கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
649 topics in this forum
-
எனது ஒஸ்லோ முருகன் சத்தியமாக இது 110 % உண்மைக் கதை. முன்பின் அறியாத ஒருதொலைபேசி இலக்கத்தில் இருந்து நோர்வேஜியமொழியிலான ஒரு குறுஞ்செய்தி இப்படிக்கூறியது ”சஞ்சயன்! உன்னை அந்தப் பெண்ணுக்கு மிகவும் பிடித்திருக்கிறது ;) ” எனது நிறத்தையுடடைய ஒரு பெருங்கவி கூறியது போன்று ”கழுத்துக்கும் தொண்டைக்கும் இடையே உருவம் இல்லாதொரு உருண்டை உருளத்தொடங்கியது” குறுஞ்செய்தியின் இறுதில் இருந்த கண்சிமிட்டும் சித்திரம் என் நெஞ்சுக்குள் சிமிட்டத்தொடங்கியது. யாராக இருக்கும்? என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டுதேடினேன். பதில் கிடைத்தாயில்லை. அவள் யார்? எப்படி இருப்பாள்? கறுப்பா வெள்ளையா மஞ்சலா? எந்த இனத்தவள்? அ. முத்துலிங்கம் அய்யாவின் கதைகளில் வரும் குறிப்பிட்ட ”அந்தப் பகுதி” மட்…
-
- 18 replies
- 2.7k views
-
-
சாத்திரி ஒரு பேப்பரிற்காக மேஜர்..டொச்சன்.(கந்தசாமி.ஜெயக்குமார்)பிறப்பு.21.06.1966...வீரச்சாவு.24.11.1992 .............................................................. டொச்சன் காலை எழுந்து துலாவில் தண்ணீர் இழுத்து இறைக்க அவனது அம்மம்மா வழிந்தோடி வந்த தண்ணீரை தோட்டத்தின் வாழைப்பாத்திகளிற்கு மாற்றி விட்டுக்கொண்டிருந்தார்.ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் மணி சத்தம் கேட்டதும் அவசர அவசரமாக உணவை வாயில் அடைந்து விட்டு நேரமாச்சு அம்மம்மா நான் போறன் என்றபடி பாடசாலைக்கு புத்தகப் பையை தூக்கிக் கொண்டு வெகு வேகமாக வசாவிளான் மத்திய மகா வித்தியலத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தவனிற்கு வடக்கு புன்னாலைக்கட்டுவன் சந்தி இலுப்பைபை மரத்தை தாண்டும் போது…
-
- 26 replies
- 2.7k views
-
-
தாயை எண்ணிஎண்ணி நந்தாவுக்குத் தலைவலி வந்தது தான் மிச்சம். எதுவித முடிவையும் எடுக்க முடியவில்லை. இத்தனை நாள் எத்தனை துன்பத்தை அனுபவித்தாகிவிட்டது. இருந்தும் மனதில் முடிவெடுக்க முடியாத பயம் சூழ்ந்து தூக்கம் இழக்க வைத்ததுதான் மிச்சம். நான் ஏன் மற்றவர்களுக்குப் பயப்படுகிறேன்? அவர்கள் என்ன கூறினால் என்ன. எனக்கு ஒன்று என்றால் அவர்களா ஓடி வரப் போகிறார்கள். எனக்கோ என் குடும்பத்துக்கோ அதனால் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று தெரிந்த பின்னாலும் என்ன தயக்கம் என தன்னைத்தானே கேட்டும் பயனில்லை. இத்தனை நாள் மற்றவர்கள் மனதில் என்னைப் பற்றி இருந்த பிம்பம் அழிந்துவிடுமே என்னும் எண்ணத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது மனதை அங்குமிங்கும் அலைக்கழித்தும் விடை தான் கிடைக்கவில்லை. ஏற்கனவே அ…
