சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1006 topics in this forum
-
'திட்வா' புயலால் மழை, வெள்ளம், நிலச்சரிவு என இலங்கை முழுவதும் பெரும் இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டு வருவதால் நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 153 பேர் உயிரிழந்த நிலையில் 191 பேரை காணவில்லை என பேரிடர் மேலாண்மை மையம் கூறுகிறது. சுமார் ஒரு லட்சத்து 79 ஆயிரம் குடும்பங்களும், 6.46 லட்சம் தனி நபர்களும் இந்த இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள், தொழிற்சாலைகள், குடியிருப்புப் பகுதிகள் என எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்படுகின்றனர். மேலும் நிலச்சரிவில் தமிழர்களும் உயிரிழந்துள்ளனர். இலங்கையின் தற்போதைய நிலை என்ன? 'திட்வா' புயலால் அங்குள்ள தமிழர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? இந்த காணொளியில் பார்க்கலாம்.…
-
- 5 replies
- 762 views
- 2 followers
-
-
Vara Mahadevan 1984, மருத்துவக் கல்லூரியில் நுழைந்து சில மாதங்களே இருக்கும். இடி போல் வந்தது அந்த GO. எல்லா வெளி நாட்டு மாணவர்களின் கட்டணம் மாதம் 2000 ரூபாயாக கட்ட வேண்டும். மருத்துவ கனவு நொறுங்கிய உணர்வு. சோத்துக்கே வழியில்லை இதில... DME அலுவலகம் போல பல இடங்கள் ஏறி இறங்கியும் எந்த பயனும் இல்லை. சரி மூட்டையைக் கட்டிக்கிட்டு வேற ஏதாவது படிக்கலாம் என்று நாயர் கடைல சிங்கிள் டீ கிளாசோட யோசனை. அப்போ ஒரு சீனியர் வேடிக்கையா ஒன்று சொன்னார். கோட்டையில போய் CM கிட்ட ஒரு மனு குடு…
-
- 1 reply
- 761 views
-
-
** எனது அனுபவம் அல்ல. வாட்ஸ் அப்பில் வந்த செய்தி யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நான் பெற்றுக்கொண்ட மனம் வருந்தத்தக்க அனுபவம். கடந்த 12.09.2023 காலை 8.25 மணியளவில் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு சென்ற நான் ஒரு முதலுதவி பயிற்றுவிப்பாளர் என்றவகையில் சுய விருப்பின் பெயரில் சிறுநீரகத்தின் செயற்பாட்டை அறிய உதவும் Serum Creatinine எனப்படும் பரிசோதனையை செய்வதற்காக குருதி மாதிரியினை வழங்கியிருந்தேன். அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் பரிசோதனையின் முடிவினை பெறச்சென்றிருந்தபோது அங்கு சில நிமிடநேரத்தின் பின் ஒரு பெண் கையில் எனது பரிசோதனை முடிவினை வழங்கிவிட்டு அது தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளரைச் சந்தித்துவிட்டுச் செல்லும்படி அறிவுறுத்தினார். அத்…
-
- 6 replies
- 760 views
- 1 follower
-
-
ஊருக்கு நான் கிளம்பீட்டன். போய் கார் ஒன்றை வாடகைக்கு எடுக்கணும் இல்லையோ வானாவது பிடிக்கணும் வாகனம் ஒடியபடி இல்லை வாகனத்தில் இருந்தபடி வீடியோ எடுத்துப் போடணும் போகேக்க விமான நிலையத்திலும் போய் இறங்கி விமான நிலையத்திலும் போற விமானத்திலும் தாற சாப்பாட்டையும் படம் பிடித்து கட்டாயம் போடணும் சொல்லீட்டும் தான் நான் போனாலும் சப்பிரைஸ்சா தான் போறன் என்று சனத்திற்கு நல்லா படம் காட்டணும் ஜட்டியை விட கொஞ்சம் பெருசா காற்சட்டை ஒன்றை கொழுவணும் கண்டதை எல்லாம் வாங்கி தின்னணும் தின்னுறதைவிட படம் பிடிச்சு போடணும் கையில் ஒரு தண்ணிப் போத்தல் கண்ணுக்கு ஒரு கூலிங்கிளாஸ் தலையில ஒரு தொப்பி கட்டாயம் முடிஞ்சால் முதுகில ஒரு சோல்டர் பை முடியாட்டில் இடுப்பிலோ குறைக்காலோ ஒரு காசுப்பையை தொங்க விட…
-
-
