கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
-
பனியும் மழையும் இல்லா குளிர் கால இரவொன்றை கடும் காற்று நிரப்பிச் செல்கின்றது ... காற்றின் முனைகளில் பெரும் வாள்கள் முளைத்து தொங்குகின்றன எதிர்படும் எல்லாக் கனவுகளையும் வெட்டிச் சாய்கின்றன திசைகள் இல்லா பெரும் வெளி ஒன்றில் சூறைக் காற்று சன்னதம் கொண்டு ஆடுகின்றது புல்வெளிகளும் நீரோடைகளும் பற்றி எரிகின்றன தீ சூழும் உலகொன்றில் பெரும் காடுகள் உதிர்கின்றன காலக் கிழவன் அரட்டுகின்றான் ஆலகால பைரவன் வெறி கொண்டு ஆடுகின்றான் சுடலைமாடன் ஊழித் தாண்டவத்தின் இறுதி நடனத்தை ஆரம்பிக்கின்றான் அறம் பொய்த்த உலகில் அழிவுகள் ஒரு பெரும் யானையை போல் நடந…
-
- 11 replies
- 2.4k views
-
-
ஆண்டவன் எந்த மதம்-பா.உதயன் ஆண்டவன் எந்த மதம் அறிந்தவர் சொல்லுங்கள் ஆளுக்கு ஒரு மதமாய் ஆண்டவன் படைத்தானா ஆளுக்கு ஒரு சாதி அந்த ஆண்டவன் படைத்தானா அவன் பெரிது இவன் சிறிது அட ஆண்டவன் சொன்னானா உன் மதமா என் மதமா பெரியதடா உலகில் மனிதன் சண்டையடா அட மனிதனின் மனங்கள் மாறல்லையே மனிதம் இங்கு வாழல்லையே நிறங்களில் பெயரில் நிறவாதம் இனங்களின் பெயரில் இனவாதம் மனிதனை மனிதன் கொலை நாளும் அட ஆண்டவன் எந்த நிறம் அறிந்தவர் கண்டவர் சொல்லுங்கள் வெய்யிலும் மழையும் இங்கே வேற்றுமை பார்ப்பதில்லை பெய்யெனப் பெய்யும் மழை நல்லார் உலகிருந்தால் எத்தனை மதங்கள் இருந்தாலும் அவை எழுதிய தத்துவம் ஒன்றெல்லோ எத்தனை கடவுள்கள் இரு…
-
- 3 replies
- 643 views
-
-
யன்னல்களால் வெளியே ஓங்கி வீசும் பெருங்காற்றின் சத்தங்களை தடுக்க முடியுது இல்லை ... பிணைச்சல்களையும் பூட்டுக்களையும் கடந்து வீட்டின் உள்ளே நுழைந்து மாடிப்படிகள் ஒவ்வொன்றிலும் நிதானமாக ஏறி என் அறையின் வாசல் கதவு வரைக்கும் வந்து நிற்கின்றன காற்றின் சத்தங்கள் படுத்துக் கிடக்கும் எனை எழுப்ப விருப்பமின்றியும் சொல்ல வந்த பெருங்கதையை சொல்லாமல் போக மனமின்றியும் அறையின் கதவோரங்களில் காத்து நிற்கின்றன விடிந்த பின் கதவை திறக்கும் போது அவை மீண்டும் யன்னல்களினூடு வெளியேறிச் செல்லும் கொண்டு வந்த கதைகளை சுமந்து கொண்டு அவை சொல்ல எத்தனிக்கும் கதைகளையும் …
-
- 2 replies
- 1.4k views
-
-
தாத்தாவுக்கு பேரன் எழுதும் கடிதம்-பா.உதயன் அன்பின் தாத்தாவுக்கு உங்கள் பேரன் எழுதுவது தாத்தா சுகமா தாத்தா எங்கள் வீட்டல் முன்பு போல் யாரும் நத்தார் கொண்டாடுவது இல்லை எங்கள் வீட்டு பூ மரம் பூக்க மறந்து விட்டது தாத்தா அப்பா அம்மா யுத்தம் முடிவு இல்லாமல் தொடர்கிறது நானும் சமரசம் செய்து களைத்து விட்டேன் காலைச் சூரியன் எங்கள் கதவடியில் வந்து கன காலம் ஆகிவிட்டது தாத்தா நத்தார் இம்முறை உங்களோடு கொண்டாட முடியுமா தாத்தா உங்களுக்கு பிடித்தமான காந்தி சிலையை நத்தார் பரிசாக கொண்டு வருகிறேன் தேவன் வருகையை உங்களோடு பாடி மகிழ்வதில் எத்தனை சந்தோசம் தாத்தா எல்லாக் கடவுளுமே சொல்லும் …
