Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. பெறுபேறு /பெரும்பேறு. ஈன்றபொழுதிலும்....பின்னர் அவர்களே இன்பமென்று இருந்த பொழுதுகளிலும்... என்னை தாங்கும் வேரென நிறைந்த பொழுதிலும்..பெரிதாய் இருக்கிறது இன்று. அமுதாய் இனிக்கிறது. என் பிள்ளைகளின் எதிர்காலம் எனக்கு ஒரு கனவு..அக்கறை..கடமை என்பதும் என்னை பழியுரைத்தோர்..எனது வீழ்ச்சி விரும்புவோர் முன்னே ஒரு சவால். வைராக்கியம். என்னை இந்த உலகிற்கு கொண்டுவந்த அம்மாவும்..என் பிள்ளைகள் உலகிற்கு வர காரணமானவனும் கூட ' எங்க உன்ர பிள்ளைகள் படிக்கிற கெட்டிதனத்தை பார்ப்பம்...என்றதுவும். தனியே நீ என்ன சாதிப்பாய். ...அடங்கி போ..என்று மிரட்டியவர்களிற்கும் முன்னே செயல் மூலமான பதிலாக ...எனது இத்தனை நாள் தவத்திற்கு வரம் கிடைத்தது. இன்றைய எனது நாட்குறி…

    • 19 replies
    • 3.6k views
  2. பேச்சியம்மன்-சிறுகதை-சாத்திரி நடு இணைய சஞ்சிகைக்காக .. எங்கள் ஊரின் பண்டதரிப்பு போகும் வழியில் ஒரு சிறிய ஒழுங்கையில் இறங்கி நடந்து மீண்டும் ஒரு கையொழுங்கையால் நடந்தால் ஒதுக்குப்புறமாக ஒருபக்கம் தோட்ட காணிகளையும் மறுபக்கம் பனங்கூடலையும் கொண்ட அக்கம் பக்கம் வீடுகளற்ற பகுதியில் பனங்கூடலுக்கு நடுவில் ஒரு வேப்பமரத்தை பின்னிப்பிணைந்த பிரமாண்டமான ஆலமரம். அவற்றின் கிளைகள் பிரியுமிடத்தில் நடுவே ஒரு பனை மரம் வேறு வளர்ந்திருந்தது. அந்த மும்மரத்தின் அடியில்தான் பேச்சியம்மன் கோவில். அதை யார் எப்போ கட்டினார்கள் என்கிற விபரம் எதுவும் ஊரில் யாருக்கும் தெரியாது. ஒருவர் மட்டும் குனிந்துதான் உள்ளே போகலாம். அவ்வளவு சிறிய கோவில். ராசையா பூசாரி மட்டுமே…

    • 17 replies
    • 6.5k views
  3. எனது கடைக்கு நீண்ட காலமாக வரும் ஒரு லண்டன் காரன் பெயர் யோன். அவரின் தலை முடி கருப்பாக இருக்கும். அவர் கலப்பினமாக இருக்கலாம் என்று எண்ணி நீ எந்த நாட்டவன் என்று கேட்டுவைக்க நான் பிரிட்டிஷ். இங்குதான் பிறந்து வளர்ந்தேன் என்றதுடன் மேற்கொண்டு அவனை நான் அவன் யார் எவர் என்று கேட்பதில்லை. அவன் தூரத்தில் வரும்போதே ஒரு நாற்றம் என் மூக்கை அடைக்கச் செய்யும். நான் அவன் கடையில் நிற்கும் நேரம் அத்தனையும் எவ்வளவு விரைவில் அவனை அனுப்பிவிட முடியுமோ அத்தனை விரைவாக அணிப்புவேன். குடிவகைகளின் நாற்றமோ அன்றி குளிக்காமல் இருப்பவரின் நாற்றமோ இல்லை. பிணங்களின் வாடைபோல் அது இருக்கும். எனவே அவனைப் பார்க்கும் நேரம் எல்லாம் வழியில் தென்படும் சவக்காலைகள் எல்லாம் என் கண்முன்னே வந்து போகும். அவனிடம் எ…

