Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. அப்பு என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்..! சர்க்கரை வியாதியில்லை சருமத்தில் தொந்தல் இல்லை பக்கத்தில் வாதமில்லை பாழ்பட்ட கொழுப்புமில்லை. கண்கள் விழிக்கூர்மை காதுரெண்டும் பழுதில்லை பற்கள் எல்லாம் பத்திரமாய் பயமற்ற நெஞ்சுரமாய் கைத்தடி இல்லாமல் கால் எழுந்து நடைபயிலும் அப்புவென்று சொன்னால் ஆச்சரியப் படுவீர்கள். கிட்டப் போய் ஒருநாள் கேட்டேன் அவர் வயதை தொண்நூறு தாண்டி தொடப் போறேன் நூறென்றார். அந்தக் காலத்து.. அதிசிறந்த உணவென்றார் வரகரிசி சாமையுடன் வாய்க்கினிய தினைச்சோறு குரக்கன் மா றொட்டி-மீன் கூழ் எங்கள் அமிர்தம் பகல் முழுதும் உடல் உளைப்பு பனாட்டொடியல் பழம்கஞ்சி தூதுவளைச் சம்பல் தும்பங்காய்ப் பிரட்டல் கொவ…

  2. கடைசி ஆயுதத்தையும் ஐயா கையில எடுத்துப் பார்த்தார் சமரச அரசியலோடு சமாதானம் வரும் என்று சிங்கக் கோ(கொ)டியை உயர்த்திப் பிடித்தார் ஐயா பாவம் இப்போ வெறும் கையோடு நிற்கிறார் அடுத்த தேர்தலைப் பார்த்தபடி அது சரி அவன் கொடுத்தா தானே ஐயாவும் வேண்டித் தருவார் சும்மா சொல்லுங்கோ ஐயா தீபாவழிக்குள் தீர்வு கிடைக்கும் என்று பாவம் சனம் நம்பி வந்து வாக்குப் போடும் ஏமாந்தே பழகப்பட்ட சனம் நாங்க ஐயா இந்தியா வரும் என்றே இருந்த சனங்க நாங்க ஐயா ஆன அவனும் இவனும் முழுசா தின்று முடிச்சான் முள்ளிவாய்க்காலை ஐயா இன்னும் ஒரு முறை ஏமாறுவதில் என்ன குறை ஐயா புலிகள் போனால் சமாதானம் வரும் என்ற சனத்தையும் சந்திச்சுப் ப…

    • 2 replies
    • 891 views
  3. நேற்று(25.06.20) எங்கள் வீட்டில் இருந்து (நெதர்லாந்து) 20 கிலோமீற்றர் தூரத்தில்அமைந்துள்ள கெர்சன்பழமரத்தோட்டம் (நெதர்லாந்து மொழியில் Kers ஆங்கிலத்தில்Cherry) போய் நாங்களே புடுங்கி பழத்துக்கான பணம் கொடுத்து வந்தோம். வரும்போது ஊரின் பழய நினைவுகள் வந்து என்னை வாட்டியது… கெர்சன்பழமே?எனிக்கிடைக்குமா எங்கள் பழம்..! கைப்பான வேம்பதிலும் கனி மஞ்சல் பழம் இனிக்கும் வெய்யில் எரிகையிலும் வேம்பேறிப் பழம் தின்ற.. அக்கால நினைவு வந்து அழுகிறேன் இவ்வேளை. கரும்பனையின் பனம் பழத்தை “காடி”யினில் குளைத் தெடுத்து விரல் இடுக்கில் தேன் வடிய விரும்பி உண்ட.. அக்கால நினைவு வந்து …