-
- 8 replies
- 4k views
- 1 follower
-
-
-
- 4 replies
- 946 views
-
-
எல்லா இரவுகளையும் போல சில இரவுகள் இருப்பதில்லை வானில் அலையும் ஒற்றைக் குருவியின் துயர் அப்பிய குரலை போல சில இரவுகள் காரணமின்றி துயரால் நிரம்புகின்றன எங்கோ அறுந்து போன ஒரு இழை ஞாபகத்தில் வந்திருக்கலாம் என்றோ காணாமல் போன நண்பனின் குரல் மீண்டும் கேட்டு இருக்கலாம் அல்லது எப்போதோ எவருமற்று தனித்து விடப்பட்டதின் துயரம் தீண்டி இருக்கலாம் புரண்டு படுக்கையில் நிரடிப் போகும் ஒரு நொடி நினைவுத் துளியால் சில இரவுகள் காரணமின்றி துயரத்தில் மூழ்கி விடுகின்றன ரயில் பயணங்களில் இரா வேளையில் குளிர் காற்றிடை பாடும் விழியற்ற பாடகனின் குரலில் வழியும் வேதனையைப் போல இருக்கின்றன இந்த இரவுகள் பின்னிரவொன்றில் விளக்கற்ற வீதி ஒன்றில் விற்று முடிந்து செ…
-
- 12 replies
- 3.5k views
-
-
"அடக்கம் தடுக்க ஆசை நடக்க" "அடக்கம் தடுக்க - ஆசை நடக்க அச்சம் எச்சரிக்க - அழகு இழுக்க அடங்கா நெஞ்சம் - பொங்கி வழிய அணங்கே உன்னுடன் - நான் வரவா?" "ஆடை கொஞ்சம் - காற்றில் ஆட ஆபரணம் உடலில் - மின்னி ஒளிர ஆழம் தெரியா - சுந்தரி கவர்ச்சி ஆட்டிப் படைக்குது - என் உள்ளத்தை?" "இமைகளில் சிக்கி - என்னையே இழந்து இளையாள் இடையின் - வனப்பில் மயங்கி இருண்ட மேகஞ்ச்சுற்றிய - சுருண்டு கூந்தலிற்குள் இமைப் பொழுதில் - ஏன் வஞ்சித்தாய்?" "ஈரமான பூவே - இளமை பூவையே ஈகை ஒன்று - எனக்குத் தருவாயா ஈவு இரக்கம் - கொண்ட விறலியே ஈடிகை எடுத்து - உன்னை வரையவா?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 510 views
-
-
நான் பேசத்தெரிந்த மனிதன் நான் பேசுவேன் என் கனவு பற்றி பேசுவேன் என் காதல் பற்றி பேசுவேன் நான் எழுதத்தெரிந்த மனிதன் என் வாழ்வு பற்றி எழுதுவேன் என்னோடு வாழ்ந்த மனிதர் பற்றி எழுதுவேன் எங்கு நான் வாழ்ந்தாலும் என் வேர் பற்றி எழுதுவேன் என் இனம் என் மண் எம் விடுதலை என் அடையாளம் எல்லாம் பற்றியும் எழுதுவேன் பேசுவேன் வஞ்சனை செய்வோர் பற்றியும் வாய்ச்சொல்லில் வீரர்கள் பற்றியும் எஞ்சி இருக்கும் காலம் வரை என் தமிழ் தந்த திமிரோடு எழுதுவேன் பேசுவேன் நான் எழுதப் பேசத் தெரிந்த மனிதன் என் மூச்சும் என் பேச்சும் நிற்கும் வரைக்கும் நான் எழுதுவேன் நான் பேசுவேன்.
