தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10294 topics in this forum
-
2019ல் புது ரூபம் எடுத்த போராட்டக் களம்.. கோலம் போட்டு அதிர வைத்த மக்கள்..! 2019 டிசம்பர் மாதம் ஒட்டுமொத்த இந்தியாவுமே மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களால் அதிர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கோலம் கூட போராட்டக்காரர்களின் வியூகமாக மாறியதுதான் வரலாறு. மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் இருந்து துன்புறுத்தல்களுக்குள்ளாகி இந்தியாவுக்கு அகதிகளாக வரும் கிறிஸ்தவர்கள், இந்துக்கள் உள்ளிட்ட 6 மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது இந்த சட்ட திருத்தம். ஆனால் அண்டை நாடுகளில் துன்புறுத்தல்களுக்குள்ளாகும் முஸ்லிம்கள், ஈழத் தமிழர்களுக்கும் இந்திய …
-
- 2 replies
- 908 views
-
-
கேள்விக்குறியான சசிகலா பதவியேற்பு: வெறிச்சோடிய போயஸ் கார்டன் பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் சென்னை திரும்பாததால், சசிகலா முதல்வராக பதவியேற்பு நிகழ்ச்சி குறித்துக் கேள்வி எழுந்துள்ள நிலையில், போயஸ் கார்டன் பகுதி வெறிச்சோடிக் காணப்படுகிறது. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஒரு மனதாக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவும் ஆளுநரால் ஏற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில், பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை தொடங்கினர்.…
-
- 2 replies
- 532 views
-
-
தேர்தல் ஆணையத்துக்கு, சசிகலா அளித்த 70 பக்க அடடே விளக்கம் சசிகலாவை அ.தி.மு.க பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரி பன்னீர்செல்வம் அணியினர் கொடுத்த புகார் மனுவுக்கு, சசிகலா இன்று தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளித்துள்ளார். 70 பக்கத்தில் அவர் விளக்கம் அளித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். பின்னர், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் மவுன தியானம் செய்தார். சுமார் 40 நிமிட தியானத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம…
-
- 2 replies
- 563 views
-
-
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது ; ஸ்டாலின் தமிழகத்தில் பல்கலைகழகங்களில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது என தி.மு.க தலைவரான மு க ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ‘ தமிழகத்தில் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரியதில் அ.தி.மு.கவிற்கு தோல்வி பயம் இருப்பது தெளிவாக தெரிகிறது. பல்கலைகழகங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஆளுநர் பேசியிருப்பது வேதனையை அளிக்கிறது. ஊழல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆளுநர், அது குறித்து நடவடிக்கை எடுக்காதது வேடிக்கையானது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்து ஆளுநரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. பல்கலைகழகங்களில…
-
- 2 replies
- 594 views
-
-
‘சசிகலாவுக்கு திகார் சிறைதான் சரியான சாய்ஸ்!’ - கர்நாடக அரசை நெருக்கும் அமைப்புகள் #VikatanExclusive கர்நாடக சிறையில் இருந்து சென்னை, புழல் சிறைக்கு சசிகலாவை மாற்றும் வேலைகள் வேகமெடுத்துள்ளன. 'பாதுகாப்பு கருதி இப்படியொரு முடிவை எடுக்க நேர்ந்தால், அவருக்கு திகார் சிறை மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்' என ஊழல் எதிர்ப்பு அமைப்புகள், கர்நாடக உள்துறைக்கு மனு அனுப்பியுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தது உச்ச நீதிமன்றம். இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட பிறகே, முதல்வர் பதவியை எட்டிப் பிடித்தார் எடப்பாடி பழனிசாமி. இன்ற…
-
- 2 replies
- 652 views
-
-