  4. தனிமை கூட இனிமையே… உன்னையே நினைத்துக் கொண்டிருப்பதால் என் தனிமை கூட இனிமையே நான் தனிமையாய் இருப்பதாய் பிறர் நினைக்கலாம் என் இல்லம் முழுவதும் நீ நிறைந்திருக்க என் உள்ளம் முழுவதும் நீ குடியிருக்க என் நிழலாக நீயும் உன் நினைவாக நானும் வாழும் இவ் வாழ்வில் என் தனிமைக்கேது கொடுமை உன் நினைவு மட்டுமே இனிமை. நூன் அழகாக உடுத்துகையில் நீ அருகிருந்து ரசிப்பதாய் நான் மகிழ்வாகச் சிரிக்கையில் நீ மன நிறைவாய்ப் பார்ப்பதாய் நான் தனிமையில் இருக்கையில் என் தலை வருடி நெகிழ்வதாய் நான் மனம் சோரும் வேளையில் நீ கனிவாக அணைப்பதாய் என் அழுகையில் என் சிரிப்பில் என் உணர்வினில் என் உயிரில் அத்தனையிலும் நீ துணையிருக்க என் தனிமைக்கேது கொடுமை உன் ந…

    • 4 replies
    • 888 views
  5. மீண்டெழுதல்-resilience-பா.உதயன் மனிதன் உலகத்தை தேடுகிறான் உலகம் மனிதனைத் தேடுகிறது தடைகளை உதைத்தபடி நம்பிக்கை இழக்காமலே மீண்டும் மீண்டெழ உலகமும் மனிதனும் காத்திருக்கிறது. பா.உதயன்

    • 3 replies
    • 1.2k views
  6. புலம் பெயர் தேசங்களில் வாழும் பெற்றோர்களே…ஆங்கிலம்,பிரான்ஞ்,டொச்,டச்,டெனிஸ்,என பலமொழிகளில் கல்விகற்றுக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு கட்டாயம் தமிழ் மொழியின் அவசியம் பற்றி நெதர்லாந்து மேடையொன்றில் படித்த சிறு கவிதை இது. தமிழே பொது மொழி அதுவே உயிர் மொழி..! சின்னம் சிறார்கட்கு சிறந்த நம் தமிழ் மொழியை சிந்திக்க வைக்க-பெற்றோரே சிந்தியுங்கள் சிறப்பாகும். பிற மொழிகள் படிப்பித்து பெரியோர்களாகினாலும்-எம் பிறப்பு மொழியில்லை என்றால் பெற்றோர்களும் இல்லை பேரனுடன்,பேத்தியுடன் பேசவேண்டும் என்றெண்ணி பாசமுடன் பெற்றோர்கள் பல மைல்கள் அங்கிருந்து நேசமுடன் தொடர்பெடுத்தால் ஓப்பா,ஓமா என ஒரு கு…

  7. எடுக்கவோ.....கோர்க்கவோ. அரவக்கொடியோனின் அரண்மனைதனில் பரவித் தொடுத்த முத்தாடை அணிந்து இரவியின் பெயருடை பானுமதியாள் புரவித் தேருடை மன்னனுடன் கரத்தில் தாயக் கட்டைகளோடு உருட்டி ஆடுகின்றாள் சதுரங்கம். அங்கதேசத்து மன்னனாம் கர்ணன் தங்கக் கவச குண்டலத்துடன் பிறந்தோன் இங்கு மாமன்னன் துரியனைக் காணவந்தவன் தங்கையனைய மங்கை வேண்ட --- சதுர் அங்கம் ஆட மஞ்சத்தில் எழுந்தருளி சிங்கம் போலவும் வீற்றிருந்தனன். ஆட்ட சுவாரசியத்தில் மலர்ந்திருந்தவள் இட்ட இலக்கங்கள் இல்லாமலாகி வாட்டமுடன் கட்டைகளை க…

  8. Started by theeya,

    We say aloud, “we are Americans” Two deadly viruses Killing Americans now! One is COVID 19, the other is RACISM. All the guns are here, only to shot towards heaven. Wings cut off the blackbirds Crushing the human heads... Here, in the legal world! There is nothing to speak in the depths of darkness Here - no one says "welcome" They only say "Go home" Never pronounced the word "justice" …

