Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. 2012 மற்றும் 2018 ஆண்டுக்கு இடையில் தமிழகத்தில் நாட்டு இன கால்நடைகள் 6.65 லட்சம் அளவுக்கு குறைந்துள்ளது. அதே நேரத்தில் பிற கால்நடை வகைகளின் எண்ணிகையில் 13.21 லட்சம் அளவுக்கு அதிகரித்துள்ளது. 20வது கால்நடைகள் எண்ணிக்கை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் உள்நாட்டு இனத்தை சேர்ந்த கால்நடைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் மேலாகக் குறைகிறது. 2012ம் ஆண்டு, 24.59 லட்சமாக இருந்த உள்நாட்டு இனங்களைச் சேர்ந்த கால்நடைகளின் எண்ணிக்கை 2018ம் ஆண்டு 18 லட்சமாக குறைந்துள்ளது. இதில் 6.6 லட்சமாக இருந்த எருமை மாடுகளின் எண்ணிக்கை 5.18 லட்சமாக குறைந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் எம்.ஜி.ராஜேந்திரன் கூறுகையில், "பால் உற்ப…

  2. ஈழத்தமிழர் பிரச்சினையில் வசமாகச் சிக்கிய அ.தி.மு.க எம். காசிநாதன் / 2019 டிசெம்பர் 23 குடியுரிமைச் சட்டமூலத்தை ஆதரித்த அ.தி.மு.கவுக்கும் எதிர்த்து வாக்களித்த தி.மு.கவுக்கும், கடும் போராட்டம் தமிழகத்தில் உருவாகியிருக்கிறது. அ.தி.மு.க கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, தனது ஒரு வாக்கையும் மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு, ஈழத்தமிழர் பிரச்சினையில், எதிர்பாராத விதமாகச் சிக்கிக் கொண்டிருக்கிறது அந்தக் கட்சி. பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சரும் “இந்தியாவில் யாருக்கும் பாதிப்பில்லை” என்று கூறியருக்கிறார்கள் என்பதை, டெல்லியில் பிரதமரைச் சந்தித்து விட்டு வந்த, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவ…

  3. சசிகலா சொத்துக்கள் வாங்கியது எப்படி? வருமான வரித் துறை தகவல்! மின்னம்பலம் சசிகலா சொத்துக்கள் வாங்கியது எப்படி என்ற தகவலை வருமான வரித் துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சசிகலா குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 187இடங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதுதொடர்பாக சசிகலா குடும்பத்தினரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணையும் மேற்கொண்டனர். இதனிடையே சசிகலா தாக்கல் செய்த வருமான வரி விவரங்களை வருமான வரி அதிகாரிகள் மறுமதிப்பீடு செய்தனர். வருமான வரி மதிப்பீடு தொடர்பாக சாட்சிகளான தனது உறவினர் கிருஷ்ணபிரியா, வழக்கறிஞர் செந்தில் மற்றும் சில தொழிலதி…

  4. களைகட்டும் தமிழர் திருநாள்..! மஞ்சு விரட்டிற்கு அசுர வேகத்தில் தயாராகும் காளைகள்..! தை முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஒரு மாதத்திற்கு முன்பாகவே பொங்கல் விழா களைகட்ட தொடங்கி விடும். 2020 ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ம் தேதி இருந்து தொடங்குகிறது. பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக மாட்டுபொங்கலும் கொண்டாடப் படுகிறது. விவசாய பயன்பாட்டிற்காக வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளான காளை மாடுகள் மற்றும் பசுக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இப்பண்டிகை கொண்டாடப்படும். மாட்டுப் பொங்கல் நாளன்று பொங்கல் வைத்து படையலிட்டு கால்நடைகளை மக்கள் வணங்குவார்கள். அதே நாளில் ஜல்லிக்கட்டு, மஞ்சு …

  5. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை – மோடியிடம் வலியுறுத்தினார் எடப்பாடி! இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தலைநகரில் உள்ள விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு சென்ற முதலமைச்சருக்கு அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் அளித…