-
- 0 replies
- 457 views
-
-
-
- 2 replies
- 656 views
-
-
ஜனனி அக்கா உங்க ஈழத்தம்பி பேசுறன்.. ஊரில சிவனேன்னு சும்மா கிடந்த ஜனனி அக்கா ஐ பி சி ஜனனி அக்கா ஆச்சு இப்ப கடல் கடந்து பிக் பாஸ் போயாச்சு. அதுக்கு என்ன ஆச்சு பேச்சு வேணாம்.. நாம ஈழத் தமிழங்களாச்சே பாவப்பட்ட ஜென்மமாச்சே உங்க அக்கா அண்ணா ஊருக்காய் மடிஞ்சப்போ இந்த பிக் பாஸெல்லாம் கிக் பாஸா அடிச்சாங்க.. இப்ப மட்டும் என்னே பாசம் கூப்பிட்டு வைச்சு - உங்க தமிழை கலாய்க்கிறாய்ங்க ஏன்... உங்களையே கலாய்க்கிறாய்ங்க.. கூடவே.. ஈழத்தை அசிங்கம் பண்ணுறாய்ங்க.. தேவையாக்கா இந்த பிழைப்பு நமக்கு..!! ஏதோ போயிட்டீங்க கடைசி வரைக்கும் காசுக…
-
- 6 replies
- 3.4k views
-
-
"ஒருபால் இருபால் அவரவர் முடிவு" "பண்டைய நாட்களில் இயற்கையின் அழைப்பில் பலரும் பாராட்டிட திருமணம் அரங்கேறி பருவமடைத்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பக்குவமான பிணைப்பு பின்னிப் பிணைந்தது!" "சுமேரிய நாகரிகம் வழியில் சங்கத்தமிழனும் சுத்தமான இயற்கையான அணைப்பில் மூழ்கி சுதந்திர பிணைப்பில் வாழ்வை அமைத்து சுவர் அமைத்தான் குடும்பம் காக்க! " "இன்றைய நவீனம் புதியகுரல்களை உள்வாங்கி இணக்கம் கொண்ட ஒருபாலாரையும் இணைத்து இதயங்கள் ஒன்றுசேர சமஉரிமை தந்து நவீனஃபிளாஷ் [modern flash] பழைய மதிப்புகளை சந்தித்தன!" "கடந்தகால மரபும் தொடர்ந்து வாழ கள்ளமில்லா ஒருபால் அன்பும் இணைந்துவாழ களங்கமில்லா மரபுகளின் உட்கருத்தை விளக்க இரு…
-
- 0 replies
- 319 views
-
-
மாயபிம்பம் ------------------ ஆரம்பத்தில் தூரத்திலிருந்து அது ஒரு சிலையாக சிற்பமாக தெரிந்தது அப்படித்தான் அது ஒரு அழகு மிளிரும் சிலை என்றும் சொல்லியிருந்தனர் அதுவும் ஒரு காரணம் கொஞ்சம் நெருங்க அது சிற்பம் இல்லை அதில் அங்கங்கே சில செதுக்கல்கள் மட்டும் தெரிந்தது சிலையாக இல்லாவிட்டாலும் வெறும் பாறாங்கல்லாக அப்படியே படுத்தே இருக்காமல் செதுக்கல்கள் இருக்குதே இதுவே இந்நாளில் அரிது என்று இன்னும் இன்னும் நெருங்க பூமியுடன் தோன்றிய அதே கல்லுத் தான் இதுவும் என்று புரிந்தது.
