Jump to content

Recommended Posts

                                                                                                         

 
 
mkL2tovUcNIQ-rSN_r0eWNwkgxebhCVey4dI6UuDDtO-PsePcaFAfRNn0S-wQkoFErIHi299WZuORPp7hYnjSuD_dlYKnxvDrQ9_5WtNJR9zEd0fnNKjgomkpdumwoZXBuPI5eOy
 
 
 
 

மதியரசி

                         

குரு.சதாசிவம்

நான் இந்தப் பாடசாலைக்கு ஆசிரியையாக மாற்றலாகி வந்து மூன்று நாட்கள்தான்,ஆகியிருந்தது..பாடசாலைக்

கட்டடத்தின் கலையம்சம்மிக்க அழகும்,

அமைப்பும் பார்ப்பதற்குப் பிரமிப்பாயிருந்தது.

சக ஆசிரியர்களும் எனது சேவை அனுபவம் கருதி நெருக்கத்திலும் ஒரு கண்ணியத்தை 

கடைப்பிடித்தது மகிழ்ச்சியைத் தந்தது. இங்கு“மதியரசி” என்ற பெயர் ஆசிரியர்கள் மத்தியில் 

சாதாரணமாகப்   பேசப்படுவதும்

எல்லோராலும் புரிந்துகொள்ளப்படுவதும் இவள்

யாரென்று அறியவேண்டுமென்ற ஆவலை 

தூண்டிவிட்டது.முதலில் பாடசாலையின் எழுது

வினைஞராகவோ அல்லது சிற்றூளியராகவோ 

இருக்கலாமென்றே நினைத்தேன்.அந்த இரு பதவி நிலைகளிலும் இரு ஆண்கள் இருப்பது

எனக்குத் தெரிந்திருந்ததால் அப்படி இருக்க

வாய்ப்பில்லை.”மதியரசி” பெயரை உச்சரிக்கும்

போதே மனசு குதூகலித்தது.சாண்டில்யனின்

சரித்திர நாவல்களில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்போல மனதில் பதிந்துபோய் விட்டது.அரஸ்ஸின் பேசும் ஓவியம்போல் ஒரு அழகான பிம்பம் 

எனக்கு உள்ளேயிருந்து எட்டிப் பார்க்கிறது.யார் இவள்?அறியவேண்டும் என்ற ஆர்வக் கோளாறு அழுத்திக்கொண்டிருந்தாலும்

நாகரீகம்கருதி அதைத் தவிர்த்துக்கொண்டேன்.

 

         எனக்கு இன்னும் நேர அட்டவணை தரப்படாமையால் ஆசிரியர்கள் இல்லாத வகுப்புகளுக்குப் போய் அவர்களின் கல்விச் செயல்ப்

பாடுகளை அவதானிப்பதை

வளக்கமாக்கிக்கொண்டிருந்தேன்.

இன்றும் ஐந்தாம் ஆண்டு வகுப்புக்கு ஆசிரியர் இல்லை

என்று தெரிந்துகொண்டு அங்குபோயிருநதேன்.

“புதுரீச்சர்”என்றுஅவர்கள்தங்களுக்குள்  பேசிக்

கொள்வதை கேட்க முடிந்தது.

“நான் மிஸிஸ்.சசிகலா யோகலிங்கம்.நீங்கள் என்னை 

சசிகலா மிஸ் என்றே சொல்லலாம்.நீங்கள் இந்தமுறை

ஸ்கொலஷிப் எடுக்கிறியள் சரிதானே?

“ஓம்  ,மிஸ்”எல்லோருமாய்  குரலெளுப்பினர்

புலமைப் பரிசில் பரீட்சைக்கு வரக்கூடிய

கேள்விகளை எல்லோரிடமும் கேட்டுக்கொண்டு வந்தேன்.அதில் இரண்டு மாணவர்கள் பதிலளித்த

கெட்டித்தனம் எனக்கே வியப்பாயிருந்தது.

எல்லாரும் ஒரு ரீச்சரிட்டத்தானே படிக்கிறியள்.

இவையளுக்குத் தெரிந்தது உங்களுக்கு ஏன்

தெரியாமல் போனது?” எல்லோருடைய மௌனத்தை

யும் கலைத்து  ஒரு குரல் மெல்லியதாய்க் கேட்டது

“அவையள் மதியரசி அக்காட்ட ரியூஷனுக்குப் 

போறவை மிஸ்.”

“ஆர் மதியரசி அக்கா”இப்போதுதான் அந்தப் பெயரைக் கேள்விப்படுவது போன்ற பாவனையில் கேட்டேன்.

“அவ பெரியக்கா”

“பெரியக்கா எண்டால்…? அவ என்ன செய்யிறா?”

“அவ பெரியக்காக்களோட படிக்கிறா.”

ஓ!பெரிய பாடசாலைகளில் கீழ் வகுப்பில் படிக்கும்

மாணவர்கள் உயர் வகுப்பு மாணவர்களை

பெரியக்காக்கள்,பெரியண்ணாக்கள் என்று

சொல்லும் ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது.இதற்கு

மேல் விளக்கம் சொல்ல  அவர்களுக்குத்  தெரியாது 

என்று எனக்குத் தெரியும்.