-
- 18 replies
- 2.7k views
-
-
தொலை பேசி ,முகப்புத்தகம்,யுடுயுப்,வட்சப் இது இல்லாமல் நம்மட வாழ்க்கை இல்லை என்ற காலம் இப்ப பொழுது . ஒருகாலத்தில் முற்சந்தி ,படலையடி ,பொட்டுகள் வாசிகசாலை,விளையாட்டு மைதானங்கள் தான் எமது கருத்து பரிமாற்றங்கள் வீட்டு வேலை செய்ய கள்ளம் அடித்து எனது அறையில் அமைதியாக முகப்புத்தகத்தில் மூழ்கியிருந்தேன்,மெசெஞர் அலரியது பார்த்து கொண்டிருந்த நயன்ந்தாராவின் படத்திற்கு மேலே குகன் கொலிங் ஆன்சர் என்று வந்தது... இவனுக்கு ஆன்சர் பண்ண வெளிக்கிட்டால் இன்றைய பொழுது அதோ கதி என்று எண்ணியபடி மவுஸை வேறு இடத்திற்கு மாற்றினேன் ஆனால் எனது காலகஸ்டம் மவுஸ் ஆன்சர் என்ற இடத்தில் போய் கிளிக் பண்ணிவிட்டது. "ஹலோ மச்சான் எப்படிடா இருக்கிறாய் ,என்ன சிட்னி எரியுதாம் புஷ் வயராம்"…
-
- 14 replies
- 2.7k views
-
-
கார்லா பிரவுண்..! ஐந்து அடிகள் தான் உயரம். ஆனாலும் அந்தச் சிறிய உருவம் இள வயதிற்கேற்ற வனப்புடனும், வளைவுகளுடனும் வாலிபர்களை கிறங்க வைக்கத் தவறுவதில்லை. அவளை பெண் நண்பியாக அடையப் போவது யார் என்கிற போட்டிதான் அந்த அமெரிக்க ஊரின் இளைஞர்களுக்குள் முக்கியமான ஒரு போட்டியாக இருந்தது. அவளைப் போல பல பெண்கள் வனப்புடன் இருந்தாலும் கார்லா நன்கு பிரபலம் ஆகிவிட ஒரு சம்பவம் காரணமாக அமைந்தது. ஒரு சமயம் அவள் கடற்கரை ஒன்றில் நடந்து சென்றபோது பத்திரிகைக்காரர் ஒருவர் அவளது அனுமதியுடன் ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொண்டார். அந்தப்படம் அவளது பெயருடன் உள்ளூர் பத்திரிகை ஒன்றில் ஒன்றில் வெளிவரவரவும் அவளது மீட்டர் இளைஞர் மத்தியில் சும்மா ஜிவ்வென்று எகிறியது. இளைஞர்கள் அவளது வீட்டுக்கே தொடர்பு க…
-
- 25 replies
- 2.6k views
-
-
இளையராஜாவின் தரை தப்பட்டை இசை போல கூவி செல்லும் மல்ரி பெரல் செல்லின் ஒலி,ரகுமானின் இசைபோல காதுகளை கிழித்து போகும் சன்னங்களின் சத்தம்,திரும்பும் இடம் எல்லாம் பழைய தும்பு தடிகள் போல தும்பு எழும்பி இருக்கும் மரங்களும் கிளைகளும் ஐன்பது கலிபரின் துப்பல்கள் செய்த மாய வேலை இவ்வாறு ஒரு பெரும் சமர் ஜெயசுக்குறு களமுனையில் பப்பா லையினில் அரங்கேறிய படி இருந்தது .... நாலு நிலைகளு உடைத்து எதிரி மூர்க்கமாக ஒரு நகர்வை முன்னேடுக்கிறான் கடல்புலிகளின் மகளிர் படையணி லெப்டினன் கேணல் காதம்பரி தலைமையில் அதை எதிர்கொண்டு இருந்தது,நிலைகள் உடைத்து கட்டுக்குள் போகமுன்னம் உதவிகள் அழைப்புக்கள் என ,வோக்கிடோக்கி சங்கேத மொழிகளை பேசிக்கொண்டு இருந்தது ... பப்பா லையினில் அடிவிளுகுதாம் எக்கோ பக்கம்…
-
- 6 replies
- 2.6k views
-
-
