கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
மாறி மாறி உருவெடுத்து வருகுதடா கொரோனா- ஊசி அடித்து உவத்திரவ கொரோனாவை துரத்தி விடுவம் என்றால் ஊசியார் கூட அவர் வாழும் காலம் வலுவிழக்க சண்டை போட முடியாமல் கொண்டு போன ஆயுதமும் முடிஞ்சு போக ஒளித்திருந்த கொரோனா ஓடி வந்து திரும்பக் குந்துது அட பாடுபட்டு ஒன்றுக்கு இரண்டு ஊசி போட்டும் தேடித் தேடி வருகுது திரும்பத் திரும்பத் கொரோனா மாறி மாறி உருவெடுத்து வருகுதடா கொரோனா போன கதையைக் காணோம் இன்னும் இனி ஆளுக்கு ஒரு ஊசி என்று அடுத்தடுத்து போட்டு வாழும் வரை இது தானோ ஆருக்குத் தெரியும். பா.உதயன் ✍️
-
- 6 replies
- 622 views
-
-
வருவதை தள்ளி வாழுவோம் நண்பா..! ******************************* ஓலைக் குடிசையில் வாழ்ந்தனான் நண்பா ஒளிவு மறைவின்றி சொல்லுறேன் நண்பா காலை உணவுகூட கஞ்சிதான் நண்பா காலத்தால் நானொரு ஏழைதான் நண்பா வாழப்பிடிக்காமல் வாழ்ந்தநான் நண்பா -இந்த வையகம் ஏனென்று ஏசினேன் நண்பா பிறந்ததன் பயன் பற்றி யோசித்தேன் நண்பா பிடித்தது வாழ்க்கையில் பற்றொன்று நண்பா மனிதர்கள் எல்லோரும் வேறு வேறு நண்பா மடையராய் எங்களைப் பார்ப்பார்கள் நண்பா உலகத்தில் எல்லோரும் ஒன்றுதான் நண்பா உணர்ந்தாலே போதுமே வெல்லலாம் நண்பா. படித்ததன் வேலையோ கிடைக்கேல்ல நண்பா பாசங்கள் காட்டவோ யாருமில்லை நண்பா எடுத்ததன் பிறவியின் புரி…
-
- 6 replies
- 1.8k views
-
-
குட்டிக் கவிதைகள்..! உணவு..! உணவை அறிந்தே உண்ணுவோம் உலகின் உயர்வையே எண்ணுவோம். விவசாயி..! கரையழுது நுரை தள்ளுவது-ஒருபோதும் நடுக் கடலுக்கு தெரிவதில்லை. அன்பு..! அறுக் கமுடியாத இரும்புச் சங்கிலி அறுந்துடைந்தால் ஒட்டமுடியாத கண்ணாடித் துவள்கள். துர்நாற்றம்..! பொறாமைச் செடியில் பூக்கும் இதயம் அன்பை அழிக்கும் மணமே வீசும். அன்புடன் -பசுவூர்க்கோபி-
-
- 6 replies
- 1.4k views
-
-
இன்னும் அவர்கள் இசைந்தும் அசைந்தபடியும் தான் இருக்கின்றனர். பெருங்குரலெடுத்து அழமுடியாத அவலம் கொண்டவர்கள் தினமும் மகிழ்வாய்க் கண்மூடித் தூங்கி அறியாதவர்கள் சிலநாட்களேனும் பாரங்களின்றிப் பசியாற முடியாதவர்கள் பசிக்கும் வயிறைப் பானைத் தண்ணீரில் நிரப்பியபடி பிள்ளைகள் வயிற்றை நிரப்பத் துடிப்பவர்கள் கோடை வெயில் கொடுமழை கண்டும் கால்கடுக்கத் தினம் கனவு நெய்பவர்கள் கணவனின் அணைப்பின்றி மனது தகிக்கையில் கண்டவர் பார்வையில் கசங்கித் துடிப்பவர்கள் அடிமுடி தேடியும் அகப்படா அன்பின் அகலமும் நீளமும் ஆழமும் அறியாத எரிதளலின் எச்சமாய் இருப்பவர்கள் இடர்கள் கடந்தும் கடக்காததுவாய் தொடரும் துயரில்…
-
- 6 replies
- 873 views
-
-
கறுப்பான கல்லில் சாமியை காண வெறுப்பு கறுப்பான தோழனுக்கு - கறுப்புச் சட்டை. கொரோனாவை விடக் கொடுமை இது.
