நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
உடலை அழகாக வைத்துக்கொள்ள யாருக்குத்தான் ஆசை இல்லை. ஆனால் இந்தப் பாழாய்ப்போன மனம் இருக்கிறதே அதுதான் எல்லோருக்கும் பெரிய பிரச்சனை. பல இடங்களில் இந்த எழு நாள் டயட் ஓடித் திரிய சரி எல்லாம் செய்து பாத்தாச்சு இதை மட்டும் ஏன் விடுவான் என எண்ணி செய்வதென முடிவெடுத்தேன். முதல் நாள் தனியப் பழங்கள். பழங்கள் உண்பது என்பது எனக்கு பிடிக்கவே பிடிக்காத விடயம். அதுவும் குளிர் காலத்தில. சரி தொடங்கியாச்சு என்று முதல் நாள் காலையில வெறும் வயிற்றில் உண்டது வாழைப்பழம். காலையில் எழு மணிக்கு காலை உணவை தொடர்ந்து உண்டுவந்த எனக்கு வாழைப்பழம் ஒரு மணிநேரம் கூடத் தாங்கவில்லை. அடுத்தது எதை உண்ணலாம் என்று எண்ணிவிட்டு தோடம்பழத்தை எடுத்து உரித்தால் அது கொஞ்சம் புளி. வேறு வழியில்லை என அதை மருந்து உண்பத…
-
- 128 replies
- 12.9k views
-
-
(அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன், அக்குபஞ்சர் & மருந்தில்லா மருத்துவ நிபுணர்) உனக்கு பி.பி (Blood pressure) இருக்கா? பார்த்துப்பா..! ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்... நேரம் தவறாம மாத்திரை போட்டுக்கோ.. இல்லேன்னா ஆளையே தூக்கிடும். அங்க இங்க அலையாதே.. டென்சன் ஆகாதே.. என்று மேலும் மேலும் டென்சனாக்குபவர்கள் தான் இன்று அதிகம். அதைக் கேட்பவருக்கோ பி.பி. மேலும் எகிறும். படபடப்புடன் தலைசுற்றுவது போலவும் இருக்கும். உடனே ஓடிப் போய் பி.பி செக் செய்துகொள்வார்... நாலு கலர் மாத்திரையை எடுத்துப் போட்டுக்கொள்வார். உடனே நார்மலாகி விடுவார். இதுதான் இன்றைய பி.பி. நோயாளிகளின் பரிதாப நிலை. வாழ்நாள் நோய்க்கு பாலிசி எடுத்துக்கொண்ட பி.பி நோயாளிகளே, முதலில் பி.பி என்றால் என்ன? ஏன் வந்தது? என்பதைத் த…
-
- 0 replies
- 716 views
-
-
வணக்கம் நண்பர்களே, எனக்கு தெரிந்த ஒரு நண்பனுக்கு Histrionic personality disorder என்னும் உளவியல் பிரச்சனை உண்டு. அவருக்கு உதவுவதற்கு, அந்த நோயைப்பற்றி தமிழில் தகவழ் தேவைப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த மன நல மறுத்துவர்கள் இருந்ந்தால் தயவுசெய்து அறியத்தரவும். அல்லது அந்த நோய் பற்றி எதாவது தகவள் தெறிந்தால் சொல்லவும். நன்றி
-
- 0 replies
- 1.1k views
-
-
வணக்கம் நண்பர்களே, ஹீஸ்திரி வாவு எனும் ஒருவகை மன அழுத்த நோயைப்பற்றி நம்மில் அநேகர் கேவிப்பட்டிருப்பொம். இது பெரும்பாலும் பெண்களுக்கே அதிகமாக வருகிறது. இந்த நோயைப்பற்றி உங்களுக்கு தெரிந்த தகவழ்களை இங்கு வழங்க முடியுமா? இந்த நோயைப்பற்றிய புஸ்தகங்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் அதை தெரியப்படுத்த முடியுமா? அல்லது மன அழுத்த நோய்பற்றி அறிய, உளவியள் வைத்தியர்களை உங்களுக்கு தெரியுமா? உங்கள் உதவிக்கும் ஒத்துளைப்புக்கும் முன்கூட்டியே உங்களுக்கு நன்றிகள் அன்புடன் உங்கள் உறவு
-
- 16 replies
- 1.7k views
-
-