-
-
- 2 replies
- 8.2k views
- 1 follower
-
-
"மூன்று கவிதைகள் / 02" 'என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன்' என்னருகே நீயிருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன் அன்னநடையில் நீவந்தால் விழிகளெல்லாம் மலைப்பதேன் அன்னைமடியில் நானிருந்த நினைப்பெல்லாம் மலருவதேன் கன்னக்குழியில் இதழ்பதிக்க கனவுகண்டு துடிப்பதேன்? வண்ணக்கோலத்தில் கையசைத்து அருகில் வந்ததேன் கண்களால் அறிகுறிகாட்டி அழகைத் தெளித்ததேன் கண்ணன் இவனேயென கட்டியணைத்து முத்தமிட்டதேன் எண்ணமெல்லாம் உன்னைமட்டுமே சுற்றிச் சுழருவதேன்? பெண்மைதரும் வெட்கம்கலைத்து நிலாவொளியில் அழைப்பதேன் கிண்ணத்தில்மது காத்திருந்தும் உன்னைத்தேடி நான்வருவதேன்? கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 'என்னிதய ஏட்டினில…
-
- 1 reply
- 288 views
-
-
-
- 3 replies
- 867 views
-
-
"எந்தன் உயிரே" "அள்ளி அரவணைத்து அன்பு பொழிந்து ஆரத் தழுவி ஆசை தூண்டி இதயம் மகிழ்ந்து இதழைப் பதித்து ஈரமான நெஞ்சம் ஈர்த்துப் பிணைத்து எழுச்சி கொள்ளும் எந்தன் உயிரே!" "அக்கறையாய் பேசி அன்பு ஊட்டி ஆதரவு கொடுத்து ஆர்வம் ஏற்படுத்தி இடுப்பு வளைவு இன்பம் சொரிய ஈவு இரக்கத்துடன் ஈருடல் ஓருயிராக உரிமை நாட்டும் உத்தம உயிரே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 468 views
-
-
மல்லிகை பூவுக்கு எங்கள் கண்ணீர்பூக்கள்..! ********************************** இன்று(28.01.2021) பல்கலைக் கழகமொன்று படுத்துறங்கிய செய்தி கேட்டு பாரெல்லாம் கண்ணீரால் நனைகிறதே! ஜீவா ஐயா ஈழத்தின் இலக்கியத் தோட்டத்தில் மல்லிகையாய் பூத்துக் குலுங்கி மனங்களை வென்ற இந்த.. மாபெரும் இலக்கியச் சிகரத்துக்கு மரணமே இல்லை என்றும் எம்மோடு வாழ்ந்துகொண்டே இருப்பீர்கள். உள்ளத்தின் உயரத்தில் மல்லிகை பந்தலாய். பசுவூர்க்கோபி-
-
- 4 replies
- 1.6k views
-
-
"வாராயோ வான்மதியே" "வாராயோ வான்மதியே கண்டாயோ என்னவளை தீராத காதலில் வருந்துவது தெரியாதோ? தாராயோ நிம்மதி உன்னிடம் கேட்கிறேனே மாறாத அன்பில் இன்னும் அலைகிறேனே ஆறாத காயங்களின் வலியில் தவிக்கிறேனே பாராயோ என்னைக் கருணை காட்டாயோ?" "வெண்ணிலாவின் ஒளியிலே அவளைத் தேடுகிறேனே கண்கள் இரண்டும் சோர்வு அடைகிறதே மண்ணின் வாழ்வை முடிக்கும் முன்பே பெண்ணே மன்னித்து என்னை அணைக்காயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 666 views
-
-