-
- 6 replies
- 1.2k views
-
-
-
- 6 replies
- 2k views
-
-
இது குளிர் காலம்..! ***************** பார்க்கின்ற மரமெல்லாம் பட்டதுபோல் தெரிந்தாலும் உள்ளுக்குள் உயிர் இருந்து உறக்கமின்றி முளித்திருக்கும். அடுத்த சமர் வரவையெண்னி அரும்புவிட காத்திருக்கும் இழந்த இலையனைத்தும் இருமடங்காய் வளருமென்ற உறுதியுடன் நம்பித்தான் உள்ளுக்குள் உயிர் இருக்கும். இதைப்போலே… சோகங்கள் துக்கங்கள் சுற்றியெமைத் தாக்கினாலும் மனவுறிதி எமக்கிருந்தால் மரம்போலே துளிர் விடலாம் குளிரென்ன கோடையென்ன கொரோனாவே விலகியோடும். -பசுவூர்க்கோபி-
-
- 6 replies
- 1.2k views
-
-
மொழி-பா.உதயன் காற்றுக்கும் மொழி உண்டு கடலுக்கும் மொழி உண்டு காலையில் தினம் பாடும் பறவைக்கும் மொழி உண்டு மலை கூடி மொழி பேசும் மௌனமாய் கவி பாடும் அழகான நதி வந்து அதனோடு கதை பேசும் அமுதான தமிழ் போல அந்த குருவிக்கும் மொழி உண்டு மலர் கூட மொழி பேசும் மனதோடு இசை பாடும் அழகான கிளி எல்லாம் அமுதமாய் தமிழ் பேசும் அருகோடு குயில் வந்து அதனோடு சுரம் பாடும் மழை கூடி தினம் வந்து மலரோடு கதை பேசும் இரவோடு இது பேசும் மொழி எல்லாம் தனி ராகம் சிற்பியின் உளியோடு சிலை கூட மொழி பேசும் அவனோடு தனியாக அது பேசும் மொழி வேறு அழகான பாவங்கள் அசைந்து ஆடும் ராகங்கள் மனதோடு அது பேசும் மனிதர்க்கு மட்டு…
-
- 6 replies
- 1.8k views
-
-
கடவுள்களால் கொல்லப்படும் ஆநிரைகள் ------------------------------------------------------------------- மேய்ந்து கொண்டும் சாணம் இட்டும் புரண்டு விட்டு சரிந்து தூங்கி எழும்பிக் கொண்டிருக்கும் ஆநிரைகளைப் பார்க்க கடவுள்கள் சில நாட்களில் வருகின்றார்கள் அன்று கடவுளே நேரே வருகின்றார் என்று குட்டிகளுடனும் கருக்களுடனும் ஆடாமல் அசையாமல் கடவுள் வரும் வழியில் ஆநிரைகள் அப்படியே நிற்கின்றன நாள் முழுதும் காவலர்களுடன் வரும் கடவுள்கள் கையை அசைப்பார்கள் எழுதி வைத்து வாசிப்பார்கள் இனி எங்களின் ராஜ்ஜியம் என்பார்கள் மற்றயவை பொய்க் கடவுள்கள் என்றும் சொல்கின்றார்கள் கடவுள்களின் முன்னேயே ஏதோ நடந்து ஆநிரைகள் சில குட்டிகள் சில கருக்களில் சில எரிந்து நசிந்து மூச்சடக்கி என்று இறந்து போகின்றன அ…
-
-
- 6 replies
- 418 views
-
-