- 10 replies
- 758 views
- 1 follower
-
-
இந்த உலகம் நல்லவர்களால் இயங்குகிறது.. நீண்ட காலத்திற்கு பிறகு நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவர் Mumbaiல் settle ஆனவர். Fast Food கடை மும்பை outerல். கோவை அருகில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர். வயதாகிவிட்டது. எனவே கிராமத்திற்கு வந்து விட்டேன். கடையையும் கொடுத்து விட்டேன் என்று கூறினார். பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. மும்பை அவர் கடையில் 6 பேர்கள். மூன்று பேர் Sandwich makers. ஒருவர் Bearer.ஒருவர் Table Cleaner. கூட இவர் order எடுக்க, Cash வாங்க கல்லாவில். Simple Hub.. மாலை 5 மணி முதல் 9 மணி வரை நல்ல கூட்டம் இருக்கும். அந்த சமயத்தில் இவரே Customers இடமிருந்து order வாங்கி உள்ளே சொல…
-
- 1 reply
- 758 views
- 1 follower
-
-
நீதிக்கும் சமாதானத்துக்குமான, கேள்விகளின் காலம் - 1 – நடராஜா குருபரன்! #justice #peace #memories #peace_talk கொள்கை என்பது ஒரு இலக்கை அடைவதற்குப் பின்பற்றப்படும் வழி முறையையும் ஒழுக்க விதிகளையும் குறிக்கும். ஒரு எண்ணம் சற்று சந்தேகத்துடன் முன்வைக்கப்படும்போது அது கருத்து எனப்படுகிறது. உறுதியாக முன்வைக்கப்பட்டால் அது கொள்கையாகிறது. சொன்னவருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்த பின்பும் பிறருக்கு அதன்மேல் உறுதிப்பாடு ஏற்படும் போது அது கோட்பாடாகிவிடுகிறது. முன் கூட்டியே தீர்மானிக்கப்படும் நம் கொள்கைகளில், மூலோபாயம் தந்திரோபாயங்களில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவைப்படின் அவை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு புதிய உள்ளீடுகள…
-
- 0 replies
- 756 views
-
-
டிரான்ஸ்னிஸ்ட்ரியா பகுதிக்குள் கிரனேற் லோஞ்சர் தாக்குதல்கள் ரஷ்யா - உக்ரைன் யுத்தம் மூன்றாம் நாட்டுக்கு விரிவு உக்ரைன் எல்லையோரம் மோல்டோவா வுக்குள் அமைந்துள்ள டிரான்ஸ்னிஸ்ட் ரியா பிராந்தியத்தில் திங்கள், செவ்வாய் இரு தினங்களும் அடுத்தடுத்துத் தாக்கு தல்கள் நடந்திருக்கின்றன.மர்மமான விதத்தில் கிறனேட் லோஞ்சர்கள் மூலம் நடத்தப்பட்ட அத் தாக்குதல்களில் ரஷ்யா வின் ஒளி,ஒலிபரப்பு சேவையை வழங்கு கின்ற அன்ரனா கோபுரங்கள் சேதமடைந் துள்ளன. ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சி அரசினால் நிர் வகிக்கப்படுகின்ற டிரான்ஸ்னிஸ்ட்ரியா வின் பாதுகாப்புப் பணிமனை ஒன்றும் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது. இத் தாக்குதல்களை அடுத்து மோல்டோவா அரசு அதன் பாதுகாப்புச் சபையைக்…
-
- 2 replies
- 755 views
-
-
President Maithripala Sirisena, I am writing this letter to you, but I am fully aware you may never read it. Just as you pardoned my sister’s murderer on a Saturday night and chose to do it on a long weekend in Sri Lanka so you could avoid facing what you have done for as long as possible. I cannot begin to understand how a father of two daughters reached the decision to release this monster? I know every single injury my sister sustained that night. I could write the extensive list right here, it is tragically clear in my memory, but I need to protect my parents from having to go through it all again. I can’t stop thinking about what she went through that night. She foug…
