Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. குட்டிக் கவிதைகள்..! உணவு..! உணவை அறிந்தே உண்ணுவோம் உலகின் உயர்வையே எண்ணுவோம். விவசாயி..! கரையழுது நுரை தள்ளுவது-ஒருபோதும் நடுக் கடலுக்கு தெரிவதில்லை. அன்பு..! அறுக் கமுடியாத இரும்புச் சங்கிலி அறுந்துடைந்தால் ஒட்டமுடியாத கண்ணாடித் துவள்கள். துர்நாற்றம்..! பொறாமைச் செடியில் பூக்கும் இதயம் அன்பை அழிக்கும் மணமே வீசும். அன்புடன் -பசுவூர்க்கோபி-

  2. திடீரென்று ஒரு நாள்மம்மல் பொழுதொன்றில்எல்லைப் பிரதேசத்தில் உள்ளஎன் வீட்டு வேப்ப மரத்தில்பறவை ஒன்று வந்துகுந்தி இருக்கத் தொடங்கியதுஅதன் ஈனஸ்வரமானபசிக்குரலைக் கேட்டுஎன் உணவில் சிறிதளவைஅதற்கு நான் வழங்கியும்இருந்தேன்,மறுநாள் கூடு கட்டவும்குடும்பமாயும் குழுமமாயும்வந்திருக்கவும் தொடங்கியது,என் நாளாந்தச் சமையலுக்காகவைத்திருந்த விறகுகளைகுச்சிகளாய்ப் பிரித்தெடுத்துகூடு கட்டுவதை நான்கவனித்தேன்,சில நாட்களில் முட்டை இட்டுக்குஞ்சும் பொரித்தது,அதன் பின்னர் ஒரு போதும் அதுஉணவு கேட்டுக் கத்தியதில்லைஎனக்குத் தெரியாமலும்தெரியவும் கூடஎன் சமையற் கட்டுக்குள்புகுந்து உணவுகளைஎடுக்கத் தொடங்கியதுஅதில் பலவந்தம் இருந்ததைநான் அவதானித்தேன்சொந்தம் கொண்டாடுவதையும், குஞ்சு பொரித்த காலங்களில்மரத்தின…

  3. எடுக்கவோ.....கோர்க்கவோ. அரவக்கொடியோனின் அரண்மனைதனில் பரவித் தொடுத்த முத்தாடை அணிந்து இரவியின் பெயருடை பானுமதியாள் புரவித் தேருடை மன்னனுடன் கரத்தில் தாயக் கட்டைகளோடு உருட்டி ஆடுகின்றாள் சதுரங்கம். அங்கதேசத்து மன்னனாம் கர்ணன் தங்கக் கவச குண்டலத்துடன் பிறந்தோன் இங்கு மாமன்னன் துரியனைக் காணவந்தவன் தங்கையனைய மங்கை வேண்ட --- சதுர் அங்கம் ஆட மஞ்சத்தில் எழுந்தருளி சிங்கம் போலவும் வீற்றிருந்தனன். ஆட்ட சுவாரசியத்தில் மலர்ந்திருந்தவள் இட்ட இலக்கங்கள் இல்லாமலாகி வாட்டமுடன் கட்டைகளை க…

  4. Started by மௌனராகம்,

    நீ தந்த உணர்வுகளால் நான் என் நிஜம் தொலைத்தேன்.. மனசெல்லாம் ரணமாகி யாருமற்ற தனிமைப் பொழுதுகளில் வாழ்வது உறுதியானது.. நான் கொண்ட மனநிலைப் பிறழ்வுகளால் என்னை வேண்டாமென வெறுத்து பிடிவாதமாய் விலக்கி வைத்திருக்கும் உறவுகளை சந்திக்கும் நிலையில் என் மனநிலை இல்லை.. மன்னிப்பு கேட்கும் முன்பே நிராகரிப்பட்டேன் என் நிஜங்களின் முன்.. நிஜங்கள் இல்லாது வாழ்வென்பது எப்படி? மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று இன்னொரு பிறவியில் தெரிந்து கொள்கிறேன்.. நான் தவறானவன்.. செய்த தவறுகளுக்காக இந்தப் பிறவி வலிகளோடு போகட்டும்.

