நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
Covid-19 காலப்பகுதியில் அதிகரித்து வரும் இளவயது நீரிழிவு நோயாளர்கள் கொரோனா காலப்பகுதியில் இளவயதினரிடையே நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்தின் சிறப்பு வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சிவமகாலிங்கம் அரவிந்தன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நவம்பர் மாதம் 14 ஆம் திகதி உலக நீரிழிவு தினமாகும். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருள். இந்த வருடத்தை பொறுத்தவரை தாதியர்களும் நீரிழிவும் என்பது தொனிப்பொருளாகும். தாதியர்கள் மூலமாக நாங்கள் நீரிழிவை கட்டுப்படுத்த முடியும். அவர்கள் பொதுமக்களோடு, நோயாளிகளோடு நெருங்கிய தொடர்பை வைத்திருக்கிறார்கள். கொவிட் 19 போன்ற தொற்று நோய்களும் இன்று அதிகரித்திரு…
-
- 0 replies
- 491 views
-
-
பசி எடுப்பதில்லை என்று அவதிப்படுபவர்கள் மாம்பிஞ்சை வெயிலில் காய வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துச் சாப்பிடுங்கள். அப்புறம் பாருங்கள் பசியை. *நீரிழிவு நோயாளிகளுக்கு மாந்தளிரை வெயிலில் உலர்த்தி இடித்துப் பொடியாக்கி ஒரு கோப்பை வெந்நீரில் இரண்டு டீ ஸ்பூன் தூளைக் கலந்து கலக்கி, தினமும் இரண்டு வேளை வீதம் தொடர்ந்து சாப்பிட்டுவர நீரிழிவு கட்டுப்படும். *மாங்காய் பறிக்கும்போது அதன் காம்பிலிருந்து வழியும் பாலை ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொண்டு தேள் கடி, தேனி கடிகளுக்குத் தடவினால் உடனடி நிவாரணமளிக்கும் மாம்பழ கொட்டையை, சிறிது நெருப்பில் சுட்டு, உள்ளிருக்கும் பருப்பை சாப்பிட்டால் வயிற்றுபோக்குக்கு உடனடி நிவாரணம்
-
- 0 replies
- 1.4k views
-
-
(Image from: food.gov.uk/ & Edited for translation only.) நீங்கள் அரோக்கியமான வாழ்வு வாழ உண்ண வேண்டியது நிறையுணவு (Balance diet) ஆகும். அந்த நிறை உணவு எவ்வகை உணவுப் பொருட்களை எவ்வெவ்வளவுகளில் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்கிறது இப்படம். நீங்கள் உணவு உண்ணப் பாவிக்கும் வட்ட வடிவ உணவுத் தட்டில் மேற்படி அளவுக்கு குறிப்பிட்ட வகை உணவுகளை நீங்கள் நாள் தோறும் உண்டு வந்து.. நல்ல உடற்பயிற்சி அல்லது உடற்பயிற்சி அளிக்கக் கூடிய கடின வேலைகளையும் செய்து வந்தால் உங்கள் ஆயுள் நீண்டதாக இருக்கும். பூமியில் பிறந்த யாருக்குத்தான் நீண்ட நாள் வாழ ஆசையில்லை. உங்களின் ஆசையை பூர்த்தி செய்ய இக்குறிப்பு உதவும் என்று நம்புகின்றோம். source: http://www.kuruvikal.blogspot.com/
-
- 0 replies
- 4.2k views
-
-
மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை. 1. அதிமதுரம்: இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண். 2. சித்தரத்தை: இருமல், சளி, பீனிசம், கோழைக்கட்டு. 3. ஜாதிக்காய்: விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள். 4. வெந்தயம்: பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம். 5. வசம்பு: வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள். 6. ஆவாரம்பூ: அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம். 7. செம்பரத்தம்பூ: தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின்…
-
- 0 replies
- 441 views
-
-
நிறைய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும். லேட்டஸ்டாக, ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் உள்ளது வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம். அதன் ஆராய்ச்சியாளர்கள் குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி ஆராய்ந்தனர். தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனிகளில் அடைப்புகளை கரைந்து ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது. அதன்மூலம், உடலில் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும். எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் மயக்கம், தலைசுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது. அத்துடன், நரம்பு மண்டல…
