கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
783 topics in this forum
-
என் அன்பு இதயங்களுக்கு..விரைவில் 2வது பாகமும் தொடரும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.நன்றிகள்
-
- 4 replies
- 1.1k views
-
-
மங்கையவளின் மரக்கறிக் கடை..!(காய்கறிக்கடை) ************************* பகுதி-1 முதலில் தக தகவென்ற மேனியை பார்த்ததும் தக்காழியை வாங்கி வைத்தேன். முந்தானையை பார்த்து முனகினேன் முருங்கக்காய் வரத்து குறைவென்றாள். கையை வைதேன் சும்மா சுறண்டாதீர்கள் மென்மையான தோல் உதிரம் வருமென்றாள் எடுத்து பார்த்தேன் பீற்றூட் கிழங்கு. அவளின் விரலை பிடிப்பதுபோல் எண்ணினேன் முளிந்து பார்த்தாள் எனது கையில் இருந்தது வெண்டிக்காய் உடைக் வேண்டாமென உறுமி விட்டு சிரித்தாள். அவளி…
-
- 11 replies
- 1.1k views
-
-
-
- 3 replies
- 952 views
-
-
மண்டியிடும் மன்னர்கள் ------------------------------------- இரண்டு சிறு குழந்தைகளுடன் இருவர் நாங்கள் இந்த வீட்டிற்கு அநேக வருடங்களின் முன்னொரு நாள் குடி வந்தோம் பன்னிரண்டு வீடுகள் உள்ள தெருவில் பதினொரு மன்னர்கள் குடி இருந்தனர் சில மன்னர்கள் பேசினர் சிலர் வெறும் புன்னகை மட்டும் சிலர் எங்களைக் காணவேயில்லை அடைமழை நாளென்றில் கடும் காற்றில் என் முன் நின்ற பெரும் மரம் காற்றின் முன் மண்டியிட மறுத்து முறிந்து விழுந்தது மன்னர்கள் ஓடி வந்தனர் அவர்கள் வீடுகளுக்கும் சேதமில்லை என் வீட்டிற்கும் சேத…
-
-
- 7 replies
- 1k views
-
-
வெறுப்பினால் எதையும் வெல்ல முடியாது அன்பினால் மட்டுமே அது முடியும். Hatred does not cease through hatred at any time. Hatred ceases through love. This is an unalterable law.” – Buddha —————————————————————————————————————— மண்ணைத் தின்னும் ஆசையோடு-பா.உதயன் இலங்கையில் இப்போ வட கிழக்கில் பேரினவாதம் என்ற பெரும் பேய் மதம் என்ற பெயரில் மண்ணை தின்று கொண்டிருக்கிறது அமைதியாய் அரச மரத்தடியில் இருந்த புத்தரை அங்கும் இங்குமாய் அந்தப் பேய் அவர் அமைதியை குலைத்து இழுத்துத் திரிகிறது பாவம் புத்தர் என்ன செய்வதென்று தெரியமால் இன்னும் அமைதியாகவே இருக்கிறார் அரச மர நிழலோரமாய் அமைதியையும் அன்பையு…
-
- 1 reply
- 855 views
-
-
மேலும் தனித்துவமான சிந்தனைகளை அறிந்திட தொடருங்கள் தொடர்பு வேண்டாம் ஈழத்தமிழன் இன்ஸ்டாகிராம் இணைப்பு
-
- 1 reply
- 1k views
-
-
மனக்குரங்கு கால் நீட்டி குந்தி இருந்தபடி கட்டளை இடுகிறது என் மனக்குரங்கு அதை கட்டிப்போட்டு சும்மா இரு என்று சொல்ல நான் என்ன புத்தனா புனிதனா ஆசையும் பாசமும் கொண்ட அந்த மனக்குரங்கு தானே அது ஆடி அடங்கும் வரையிலிம் எந்தக்கிளை வேண்டுமானாலும் தாவித் திரியட்டும் ஆசையும் பாசமும் அகன்று அந்த ஞானம் அடைந்தவனை அறியும் வரையிலும் இப்போதைக்கு இது இப்படியே இருந்து தொலையட்டும் .
