கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
தாமரை தாமரைதான் பூக்களிலே பெரியதென்பார்;-தம்பி தாமரைப்பூ ஊர்க்குளங்கள் அழகாய்த் தோன்றும்! "தாமரை'யில் "தா' என்னும் எழுத்தை நீக்கு;-அங்கே "மரை' என்ற மானின் பெயர் துள்ளி ஓடும்! 'மரை'என்ற இரு எழுத்தை மறைத்து விட்டால்? "தா' என்ற ஓரெழுத்துதானே மிஞ்சும் -அது 'கொடு' என்றே உனைப் பார்த்து கொடுக்கச் சொல்லும்! தாமரையில் நடு "ம'வை நீக்கிப் பார்த்தால்-அழுவோர் கண்களிலே கண்ணீர்தான் "தாரை' தரையாக வார்க்கும்! நன்றி பொன்னியின் செல்வன்
-
- 3 replies
- 1.2k views
-
-
அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..! சர்க்கரை வியாதியில்லை சருமத்தில் தொந்தல் இல்லை பக்கத்தில் வாதமில்லை பாழ்பட்ட கொழுப்புமில்லை. கண்கள் விழிக்கூர்மை காதுரெண்டும் பழுதில்லை பற்கள் எல்லாம் பத்திரமாய் பயமற்ற நெஞ்சுரமாய் கைத்தடி இல்லாமல் கால் எழுந்து நடைபயிலும் அப்புவென்று சொன்னால் ஆச்சரியப் படுவீர்கள். கிட்டப் போய் ஒருநாள் கேட்டேன் அவர் வயதை தொண்நூறு தாண்டி தொடப் போறேன் நூறென்றார். அந்தக் காலத்து.. அதிசிறந்த உணவென்றார் வரகரிசி சாமையுடன் வாய்க்கினிய தினைச்சோறு குரக்கன் மா றொட்டி-மீன் கூழ் எங்கள் அமிர்தம் பகல் முழுதும் உடல் உளைப்பு பனாட்டொடியல் பழம்கஞ்சி தூதுவளைச் சம்பல் தும்பங்காய்ப் பிரட்டல் கொவ…
-
- 35 replies
- 4.7k views
-
-
அப்பா..! என்னைப் பார்க்க வரமாட்டீர்களா..? முடியாது மகனே.. ஏன் முடியாது..? வந்தால் கொன்று விடுவார்கள் ஏன் கொன்று விடுவார்கள்...? நான் என் மக்களுக்காகப் பேசினேன் ஏன் மக்களுக்காகப் பேசினீர்கள்..? பறிக்கப்பட்ட அவர்களின் உரிமைகளுக்காக, ஏன் உரிமைகள் பறிக்கப்பட்டன..? சமமாக வாழ நினைத்தபோது ஏன் தான் அப்ப பறிக்க விட்டீர்கள்..? நாங்கள் இல்லை மகனே, எம் முன்னவர்கள் விட்ட பிழை ஏன் அவர்கள் பிழை விட்டார்கள்..? அவர்கள் மட்டும் பிழைப்பதற்காக, அவர்கள் பிழைத்தார்களா..? பெயரளவில் பிணமில்லை என்பதுவாய் பிழைத்தார்கள் என்னவோ பிழைத்தார்கள் தானே..? இதெல்லாம் ஒரு பிழைப்பா மகனே.. சரி, நீங்கள் மட்டுந்தானா கேட்டீர்…
-
- 5 replies
- 1.5k views
-
-
அம்மா..! அம்மாவின் கருவறையில் நாங்கள் தெய்வம். ஆலயத்தின் கருவறையில் அம்மா தெய்வம். உயிரோடு உடல் தந்தாள் உலாவ விட்டாள்-தமிழ் உணர்வோடு உணவு தந்தாள் உயர வைத்தாள். இருள் வந்து சூழும் போது நிலவாய் நின்றாள் எமை வளர்த்து மரமாக்க வேராய்ச் சென்றாள் உறக்கமின்றி எம்மவர்க்கு உயர்வைத் தந்தாள் உழைத்துழைத்து- உலகத்தில் ஓடாய்த் தேய்ந்தாள் தனைமறந்து எமக்காக வாழ்ந்த தாயை-அவள் தந்த உயிர் பிரியுமட்டும் நிறுத்தி வாழ்வோம். அம்மாதான் நேரில் கண்ட அன்புத்தெய்வம் அதைவிடவும் ஆலயங்கள் தேவையுண்டோ..? -பசுவூர்க்கோபி-
-
- 10 replies
- 1.4k views
-
-