பேஷியல், கலர்புல் மேக்கப் என்று அழகு விடயத்தில் பெண்கள் தான் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்கள். ஆண்களோ, கட்டுக்கோப்பான உடல் அமைப்பினை பேணுவதில் தான் அதிக அக்கறை காட்டுவார்கள். ஆனால் அவர்களுக்கும், பலவகையான பேஷியல்கள் உண்டு என்பதை புரிந்து கொண்டு கொஞ்சம் முக அழகில் அக்கறை காட்டலாம். இதோ உங்களுக்கான சில பேஷியல்கள் வெள்ளரிக்காய் மாஸ்க் வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இது முகத்தில் இறந்துபோன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்கவைக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை …
-
- 0 replies
- 866 views
-
-
டாக்டர் K.M.முருகானந்தம், கொழும்பு (ஸ்ரீலங்கா) நகரைச் சேர்ந்தவர். எனக்கு முகநூல் நண்பர். டாக்டர் முருகானந்தம் அவர்கள் நிறைய நோய்கள் பற்றி பதிவுகள் எழுதியிருக்கிறார். எனது வேண்டுகோளுக்கிணங்க அவரது பதிவுகளை எனது பதிவில் வெளியிட அனுமதி கொடுத்திருக்கிறார். எனவே அவரது ஆஸ்த்மா பற்றிய கட்டுரையை வெளியிடுகிறேன். டாக்டர் முருகான்ந்தம் அவர்களுக்கு எனது மனப்பூர்வ நன்றி. அவரது நண்பர் திரு கண்ணன் சங்கரலிங்கம் மூலம் முதன்முதலில் தமிழ் தட்டச்சு கற்றுக் கொண்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆஸ்த்மா கலங்க வேண்டிய நோயல்ல 'கறுமவியாதி, எனக்கு வந்து கழுத்தறுக்கிறது" என பக்கத்துவீட்டு செல்லம்மா பாட்டி அங்கலாய்க்கிறாள். குளித்ததால் வந்ததா? மு…
-
- 3 replies
- 865 views
-
-
நல்லெண்ணெய்யைக் கொண்டு சமையல் செய்தால் உடலுக்கு மிகவும் நல்லது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அத்தகைய நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இத்தகைய நல்லெண்ணெய்யில் வாயைக் கொப்பளிப்பது 'ஆயில் புல்லிங்' என்று கூறப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நோய்களும் குணமாகின்றன. இத்தகைய ஆயில் புல்லிங்கை விடியற்காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில், பல் துலக்கியதும் சுத்தமான நல்லெண்ணெயை இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து கொப்பளிக்கவும…
-
- 1 reply
- 668 views
-
-
வாழ்வில் அனைத்து வளங்களைப் பெற்றிருந்தும், இல்லற சுகம் என்ற உன்னதத்தை முழுவதும் அனுபவிக்க முடியாத ஆண்கள் ஏராள மானோர் உள்ளனர், இயற்கையின் வரப்பிரசாத மான சாதாரணமாகக் கிடைக்கக் கூடய சமையல் அறை உணவுகள், வாசனைப் பொருட்களை சாப் பிட்டாலே நல்ல பலனைக் காணமுடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை. உணவே மருந்து பொதுவாக, செக்ஸ் உந்துதலானது, சாவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவனையும் நிமிர்ந்து உட்காரச் செய்யக்கூடிய ஈர்ப்பு சக்தி உடையது. உடல் உறவுக்கும், உணவுக்கும் தொடர்பு உண்டு. நாம் தினசரி சாப்பிடும் சாதா ரண சமையலுக்குப் பயன்படும் பொருட்கள் வயோதிகர்களையும் முறுக்கேறிய வாலிபர்களாக மாற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. கறிவேப்பிலையின் மகத்துவத்தை உணராமல் எப்படி தூக்கி ஏறிகிறோமோ, அதைப் …
-
- 8 replies
- 5.1k views
-
-
-
விற்றமின் B12 ம் வயதானவர்களின் மூளை சுருங்குதலும் - டொக்டர்.எம்.கே.முருகானந்தன் - “ஒரு விற்றமின் B12 ஊசி அடித்துவிடுங்கோ” இவ்வாறு கேட்டு வருபவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு இது உண்மையான மருத்துவத் தேவையாக இருந்த போதும் பலருக்கு அது தேநீர் குடிப்பது போல ஒரு பழக்கமோ என நான் எண்ணுவதுண்டு. “ஒரு தேத்தண்ணி குடிச்சால்தான் உசார் வரும்” என்பது போல ஒரு ஊசி அடித்தால்தான் அவர்களுக்கு மனம் சார்ந்த உற்சாகம் வருவதுண்டு. இது அவ்வாறிருக்க, வயதானவர்களின் இரத்தத்தில் B12 அளவு குறைவாக இருந்தால் மூளையின் கலங்கள் சிதைவடைவதற்கும், மூளையின் அளவு சுருங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக அண்மையில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது. மூளையின் கலங்கள் சிதைவதானது அறிவார்ந்த செயற்ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