  5. என் உயிரானவள்..! ************** மின்னல் வந்த திசையைப்பார்த்தேன்-அவள் கண்கள் தெரிந்தது மேக முகில் அழகைப்பார்த்தேன்-அவள் கூந்தல் பறந்தது முல்லைப்பூவின் மலர்வைப்பார்த்தேன்-அவள் பற்கள் ஒளிர்ந்தது முழுமதியின் வரவைப்பார்த்தேன்-அவள் முகமே தெரிந்தது தேன் சொட்டும் பேச்சைக்கேட்டேன்-தமிழாய் பொழிந்தது தேசத்தின் முதல் பெண் இவழே.. என்னுயிரும் கலந்தது. அவள் வந்தபின்னாலே தமிழனானேன்-எனி ஆகுதியில் எரிந்தாலும் அழிவே இல்லை. -பசுவூர்க்கோபி-

  6. நீங்கள் கெட்டவரா?நல்லவரா? ************************ அடுத்தவன் வாழ்வைக் கெடுத்தவன் அவனியில் அவனோ பெரியவன் எடுத்தவன் கொள்ளையடித்தவன் உலகினில் அவனோ உயர்ந்தவன். உழுதவன் உணவு படைத்தவன் ஊர்களில் உயிரே அற்றவன் உழைத்தவன் உணவு கொடுத்தவன் உறவுகளால் கால் மிதிபட்டவன். படித்தவன் பட்டங்கள் பெற்றவன் பட்டணியோடு வேலைக்கலைபவன் கால் பிடித்தவன் அரச வால் பிடித்தவன் கஸ்ரமில்லாமலே காசில் மிதப்பவன். கஞ்சா குவித்தவன் கற்பைக் கெடுத்தவன் மந்திரியோடவன் மதுக்கடைப் பெரியவன் லஞ்சம் பெற்றவன் ஊளல் புரிந்தவன் வஞ்சனைக் காரனே வாழ்வில் உயர்ந்தவன் நல்லவன் வாழ்வதேயில்லை-எனினும் நானிலம் போற்…

  7. கடவுள் ஒரு கைப்பிள்ள! முன்பொரு நாளில்... கடவுளை மனிதன் படைத்தான்... அன்றிலிருந்து கடவுள் மனிதனைப் படைக்கத் தொடங்கினார்... தாயுமானார், தந்தையுமானார்... பின்னொரு நாளில்... "மகனே நந்தனா, உள்ளே வா" சொல்லத் தயங்கினார்... பதிலுக்கு "சற்றே தள்ளி இரும் பிள்ளாய்" திருவாய் மலர்ந்தார்... நிற்க... "எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்" "பஞ்ச்" அடிப்பதில் வல்லவர்... தன் பெயராலே ஓர் அதர்மம் தடுப்பதற்கோ அஞ்சினார்... இன்றொரு நாளில்... கடவுளுக்கு மனிதன் தேவையோ இல்லையோ தப்ப முடியாது... மனிதனுக்கு "கடவுள்த்தேவை" மிக அதிகம்... ஏனென்றால் கடவுள் ஒரு கைப்பிள்ள... - பராபரன்

  8. **************************************** அன்பு கொண்டேன் ஆப்பு வைத்தாள்..! ************************** வெள்ளை நிறத்தவள் விரும்பினேன் அவளுடலை மெல்லிடை தனைப் பிடித்து மேனியில் தீயையேற்றி சொண்டிதழ் தன்னுள் வைத்து சுகம் கண்டேன் இழுத்திழுத்து என்.. வெந்தணல் நூந்தபின்பு வீசினேன் வீதிதன்னுள் அழிந்தவள் அவளினாவி ஆளுக்குள் உட்புகுந்து உறுப்புகள் கெட்டு நொந்து உயிருக்கே கொள்ளிவைத்தாள். பசுவூர்க்கோபி-