    • 1 reply
    • 890 views
  9. உரக்கச் சொல்கிறோம் நாங்கள் அமெரிக்கர்கள்! இரண்டு கொடிய வைரஸ்கள் இப்போது அமெரிக்கர்களைக் கொல்கின்றன. ஒன்று கோவிட் 19, மற்றையது இனவாதம். இங்கே அனைத்துத் துப்பாக்கிகளும் சொர்க்கத்தை நோக்கி மட்டுமே சுடுகின்றன. எச்சரிக்கைக் காட்சிகளால் சிறகுகள் வெட்டப்படும் கறுப்பு பறவைகள் நசுக்கப்படும் மனிதத் தலைகள்... இங்கே, சட்ட உலகம் இருளில் ஆழ்த்தியத்தைத் தவிர வேறெதுவும் பேசாது இங்கே - யாரும் வரவேற்கப்படுவதில்லை. ஆட்சியாளர்களால் “வீட்டிற்கு செல்” என்ற சொல் தவிர “நீதி” என்ற சொல் உச்சரிக்கப்படுவதில்லை. மரணத்தால் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் குற்றமேதுமின்றிப் பலர் சொர்க்கவாசலை நிறை…

    • 10 replies
    • 2.1k views
  10. இன்றைய நாள்(31.05.2020) 39 ஆண்டுகளுக்கு முன் கல்வி ஒளி தந்த யாழ் நூலகத்தின் கடசிநாள். எரியூட்டி எரித்த எதிரிகளும் வெட்கப்படும் நாள். உயிரோடு எரிந்த யாழ் நூலகம்..! 1959இல் ஆலமரமாய் யாழ்நகர் நடுவில் ஆயிரக்கணக்கில் ஓலைச்சுவடிகள் கோப்புக்களோடு.. தொண்நூற்றி ஏழாயிரம். தமிழ்,ஆங்கில.. தொன்மைநிறைந்த புத்தகக் குவியல்கள் எங்களின்.. கல்விக்கண்ணை திறந்த கோயிலாய் காலம் முழுதும்-அந்த ஒளியில் வாழ்ந்தோம். ஏசியாவின் முதல்தரப் படிப்பகம் என்ற பெருமையும் எமக்குக் கிடைத்தது. தமிழனின் உயிரோ கல்விதான் என்று கண்டான் அன்றைய ஆட்சியின் கொடிய…

  11. நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி ஓடுகிறது காலம் கொடிய கொரோனா எனும் உயிர் பறிக்கும் அவலத்தால் முன்னேற் பாடாய் பரவாது , தனித்திருக்க வைக்க படட மனிதரை ஏக்கம் வாட்டுகிறது துள்ளித்திட்ட திரிந்த பள்ளிப்பிள்ளை அடக்கி வைக்க படுகிறது சற்று விளையாட விடடால் கணினியும் கை பேசியுமாய் அலைகின்றனர் தூக்க நேரம் குழம்புகிறது சோம்பலும் சோர்வும் கூடவே கொறிக்கும் தீனிகளும் உடலைக் கெடுக்கிறது கண்டதையும் வாயில் போட்டு மெல்ல வைக்கிறது அம்மாவுக்கு வீட்டிலிருந்து வேலை, அப்பாவுக்கு குழந்தையை பராமரிக்கும் வேலை பொறுமையீனம் எட்டிப் பார்க்க எப்போதடா வெளியில்போவோம் என மனம் ஏங்குகிறது கொண்டாட்டங்களி…

    • 3 replies
    • 1.4k views
  12. தாய்மடி நோக்கி..! கிராமத்தில் வாழ்ந்தேன் நகரம் பிடித்தது நகரத்தில் வந்தபின் நரகமாய் ஆனது. கட்டிடக் காடும் இயந்திரக் கடலும் நெத்திரை குன்றிய நேரத்தின் வேகமும். புல் தரை பொசுக்கும் சூரிய எரிச்சலும் புளுங்கிக் குளிக்கும் வாகன நெருச்சலும். வந்த எனக்கு வாட்டுது நகரம்-இங்கு நெருப்புக்கும் காசு நீருக்கும் காசு அனைத்துப் பொருளோடு அன்புக்கும் காசு மூச்சுக்காற்றும் காசுக்கு வருமுன்.. முடிவாய் இருக்கிறேன்-என் கிராமத்தை நோக்கியே.. -பசுவூர்க்கோபி-