இருளில் தெரிந்த தேவதை.(இது கதையல்ல) கடந்த மார்கழி 13 ந் திகதி விடுமுறைக்கான பயணம்.இலங்கைக்கு செல்லக்கூடிய சாதகமான சூழல் இன்னமும் சரி வராததால் வழைமை போல இந்தியாவிற்கான பயணம்.ஒன்ரரை மாதங்கள் விடுமுறைக்காலம் என்பதால் எனது நண்பர்களையும் சந்தித்து போவது என முடிவெடுத்து முதலில் மும்பையில் இறங்கி அங்கு நான்கு நாட்கள் பின்னர் கோவா.கர்நாடகா.தமிழ்நாடு என பயணப் பாதை திட்டமிடப் பட்டது.மும்பையில் எனது மனைவியின் தம்பி ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் பொறியியலாளராக இருப்பதால் அவனும் விடுமுறை எடுத்து எங்களிற்காக காத்திருந்தான்.மும்பையில் இரண்டாம் நாள் மாலை மனைவி தனது தம்பியுடன் பொருட்கள் வாங்க போய்விட நான் எனது நீண்டகால நண்பன் டோனியலை சந்திப்பத்காக அவன் கடை வைத்திருக்கும் மல…
-
- 13 replies
- 2.6k views
-
-
Sunday, April 19, 2020 உலையும் மனசோடு அலையும் இரவு. - சாந்தி நேசக்கரம் - குண்டம்மா ? இன்னும் எவ்வளவு நேரத்தில வாறீங்கள்? அவள் வட்ஸ் அப்பில் எழுதியிருந்தாள். இன்னும் ஒரு மணிநேரத்தில்...பதில் எழுதினேன். றெயின் கொலோன் பிரதான நிலையத்தைத் தாண்டி பிராங்போட் நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. எத்தைனயோ ஞாபகங்களும் மனசுக்குள் அலைபோலோடி வந்து உடையும் நுரைகளாய் மணலோடு கலந்து போவது போல பிள்ளைகளுடன் வாழ்ந்த காலங்களும் அவர்களுடனான ஞாபகங்களும் வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. றைன் நதியோரமாக றெயின் ஓடிக்கொண்டிருந்தது. ஆவணிமாதம் ஆற்றோரமெங்கும் பச்சையாகியிருந்தது. ஆங்காங்கே சரக்குக்கப்பல்கள் பயணித்துக் கொண்டிருந்தது. வெயில் ஏறாத கால…
-
- 6 replies
- 2.6k views
-
-
லின்சன் குடும்பத்தின் கடைக்குட்டி, மூத்தவர்கள் இருவரும் பெண்கள் .தந்தை இளம் வயதிலயே இறக்க தாயின் மீது குடும்ப சுமை விழுகின்றது.வீட்டின் செல்லப்பிள்ளை லின்சன் .சிறுவயது முதல் பெண்களுடன் தான் அவன் அதிகமாக விளையாடுவான்,ஆண் நண்பர்கள் இல்லை என்றே சொல்லலாம். சகோதரிகளின் உடைகளை சிறுவயதில் அவனுக்கு அணிந்துவித்து அழகுபார்ப்பாள் தாயார்.அவனுக்கு அந்த ஆடைகள் மிகவும் பிடித்தமானதாகவிருந்தது.பாடசாலைக்கு செல்லும் வயதிலும் சகோதரிகளின் ஆடைகளை அணிந்து மகிழ்வான்,தாயார் சகோதரிகள் பேசி தடுத்தாலும் அவர்களுக்கு தெரியாமல் தனிமையில் அணிந்து மகிழ்வான். பாடசாலையிலும் அவன் பெண்களுடனே அதிகம் பழகினான் .இது பாடசாலை அதிபருக்கு ஒரு பிரச்சனையாக இருந்தது.அந்த சமுகம் ஆண்கள் பெண்களுடன் பழகுவதை ஒரு மதகு…
-
- 12 replies
- 2.6k views
-
-