-
- 0 replies
- 753 views
-
-
'தமிழ் இந்து‘ வில் ‘இலங்கைத் தேர்தல்கள் உணர்த்தும் செய்தி என்ன?‘ என்ற கட்டுரையைப் படித்தேன். அதில் உண்மைக்கு மாறான தகவல்கள் உண்டு. குறிப்பாக – 1. வடக்குக் கிழக்கைச் சேர்ந்த எவரும் அமைச்சுப் பதவிகளில் இல்லை என்பது. அருண் ஹேமச்சந்திர கிழக்கு மாகாணம்– திருகோணமலையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதியாவார். 2. தனிச் சிங்கள அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது என்பது. இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள், இரண்டு துணை அமைச்சர்கள் என நான்கு அமைச்சர்கள் தமிழர்கள் உண்டு. 3. 1971 ல் அதிபர் பதவியைக் கைப்பற்றுவதற்காக ஜே.வி.பி போராடியது என்பது. அது ஜே.வி.வியின் முதலாவது கிளர்ச்சி. அதில் அவர்க…
-
- 3 replies
- 751 views
-
-
WORDS OF COMFORT TO RANIL- V.I.S.J.AYAPALAN POETரணிலுக்கு ஆறுதல் மொழிகள் - வ.ஐ.ச.ஜெயபாலன் . . NEWS, I WILL DECIDE WHO BECOMES PM. PM: - SAJITH யார் பிரதமர் என்பதை நான் தீர்மானிப்பேன் - சஜித் . எனது ஆறுதல் மொழி. - MY WORDS OF COMFORT . . . RANIL, DON'T WORRY. ISRI LANKAN PRESIDENT ELECTION RACE REMINDS ME A CHILDREN STORY. . கவலைப்படாதே ரணில். இலங்கை அதிபர் தேர்தல் எனக்கு ஒரு சிறுவர் கதையை ஞாபகப்படுத்துகிறது. SAJITH IS THE FASTEST RABBIT IN THIS RACE. RANIL, YOU ARE THE NEPHEW OF THE FOX, SO DON'T STOP. SEND MORE AND MORE MINSTERS TO THE OTHER SIDE TO SAVE YOUR CARRIER. …
-
- 0 replies
- 749 views
-
-
உள்ளடக்கம் :- பள்ளி கல்வியை முடித்தபின் உயர் கல்விக்கு செல்லும் விகிதாசாரம் தமிழ்நாடு 45.2%, உத்தராபிரதேசம் - 25%, குஜராத் - 20% (வளர்ச்சியடைந்த மாநிலம்🤔 ) திரவிட கழகத்தால் தமிழ்நாடு கெட்டு போச்சு என்று கூச்சலிடுபவர்கள் கவனிக்கவும்..... ஏன் தமிழ்நாடு நீட்டுக்கெ ஏதிராக போராடுகின்றது 20 கோடிக்கு உத்தரபிரதேசத்தில் 55 மருத்துவ கல்லூரி, தமிழ்நாட்டில் 53, குஜராத்தில் - 29............. பல நிர்வாகங்கள் இன்னும் முழுமையாக இயங்காத நிலையில் எப்படி பள்ளிகளை திறக்க முடியும், திறந்தால் குழந்தைகளுக்கு உணவு கிடைக்கும், பல குழந்தைகள் உணவின்றி மெலிந்துவிட்டார்கள்............. கடைசியாக ஒரு முட்டை சாப்பிட்டது பங்குனி மாதம் மிஸ்...
-
- 0 replies
- 749 views
-
-
நான் இதை முழுக்க முழுக்க தென்னகத்தை சேர்ந்த, நகரங்களில் வாழும் மத்திய, மேல் மத்திய வர்க்க வேலை செய்யும் ஆண்களை -குறிப்பாக 70-80களுக்கு முன்பு பிறந்தவர்கள், 80-90 களுக்குப் பிறகு பிறந்தவர்களை – வைத்தே சொல்கிறேன். நான் கல்லூரிகளில் வேலை செய்துள்ளதால் அங்கு அரசு ஊதியம் பெறுகிற கடந்த இரு பத்தாண்டில் வேலைக்கு வருகிறவர்களை ஐம்பது வயதுக்கு மேலானவர்கள் மற்றும் நாற்பதுகளுக்கு கீழிருக்கும் தனியார் சம்பளம் பெறுகிறவர்களுடைய உடல் மொழியை ஒரே சமயம் பார்த்து ஒப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. அதை வைத்தே இதை சொல்கிறேன். 60-70களின் தலைமுறையை சேர்ந்த ஆண்களிடம் ஒரு ஸ்டைல் உள்ளதாக எனக்கு எப்போதுமே தோன்றியதுண்டு. நான் இதை ஒரு மாணவனாக நாகர்கோயிலிலும் சென்னையிலும் படித்த காலத்திலும் கண்டிருக்கிறேன். …
-
- 0 replies
- 748 views
- 1 follower
-
-