  6. லடாக்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தமிழக லாரி ஓட்டுநர்கள் 900 பேர் பனிப்பொழிவில் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சரக்குகளை ஏற்றி சென்ற லாரி ஓட்டுநர்கள் உணவு, தண்ணீரின்றி பனிப்பொழிவில் தவித்து வருகின்றனர். பனிப்பொழிவால் ஸ்ரீநகர், லடாக் பகுதிகளில் 450 லாரிகள் 12 நாட்களாக நிற்கின்றனர். நாமக்கல் ராசிபுரம் அருகே பாச்சலை சேர்ந்த செந்தில்குமார் உள்ளிட்ட ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர். கடுங்குளிரால் உடல் உபாதை ஏற்படுவதாகவும், லாரியிலேயே 10 நாட்களுக்கு மேல்தங்கியிருப்பதாவும் தகவல்கள் தெரவிக்கின்றன. பனிப்பொழிவில் சிக்கியிருக்கும் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓட்டுநகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது…

    • 0 replies
    • 563 views
  7. பேரறிவாளன் உள்ளிட்ட 67 கைதிகளுக்கு ஓட்டுநர் உரிமம்! கைதிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 67 பேருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு, வேலைக்காக யாரும் திண்டாடக்கூடாது என்பதற்காக கைதிகளுக்கு ஓட்டுநர் உரிமம் பயற்சி வழங்க முடிவு செய்யப்பட்டது. இரண்டு வருடத்திற்கு முன்பு சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்த சைலேந்திர பாபுவால் இந்த திட்டம் புழல் சிறையில் கொண்டுவரப்பட்டது. அதன்படி கைதிகளுக்கு ஓட்டுநர் பயிற்சி கொடுக்கப்பட்டது. அவ்வாறு வாகனம் ஓட்ட கற்றுக்கொண்ட பேரறிவாளன் உள்ளிட்ட 67 கைதிகளுக்கு தற்போது ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர் பேரறிவாளன் என்பது குற…

  8. மாணவர், மக்கள் போராட்டத்தை வன்முறை என்று வர்ணித்த ரஜினி.. வெடித்துக் கிளம்பும் கடும் கண்டனங்கள்! குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் குறித்த ரஜினியின் கருத்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களையும் விவாதங்களையும் உருவாக்கி உள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்த இஸ்லாமியர்கள் அல்லாத மற்ற சிறுபான்மையினர் அகதிகள் மத துன்புறுத்தலால் 2014 டிசம்பர் 31க்கு முன்பு வந்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டுவந்தது. இந்த சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நிறைவேறிய நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததால் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் குடியுரிமை சட்டம் மதபாகுபாடு காட்டு…

  9. தமிழருவி மணியன் யார்? அவரது அரசியல் நகர்வின் பின்னணி என்ன?

  10. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சென்னை பல்கலைக்கழக மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் போராடிவருகின்றனர். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், சுப்பைய்யா ஆகிய இரண்டு மாணவர்களும் காவல் துறையினரால் பிடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றும் மாணவர்கள் கோரிவந்தனர். இந்த நிலையில், காவல்துறை வசம் இருந்த மாணவர்கள் காலையில் விடுவிக்கப்பட்டனர். இருந்தபோதும் மாணவர்கள் தங்களது உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்துவந்…

  11. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் : December 18, 2019 இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து தமிழக அரசின் நிலைபாடு என்ன என கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர்h. குடியுரிமை சட்டத்தை பொறுத்தவரைக்கும், இந்தியாவில் வாழ்கின்ற இந்தியர்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. அது எந்த மதத்தினராக இருந்தாலும் சரி. எவருக்கும் பாதிப்பு இல்லை என பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தெளிவான கருத்தை தெரிவித்து இருக்கின்றா…

  12. சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் December 18, 2019 டெல்லி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகவும் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் சென்னை பல்கலைக்கழகத்தை சேர்ந்த கார்த்திகேயன், சுப்பையா என்னும் இரு மாணவர்களை காவல்துறையினர் கைது செய்ததாகக் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. . அவர்களை விடுவிக்கக்கோரியும் போராட்டத்தை ஒடுக்கும் செயலில் ஈடுபடும் காவல்துறையியனரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள் கல்லூரி …