  4. 2000ம் ஆண்டுக்கு முதலான யாழ்ப்பாணம், பல பொருட்கள் பொருளாதார தடை காரணமாக யாழ்ப்பாணத்து வராத காலகட்டம், பண்டிகைக்காலங்களில கொழுத்தும் "சீன வெடி" கூட அந்த காலத்தில தடைசெய்யப்பட்ட ஒன்று . அதால ,பண்டிகைகளுக்கு வெடி நாங்களே செய்யவேண்டிய கட்டாயம் , அப்ப எங்களுக்கு வெடி செய்ய தேவையான பொருட்கள் எண்டு பார்த்தால் , சைக்கிள் ரியூப்பில இருக்கிற வால்கட்டை (இது பேச்சுவழக்கு ,ஆங்கிலத்தின்ர VALVE எண்டததான் சொல்லுறது) நெருப்பெட்டி வால்கட்டைக்க பட்டும்படாமலும் போய்வரக்கூடிய ஆணி பொதுவாக ,கருக்கு மட்டைலயோ ,சைக்கிள்ட முன் பிறேக் கட்டை கம்பியிலயோதான் வால்கட்டைய பூட்டுறது ,கருக்குமட்டை கொஞ்சம் பாதுகாப்பு எண்டதால அதில செய்தால் வீட்டில கொஞ்சமா பேச்சுவிழும். அதுக்குள்ள குட்டி வால்…

  5. பொட்டல் காட்டில் ஒரு கதை. அது ஒரு பொட்டல் காடு.ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.ஒரு ஒற்றையடிப் பாதை. தினசரி ஆட்கள் நடந்து நடந்து, மிதிவண்டிகளும் பிரயாணப்பட்டு ஒரு பாம்பின் முதுகுபோல் நீண்டு கிடந்தது.எப்போதும் அந்த காட்டு வெளி ஆளரவமற்றே இருக்கும். விதம் விதமான பறவைகள் மற்றும் பாம்பு, கீரி, ஓநாய்,நாரி, முயல் என்று சிறுசிறு விலங்கினங்களும் உண்டு. காவேரி தினமும் அந்தப் பாதையால்தான் பக்கத்து ஊருக்கு வேலைக்கு போய் வருவதுண்டு. அப்படி போய்வரும் நேரங்களில் ஒரு சிறு பையில் நொறுக்குத் தீனிகள் (பொரி ,கடலை,அரிசி இப்படி ஏதாவது)கொண்டு செல்வாள். அந்த பொட்டல் காடு வந்ததும் கொண்டுவரும் நொறுக்குத் தீனியை கொரிக்க தொடங்குவாள்.அவள் கையில் இருந்து சிந்துவதை சில குருவிகள் பொறு…

    • 7 replies
    • 4.6k views
  6. பொன்னம்மா அத்தையைத் தெரியாதவர் எம்மூரில் இல்லை. ஆனாலும் அவர் பற்றி விபரம் கேட்டால் யாருக்கும் சொல்லத்தெரிவதில்லை. உண்மையில் அவர் எனக்கு அத்தை கிடையாது. என் பெரியம்மாவின் கணவரின் தங்கை அவர். பெரியம்மாவின் பிள்ளைகள் அத்தை என்று கூப்பிடுவதனால் நாங்களும் அப்படியே கூப்பிட்டுப் பழகிவிட்டது. கூப்பிடுவது மட்டுமேயன்றி அவருக்கும் எமக்குமான நெருக்கமோ அன்பான பார்வையோ கூட என்றும் இருந்ததில்லை. என் வீட்டிலிருந்து இரண்டாவது வீடு அவர்களது எனினும் எண்ணிக்கை நினைவில் உள்ள நாட்களே நான் அங்கு செல்ல நேர்ந்திருக்கிறது. அவர்கள் வீடும் கூட ஒரு ஒதுக்குப்புறமாக இருந்ததும் வீட்டைச் சுற்றி யாரும் இனி வைத்தும் பார்க்க முடியாதவாறு சுற்றிவர மதிலும் இருந்ததாலுமோ என்னவோ நான் மட்டுமல்ல மற்றையவர்கள் கூ…