நான் அதோடு நிறுத்திக்கொண்டேன்.ஒன்றுமட்டும் 

உறுதியானது.அவள் இங்கே உயர் வகுப்பு ஒன்றில் படிக்கிறாள் என்பது..பாட நேரம் முடிய 

வகுப்பிலிருந்து வெளியேறி விறந்தையில் நடந்து

கொண்டிருந்தேன்.எனக்கு முன்னே இரண்டு மாணவிகள் போய்க்கொண்டிருந்தார்கள்.ஒருத்தி

சில கசங்கிய கடுதாசிகளை கைக்குள் பொத்தியிருந்தாள்.போகும்போது விறாந்தையில் இருந்த குப்பைகளையும் குனிந்து எடுத்துக்கொண்டு

நடந்தவள் அதை அதிபரின் அறைக்குப் பக்கத்தில் 

இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு நடந்து

கொண்டிருந்தாள்.நல்ல பழக்கம் என்று அந்தப் பிள்ளையை மனசுக்குள் மெச்சியபடி ஓய்வறைக்குள்

நுளைந்தேன்.’மதியரசி’ என்று யாரோ கூப்பிட்டதுபோல் இருந்தது.பிரமையாய் இருக்குமோ

என்ற சந்தேகத்தில் திரும்பினேன்.வாசலில் நின்ற

அதிபருக்கு முன் அந்த மாணவி நின்றுகொண்டிருந்தாள்

எனக்கு முன்னால் குப்பைகளை சேகரித்துக் 

கொண்டுபோன மாணவிதான் அது என்று தெரிந்தது.

“ஓ,அப்படியானால் இதுதான் நான் தேடிக்கொண்டிருந்த ஹீரோயின் மதியரசியா?”

திரும்பி நின்றதால் முகத்தைப் பார்க்க முடியவில்லை.

வெள்ளைச் சீருடையை அளவாக நீலம் போட்டு துவைத்து அயன் பண்ணி அணிந்திருந்தாள்.வெள்ளை சப்பாத்தையும் சொக்ஸ்ஐயும் எப்படி இவ்வளவு வெள்ளையாக வைத்திருக்க முடிகிறது என்று ஆச்சரியமாய் இருந்தது.நாலு சோடி சீருடையாவது 

இருந்தால்தான் இப்படி அணிய சாத்தியமாகும்.

வசதியான வீட்டுப் பிள்ளைபோலிருக்கிறது.அவளின்

பெயர் அதிபர்,ஆசிரியர்,மாணவர்கள் என்று 

பிரபலமவதற்கு அதுவும் ஒரு காரணமாயிருக்கும் 

என்று நினைத்துக்கொண்டேன்.முகத்தை பார்க்க

முடியாமல்போனது சற்று ஏமாற்றமாயிருந்தது.அதிபர் சொன்ன

தகவலைக் கேட்டுவிட்டு அவள் போய்விட்டாள்

 

        எனக்கு நேர அட்டவணை தரப்பட்டு வளக்கமான 

பணிகளை தொடங்கியிருந்தேன்.அன்று பிரார்த்தனை வெளியில் காலைப் பிரார்த்தனைக்காக மாணவர்கள் வகுப்பு ரீதியாக 

வரிசை ஒழுங்கில் நின்றுகொண்டிருந்தனர்.மற்ற

ஆசிரியர்களோடு நானும் விறாந்தையில் நின்றவாறே

கவனித்துக்கொண்டிருந்தேன்.மாணவர்களுக்கு

முன்னால் இருந்த மண்டபம் அதிபர் அலுவலகத்துடன் 

தொடுக்கப்பட்டவாறு மேடை போன்ற அமைப்பில்

கட்டப்பட்டிருந்தது.அதில் சில ஆசிரியர்களும் நின்று

கொண்டிருக்க அதிபர் முன்னால் வந்து மாணவர்களை 

பரவலாக நோட்டமிட்டார்.

“மதியரசி”அதிபரின் அழைப்புஎனது கவனத்தை 

ஒருமுகப்படுத்தியது.கூடி நிற்கும் மணவர்களுக்கு முன்னால் ஒருவர் வந்து பிரார்த்தனைப் பாடல்களைப்

பாட மற்றைய மாணவர்கள் மௌனப் பரார்த்தனையில் ஈடுபடுவதுதான் இங்கு பிரார்த்தனை முறையாயிருந்தது..தேவார பாராயணத்துக்கே மதியரசி அழைக்கப்பட்டிருந்தாள்.

மணவர்களின் ஊடே வரிசையிலிருந்து பிரிந்து நடுப்பகுதியால் நடந்து மேடையில் ஏறி திரும்பி

நின்றாள்.இவ்வளவு மாணவர்கள்,ஆசிரியர்கள் முன்பு

தடுமாற்றமோ,பதட்டமோ இல்லாமல் நின்ற அவளின்

உறுதி எனக்கு வியப்பாயிருந்தது.அவளின் 

கம்பீரமும் அழகும் நான் கற்பனையில் பார்த்த 

‘அரஸ்ஸின்’ஓவியத்தொடு ஒத்துப்போவதுபோலிருந்தது.

“மாதர்ப் பிறைக்  கண்ணியானை”என்று தொடங்கி

அந்த தேவாரத்தை இராக ஆலாபனைகளோடு அவள்

பாடும்போது சிலிர்த்து நின்ற உரோமங்களை கைகளால் உரசிக்கொண்டேன்.மதியரசி மற்றைய

மாணவர்களிலிருந்து வித்தியாசமாகப் பார்க்கப்

படுவதற்கான புதிர்கள் ஒவ்வொன்றாக அவிழ்ந்து

கொண்டிருந்தது.

                 

                 அன்று முதல் முதலாக பதினோராம் 

ஆண்டுக்கு  பாடம் எடுப்பதற்காகப் போயிருந்தேன்.மகள் நிஷாவும்

அந்த வகுப்பிலேதான் சேர்ந்திருந்தாள்.உள்ளே

புகுந்ததும் மாணவர்களின் வணக்கத்திற்கு பதில் 

வணக்கம் சொல்லிவிட்டு கதிரையில் அமர்ந்தபடி

வகுப்பைக் கவனித்தேன்.”இது நிஷாவின் அம்மா “என்று மாணவர்கள் 

தங்களுக்குள் பேசிக்கொள்வதைக் கேட்க முடிந்தது.