. மாமா யாழ்ப்பாணம் வரும் பொழுதெல்லாம் சோமரின்ட சோமசெட் காரை வாடகைக்கு அமர்த்தி கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு போய்விடுவேன்.கடிதத்தில் எந்த புகையிரதத்தில் எத்தனை மணிக்கு வருவார் என்று விபரமாய் எழுதுவார் .ஆங்கிலத்தில்தான் கடிதம் எழுதுவார் .எனக்கு நேரமும் நாளும் தெரிந்தால் காணும் மிகுதி எல்லாத்தையும் அம்மா வாசிப்பார்am,pmஎன்று போடுவார் அது அந்த காலத்தில் விளங்குவது கொஞ்சம் கஸ்டமாயிருக்கும் அம்மாவும் ஓவ்வொரு முறையும் விளங்கப்படுத்துவா ஆனால் அடுத்த முறை மறந்துவிடுவேன், ஒருமாதிரி அம்மாவிடம் திட்டை வாங்கி அறிந்து கொள்வேன்' வருவதற்கு முதல் நாள் தந்தியும் அடிப்பார்.அவர் வருகிறார் என்றால் எங்களுக்கு எல்லாம் பெரிய சந்தோசம் .எனக்கு மட்டுமல்ல சோமர் மற்றும் சலவை தொழி…
-
- 9 replies
- 2.6k views
-
-
எட்டுமணிக்கு முந்திய காலைப்பொழுது. தினம் விரியும் காட்சிகள் அப்படியே விரிந்து கொண்டிருக்கின்றன. பத்து நிமிட நடையில் மூன்று நடைபாதை நித்திரைகொள்ளிகள். காட்டுக்குள் காட்டெருமைகள் குழாமாய் நீரிற்கு ஓடுவதைப்போல் அலுவலகம் நோக்கி மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நடைபாதை நித்திரைகொள்ளிகளை மிதித்துவிடக்கூடாது என்ற கவனத்தில் மேற்படி மூன்று இடங்களிலும்; காட்டருவி கிளையாய்ப் பிரிந்து பின் மறுபடி சேர்ந்து ஓடுவதைப்போல அலுவலக பயணிகள் விலகி இணைந்து நடந்து கொண்டிருந்தார்கள். நடைபாதை மனிதரை மிதித்துவிடக்கூடாது என்ற சிரத்தையில் நமக்கு அழுக்காகுமோ என்ற கவனமும் அவர்களிற்குள்ளாக இருந்ததாகவே பட்டது. அழுக்கு எனும்போது அது மனவெளியில் நடைபாதை மனிதன் சித்தரிக்கும் அந்தஸ்த்து இழப்பு சார்ந்து நிக…
-
- 5 replies
- 2.6k views
-
-
அக்கினிக்குஞ்சு இணையத்தில் இம்மாதம் வெளியாகியிருந்தது . அந்த மேளச் சத்தத்தின் அதிர்வில் கண்விழிக்கிறார் தேவர். டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண் டாடாண்டு டண் டண் டாடாண்டு டண் டண் டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண் டாடாண்டு டண் டண் டாடாண்டு டண் டண் பறை மேளத்துக்குச் சொல்லியிருக்கு எண்டல்லோ சொன்னவை. இதென்ன கர்ண கடூரமான ஒரு அடி. சத்தத்தைக் கேட்டால் பறை மேளச் சத்தம் போல இல்லையே. மெதுவாக யார் அடிக்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தார் தேவர். அதில் ஒன்றே ஒன்றுதான் பறை மேளம். மற்ற இரண்டும் வேறு வடிவத்தில் இந்தியாவில் கிந்திக் காரங்கள் அடிக்கிற மேளத்தின்ர வடிவில இருக்க, எல்லாமே இப்ப மாறிக்கொண்டேதான் வருகுது என்னைத் தவி…
-
- 17 replies
- 2.6k views
-
-
