Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. விஜயகாந்த் தலைமையில் 15 கட்சிகள் கூட்டணி: திடீர் திருப்பம்! " வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும், எங்கள் தலைமையில் இணையும் கட்சிகள் இணையலாம்" என்று விஜயகாந்த் அறிவித்ததையடுத்து சூடு பிடித்துள்ள தமிழக அரசியல் களம், பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் பரபரத்து கிடக்கிறது. பாஜக கூட்டணி அல்லது திமுக கூட்டணி அல்லது மக்கள் நலக் கூட்டணி என ஏதாவது ஒன்றில் தேமுதிக ஐக்கியமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், 'தனித்துக் களம் காணுவோம் ,எங்கள் தலைமையை ஏற்பவர்கள் வரலாம்' என்று விஜயகாந்த் முடிவாகக் கூறியது மற்ற கட்சிகள் மத்தியில் உண்மையிலேயே ஒருவித கலக்கத்தை உண்டாக்கிவிட்டது. இதனால் மிகவும் சோர்ந்துபோனது திமுக. பாஜக என்ன செ…

  2. மெட்ராஸ் அந்த மெட்றாஸ் 1: தொழிலதிபரின் இன்னொரு பக்கம்! 1954-ல் மெட்றாஸ் மவுண்ட் ரோடு - இப்போது அண்ணா சிலை உள்ள இடம். வாலாஜா சாலை முனை. கோப்புப் படம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை, முன்னர் மெட்றாஸ் என்று அழைக்கப்பட்டது. அந்த மெட்றாஸ் பல வரலாற்று நிகழ்ச்சிகளுக்கும் திருப்புமுனைகளுக்கும் சாட்சியாகத் தொடர்கிறது. டச்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று பல்வேறு வெளிநாட்டவர்கள் தென்னிந்தியாவில் முதன்முதல் காலூன்றிய இடம் மெட்றாஸ். மாகாணத்தின் தலைநகரமாக இருந்த மதறாஸ் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், முஸ்லிம்கள், ஆங்கிலேயர், குஜராத்தியர், மராட்டியர் என்று பல்வேறு பிரிவினருக்கும் உற்ற உறைவிடமாக இருந்தத…

  3. 'அப்புறம் வேறுவிதமாக நான் நடந்துகொள்ள வேண்டி இருக்கும் ஜாக்கிரதை!' -மிரட்டிய விஜயகாந்த் Share மதுரை: தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் கூச்சலிட்டதால் ஆத்திரம் அடைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், 'அமைதியாக இருங்கள் அப்புறம் வேறுவிதமாக நான் நடந்துகொள்ள வேண்டி இருக்கும் ஜாக்கிரதை' என்று தொண்டர்களை எச்சரித்தார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தே.மு.தி.க., மக்கள் நலக் கூட்டணி, த.மா.கா. வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது, ''இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறும் போர்.…

    • 8 replies
    • 1.5k views
  4. சட்டப்படி சசிகலா பொதுச் செயலாளர் ஆக முடியாது! 2011 டிசம்பர் மாதம் சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து அனுப்பிவிட்டார் ஜெயலலிதா. சசிகலாவோடு அவரது உறவுகளையும் கட்சியில் இருந்து ஜெயலலிதா கட்டம் கட்டினார். எல்லாம் மூன்று மாதங்கள்தான். 2012-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி சசிகலாவிடம் இருந்து அதிரடியாக வந்தது ஓர் அறிக்கை. ‘‘என் உறவினர்கள் அக்காவுக்கு துரோகம் செய்தது எனக்குத் தெரியாது. அக்காவுக்கு எதிரான சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன. துரோகம் செய்தவர்களுடன் தொடர்புகளைத் துண்டித்து விட்டேன். எனக்கு அரசியல் ஆசையும் கிடையாது’’ என்றெல்லாம் சசிகலா வெளியிட்ட அந்த அறிக்கையை அரசியல் மேகங்கள் மாறியிருக்கிற சூழலில், 5 ஆண்டுகள் கழித்து இப்போது படித்தால் சிரிப்புதான் வருகிறது…

