற்றும் குடும்பத்துடன் இரயிலில் திருச்சிக்கு பயணம் செய்துகொண்டிருந்தார்..அவரிடத்தில் அவரின் கணவர் மூலம் அறிமுகமான நான் பேசிகொண்டிருந்தபோது.. அவர் சொன்னார் தான் முதல்முறையாக தமிழ்நாட்டுக்கு வருவதாகவும் தன் கணவர்மூலம் தனக்கு தமிழ் நன்றாக பேச தெரியும் என்றும்..தன் கனவரின் சொந்த ஊருக்கு போய் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள்.. பேச்சுவாக்கில் தமிழ் திரைபடங்கள் மற்றும் தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் அதி…
-
-
- 2 replies
- 865 views
-
-
பெரியார் திருமூலர் ---- சுப.சோமசுந்தரம் நண்பன் ஒருவன் புலனத்தில் (WhatsApp) செய்திருந்த பதிவில் உள்ள செய்தி பொதுவாக நமக்குத் தெரியாத ஒன்றில்லை. இருப்பினும் நமக்கு நல்லதாய்த் தோன்றுவதை வேறு ஒருவர் சொல்லிக் கேட்கையில் அகமகிழ்வது எல்லோருக்கும் நிகழ்வதே. அம்மகிழ்ச்சியில் அடியேனுக்குத் திருமூலரின் கூற்று நினைவில் வந்தது கூடுதல் சிறப்பு. இதோ அந்த நினைவு : "படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின் நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே". -------- திருமந்திரம், பாடல் 1857. முதற் குறிப்பு :- திருமூலர் காலத்தில் கோயிலில் சிற்பங்களுக்குப் பதில் சுவற்றில் வரைந்த …
-
- 1 reply
- 864 views
- 2 followers
-
-
அறியாமையென்னும் கொடிய கிருமி - பகுதி 1 இலங்கையின் வடபுலமும் கொடிய கொரானா தொற்றின் ஆபத்தை தொட்டு நிற்கிறது. எம்மைச் சுற்றி நடைபெறும் சம்பவங்கள் எவையாவது இயல்புகளுக்கும் யதார்த்தங்களுக்கும் மாறாக இருக்கின்றபோது, சமூக பொறுப்புணர்வு மிக்கவர்கள் சமூகத்தின் இயல்பற்ற நடத்தைகளை சரியான முறையில் கையாள முன்வர வேண்டும். உலகில் கொரானா தொற்று அதிகரித்த நேரம் சுவிஸும் பெப்ரவரி 25 தொடக்கம் அதன் பாதிப்பைச் சந்தித்துக் கொண்டிருந்த காலத்தில் மார்ச் 10 காலப்பகுதியில் குறித்த போதகர் இலங்கைக்கு வருகிறார். மார்ச் 9ம் திகதி இத்தாலி, தென்கொரியா, மற்றும் இரானிலிருந்து வந்தவர்களை இலங்கை அரசு தனிமைப்படுத்த தீர்மானித்திருந்தது. அடுத்த நாள் சுவிஸிலிருந்து வந்தவர் என்பதால் எந்தத் தடையு…
-
- 2 replies
- 864 views
-
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல் ஓட்டப் பந்தயம் – சஜித் வேகமான முயல் . . 2 தென் இலங்கை மட்டத்தில் சஜித்தின் ராஜதந்திரத்தில் உள்ள பிரச்சினை சர்வதேச நாடுகள் சொல்லித்தான் சிறுபாண்மை இன மக்கள் சஜித்தை ஆதரிப்பாக சிங்களவர் பார்க்கும் போக்கு வலுப்பெறுவது. வடகிழக்கைப் பொறுத்து கிழக்கில் ஒருசாரார் சஜித் தங்களுக்கு எதிரானவர் என கருதுவது. வடக்கில் மன்னார் மேடையில் மனோகணேசன் அவமதிக்கப் பட்டதாக பரவும் வதந்தி. மேற்படி பலபரட்சைக்குபிறகு வடக்கிலும் கிழக்கின் கருத்து எடுபடக்கூடிய சூழல் உருவாகுவது, சிவாஜிலிங்கம் ஒருதலைப் பட்ச்சமாக சஜித்தை எதிர்ப்பதும் ”சஜித் தனது தந்தையின் மரணத்துக்கு பழிவாஙுகக் காத்திருக்கிறார் என பீதியைக் கிழப்புவதும், …
-
- 1 reply
- 863 views
-
-
