யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம். மேலதிக விளக்கங்களை / விதிகளை இங்கே பார்வையிடலாம்.
41 topics in this forum
-
என் அன்பு யாழ் இதயங்களுக்கு.. பல ஆண்டுகள் நான் நாட்டை விட்டு புலம்பெயர்து வாழ்ந்தாலும் இன்றும் என்னுக்குள் அன்றைய எனது ஊரின் நினைவுகள்தான் இனிமை தருகிறது. இதேபோல் உங்கள் ஊர்களையும் நினைத்துப் பார்க்க இந்த சிறு கவிதை உதவினால் எனக்கு மகிழ்ச்சியே. அன்றுபோல் என் தீவு வேண்டும் ************************ அம்மாவின் அன்பு வேண்டும் அப்பாவின் கருணை வேண்டும் பனை தென்னை உணவு வேண்டும் பாசத்தின் உறவு வேண்டும் பனம் பாளைக் கள்ளு வேண்டும்-ஓலை பாய்தன்னில் உறங்க வேண்டும் கூள் காச்சிக் குடிக்க வேண்டும் கொண்டாடி மகிழவேண்டும். உரல் இடித்து சம்பல் வேண்டும் ஒடியல் பிட்டு கலந்து வேண்டும் மண்சட்டி…
-
-
- 2 replies
- 1.1k views
-
-
இரை. தினையளவு இரைதேடி சிற்றெறும்புக் கூட்டம் புற்றுவிட்டு நீங்கி பொழுதெல்லாம் அலையும். குடைபோல் வலைபின்னி வலைக்குள் காத்திருக்கும் பறந்துவந்து சிக்கும் பல்லுயிர்க்காய் எட்டுக்கால் சிலந்தியும். அதிகாலை வேளை மொட்டவிழ்ந்த மலர்தேடி மதுவுண்டு செல்ல மணம் முகர்ந்து அலையும் மாமரத்துத் தேனீக்கள். உடும்பொடு பாம்பும் இரைபார்த்து ஊர்ந்து வரும் பாம்பு மெலிந்தால் உடும்புக்கு இரையாகும் உடும்பு தளர்ந்தால் பாம்பு பசியாறும். வானில் உலவும் பருந்து வீட்டு முற்றம் சேர்ந்து தாயை விட்டு விலகிய குஞ்சை கிள்ளியெடுத்து தன்குஞ்சு பசிபோக்கும். …
-
-
- 5 replies
- 1.8k views
-
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம். நேற்று... நள்ளிரவு, ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா... அதன் நட்பு நாடான... இலங்கையை, பாதுகாக்கும் நோக்கில்.... டெல்லி.. இந்திய விமானப் படைத் தளத்தில் இருந்து 180 இந்திய இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும்... பஞ்சாப் ரெஜிமெண்டில் இருந்து.. 215 இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும், தமிழ்நாடு, தாம்பரம் இந்திய இராணுவத் தளத்திலிருந்து.... மட்றாஸ் ரெஜிமென்ட் படையை சேர்ந்த.... 200 இராணுவ வீரர்களும், முதல் கட்டமாக... கொழும்பு கட்டுநாயக்கா... விமான நிலையம் வந்து இறங்கி உள்ளார்கள். இன்று இரவும்... மீண்டும் வன்முறை பெரிய அளவில், தலை தூக்கும் என கருத…
-
-
- 135 replies
- 11.9k views
- 2 followers
-
-
புல்வெளியில் தூங்கும் நிழல்கள்! நீண்ட பயணத்தின் இடையிடையே பாலங்களைக் கடப்பதுபோல, என் கடந்தகால நினைவுகளை மீட்டபடி என்னைக் கடந்து செல்கின்றன. ஒரு நிழலில் இருந்து இன்னொரு நிழலுக்கு, மாறிமாறி நான் பயணப்பட்டேன் . மகிழ்ந்து தூங்கும் மரங்களின் கீழ் கருமையின் ஒளியால் சூழப்பட்ட நிழல்கள். ஆளுறக்கம் கொள்கின்றன. பயங்கர சூறாவளி வீசுகிறது மரங்கள் வேருடன் குடைசாய்…
-
-
- 6 replies
- 1.4k views
-
-