  7. அவர் என்னைக் கடந்து போகும் போது, அவரை எங்கேயோ பார்த்த ஞாபகம் வந்தது. நன்றாகத் தெரிந்த முகம் ஆனால் சட்டென்று அவர் யார், அவர் பெயர் என்ன என்பதை மூளை அறிவிக்க மறுத்து விட்டது. ஒருவேளை மூளைக்குத் தேவையான ஒட்சிசன் கிடைக்கவில்லை என்று அது கோவித்துக் கொண்டதா? தெரியவில்லை. தெரிந்த ஒருவரின் மாமியாரின் அடக்க நிகழ்வு. அங்கிருந்தவர்களில் பலரை எனக்குத் தெரியவில்லை. நாங்கள்தானே பார் எல்லாம் பரந்து வாழ்கிறோம். எந்த நாட்டில் எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறார்கள் என்று எப்படித் தெரியும். ஆனால் குறிப்பாக அவரை மட்டும் எனக்குத் தெரிந்திருக்கிறது. என்னைக் கடந்து போகும் போது அவர் என்னைப் பார்த்த பார்வையில் அவருக்கு என்னைத் தெரிந்திருக்கிறது என்பது புரிந்தது. அவரிடம் போய், “நீங்கள் யார்…

    • 13 replies
    • 1.4k views
  8. ஜெயசுக்குறு ராணுவ நடவடிக்கை நடைபெற்ற காலம் வன்னியின் மேற்கு கிழக்கை கிழமைக்கு கிழமை மாறி மாறி திரிந்தவண்ணம் இருந்தோம்... எமது அணி விஷேட வேவு பிரிவு என்பதால் நாளாந்தம் எதிரி நிலை கண்காணித்து அறிக்கை கொடுக்க வேண்டிய பணியாக இருந்தது.. எமக்கு என்று ஒரு காப்பரண் எல்லை கிடையாது. வன்னியின் கிழக்கு பகுதியில் நின்ற எமக்கு அழைப்பு உடனும் கிளம்பி வரும்படி.. இரவுப் பயணம்.. வந்தவேகத்தில் நித்திரை தூக்கம் நல்லாய் உறங்கீட்டம்.. ஆனாலும் காதுகளில் பெண்களின் குரல் கூடுதால கேட்டபடி இருந்தது.. அதிகாலை விடியலை தேட கண்விழித்து பார்த்து பொறுப்பாளருக்கு தொடர்பை எடுத்தோம்.. எங்க வரணும்..? அவர் நீங்க நில்லுங்க நான் வந்து கூடி வாறன் என் பதில் சொல்லி தொடர்பை துண்டித்தார் . சரி எழும்பி முகம் கழுவ போவ…

  9. மப்பும் மந்தாரமான வானம் , மழை மேகங்கள் கருக்கட்டி கதிரவனை மறைக்க, பேறு கால தாய் போல் வீங்கிப்பெருத்திருக்கும் முகில்கள் எப்போதும் மீண்டும் மழை உடைத்துக் கொண்டு கொட்டலாம் என்கின்ற நிலைமை..... இடைக்கிடை மேகங்கள் மோதி காதைக்கிழிக்கும் இடியும் மின்னலுமான காலநிலை .... கடந்த கிழமை தொடக்கம் பெய்த மழையில் நிரம்பிய குளத்துக்குள் இருந்து தவளைகள் போடும் சத்தம் எரிச்சலை தந்து கொண்டிருந்தது....... வீதியால் செல்லும் மாட்டு வண்டியில் கொழுவியிருக்கும் அரிக்கன் விளக்கு வெளிச்சம் தவிர வேறோன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை.... A9 கண்டி வீதி ஆள் அரவாரமற்று அமைதியாய் கிடந்தது..... தனித்திருக்கும் யாரையும் பயம் கொள்ளச்செய்யும் கும்மிருட்டு மணி பின்னேரம் ஆறைத் தாண்டி இருக்காத…