ரஷ்யா – சென்னை இடையே விரைவில் நேரடி கப்பல் போக்குவரத்து ரஷ்யாவில் இருந்து சென்னைக்கு இடையில் நேரடி கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் இருந்து சென்னைக்கு நேரடியான முழுநேர கப்பல் போக்குவரத்து சேவையாக இது அமையும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அரச முறை பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அதிபர் விளாடிமிர் புடினுடன் விளாடிவாஸ்டோக் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார். இதையடுத்து இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். இதன்போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்கையில், “இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நல்லுறவு இருநாடுகள…
-
- 2 replies
- 697 views
-
-
பிரபல இயக்குனர் மணிரத்னத்திற்கு இனந்தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் செக்கச் சிவந்த வானம் படத்தில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்ற நிலையில், சென்னை அபிராமபுரத்தில் உள்ள இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலில், செக்கச் சிவந்த வானம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும் எனக் கூறப்பட்ட தெரிவிக்கப்படுகின…
-
- 2 replies
- 531 views
-
-
தமிழினத்தின் ஏழு மண்டேலாக்கள் ஒரு நாளைக்கு 10 பத்திரிகைகள் படிக்கலாம்; மணிக்கொரு முறை இணையத்தில் முக்கியச் செய்தித்தளங்களைச் சுற்றி வரலாம்; 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சிகளை ஓட விட்டு வேலைக்கு நடுவே நிமிஷத்துக்கு நிமிஷம் எட்டிப் பார்க்கலாம்… ஆனால் தமிழ்நாட்டின் அரிய செய்திகளை அளிப்பதில் சுவரொட்டிகளுக்கு ஈடுஇணை இல்லை. தமிழ்நாட்டுக்கு ஏழு மண்டேலாக்கள் கிடைத்த செய்தியும் சுவரொட்டிகள் மூலம்தான் கிடைத்தது. சென்னை, ராஜாஅண்ணாமலைபுரத்தின் நீண்ட சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் மூலம். யார் இந்த ஏழு மண்டேலாக்கள்? வேறு யாராக இருக்க முடியும்? ராஜீவ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு, மரண தண்டனையிலிருந்து தப்பி, 23 வருஷ சிறைவாசத்திலிருந்து விடுபட ஏங்கிக்கொண்டிருக்கும…
-
- 2 replies
- 825 views
-
-
சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் 43-வது புத்தக கண்காட்சியில் ஈழத் தமிழர் பிரச்சனை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான ஆதரவு- எதிர்ப்பு நூல்கள் அதிகம் விற்பனையாகின்றன. இருப்பினும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான நூல்களை புத்தக கண்காட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. சென்னை புத்தக கண்காட்சியில் இம்முறை சர்ச்சைகளும் அரங்கேறி வருகின்றன. அரசுக்கு எதிரான நூல்களுடன் அமைக்கப்பட்டிருந்த மக்கள் செய்தி மையம் ஸ்டாலை புத்தக கண்காட்சி நடத்தும் பபாசி அமைப்பினர் அகற்றினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் செய்தி மையத்தின் நிறுவனர் அன்பழகன் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது இலங்கை விவகாரமும் புத்தக கண்காட்சியை மையம்…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
"நாங்க நாலு பேர்... எங்களுக்கு ஈகோவே கிடையாது!” தமிழக தேர்தல் வரலாற்றில் தி.மு.க., அ.தி.மு.க அல்லாத வேறு ஒரு கூட்டணி இத்தனை பரபரப்பாக இருந்ததே இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து செய்தியின் மையமாக இருக்கிறது மக்கள் நலக் கூட்டணி. வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன், முத்தரசன் நான்கு தலைவர்களும் மாநிலம் முழுக்க சுற்றிச் சுழல்கிறார்கள். இவர்களின் அரசியல் ஒரு பக்கம் இருக்கட்டும். திருவல்லிக்கேணி மேன்ஷன் அறையில் தங்கியிருக்கும் பேச்சுலர்களைப் போல எந்நேரமும் ஒன்றாகவே சுற்றும் இவர்களின் தனிப்பட்ட நட்புப் பயணம் எப்படி இருக்கிறது? திருமாவளவனைச் சந்திக்க வேளச்சேரி அலுவலகத்துக்குப் போனால், நம்மிடம் பேசத் தொடங்கும்போதே வைகோவிடம் இருந்து …