எங்கே போகிறது எம்திருநாடு! ************************* அழகிய இலங்கை ஆக்கிரமிப்புகள் இருந்தாலும்-மக்கள் ஒருகாலமும் உணவுக்கு கையேந்தியதாய் வரலாறு இருந்ததில்லை. இடையில்.. உண்னமுடியாத வாழைக்கிழங்கையும் உணவாய்யுண்டு தேங்காயோடு தேனீர் குடித்தோம். பாணுகாக கியூவில் பட்டினி கிடந்தோம்-என சிறிமாவின் காலமும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகிப் போச்சு. ஆனால் இன்றோ அதைவிடவும் கொடுமை பார்க்குமிடமெல்லாம் கியூ பாணுக்கும், பல்பொருளுக்கும் பால்குடிகளின் பால்மாவுக்கும் சமையல்எரி வாயுவுக்கும் சாம்பாறு மரக்கறிகட்கும் மண்ணெண்ணை பெற்றோள் மாவு அரிசி யாவுக்…
-
- 6 replies
- 1.9k views
-
-
தலை நகரின் பிரதான மையத்தில் அமைந்து இருந்தது அந்த அந்தோனியார் கோவில். செவ்வாய்க் கிழமைகளில் மத வேற்றுமை பாராது மக்கள் தம் வேண்டுதலுக்காக அங்கு கூடுவர். சில இளையோர் தம் சோடிகளுடனும் , வேலை தேடும் இளையவர் தமக்கு வேலை கிடைத்துவிட வேண்டும் எனும் வேண்டுதலுடனும் , இளம் பெண்கள் தங்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை அமைந்துவிட வேணுமென்றும் வேளையில் இளையோர் வெளிநாட்டுப்பயணம் அமைந்து விட வேணுமெனவும் இன்னும் பல தேவைகளுக்கு நேர்த்தி வைத்து அங்கு கும்பிட வருவார்கள். அந்த வாயிலில் மெழுகு திரிக்க கடை கச்சான் கடலைக் கடை குளிர் பானக கடை என்பன கடைவிரித்து காத்திருப்பார்கள். அவர்களுக்கு அண்மையில் வறுமைப்பட்டோர் சில ர் யாசகம் செய்யவும் கூடி இருப்பார்கள். அங்கு அவர்களுக்கிடையில் வயது…
-
-
- 6 replies
- 2k views
- 1 follower
-
-
ஒரு பக்கம் யாழ்நகரம், மறுபக்கம் மட்டு நகரம்... வாள் கொண்டு போர் செய்து வடக்கு கிழக்கு இணைந்தபடி வெல்லபார்த்தோம் முடியவில்ல. போகட்டும் முடிந்தவரை யாழ்கொண்டாவது இணைத்து பார்ப்போமே அதில் தவறென்ன? தர்மத்துக்கு புறம்பாக நாம் ஏதும் நடந்ததில்லை, வன்முறை எங்கள் பொழுது போக்கும் இல்லை. பொழுது போக்காய் எம்மை கொல்ல பார்த்தவர்களை எதிர்கொள்ள வேறு வழியின்றி வன்முறையை தேர்ந்தெடுக்க வைக்கப்பட்ட இனம் நாம். நாங்கள் இனி ஒரு ஆயுத போராட்டத்தை செய்ய போவதில்லை, ஆயுத போராட்டம் என்றால் பயம் என்று ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் நடமாடிய எம் மண்ணின் மாவீரர்கள் பெயரால் ஒன்றும் இதை அறிக்கையாய் விடவில்லை. அதற்கு உரிமையும் இல்லை. ஆண்டாண்டு காலம் போராடியும், ஆயிரக்கணக்கில் அல்ல ஆதரவு வழங்க…
-
-
- 6 replies
- 1.9k views
-
-
இலங்கைச்..சாப்பாடுதான் வேணுமாம்.. பல்லாயிரம் மைல் கடந்து பரதேசத்தில் கனடாவில் வாழும்நான் படும் கஸ்டம் என்னென்று தெரியுமோ..மூ பத்து ஆண்டு கடந்தும்…முசுப் பாத்திக்கு தன்னும் நோ கனடியன் பூட்.. பக்கத்திலை பத்துத் தமிழ்க் கடை… பலகாரம் முதல் பத்தியச் சாப்பாடுவரை பகலிராவாக் கிடைக்கும்… பகிடி என்ன தெரியுமோ.. வடை மூன்று ஒரு டொலர் அப்ப.. வடை இரண்டு ஒன்றரை டொலர் இப்ப…. இலங்கையில் விலைவாசி ஏற்றமாம்.. இடியப்பம் இருபத்தைந்து மூன்று டொலர் அப்ப இப்ப இந்தப்பெட்டி…ஆறு டொலர்.. இதுக்கும் அதையே சொல்லுகினம்… கொத்து ரொட்டியிலும் கொல்லுகினம் விலையை.. கொடுவாமீன் சாப்…