மரம் சொன்ன குறள் நன்றி மறப்பது நன்றன்று.. *********************** நான் பெரிய மரமாய் இருந்தாலும் என்னில் கூடு கட்டி குடி வாழும் பறவையினத்தை துரத்தாமல் மதிக்கிறேன். என்னை இதே இடத்தில் வாழவைத்தது ஒரு பறவை. அதன் எச்சத்தில் இருந்தே நான் மரமானேன். மனிதர்களே நீங்களும் யோசியுங்கள் ஏதோ ஒரு வளியில் யாரோ ஒருவரின் உதவி கிடைத்திருக்கும். அதை மறக்காதே என இந்தத் திருக்குறளை சொல்லி சிலுப்பியது மரம் …
-
- 6 replies
- 2.4k views
-
-
பாலக்காடு 2006 ஒரு தோழியோடு பாலக்காட்டில் திரைக் கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். பகல் முழுக்க கதை விவாதம் நடக்கும். மிகவும் அன்பான தோழி. ஆனால் மாலைப்பொழுது கறுத்ததும் அவள் முகமும் கடு கடுப்பாகும். /இனி அவள் தன் மனசின் ஒப்பனைப் பெட்டி திறப்பாள். /முகம் ததும்பும் நட்ப்பை ஒட்டத் துடைத்து விட்டு பகை பூசிபோர்ச் சன்னதங்கள் எழுதுவாள்./ எதில் இருந்தும் கண்டுபிடிப்பாள் ஒரு பெரும் தாக்குதலுக்கான கூச்சலை./ . பெண்கள் எல்லா ஒப்பனை பெட்டிகளையும் ஆயுதங்களையும் தங்கள் மனசுக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதை அந்த நாட்க்களில்தான் உணர்ந்தேன். . . பாலக்காடு 2006 வ.ஐ.ச.ஜெயபாலன் . வண்ன ஆடைகளை வானெங்கும் வீசிவிட்டு அம்மணச் செஞ் சூரியன் அரபிக்…
-
- 6 replies
- 1.8k views
-
-
வளையற் குவியல் ஒன்றைக்காட்டி வல்லமை கேட்டதோர் கவிதை. என் நெஞ்சிலுதித்ததை அங்கு பகிர்ந்தேன். இது கவிதையல்ல ஓர் ஏழையின் குமுறல். அது கீழே. ஓர் ஏழையின் குமுறல் கைநிறையப் போடக் கலர்கலராக் குவிச்சிருக்கு பைநிறையப் பணமிருந்தாப் பார்த்துப் பார்த்து வாங்கிக்கலாம். ஏழைக நம்பளுக்கு எதுக்கிந்த வளையலெல்லாம் வாழ வழியில்லையாம் வளையலொரு கேடா புதுப் புள்ளத்தாச்சிக்குப் போடுவாங்க வளைகாப்பு எட்டு மாதப் புள்ளத்தாச்சி எம் பொழைப்பு கல்லுடைப்பு கல்லுடைக்கும் கைக்கு காப்பு சரிவருமா? நாட்கூலி வாங்கி நானூத்தும் கஞ்சிலதான் ஆத்தா மனம் மகிழும் அவவயிறும் குள…
-
- 6 replies
- 1.2k views
-
-
தாலாட்டுப் பாடிய தாயும் எங்கே? தானாக வந்த உறவுகள் எங்கே? தயவு படைத்த நெஞ்சமும் எங்கே? தாண்டி வந்த இளமை,செழுமை,இன்பம் போனது எங்கே? திரும்பி பார்த்தேன் எல்லாம் எங்கே? எங்கே? சென்றது என்றே!!!! மார்பில் சுமந்த செல்வங்கள் எங்கே? மாய்ந்து தேடிய செல்வங்கள் எங்கே? மாட்டைப் போல ஓடியோடி உழைத்தவையெல்லாம் எங்கே? எங்கே? காணவே இல்லை தேடியும் பார்த்தேன் எல்லாம் எங்கே?எங்கே? சென்றது என்றே!!!!! ஆடியடங்கிடும் வாழ்க்கையினிலே ஆழ்ந்த அன்பு,பாசம் அனைத்தும் போனது எங்கே? அருகே இருந்த சுற்றமும் நட்பும் அழிகை இடத்துக்கு முற்றும் துறந்து போனதை அதிர்ந்து பார்த்தேன் எல்லாம் எங்கே? எங்கே? சென்றது என்றே!!!!! நாட்பட நாட்பட மனம் நல்லவை நாடும் மெய்ப் பொருள…