  13. அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து ஆய்வு செய்ய குழு நியமனம் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை உலக அளவில் மேம்படுத்த ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு 2017-ம் ஆண்டு கொண்டு வந்தது. குறித்த திட்டத்தின்படி 10 உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் மேம்பாட்டுக்கு 1,000கோடி ரூபாய் அளிக்கப்படும். இந்த திட்டத்தின்கீழ் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வானது போதும், இடஒதுக்கீடு உட்பட சில காரணங்களால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக த…

  14. ''தி.மு.க., கத்தியோடு வந்தால், நாங்கள் துப்பாக்கியோடு வருவோம்,'' என, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். தமிழக அரசின், 'தாலிக்கு தங்கம்' வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில், நேற்று நடந்தது. இதில், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், 1,935 பயனாளிகளுக்கு, தாலிக்கு தங்கம் வழங்கினார். அதன்பின், அவர் அளித்த பேட்டி:ரஜினி, 2021ல், கட்சி ஆரம்பிப்பது சந்தேகமே. கராத்தே தியாகராஜன், தமிழருவி மணியன் ஆகியோர், எப்படியாவது ரஜினியை, அரசியலுக்கு இழுத்து வர வேண்டும் என, பேசுகின்றனர். கத்தரிக்காய் முற்றினால், கடைத்தெருவுக்கு வந்தே ஆக வேண்டும். தமிழகத்தில், யார் கட்சி ஆரம்பித்தாலும், அ.தி.மு.க.,வை மிஞ்ச முடியாது. வரும், 2021 சட்டசபை தேர்தலுக்கு…

  15. புதுச்சேரி கடல் வழியாக இலங்கைத் தமிழ் அகதிகள் அவுஸ்ரேலியா செல்ல முயற்சி? அண்மையில் திருத்தப்பட்ட இந்திய குடியுரிமைச் சட்டத்தில், இந்தியாவில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் கணக்கில் கொள்ளப்படாமல் தவிர்க்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் புதுச்சேரி கடல் வழியாக அவுஸ்ரேலியாவுக்கு தமிழ் அகதிகள் செல்ல முயல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலைத் தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதனை கண்காணிக்க கடலோர மற்றும் உள்ளூர் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட…

  16. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது எந்த முடிவும் மேற்கொள்ளாமலிருக்கும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் இந்த வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய, 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் …

  17. கிருத்துவர்கள் கோபத்துக்கு நிதியின் இந்த பேச்சுதான் காரணம்

    • 8 replies
    • 1.6k views
  18. பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக படத்தின் காப்புரிமை Getty Images …

  19. பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு வகையான மீன்பிடித்தல் முறைகள் நடைமுறை…

  20. ஓய்வு பெற்றாலும் சிக்கல்தான்.. ஊழல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை..! அமைச்சர் வேலுமணியின் ஊழல்களுக்கு துணை போகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஓய்வு பெற்றாலும், சட்டத்தின் பிடியிலிருந்து எந்த வழியிலும் தப்பி ஓடிவிட முடியாது என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் ஊழல் பற்றி லஞ்ச ஊழல் தடுப்புத் துறையின் சார்பில் நடத்தப்பட்ட திடீர் சோதனை எத்தனை? எத்தனை டெண்டர் ஊழல்கள் விசாரிக்கப்பட்டன? ஊழல்களை ரகசியமாக விசாரித்து வி.ஆர். எனப்படும் விஜிலென்ஸ் ரிப்போர்ட் போடும் வழக்கம் லஞ்ச ஊழல் தடுப்புத் து…