-
-
- 9 replies
- 1.7k views
-
-
கொழும்பு துறைமுக நகர்.. சீனா கடல்மேல் உருவாக்கிய பாலைவன மணற்திட்டு.. எப்போ நகராகும்.??! இது பாலைவன கடல்மேற் திட்டு நுழைவாயில்.. இது தான் சீனா உருவாக்கிய கொழும்பு துறைமுக நகருக்கான மணற்திட்டும்.. நாட்டப்பட்டுள்ள தென்னை மரங்களும். நுழைவாயிலை அலங்கரிக்கும் கடதாசிப் பூச்செடிகள். பழைய கொழும்பு நகரக் கட்டிடங்கள்.. உருவாக்கப்பட்டுள்ள பாலைவனப் பூமியில் இருந்து.. கொழும்பு துறைமுகம்.. பாலைவனப் பூமியில் இருந்து.. பாலைவனப் பூமியில் இருந்து.. கொழும்பு நகர்.. நவீன கட்டிடங்கள் மற்றும் கடல்நீர் தேக்கம்.. பார்வை. பாலைவனப் பூமியில் இதுவரை நிர்மானிக்கப்பட்டதில் உருப்படியானது இது ஒன்…
-
-
- 6 replies
- 912 views
-
-
நேற்று என் கனவில் கடல் வந்தது என் கடல் நீலமாய் இருக்கவில்லை அதன் அலைகள் கடும் சிவப்பிலும் ஆழத்தில் தொலைந்திருந்த எங்கோ புதைந்து கிடந்த என்றோ மறந்து விட்ட ரகசியங்களின் நிறமாகவும் இருந்தது. கரையே அற்ற பெருங்கடல் அது இரக்கமற்றவர்களின் பிரார்த்தனை போலவும் மரணங்களைக் கொண்டாடும் கடவுள்களின் துதிப்பாடலைப் போலவும் இரைச்சலாக இருந்தது. ஈரமற்ற நீர்ப்பரப்பாய் வானமற்ற நீர் வனமாய் உயிர்கள் அற்ற ஆழியாய் அது பரந்து சூழ்ந்தது அதன் அலைகளின் நுனிகளை பற்றி இருந்தேன் நுரைகளால் நிரம்பிக் கிடந்தேன் அதன் பெரும் இரைச்சலை எனக்குள் இறக்கிக் கொண்டேன் அலைக்கழிக்கும் ஒரு பெரும் துயரத்தின் ஆழத்துக்குள் அதன் சுழி என்…
-
-
- 12 replies
- 1.2k views
-
-
காலம்: டிசம்பர் 2026 இடம்: வெசாயில்ஸ், பிரான்சு அன்பு நண்பன் அமுதனுக்கு, உன் பால்ய நண்பன் உடான்ஸ்சாமியார் எழுதிக்கொள்வது. மச்சான் இங்க இப்ப நிலைமை ரொம்ப மோசமடா. ரஸ்யாகாரன் போலந்துக்கால வந்து ஜேர்மனியில் பல பகுதியை பிடிச்சிட்டான். எங்கட சனம் கொஞ்சம் ஜேர்மனில இருந்து வெளிக்கிட்டு இஞ்ச ஒரு சேர்ச்சில வந்து அகதியளா இருக்குது. நல்லா வாழ்ந்த குடும்பங்கள்…ஒரு டெண்டுக்குள்ள ஒரு குடும்பமே ஒண்டி கொண்டு சாப்பாட்டுக்கு அடுத்தவன்கையை எதிர்பார்த்து நிற்குதுகள். 45 வயதுக்கு கீழ்பட்ட ஆக்கள் எல்லாம் கட்டாயா இராணுவத்திலசேந்திட்டினம். மிஞ்சி வந்திருக்கிற ஆக்கள் கண்ணில் அப்படி ஒரு மரண பயம் தெரியுது மச்சான். என்ர மகனையும் பிரான்சு கட்டாய இராணுவ பணிக்கு…
-
-
- 57 replies
- 6.4k views
-
-
உ பார்வை ஒன்றே போதுமே கண்கள் பேசும் காதல் மொழிக்கு வார்த்தைகள் வெறும் சுமையே. இருநாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் அந்த மண்சாலை குண்டும் குழியும் சேறும் சகதியுமாக இருந்தது.இரு மருங்கிலும் வயல்கள். கதிர்கள் அலைபோல் அசைய பச்சைபசேல் என்று குளிர்ச்சியாக இருந்தது. கதிர்களைத் தழுவிவரும் காற்றில் மண்மணம் கமழ்ந்து உடலுக்கு புத்துணர்சியைத் தருகின்றது. அந்தப் பாதையில் ஒரு மனிதர் தனது வீட்டை விட்டு வெளியேறி பல நாட்களாக…
-
-
- 61 replies
- 6.7k views
- 2 followers
-
-