    • 2 replies
    • 646 views
  13. என்னால் சுவாசிக்க முடியவில்ல-பா.உதயன் உலகுக்கு ஜனநாயகம் கற்பிக்கும் உலகப் போலீஸ்காரனின் உண்மை முகத்தை உலகம் கண்டுகொண்டது காறி துப்புகிறது மனிதம் இவன் முகத்தில் இனி யாருக்கு தேவை உன் உபதேசம் என்றே இனவாதம் மீண்டும் வெள்ளைத் திமிரோடு தான் இன்னும் இருக்கிறது நான் வேறு நீ வேறு என்று கழுத்தை நெரிக்கிறது கறுப்புச் சிறுவனும் வெள்ளைச் சிறுமியும் கை கோர்த்துப் போகும் கனவுகள் எல்லாம் இறந்து கிடக்கிறது மார்ட்டின் லூதரின் இறுதி மூச்சோடு. பா.உதயன் ✍️ one day right there in Alabama little black boys and black girls will be able to join hands with little white boys and white girls as sisters and brothers. I …

    • 2 replies
    • 795 views
  14. அரசியல் ஆட்சி பிழைத்திடும்வேளையில் அறம் கூற்றாகும் என்றார் ---ஆன்றோர் அறம் கூற்றாகும் என்றார். கூற்றனும் வரவில்லை, கொள்தலும் நிகழலை,அரசியல் பிழைக்கலியோ ? இல்லை, அறனும் கொலையானானோ ? பள்ளிக்குச் செல்லும்பாலகர்,முதியவர் பால் குடி மழலை எல்லாம்,அன்று பால்குடி மழலை எல்லாம் முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைத்தழித்தானே முழுப்பெரும் சேனையுடன்,பாவி முழுப்பெரும் சேனையுடன். அண்ணனும் தம்பியும் ஆனஅவர் சேனையும் ஆட்சியில் கோலோச்சிறார் இன்றும் ஆட்சியில் கோலோச்சிறார் அனைத்தையும் இழந்திட்ட அப்பாவி மனிதர்கள்அழுதுதான்வடிக்கின்றாரே உறவை நினைத்திங்கு மாய்கின்றாரே அநீதிக்கு ஆட்சியும் நீதிக்குப் பாடையும் ஆண்டவா நீதி எங்கே உந்தன் அருள் ஆட்சி செத்ததிங்கே …

    • 2 replies
    • 1.1k views
  15. அணையா நெருப்பாய் ஆண்டுகள் முப்பத்தாறு உரிமைக்காய் சுழன்றடித்த ஊழித்தீ தன் உயிர் நெய்யூற்றி தான் வாழவன்றி செந்தமிழ் வாழ சொந்தங்கள் செழிக்க செருக்காய் ஒரு தேசம் அமைக்க சோர்வின்றி எரிந்தது.! தேசங்கள் பல பொறாமை கொள்ள முள்முடி தரித்து முள்ளிவாய்க்காலில் ஊதியணைக்கப்பட்டது அந்த உரிமைத் தீ. காலக் கடிகாரத்தின் கரம் ஒன்று ஒடிந்து தசாப்தம் ஒன்று ஆனது தமிழுக்கு. கரிகாலன் படையது கரிந்தே போனது பொஸ்பரஸோடு மல்ரிபரல்கள் தூவிய கந்தகப் புயலுக்குள். கருவிற் சுமந்த சிசுக்களாய் புலிகள் சுமந்த - மக்கள் சிதைந்தே போயினர் சிங்களத்தான் …

    • 7 replies
    • 1.4k views
  16. 35வருடங்கள் சென்றாலும் மறக்கமுடியாத இந்தநாள்.. 15.05.1985 அன்று நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான்நோக்கி வந்த குமுதினிப் படகின் அன்றைய அரசின் கோரத்தாண்டவத்தினால் நீரினிலே நினைவிழந்த 36 உடன் பிறப்புகளுக்காக நினைவு சுமந்த எனது குரல் வடிவக் கவிதை தந்துள்ளேன். இந்தக்கவிதையை கேட்க click here <--