  9. Started by நிலாமதி,

    "கவிதை' என்றால் என்ன ? பாட்டென்பார்! செய்யுளென்பார்! "கவி'யாலே ஆனதுதான் தமிழ்மொழி என்பார்! "கவிதை' என்னும் சொல்லை எடு; "தை'யை ஓரமாய் நீக்கி வை "கவி' மழையில் நீ நனைவாய்; கவிஞன் ஆவாய்! முதல் எழுத்து "க'வை நீக்கிப் பார்த்தால் முளை விட்டுத் துளிர்க்கின்ற "விதை' கிடைக்கும்,அங்கே விதவிதமாய் சொல் விதைகள் குவியல் ஆகும்! "கவி' என்னும் எழுத்திரண்டை நீக்கிப் பார்த்தால் ஓரெழுத்தில் "தை' மாதம் பிறப்பெடுக்கும்! அந்தத் தை பிறந்தால் அனைவருக்கும் புது வழி ஒன்று பிறந்திருக்கும் "வி' என்னும் எழுத்ததனை விரட்டி விட்டால்-நீ விரும்புகின்ற "கதை' ஒன்று விரிந்தெழும்பும்! விரிந்தெழுந்த "கதை'தனைக் கேட்டுக் கொண்டே விரித்…

  10. ஒரு செய்தியைக் கூட விட்டுச் செல்லாமலும்ஓர் வார்த்தையைக் கூடச் சொல்லாமலும்அன்று நீ காணாமற் போனாய்..சித்தம் கலங்கிப்போய் உன் தந்தையும்சாவீடு போல உன் வீடும் சிதறிப்போய்க் கிடந்ததுநீ இறந்திருக்கலாமெனபலர் தமக்குள் பேசிக்கொண்டார்கள்காலமும் ஓடிப்போயிற்றுவழமை போலவே தியாகங்களும்நினைவுகளும் எமக்குள்மங்கிப்போயின..சுரணை அற்ற வாழ்வுக்காகதொலை தேசத்திற்கு நான்வந்திருந்தபோதுபனிப் பொழிவினிடையேஉன்னைப் போலவே ஒருவனைப் பார்த்தேன்..!அது நிச்சயமாக நீதான்அதே கூர் மூக்கு,தெத்திப்பல்ஆயின்..நீ இறக்கவில்லை..!ஆனால் இறந்திருந்தாய்நிற்க முடியாமலும் இருக்க முடியாமலும்காலைச் சவட்டியபடி,கல்லூரிக் காலங்களில்எப்படி எல்லாம் கலகலப்பாய்இருந்தாய்..! இப்போதோபேச்சுக் கொடுத்தாலும்பெரும் மெளனம் காக்கின்றாய்..முட்கம…

  11. Started by நிலாமதி,

    தாமரை தாமரைதான் பூக்களிலே பெரியதென்பார்;-தம்பி தாமரைப்பூ ஊர்க்குளங்கள் அழகாய்த் தோன்றும்! "தாமரை'யில் "தா' என்னும் எழுத்தை நீக்கு;-அங்கே "மரை' என்ற மானின் பெயர் துள்ளி ஓடும்! 'மரை'என்ற இரு எழுத்தை மறைத்து விட்டால்? "தா' என்ற ஓரெழுத்துதானே மிஞ்சும் -அது 'கொடு' என்றே உனைப் பார்த்து கொடுக்கச் சொல்லும்! தாமரையில் நடு "ம'வை நீக்கிப் பார்த்தால்-அழுவோர் கண்களிலே கண்ணீர்தான் "தாரை' தரையாக வார்க்கும்! நன்றி பொன்னியின் செல்வன்