-
- 0 replies
- 657 views
-
-
செல்பேசி, கோபுரங்களால் உடல் நலக்கேடு செல்பேசி பயன்படுத்துவதாலும், அதன் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள செல்பேசி கோபுரங்களினாலும் நினைவிழப்பு, கவனச் சிதறல், ஜீரணக் கோளாறு, தூக்கம் கெடுதல் உள்ளிட்ட பல உடல் நலக்கேடுகள் ஏற்படுகின்றன என்று மத்திய அமைச்சரவைக் கூட்டுக் குழு ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நுண்ணிரியல் துறை, தொலைத் தொடர்புத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த 8 வல்லுனர்களைக் கொண்ட குழு, செல்பேசிகளாலும், செல்பேசிக் கோபுரங்களாலும் ஏற்படும் பாதிப்பை அறியும் ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் அடிப்படை, செல்பேசி சேவை தரும் நிறுவனங்கள் சேல்பேசியில் இருந்தும், செல்பேசி கோபுரங்களில் இருந்தும் வெளியாக…
-
- 2 replies
- 712 views
-
-
நமது உடம்பில் குறிப்பிடத்தக்க உறுப்புகளில் ஒன்று, கல்லீரல். இது கருஞ்சிவப்பு நிறமுடையது. கல்லீரல், உடம்பில் பெரிய இரத்த வடிகட்டியாகவும், இரண்டாவது பெரிய நோய் எதிர்ப்பு அமைப்பாகவும் இயங்குகிறது. வயிற்றின் இடதுபக்கத்தில் உதரவிதானத்துக்குக் கீழே இடம்பிடித்திருக்கிறது. இது, சுழற்சியில் இருக்கும் இரத்த செல்களின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. நோய்த்தொற்றுகளில் இருந்து உடம்பைக் காக்கிறது.குடல்வாலைப் போல கல்லீரலும் தேவையற்ற ஓர் உறுப்பு என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வந்தது. சோகஉணர்வுக்குக்காரணமான கறுப்பு திரவத்தை கல்லீரல் சுரப்பதாக ஹ்ப்போகிராட்டஸ் என்ற மருத்துவர் ஆய்வாளர் கருதினார். கல்லீரல் முற்றிலும் புதிர்கள் நிறைந்த உறுப்பு என கேலன் என்ற அறிஞர் கூறினார…
-
- 0 replies
- 507 views
-
-
ஆரஞ்சு பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடியன. எல்லா காலகட்டங்களிலும் கிடைக்கும் பழங்களில் ஒன்று ஆரஞ்சு. இப்பழம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.சில உணவுகளை சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன. இந்த பித்த நீர், ரத்தத்தில் கலந்து ரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்து விடுகிறது. இதனால் ரத்தம் அசுத்தமடைகிறது.மேலும் பித்த நீர் தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. அத்துடன் ஞாபக மறதியும் ஏற்படுகிறது. சருமத்தை பாதித்து சுருங்கச் செய்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது. இதுபோல் இனிப்…
-
- 2 replies
- 1.4k views
-
-
முத்தம் என்ன செய்யும்? என்னதான் பொறுமை, நிதானம், மற்றவர்கள் பேசுவதற்குக் காது கொடுப்பது, பொறுப்பாக நடந்து கொள்வது, சின்சியாரிடி என்று பல்வேறு குணாம்சங்கள் ஒரு தம்பதிக்கு இருந்தாலும் அந்தத் திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியை நிர்ணயிப்பதில் முக்கியமான பங்கு தாம்பத்திய உறவுக்கு உண்டு. அதனால்தான் அந்த உறவுக்கு இருவரில் யாராவது ஒருவர் தகுதியில்லாதவராக இருக்கிறார் என்று நிரூபிக்கப்பட்டால் உடனே வேறு எந்தக் கேள்விக்கும் இடமின்றி டைவர்ஸ் கூட சுலபமாகக் கிடைத்துவிடுகிறது. ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ அந்த உறவுக்கு தகுதியில்லாத நிலை எதனால் ஏற்படுகிறது? அதைப் பற்றிப் பின்னால் பார்க்கலாம். ஆனால், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தகுதியும் திறனும் இருந்தும்கூட சிலரது வாழ்க்கையி…
-
- 26 replies
- 5.3k views
-
-