  5. 1 இட்டலி 1 லட்சத்துக்கு விற்றுமா ரூ. 3000 கோடி கடன்..? ஊரை அடித்து உலையில் போட்ட அப்பல்லோவுக்கு வந்த நிலைமை பாருங்க..! அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சாப்பாட்டு செலவு மட்டும் 75 நாட்களில் 1 கோடியே 17 லட்சம் ரூபாய். அதாவது ஒரு நாளைக்கு ஜெயலலிதா சாப்பிட்டதாக 1 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் என வசூலித்த அந்த மருத்துவமனைக்கு ரூ.3,000 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சொந்தமான சொத்துகளை விற்க அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கடனை அடைக்க 13 செவிலியர் கல்லூரிகள், 2 மருத்துவக் கல்லூரிகளை விற்க அப்போலோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. …

  6. அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு March 15, 2024 அகதிகள் முகாமில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசாங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும். இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த 94 ஆயிரம் பேரில் 59 ஆயிரத்து 500 பேர் முகாம்களில் உள்ளனர். இந்த முகாம்களில் வளரும் குழந்தைகள்…

  7. 22 மாடுகள்... மாதம் ஒரு லட்சம்! பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பால் பண்ணை! பரம்பரையாக மாடு வளர்ப்பவர்களே பால் பண்ணையில் போதிய வருமானம் இல்லை என வேறு தொழில்களை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில்... “சரியாகத் திட்டமிட்டு செய்தால் பசுக்களில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்து நல்ல லாபம் எடுக்க முடியும்” என்று விரல் உயர்த்துகிறார், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகிலுள்ள தம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத். பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த ஹரிபிரசாத்தைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். ‘‘நான் சென்னை, பல்லாவரத்துல குடியிருக்கேன். பால் பண்ணை வைக்கணுங்கிற ஆர்வத்துல ஒரு…

  8. தமிழக பந்த் மறியல்... தலைவர்கள் கைது நிலவரம்! காவிரி பிரச்னை காரணமாக கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் நோக்கி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் பேரணியாக சென்றனர். அங்கு, ரயில் மறியலில் ஈடுபட சென்ற ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, காவிரி நீர் பிரச்னையில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக அவர்கள் அங்கு கோஷங்கள் எழுப்பினர். அதை தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்து அங்கு தயாராக நிறுத்…

  9. படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர…

  10. மிஸ்டர் கழுகு: கலைக்கச் சொல்லும் ரஜினி... கடுப்பில் எடப்பாடி! ‘‘கர்நாடகா தேர்தலுக்காக தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் பல விஷயங்கள் தள்ளிப் போடப்பட்டன. அவை எல்லாமே இனி வேகவேகமாக நடக்கும்’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘பட்டியலைக் கொடும்’’ என்றோம். உடனே ஆரம்பித்தார். ‘‘ரஜினி அடுத்தடுத்து தனது மக்கள் மன்றத்தினருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டங்களில் பலரும் ‘பி.ஜே.பி-யுடன் கூட்டணி வேண்டாம்’ என்று சொன்னார்கள். ‘நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யும் அ.தி.மு.க-வும்தான் கூட்டணி அமைக்கும். சட்டமன்றத் தேர்தல் இப்போதைக்கு வராது என நினைக்கிறேன்’ என்று ரஜினி பதில் சொன்னார். அந்த பதிலிலிருந்துதான் புது அரசியல் ஒன்று ஆரம்பித்திருக்கிறது.’’ …

  11. 25 ஏப்ரல் 2013 மாமல்லபுரத்தில் பாமக நடத்தும் சித்திரைத் திருவிழாவிற்குச் சென்ற பாமகவினர் மரக்காணத்தில் பொதுமக்களுடன் சண்டையிட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேருந்துகள் மற்றும் கடைகள் உட்பட 5 வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது. மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக சித்திரை முழுநிலவுத் திருவிழா - வன்னிய இளைஞர் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வாகனங்களில் சென்று கொண்டிருந்த பாமகவினருக்கும், பொதுமக்களுக்குமிடையே திண்டிவனம் அருகே உள்ள மரக்காணத்தில் மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 5 அரசு பேருந்துகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த கடைகள் உட்பட 5 வீடுகளு‌ம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதனால் அந்தப்பகுதி போர்கள…

  12. கரூர் துயரம் : தமிழக அரசுக்கு ’முக்கிய’ வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்! Published On: 2 Oct 2025, 7:33 PM | By Pandeeswari Gurusamy கரூரில் நடந்த பெருந்துயர சம்பவத்தில் விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை இன்று (அக்டோபர் 2) வெளியிட்டுள்ளனர். கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த நிலையில் மூன்னாள் நீதியரசர் சந்துரு, ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், எம்.ஜி.தேவசகாயம் ஐஏஎஸ், எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, ஊடகவியலாளர் ‘தி இந்து’ என்.ராம், வழக்குரைஞர் ஹென்றி டிபேன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ர…