குளிக்கும் வேலை ---------------------------- ஏதாவது புதிய யோசனைகள் உங்களுக்கு தோன்றுகின்றதா என்று கேட்டார் மேலாளர் அவர் எழுதியிருந்தவை மட்டுமே தெரிந்தன மீறி ஒரு அணுக் கூட தெரியவில்லை இரண்டு நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள் என்றார் மௌன அஞ்சலி செலுத்துவது போல மௌனமாக இருந்தோம் நாங்கள் இரண்டு நிமிடங்கள் முடிய இன்று மதியம் என்ன உணவு என்று முடிவெடுத்து இருந்தேன் பரவாயில்லை குளிக்கும் போது கூட புது யோசனைகள் தோன்றும் அவருக்கு அப்படித்தான் தோன்றுகின்றன என்றார் நாளை கூட சொல்லலாம் என்றார் சட்டென்று ஒரு மின்விளக்கு எரிந்தது ஒரு இருபது வருடங்களின் முன் எனக்கும் இப்படித்தான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் தோன்றிக் கொண்டிருந்தன பின்னர் எப்பவோ அது நின்று போனது அன்று குளிக்கும் போ…
-
-
- 8 replies
- 474 views
-
-
"நிழலாடும் நினைவுகள்" "நிழலாடும் நினைவுகள் கதை சொல்லும் நித்திரை செய்கையில் கனவாய் வரும்! மகரிகை தொங்க வலதுகால் வைத்து மணமகளாய் வந்தது படமாய் போச்சு! ஆறடி சேலையில் தொட்டில் கட்டி, காலடியில் வளர்த்தது செய்தியாய் போச்சு! வாழையடி மரபை பெருமையாக பேணி வந்தாரை மகிழ்வித்தது மனதில் ஆடுது! இறக்கும் தருவாயிலும் புன்னகை பூத்தது இறவாமல் 'நிழலாடும் நினைவுகள்' ஆயிற்று!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.4k views
-
-
“நீயே எம் வேர்,” மக்கள் ஒன்றாய் முழங்கினர்! யாழ் நூலகம் அரசகாவலர்களால் எரிந்தது புத்தர் பெருமானும் சேர்ந்து எரிந்தார்! நூலகத்தின் முன்றலில் அவரின் சாம்பல் தொண்ணூறாயிரம் நூல்களின் சாம்பலுடன் கலந்து! அறிவார்ந்த அற்புதங்கள் உறைந்த இடம் ஆயிரமாயிரம் நூல்கள் வாழ்ந்த இடம்! இதயமற்ற அரசு நடத்திய கொடூரத்தில் ஈரமிழந்து வெம்மையில் வாடி வதங்கியது! அந்த நொடியில் நூலகத்தின் சுவர்கள் சாம்பலின் நினைவைக் கூறின! சாம்பலின் நடுவே விதை முளைத்தது தமிழர்களின் உள்ளத்தில் மீண்டும் மலர்ந்தாள்! மூடிய புத்தகங்கள் பிரார்த்தனையாய் திறந்தன மறைந்த எழுத்துக்கள் ஆசீர்வாதமாக மாறின! நூலகத்தின் அமைதி தெய்வீகத் தாலாட்டானது “நீயே எம் வேர்,” மக்கள் ஒன்றாய் முழங்கினர்! [கந்தையா தில்லைவிநாய…
-
- 0 replies
- 142 views
-
-
"மனித மனம் திருப்தி அடையாது" "மனித மனம் திருப்தி அடையாது மகிழ்ச்சி கொள்ள உள்ளம் விடாது மஞ்சம் இல்லையெனில் படுக்கை வராது மற்றவரை தாழ்த்தாமல் வாழ முடியாது!" "கதிரவன் கடுமையானால் முறை இடுகிறான் கடும்மழை பொழிந்தால் திட்டித் தீர்க்கிறான் கங்கை வற்றினால் பஞ்சம் என்கிறான் கங்கை பெருக்கெடுத்தால் அழிவு என்கிறான்!" "இறைச்சி இல்லையெனில் உணவு இறங்காது இல்லாமல் இருப்போருக்கு எல்லாம் இறங்கும் இல்லமே இல்லாதவனுக்கு எல்லாம் படுக்கை இச்சை கொண்டவன் இருந்தும் படுக்கான்!" "சிலருக்கு அணிய ஆடைகள் இல்லை சிலருக்கு வைக்க இடமே இல்லை சிக்கனம் …