என்னை அறிமுகப்படுத்திவிட்டு நிஷாவையும் அறிமுகப்படுத்தினேன்.அப்போதுதான் அவளுக்குப் பக்கத்தில் மதியரசி இருப்பதை அவதானித்தேன்.அது

எனக்கு ஏனோ மகிழ்ச்சியாயும் இருந்தது.வயது வித்தியாசங்களை மறந்து நீண்ட நாள் காணாத ஒரு

தோழியைக் கண்டதுபோல மனது குதுகலித்தது.இதற்குமுன் அவளைத் தெரியும் என்பது

போல காட்டிக் கொள்வதைத் தவிர்த்துக்கொண்டேன்.

இது எனது ‘ஈகோ’ என்பதைவிட அவளுக்கு அது வந்துவிடக்கூடாது என்பதில்தான் நான்

கரிசனையாயிருந்தேன்.

“யார் மொனிற்றர்” என்று கேட்டவுடன் மதியரசி

ஏழுந்து நின்றாள்.அப்போதுதான் அவளை காண்பது

போல பாவனை செய்தபடியே 

“உங்கட பெயர்”அந்தப் பெயரை 

அவள் மொழியியலில் கேட்க ஆவலாயிருந்தது.

“மதியரசி”

“ஓ,அழகான பெயர்;காலையில தேவாரம் பாடினது நீங்களா”

“ஓம் மிஸ்”

“நல்லாயிருந்தது”

“தாங்ஸ் மிஸ்” என்றவளின் முகத்தில் புன்னகையோடு

வெட்கமும் பரவியிருந்தது.முதல்நாள் வகுப்பு என்றபடியால் அறிமுகங்களோடும்,அடுத்தடுத்த கல்வி செயல்ப்பாடு பற்றிய திட்டங்களோடும் பாடத்தை முடித்துக்கொண்டேன். அடுத்த மாதங்களில் கற்பித்தல் செயல்பாடுகளை துரிதப்படுத்தியது 

மாணவர்களுக்கு கஷ்டமாயிருந்தாலும்,உற்சாகமாக 

ஒத்துளைத்தனர்.

 

              நாளடைவில்  நிஷாவும்  மதியரசியும் இறுக்கமானநட்பைவளர்த்துக்கொண்டனர்.மதியரசியைப்பற்றி,நல்ல அபிப்பிராயம் ஆசிரியர்கள் 

மட்டத்தில் இருந்ததால் அதை நானும் ஊக்கப்

படுத்தினேன்.அவளைப்பற்றி நிஷா அடிக்கடி

வீட்டில் பேசிக்கொள்து வளமையான நிகழ்வாய்

மாறியிருந்தது.நான் நினைத்ததுபோல் அவள் பெரிய

வசதியான குடும்பத்துப் பிள்ளையில்லை என்பதை 

நிஷா சொன்னபோது மனதுக்கு சங்கடமாயிருந்தது.

யுத்தம், இடப்பெயர்வுகள் போன்றவற்றால் சொத்துக்களையும் தொழில்களையும் இழந்து போராடி முன்னேறி வரும் ஒரு சாதாரண 

குடும்பம்தான்.

 

. இவை எல்லாம் நிஷா சொல்லி நான் அறிந்துகொண்டவை.வெளித்தோற்றத்தை வைத்து நாம் போடும் கணக்குகளினால் மற்றவர்களின் உள் வலியை புரிந்துகொள்ள

முடியாமல் போய்விடுவது எவ்வளவு கொடுமை.நான் 

பரீட்சைக்காக நிஷாவுக்கு வீட்டில் வைத்தே பிரத்தியேக வகுப்பக்களை எடுத்துக்கொண்டிருந்தேன்

மதியரசி, வீட்டு நிலைமை கருதி தனியார் வகுப்பகளைத் தவிர்த்து தமையனின் வழிகாட்டலில்

புத்தகங்கள்,நோட்ஸ்களை வாங்கி படித்துக்கொண்டிருந்தாள்.நிஷா அவளுக்காகப்

பரிதாப்ப்பட்டு தன்னோடு சேர்த்து அவளையும் 

படிப்பித்துவிடுமாறு கேட்டதை ஒரு ஆசிரியையாய்

என்னால் மறுக்கமுடியவில்லை.இரண்டு வாரமாக

படிப்புக்காக என்னுடைய ஆசிரிய விடுதிக்கு வந்து

போய்க்கொண்டிருந்தாள்.போகப் போக எங்களில் ஒருத்தியாகவே மாறிப்போனாள்.வகுப்பு முடிந்ததும் 

வீட்டுக்குப் போகாமல் சமையலறைக்குள் போய் 

கழுவாத பாத்திரமெல்லாம் கழுவி அடுக்கி,வீடு எல்லாம் பெருக்கி துப்பரவாக்குவதை வளக்கமாக்கிக்

கொண்டாள்.நான் எவ்வளவு தடுத்தாலும்

“நீங்கள் பவம் மிஸ்,கலையில இருந்து பின்னேரம் நாலு

மணிவரை பள்ளிக்கூடத்திலையும்,எங்களோடையும் 

கஷ்டப்பட்டிட்டு பிறகு வீட்டு வேலை எல்லாம் 

செய்யிறதெண்டால்”என்று சொல்லும்போது பொறுப்பான ஒரு மகளின் வகிபாகம் அவளில் 

தெரியும்.அவள் ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கு

வீட்டில் வைத்து பாடம் நடத்துவது எனக்குத் தெரியும்.

போன வருஷம் இந்தப் பாடசாலையிலேயே அவளிடம்

கற்ற மூன்று மாணவர்கள் சித்தியடைந்ததையும்

ஆசிரியர்கள்மூலம் அறிந்திருந்தேன்.பாவம் அதிலை

வாற வருமானம் அவளின்ர படிப்பு செலவுக்கு உதவும்

என்று நான் மனதுக்குள் ஆதங்கப்பட்டுக்கொண்டேன்.

ஆனால் படிக்கிற பத்துப் பிள்ளைகளில் இரண்டு பிள்ளைகள்தான்ஓரளவு வசதியான குடும்பத்துப் பிள்ளைகள்.

அவர்களிடமும் பணம் வாங்குவதில்லை

என்று பேச்சு வாக்கில் அவள் என்னிடமே சொன்னபோது

எனக்கு வியப்பாயிருந்தது.