தகிக்கும் தீயடி நீ (கொஞ்சம் பெரிய சிறுகதை) ----------------- அவளை நீங்கள் ஒரு புத்தகக் கண்காட்சிலோ அல்லது ஒரு ரயில் பயணத்திலோ கண்டிருந்தால் அந்த நிமிடமே "என்னைக் கல்யாணம் செய்வாயா" என்று கேட்டு இருந்து இருப்பீர்கள். அல்லது கோவில் ஒன்றின் கர்ப்பக் கிரகத்தில் கண்டிருந்தால் அன்றே மொட்டை அடித்து இடுப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டி அனுதினமும் ஆராதிக்கும் ஒரு பக்தனாகவே மாறியிருப்பீர்கள் அல்லது ஒரு சிறு சந்தியில் கடந்து போகும் இன்னொரு வாகனத்தில் அவளைக் கண்டு இருந்திருந்தாள் அவள் வீடு எங்கு என்று தேடியே பித்துப் பிடித்து அலைந்து இருப்பீர்கள். ஆனால் நான் அவளைக் கண்டது இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அல்ல. மிகவும் குறுகிய சந்தொன்றின் இடது பக்கம் இருந்த ஒரு சிறு அடு…
-
- 27 replies
- 2.6k views
-
-
ஊமைக் கனவுகள் தோழி அவள் காத்திருந்தாள். காலம் முழுவதும் காத்திருக்கலாம் போன்ற உணர்வுடன் காத்திருந்தாள். இனியும் காத்திருப்பின் காத்திருந்த அர்த்தம் எல்லாம் பொய்த்து விடுமோ என்ற அச்சமேயில்லாமல் காத்திருந்தாள். நெஞ்சம் நிறைய ஆதங்கத்துடன் இருந்தவள் வயிற்றில் இவன் ஊருக்குப் போகிறான் என்ற செய்தி அரசல் புரசலாகக் காதில் விழுந்து தொலைத்தது. அவளின் காத்திருப்புக்கு ஒரு அர்த்தம் உண்டானது போல அவளது மனம் குதூகலித்தது. “அண்ணை, ஊருக்குப் பயணமாம் எண்டு கேள்விப்பட்டனான், மெய் தானே?" அவளுக்கேயுரிய மெல்லிய குரலில் அவள் கேட்டபோது அவனும் ஒளிவு மறைவில்லாமல் பதில் சொல்ல நேர்ந்தது. "ஏன் பவானி என்ன விசயம்? ஏதும் தேவையோ ஊரிலையிருந்து ?" மௌனமாய்ப் போனவளின் …
-
- 6 replies
- 2.6k views
-
-
அழைப்புமணி யின் சத்தம் கேட்டு போய் கதவை திறந்தேன் கனகர் வாசலில் நின்றார்.வெளிநாட்டு சம்பிராதயம் பார்க்காமல் பழகிற மனுசன் என்றால் எங்கன்ட கனகர்தான்.தொலைபேசியில் அழைத்து உங்கன்ட வீட்டை வரப்போகிறேன் என்று முன் அனுமதி கேட்டு கனகர் வீட்டை போற பழக்கம் எனக்கும் இல்லை அதேபோல கனகர் என்ட வீட்டை வாறதற்க்கும் முன்னனுமதி கேட்காமல் வருவார்.கனகர் ஒரு சமுகசேவகர் என்று சொல்லலாம் .இளைப்பாறிவிட்டார் அதனால் முழுநேர சமுக சேவையில் ஈடுபடுகிறார்.நானும் பகுதி நேரமாக அவருடன் சமுக சேவையில ஈடு படுவதுண்டு.சமுக சேவை என்றால் நீங்கள் பெரிதாக ஒன்றும் நினைக்க கூடாது.என்ட ஆககூடிய சமுக சேவை எங்கன்ட சனத்திற்க்கு ,பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு டிக்கட் விற்கிறதுதான். அதுவும் ஒரு சமூக சேவை என நானே தீர்ம…
-
- 16 replies
- 2.6k views
-
-