தைராய்டு என்பது நமது கழுத்தின் முன்பக்கத்தில் குரல்வளைப்பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் உள்ள ஒரு சுரப்பி. சாதாரணமாக முழுவளர்ச்சியடைந்த மனிதர் உடலில் உள்ள தைராய்டு சுரப்பி 15 முதல் 25 கிராம் எடையுள்ளதாக இருக்கும். நம் உடலில் உள்ள இதயம், கணையம், நுரையீரல், சிறுநீரகம் இவைபோல் தைராய்டுச் சுரப்பிக்கும் சில முக்கியமான பணிகள் உள்ளன. இச்சுரப்பி, T3, T4 எனும் இரண்டு மிக முக்கியமான ஹார்மோன்களைச் சுரக்கின்றன. நமது உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு இன்றியமையாதவை இவ்விரண்டு ஹார்மோன்கள். இந்த ஹார்மோன்களின் பணி என்ன? இந்த ஹார்மோன்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும், திசுவிற்கும், செல்களுக்கும் தேவையானவை. ஒவ்வொரு நிமிடமும் உடலில் நடக்கும் எல்லாச்செயல்பாடுகளையும், அது ஆற்றலை…
-
- 0 replies
- 2.9k views
-
-
தாய்ப்பால் ஊட்டுதல்: குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே உணவும் பானமும் ஆகும். சாதாரனமாக வேறு எந்த உணவோ அல்லது பானமோ இந்த காலகட்டத்தில் தேவையில்லை. தாய்ப்பால் மட்டுமே பிறந்த குழந்தைகளுக்கு தேவையான ஒரே உணவாகும். மிருகங்களின் பாலோ, குழந்தைகளுக்கான பால்பவுடர், டீ, இனிப்பு பானங்கலோ, தண்ணீர் அல்லது, தானிய உணவுகளோ, தாய்ப்பாலை விட சிறந்தது அல்ல. தாய்ப்பாலே குழந்தைக்கு எளிதாக செமிக்கக் (சமிபாடடையக்) கூடியது. அது தான் சிறந்த வளர்ச்சி, முன்னேற்றம், மற்றும், நோய்களிலிருந்து பாதுகாப்பும் அளிக்கிறது. சூடான, வறட்சியான காலங்களில் கூட தாய்ப்பால், சிறு குழந்தையின் நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. தண்ணீர் அல்லது பிற பானங்களோ பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தேவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
மல்டிபுல் ஸ்கெலெரோஸிஸ் [ multiple sclerosis (MS) ] என்று சொல்லப்படுகின்ற மூளைக் கோளாறினால் மூளையின் நரம்புகளில் ஏற்படுகின்ற சேதங்களை கட்டுப்படுத்தி சரிசெய்யக்கூடிய வழியொன்றைத் தாங்கள் கண்டறிந்துள்ளதாக பிரிட்டனிலுள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எம். எஸ். என்று சுருக்கமாக அழைக்கப்படுகின்ற இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்ட நரம்பு நார்களுக்கான மூளை குறுத்தணுக்களை தூண்டிவிடுவதன் மூலம் புத்துயிர் தர முடியும் என்று இவர்கள் நம்புகின்றனர். மல்டிபுல் ஸ்கெலெரோஸிஸ் பற்றி பல விஷயங்களை நாம் அறிந்தாலும் அந்த நோய் எதனால் வருகிறது என்பது இன்னும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது. எம்.எஸ். வந்தால் உடலில் ஏற்படும் முக்கிய பாதிப்பு என்பது நரம்பு நார்களைப் சுற்றிப் படிந்துள்ள மைலீன் எ…
-
- 0 replies
- 550 views
-
-