  12. அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..! சர்க்கரை வியாதியில்லை சருமத்தில் தொந்தல் இல்லை பக்கத்தில் வாதமில்லை பாழ்பட்ட கொழுப்புமில்லை. கண்கள் விழிக்கூர்மை காதுரெண்டும் பழுதில்லை பற்கள் எல்லாம் பத்திரமாய் பயமற்ற நெஞ்சுரமாய் கைத்தடி இல்லாமல் கால் எழுந்து நடைபயிலும் அப்புவென்று சொன்னால் ஆச்சரியப் படுவீர்கள். கிட்டப் போய் ஒருநாள் கேட்டேன் அவர் வயதை தொண்நூறு தாண்டி தொடப் போறேன் நூறென்றார். அந்தக் காலத்து.. அதிசிறந்த உணவென்றார் வரகரிசி சாமையுடன் வாய்க்கினிய தினைச்சோறு குரக்கன் மா றொட்டி-மீன் கூழ் எங்கள் அமிர்தம் பகல் முழுதும் உடல் உளைப்பு பனாட்டொடியல் பழம்கஞ்சி தூதுவளைச் சம்பல் தும்பங்காய்ப் பிரட்டல் கொவ…

  13. அப்பா..! என்னைப் பார்க்க வரமாட்டீர்களா..? முடியாது மகனே.. ஏன் முடியாது..? வந்தால் கொன்று விடுவார்கள் ஏன் கொன்று விடுவார்கள்...? நான் என் மக்களுக்காகப் பேசினேன் ஏன் மக்களுக்காகப் பேசினீர்கள்..? பறிக்கப்பட்ட அவர்களின் உரிமைகளுக்காக, ஏன் உரிமைகள் பறிக்கப்பட்டன..? சமமாக வாழ நினைத்தபோது ஏன் தான் அப்ப பறிக்க விட்டீர்கள்..? நாங்கள் இல்லை மகனே, எம் முன்னவர்கள் விட்ட பிழை ஏன் அவர்கள் பிழை விட்டார்கள்..? அவர்கள் மட்டும் பிழைப்பதற்காக, அவர்கள் பிழைத்தார்களா..? பெயரளவில் பிணமில்லை என்பதுவாய் பிழைத்தார்கள் என்னவோ பிழைத்தார்கள் தானே..? இதெல்லாம் ஒரு பிழைப்பா மகனே.. சரி, நீங்கள் மட்டுந்தானா கேட்டீர்…

  14. அம்மா..! அம்மாவின் கருவறையில் நாங்கள் தெய்வம். ஆலயத்தின் கருவறையில் அம்மா தெய்வம். உயிரோடு உடல் தந்தாள் உலாவ விட்டாள்-தமிழ் உணர்வோடு உணவு தந்தாள் உயர வைத்தாள். இருள் வந்து சூழும் போது நிலவாய் நின்றாள் எமை வளர்த்து மரமாக்க வேராய்ச் சென்றாள் உறக்கமின்றி எம்மவர்க்கு உயர்வைத் தந்தாள் உழைத்துழைத்து- உலகத்தில் ஓடாய்த் தேய்ந்தாள் தனைமறந்து எமக்காக வாழ்ந்த தாயை-அவள் தந்த உயிர் பிரியுமட்டும் நிறுத்தி வாழ்வோம். அம்மாதான் நேரில் கண்ட அன்புத்தெய்வம் அதைவிடவும் ஆலயங்கள் தேவையுண்டோ..? -பசுவூர்க்கோபி-