-
- 6 replies
- 1.1k views
-
-
ஓ அமேசான் (Pray for Amazon) உலகத்தின் உடல் தீ பிடித்து எரிகிறது உன்னோடு சேர்த்தே மனிதப் பிழைகளினால் மண்ணில் மனிதனும் இல்லை மரமும் இல்லை என்றாகிப்போய் விடுமோ ஒரு உலகம் தானே உனக்கும் எனக்கும் ஏதோ பயமாக இருக்கிறது உலகக் குழந்தைகளை நினைக்கையிலே ஓ உனக்காகவே ஆமேசூன் ஒவ்வொரு எங்கள் கண்ணீர் துளிகளும் உன்னை வந்து அணைக்கட்டும் .
-
- 6 replies
- 1.8k views
-
-
வையகம் உள்ளவரை வாழ்ந்திடுவாய்! ----------------------------------------------------- நூற்றாண்டைத் தொட்டுவிட்ட கவிதைகளின் பயணத்திலே யாராரோ வந்தாலும் போனாலும் ஊரெங்கும் ஊர்வலமாய் கவிபாடி நின்றாலும் புதுக்கவிதை பாடியெங்கும் புதுமைக் கவியானவனே யுகமெங்கும் புகழ்சூடி வரலாறாய் வாழ்கின்ற புதுமையனே! பெண்ணென்றும் ஆணென்றும் வேற்றுமைகள் இல்லாத உலகொன்றைக் காண்பதற்காய் உன்சொற்கொண்டு போர்தொடுத்து விடுதலையின் முரசறைந்தே உலகின் கூன் அகலும் நிலையைக் காண்பதற்காய் வைரநிகர் வார்த்தைகளால் உரைத்தாய் உய்யும்வகை அசைத்தாய் இவ்வுலகை! பன்முகத் திறன் கொண்டாய் புரட்சிகர மனம் கொண்டாய் அநீதிகளைக் கண்டெழுந்தே அறைகூவல் விடுத்தவனே நின் எழுத்துகளால் அரண…
-
- 6 replies
- 900 views
-
-
https://www.facebook.com/photo/?fbid=10159991441351950&set=a.10151018148611950 இலங்கையை ஆள யார்வேண்டும்? அற்பனாய், குடும்பத்துள்ள அனைவரும்சேர நாட்டை விற்பனை செய்திடாத வீரனாயொருவன் வேண்டும் இனமுரண்பாடு தன்னை என்றுமே அணுகவொட்டா குணமுடையோனாய் கொள்கைக் குன்றென ஒருவன்வேண்டும் புத்தனின் மார்க்கம்தன்னைப் புனிதமாய்யேற்று அந்தச் சத்திய வழியிலேகும் தருமனாயொருவன் வேண்டும். இத்தனை தகுதியோடும் இலங்கையில் யாருமுண்டா? அத்தனைபேரும் சொத்தை, ஆளவே தகுதியில்லார். நல்லியல்பிழந்தோர் கெட்ட நடத்தையர் போலிவேசப் புல்லியர், பொய்யர்நாட்டின் புகழினைக் கெடுத்த தீயோர் இல்லையே ஒளியெமக்கென் றிருண்டதோர் காலம்கண்டு சொல்லிட மக்கள்தங்கள் சொகுசுக்காய் வாழ்ந்தகீழோர் …
-
- 6 replies
- 804 views
-
-