அருணாவுக்கு தம்பியாரை நினைக்கப் பாவமாக் கிடக்குதுதான். ஆனால் அவளும்தான் என்ன செய்யிறது. முப்பத்தஞ்சு வயதுதான் எண்டாலும் இப்பத்தே பெட்டையளுமெல்லே வடிவு, வயது எல்லாம் பாக்கிதுகள். என்ன தம்பிக்குக் கொஞ்சம் முன் மண்டை வழுக்கை. அதுக்காக எத்தின பெட்டையள் வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டாளவை. ஊரில அம்மாவைப் பாக்கச் சொன்னால் அவவும் என்ன காரணத்துக்கோ தெரியேல்ல இந்தா அந்தா எண்டு இழுத்தடிக்கிறா. கடைசீல என்ர தலை தான் உருளுது என சலித்துக்கொண்டாள். கிட்டத்தட்ட ஒரு வருடமாகப் போகிறது சந்திரனுக்கு பெண் பார்க்கத் தொடக்கி. இன்னும் பலன் தான் வரவில்லை. உள்ள கோயில் குருக்கள், புரோக்கர்களிடம் எல்லாம் சாதகத்தைக் குடுத்துத்தான் அருணா வைத்திருக்கிறாள். அவர்களும் பெண்களை புதிதாக உற்பத்தியா செய்ய முட…
-
- 15 replies
- 2.5k views
-
-
நாட்டில் இருந்து வெளிக்கிட்டு ஐரோப்பா வந்து ஒரு ஆறுமாதம் வெளிஉலகம் தெரியாது இருந்தன். அங்க போகாத இங்க போகாத அவனோட சேராத இவனோட சேராத அவங்கள் குறுப் பெடியள் இவனுகள் இவங்களுக்கு எதிர் பெடியள் எண்டு என்னை வெருட்டி வீட்டில இருத்தி போடுவாங்க. வீசா போடு அப்புறம் போய் வரலாம் எண்டு சொல்லி டிகெட் காசு போயிடும் எண்டு என்னை கூட்டி போறது இல்லை. சரி எண்டு வேலைக்கு போறவங்களுக்கு சமைச்சு கொடுப்பன். நல்லா தூள் அள்ளி போட்டு கறி வைப்பன். யாருக்கு தெரியும் அளவு.. என்ன சிவக்கவில்லை எண்டு போட்டு போட்டு கடைசியா கூடி போடும் பாவம் பேசி பேசி சாப்பிட்டு போவாங்கள் பெடியள்.. படமும் நான் பெரிதா பார்ப்பது இல்லை. அதோட இருந்த வீட்டில் தமிழ் சனல் வராது. வீட்டில் இருந்த ஒருத்தன் மட்டும் ஒரு சிறிய மடிக்…
-
- 11 replies
- 2.5k views
-
-
"அம்மா, நான் மிருதங்கம் பழகட்டே" "நீ என்ன மேளக்காரனின் பிள்ளையே ,போய் படிக்கிற அலுவலை பார்" "அது மேளம் இல்லை அம்மா ,மிருதங்கம்...நேற்று சரஸ்வதி பூஜைக்கு பள்ளிக்கூடத்தில் ஒருத்தர் வந்து ,வடிவா தலை எல்லாம் ஆட்டி அடிச்சவர், " "எனக்கு மேளத்திற்கும் மிருதங்கத்திற்கும் வித்தியாசம் தெரியும் ,நீ சொல்லித்தரத்தேவையில்லை" அம்மா மிருதங்கம் படிக்க வேண்டாம் என்று சொன்னபின்பு சுரேஸ் மிருதங்க கச்சேரி,மேளக்கச்சேரி போன்றவற்றின் ரசிகனாக மட்டும் இருந்தான். ஊர் கோவிலில் சுரேஸ் குடும்பத்திற்கும் ஒரு திருவிழா ஒதுகப்பட்டிருந்தது. சுரேஸின் உறவினர்கள் எல்லோரும் அந்த திருவிழாவின் உபயகாரர்கள். கோவில் மேளத்துடன் இன்னும் இரண்டு கூட்ட மேளம் அவர்களின் திருவிழா அன்று நடை பெறும் …
-
- 15 replies
- 2.5k views
-
-