எம்ஜிஆர் அறிமுகமான சதிலீலாவதி திரைப்படம்தான் கே.ஏ.தங்கவேலுவுக்கும் முதல்படம். “இன்னைக்கு உன்னை ‘சூட்’ பண்ணப் போறோம்” என்று இயக்குனர் டங்கன் கே.ஏ.தங்கவேலுவிடம் சொன்னதும் இவர் பதறிப் பயந்து என்.எஸ்.கிருஸ்ணனிடம் ஓடிப் போய் “அண்ணே, என்னை சுடப் போறாங்களா?” என்று அழுதாராம். “ பைத்தியக்காரா! உன்னைப் படம் பிடிக்கப் போறாங்களடா” என்று என்.எஸ்.கே விளக்கம் சொல்லி அவரைச் சமாதானம் செய்தாராம். இந்தச் சம்பவம் நடந்தது 1936இல். இந்தச் சம்பவத்தை எனக்கு நினைவூட்டியது இந்தச் செய்தி. கால்பந்தாட்ட வீரரான சுப்பர் ஸ்ரார் ஏர்லிங் கார்லாண்ட் (23) இறந்து விட்டதாக நோர்வே பத்திரிகை Verdens Gang சமீபத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டது. இந்தச் செய்தி உடனடியாக, பரவலாக எல்லா இடமும் போய்ச் சேர்ந்து விட…
-
- 1 reply
- 747 views
-
-
இலங்கையில் 2009 யுத்தம் முடிந்தபின் விடுதலைப்புலிகளை கண்களால் பார்த்தறியாத தலைமுறைகள் மெதுவாக இளைஞர்களாகும் இந்த காலப்பகுதியில் அவர்களின் சிந்தனை எங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது.. இது இதற்கு அடுத்த தலைமுறை இன்னும் சில வருடங்களில் இளைஞர்கள் ஆகும்போது இன்னும் மாற்றமடையப்போகுது.. ஆனால் யாழில் எழுதும் நாம் எல்லாம் பெரும்பாலும் புலிகள் இருந்த காலத்தில் சேமித்த ஞபகங்களை சுமந்து கொண்டு அலைபவர்கள்.. எங்களுக்கு இவை அந்நியமாகப்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல.. ஆனால் வயதாகும்போது ஊரில் மைனராக இருந்தவர்கள் ஒதுங்கி புது இளைஞர்கள் மைனர்கள் ஆவதுபோல் நாமும் மெல்ல மெல்ல வயதாவதால் ஒதுங்கும் காலமோ எண்டு சிந்திக்க தோன்றுது.. இது இவர் வயதை ஒத்த பெரும்பாலானவர்கள் சிந்தனைகள் எழுத்து…
-
- 2 replies
- 746 views
-
-
ஹோட்டல் உரிமையாளர் சாதம் பரிமாறுவதற்காக குனிந்த போது , அந்த பெரியவர் கேட்டார்.....மதிய உணவுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள். உரிமையாளர் சொன்னார்... மீன் குழம்புடன் 50,மீன் இல்லாமல் 20 ரூபாய்....கிழிந்த சட்டையை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 10 ரூபாய் தாளை எடுத்து, உரிமையாளரை நோக்கி நீட்டினான்.... இதுவே என் கையில் உள்ளது.....இதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடுங்க.... பெறும் அன்னம்மானாலும் பரவாயில்லை...மிகுந்த பசி.நேற்று முதல் எதுவும் சாப்பிட வில்லை என்று சொல்லத் தயங்கும் அவரது வார்த்தைகள்.தொண்டையோ நடுங்குகிறது.... * ஹோட்டல் உரிமையாளர் மீன் குழம்போடு... அனைத்தையும் அவருக்கு பரிமாரினார். அவர் …
-
- 0 replies
- 746 views
-
-
-
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ, இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளது. அதன் முதல் பதிவில், மக்களுக்கு புதிர் ஒன்றை அளித்து, அதனை தீர்க்க சொல்லியுள்ளது. அதில் ஒரு மேசையில், வெவ்வேறு பொருட்கள் சிதறி வைக்கப்பட்டுள்ளன. அதில் இருக்கும் பொருட்களை அடையாளம் காண வேண்டும். இளைஞர்களை சிஐஏ அமைப்பில் சேர்க்கும் திட்டத்திலேயே இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, 2 - என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கடிகாரத்தில், மணி 8:46. 2001ஆம் ஆண்டு 9/11 தாக்குதலில் உலக வர்த்தக மையத்தின் வடக்கு டவர் அப்போதுதான் தாக்கப்பட்டது. 3 - சீனாவின் வரைபடம் - ஆசியாவில் உள்ள அமெரிக்காவின் முக்கிய போட்டியாளர்களில் சீனாவும் ஒன்று.