-
- 2 replies
- 963 views
-
-
'திராவிட இயக்கமே ஸ்டாலின்தான்!' - நாஞ்சில் சம்பத்தின் 'நள்ளிரவு தூது' அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான நாஞ்சில் சம்பத் தற்போது தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார். 'தி.மு.கவில் இணைவதற்கான ஆயத்தப் பணிகளில் இருக்கிறார். நேற்று இரவு முழுக்க தீவிர ஆலோசனையில் இருந்தார். ஜனவரி முதல் வாரத்தில் இணைப்புப் பணி நடைபெறும்' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்க இருக்கிறார் சசிகலா. 'முதலமைச்சர் பதவியையும் அவர் ஏற்க வேண்டும்' என ஆளுங்கட்சி அமைச்சர்கள் பேசி வருகின்றனர். சசிகலா தலைமையை ஏற்காத சீனியர்கள்கூட, அன்றாடம் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து வருகின்றனர். இந்தக…
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழர்கள் பொறுக்கிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்: சுப்பிரமணியன் சுவாமி வரம்பு மீறிய கருத்து! தமிழர்களின் அடையாளமாக இருக்கும் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் இளைஞர்கள், விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பொறுக்கிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். ஏற்கனவே தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழகத்தில் ஆட்சியை கலைத்து மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வரு…
-
- 2 replies
- 833 views
-
-
அ.தி.மு.க ஆட்சி சிறப்பாக அமைய பாடுபட்டவர் சசிகலா: அமைச்சர் செல்லூர் ராஜூ அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா என அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டியளித்துள்ளார். மதுரை: மதுரையில் டெங்கு காய்சலை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு முகாமை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து பணியாற்றி வருவதாக கூறினார். மேலும், டெங்குவ…
-
- 2 replies
- 620 views
-
-
திமுக தலைமையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி: கருணாநிதி அறிவிப்பு திமுக தலைமையிலான கூட்டணியின் பெயர் ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்தார். திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை தாங்கி கருணாநிதி பேசியது:- திமுக கூட்டணியை இனி, ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று அழைப்போம். எல்லா இடங்களுக்கும் நான் நேரில் சென்று பிரசாரம் செய்வதற்கு இயலாவிட்டாலும், எந்த வழியாக பிரசாரம் செய்ய வேண்டுமோ, அந்த வழியாக இடைவிடாது பிரசாரம் செய்வேன். திமுகவின் கூட்டணி கட்சியினர் பிரசாரம் செய்யும்போது, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவது யார், அவர்கள் மதச்சார்பற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களா, இல…
-
- 2 replies
- 561 views
-
-
திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்துக்குத் தந்தது என்ன? 1967 பொதுத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநிலக் கட்சியொன்று ஆட்சியைப் பிடித்தது. முதலில் மாணவராகவும், பிறகு மாநில நிர்வாகத்தில் அதிகாரியாக இடம்பெற்றும் அப்போதைய மாற்றங்களை நேரிலேயே பார்த்தவர் எஸ்.நாராயண். “தமிழகத்தில் அரசியல் சித்தாந்தம் அரசின் கொள்கையாகவும், திட்டங்களாகவும் மாற்றப்பட்டதால் மக்கள் பயன்பெற்றார்கள். அப்படிப்பட்ட மாற்றம் இந்தியாவில் வேறு எங்கும் நிகழவில்லை” என்று தன்னுடைய புதிய நூலில் எழுதியிருக்கிறார். ‘தி திரவிடியன் இயர்ஸ்: பாலிடிக்ஸ் அண்ட் வெல்ஃபேர் இன் தமிழ்நாடு’ என்ற அவருடைய நூலிலிருந்து சில பகுதிகள்: அண்ணாவுக்குப் பிறகு… …
-
- 2 replies