“ஏன் வசதியான ஆக்களெண்டால் நீ வாங்கலாம்தானே

உன்ர படிப்புக்கு உதவும்தானே”என்றேன்.

“இல்லை மிஸ்;மிச்சம் எட்டுப் பிள்ளைகளுக்கும் தாங்கள் காசு தராமல் படிக்கிறம் என்ற தாழ்வு

மனப்பான்மை ஏற்படுத்தப்போற தாக்கம்தான்

எனக்கு பெரிசாய் தெரியுது”எதிர்பாராத இந்தப் பதிலில் நான் திக்குமுக்காடிப் போனேன்.என்ன பிள்ளையிவள் என்று எழுந்த ஆச்சரியத்தை 

மனதுக்குள்ளேயே

மறைத்துவிட்டேன்.

 

             சாதாரண தர பரீட்சை தொடங்கியிருந்தது.

மதியரசி நல்ல முடிவு எடுப்பாளென்று அனேகமாக 

எல்லோருமே எதிர் பார்த்தோம்.ஆனால் நிஷா எல்லா பாடத்திலும் “ஏ”சித்தி  பெறுவாள் என்று அதிபர்,ஆசிரியர்கள் எல்லோரும் நம்பினர்.எனக்கும்

அந்த நம்பிக்கை இருந்தாலும் நான் அதை வெளிக் காட்டாமல் அமைதியாய் இருந்தேன்.பரீட்சை

முடிந்ததும் மதியரசி என்னைக் கண்டு நன்றி சொல்லிவிட்டு உயர்தரம் படிக்கக்கூடிய முடிவு தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு

 விடை பெற்றுக்கொண்டு போய்விட்டாள். அடுத்த ஆண்டு பாடசாலை தொடங்கும்போது உயர்தர

வகுப்பிலே இணைந்து படித்துக்

கொண்டிருந்தாள் நிஷா.மதியரசி பரீட்சை

முடிவுகளைப் பார்த்து வருவதாகச்

சொல்லி நின்றுவிட்டாள்.

 

         இரண்டு மாதங்களின் பின் என் கணவர்,

நிஷாவின் அப்பா யோகலிங்கம் இன்று

ஒரு வார விடுப்பில் வீட்டுக்கு வந்திருந்தார்.மகளின்

பரீட்சை முடிவுகள் நாளை வரும் என்ற மகிழ்ச்சியோடும்,எதிர்பார்ப்போடும் அவர்

காணப்பட்டார். எனக்கும் நேரம் போகப்போக

படபடப்பு அதிகமாகிக்கொண்டிருந்தது.காலை எட்டு

மணிக்கே மாணவர்களும், ஆசிரயர்களும் படசாலையில் கூடிவிட்டனர்..அவர்தான் முடிவைப்

பார்க்கப் போனவர் திரும்பி வரும்போது நடையிலே

தடுமாற்றம் தெரிந்தது.முகத்தில் போகும்போது

இருந்த சந்தோஷங்கள் காணாமல் போயிருந்தது.

மதியரசியையும் சேர்த்து வைத்துப் படிப்பிப்பதை

அவர் எதிர்க்கவில்லையென்றாலும் சாதகமான மன

நிலையில் இல்லையன்பது எனக்குத் தெரியும்.படபடப்போடு உள்ளூர பயமாகவும் இருந்தது

“நீ,பாவம்,பாவம் என்று ஊர்ப் பிள்ளையளைக் 

கவனிச்சதேயொழிய எங்கட பிள்ளையை சரியாய்க்

கவனிக்கேல்லை”

“நிஷாவுக்கு என்ன முடிவு என்று சொல்லுங்கோ”

6ஏ,4பி.எடுத்திருக்கிறாள்.உன்ர மாதரசியோ மதியரசி

8ஏ,பீ,,சி.அவள்தான் ஸ்கூல் பெஸ்ராம்;

கொண்டாடுறாங்கள்.அவமானமாயிருக்கு.”

சீ,என்ன மனிதர்கள் இவர்கள்?எங்கடை பிள்ளைநல்ல

முடிவு எடுக்கவில்லை என்று வருத்தப் படுவது இயல்பு.

ஆனால் இன்னொரு பிள்ளை தன்ர திறமையால் 

பெற்ற உயர்வை கொச்சைபடுத்தி வார்த்தைகளை

இறைப்பதை என்னால் பொறுக்க முடியவில்லை.

இந்த களேபரத்தைப் பார்த்தபடி இரண்டு கைகளையும் நாடிக்கு முட்டுக் கொடுத்தவாறு நிஷா ஒடுங்கிப்போய்  நின்றாள்.நான் ஓடிப்போய் கட்டி

அணைத்துக்கொண்டேன்.விம்மலுடன்

கண்களிலிருந்து நீர் வடிந்துகொண்டிருந்தது.அவள்

கண்களை கைகளால் துடைத்தபடி இறுக அணைத்துக்

கொண்டேன்.அவருக்கும் தன் தவறு புரிந்து என்னை விலக்கிவிட்டு தான்அணைத்துக்கொண்டு தேற்றினார்.

கொஞ்சம் நிதானத்துக்கு வந்து அமைதியாக பேசினார்.

“அவள் மருத்துவத் துறையில படிக்க விரும்புறாள்.

படிப்பித்தால் மட்டும் போதாது.பிள்ளைகளுக்கு

வரக்கூடிய தடைகளையும் நாங்கள்தான் விலக்கி விடவேணும்.இண்டையில இருந்து மதியரசிக்கில்லை

ஆருக்கெண்டாலும் விஷேட வகுப்பேடுக்கிறதை

நிப்பாட்டிப் போட்டு பிள்ளையிலை மட்டும் கவனம்

எடு வாத்திமாரெல்லாம் உன்னைத்தான் பிழையாய்

சொல்லுறாங்கள்.”அவர்  பேசத் தொடங்கவே நிஷா அறைக்குள புகுந்து

கொண்டாள்.கல்வி முறையை நோவதா?எங்களை

அண்டியிருப்போரை விலக்கிவிட்டுப் போவதா?