-
- 3 replies
- 1.7k views
-
-
ஊனம் காண இரக்கமாக நாணம் தோன்ற ஏக்கமாக தானம் செய்ய விருப்பமாக சினம் புரிவது எதிர்ப்புமாக கவனம் சிதற திருப்பமாக நவீனம் தருவது தீமையாக (அ) நன்மையாக யாவும் அதை கையாலும் புலன்களின் அனுமானம் அதுவே வழிவாகுக்கும் வினைகளின் தொடக்கம் விதியையும் மதியால் வெல்லலாம் என்பது சிலரின் செயல் வழக்கம் என்பதுவமாக...
-
- 0 replies
- 750 views
-
-
மனம் ஒரு குரங்கு-பா.உதயன் அன்பும் அழுக்கும் ஆசையும் பாசமும் கோபமும் கொண்ட என் மனக்குரங்கு ஏன் தான் எதுகும் புரியவில்லை எப்பவும் பாய மறுப்பதில்லை மனதுக்குள் கிடக்கும் பாம்பைக் கூட குரங்குக்கு கொல்லத் தெரியவில்லை எத்தனை அழுக்குகள் மனசுக்குள் கிடக்குது குரங்குக்கு இது ஒன்றும் புரியவில்லை சும்மாய் இரு என்று குரங்கை சொன்னால் சும்மாய் இருக்கவும் முடியவில்லை எப்பவும் கத்துது எதிலும் பாயுது அமைதியாய் இருக்க அதுக்கு ஏது பழக்கம் தன்ன அறியாமல் எல்லாம் அறிந்தவன் தான் என்றே துள்ளுது குரங்கு தனக்கே எல்லாம் தெரிந்தது போல் தாவுது குரங்கு எப்பவுமே இன்னும் ஓர் குரங்கு போல் தன்னை நினைக்குது இருப்பதைக் கொண்டு வாழவும் தெரியாம…
-
- 5 replies
- 554 views
-
-
என் வீட்டின் சாளரங்களை விருப்பப்பட்ட நேரம் நான் திறக்க விரும்புகிறேன் பனி மூடிய வீதிகள் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும் எப்போதாவது ஒரு வசந்த நாளை நான் எதிர்பார்த்திருக்கிறேன் குளிர் சலித்துப் போய்விட்டது இப்போது என் மனம் சூடான ஒன்றை விரும்புகிறது தியா - காண்டீபன்
-
-
- 11 replies
- 1k views
- 1 follower
-
-
மனித காட்சிச் சாலை! ****************** சனி,ஞாயிறு நாட்களில் அந்த.. மிருகக் காட்சிச் சாலை பரபரப்பாகவே விடியும். காரணம் பார்வையிடும் மக்கள் வெள்ளம் அலைமோதுமென்பதால். யானைகளின் -சாகச விளையாட்டுக்கள் குரங்கு ககளின் தாவல்கள் சிங்கத்தின் வீர நடை சிறுத்தையின் ஓட்டம் கரடி புலி சிவிங்கி காண்டா மிருகமென.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வீர செயல்களைக்காட்டி மக்களை மகிழ்வித்து வருவது வளக்கம். அதனால் அவர்களுக்கும் நல்ல உணவு கிடைத்தது காட்டை மறக்கடித்து கம்பிக்கூடுகளில் -தம் வாழ்வை மறந்து வாழ்ந்தன அங்கு. இப்போது எல்லாம் சன…
-
- 0 replies
- 976 views
-
-
மனிதம் செத்துவிட்ட மகாத்மா பூமி! ***************************************** வாசலை திறந்து கொண்டு-நீ வருவாயென்றுதானே ஏங்கிக் கிடந்தது எம் தேசம்… விடுதலை பெற்றபின்னும் தூக்கு கயிறை மாட்டி தூங்கவைத்து அனுப்புமென்பது யாருக்குத் தெரியும். 😢 உன்னைப்போலவே உன் அம்மாவும் ஒவ்வொருநாளும் செத்து செத்து.. உன்வரவுக்காகவே காத்துக் கிடந்தாள்-எனி அவளுக்கு ஆறுதல் சொல்ல யாரால் முடியும் இந்த பூமியில். ஆத்மார்த்த அஞ்சலிகள்🙏 பசுவூர்க்கோபி.