- 680 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,சுதாகர் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியானார்கள். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். , அதில் 6 பேருக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை. மற்றவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓட்டும்புறம், தூவல் தீரம் என்ற இடத்தில் சுற்றுலா பயணிகள் கடலில் உல்லாச பயணம் செய்து வருவது வாடிக்கையானது. அவ்வாறு சுற்றுலா வந்த இடத்தில் ஈரடுக்கு உல்லாசப் படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்கச் சென்ற போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்து நேர…
-
- 2 replies
- 571 views
- 1 follower
-
-
கருணாநிதி சிலை திறக்க சென்னை வருகிறார் சோனியா காந்தி : November 29, 2018 1 Min Read அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னை வருகைதரவுள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் காலமான கருணாநிதிக்கு தி.மு.க. தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. அத்துடன் தி.மு.க. நிறுவனர் அண்ணாவுக்கும் புதிய சிலை அமைக்கப்பட உள்ளது. அண்ணா-கருணாநிதி ஆகியோரின் சிலைகள் திறப்பு விழா எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்த விழாவை தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாக மாற்ற ஏற்பா…
-
- 2 replies
- 756 views
-
-
தூத்துக்குடி மடத்தூர், புதிய பஸ் நிலையம், அண்ணாநகர், பழைய பஸ் நிலையம் தேவர் புரம் ரோடு, காய்கறி மார்க்கெட் பகுதி, ஜார்ஜ்ரோடு, லயன்ஸ் டவுன், பீச் ரோடு மற்றும் பல பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்களுக்கு நேற்று அதிகாலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மேலும் அவர்கள் கண் எரிச்சல் மற்றும் வறட்டு இருமலாலும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு படையெடுத்தனர். ரோட்டில் நடந்து சென்றவர்கள் மற்றும் வாகனங்களில் சென்றவர்களுக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தூத்துக்குடி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. ஏதாவது தொழிற்சாலையில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டதால் மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல், வறட்டு இருமல் ஏற்பட்டிருக்கலாம் என கரு…
-
- 2 replies
- 547 views
- 1 follower
-
-
பேரவை நிர்வாகிகள் நியமன விவகாரம் : கணவருடன் தீபா குடுமிப்பிடி சண்டை ஜெ., அண்ணன் மகள் தீபா, புதிதாக துவக்கி யுள்ள பேரவைக்கு, நிர்வாகிகள் நியமிக்கும் விவகாரத்தில், அவருக்கும், அவரது கணவருக் கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள் ளது. பதவி தொடர்பாக, குடுமிப்பிடி சண்டை நடக்கிறது. 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' என்ற அமைப்பை, தீபா துவக்கி உள்ளார். இதன் தலை வர் மற்றும் செயலராக, தன்னுடன் இருக்கும் தம்பதியரான ராஜா - சரண்யா ஆகியோரை நியமித்துள்ளார். இதற்கு, பேரவை ஆதரவாளர் கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந் நிலையில், சென்னையில், நேற்று முன் தினம் இரவு, வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பிரதா…
-
- 2 replies
- 562 views
-
-
ஆண்களைப் போல “சுகவாசி”யான ஒரு உயிரினம் உலகில் எங்குமே இருக்க முடியாது. பஸ்ஸை விட்டு இறங்கியதும் நேராக பஸ் ஸ்டாண்ட் சுவரை நோக்கி ஓடுவார்கள். சுகமாக இயற்கை உபாதையை கழிப்பார்கள். இந்த “சுதந்திரம்” மனிதர்களில் வேறு எந்தப் பிரிவினருக்கும் இல்லை. அதேபோல வழியில் எங்காவது உச்சா நெருக்கினால், உடனே இடம் பொருள் ஏவல் பார்க்காமல் கிடைக்கும் சுவர், விளக்குக் கம்பம் என ஜாலியாக நின்று விடுவார்கள். இந்த “சுதந்திரமும்” வேறு யாருக்கும் இல்லை. ரோடு, புதர், சுவர் என எல்லா இடத்தையும் ஈரமாக்கும் ஒரு உயிரினம் நாய்களுக்குப் பிறகு ஆண் இனம்தான் என்பதில் எந்த ஆணுக்குமே சந்தேகம் வரக் கூடாது. ஆனால் பெண்களின் நிலை.. சாலையில் போகும்போது இயற்கை அழைத்தால் அவர்கள் படும் பாடு இருக்கிறதே, மிகவும் துயரமானது…