-
- 0 replies
- 743 views
-
-
2009 முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையில் கூட்டமைப்பின் வகிபாகம்! - அம்பலப்படுத்துகிறார் சிவாஜிலிங்கம்
-
- 0 replies
- 740 views
-
-
இந்தக் காலத்திலும் இப்படி ஒரு இளைஞனா? பலரின் பாராட்டுக்களை பெற்று உரும்பிராய் மண்ணுக்கு பெருமை சேர்கிறார்.. உரும்பிராயில் குமரன் என்டுற பொடியன் ஆர் ???பாராட்டுதலுக்கும், மற்றையோரையும் சேவைசெய்ய தூண்டுவதற்குமான பதிவு இது Kumaran Sri உரும்பிராயில் இந்துக்கல்லூரி வளாகத்திலே கடந்த இரு தினங்களாக கொரோணா தடுப்பு மருந்தேற்றல் நிகழ்வு நடைபெற்றுவருகின்றது. இதிலே அரச துறைசார் உத்தியோகத்தர்கள் தத்தமது கடமைகளை கடமைக்கு மேலதிகமாக சேவை மனப்பாங்குடன் செய்து வருகின்றனர். இது இப்பிடி இருக்க கிராம அலுவலர் என்ன பொதுமக்கள் சார் தகவல் மற்றும் ஆளணி உதவி என்றாலும் குமரனை கேளுங்கோ என்டுறார். ஊசிக்கு வாற வயோதிபர்களை கொரணா அச்சுறுத்தல் எதுவும் பாராமல் கையைப்பிடிச்சு கூட்டிக…
-
- 0 replies
- 740 views
-
-
நேற்று வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று தான், உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தாய்லாந்து நாட்டில் நடந்த தேசிய அழகிப் போட்டியில் 17 வயதான , மின்ட் என்னும் பெண் வெற்றிபெற்று அழகு ராணியாக முடிசூடிக்கொண்டார். அவர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அப்படியே சென்று, குப்பை தொட்டிகளை கழுவி சுத்தம் செய்துகொண்டு இருக்கும் தனது அம்மாவிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். குறித்த புகைப்படம் வெளியாகி , ஆசிய நாட்டவர்களை மட்டும் அல்ல, பல மேற்குலக மக்களையும் உணர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அழகியின் அம்மா பல வருடங்களாக குப்பை தொட்டிகளை கழுவி. அதில் இருந்து கிடைக்கும் பணத்தில் தான் தனது மகளை வளர்த்து வந்துள்ளார். கடும் கஷ்டப்பட்டு தன்னை வளர்த்து ஆளாக்கியமைக்காகவே…
-
- 0 replies
- 739 views
-
-
பிறவிப் பெருங்கடல் விடிய எழும்ப Google calendar இல வந்த alert ஐப் பாத்து, முதல் வேலையா fb இல தேடி ஒரு photo ஐ எடுத்து what’s app குறூப்பில birthday day wish போட்டிட்டு status இல “ HBD to ……..” எண்டு முழுசாக்கூட எழுதாமல் சுருக்கிப் போட்டிட்டு தன்டை admin வேலையையும் காலைக் கடமையை வடிவாச் செய்திட்டன் என்ற திருப்பதியோட நாளை ஆரம்பித்தார் நம்பி. அவுஸ்திரேலியாவில விடிஞ்சாலும் அல்பேட்டாக்காரன், இரவுக் குளிருக்க ரெண்டு பெக்கைப் போட்டுக்கொண்டிருந்தவன், உடனயே தன்டை பங்குக்கு ஒரு பலூன் படத்தைப் போட்டான். மூத்திரம் போக வேளைக்கு எழும்பி நித்திரை வராமப் போஃனைப் பாத்திட்டு ஆரா இருக்கும் எண்டு யோசிச்சிட்டு , ஏன் பிரச்சினை எதுக்கும் ஒரு வாழ்த்துத் தானே எண்டு தன்டை பங்குக்கு கண்ட…
-
- 2 replies
- 739 views
- 1 follower
-
-