  13. சீமான் கோரிக்கையை ஏற்ற முதல்வர் மின்னம்பலம் தைப்பூச தினத்தில் பொது விடுமுறை அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழ்க் கடவுளாகிய முருகனைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச தினத்தில் பொது விடுமுறை விடப்பட வேண்டும் என்பது முருக பக்தர்களின் நெடுங்கால கோரிக்கைகளில் ஒன்றாக இருந்து வந்தது. முருகனை தமிழ் நிலத்தின் கடவுள் என வணங்கும் நாம் தமிழர் க…

  14. மிஸ்டர் கழுகு: பன்னீரை மாட்டி விட்ட சசிகலா! ‘‘உமது நிருபருக்கு நான் சபாஷ் சொன்னதாகச் சொல்லும்” என்றபடியே கழுகார் உள்ளே நுழைந்தார். ‘‘ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைப் படலத்தில் நடக்கும் விஷயங்களை எழுதியதற் காகவா?’’ என்று கேட்டோம். ‘ஆமாம்’ எனத் தலையாட்டிய கழுகார், ‘‘அந்த விவகாரம்தான் இப்போது ஆளும்கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது’’ என்றபடி, செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார். ‘‘ஜெ. உடல்நிலை, சிகிச்சை, மரணம் குறித்து சசிகலா தரப்பில் சொல்லியிருக்கும் தகவல்கள் அனைத்தையும் கடந்த இதழில் உமது நிருபர் எழுதியிருந்தார். விசாரணை கமிஷனில் சசிகலா சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட 55 பக்க பிரமா…

  15. சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக வருமான வரித்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வட்டிக்கு பணம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் 2002 முதல் 2005ம் ஆண்டு வரையிலான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ததில் குறைபாடு இருப்பதாக, மொத்தம் ரூ.66.22 லட்சம் அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து ரஜினி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரத்த தீர்ப்பாயம், எந்த ஆதாரமும், விசாரணையும் இல்லாமல் அபராதம் விதித்தகாக கூறி, ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரி ஆணையர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், கடந்த ஜன.,28 ல் வழக்கை திரும்பப் பெறுவதாக வருமான …

  16. ஜூனியர் கிரிக்கெட் வீரர்கள் எனப்படும் இலங்கை கிரிக்கெட் வீரர்களில் 16 வயதுக்குட்பட்ட அணியினர் இன்று தமிழகம் வந்தபோது அவர்கள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ள மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். இங்குள்ள மைதானத்தில் அவர்கள் பயிற்சிக்கு வந்துள்ளனர். இதில் இலங்கையை சேர்ந்த ஜூனியர் கிரிக்கெட் அணியினரின் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்திறங்கிய நேரத்தில், தமிழகத்தில் இதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. எனவே, தமிழகத்தில் இவர்களுக்கு தனியாக பாதுகாப்பு வழங்குவது கடினம் என்று தமிழக அரசு தெரிவித்த நிலையில், வீரர்கள் மீண்டும் இலங்கைக்கே அனுப்பி வைக்கப்பட்டனர். த…

  17. ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் சாதனை- 720க்கு 664 மதிப்பெண்கள் தேனி: பெரியகுளம் அருகே அரசுப்பள்ளியில் படித்த ஆடுமேய்க்கும் தொழிலாளியின் மகன் ‘நீட்’ தேர்வில் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு கடந்த மாதம் நடந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘நீட்’ தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் ஜீவித்குமார், மொத்த மதிப்பெண் 720-க்கு 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த மாணவர் தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை…

  18. பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் கடந்த டிசம்பர் 2022இல் புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதமலம் கலக்கப்பட்ட விவகாரம் பலவிதமான தீண்டாமை பிரச்னைகளை வெளிப்படுத்தியது. குறிப்பாக, தலித் மக்கள் இறையூரில் உள்ள ஐயனார் கோவிலில் நுழைவதற்குத் தடை இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் கோயிலுக்குள் தலித் மக்கள் முதல்முறையாக நுழைந்தனர். இறையூரில் நடத்தப்பட்ட கோயில் நுழைவு சம்பவம், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பட்டியல் இன மக்கள் நுழைவதற்குத் தற்போதும் தடைகள் உள்ளனவா, இதற்கு முன்னர் நடந்த கோவில் நுழைவுப் போராட்டங்கள் வெற்றி பெற்ற…