வெள்ளைக்காரன் சொல்லி தந்த சொறி,தங்க்யூ என்ற இரண்டு வார்த்தைகள் எனக்கு இலகுவாக இருந்தது, அந்த வண்ணசிங்களத்தியுடன் மன்னிப்பு கேட்பதற்கு.பாக்கை மாற்றி கொண்டு அவளிடம் விடைபெற்றேன். வரிவிலக்கு கடையில் உற்சாகபாணம் இரண்டை வாங்கி சென்றால் உறவுகளுக்கு கொடுத்து நானும் இன்பம் காணலாம் என்ற எண்ணத்துடன் அருகிலிருந்த கடைக்குள் சென்று விலைகளை பார்த்துகொண்டிருக்கும் பொழுது எதை தெரிவுசெய்வது என்பது மிகவும் கடினமாக இருந்தது. குறைந்த விலையில் நிறைந்த இன்பம் காணக்கூடியதாக இரண்டு புட்டிகளை தெரிவுசெய்து இரண்டின் விலைகளையும் கூட்டி பார்த்தேன் அமெரிக்கன் டொலர் 50 வந்தது, அதை அவுஸ்ரேலியா டொலருக்கு மாற்றியபொழுது கிட்டதட்ட இரண்டு 50 டொலருக்கு துட்டு விழுந்தது. பொருட்களை தள்ளுவண்டி…
-
- 21 replies
- 2.5k views
-
-
நிகழ்ச்சி நிரலில் இல்லாத இந்த அவதியான இரவு எப்படி தனது கடிகாரத்துக்குள் நுழைந்தது என்று நினைத்தவன், இந்த இரவு மட்டுமா நிகழ்ந்த, நிகழுகின்ற காலமும் தான் நிகழ்ச்சி நிரலுக்குள் இல்லையே என, எண்ணியபடி மேசைமீதிருந்த கடிகாரத்தை எட்டிப் பார்த்தான் முகிலன். இன்னும் சரியாக ஆறுமணி நேரம். குளிருக்காக போர்த்தியிருந்த கம்பளிப் போர்வையை நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடையில் இறக்கி விட்டுக்கொண்டவன் இரவை எப்படி கடந்துவிடுவது என யோசித்தபடி, தலையணைக்கு கீழாக தடவி போனை எடுத்து பேஸ்புக்கை பார்க்கத்தொடங்கினான். மாட்டன் என்று சொல்லி இருக்கலாம். என்ர லீவுநாளில் நான் ஏன் போகணும். இவர் நெடுக இப்படிதான் விளையாடுறார். ஒரு வேலையை எடுத்துத் தந்துபோட்டு தான் நினைச்சநேரமெல்லாம் வா , போ …
-
- 3 replies
- 2.5k views
-
-
முன்பெல்லாம் வானத்தில் நட்சத்திரங்கள் தெரியாவிட்டாலும் கூட நீலமற்ற வெண்சாம்பற் புகைகளாய்த் தெரியும் வானத்தைப் பார்த்தபடி இருக்க அருணா எப்போதும் சலித்ததில்லை. எமது ஊர் போல் வவ்வால்களும் பறப்பதில்லைத்தான். ஒரு குருவி கூடவா பறக்கக் கூடாது என்னும் ஆதங்கம் இன்று அவளுக்கு எழத்தான் செய்தது. மனதில் எழுந்துள்ள சோர்வின் வெளிப்பாடுதானோ இது என்று அவள் மனம் எண்ணியது. அங்குகூட இப்போதெல்லாம் வவ்வால்கள் பறப்பதில்லை என்று அங்கு சென்றபோது பக்கத்து வீட்டு ஜீவா கூறியது நினைவில் வந்தது. எல்லாமே கொஞ்சக் காலத்துக்குத் தானோ? மனிதர்கள் போல் பறவைகளும் மாற்றிடம் தேடிக்கொண்டு செல்லவாரம்பித்து விட்டன என எண்ணிக்கொண்டாள். நிர்மலன் இப்பொழுதெல்லாம் நன்றாகவே மாறிவிட்டான். வேலை முடிந்து ஆவலாக வீடு வருபவன…
-
- 23 replies
- 2.5k views
-
-