குளப்பமாயிருந்தது.

 

                மதியரசி தூரத்தில் வருவது தெரிந்தது.அவள்

இங்குதான் வருகிறாள் என்று தெரிந்ததால் அவளோடு

எதுவும் பேசவேண்டுமேன்று கணவருக்கு சொல்லி

வைத்தேன்.

“வாழ்த்துகள் மதியரசி;நீதான் இஸ்கூல் பெஸ்ராம்.”

சொல்லி முடிப்பதற்குள் வாயைக் கையால் பொத்தியபடி விம்மத் தொடங்கி விட்டாள். “நிஷாவின்ர முடிவிலை ஏதோ தவறு நடந்திருக்கு மிஸ்

நான் இதை நம்பேல்லை.”கண்களில் முட்டிநின்ற

கண்ணீரை கையால் துடைத்துக்கொண்டாள்.அவள்

உண்மையில் நிஷாவுக்காக வருந்துகிறாள் என்பது புரிந்தது.சொந்த வீடுமதிரிப் பழகிய உரிமையில்

என்னை விலத்திவிட்டு உள்ளே போனாள். 

“வாழ்த்துகள் மதியரசி”அவர்தான் நாகரீகமாகப்  பேசினார்.

“நன்றி அங்கிள்”என்று சொன்ன வார்த்தையை அவளால் முழுமையாய் சொல்ல முடியவில்லை

.நிஷாவின் அறைக்குள் புகுந்துகொண்டாள்.

கைகளைஇரண்டு கால்களுக்கும் இடையே வைத்து

இறுக்கியபடி சுவரையே வெறித்துக்

கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள் அவள்.

மதியரசி பக்கத்தில் இருந்து அவள் தோளை இழுத்து

 தன்னோடு அணைத்துக்கொண்டு அமைதிப்

படுத்த முயன்றாள்.ஆறுதல வார்த்தைகள் சொன்னாள்.அவள் வாய் திறந்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.சோகத்தோடு வெளியே வந்தவள்

“கவனமாய் பாத்துக்கொள்ளுங்கோ

மிஸ்.”என்று  சொல்லி விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டாள்.

நிஷா அவளுடன் முகம் கொடுத்துப் பேசவில்லை.

ஏமாற்றத்தால் மனம் நொந்துபோயிருக்கிறாள்

என்று நானும் அதை பெரிதுபடுத்தவிலொலை. ‘கேற்’

வரை அவளுடன் கூடவே நடந்தேன்.

“மதியரசி”

“மிஸ்”

“நிஷாவில நான் தனிப்பட் முறையில கவனமெடுக்காமல்

விட்டிட்டனோ என்ற ஆதங்கம் மனதில உறுத்துது.

உயர்தர வகுப்பில நான் அவளோட கொஞ்சம் கூட

கவனமெடுக்க வேண்டியிருக்கு.வகுப்பு நேரத்தை

நல்லாய் பயன்படுத்தி கவனமாய் படிக்கப்பார்.

மேலதிக வகுப்பு இனி கொஞ்சம் சிரமமாய்

இருக்கும்”என் மனது ஏற்றுக்கொள்ளாத ஒன்றை

நியாயப்படுத்த வைத்த சூழ்நிலையை சபித்துக்

கொண்டேன்.

“மிஸ்,என்ர இந்த பரீட்சை முடிவுக்கு முழுக்க,முழுக்க

நீங்கள்தான் காரணம்.எதிர் காலத்தில என்னால ஏதும் 

சாதிக்க முடிந்தால் அது எனக்கு நீங்கள் தந்த வரம்.

நிஷாவையும் உங்களையும் நிறைய கஷ்டப்படுத்திப்

போட்டன்”.என்றவள் திடீரென்று குனிந்து என் காலைத்

தொட்டு தன் கண்ணிலே ஒற்றிகொண்டாள்.நான்

எதிர்பார்க்கவில்லை.நான் வெலவெலத்து நிற்க

அவள் போய்க்கொண்டிருந்தாள்.

“என்ன உதவி எண்டாலும் என்னைக் கேள்”என்று 

சொல்லும் உரிமைகூடப் பிடுங்கப்பட்டு நிராயுத

பாணியாய் அவள் போவதை பார்த்துக்

கொண்டிருந்தேன்.

          

            பாடசாலை தொடங்கி புதிய வகுப்புக்களும்

ஆரம்பித்துவிட்டது.  நிஷா உயர்தரத்தில் விஞ்ஞானப் 

பிரிவில் சேர்ந்திருந்தாள்.அங்குதான் பாடம் எடுப்பதற்காகப் போய்க்கொண்டிருந்தேன்.

மதியரசியும் அங்குதான் இருப்பாள்.ஏதோ குற்றம்

செய்ததுபோல அவள் முகத்தை எப்படிப் பார்ப்பது

என்று மனது கூசியது.வகுப்பக்கள் போய் சிறிதாய் நோட்டம் விட்டபோது அவள் தென்படவில்லை.

நிமிர்ந்து ஒவ்வொரு வரிசையாகப் பார்த்துக்கொண்டு

வந்தேன்.அவள் இல்லை. 

“மதியரசி வரேல்லையா?”மௌனம்தான் பதிலாயிருந்தது.மேசையிலிருந்த

வரவு இடாப்பை புரட்டினேன்.அவளின் பெயர் இருந்தது.வரவு பதியப்படாமல் பெயருக்கு நேரே

கேள்வி அடையாளம் இடப்பட்டிருந்தது.

என்னாவாயிருக்கும்; குளப்பமாயிருந்தது.பாடத்தை

முடித்துவிட்டு  அதிபரின் அலுவலகத்திற்குப் போய்

அவரிடம் மதியரசியைப் பற்றி விசாரித்தேன்.அவரின்

பதிலில் நான் ஆடிப்போனேன்.