    • 4 replies
    • 1.3k views
  17. “கடிதங்களின்” கவலை..! எங்களை இப்போது எவருக்கும் தெரிவதில்லை தொழில் நுட்பமென்னும் தூரதேசம் பேச, எழுத.. பல நுட்பம் வந்ததனால் எங்களை இப்போது எவருக்கும் தெரிவதில்லை. அந்தக்காலத்தின்-நாம் அன்பின் பாலங்கள்.. பிரிந்து வாழ்ந்தாலும் பிரியமுடன் வாழ்ந்தாலும் எங்களைத்தான் எதிர் பார்த்தே ஏக்கமுடன் இருப்பார்கள். ஊர் விட்டுத் தள்ளிப்போன உறவுகளின் உணர்வுகளை வேர் இருக்குமிடம்பார்த்து விருப்போடு நாம் வருவோம். அந்தகிராமத்தின் அதிகாரிகளை தெரியாது ஆனால்.. குஞ்சு குருமான்கள்,இளம் குடலை, பெரியோர்கள் எல்லோர்க்கும் தெரிந்த முகம் எமை காவும் தபால் காரர் …

  18. நீயும் நானும் சமத்துவமாய் வாழும் காலம் பிறக்கலையே நீதி இல்லா பூமியிலே நின்மதியை காணலையே இரவும் பகலும் இயந்திரமாய் இன்னும் துயர் முடியலையே அடிமை வாழ்வு தொலையலையே எங்கள் பசி தீரலையே பா.உதயன்

    • 0 replies
    • 466 views
  19. அடுத்த வீட்டு அம்பிகா மாமி ஆருக்கும் ஒன்றும் குடா கசவார மாமி இவோ கையை விட்டு காசை எடா வட்டி போட்ட குட்டிகளை பாங்கில போட்டு பிட்டு கடைசி மட்டும் கடைக்கு போக காய் பிஞ்சு வேண்ட மாட்டா கையில ஒட்டின சோத்தை கூட காக்கைக்கும் போட மாட்டா அறம் செய்ய விரும்பு என்று அந்த ஔவையார் போல் நடிப்பு வேற பக்தி என்றும் முக்தி என்றும் பல கதைகள் விடுவா மாமி படிப்பது தேவாரம் இடிப்பது கோவில் கதை மட்டும் அளக்க கந்தசாமியார் கோவிலில் காலையும் மாலையும் காணலாம் மாமியை உறுட்டிப் பிரட்டி கதை விடுவா உண்மையை மட்டும் ஒளித்திடுவா அடுத்தவரை அப்ரிஸியேட் பண்ணுகிற பழக்கமில்லை ஆனா உதவு மட்டும் கேட்டுப் பிட்டு மறந்…

    • 5 replies
    • 1.8k views
  20. உன் நினைவே..! எனது கிராமத்தில்.. கள்ளிச்செடிகூட முள்ளுக்குத்தாது காகிதப்பூக்கூட வாசனைதந்தது கடல்கற்கள் கூட காலில் குத்தாது காய்ந்த நிலம் கூட காவியம் தந்தது. உப்பு நீர்கூட இனிமை தந்தது உவர்க்காற்றுக்கூட தென்றலாய்த் தொட்டதது வளரும் மரம் செடி மூலிகையானதது வயதெல்லை முதியோற்க்கு நூறைக்கடந்தது சாமை வரகு நெல் சக்தி கொடுத்தது சத்துணவானதை பனை தென்னை தந்தது சரித்திரம் படைத்த- பல பெரியோர்கள் வாழ்ந்தனர். இப்போ… வெளிநாடு வந்து விறைத்துப்போகிறேன் வேலையும் குளிரும் வேசம் இழந்திட்டேன் பசுமைநாடே பாலைவனமானது படுக்கை மெத்தைக்குள் பல ஊசி குத்துது ஊரை நினைத்தே உறங்கிக் கொள்ளுறேன் ஒருநாள் வருவேன் உன்மடி தூங்க. -பசுவூர்க்கோபி-