உக்ரைன் மோதல்..! **************** ஈழம் எரிவதற்கு உன் பங்களிப்பும் அதிகம் இருந்ததாக.. நாமறிவோம். இருந்தும்.. வலி சுமந்த எமக்குத்தான் உயிரின் வலி தெரியும்-உன் அப்பாவி மக்கள் அழிவு எம்மக்களாகவே பார்க்கிறோம். உன்னினம்,உன்மதம் உன்நிறமென்று எட்டிப்போக எம்மால் முடியவில்லை. ஏனெனில்.. உங்களைப் போன்றவர்களால் நாங்களும் அழிக்கப்பட்ட இனம். இரண்டுதரப்பு.. போரென்பதே உங்களின் கணிப்பும் பிடிவாதமும். இங்கு பெற்றோரை இழந்த பிள்ளைகள் பிள்ளைகளையிழந்த பெற்றோர் கை கால் இழந்த குஞ்சு குருமான்கள் அப்பா இறந்தது தெரியாமல் உணவு…
-
- 6 replies
- 1.9k views
-
-
நாய் ஒடுக்கி வைத்தாலும் நியாயம் பேசும் வல்லமைகள்... பனிவிழும் தேசத்து பழகுதமிழ் சோதரே! இனி வரும் காலம் எங்கள் இருப்புணர்த்தும் நேரம். ஆண்டுகள் சிலமுன்னர் நாம் எங்கு நிலையிருந்தோம்? மீண்டோம் எனும் நினைப்பா... நேற்றைகளை குடித்துளது? மாண்டு நம் உறவெல்லாம் மண்தின்னப் பார்த்திருந்தும் கூண்டுக்குள் எமைப்பூட்டி குரல் அடங்கி கிடப்பது ஏன்? கண்விசிக்க, மனம் வலிக்க, காலமுகம் கண்டிருந்தும், கங்குல் கரைத்தழிக்கும் காலம் விட்டு நிற்பது ஏன்? கந்தகத்து முட்களிடை சொந்த நிலம் வேகுவதை - உம் செங்குருதிப்பூ விரித்துப் பார்த்திடுக உறவுகளே! அன்னை திருவாசல் அகலத்திறந்து நீ முன்னை குதித்தநிலம் உன் மூத்த தாய் அல்லவா? அவள் வண்ணத் திருமேனி வலியேந்தி நல…
-
- 6 replies
- 2.2k views
-
-
-
- 5 replies
- 2.4k views
-
-
ஏரிக்கரைப் பூங்காற்றே... வானம் சிந்தாமல் மழையின் தூறல்கள் தேகம் நனைந்தாலும் மனதில் சாரல்கள் புரவியின் வேகமுடன் பரவிடும் நீரருவி பறந்திடும் பரவசத்தில் விரைந்திடும் நீர்த்திவலை வியப்பால் விழிவிரிய வனப்பால் மனம் நிறைய தமிழ்ப்பால் வார்த்தையின்றி தவித்தேன் உனைரசிக்க பாறை இடுக்ககளில் பனியின் துகள் சிதற சீறும் அரவமென உன் சீற்றம் எழுந்து நிற்க பொங்கு தமிழெனவே பொங்கி நீ நிமிர திங்கள் உன் அழகால் தினமும் நாணி நிற்க தாயாய் உனைக்கண்டேன் பேயாய் உனைக்கண்டேன் வெஞ்சினத்தால் துடிதுடிக்கும் வீரப்பெண்ணாய் உனைக்கண்டேன் காதலருக்கெல்லாம் நீ கண்ணுக்கு விருந்தானாய் கவிஞருக்கெல்லாம் நீ கவிதைப் பொருளானாய் கலைஞருக்கெல்லாம் நீ ஓவியக் கலையானாய் கன்னியருக்கெல்லாம் நீ கனவ…
-
- 5 replies
- 2k views
-
-