ஆண்டொன்றுக்கு 15 லட்சம் அமெரிக்கர்களுக்கு மாரடைப்பு நோய் ஏற்படுகிறது. உலகமுழுதும் ஆண்டொன்றுக்கு 140 லட்சம் பேர் அந்த மாரடைப்பு நோயினால் சாகின்றனர். உலகிலேயே இந்தியர்களுக்கே அதிகமாக மாரடைப்பு நோய் வருகிறது! இந்தியர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு நோய் அமெரிக்கர்களைவிட 3 அல்லது 4 மடங்கு அதிகம்! இந்தியர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு நோய் சீனர்களைவிட 6 அல்லது 7 மடங்கு அதிகம்! இந்தியாவில் 4 கோடி பேருக்கு மாரடைப்பு நோய் உள்ளது! ஆண்டு ஒன்றுக்கு மேலும் 10 லட்சம் பேருக்கு இந்நோய் ஏற்படுகிறது! 100 இந்தியர்களுக்கு மாரடைப்பு நோய் ஏற்பட்டால்,அதிகம் 7 முதல் 10 பேருக்கு மற்ற பிரச்சனைகள் வருகின்றன, உதாரணம் இருதயம் பலவீனம் அடைதல் (heart failure…
-
- 0 replies
- 948 views
-
-
Jun 5, 2011 / பகுதி: மருத்துவம் / சூரிய குளியல், ஆயுளை நீடிக்கும் மேற்கத்திய நாடுகளில் பல மாதங்களுக்கு பனி பெய்வதால் சூரிய ஒளி அதிகம் கிடைப்பதில்லை. சூரிய ஒளி கிடைக்கும் காலங்களில் ஐரோப்பியர்கள் கடற்கரை நகரங்களில் கடற்கரை மணலில் துணியை விரித்து குறைந்த உடையில் சூரிய ஒளி உடலில் படுமாறு படுத்து விடுவார்கள். இப்படி சூரிய குளியல் போடுவது தோல் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்த்து நீண்ட காலம் உயிர் வாழ உதவுகிறது என்று அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர். இது தொடர்பாக சுவீடனில் உள்ள லுன்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஹகன் ஆல்சன் கூறுகையில், பெண்கள் தான் அதிக அளவில் சூரிய குளியல் போடுகிறார்கள். அவர்கள் நீண்ட காலம் உயிர் வாழ்கிறார்கள் என்று தெரிவித்தார். இவர் 40 ஆயிரம் பெண்களிடம் ஆய…
-
- 0 replies
- 840 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அமண்டா ருகேரி பதவி, பிபிசி நியூஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இரவு தூக்கத்திற்குப் பிறகு சுறுசுறுப்பாக உணர்வதற்கான ரகசியம், உங்களது பகல் நேரப் பழக்க வழக்கங்களில் இருந்து தொடங்குகிறது. உங்கள் தூக்கத்தை மேம்படுத்தவும், சோர்வைக் குறைக்கவும் சில குறிப்புகள் இங்கே அளிக்கப்பட்டுள்ளன. சோர்வாக உணர்கிறீர்களா? நீங்கள் மட்டுமே அவ்வாறு உணர்வதில்லை. அதோடு, உங்களது தூக்கப் பழக்கத்தை எப்படி மாற்றுவது என்பது குறித்தும் நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கலாம். இதுகுறித்து அடிக்கடி நமக்குச் சொல்லப்படும் உத்திகள் பெரும்பாலும், இரவுநேரப் பழக்கங்களைக் குறித்தானதாகவே இருக்கும். அதாவது வழக்கமாக உறங்கும் நேரம், படுக்கையில் கைப்பேசியை உபயோகப்படுத்தாமல…
-
- 0 replies
- 481 views
- 1 follower
-
-
[size=4]இன்றைய இளைஞர்களுக்கு விரைவிலேயே மூட்டு வலி, இடுப்பு வலி என்று வந்துவிடுகிறது. இதற்கு பெரும்பாலும் எத்தனால், சிலிகான் போன்ற சத்துக்கள் உடலில் குறைவாக இருப்பதே ஆகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் தற்போது உள்ள இளைஞர்கள் ஆல்கஹைலை அதிகம் அருந்துகின்றனர். அதிலும் பீர் தான் அனைவராலும் அதிகம் அருந்தப்படுகிறது.[/size] [size=4]மேலும் மதுபானத்தை மருந்து போல் உட்கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை பல தொடர் ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் ஜொனாத்தன் போவெல் தலைமையில் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் பற்றி ஆய்வு மேற்கொள்ளும் பிரிவினர் எலும்பின் வலுவுக்கு பீரின் பங்களிப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.[/size] [size=…