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழி செய்யும் ஹார்மோனை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. தற்போது இவர்களுக்கு "இன்சுலின்' மருந்து மட்டுமே வர பிரசாதமாக உள்ளது. இதற்கு மாற்று வழியை கண்டு பிடிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள், ரத்தத்தில் "குளுகோஸ்' அளவை குறைக்கும் ஹார்மோனை கண்டு பிடித்துள்ளனர். முதல் கட்டமாக இந்த ஹார்மோனை எலிக்கு சோதனை செய்து பார்த்து வெற்றியடைந்துள்ளனர். இதை மனிதர்களிடம் சோதனை செய்து பார்க்கும் முயற்சியில் விஞ்ஞானி ஜொனாதன் க்ராப் தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது."இந்த பரிசோதனை வெற்றியடைந்தா…
-
- 0 replies
- 568 views
-
-
வேலை, பொருளாதார நிலை, வாழ்வியல், கலாச்சார மாற்றம், ஃபேஷன் என்ற பெயரில் குழந்தை பெற்றுக் கொள்வதை ஒருசில வருடங்கள் தம்பதிகள் தள்ளிப் போடுவதுண்டு. சிலர் தங்களது இளம் வயதை அல்லது திருமணத்தின் ஆரம்பக் காலக்கட்டத்தை அனுபவிக்கிறோம் என்ற பெயரிலும் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போடுகிறார்கள். இதில் என்ன இருக்கிறது என நீங்கள் எண்ணலாம், ஆனால், தாமதமாக குழந்தை பெற்றுக் கொள்வதால் பெண்களுக்கு நாளடைவில் இதய நலன் மோசமடைகிறது என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.. இதய நலன் 30 – 35 வயதுக்கு மேல் குழந்தை குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் பெண்களுக்கு இதய நலன் குறைபாடு, மாரடைப்பு போன்றவை ஏற்படும் அபாயம் இருக்கிறது என சமீபத்திய ஆய்வில் தெரியவந…
-
- 1 reply
- 478 views
-
-
மூலிகை மருந்துகள்: 1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் 'குமரி' என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும். 2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும். 3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையி…
-
- 18 replies
- 10.9k views
-
-
அண்மையில் மறைந்த கியூப பொதுவுடைமைத் தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோவுக்கு முதுமையில் ஏற்பட்ட நோயிலிருந்து விடுபடப் பெரிதும் உதவியது முருங்கை. காஸ்ட்ரோவுக்கு முருங்கை செய்த உதவி தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் உலாவரும் செய்திகள், அதன் ஒரு பாகத்தை மட்டுமே சொல்கின்றன. காஸ்ட்ரோவின் கெரில்லா படைத் தளபதி சே குவேரா, மெக்சிகோ நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட முருங்கையைக் கியூபாவில் அறிமுகம் செய்தார். அதன்பிறகு ஃபிடெல் காஸ்ட்ரோ தன் வீட்டின் அருகே முருங்கைத் தோட்டத்தை வளர்த்துவந்தார். முதுமையில் தன்னைக் காப்பாற்றிய முருங்கை தாவரத்தின் அற்புதத் திறன்கள் பற்றி, தன் நாட்டு மக்களிடையே காஸ்ட்ரோ உரையாற்றியுள்ளார். அதை அதிசயமான தாவரம் என்று புகழ்ந்து பேசியது மட்டுமல்லாமல், வீடுதோறும் முருங்கை…
-
- 0 replies
- 335 views
-
-
மதுளையில் சுண்ணாம்பு சத்து, தாது உப்புக்கள், இருப்பு சத்து என நோயை எதிர்க்கும் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. இப்பழம் நோய் கிருமிகளை அறவே அழிக்கவும், இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி அளிக்கவும் பயன்படுகிறது. உடலை பித்தத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாதுளை பெரும் பங்கு வகிக்கின்றது. வயிற்று வலிக்கு சிறந்த நீவாரணியாகவும், உடலில் உள்ள நீர்ச் சத்துக்களை அதிகரிக்கும் தன்மையும் மதுளம் பழத்திற்கு உண்டு. மாதுளம் பழத்தின் பூ, பழம், அதன் பட்டை என அனைத்திலுமே மருத்துவ குணம் அடங்கியுள்ளது. இது உடல் கடுப்பு மற்றும் சூட்டை தணிக்கும். மூல நோய் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து எனலாம். இந்த பழத்தை சாறாக எடுத்து சாப்பிடுவதோடு பழமாகவே சாப்பிடுவதால் அனைத்துவிதமான நார்…
-
- 0 replies
- 765 views
-
-