    • 2 replies
    • 2.3k views
  10. 2009 யுத்தம் முடிவுக்கு வருகிறது. அப்போது தமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற பொலிசில் சேருமாறு தமிழ் இளைஞர்,, யுவதிகளுக்கு இலங்கை முழுவதும் அழைப்பு விடுகிறது அரசாங்கம். தரம் 11 சாதாரண தரம் படித்தால் மட்டும் போதுமென அறிவித்தல் கொடுக்கிறது அரசு. யுத்தகாலத்தில் சுடுவதற்கு மட்டும் வெறும் 3 மாத காலம் பயிற்ச்சி கொடுத்தார்கள் அதில் அநேகமானவர்கள் ஊர்காவல்படையில் இருந்த முஸ்லீம்களும் , சிங்களவர்களுமே அதிகமாக இணைந்தார்கள் காரணம் சிலருக்கு சம்பளம் சிலருக்கு கட்டாயம் என பொலிசாராக இணைந்தார்கள். பொலிஸ் சேவையில் மிகுந்த ஆர்வமுள்ள எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது ஆனால் வீட்டில் யாரும் சம்மதிக்கவில்லை நான் பொலிசில் இணைய யாரும் விரும்பவில்லை. காரணம் இந்த அரசாங்கம் படைவீரர்களைக் கொண்டு தமிழ்…

  11. Started by arjun,

    திரு திருமதி செல்வன் அடுத்த வீடு பார்க்க தொடங்கிவிட்டார்கள். கையில் ஒரு சூட்கேசுடன் கனடா வந்து இறங்கிய செல்வனுக்கும் மனைவிக்கும் முதல் இருப்பிடம் நண்பனின் நிலக்கீழ் அறைதான் .சில மாதங்களில் செல்வனுக்கு ஒரு மரத்தொழிற்சாலையில் வேலை கிடைத்துவிட்டது . மனைவி நித்தியா கணக்கியல் படிக்க பாடசாலை செல்ல தொடங்கியிருந்தார் . கையில் கொஞ்சம் காசு சேர சூரியஒளி படாத அந்த இடத்தை விட்டு ஒரு அப்பார்மென்ட் எடுத்தது போய்விட்டார்கள் . நித்தியாவிற்கு வங்கியில் வேலை கிடைத்துவிட்டது ,செல்வனுக்கு வருமானமும் சற்று அதிகரிக்க சொந்தமாக வீடு வாங்கும் ஆசை வந்து நித்தியா வேலை செய்யும் வங்கிக்கு அருகில் மூன்று அறைகள் கொண்ட ஒரு சிறிய வீட்டை வாங்கிவிட்டார்கள் . இருவருக்கும் நிரந்தர வேலை ,நல்ல ச…

    • 20 replies
    • 2.2k views
  12. ( இப்பதிவு வாலிபவயதுக் குறும்பு பாகம் 6 ன் தொடர்ச்சியாகும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=138217 ) அவன் அம்மாவும், மஞ்சுவின் அம்மாவும் அடைப்பில்லாத அந்த வேலிநடுவில் இருந்த வேப்பமரத்தடி வேரில் அமர்ந்து ஊர்க்கதை, உறவுக்கதை பேசிக்கொண்டிருக்கும் போது, அவனும் மஞ்சுவும் மணலில் வரம்புகட்டிக் கீச்சு மாச்சுத் தம்பளம் விளையாடிய காலத்திலிருந்து, இனிப்புக்கும், பலகாரத்திற்கும் அடிபடுவதும், கோள்சொல்லி அவள் அவனை அடிவாங்க வைத்து ரசிப்பதும், பாசத்தோடு காக்காக் கடி கடித்து அவள் அவனுக்கு மிட்டாய் ஊட்டிவிடுவதும், பூப்பறித்து அவன் அவள் தலையில்சூட்டி அழகுபார்ப்பதும்,, அந்த இரு தாய்மார்களையும், பூரிப்படைய வைக்கத்தான் செய்தது. அவர்கள் உள்ளங்களில் இனிமையான கற்பனைகள் வளர்ந்…