-
- 2 replies
- 660 views
-
-
பன்றிக்காய்ச்சலுக்கு சீனா மருந்து தயாரிப்பு [23 - June - 2009] பன்றிக் காய்ச்சலுக்கு (influenza A(H1N1) சீனா முதற்தொகுதி மருந்தைத் தயாரித்துள்ளதாக நேற்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது. சீனாவின் மருந்தாக்கல் நிறுவனமொன்றே இந்த முதற்தொகுதி மருந்துவகையைத் தயாரித்திருப்பதாக அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஐ.ஏ.என்.எஸ்.செய்திகள் தெரிவித்தன. செப்டெம்பரிலேயே சந்தைக்கு இத்தடுப்பு மருந்துகள் பாவனைக்கு விடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வுகூடங்களில் பாதுகாப்பு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முன்சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின் செப்டெம்பரில் இந்த மருந்துவகை சந்தைக்கு வரும் என்று ஹியூலான் உயிரியல் பொறியியல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வைரஸ் மாதிரியை உலக…
-
- 0 replies
- 713 views
-
-
எம்.மணிகண்டன் பிபிசி தமிழ் (பாலியல் நலம் குறித்து பிபிசி தமிழ் வெளியிட்டு வரும் தொடரின் மூன்றாவது பாகம் இது) தாம்பத்ய உறவில் திருப்தியில்லை, கருத்தரிப்பதில் சிக்கல் ஆகிய பிரச்னைகளுடன் பாலியல் நிபுணரின் ஆலோசனைக்குச் சென்றனர் கிருஷ்ணா - மாலா தம்பதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர்களைப் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்கள் இருவருக்கும் உடல் ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் இருவரிடமும் தனித்தனியே விவரங்களைக் கேட்கும்போது, தன்னுடைய கணவர் இரவு இரண்டு மணி வரை ஆபாசப் படங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதாக பாலியல் நிபுணரிடம் கூறியிருக்கிறார் மாலா. சமூக ரீதியாக தம்மை நன்றாக நடத்துவதாலும், மரியாதைக்குரியவர் என்பதாலும்…
-
- 0 replies
- 267 views
-
-
''எப்பவும் டயர்டா இருக்கு. சுறுசுறுப்பா எந்த வேலையும் செய்ய முடியலை, முடி கொட்டுது. சத்துக்குறைவா இருக்கும்னு தோணுது. ஏதாவது சத்து மாத்திரை எழுதித் தாங்க டாக்டர்' இப்படிக் கேட்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆரோக்கியமான சரிவிகித உணவை உட்கொண்டதுபோய், காலையில் இரண்டு, மதியம் ஒன்று, இரவுக்கு மூன்று என மாத்திரைகள் மூலமே ஆரோக்கியமாக வாழ்ந்துவிடலாம் என நம்பத் தொடங்கிவிட்டோம். ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியப்பட்டு டாக்டரின் ஆலோசனைப்படி மாத்திரை எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், சுயமாக ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிடுவதால் பாதிப்புகள்தான் அதிகம். யாரெல்லாம் வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம், எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளலாம், வைட்டமின் மாத்திரைகளிலும் பக்கவிளை…
-
- 0 replies
- 2.3k views
-
-