Tube - மென் சக்கரம் Tyre - வன் சக்கரம் Front wheel - முன் சக்கரம் Rear wheel (or) Back wheel - பின் சக்கரம் Free wheel - வழங்கு சக்கரம் Sprocket - இயக்குச் சக்கரம் Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம் Training wheels - பயிற்சிச் சக்கரங்கள் Hub - சக்கரக் குடம் Front wheel axle - முன் அச்சுக் குடம் Rear wheel axle - பின் அச்சுக் குடம் Rim - சக்கரச் சட்டகம் Gear - பல்சக்கரம் Teeth - பல் Wheel bearing - சக்கர உராய்வி Ball bearing - பந்து உராய்வி Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு Cone cup - கூம்புக் கிண்ணம் Mouth valve - மடிப்பு வாய் Mouth valve cover - மடிப்பு வாய் மூடி Chain - சங்கிலி Chain link - சங்கி…
-
- 1 reply
- 860 views
-
-
இதில் போனால் சங்கடம் ( இ போ ச ) ஊரில எப்பவும் CTB க்கு ஒரு தனி இடம் இருக்கும். இலங்கை போக்குவரத்துச் சபை (CTB ) 1978இல வட பிராந்திய போக்குவரத்துச் சபையா மாறினாலும் நிலைச்சது என்னவோ CTB எண்ட பேர் தான். எழுபதுகளில அரசாங்க உத்தியோகக்காரர் மாதிரி CTB காரருக்கும் நல்ல demand இருந்தது . வாத்தியார் உத்தியோகத்திலும் பார்க்க CTB டிரைவர் வேலை சம்பளம் கூட எண்டு சிலர் அந்த வேலைக்கு போனது ,எண்டு கதை கூட இருந்தது . ஆனா இந்த பேருக்கு நாங்க படிற பாடு எங்களுக்குத்தான் தெரியும். இண்டைக்கு பலாலி -யாழ்ப்பாணம் 764 ,காலமை ஐஞ்சரை ஓட்டம் கிடைச்சிது. பஸ் வெளிக்கிடேக்க நாலு பேர் தான் அதுகளும் அநேமா ஆசுபத்திரிகாரருக்கு சாப்பாடு தேத்தண்ணி கொண்டு போறவை . ஈவினை தாண்டி வர பிறகும் புன்னாலைக…
-
- 11 replies
- 859 views
-
-
ஒரே பெண்: ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அழகு! Dec 30, 2022 12:28PM IST ஒரே பெண்ணின் புகைப்படத்தை வைத்து இந்தியாவின் அனைத்து மாநில கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (artificial intelligence) அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் மேம்பட்டுத்தபட்ட ஒன்றாக மாறியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் அனைத்து வகையான படங்களையும் உருவாக்க முடியும். டெல்லியைச் சேர்ந்த மாதவ் கோஹ்லி என்ற கலைஞர் சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் …
-
- 6 replies
- 859 views
-
-
இந்தியாவில் கூர்மையடைந்து வரும் இந்து முஸ்லிம் முரண்பாடுகளிலிருந்து இதை பார்க்கவும் சில வருடங்களுக்கு முன் அவரை முதன் முதலில் சந்தித்தேன். அவர் பெயர் அப்பாஸ் அஹமத் சுமார் அறுபது வயதிருக்கும். பழைய நடிகர் பாலாஜி போல் நல்ல பருமனான உடல். நல்ல நிறம். சிரித்த முகம், மணக்க மணக்க ஏதோ செண்ட் போட்டிருந்தார். வெள்ளை கோடு போட்ட கைலியும் ஜிப்பா போல ஒரே ஒரு பட்டன் வைத்த ஷர்ட்டும் அணிந்திருந்தார். சென்னையின் புறநகரில் நிலம் ஒன்று வாங்கப் போகதாகவும் அதுக்கு லீகல் ஒப்பினியன் வேண்டும் என்றும் சொன்னார். சில டாக்குமெண்டுகளை உடன் எடுத்து வந்திருந்தார் அதுக்கென்ன சார். பார்த்து சொல்கிறேன் என்றேன். என்னை எப்படி தெரியும் என்று கேட்டேன். அவர் மகளின்…
-
- 0 replies
- 858 views
-