சந்ததிப் பெருக்கமும் இன்மையும் (பகுதி 1) - ஆர். அபிலாஷ் கேரளாவை சேர்ந்த என்னுடைய மாணவர் ஒருவர் அரசு உதவி பெறும் கல்லூரியில் நல்ல சம்பளத்தில் உதவிப் பேராசிரியர். அவரை நான் சந்தித்த போது தான் புதிதாகக் கட்டிய பிரம்மாண்டமான வீட்டை தன் போனில் காட்டினார். அப்போது வகுப்பில் உள்ள பிற மாணவர்கள் சிரித்தனர். காரணம் அவரது வீட்டின் முன் எடுத்ததாக அவர் காட்டிய குடும்ப புகைப்படத்தில் அவருடன் மூன்று சிறு குழந்தைகள் ஏற்கனவே இருந்தார்கள். இது நடந்து அடுத்த சில ஆண்டுகளில் இன்னும் இரு குழந்தைகள் வந்துவிட்டனர். இப்போது அவரது குடும்பமென்பது அவர், அவரது மனைவி, ஐந்து குழந்தைகள். இப்போது அவர் மனைவி மீண்டும் கருவுற்றிருக்கிறார். அவரது பெற்றோர் பக்கத்தில் அவர்களது குடும்ப வீட்டில் இர…
-
- 4 replies
- 739 views
- 1 follower
-
-
கலெக்டர் ஏன் மேக்கப் போடவில்லை...? மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீமதி. ராணி சோயாமோய், கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறார். கைக்கடிகாரத்தைத் தவிர வேறு எந்த நகையும் அணியவில்லை. பெரும்பாலான குழந்தைகளை ஆச்சர்யப்படுத்திய விஷயம் என்னவென்றால், அவர் முகத்தில் பவுடர் கூட பயன்படுத்தவில்லை. பேச்சு ஆங்கிலத்தில் உள்ளது. அவர் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே …
-
- 1 reply
- 738 views
-
-
மாசி மாதம் எண்டாலே... மாதகல் முரல் மீனுக்கு நாக்கு தவியா தவிச்சிடும்... ஓம் என் அன்பு மனைவீட பிறந்த கிராமம்... மாசி மாதம் வந்திட்டா பட்டுவோட அம்மப்பா சொல்லிட்டு திரிவார் தம்பி ஒரு நாளைக்கு முரல் வாங்குவம் எண்டு ஆனா என்ன விலையெண்டாலும் அஞ்சாறு நாள் வாங்கீடுவார்... சரி வாங்கோ கடக்கரைக்கு போவம்... அங்க தம்பி மார் கூம்பு வலைய கொண்டு ஏழுமணிக்கு கடலுக்கு போவினம் ஒரு ரெண்டுகடல் மைல் தூரம் போக நேரம் சரியா இருக்கும்... அப்ப பாத்து இளம் முரல் மீனுகள் வெளிச்சத்துக்கு துள்ளி பாய்வினம். அந்த நேரத்தில கச்சிதமா வலைய வீசி அள்ளீடுவாங்கள் தம்பி மார்...பிறகு ஒரு எட்டுமணி மட்டில கரைக்கு வரவே வாங்கின மீன் மாயமாகீடும்... அவைக்கு அவ்வளவு கிராக்கி.... சரி மீனை வாங்கிக்கொண்…
-
-
- 9 replies
- 734 views
- 1 follower
-
-
இலக்கை நோக்கி பெலரூஸ் December 2022 மைக்கின்டை சுருட்டை பாதி வாங்கிப் பத்தின அன்ரனோவ் கண்ணை telescope இல இருந்து எடுக்காம சுத்திப் பாத்துக்கொண்டிருந்தான். அதை வாயில் வைக்க முதல் காட்டுப்பக்கம் வந்த சலசலப்பு என்ன எண்டு பாக்க பெரிய focus light ஐத் திருப்ப , “உது கரடி தான்” எண்டு மைக் சொல்ல , “இல்லை இந்த நேரம் கரடி திரியாது , அதோட இது மரத்தின்டையோ , கிளையின்டயோ சலசலப்பு இல்லை நிலத்தோட வாறது” எண்டு சொல்லித் திருப்பியிம் பாத்திட்டு ஒண்டையும் காணேல்லை எண்டு போட்டு கடைசியா ரெண்டு தரம் நல்லா உள்ள இழுத்து நெஞ்சு முட்ட நிறைச்சு வைச்சு மூச்சைக் கொஞ்சம் கொஞ்சமா வெளீல மூக்கால விட்டிட்டு, கடைசிக் காத்தோட காறி எச்சிலைத் துப்பீட்டு ஒரு chewing gum ஐ வாயில போட்டான். Al ja…
-
- 2 replies
- 733 views
- 1 follower
-