  19. பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வந்திறங்கிய மோடி..! #wewantcmb #liveupdate பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை விமானநிலையம் வந்திறங்கினார். மோடி, விமான நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில், அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. அவருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட…

  20. அதிமுகவின் 227 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டி முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம் தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக 227 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் ஜெயலலிதா. அத்துடன், தோழமை கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் களத்தில் பிரதான கட்சிகள் ஏதும் இன்னும் வேட்பாளர் பட்டியலை இதுவரை அறிவிக்காத நிலையில் அதிமுக சார்பில் இன்று முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதா வேட்பாளர…

  21. சீமானும் கிராமப்பொருளாதாரமும் ஜெயமோகன் அன்புள்ள ஜெ, சமீபமாக நான் மிகவும் கவனிப்பது சீமானின் பரப்புரைகளைத்தான்.தமிழ் அரசியல் மேடைகளில் முதன்முறையாக ஜெ.சி.குமரப்பாவின் கிராமப்புற காந்திய பொருளாதாரத்தை வலிய, உரக்க பேசும் ஒரே அரசியல்வாதி சீமான் தான். இது எனக்கு மிக வியப்பாக இருக்கிறது. காந்தியத்தை அதிகம் எழுதிய நீங்கள் இதைக்கவனித்திருக்கிறார்களா? அன்புடன், வா.ப.ஜெய்கணேஷ். அன்புள்ள ஜெய்கணேஷ் கிராமியப்பொருளியல், விவசாயத்தின் அழிவு ஆகியவற்றை பேசும் ஏராளமான தன்னார்வ அமைப்புக்கள் இங்கே உள்ளன. அவற்றிலிருந்து சில வரிகள் சீமான் போன்றவர்களின் நாவுகளில் சென்றமைகின்றன. அவற்றை ஸ்டாலின் பேசமுடியாது, ஏனென்றால் அவர் உடனடியாக அரசாட்சிக்கு வ…

  22. வேலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி முடிவு இன்று! வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இதன்படி 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் 6 அறைகளில் எண்ணப்‌படுகின்றன. இதற்காக ஒவ்வொரு அறையிலும் தலா 14 மேசைகள் போடப்பட்டுள்ளதுடன், வாக்குகள் 22 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன. மழைவருவதற்கான வாய்ப்புள்ளதால் வாக்கு எண்ணும் மையத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. முதல் அடுக்கில் துணை…

  23. ``ரஜினியிடம் என்ன இருக்கிறது... மக்களுக்குத் தேவை ஆன்மிகமில்லை'' - விளாசும் மார்க்கண்டேய கட்ஜு! வருண்.நா மார்க்கண்டேய கட்ஜு - ரஜினிகாந்த் ``சிவாஜி கணேசன் நடித்த படம் ஒன்றைப் பார்க்கச் சென்றிருந்தேன். அந்தப் படத்தின் தொடக்கத்தில் சிவாஜி கணேசனின் கால்களைத்தான் காட்டினார்கள் (கால்கள் மட்டும்தான்). அதற்கே மக்கள் பயங்கரமாக ஆரவாரம் செய்தார்கள்.'' சர்ச்சைக் கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டு, அதன் மூலம் செய்திகளில் அடிக்கடி இடம்பிடிப்பவர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு. ஜல்லிக்கட்டுப் போராட்டம், விவசாயிகள் போராட்டம் எனப் பல விஷயங்களில் தமிழர்களுக்கு ஆதரவான கருத்துகளைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு, தம…

  24. அறை எண் 2008-ல் ஜெயலலிதா! ப.திருமாவேலன், படங்கள்: ஆ.முத்துக்குமார், மீ.நிவேதன் தமிழ்நாட்டு அரசியலோடு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்ட சம்பந்தம் அப்போலோவுக்கு உண்டு. முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., அப்போலோவில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது நடந்த தேர்தலில் (1984), அவருக்குப் பதிலாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்றவர்தான் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்கு அடுத்து இவர்தான் என்ற முத்திரையே அவருக்கு விழுந்தது. டெல்லியில் இருந்து வந்த பத்திரிகையாளர் ‘சண்டே’ அனிதா பிரதாப், ‘`நீங்கள் சென்ற இடம் எல்லாம் ஏன் இவ்வளவு கூட்டம் திரண்டது?” என்று ஜெயலலிதாவிடம் கேட்டார். ‘`என்னை ஜெயலலிதாவாக மக்கள் பார்க்கவில்லை. பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.