    • 10 replies
    • 1.8k views
  13. "உண்மையாகவா! அவள் உன்னைக் காதலிக்கிறாளாடா..?" கேட்ட நண்பர்களின் முகத்தில் அவநம்பிக்கை, ஆச்சரியம், அதிசயம், அதற்கும் மேலாக அது பெரும் வியப்பாக இருந்தது. "சும்மா கதைவிடாதை." "சத்தியமா மச்சான், வேண்டுமென்றால் இன்றைக்கே புறூவ்பண்ணிக் காட்டவா." அவன் காதல் மன்னனின் அழகு கொண்டவன். எங்கள் நண்பன்தான். ஆனாலும்! உயிரோடு ஒட்டிய நண்பனல்ல!!. காரணம்! அவன் நடத்தையில் பெண்கள் சம்பந்தப்பட்ட சந்தேகம்.... ஆனாலும் அவன் இருக்குமிடம் கலகலப்பும் சிரிப்புமாகத் திகழ்வதாலும், கூடப்படிப்பதாலும், நண்பனாகியிருந்தான். இவனையா அந்தப் பேரழகி காதலிக்கிறாள்!!. பெரும் பணமும், படிப்பும் நிறைந்த குடும்பத்தில் பிறந்த அவள் எங்கே?. இவன் எங்கே? இவனைப்பற்றிய உண்மை அறியாமலா அவள் இவனைக் காதலிக்கிறாள்..!!. காதலுக்…

    • 4 replies
    • 1.5k views
  14. மதியரசி குரு.சதாசிவம் நான் இந்தப் பாடசாலைக்கு ஆசிரியையாக மாற்றலாகி வந்து மூன்று நாட்கள்தான்,ஆகியிருந்தது..பாடசாலைக் கட்டடத்தின் கலையம்சம்மிக்க அழகும், அமைப்பும் பார்ப்பதற்குப் பிரமிப்பாயிருந்தது. சக ஆசிரியர்களும் எனது சேவை அனுபவம் கருதி நெருக்கத்திலும் ஒரு கண்ணியத்தை கடைப்பிடித்தது மகிழ்ச்சியைத் தந்தது. இங்கு“மதியரசி” என்ற பெயர் ஆசிரியர்கள் மத்தியில் சாதாரணமாகப் பேசப்படுவதும் எல்லோராலும் புரிந்துகொள்ளப்படுவதும் இவள் யாரென்று அறியவேண்டுமென்ற ஆவலை தூண்டிவிட்டது.முதலில் பாடசாலையின் எழுது வினைஞராகவோ அல்லது சிற்றூளியராகவோ இருக்கலாமென்றே நினைத்தேன்.அந்த இரு பதவி நிலைகளிலும்…

  15. வழமைபோலவே காலைக் கதிரவன் குதூகலத்துடன் தன் கதிர்பரப்பிப் பூமியின் வெப்பத்தை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டான். இரண்டு நாட்கள் பெய்த கடும் மழையில் நிலமும் மரங்கள் செடிகளும் மகிழ்வுடன் காலை வெய்யிலை வரவேற்றுக் குதூகலிக்க ஜீவாவின் மனம் மட்டும் மகிழ்விழந்து போர்களமாகி எதிரும் புதிருமான நிகழ்வுகளை அசைபோட்டு சலிப்படைந்திருந்தது. இனியும் நான் இப்படியே இருக்கமுடியாது. எனக்கும் ஒரு வாழ்வு இருக்கிறது. கானல் நீரை நம்பி எத்தனை நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் காத்திருப்பது?? பண்பாடு கலாச்சாரம் எல்லாம் முக்கியம் தான். ஆனால் அவற்றுக்காக என் வாழ்க்கையை நான் வாழாது ஏன் சமூகத்துக்குப் பயந்து காலத்தை வீணடிக்கவேண்டும். இப்பவே வயது முப்பதாகிவிட்டது அரைவாசி இளமையைத் தொலைத்தாகிவிட்டது. இனியும் அம்மா, அ…