யார் இவர்கள் இதுவரை எங்கிருந்தார்கள் இவர்கள் முகம் ஞாபகத்தில் கூட இல்லையே எம் ஒவ்வொரு சறுக்கல்களிலும் கைகொடுத்ததாக நினைவில்லையே ஒருநேர உணவுக்கே நாம் திண்டாடியோது ஓடி வந்து உதவிய முகங்களில் இவர்கள் முகம் இருந்ததில்லையே போகவழி தெரியாமல் பரிதவித்தபோது எம் கைபிடித்து வழிகாட்டிய - அந்த நல்ல மனிதர்களில் இவர்கள் ஒருவரேனும் இல்லையே அடுக்கடுக்காய் வந்த சவால்களை சமாளிக்க நாம் திணறியபோது நம்பிக்கை கொடுத்த நாலுமனிதர்களுள் இவர்கள் நிழல்கூட வந்ததில்லையே இப்போது மட்டும் எப்படி ஓ..! இப்போது புதிதாய் பார்வை பெற்ற முன்னாள் குருடர்களோ இவர்கள் உறவு முறை சொல்கிறார்கள் உறவென்றும் சொல்கிறார்கள் மறுபக்கம் விமர்சனமும் செய்கிறார்கள் அவர்கள் அகராதியில…
-
- 0 replies
- 977 views
-
-
யார் கடவுள்..! *************** நீ இருப்பாயென்று நானும் பிறக்கவில்லை யான் இருப்பேனென்று நீயும் பிறக்கவில்லை தாயிருந்தாள் பலருக்கு அவள் கூட இல்லை சிலருக்கு.. உலகில் பிறக்கும் உயிருக்குள் அவன் ஒழிந்திருப்பான் என்பதே உண்மை. அவன் மதத்துக்குள் அடங்காத மாபெரும் வெளி நீர்,காற்று,தீ,நிலம் ஆகாயம் அனைத்தும் அவன் மூச்சில்தான் ஆடுகிறது அண்டமே அவனெனும் போது முண்டமாய்-நாம் மதச்சண்டையிட்டு மடிகிறோம். நோய் வந்து அழிக்கும்போது அந்த நுன்னுயிரை ... அழிக்க யாரால் முடிகிறது அன்று படித்தது இன்று புதியது எனும…
-
- 13 replies
- 2k views
-
-
ஏன் இந்த வெறுப்பு..! *************** தெளிந்தோடும் நீரோடை கூட கழிவு நீர் சேறாகிப் போச்சு அழகான.. மலர்த் தோட்டம் கூட கருவேலம் முள்ளாகிப் போச்சு மானுட இதயங்கள் கூட மரத்துப் போய் கல்லாகிப் போச்சு இயற்கையின் ரசனைகள் கூட இருள் சூழ்ந்த புகையாகிப் போச்சு இந்த.. வாழ்க்கையை ரசித்து வாழத்தெரியாத போக்கினை எவன் தான் புகுத்தியது. நாக்கினில் நஞ்சையும் பொய்யையும் கலந்து இளையோர் மூளைக்குள் யாரவன் செலுத்தியது. வானிலே பறக்கின்ற மகிழ்ச்சியின் எல்லையை குறோதக் கூட்டினில் எவனோ குறுக்கியது. உலகத்தில் அழி…
-
- 5 replies
- 1.2k views
-
-
எங்கேயோ இருக்கிறீர்கள் எனக்குத்தெரியும் நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள் கடைசியாக நீங்கள் வேலையால் வந்து கழற்றிப்போட்ட ஆடைகள் உங்களில் நான் கிறங்கும் அதே வியர்வை மணத்துடன் கொழுக்கியில் தொங்கிக்கொண்டு இருக்கிறது.. அன்றிரவு அவர்கள் உங்களை அடித்து இழுத்துச்சென்ற போது நான்கதறிய கதறல் இப்போது ஒவ்வொரு வீடாய் கேட்கத்தொடங்கி இருக்கிறது காலையில் எழுந்து அப்பா எங்கே என மகன் கேட்டான் எப்படித்தான் காணாமல் போனமை பற்றி அவனுக்கு நான் விளக்க முடியும்..? வருடங்கள் உருண்டோடி விட்டன காலமும் மனிதர்களும் எதுவுமே நடந்து விடாதது போல் போய்க் கொண்டிருக்கிறார்கள்...! உங்கள் நெஞ்சில் இருந்து துள்ளுவது போலவே நேற்றைக்கு மாலையும் என் மா…
-
- 5 replies
- 940 views
-
-
-
- 3 replies
- 1k views
-
-