  21. மகாகவி பாரதியாரின் 138வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சாகாவரம் பெற்ற அவரது படைப்புகள் காலங்களைக் கடந்து வாழ்ந்து கொண்டிருப்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு... கவிதை எழுதுபவன் கவியன்று, கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் அவனே கவி என்றார் பாரதி... சுதந்திர தாகம், மானுட உயர்வு, கண்ணம்மாவிடம் காதல்... என உயிர்த்துடிப்புள்ள கவிதைகளை அள்ளித் தெளித்தவர் அந்த முண்டாசுக்கவி. தேச விடுதலைப் போராட்டத்தில் மகாகவியாக விஸ்வரூபமெடுத்த பாரதி, வாழ்க நீ எம்மான் என்று காந்தியைப் போற்றிய தமது பேனாவால், வெள்ளையர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து கவிதைகள் படைத்தார்.பாஞ்சாலி சபதத்தையும் தேசிய விடுதலை கீதமாக பாடியது பாரதியின் தனிச்சிறப்பு. …

  22. திருச்சியில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை தரவிறக்கம் செய்த குற்றத்திற்காக கிறிஸ்தோபர் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இணையத்தில்; சிறுவர் சிறுமியர்களின் ஆபாசப்படங்ளை தரவிறக்கம் செய்து பார்ப்பவர்களின் எண்ணிக்கை திருச்சியிலேயே அதிகம் என அமெரிக்க அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிற்கு தகவல் வழங்கியுள்ளனர். அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலை தொடர்ந்து ஆபாசப்படங்கள் குறிப்பாக குழந்தைகளின் ஆபாசப்படங்களை தரவிறக்கம் செய்து பார்ப்பவர்களை தமது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்த காவல்துறையினர் இது தொடர்பில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்தொபர் என்பவரை கைது செய்துள்ளனர். …

  23. பேனருக்கு விதிக்கப்பட்ட தடை... புத்தொளி பெறும் சுவர் விளம்பரங்கள் .. சென்னை: பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளதால், தமிழகத்தில் மீண்டும் சுவர் விளம்பரங்களுக்கு மோகம் கூடியுள்ளன.ஒரு காலத்தில் குறிப்பாக சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசியல், சினிமா, உள்ளிட்ட அனைத்துத் துறை விளம்பரங்களும் சுவர் ஓவியங்கள் மூலமே மேற்கொள்ளப்பட்டு வந்தன. கால ஓட்டத்தில் புதிது புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களால் பிளக்ஸ் பேனர்கள் எனும் விளம்பரத் தட்டிகள் அச்சடிக்கப்பட்டன. மாற்று விளம்பரம் பொதுவிடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் அரசியல்வாதிகளும், விளம்பர நிறுவனத்தினரும் மாற்று முறையில் விளம்பரம் செய்யும் நடைமுறையில் ஈ…

  24. பேரறிவாளனின் பரோல் மேலும் ஒருமாதம் நீட்டிப்பு! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோலில் வெளிவந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் பரோலை நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். அவருக்கு வழங்கப்பட்ட பரோல் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் தமிழக அரசு பரோலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. https://www.vikatan.com/news/general-news/12th-december-2019-just-in-updates

  25. விர்ஜின் குழுமத் தலைவர் ரிச்சர்ட் பிரான்ஸன் ``தன் டி.என்.ஏ தமிழகத்தைச் சேர்ந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார். விர்ஜின் குழுமத் தலைவர் ரிச்சர்ட் பிரான்ஸன் பெரும் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்ஸன் 1950-ம் ஆண்டு லண்டனில் பிறந்தவர். தற்போது 69 வயதாகிறது. இவரின், விர்ஜின் குழுமம் டெலிகாம், உணவுத்துறை, ஏர்லைன்ஸ், விண்வெளிப் பயணம் என பல்வேறு துறைகளில் கோலோச்சி வருகிறது. இந்தியாவில் மும்பை முதல் புனா வரை ஹைப்பர்லூப் திட்டம் அமைக்கப்படவுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமை யிலான மகாராஷ்டிர அரசு புல்லட் ரயில் மற்றும் ஹைப்பர்லூப் திட்டங்களைக் கைவிடும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது. ஹைபர்லூப் திட்டம் இதைத் தொடர்ந்து, பிரான்ஸன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.