-
- 0 replies
- 517 views
-
-
உரக்கச் சொல்கிறோம் நாங்கள் அமெரிக்கர்கள்! இரண்டு கொடிய வைரஸ்கள் இப்போது அமெரிக்கர்களைக் கொல்கின்றன. ஒன்று கோவிட் 19, மற்றையது இனவாதம். இங்கே அனைத்துத் துப்பாக்கிகளும் சொர்க்கத்தை நோக்கி மட்டுமே சுடுகின்றன. எச்சரிக்கைக் காட்சிகளால் சிறகுகள் வெட்டப்படும் கறுப்பு பறவைகள் நசுக்கப்படும் மனிதத் தலைகள்... இங்கே, சட்ட உலகம் இருளில் ஆழ்த்தியத்தைத் தவிர வேறெதுவும் பேசாது இங்கே - யாரும் வரவேற்கப்படுவதில்லை. ஆட்சியாளர்களால் “வீட்டிற்கு செல்” என்ற சொல் தவிர “நீதி” என்ற சொல் உச்சரிக்கப்படுவதில்லை. மரணத்தால் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் குற்றமேதுமின்றிப் பலர் சொர்க்கவாசலை நிறை…
-
- 10 replies
- 2.1k views
-
-
உலகை ஆளும் மன்னன் கோவிட் 19 மர்மக் கொலையாளி கொரோனா மறுபடியும் வருவானாம் ஏதோ சொல்லி வெருட்டுகினம் எங்களுக்கும் பயம் தானே உலகத்தை ஆளும் ஒரே ராஜா 19ம் மன்னன் கோவிட் தான் தானம் தன்னை மடக்கவும் முடியாதாம் மறுபடி வந்து மனிதனை முடிப்பாராம் மனிதனால் மடக்க முடியல்லையே மருந்து இன்னும் கிடைக்கலையே என்ன இவன் இருப்பதே தெரியலையே கண்ணால் கூடக் காணலையே எத்தனையே வைரசு வந்தது எல்லாத்தையும் விரட்டி விட்டோம் கொரோனாவைத் காணலையே கொலைகாரன் இருக்கும் இடம் தெரியலையே இத்தனை காலம் யுத்தம் செய்கிறான் இவனும் அழிவதாய் தெரியவும் இல்லை இரண்டாம் கட்டப் போருக்கு ரெடியாம் இவன் வருவானோ என்று பயமும் வேற இவன் போகாத நாடும் இல்லை ப…
-
- 4 replies
- 1k views
-
-
எச்சரிக்கைக் காட்சிகளால், சிறகுகள் வெட்டப்பட்டு, நசுக்கப்பட்டபோதும், எங்களை அடக்கவென்று, வெறுப்பின் மேலாதிக்க விஷ வன்மங்கள் கொட்டி வரையப்பட்ட, சட்ட மூலங்கள் நிறைவேற்றப்பட்ட போதும், நித மரணத்தால் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய், குற்றமேதுமின்றி இன்றுவரை பலர், சிறைவாயிலை நிறைத்துக்கொண்ட போதும், எங்களுக்கு எதிராக அவர்களின் கதவுகள், இன்னும் மூடப்பட்டே இருக்கின்றன. தொலைந்துபோன தன் பிள்ளையை, கைதுசெய்யப்பட்ட தன் தந்தையை, கையளிக்கப்பட்ட தன் தமையனை, இன்னும் தேடியபடி, நீதிக்காக, அவர்தம் விடுதலை வேண்டி, எத்தனை நாட்கள் தவம் கிடக்கிற…
-
- 6 replies
- 1.1k views
-