“நேற்று தகப்னோட வந்து என்னை சந்திச்சவா

ரீச்சர்.தனக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் உயர்தரத்தில விஞ்ஞானப் பிரிவில படிக்க கஷ்டம் 

என்று சொல்லுறா.கலைப் பிரிவு என்றால் தன்னால 

எப்படியோ படிச்சு முடிக்க ஏலும் என்று பிடிவாதமாய் நிக்கிறா.நானும் முடிஞ்ச வரையில சொன்னனான்..

அவவின்ர  குடும்பப் பின்னணிகள் ஓரளவுக்கு எனக்கு தெரிஞ்சதாலை அவ சரியாய்த்தான் முடிவெடுத்திருக்கிறா என்று நினைக்கிறன்.அந்தப் பிள்ளை எந்தத் துறையில போனாலும் சாதிக்கும்.

அவ விரும்பிறதையே படிக்  ஊக்கப்படுத்திவிடுவம்.”

அதிபர் சாதாரணமாகவே சொல்லி முடித்துவிட்டார்.

எனக்கும் அவளுக்கும் இடையில் நடந்த சம்பவங்களை

அதிபருடன் பகிர்ந்துகொள்ளும் துணிச்சல் எனக்கு

வரவில்லை.ஏதோ அவளின் எதிர் காலத்தை நானே

சிதைத்துவிட்டடதுபோல் குற்ற உணர்வில் உடம்பு 

கூசியது.அடுத்த வகுப்பைநோக்கி நடந்துகொண்டிருந்தேன். “12 ஏ கலைப்பிரிவு”எதிரே

இருந்த தூணில் மாட்டப்படிருந்தது.மதியரசியின்

வகுப்புத்தான்.அவளைப் பார்த்து ஒரு வாழ்த்துசொன்னால் நிச்சயம் சந்தோஷப்படுவாள்.

ஆனல் அந்த தைரியம் எல்லாம் தூரவே விலகி நின்றது

“நிஷா படித்து முடிக்கும்வரை தற்காலிகமாய் இரண்டு வருஷம் தாயாகவே இரு”என்று சுற்றமும்,சூழலும்,அக்கம் பக்கமும் போட்ட

சிக்கலில் எனது ஆசிரியப்பணியின்  தூய்மை தூசு

படிந்து கிடந்தது.இன்னொரு பிள்ளையின் காலை வாரி என்னுடைய பிள்ளை முன்னுக்கு வரவேண்டும்

என்று என் கணவரைப் போல என்னால் நினைக்க

முடியவில்லை.

“என்னுடைய மனச்சாட்சிக்கு நான் சரியாய் நடந்தால்

சரி”திருக்குறள் மாதிரி பாடமாக்கி சொல்லி 

தப்பிப்பதிலுள்ள போலித்தனம் இப்போது எனக்கப்

புரிகிறது.கையலே இருந்த கொப்பியல் ஏதோ பார்ப்பது போன்ற பாவனையில் அந்த வகுப்பைக

கடந்து சென்றுவிட்டேன்.

 

              நாட்கள் செல்லச் செல்ல எல்லாமே பழகிப்

போனது.இப்போது மதியரசியை நேருக்கு நேர் 

பார்க்கிற அளவுக்கு  மனது பக்குவப்பட்டிருந்தாலும்

குற்ற உணர்வு ஒன்று குடைந்துகொண்டேயிருந்தது.

நான் பிள்ளை போல பாசம் வைத்திருந்த ஒரு மாணவி;

“நான் பார்த்துக்கொள்ளுறன்,நீ விஞ்ஞானப் பிரிவிலேயே படி”என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நிச்சயம் அவள் மறுத்திருக்க

மாட்டாள்.அவளுடைய எதிர் காலமும் இன்னொரு 

தளத்தில் பயணித்திருக்கும்.என்னை இந்த குற்ற

உணர்விலிருந்து விடுவிக்க  என்னாலையே

முடியவல்லை.நிஷாவின் புதிய

சினேகிதங்கள் நம்பிக்கையூட்டுவதாயில்லை.

அவள் மனதைக் குளப்பி மதியரசியை அவளுக்கு

விரோதியாகவே மாற்றிவிட்டிருந்தார்கள்.அவளுடன்

கதைப்பதையே நிஷா  தவிர்த்துக்கொண்டாள்.

 

          அன்றைய காலைப் பிரார்த்தனையைத்

தொடர்ந்து அதிபர்,மதியரசி பாடசாலை மாணவர் 

தலைவராக நியமிக்கப்பட்டதை அறிவித்தார்.

மாணவர்கள் கரகோஷம் செது வரவேற்றதையடுத்து

மேடைக்கு அழைத்து சின்னம் அணிவிக்கப்பட்டது.

அதிபர் சின்னத்தை கையில் எடுத்து பின்னால் 

நின்ற என்னை  அழைத்து அணிவித்துவிடுமாறு

பணித்தார்.எனக்கு ஏதோ பலன் கிடைத்தது போல

மகிழ்ச்சியாயிருந்தது.சின்னத்தை வங்கி சட்டையின்

இடதுபக்க மார்பின்மேல் கவனமாக அணிந்து

விட்டேன்.அவளது கண், காது மூக்கு,வாய் எல்லாம் 

அவளுக்கு அமைந்ததுபோல இந்த சின்னம் கூட

ஒரு நகை போட்டதுபோல் அழகாயிருந்தது. கை

கொடுத்துவிட்டு கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தேன்.அவளுக்கு எப்படி இருந்ததோ,ஆனல்

எனக்கு என்மனச் சுமைகளை இறக்கி வைத்ததுபோலிருந்தது.நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன. உயர்தர வகுப்புகளின்

இறுதிப் பரீட்சையும் முடிந்துவிட்டது.