குழந்தைகள் நலம்: உண்மையில் பரிசுத்தமானதா தாய்ப்பால்? அறிவியல் ஆய்வுகள் சொல்வதென்ன? அனா டர்ன்ஸ் பிபிசி ஃப்யூச்சர் பகுதியில் 24 ஜூன் 2022, 07:36 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DANIEL GARZON HERAZO/NURPHOTO VIA GETTY IMAGES என்னுடைய இரண்டு குழந்தைகளும் பிறந்த முதல் ஓராண்டு வரை, நான் அவர்களுக்கு தாய்ப்பால் கொடுத்தேன். குழந்தைகளுக்கான சத்துக்கள், மூளை வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி, ஜீரண மண்டலம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு துணைபுரியும் தாய்ப்பாலை அவர்களுக்குக் கொடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், மாசுபாடு குறித்த புத்தகம் ஒன்றை படித்ததன…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
பைல்ஸ் (Piles ) எனப்படும் மூலவியாதி. மலக்குடற் குதத்தின் அருகில் ஏற்படும் வீக்கம் மூலவியாதி என்று அழைக்கப்படுகிறது. வலி, இரத்தக் கசிவு, மலம் இறுகுதல், உட்காரும் போது வலி என்பன இந்த நோயின் அறிகுறிகளாகும். மல வாசலில் நல்ல இரத்தத்தைக் கொண்டுவரும் குழாய்கள், அசுத்தமான இரத்தத்தைக் வெளியேற்றும் குழாய்கள் இருக்கின்றன. அசுத்த இரத்தத்தை வெளியேற்றும் குழாய்களில் ஏற்படும் வீக்கம் மூல நோயாக இடம் பெறுகிறது. மூல நோய் இரு வகைப் படும் -உள் மூலம், வெளி மூலம், உள் மூலத்தில் மேல் பகுதி இரத்தக் குழாய்களும் வெளி மூலத்தில் கீழ்ப் பகுதி இரத்தக் குழாய்களும் வீக்கத்தால் பாதிக்கப்படுகின்றன.மூல நோயின் காரணங்களாகப் பின்வருவன குறிப்பிடப்படுகின்றன. 1. வயிற்றுப் பகுதியில் அ…
-
- 6 replies
- 8.6k views
- 1 follower
-
-
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் பச்சைக்கொத்துமல்லி இலையை தினமும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் நாற்றம் நீங்கும். கொத்து மல்லிக்கீரையை பிழிந்து கிடைக்கும் சாற்றை அம்மை மற்றும் பித்த தழும்புகளுக்கு மேல் தடவி வந்தால் அவைகளின் நிறம் தோலோடு பொருந்துவது போல மாறிவரும். முகத்தில் ஏற்படும் பருக்கட்டிகளுக்கு கொத்தமல்லி சாற்றை எடுத்து அதில் கொம்பு மஞ்சளை அரைத்து, அரைத்ததை பருக்கள் மீது பூசி வந்தால் பருக்கள் மறையும், முகம் குழந்தைகளின் முகம் போல பளபளப்பாய் இருக்கும். கொத்துமல்லி சாறுடன் சிறிது கற்பூரம் கலந்து பூசினால் தலைவலி குணமாகும். கொத்தமல்லி இலைகளினை எண்ணெய் விட்டு வதக்கி வீக்கம் கட்டிகளுக்கு வைத்து கட்டி வர அவை சீக்கிரம் கரைந்து போகும், அல்லது பருத்து …
-
- 14 replies
- 7.9k views
-
-
ஆண்களின் மலட்டுத் தன்மையை போக்கும் “பொன்னாங்கண்ணி” சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, பொன்னாங்கண்ணி கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் பொதிந்து கிடக்கிறது. பொன்னாங்கண்ணி ஓர் அற்புதமான உடற்தேற்றி என்று கூறலாம். உடல் வலியைப் போக்கக் கூடியது மட்டுமின்றி உடலுக்கு பலத்தையும் தரவல்லது. பல்வேறு நரம்பு நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை படைத்தது. பொன்னாங்கண்ணி ஞாபக சக்தியைத் தூண்டக் கூடியது. கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது. தலைவலி, மயக்கத்தை தணிக்க கூடியது. பொன்னாங்கண்ணி சாறு பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது. பொன்னாங்கண்ணிக் கீரை ஆண்களின் மலட்டுத் தன்மையையும் இயலாமையையும் போக்க கூடிய அற்புதமான மருந்தாகும். பொன…
-
- 1 reply
- 570 views
-
-
வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ விற்றமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதே நிதர்சன உண்மை. வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்சு வீதம் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும் http://www.tamilkath...ll_article.aspx
-
- 0 replies