புத்தக வெளியீடு என்ற விளம்பரத்தை இணையத்தில பார்த்தவுடன் அதில் கலந்துகொள்வது எனமுடிவெடுத்தேன். மெல்பேர்னிலிருந்து எழுத்தாளர்கள் வேறு பங்குபற்றுகிறார்கள் என எழுதியிருந்தார்கள் எனவே நிச்சயம் போகவேணும் என தீர்மானித்தேன். அந்த நாளும் வந்தது. கதிரவன் இளைபாறும் நேரம். மனிதர்களுக்கு அடுத்த நாள் ஒய்வு. வாயில் சுவிங்கத்தை போட்டு மென்றுகொண்டு பின்வரிசையில் போய் உட்கார்ந்தேன். முற்போக்கு பிற்போக்கு, நடுபோக்கு எழுத்தாளர்கள் எல்லாம் மேடையில் இருந்தார்கள். புத்தக வெளியீட்டு வைபவம் தொடங்கியது. வரவேற்புரை, மெளனஞ்சலி என சம்பிராதய சடங்குகள் முடிவடைந்த பின்பு, இப்பொழுது மெல்பேர்னிலிருந்து வந்த முற்போக்கு எழுத்தாளர் ,கவிஞர், நாடக நடிகர் ,பேச்சாளர் .சு.கா.....பேசுவார் என் அறிவிப்பாளர்…
-
- 17 replies
- 2.5k views
-
-
பக்கத்து வீட்டு அழகிய அரக்கி. புதிதாக குடிவந்த எனக்கு பக்கத்து வீட்டுக்காரர்களின் அறிமுகம் இல்லாத காலமது. பக்கத்து வீட்டை ஒரு காரில் சிலர் வந்திறங்கியது எனது கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் சில நிமிடங்களில் பக்கத்து வீட்டில் இருந்து வந்த "மியாவ்" என்னை நிலை குலைத்தது. அந்தக்குரல் அவ்வளவு இனிமை. அது பூனையில்லை, பூனையைக் கூப்பிடும் ஒரு பெண்ணின் குரல். குரலே இப்படியென்றால் அவள் எப்படி இருப்பாள்? மனமும் அலையத் தொடங்கியது. அவள் வீட்டில் இருக்கும் போது எப்போதும் கதைத்துக் கொண்டிருப்பாள். குரல் என்னைக் கொல்லும். எனக்கோ எப்படியாவது அவளைப் பார்த்து விட ஆசை. நடுவே மதில் எட்டிப் பார்த்தால் ஏதாவது ஏடாகூடமாகி விடுமோ என்ற பயம். அப்படியும் வீட்டுக்குள்ளிருந்து யன்னலில…
-
- 4 replies
- 2.5k views
-
-
" பார்த்திபன் " இன்று உங்கள் பிறந்தநாள். 24 வயது..., இன்னும் என் கைகளுக்குள் குழந்தையாகவே இருக்கிறாய். கருவிலிருந்து இந்த வினாடி வரையும் நீ போராட்டக்காரனாகவே இருக்கிறாய். உன் குழந்தைக் காலம் உனக்கு மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை. அம்மாவுக்காக அம்மாவோடு கூட வந்த குழந்தை நீ. அம்மா அழக்கூடாது என்பதற்காகவே எல்லாச் சுமைகளையும் என்னோடு சுமந்தவன். இலகுவாய் கிடைக்க வேண்டியவற்றையும் நீ போராடித்தான் பெற்றாய். நாங்கள் கடந்து வந்த தடைகள் கண்ணீர்ச் சுவடுகள் நீங்கும் காலம் 2019ம் ஆண்டாக நம்பியிருக்…
-
- 10 replies
- 2.5k views
- 1 follower
-
-
சட்டி (நிமிடக்கதை(யல்ல)) பூனகரியை அண்மித்த யுத்தம் கோரத்தாண்டவமாடியபோது அவளது ஊரும் இடம்பெயரலானது. கணவன் கடந்த ஆண்டு போர்முனையில் வித்தாகிவிட இருபிள்ளைகளோடு இடர்களைத்தாங்கித் தனது பிள்ளைகளுக்காக வாழ்ந்தவள் வினோதா. அமைதியிழந்த சூழலில் உணவோ நித்திரையோ இல்லாது மக்களோடு மக்களாக நகர்வதும் ஒதுங்குவதும் பின் இன்னொரு இடம் நோக்கி நகர்வதுமாய் இன்று புதுக்குடியிருப்பிலே. எங்கும் மரணமும் பட்டினியும். பணமிருந்தாலும் பசியாற வழியில்லை. சற்று ஓய்வாக இருக்க எண்ணினாலும் முடியாது. பிள்ளைகள் பசியால் துடிக்க என்ன …
-
- 4 replies
- 2.5k views
-