பெரும்பேறு - சுப. சோமசுந்தரம் எழுத்துலகில் பழகுநன் என்ற முறையில் என்னைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன். எனது எழுத்துகளில் இலக்கியம் சார்ந்த எழுத்து தவிர ஏனையவை என்னைச் சுற்றிய உலகின் நிகழ்வுகளாகவே அமைவதை உணர்கிறேன். எழுதுபவர்களில் பெரும்பாலானோர்க்கு அவரவர் மனதிற்குப் பிடித்த பாணியே அமையும் என்பது காரணமாக இருக்கலாம். அல்லது கற்பனை வளம் குறைவானதும் காரணமாயிருக்கலாம். எது எப்படியாயினும் வருவதைத்தானே எழுத முடியும் ? மேலும், நம்மை மீறிப் பொங்கி வருவதுதானே எழுத்தாய் அமைய முடியும் ? இனி இன்றைய என் எழுத்து. மூத்தோர் நலனும் அவரைப் பேணலும் பண்பட்ட சமூகத்தின் தலையாய கடமைகளில் ஒன்று என்பது உள்ளங்க…
-
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
பரNaகோர்ட்..... பரNaகோர்ட் "பழைய போத்தல்,பேப்பர், பித்தளை,அலுமினியம் சருகை சேலை இருக்கா" "அண்ணே நில்லுங்கோ பழைய புத்தகம் கொஞ்சம் இருக்கு எடுத்திட்டு காசு தாங்கோ" " ஒரு கிலோ இருக்கு இந்தா இரண்டு ரூபா" காசை வாங்கி பொக்கற்றுக்குள்ளே போடுற நேரம் குகனின் அம்மா "தம்பி யாரோட கதையுச்சுகொண்டிருக்கிறாய் படலையில் நின்று" "அம்மா அது பழைய அலுமினிய சமான்கள் வாங்கிற பரனகோர்ட்அண்ண" "நிற்க சொல்லு இரண்டு அலுமினிய சட்டி கிடக்குது கொடுத்திட்டு ஏதாவது வாங்குவோம்" இரண்டு பழைய அலுமினிய சட்டியை கொண்டு வந்து கொடுத்தா ,அவரும் சட்டியை காலால் மிதித்து நெளித்து நிறுத்து பார்ட்த்து விட்டு சைக்கிளில் கட்டி வைத்திருந்த ஒரு பிளாஸ்டிக் பக்கற்றையும் சின்ன அல…
-
-
- 12 replies
- 1.8k views
- 1 follower
-
-
கவிதையைப் பிரித்த ஐபிஎல் தூய வெள்ளை அரம்பையர் நின்றுமே துணங்கைக் கூத்திட வீரர் குழாத்தினர் ஆய தம்திறன் காட்ட, எறிந்த பந்(து) அண்டை வந்திட வீசி அடித்ததை பாயச் செய்து பவுண்டரி சிக்ஸராய் பலத்தைக் காட்டும் ஐபிஎல் களமதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அணிதிரண்டு குதிக்குமழகிலே நேயமுற்றனன் ஆதலினால் என்றன் நெஞ்சை நீங்கினளாம் கவிக்காதலி காலை மாலையிரவெனத் தேர்ந்திடாக் காதல் மேவ ஐபிஎல் லைப் பார்த்ததால் வேலையாவும் ஓர் மூலையிற் போனத…
-
- 3 replies
- 1.8k views
-
-
நீண்ட நாட்களாக சன்பிரான்ஸ்சிஸ்கோவில் இருந்து லாஸ் அங்கிலஸ் கடற்கரை ஓரமாக உள்ள ஒற்றையடிப் பாதையில் (அனேகமான இடங்கள்)போக வேண்டுமென்று ஒரு கனவு இருந்தது. ஒரேஒரு முறை ஒரு 50 மைல் தூரம்வரை குடும்பமாக ஒரு நிகழ்வுக்கு போயிருந்தோம்.அப்போதே இந்த பாதையின் மகத்துவம் பற்றி சொன்னார்கள்.அப்போதே எல்லாவற்றையும் கேட்ககேட்க கடற்கரையையும் பார்க்க ஒருமுறை இந்த பாதையில் போனால் என்ன என்று யோசித்தேன். அதன் பின் 2012-14 (சரியாக ஆண்டு நினைவில் இல்லை)ஆண்டளவில் அவுசிலிருந்து அண்ணனின் மகன் நண்பியுடன் வந்திருந்தான்.அவனும் இந்த பாதையை கேள்விப்பட்டோ ஏதோ இதே பாதையில் கொன்வேட்டர் கார் வாடகைக்கு எடுத்து அதுவும் கோடை காலத்தில் மேலே துறந்துவிட்டுட்டு அவ்வளவு தூரமு…
-
-
- 59 replies
- 6.8k views
- 2 followers
-