  15. Started by nige,

    யார் இவர்கள் இதுவரை எங்கிருந்தார்கள் இவர்கள் முகம் ஞாபகத்தில் கூட இல்லையே எம் ஒவ்வொரு சறுக்கல்களிலும் கைகொடுத்ததாக நினைவில்லையே ஒருநேர உணவுக்கே நாம் திண்டாடியோது ஓடி வந்து உதவிய முகங்களில் இவர்கள் முகம் இருந்ததில்லையே போகவழி தெரியாமல் பரிதவித்தபோது எம் கைபிடித்து வழிகாட்டிய - அந்த நல்ல மனிதர்களில் இவர்கள் ஒருவரேனும் இல்லையே அடுக்கடுக்காய் வந்த சவால்களை சமாளிக்க நாம் திணறியபோது நம்பிக்கை கொடுத்த நாலுமனிதர்களுள் இவர்கள் நிழல்கூட வந்ததில்லையே இப்போது மட்டும் எப்படி ஓ..! இப்போது புதிதாய் பார்வை பெற்ற முன்னாள் குருடர்களோ இவர்கள் உறவு முறை சொல்கிறார்கள் உறவென்றும் சொல்கிறார்கள் மறுபக்கம் விமர்சனமும் செய்கிறார்கள் அவர்கள் அகராதியில…

    • 0 replies
    • 991 views
  16. யார் கடவுள்..! *************** நீ இருப்பாயென்று நானும் பிறக்கவில்லை யான் இருப்பேனென்று நீயும் பிறக்கவில்லை தாயிருந்தாள் பலருக்கு அவள் கூட இல்லை சிலருக்கு.. உலகில் பிறக்கும் உயிருக்குள் அவன் ஒழிந்திருப்பான் என்பதே உண்மை. அவன் மதத்துக்குள் அடங்காத மாபெரும் வெளி நீர்,காற்று,தீ,நிலம் ஆகாயம் அனைத்தும் அவன் மூச்சில்தான் ஆடுகிறது அண்டமே அவனெனும் போது முண்டமாய்-நாம் மதச்சண்டையிட்டு மடிகிறோம். நோய் வந்து அழிக்கும்போது அந்த நுன்னுயிரை ... அழிக்க யாரால் முடிகிறது அன்று படித்தது இன்று புதியது எனும…

  17. ஏன் இந்த வெறுப்பு..! *************** தெளிந்தோடும் நீரோடை கூட கழிவு நீர் சேறாகிப் போச்சு அழகான.. மலர்த் தோட்டம் கூட கருவேலம் முள்ளாகிப் போச்சு மானுட இதயங்கள் கூட மரத்துப் போய் கல்லாகிப் போச்சு இயற்கையின் ரசனைகள் கூட இருள் சூழ்ந்த புகையாகிப் போச்சு இந்த.. வாழ்க்கையை ரசித்து வாழத்தெரியாத போக்கினை எவன் தான் புகுத்தியது. நாக்கினில் நஞ்சையும் பொய்யையும் கலந்து இளையோர் மூளைக்குள் யாரவன் செலுத்தியது. வானிலே பறக்கின்ற மகிழ்ச்சியின் எல்லையை குறோதக் கூட்டினில் எவனோ குறுக்கியது. உலகத்தில் அழி…

  18. எங்கேயோ இருக்கிறீர்கள் எனக்குத்தெரியும் நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள் கடைசியாக நீங்கள் வேலையால் வந்து கழற்றிப்போட்ட ஆடைகள் உங்களில் நான் கிறங்கும் அதே வியர்வை மணத்துடன் கொழுக்கியில் தொங்கிக்கொண்டு இருக்கிறது.. அன்றிரவு அவர்கள் உங்களை அடித்து இழுத்துச்சென்ற போது நான்கதறிய கதறல் இப்போது ஒவ்வொரு வீடாய் கேட்கத்தொடங்கி இருக்கிறது காலையில் எழுந்து அப்பா எங்கே என மகன் கேட்டான் எப்படித்தான் காணாமல் போனமை பற்றி அவனுக்கு நான் விளக்க முடியும்..? வருடங்கள் உருண்டோடி விட்டன காலமும் மனிதர்களும் எதுவுமே நடந்து விடாதது போல் போய்க் கொண்டிருக்கிறார்கள்...! உங்கள் நெஞ்சில் இருந்து துள்ளுவது போலவே நேற்றைக்கு மாலையும் என் மா…