  16. அழகான அலங்காரத்துடன், உதட்டோரம் புன்னகை மாறாமல், அமைதியாக தூங்கும் தேவதையாக அவள். அவனைப் பார்க்கின்றாள். அவளையே பார்த்தபடி நின்றவனின் இறுகிய முகத்தில் ஏதோ தேடுகிறாள். இறுதி நிமிடங்கள், இப்போதாவது ஒரு வார்த்தை கணவனாக வாய்விட்டுச்சொல்வாயா? இத்தனை வருடங்கள் நீ எனக்குச் காட்ட மறந்த காதலை, நட்பை, சொல்லமறந்த நன்றிகளை, கேட்க மறுத்த மன்னிப்புகளை..... கடைசித் துளிகள், கைகள் நடுங்க, இதயம் கனக்க, அவன் அந்தப் பொத்தானை அழுத்துகிறான். காதலின்றி, நட்பின்றி, வாழாத வாழ்கையை வாழ்ந்த வலியுடன் அவள் காற்றில் கரைந்து காணாமல்ப் போய்விட்டாள். இதோ மனசுக்குள் மட்டும் அவன் நேசித்த(?) அவளை, ஒரு பிடியாக்கி மின்சாரம் கைகளில் தர, முதல் முறைய…

    • 15 replies
    • 2.1k views
  17. மனசெல்லாம் மழையே......... பஞ்சுப் பொதியாய் வானப்பரப்பெங்கும் வியாபித்து பரவிக் கிடக்கும் மேகத்திரையைக் கிழித்தபடி விமானம் பியர்சன் விமானநிலையத்திலிருந்து மேலெழந்து வேகமெடுத்து ஓடத்தொடங்கிய நாழிகையில் விமானத்தின் ஐன்னலோர இருக்கையில் விமானப்பட்டியை விலக்கியபடி அமர்ந்து கண்களை மூடியபடிசாய்ந்த மதியின் எண்ணங்கள் பின்னோக்கி வேகமெடுத்து ஓடத்தொடங்கின. ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்தி ஐந்து வருடங்களின் பின் சந்திக்கப்போகும் தன் சிந்தையில் நிறைந்த சிநேகிதனை வட்டமிட்டது மனம். இமைச்சாளரங்கள் மூடிக்கொள்ள இதயம் மாத்திரம் இயங்கத் தொடங்கியது. கலாச்சார ஈரம் குலையாத அந்தக் குட்டிக் கிராமத்தில் பண்பான தந்தைக்கும் அன்பான அன்னைக்கும் மூத்த மகளாகப் பிறந்தவள் மதி .'அக்கா அக்கா' என்று அவளைச் ச…

  18. சியாமளாவுக்கு இப்பொழுதெல்லாம் இதயம் அடிக்கடி வேகாமாக்த் துடிக்கிறது. எத்தனைதான் மனத்தைக் கட்டுப்படுத்த முயன்றாலும் முடியவே இல்லை. கண்களை கண்ணீர் மறைக்க, தன்னிலையை எண்ணித் தானே கழிவிரக்கம் கொண்டாள். என்னால் இந்த வேதனையைத் தாங்க முடியவில்லையே. யாரிடம் போய் இதைச் சொல்வது. யார் என்றாலும் எனக்குக் காறித் துப்புவார்களே. ஏன் நான் இப்படி ஆனேன் என எண்ணியே மனது குமைந்ததில் தலைவலி இன்னும் அதிகமாகியதே அன்றிக் குறையவில்லை. எல்லோரும் போல் என் வாழ்வும் நன்றாகத்தானே போய்க்கொண்டிருந்தது. யார் கண் பட்டதனால் இப்படி ஆனதோ என எண்ணியவளின் மனம், தன் கணவனையும் இரண்டு பிள்ளைகளையும் எண்ணிப் பார்த்தது. கணவன் தனக்கு என்ன குறை வைத்தார்?. என் விருப்பம் எல்லாம் நிறைவேறியதே அன்றி ஒருநாளாகிலும் நிறைவேற…