    • 1 reply
    • 1.3k views
  21. என் அம்மா சமைச்சு போட்டா எங்க ஊர் முழுக்க வாசம் வரும் கருவாட்டு குழம்புக்கு கத்தரிக்காய் போட்டு வைப்பாள் எட்டு திக்கும் ஓடி வந்து எனக்கு ஒரு கை தா என்பர். காலையிலே தோசை சுட்டால் காக்கைக்கும் மணம் தெரியும் முருங்கை இலை முசுட்டை இலை அகத்தி இலை சுண்டி வைப்பாள் அடுத்த வீட்டு ஆன்டி வந்து அகத்தி இலை சுண்டல் கேப்பாள். ஐயோ இவள் அரைச்சு வைச்ச குழம்பு தின்ன அருகில் பூனை போல அடுப்படியில் பார்த்திருபோம் அப்பா கூட மூச்சு காட்டார் அம்மாவோட சமையலோட அருகில் ஒரு திண்ணயில அப்புவும் ஆச்சியும் குடிருப்பு ஆளுக்கு ஒரு கிண்ணத்தில அம்மா போட்டு குடுத்திடுவா பொக்கு வாயும் சிரித்து கேக்கும் அப்பு போடும் சத்தத்தில அம்மா அ…

    • 5 replies
    • 806 views
  22. எப்போது போலவே நான் இருந்த ஊர் இது இப்போ இல்லை நான் நடந்து திரிந்த பாதை இல்லை இது இப்போ இப்போ மனிதரையும் காணவில்லை சாலையில் இருந்த போதும் நகர்கிறது நம்பிக்கை மட்டும் நதி ஒன்று ஊர்ந்தது போல் இன்னும் ஓர் இயற்கையின் சங்கீத மொழிக்காய் காத்திருக்கிறது மனிதம் உயிர்த்து எழும் காலம் ஒன்றிற்காய் உன் மொழியோடு பேச நினைக்கிறது என் ஆன்மா.

    • 3 replies
    • 747 views
  23. கொடிய கிருமி.!கொரோனாவா? என்னைவிட யாருமுண்டோ இங்கு மண்ணில் உயர்ந்த ஜாதி நானே மற்றவர் எல்லோரும் கீழ்ஜாதி தானே எண்ணத்திலூறிய வெறியர்கள் ஒருபால் கறுப்பு வெள்ளைத் தோலினை பிரித்து கசக்கி பூவினை எறிவதைப்போலே உலகநாடுகள் சிலவற்றில் அடிமையாய் உழைப்பை உறுஞ்சும் கூட்டமும் ஒருபால் ஏழை எளியோர் வாழ்வைச்சுறண்டியே ஏப்பம் விடுகின்ற முதளாளிக்கூட்டம் பணத்தை சேர்த்தே கோடீஸ்வரனாய் படைத்தவன்போலே நினைப்பவன் ஒருபால் மதங்கள் சொல்லும் அறிவுரை மறந்து மதம் பிடித்து மாக்களாய் அலைந்து-தன் மதம் ஒன்றே உலகில் பெரிதென… பிரபஞ்சம் மறந்து பிதற்றுவோர் ஒருபால் அணுவுலை நிறுவி ஆயுதம் குவித்து …

  24. தேசம் சுமந்தவர்கள்-பா.உதயன்- I am building this bridge for him!” உலகத்தின் இருள் இன்னும் மறையவில்லை மானிடத்தின் அழகிய வாழ்வை எல்லாம் ஏதோ ஒன்று பறித்து செல்கிறது .தங்கள் இறுதிக் கால வாழ்வை அமைதியாக களிக்க வேண்டிய காலத்தில் எதிர்பாராதவகையில் முதியவர்களை பறித்து எடுத்துப் போகிறது இருள் சூழ்ந்த காலம் ஒன்று.இளைய சமுதாயத்தின் எதிர்காலத்திற்காக இந்த நகரங்களை தங்கள் தோள்களால் சுமந்து எழுப்பியவர்கள்.இதை நினைக்கும் பொழுது எல்லாம் அமெரிக்க கவிஞர் Will Allen Dromgoole எழுதிய (The Bridge Builder )பாலம் கட்டும் முதியவர் என்ற கவிதை நினைவுக்கு வருகிறது .ஒரு முதியவர் எந்த வலிகளையும் பார்க்காமல் பாலத்தை கட்டிக்கொண்டு இருக்க அதன் வழியால் சென்றவர் அவரை பார்த்து ஏ முதியவரே நீ இந்த உல…

    • 0 replies
    • 858 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.