  19. ஓட்டுப் போட்ட உரிமையில் கேட்டால் என்ன தப்போ..! (05.08.2020) தேர்தல் திருவிழா முடிந்து தேசம் அமைதியாகிறது உங்கள் கட்சி “தேர்களை” ஊர் ஊராய் கொண்டு சென்று வெண்றும், தோற்றும் விழா முடிவாயிற்று. ஒன்றாக நிற்க்காமைல் ஒவ்வொன்றாய் நின்றாலும் வெண்றவர்கள் நீங்கள் நாங்கள்… வேறு வேறு தமிழர் இல்லை தனிப்பட்ட குரோதங்கள் தலை தூக்கி ஆடாமல்-புல் பனிகாய பகலவனின் கதிர் போலே நீங்கள்-நெல் மணியாக அனைவருக்கும் நிதம் சோறு படைப் பீர். உள்ளக் குமுறலினால் உடைபட்டுப் போனாலும் மக்களை.. அள்ளக் குறையாத அன்போடு பாருங்கள். தெள்ளத் தெளிவாக-எம் …

  20. கோடை (காலம்) இங்கு -------------------- கோடை கால இரவுகள் அழகானவை பகலில் உருகிய வெயிலை இருட்டின் போது கசிய விடுபவை நிலவு எறிக்கும் கோடை இரவொன்றில் சாலை கடக்கும் ஒரு பூனையை போல கவனமாக மழையும் வந்து போகும் மழை வந்த சுவடுகளில் புல்கள் முழைக்கும் புல் வந்த வேர்களை பற்றி மண் புழுக்கள் மேலே வரும் பின் அதை உண்ண மைனாக்கள் அலைந்து திரியும் அதை பிடிக்க வரும் பிறாந்துகளால் வானம் அதிரும் குருவிகள் கூடு கட்டும் குலவும் மழைக் குளிரில் ஒன்றை ஒன்று கூடும் முத்தமிடும் முட்டையிடும் குஞ்சு பொரிக்கும் அவற்றின் கீச்சிடலில் என் காலை உதிக்கும் பின் வளவில் எப்பவோ நட்டு வைத்த …

    • 14 replies
    • 2.2k views
  21. வெள்ளை வேட்டியோடு கொள்ளைக்காரர்கள் நாட்டை ஆள வருவார் நரிகள் கூட வருவர் ஊருக்காய் உழைத்தவன் படித்தவன் பண்பாளனை பாராளுமன்றம் அனுப்பி வைக்கார் படித்தவன் கூட வரான் போனவர் அனைவரும் பொழுது விடியுமுன்பே மந்திரியாவார்கள் நூறுக்கு மேலே மந்திரிமார் பாதிக்கு மேலே வேலை இல்லை சிங்கப்பூர் போல் சிலோனை மாற்றுவோம் என்று கூடச் சொன்னார் ஸ்ரீ லங்காவின் அரைவாசி இப்போ சீனாவுக்கு சொந்தம் எடுத்த கடன் தலைக்கு மேலே திருப்பி கொடுக்கவில்லை அரை நூற்ராண்டாய் அந்த மலையக மக்கள் படுக்குற துன்பம் அவன் தேனீருக்குள் தெரியுது இவன் இரத்தமும் வியர்வையுமாய் அவனுக்கு அங்கே எதுகும் இல்லை ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுக்காய் …

    • 9 replies
    • 1.6k views
  22. வலிசுமந்த வரிகளுடன் அம்மாவுக்கு மகள் எழுதும் ஓர் மடல். உங்கள் விமர்சனங்களிற்காக https://youtu.be/MsPzmh_uYog

    • 11 replies
    • 6.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.