  19. இரவு முழுவதும் அவள் தூங்கினாளா என்று அவளுக்கே தெரியவில்லை. ம் ..... கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு மூன்று மணி நேரம் தூங் கியிருப்பாளா??? நீண்ட நாட்களின் பின் மனவருத்தம், மட்டற்ற மகிழ்ச்சி,எல்லையில்லா நின்மதி என மாறி மாறி அவளை அலைக்களித்தபடிதான் அந்த இரவு நகர்ந்தது. ஆனாலும் அவளின் மனம் இத்தனை சீக்கிரம் இவ்வளவு தெளிவடையும் என்று அவளே நினைத்துப் பார்க்கவில்லை. கடந்த காலங்களை எண்ணிப்பார்த்தபோது வரிசையாய் எல்லாம் வந்து போயின. என்னிடம் என்னதான் இல்லை என்று இவ்வளவு நாட்கள் இத்தனை கேவலப்பட்டேன் என்று எண்ணியபோது பெருமூச்சு ஒன்றும் நீண்டதாய் வந்தது. எல்லாம் விதியின் செயல்தான் அன்றி வேறென்ன என்று மனம் நின்மதி அடைந்தது. அவனுக்கும் அவளுக்குமான நெருக்கம், இல்லை நெருக்கம் என்ற…

  20. மனம் சாய்ந்து போனால்........ 'டேய் மச்சான் ஏதும் பிரச்சினை வராது தானே?' ஜந்தாவது தடவையாக கண்ணனிடமிருந்து கேட்கப்பட்ட அதே கேள்வியால் சிறிது எரிச்சலடைந்த ரமேஸ், 'டேய் சும்மா இரடா, இதோட எத்தனையாவது தடவையா இதே கேள்வியை கேட்பாய்?' என்றான் சலிப்புடன், 'உனக்கென்னடா? எனக்கு பயமா இருக்கடா ' 'பயமா, இது எப்பவோ இருந்திருக்க வேண்டியது, இப்ப பயந்தா வேலைக்காகாது. மாப்பிளையா இலட்சணமா இரு' 'சொன்ன மாதிரி கவிதா வந்திருவாளாடா?' 'இங்க பாரடா, நீயும் ரென்சனாகி எங்களையும் ரென்சனாக்காத, ஆனந் வரும்போது கவிதாவோடதான் வருவான்' 'எதுக்கும் ஒருக்கா போன் பண்ணிப் பாரடா' கண்ணன் முள்மேல் நிற்பதுபோல் அவஸ்தைப்படுவதை அவதானித்த ரமேஸ் 'சரி சரி நான் போன் பண்ணுறன் நீ ரென்சனாகாத' 'டேய் ஆனந் என்னடா? எங்…

  21. மனவலி யாத்திரை.....! (ஒரு போராளியின் பிரிவின் நினைவு) இக்கதை 19.03.03 எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 11 வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்) அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அவனது குரல் அழைக்கிறது. விழிப்புலனில் சிக்காத முகம் ஆனால் அந்தக்குரல் …

    • 4 replies
    • 921 views
  22. Thursday, April 20, 2017 மனவெளி அலைவு (சாந்தி நேசக்கரம்) அவனுக்கும் அவளுக்குமான உறவு உரையாடல்கள் மூலம் உருவாகி வளர்ந்து விருட்சமாகி நிற்கிறது. எந்த விடயங்களைப் பற்றி அவர்கள் பேசிக்கொள்ளவில்லை ? அவர்களுக்கிடையே பேசாப்பொருள் என்று எதுவுமே இருந்ததில்லை. உரையாடலில் ஒருநாள்....., நாங்கள் முற்பிறப்பில ஒண்டாப் பிறந்திருக்கிறம் போல....அதுதான் இந்தப் பிறப்பிலயும் தொடருது. என்றான் அவன். முற்பிறப்பெல்லாம் நம்பிறியேடா ? இது அவள். தெரியேல்ல..., ஆனால் உங்களுக்கும் எனக்குமான உறவு நுற்றாண்டுகளுக்கு மேல இருந்திருக்கு. நீங்கள் அப்…