ஓட்டுப் போட்ட உரிமையில் கேட்டால் என்ன தப்போ..! (05.08.2020) தேர்தல் திருவிழா முடிந்து தேசம் அமைதியாகிறது உங்கள் கட்சி “தேர்களை” ஊர் ஊராய் கொண்டு சென்று வெண்றும், தோற்றும் விழா முடிவாயிற்று. ஒன்றாக நிற்க்காமைல் ஒவ்வொன்றாய் நின்றாலும் வெண்றவர்கள் நீங்கள் நாங்கள்… வேறு வேறு தமிழர் இல்லை தனிப்பட்ட குரோதங்கள் தலை தூக்கி ஆடாமல்-புல் பனிகாய பகலவனின் கதிர் போலே நீங்கள்-நெல் மணியாக அனைவருக்கும் நிதம் சோறு படைப் பீர். உள்ளக் குமுறலினால் உடைபட்டுப் போனாலும் மக்களை.. அள்ளக் குறையாத அன்போடு பாருங்கள். தெள்ளத் தெளிவாக-எம் …
-
- 14 replies
- 2.5k views
-
-
கோடை (காலம்) இங்கு -------------------- கோடை கால இரவுகள் அழகானவை பகலில் உருகிய வெயிலை இருட்டின் போது கசிய விடுபவை நிலவு எறிக்கும் கோடை இரவொன்றில் சாலை கடக்கும் ஒரு பூனையை போல கவனமாக மழையும் வந்து போகும் மழை வந்த சுவடுகளில் புல்கள் முழைக்கும் புல் வந்த வேர்களை பற்றி மண் புழுக்கள் மேலே வரும் பின் அதை உண்ண மைனாக்கள் அலைந்து திரியும் அதை பிடிக்க வரும் பிறாந்துகளால் வானம் அதிரும் குருவிகள் கூடு கட்டும் குலவும் மழைக் குளிரில் ஒன்றை ஒன்று கூடும் முத்தமிடும் முட்டையிடும் குஞ்சு பொரிக்கும் அவற்றின் கீச்சிடலில் என் காலை உதிக்கும் பின் வளவில் எப்பவோ நட்டு வைத்த …
-
- 14 replies
- 2.2k views
-
-
வெள்ளை வேட்டியோடு கொள்ளைக்காரர்கள் நாட்டை ஆள வருவார் நரிகள் கூட வருவர் ஊருக்காய் உழைத்தவன் படித்தவன் பண்பாளனை பாராளுமன்றம் அனுப்பி வைக்கார் படித்தவன் கூட வரான் போனவர் அனைவரும் பொழுது விடியுமுன்பே மந்திரியாவார்கள் நூறுக்கு மேலே மந்திரிமார் பாதிக்கு மேலே வேலை இல்லை சிங்கப்பூர் போல் சிலோனை மாற்றுவோம் என்று கூடச் சொன்னார் ஸ்ரீ லங்காவின் அரைவாசி இப்போ சீனாவுக்கு சொந்தம் எடுத்த கடன் தலைக்கு மேலே திருப்பி கொடுக்கவில்லை அரை நூற்ராண்டாய் அந்த மலையக மக்கள் படுக்குற துன்பம் அவன் தேனீருக்குள் தெரியுது இவன் இரத்தமும் வியர்வையுமாய் அவனுக்கு அங்கே எதுகும் இல்லை ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுக்காய் …
-
- 9 replies
- 1.6k views
-
-
வலிசுமந்த வரிகளுடன் அம்மாவுக்கு மகள் எழுதும் ஓர் மடல். உங்கள் விமர்சனங்களிற்காக https://youtu.be/MsPzmh_uYog
-
- 11 replies
- 5.8k views
-
-
-
இனி இறைவன் தான் காப்பாத்த வேண்டும் ஈழத்தமிழனை-பா.உதயன் தேர்தல் வருகிறது தினம் ஒரு பொய் சொல்வர் கையில் பூக்களோடு காலையில் புத்தனுக்கு பூசை செய்வர் அறமோ கருணையோ இல்லாத மனிதர்கள் எல்லாம் அந்த புத்தனிடத்திலும் போய் பொய் உரைப்பர் இனவாதம் பேசுவர் இது சிங்கள தேசம் என்பர் தமிழர் அதில் படரும் கொடி என்பர் இனவாதம் என்றொரு பெரும் பூதம் இராணுவத்துணையோடு இலங்கையை ஆள்கிறது எப்பவும் இது சொல்வதே சட்டம் ஐக்கியத்துக்கு குந்தகம் அந்த தமிழரே காரணம் என்று அந்த தமிழரோடு சேர்ந்து ஒப்பந்தம் செய்வோர் ஒருமித்த எம் தேசத்தின் இறைமைக்கு எதிரி என்பர் குடும்ப அரசியல் வாதிகள் பதவிக்கும் பணத்துக்குமாய் பாலு…