நாட்களைக் கணக்கிடும்... --------------------------------- பிணங்களின் மேல் நின்று ரணங்களின் ஊற்றுகளில் நாட்களைக் கணக்கிடும் அதிகார அரசுகள்! அதிகாரப் பசிக்கு இரையாகும் மக்கள் சாவுகளைக் கணக்கிட சக்தியற்று நடைபிணங்களாய் தினறும் அவலம்! உலகப் போட்டியிலே உயிர்கள் கரைந்தழிய ஆயுத உற்பத்தி ஆலைகள் ஓய்வற்று இயங்கி புதிய ஆயுதங்களை விற்றுப் பெருத்தல் ஒருபுறமும் சோதித்துப் பார்த்தல் மறுபுறமாய் மனித உயிர்கள் மடிகின்றன! மனித வளமழிந்த இயற்கை வளச்சுரண்டலில் தமது நலன் தேடும் தேசங்களே கூச்சமென்பதே இல்லையா(?) இக் கொடுமைகளை நிறுத்தும் எண்ணம் உங்கள் மனங்களில் வராதா மனித வாழ்வை மண் மேடாக்கிவிட்டு மனித உரிமையென்று மேசையில் வி…
-
- 5 replies
- 649 views
-
-
-
-
- 5 replies
- 715 views
-
-
எங்கேயோ இருக்கிறீர்கள் எனக்குத்தெரியும் நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள் கடைசியாக நீங்கள் வேலையால் வந்து கழற்றிப்போட்ட ஆடைகள் உங்களில் நான் கிறங்கும் அதே வியர்வை மணத்துடன் கொழுக்கியில் தொங்கிக்கொண்டு இருக்கிறது.. அன்றிரவு அவர்கள் உங்களை அடித்து இழுத்துச்சென்ற போது நான்கதறிய கதறல் இப்போது ஒவ்வொரு வீடாய் கேட்கத்தொடங்கி இருக்கிறது காலையில் எழுந்து அப்பா எங்கே என மகன் கேட்டான் எப்படித்தான் காணாமல் போனமை பற்றி அவனுக்கு நான் விளக்க முடியும்..? வருடங்கள் உருண்டோடி விட்டன காலமும் மனிதர்களும் எதுவுமே நடந்து விடாதது போல் போய்க் கொண்டிருக்கிறார்கள்...! உங்கள் நெஞ்சில் இருந்து துள்ளுவது போலவே நேற்றைக்கு மாலையும் என் மா…
-
- 5 replies
- 941 views
-
-
பல தமிழ் பெற்றோருக்கு மருத்துவம் மட்டுமே படிப்பாக தெரிகிறது அதுக்கென்ன படிப்பது நல்லதுதான் என்ன தான் இருந்தாலும் சும்மாவா மருத்துவ படிப்பும் ஆழமா அறிவோட படித்தால் தானே அங்கும் நுழைய முடியும் எத்தனை தமிழன் மருத்துவர் என்று எங்களுக்கு பெருமை தானே ஆனால் மருத்துவம் மட்டும் படித்தால் போதுமா கழுவவும் துடைக்கவும் தேடவும் தெரியவும் ஆடவும் பாடவும் அறிவோடு எழுதவும் அரசியல் பொருளியல் உளவியல் உயிரியல் சட்டம் சமூகவியல் சர்வதேச அரசியல் தத்துவம் என்றும் இலக்கியம் கலை கவிஞன் என்று எழுதவும் பேசவும் உந்தன் உரிமையை வெல்லவும் புவியியல் அரசியல் பூகோளத்திற்காய் என்றும் எத்தனை பேர் தே…
-
- 5 replies
- 626 views
-
-
எச்சரிக்கை! *************** கடிக்க வந்த நாய்க்கு கல்லெறிந்தேன் அது ஓடித் தப்பியது. தேன் கூட்டுக்கு கல்லெறிந்தேன் ஒற்றுமையாக துரத்திவந்தது என்னை ஓடவைத்தது. இது போன்ற ஒற்ருமையே தமிழர்க்கும் தேவை ஒன்றுசேர் இல்லையேல் தனித் தனியாய் நின்று அழிந்தே! போவாய். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
-
- 5 replies
- 1.2k views
-