-
- 0 replies
- 354 views
-
-
-
- 0 replies
- 256 views
-
-
மன்னித்துவிடு முத்துக்குமரா..!: எண்களில் தொலைந்தது இன முழக்கம் ! ஏழுக்கும் ஐந்துக்கும் மூன்றுக்கும் ரெண்டுக்கும் விலைபோயின அக்னி மரணங்கள்.! உரத்து முழங்கியவன் சிறையிடப்பட்டான் ! அடக்கி வாசித்தவன் அணியில் சேர்க்கப்பட்டான் மேடைப்புலிகளின் வீரவாள் உறையிடப்பட்டது ! இனி மடிந்து வீழுங்கள் தேர்தல் முடிந்து பார்ப்போம்.! இன உணர்விற்கு குறுக்கே எலெக்ஷன் வந்தால் என்ன செய்வது.! வாருங்கள் முட்டாள்களே ! ஜனநாயக கடமையாற்றுவோம் இறையாண்மை காப்போம். போங்கடாங் ...! நன்றி :தாமிரா. Thamira Kathar Mohideen ................................................................................................................
-
- 2 replies
- 730 views
-
-
இருள் கலந்த சாலையில் ஒரு சிறு வளைவில் எனக்கான மரணம் இன்று காத்திருந்தது ஒரு கணப் பொழுதில் தீர்மானம் மாற்றி இன்னொரு நாளை குறித்து விட்டு திரும்பிச் சென்றது பனியில் பெய்த மழையில் வீதியின் ஓரத்தில் மரணம் காத்திருந்ததையும் என்னை பார்த்து புன்னகைத்ததையும் பின் மனம் மாறி திரும்பிச் சென்றதையும் நானும் பார்த்திருந்தேன் தூரத்தில் ஒலி எழுப்பும் வாகனம் ஒன்றில் அது ஏறி சென்றதையும் ஏறிச் செல்ல முன் தலை திருப்பி மீண்டும் என்னை பார்த்ததையும் நான் கண்டிருந்தேன் எல்லாக் காலங்களிலும் ஏதோ ஒரு புள்ளியில் நானும் அதுவும் அடிக்கடி சந்திக்க முயல்வதும் பின் சந்திக்காது பிரிவதும் அதன் பின் இன்னொரு சந்திப்பிற்காக காத்திருப…
-
- 14 replies
- 7k views
-
-
உன் புகைப்படத்தை ஓராயிரம் முறை பார்த்து இருப்பேன் ஏனோ நீ இன்னும் பார்க்கவில்லை என் குறுஞ்செய்தியை காத்திருந்தால் காதல் அதிகரிக்கும் என்று நானும் கூட சிலாய்த்துப் பேசியது உண்டு என் தோழியின் காதலுக்கு தூது போன நாட்களில் தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தால் தெரியுமென அப்போது தெரியாமல் போனது ஏனோ! நீ இவ்வளவு இறுக்கமாய் இருக்கிறாய் இம்மியளவும் மாறாமல் உன்னை நினைத்து உண்ணவும் முடியாமல் உறங்கவும் இயலாமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன் கோட்டானாய் நள்ளிரவில் நீ புரிந்து கொண்டது இவ்வளவு தானா? என நினைத்தால் நெஞ்சம் பஞ்சாய் வெடிக்கிறது என்ன செய்ய நீயும் கொள்கையின் வாரிசு தானே! உன் கொள்கையை காதல் களவாடுமென நினைத்தேன் மாறாக கொள்கை களவாடியது…
-
- 0 replies
- 997 views
-
-
மரம் சொன்ன கதை..! அழகான மரங்கள் அழகான பூக்கள் அத்தோடு.. நாங்கள் தரும் பழங்களும் காய்களும் மட்டுமே உங்கள் கண்களுக்கும் வாய்க்கும் ருசிக்கிறது நீர் தேடி உணவு தேடி அலைகின்ற எங்கள் வேர்களை எவருக்குமே தெரிவதில்லை. அதுபோலத்தான் உங்கள்.. தாய் தந்தையரும் வேர்களே! மறந்திடாதீர்கள். -பசுவூர்க்கோபி-
-
- 4 replies
- 996 views
-
-