-
- 2 replies
- 834 views
-
-
தேர்தல் விதிகளை மீறியதாக ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா, தேர்தலின் போது பல வகையான இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதிகள் அளித்த நிலையில், அதற்கான நிதி ஆதாரங்களைத் தெரிவிக்காததற்கு தேர்தல் ஆணையம் தற்போது கண்டித்துள்ளது. மேலும் பல்வேறு இலவச பொருட்கள்-வாஷிங் மெஷின், இலவச மொபைல் போன்,கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் முழுவதுமாக தள்ளுபடி என பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்பதை ஆணையம் சுட்டிகாட்டியுள்ளது. இனி வரும் காலங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மே மாதத்தில் விளக்கம் க…
-
- 2 replies
- 553 views
-
-
வாரிசு அரசியலால் வதைபடும் தலைவர்கள்! -சாவித்திரி கண்ணன் குடும்ப வாரிசு அரசியல் வெளிப்பார்வைக்கு வெற்றிகரமாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் புழுத்து நாறி அழுகி, வெளித் தோற்றத்தில் அழகாகத் தோன்றும் பழம் போன்றதே என்பதற்கு தற்போதைய வரலாறே சாட்சியாகும். ஸ்டாலின் – உதயநிதி, ராமதாஸ் – அன்புமணி, வைகோ –துரை வைகோ போன்ற வாரிசு அரசியலின் போதாமைகளும், பரிதாபங்களும் ஒரு அலசல்; கொள்கை, லட்சியம் சார்ந்து அரசியல் வாழ்க்கைக்கு சுயம்புவாக வந்து சாதித்த தலைவர்கள் தங்கள் வாரிசுகளை அரசியலுக்கு தயார்படுத்துவதில்லை. அதை கொள்கை, லட்சியம் கொண்ட அடுத்த தலைமுறைக்கு தானாகவே கையளித்து சென்றுவிடுவார்கள் காந்தி, காமராஜ், மொரர்ஜி தேசாய், அண்ணா, ஜீவா போன்ற தலைவர்கள் தங்கள் வாரிசுகளை தலைவராக்க எண்ணியதில்ல…
-
-
- 2 replies
- 251 views
-
-
படத்தின் காப்புரிமை AFP Contributor நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதிகள் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிமுக கூட்டணியில் பாமகவுடன் பாஜகவும் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்ற சந்திப்பில் அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. இந்த சந்திப்பில் தமிழக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் பாஜக தரப்பில் முரளிதர்ராவ், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர் கலந்து கொண்டனர். …
-
- 2 replies
- 541 views
-
-
திமுக மாணவரணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு திமுக மாணவரணி சார்பில் 24ம் திகதி நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில் , குறித்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக மாணவரணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி , திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், அவர்களில் பெரும்பாலானோர் அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுத…
-
-
- 2 replies
- 670 views
-
-
ரொட்டியிலும் ஜெ. ஸ்டிக்கர்! அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ரொட்டியிலும் ஸ்டிக்கர் ஒட்டி நீலகிரி மாவட்ட அதிமுகவினர் அமர்க்களப்படுத்தினர். அதிமுக அரசு மீது ஸ்டிக்கர் விமர்சனம் எழுந்துள்ள நிலையிலும், நீலகிரி அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் நடந்த விழாவில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட ரொட்டியிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஜெயலலிதா பிறந்த நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மாவட்டச் செயலாளர் கப்பச்சி வினோத், ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு, ஜெயலலிதா பிறந்த நாளன்று உதகை அரசு மகப்பேறு மருத்துவமனையில் குழந்தைகள் பிறக்கவில்லை. நேற்று முன்தினம் இரவு ஒ…
-
- 2 replies
- 531 views
-