    • 4 replies
    • 1.9k views
  23. மரங்கள்.! (குறுங்கதை) பலாமரம் ஒன்று வேலிக்கு அப்பால் நின்ற புளியமரத்தை ஏளனமாகப் பார்த்து என்னைபோல் இனிமையான பழம் உன்னால் தரமுடியுமா என்றது. இதைக்கேட்ட புளிய மரம் இயற்கையோடு நாம் வாழ்ந்த காலத்தில் இப்படி எந்தமரமும் கேட்டதில்லையே என மனதுக்குள் யோசித்தது. பின் சிரித்துவிட்டு சொன்னது என்னைப் போல புளிக்கின்ற பழமும் உன்னாலும் கொடுக்க முடியாது.ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்குதென்று ஏற்றுக்கொள். பழங்களில் நீதான் பெரியவன் இனிப்பானவன் என்று எண்ணிக்கொண்டு பெருமை பேசாதே என்றது. மனிதர்கள் போல் உயர்வு தாழ்வு போட்டி பொறாமை இருக்கக் கூடாதென்று எட்டத்தில் நின்ற வேப்பமரம் பிசின் வடிய கத்தியது. எங்கள் காலம் என்ன ஆகுமோ என ஏங்கி அசைந்தன சுற்றிநின்ற சிறுமரக்கூட்டம்.மரபணு மாற…

  24. Started by arjun,

    மரணதேவன் பூட்டிய கடைக்கதவை திரும்ப இழுத்துப்பார்த்து விட்டு தெருவில் இறங்க வழக்கக்தை விட இன்று பிந்திவிட்டது என்பதை உணர்ந்தான் மதி .கடை பூட்டும் நேரம் வந்து வரிசையில் நின்ற அந்த நாலு கஸ்டமர்களையும் மனதில் திட்டிக்கொண்டு இரவு பத்து நாற்பது மணி பஸ்சும் போயிருக்கும் . இனி எப்படியும் அடுத்த பஸ் வர பதினோன்றாகும் சப்பேயிற்கு பத்து நிமிட நடைதான் ஆனால் இந்த நேரம் இருட்டில் நடப்பதை விட பஸ்சிற்கு காத்திருப்பது பாதுகாப்பனது என்று எவருமற்ற அந்த பஸ் நிலையத்தில் ஒதுங்குகின்றான் . தினமும் பகலில் எந்தவொரு பய உணர்வும் இல்லாமல் உலா வரும் இந்த இடம் இரவானதும் வேறு ஒரு கோலம் பூண்டுவிடுகின்றது. இன்று பகல் கூட மதிய சாப்பாடு வாங்க கடையை பூட்டிவிட்டு…

  25. கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. வானத்திலே வெடித்து ஒளியை பாச்சிய பரா வெளிச்ச குண்டுகள் மங்கலாக தெரிய தொடங்கியது. சிங்கள குரல்கள் கிட்டவாக கேட்கிறது. இன்னும் ஒரு நிமிடத்துக்காவது எனது உடலில் பலத்தை கொடு என்று நான் என்றைக்குமே கும்பிடாத இறைவனிடம் கேட்கிறேன். அதிகாலை இரண்டுமணிக்கு அண்ணளவாக தொடங்கிய சண்டை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழரின் விடிவுக்கான வாழ்வா சாவா நந்திக்கடலின் சேற்றுப் பகுதியில் ஈச்சமுட்களுக்கு நடுவிலே தீர்மானிக்கபட போகிறது என்று யாருமே கணித்திருக்க முடியாது. தலைவனை பாதுகாப்பாக வெளியேற்றினால் மட்டுமே இனி தமிழரின் எதிர்காலம் என்ற தலையாய இலக்கு. ஒரு படகில் கட்டப்பட்ட மிதவைகளுடன் அந்த நந்திகடலை தாண்டும்போதே எதிரிக்கு திகைப்பு ஏற்பட எந்த சந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.