- 500 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நான் பல்கலைக்கழக படிப்புக்காக வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முந்தைய நாள் எனக்கு 18 வயதானது. பிரிட்டனில் மது வாங்குவதற்கான வயது வரம்பை நான் அப்போது கடந்திருந்தேன். எனது புதிய வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் நான் சென்றபோது, வாரத்திற்கு எத்தனை யூனிட் மது அருந்துவீர்கள் எனக் கேட்டார். பிரிட்டனில் 1.5 யூனிட் என்பது, தோராயமாக ஒரு சிறிய கோப்பை அளவிலான ஒயினுக்கு சமம். நான் தோராயமாக “ஏழு” என பதிலளித்தேன். "இந்த எண்ணிக்கை இனியும் உயரும்” என சிரிப்புடன் பதிலளித்தார். அதிக மது அருந்துவது, ஆயுட்காலம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும். ஆனால் 30, 40 அல்லது 50 வயதுடைய ஒருவர…
-
- 0 replies
- 367 views
- 1 follower
-
-
சுரைக்காய் ஒரு உன்னத மருந்து..! மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை. நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம். ... சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும். சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. உடல் சூடு நீங்க இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவ…
-
- 0 replies
- 437 views
-
-
வலிப்பு நோய் பற்றி தெரிந்துக் கொள்ளுவோம் ! வலிப்பு நோய் என்றால் என்ன? மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம் நரம்பு செல்கள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளியிடும் போது ஏற்படும் விளைவே வலிப்பு நோய் ஆகும். இதனை காக்காய், ஜன்னி, பிட்ஸ் (fits) மற்றும் எபிலெப்ஸி (epilepsy) என்றும் அழைக்கலாம். வலிப்பு நோய் யாரை பாதிக்கும்? யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். மொத்த மக்கள் தொகையில் 100க்கு 3 முதல் 5 பேர் வரை இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நோய் அறிகுறிகள் யாவை? இது ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. கை, கால் இழுத்தல் வாயில் நுரை தள்ளுதல் சுய நி…
-
- 6 replies
- 4.7k views
-
-
[size=4]பொதுவாக நீரிழிவுகள் உடலில் இன்சுலின் குறைவாக சுரப்பதனால் தான் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை தற்போதைய அனைத்து வயதினருக்கும் வருகிறது. இதனால் அவர்கள் உண்ணும் உணவுகளில் பெரிதும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியுள்ளது. மேலும் அவற்றை கட்டுப்படுத்த இன்சுலின் ஊசிகள், சர்க்கரை இருக்கும் உணவுகளை சாப்பிடாமல் இருப்பது என்று இருக்கிறோம். ஆனால் அத்தகையவர்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. அதுதான் காரமான உணவுப் பொருட்களை உண்டால் நீரிழிவு கட்டுப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அத்தகைய காரமான உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை சாப்பிட தொடங்கலாமே. இப்போது அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!![/size] [size=4][/size] [size=4]இலவங்க பட்டை : நீரிழிவைக் கட்டு…
-
- 0 replies
- 729 views
-
-
அமெரிக்கன் மா... இங்கிருந்து நம்மூருக்கு வந்தது. இப்போது அங்கிருந்து புரோசன் (Frozen) பரோட்டாவாக வருகின்றது. அது தரும் நோயை பாருங்கள்.
-
- 1 reply
- 529 views
-
-
தற்போது கொய்யாபழம் சீசன் தொடங்கிவிட்டது, சென்னைக்கு அறுத்தால் செக்க செவேல் என்கிற கலரில் பளிச்சென்று நம்மை ஈர்க்கும், பெங்களூர் கொய்யாவின் வரத்தும் தொடங்கி விட்டது. விலை மலிவாக கிடைக்கும் கொய்யாவில் ஆப்பிளில் உள்ள சத்துக்களை விட மிக அதிகமான சத்துக்கள் உள்ளனவாம். இது மருத்துவர்கள் கூறும் தகவல்! நன்றாக பழுத்த கொய்யாபழத்துடன், மிளகு, எலுமிச்சம் பழச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ளபித்தம் நீங்கி, சோர்வும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுமாம். கொய்யாவுடன் சப்போட்டா பழம், தேன் கலந்து சாப்பிட்டால், நன்றாக ஜீரணம் ஆவதோடு மலசிக்களும் தீரும், வயிற்றுப் புண்ணும் குணமாகுமாம். அதோடு, வயிற்றுப்போக்கு, மூட்டு வலி, அரிப்பு, மூல நோய், தொண்டைப்புண் போன்ற நோய்களும் குணமாகுமாம். …
-
- 0 replies
- 655 views
-