 

         சனிக்கிழமை;உயர்தர வகுப்பு மாணவர்களின்

பாடசாலை இறுதிநாள்.ஆசிரியர் மாணவர்களுக்கான 

ஒன்று கூடல் கொண்டாட்டம் முடிந்து ஒவ்வொருவரும்

வெளியறத் தயாராகிக்கொண்டிருந்தனர்.நிஷா 

போவதற்குத் தயாராய் எனகொகுப் பக்கத்தில் வந்து

நின்றாள். பிறகு எப்போ சந்திப்போமோ மதியரசியிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்று 

தாமதித்தேன். தூரத்திலே அவள் வருவது தெரிந்தது.

அங்குமிங்கும் யாரையோ தேடுவதுபோலவே பார்த்தபடி வந்துகொண்டிருந்தாள்.என்னைக் 

கண்டதும் வேகமாக வந்து கட்டிப்பிடித்துக்

கொண்டாள்.நான் விலகி வாழ்த்துச் சேன்னேன். 

நிஷா ஒதுங்கி நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

திடீரென்று நிஷாவின்  கைகளை இறுகப் பற்றிக்கொண்டாள்.

“நிஷா,என்னை விட நீ உயர்வாயிருக்கவேணும் 

 

எண்டு நினைச்சதைத் தவிர நான் வேற ஒருபிழையும் விடேல்லை.டொக்ரர்.நிஷாவாய் எப்பவோ நான் உன்னை சந்திப்பன்.’ட்றீட்மென்ற்’எடுக்கவாவது.

நிஷா எதிர்பாராத தாக்குதலில் சிக்கியவள்போல

வாயடைத்து நிற்க “போட்டுவாறன் மிஸ்”என்றவாறு

மாணவர் கூட்டத்துக்குள் போய் மறைந்துவிட்டாள். 

 

                                       *****

ஓய்வூதியமும்,பேரப் பிள்ளைகளும்,கொழும்புச் சிறை

வாழ்க்கையும்,மருந்து வில்லைகளும் வாழ்க்கையின்

இறுதிப் பகுதியை வடிவமைக்கத் தொடங்கிவிட்டன.

நிஷா யாழ்.பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்து அங்கு சிலகாலம் பணியாற்றி இப்போது கொழும்பில் பணியாற்றிக்கொண்டிருக்கிறாள்.மதியரசி

மட்டக்களப்பு பல்கலைக் கழகத்துக்கு போனதாக

அறிந்திருந்தேன்.இப்போது அடிக்கடி அவளுக்காக

மனது ஏங்கும்.எப்படி இருக்கிறாளோ என்ற ஆதங்கம் 

ஏற்படும்போது இன்னும் அந்த குற்ற உணர்வு உறுத்தும்

ஒவ்வொரு வயதும் கழியும்போது சாவதற்கிடையில் 

அவளை ஒருதடவையாவது பார்க்கமாட்டோமா என்ற

எண்ணம் வலியாய் வருத்தும்.

 

           “அம்மா,உங்களுக்கு ஒரு போன்”நிஷாவின் குரல் 

ஒலித்தபோது ஆச்சரியமாயிருந்தது.து.யாராயிருக்கும்.எடுத்தப் பேசியபோது வியப்பும் மகிழ்ச்சியும்ஒரு எதிர்

பார்ப்பம் மனதில் எழுந்தது..நிஷா படித்த,

நான்  கற்பித்த பாடசாலையின் பழைய மாணவர்கள்

நான் கல்விச் சேவையில் கால்பதித்த ஐம்பது ஆண்டு

நிறைவைக் கொண்டாடவும்,

ஓய்வு நிலையிலுள்ள ஆசிரியர்களை சந்திக்கவும்,

அவர்களைக் கௌரவிக்கவும் ஒரு விழா ஏற்பாடு

செய்திருப்பதாகவும்..என்னைக் கண்டிப்பாக 

வரவேண்டுமென்றும்,தாங்கள் பாதுகாப்பாக கூட்டி

வந்து,திரும்ப கொண்டுபோய் விடுவதாகவும் 

உறதியளித்திருந்தார்கள்.இதை நிஷாவுக்கு சொன்போது அவளும் சந்தோஷமாக அனுமதித்து

தனும் வருவதாகவும் ஒப்புக்கொண்டாள்.

 

              விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருபது,

இருபத்தி ஐந்து வருஷ பழையமாணவர்கள்கூட

வந்திருந்தனர்.வெளி நாடுகளிலிருந்தும் சிலர்

வந்திருந்தனர்.ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்

படுத்தி பரஸ்பரம் பேசிக்கொண்டிருந்தனர்.

அதில் பல ஆசிரியரகளை 

எனக்குத் தெரிந்திருந்தது.மதியரசியும் வந்திருப்பாளோ என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமாய்

வந்துபோனது.பிரதம விருந்தினராக அழைக்கப்

பட்டிருந்த அரசாங்க அதிபர் திடீரென இடமாற்றம் 

செய்யப்பட்டதால் புதிதாக வந்த அதிபர் அரை மணித்தியாலம் தாமதித்து வருவதாக தகவல் வந்திருந்தது

 

        .பிரதம வருந்தினரும் வந்து

.ஊர்வலமும் மண்டபத்தை வந்து

அடைந்துவிட்டது.சம்பரதாய பூர்வமான நிகழ்வுகளைத தொடர்ந்து,

“எமது பிரதேசத்தில் ஒரு கல்விப் பரம்பரையை

உருவாக்கி உயர்த்திவைத்த தருமதி.சசிகலா யோக

லிங்கம் அவர்கள் கல்விச் சேவையில் கால் பதித்த

ஐம்பது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து எமது அரச

அதிபர் திருமதி ம. கவியரசன் அவர்கள் பொன்னாடை

போர்த்திக் கௌரவிப்பார்கள்”தலைவரிடமிருந்து 

பொன்னாடையைப் பெற்ற அரச அதிபர் அதை 

நிதானமாகப் பிரித்து குழந்தைக்குப் போர்த்துவது

போல பக்குவமாகப் போர்த்தி குனிந்து என் காலைத்

தொட்டு வணங்கினார். அதை ஏன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.நான் திடீரேன

பின்னே நகர்ந்துகொண்டேன்.