-
- 5 replies
- 1.3k views
-
-
உரக்கச் சொல்கிறோம் நாங்கள் அமெரிக்கர்கள்! இரண்டு கொடிய வைரஸ்கள் இப்போது அமெரிக்கர்களைக் கொல்கின்றன. ஒன்று கோவிட் 19, மற்றையது இனவாதம். இங்கே அனைத்துத் துப்பாக்கிகளும் சொர்க்கத்தை நோக்கி மட்டுமே சுடுகின்றன. எச்சரிக்கைக் காட்சிகளால் சிறகுகள் வெட்டப்படும் கறுப்பு பறவைகள் நசுக்கப்படும் மனிதத் தலைகள்... இங்கே, சட்ட உலகம் இருளில் ஆழ்த்தியத்தைத் தவிர வேறெதுவும் பேசாது இங்கே - யாரும் வரவேற்கப்படுவதில்லை. ஆட்சியாளர்களால் “வீட்டிற்கு செல்” என்ற சொல் தவிர “நீதி” என்ற சொல் உச்சரிக்கப்படுவதில்லை. மரணத்தால் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் குற்றமேதுமின்றிப் பலர் சொர்க்கவாசலை நிறை…
-
- 10 replies
- 2.1k views
-
-
மஹாகவி உருத்திரமூர்த்தியின் சாதியம் தொடர்பான கவிதை எனது குரலில் https://youtu.be/no-2WHQ7ti0
-
- 10 replies
- 3k views
-
-
-
இக்கவிதை “நெதர்லாந்து இளமுதிர்சோலை” மண்றத்தின் தைப்பொங்கல் விழாவில் படித்திருந்தேன். என் இனிய யாழ் கள உறவுகளுக்காக.. பகிர்ந்து கொள்வதில் மகிழ்சியடைகின்றேன்.நன்றி இழப்புகள்..! அப்பாவின் அறிவை இழந்தோம் அம்மாவின்அறுசுவை உணவை இழந்தோம் அவர்களுடன் கொஞ்சி குலாவும் அன்பை இழந்தோம்-ஏன் அவர்களை கூடவே இழந்தோம். கோழி கூவலை இழந்தோம். கோவில் மணிச் சத்தம் இழந்தோம். வாய்க்கால் வயல்கள் இழந்தோம். வழமான வாழ்வையே இழந்தோம். காலை விடியலை இழந்தோம், கடல் தொட்டுவரும் தென்றலை இழந்தோம் பட்டியில் நின்ற பசுக்களை இழந்தோம், பங்குனி மாத வெய்யிலை இழந்தோம்-மண் சட்டியில் கு…
-
- 1 reply
- 968 views
-
-
-
உலகை ஆளும் மன்னன் கோவிட் 19 மர்மக் கொலையாளி கொரோனா மறுபடியும் வருவானாம் ஏதோ சொல்லி வெருட்டுகினம் எங்களுக்கும் பயம் தானே உலகத்தை ஆளும் ஒரே ராஜா 19ம் மன்னன் கோவிட் தான் தானம் தன்னை மடக்கவும் முடியாதாம் மறுபடி வந்து மனிதனை முடிப்பாராம் மனிதனால் மடக்க முடியல்லையே மருந்து இன்னும் கிடைக்கலையே என்ன இவன் இருப்பதே தெரியலையே கண்ணால் கூடக் காணலையே எத்தனையே வைரசு வந்தது எல்லாத்தையும் விரட்டி விட்டோம் கொரோனாவைத் காணலையே கொலைகாரன் இருக்கும் இடம் தெரியலையே இத்தனை காலம் யுத்தம் செய்கிறான் இவனும் அழிவதாய் தெரியவும் இல்லை இரண்டாம் கட்டப் போருக்கு ரெடியாம் இவன் வருவானோ என்று பயமும் வேற இவன் போகாத நாடும் இல்லை ப…
-
- 4 replies
- 1k views
-
-
காணாமல் போன உறவுகளும் அது தந்த வலிகளும்
-
- 8 replies
- 1.2k views
-
-
கறுப்பான கல்லில் சாமியை காண வெறுப்பு கறுப்பான தோழனுக்கு - கறுப்புச் சட்டை. கொரோனாவை விடக் கொடுமை இது.
-
- 6 replies
- 1.2k views
-
-
மேலும் தனித்துவமான சிந்தனைகளை அறிந்திட தொடருங்கள் தொடர்பு வேண்டாம் ஈழத்தமிழன் இன்ஸ்டாகிராம் இணைப்பு
-
- 1 reply
- 1k views
-
-
வன்னி மக்களும் முள்ளிவாய்க்காலும் அது தந்த வலிகளும்
-
- 2 replies
- 932 views
-