மரம் சொன்ன குறள் நன்றி மறப்பது நன்றன்று.. *********************** நான் பெரிய மரமாய் இருந்தாலும் என்னில் கூடு கட்டி குடி வாழும் பறவையினத்தை துரத்தாமல் மதிக்கிறேன். என்னை இதே இடத்தில் வாழவைத்தது ஒரு பறவை. அதன் எச்சத்தில் இருந்தே நான் மரமானேன். மனிதர்களே நீங்களும் யோசியுங்கள் ஏதோ ஒரு வளியில் யாரோ ஒருவரின் உதவி கிடைத்திருக்கும். அதை மறக்காதே என இந்தத் திருக்குறளை சொல்லி சிலுப்பியது மரம் …
-
- 6 replies
- 2.5k views
-
-
மரம்- பிறக்கும் போது தொட்டிலானது வாழும் போது கட்டிலானது இறக்கும் போது பெட்டியானது எரிக்கும் போது நெருப்புமானது மரம் என்று தான் இருந்தேன் மனிதன் பேசாத அன்பும் அறமும் மரங்கள் பேசியது மடியில் ஏந்தி நிழலும் தந்தது மரம் இல்லையேல் மனிதன் இல்லை. பா.உதயன்✍️
-
- 2 replies
- 493 views
-
-
நம் வாழ்வில் நாம் மறக்க முடியாத பலநாட்களை பலமுறை நாம் கடக்கின்றோம் சில நாட்கள் நம் வாழ்வில் - நாம் மறக்கவே முடியாமல் சிதளூரும் காயங்கள் போல் நித வருத்தம் தருவன 2009, சித்திரை 27 கடற்கரை மணலில் குளிரூட்டப்பட்ட திடலில் காலைச் சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட விடுமுறையில் மூன்று மணி நேரம் கலைஞரின் நாடகம் அரங்கேறிய நாள் தியா காண்டீபன் கலைஞரின் உண்ணாவிரத நாடகம் அரங்கேற்றப்பட்ட பின்னரே ஐம்பதாயிரம் வரையான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் https://www.vinavu.com/2009/05/11/congress-dmk-drama/ https://www.keetru.com/.../10-sp.../8834-2010-05-22-01-32-26
-
-
- 7 replies
- 1k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 1k views
-
-
கடைகோடியில் கைவிடப்பட்ட நூலின் மறு வாழ்வு, மங்கையின் கழுத்தில் மாங்கல்யமாய். ~ கபியின் கவி
-
- 1 reply
- 1.7k views
-
-
இரவில் இன்பம் தரும் உன் விரல்கள் பகலில் விலகிப் போக வருத்தமொன்றே விருப்பப்பாடமாக எடுத்த எனக்கு மறுஇரவு முழுநிலவாகுமோ!
-
- 0 replies
- 1.2k views
-
-
மல்லிகை பூவுக்கு எங்கள் கண்ணீர்பூக்கள்..! ********************************** இன்று(28.01.2021) பல்கலைக் கழகமொன்று படுத்துறங்கிய செய்தி கேட்டு பாரெல்லாம் கண்ணீரால் நனைகிறதே! ஜீவா ஐயா ஈழத்தின் இலக்கியத் தோட்டத்தில் மல்லிகையாய் பூத்துக் குலுங்கி மனங்களை வென்ற இந்த.. மாபெரும் இலக்கியச் சிகரத்துக்கு மரணமே இல்லை என்றும் எம்மோடு வாழ்ந்துகொண்டே இருப்பீர்கள். உள்ளத்தின் உயரத்தில் மல்லிகை பந்தலாய். பசுவூர்க்கோபி-
-
- 4 replies
- 1.6k views
-
-
மாதங்களில் நான் மார்கழி. வீதியெங்கும் மாவிலைத் தோரணங்கள் வாசலெல்லாம் வண்ணக் கோலங்கள் பூசணிப் பூக்கள் மத்தியிலே சாணியில் பிள்ளையார் பூவினிலே மெல்லிய பனியுடன் மழைக்காலம் வகை வகையாய் பறவைகள் இசைக்கோலம் நிரை நிரையாய் எறும்புகள் ஊர்வலம் அவசர கதியில் மாந்தர் நகர்வலம் கோடை முடிந்தால் வந்திடும் மார்கழி வாடைக்காற்றும் வந்து வாட்டிடும் பீடை மாதமென்பார் பேதையர் சாடையினால் தை பிறக்கட்டுமென்பர் சோதிடர் பெருவிழாக்கள் குறைந்தாலும் திருவிழாக்கள் களை கட்டும் ஓதுவார் இறைபுகழ் ஓதிச் செல்ல சாதுக்கள் பஜனையில் கூடிச்செல்வர் அடிகளின் திருவெம்பாவை திக்கெட…
-
- 13 replies
- 1.5k views
-