“இப்போது எமது பழைய மாணவர் அமைப்பு

மதிப்புடன் வளங்கும்   “கல்வித் தாய்”என்ற சிறப்புப் பட்டத்திற்கான சான்றிதளையம்,சின்னத்தையோம் திருமதி சசிகலா யோகலிங்கத்திற்கு அரச அதிபர்

ம. கவியரசன் வளங்கிச் சிறப்பிப்பார்கள்”

“நோ;இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டன்.இதுக்கு 

நான் தகுதியே இல்லை.”எனது ஏதிர்ப்பை பார்த்து

பின்னாலிருந்த நிஷா எனக்கு அருகிலே வந்துவிட்டாள்.

“அம்மா என்னம்மா இது?

“உங்களை விட இந்த அங்கீகாரத்திற்கு பொருத்தமான

ஆக்கள் இருப்பதாய் எனக்குத் தேரியேல்லை மிஸ்.”

அரச அதிபரே அழுத்தமாய் சொன்னார்.

“மிஸ்”?

“யெஸ்,நான் உங்கட மதியரசிதான் மிஸ்..

நிஷாவோடு மதியரசியையும் இறுக அணைத்துக்

கொண்டேன்.இனிஎனக்கு சாவுகூட சந்தோஷமானதே.

              

                   *யாவும் கற்பனை*

Edited by முல்லைசதா
 • Like 10
 • Thanks 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான கதை, பகிர்வுக்கு நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியருக்கு ஒரு மாணவரை பிடித்துவிட்டால், கடைசிவரை கைவிடம்மாட்டார்,

எல்லோரையும் சமமாக நடத்தும் ஆசிரியர்கள் சிலரே.

நல்லதொரு பகிர்வு. எனோ இனம் தெரியா சந்தோஷம், சிலகாலம் ஆசிரியனாக இருந்தேன் என்று. என்னையும் ஒரு அண்ணா கவனமெடுத்து இரவு 10-11 மணிவரை சொல்லித்தருவார்,

அவர்களை வாழ்கையில் மறக்கவே முடியாது,

தொய்வே இல்லை கதையில் பாராட்டுக்கள்

Link to post
Share on other sites
16 hours ago, ஏராளன் said:

சிறப்பான கதை, பகிர்வுக்கு நன்றி.

 இது எனது ஆக்கம்.கருத்துக்கு நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 அழகான திருப்பம் . தொடர்ந்து எழுதுங்கள் பாராட்டுக்கள் .   ஒரு மாணவன் அல்லது மாணவிக்கு ஆசிரியர் வழிகாட்டியாக அமைந்து விடடால் அவர்கள் வாழ்வில் உச்சம் தொட வாழ்வார்கள் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வாவ் ....சூப்பர்.......தொடர்ந்து எழுதுங்கள் முல்லை சதா ......!   👍

Link to post
Share on other sites
18 hours ago, நிலாமதி said:

 அழகான திருப்பம் . தொடர்ந்து எழுதுங்கள் பாராட்டுக்கள் .   ஒரு மாணவன் அல்லது மாணவிக்கு ஆசிரியர் வழிகாட்டியாக அமைந்து விடடால் அவர்கள் வாழ்வில் உச்சம் தொட வாழ்வார்கள் .

பத்து வருஷத்திற்கு அமன் இத்தளத்தில்

சந்தித்த ஞாபகம்.ஆக்கபூரபமன கருத்துக்கு நன்றி்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கதையாக்கம் .. பகிர்விற்கு நன்றி..💐

 • Like 1
Link to post
Share on other sites
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதொரு கதையாக்கம் .. பகிர்விற்கு நன்றி..💐

கருத்துக்கு நன்றி

Link to post
Share on other sites
 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

மிகச் சிறப்பான கதை. இதை யாவும் கற்பனை என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் எனது குடும்பத்திலும் எனது தந்தை ஆசிரியர். நானும் ஒரு சில வருடங்கள் ஆசிரியையாகக் கடமையாற்றினேன். அன்றைய நாட்களில் விஞ்ஞானம் படிப்பது ஏதோ கெளரவம் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் கலை வகுப்பில் படித்து பெரிய பதவிகளில் வந்தோர் ஏராளம். விஞ்ஞானம் படிக்கப்போய் பல்கலைக்கழகம் போக முடியாமல் கல்வியை தொடர முடியாமல் அவதிப்பட்ட பலரை கண்டிருக்கிறோம். ஆசிரியர் நன்றாக அமைந்து விட்டால் மாணவரது வாழ்க்கையே  சரியான பாதையில் அமைந்து விடும். நான் அடிக்கடி எனது ஆசிரியர்களை நினைத்து மகிழ்வேன் . நல்லதொரு கதை . நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
On 13/9/2020 at 18:07, Kavallur Kanmani said:

மிகச் சிறப்பான கதை. இதை யாவும் கற்பனை என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் எனது குடும்பத்திலும் எனது தந்தை ஆசிரியர். நானும் ஒரு சில வருடங்கள் ஆசிரியையாகக் கடமையாற்றினேன். அன்றைய நாட்களில் விஞ்ஞானம் படிப்பது ஏதோ கெளரவம் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் கலை வகுப்பில் படித்து பெரிய பதவிகளில் வந்தோர் ஏராளம். விஞ்ஞானம் படிக்கப்போய் பல்கலைக்கழகம் போக முடியாமல் கல்வியை தொடர முடியாமல் அவதிப்பட்ட பலரை கண்டிருக்கிறோம். ஆசிரியர் நன்றாக அமைந்து விட்டால் மாணவரது வாழ்க்கையே  சரியான பாதையில் அமைந்து விடும். நான் அடிக்கடி எனது ஆசிரியர்களை நினைத்து மகிழ்வேன் . நல்லதொரு கதை . நன்றாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.