பீற்றூட் இதை ஆங்கிலத்தில் (Beta Vulgaris) என்று சொல்லுவார்கள். இதன் பிறப்பிடம் மத்திய ஐரோப்பாவும்,ஐக்கிய அமெரிக்காவும் ஆகும் இருந்தாலும் தற்பேது இந்தோசீனா,பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்கா,மற்றும் இந்தியாவிலும் பயிரிடப் படுகிறது. இதில் காபோஹைட்ரேட்கள் சர்க்கரை வடிவில் இருக்கும். சிறிதளவு புரதமும்,கொழுப்பும் உண்டு. ஈரப்பதம்-87.7 கிராம் புரதம்-1.7 கிராம் கொழுப்பு -0.1 கிராம் தாதுக்கள்-0.8 கிராம் காபோஹைட்ரேட்கள்-8.8 கிராம் கால்சியம்- 200 மி.கி மக்ளீசியம்- 9 மி.கி ஆக்ஸாலிக் அமிலம்- 40 மி.கி பாஸ்பரஸ்- 55 மி.கிஅயம்- 0.4 மி.கி சோடியம்- 59.8 மி.கி பொட்டாசியம்- 43 மி.கி செம்பு- 0.20 மி.கி சல்பர்- 14 மி.கி தயமின்- 0.04 மி.கி ரைபோஃப்ளேவின்- 0.09 மி.கி …
-
- 9 replies
- 2.4k views
-
-
வாழ்க்கையில் நாம் சில விஷயங்களை நிச்சயம் கடைபிடித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயம் உள்ளது. அதில் முக்கியமான ஒன்று கோபம். எதை அடக்க தெரிகிறதோ இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். கோபம் உங்களின் நட்பை மட்டும் கெடுக்கவில்லை. உங்கள் உடல் நலனையும் கெடுக்கின்றது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை.இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறக்கவும் நேரிடும். இன்றைய நமது ஹெல்த் டிப்ஸ் பகுதியில் கோபத்தால் ஏற்படும் உடல் பிரச்சனைகளைக் காணலாம்… மன அழுத்தம் …
-
- 0 replies
- 799 views
-
-
அதிகரிக்கும் சிறுநீரக நோய் [07 - March - 2007 நாளைய தினம் உலக சிறுநீரக தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் பலவற்றில் சிறுநீரக நோய் பரவலாகக் காணப்படுகின்றதெனினும், மக்கள் மத்தியில் அது தொடர்பான விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருக்கிறது. சர்வதேச சிறுநீரகவியல் சங்கத்தின் இணை அமைப்பாக விளங்கும் இலங்கை சிறுநீரகவியல் மற்றும் உறுப்புமாற்று சிகிச்சை சங்கம் சிறுநீரக நோய் தொடர்பாக இலங்கையர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் பாரிய பிரசார இயக்கமொன்றை ஆரம்பிக்கவிருக்கிறது. சிறுநீரக நோயைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் செய்தியைப் பரப்புவதற்கான சுவரொட்டி இயக்கம் முன்னெ…
-
- 0 replies
- 1.1k views
-
-
உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்: * தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும். * எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். * வேக வ…
-
- 0 replies
- 602 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஜோஷ் எல்ஜின் பிபிசி செய்திகள் 26 ஜூலை 2025, 08:00 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் மூளை சக்தியை அதிகரிக்கவும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கவும், ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பது போதுமானதாக இருக்கும் என்று ஒரு முக்கிய ஆய்வு கூறுகிறது. 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்பது பொதுவாக அடைய வேண்டிய இலக்காக கருதப்படுகிறது. ஆனால், அதைவிட எளிதாக அடையக் கூடிய, யதார்த்தமான இலக்காக இது இருக்கலாம். லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான ஒரு புதிய ஆய்வறிக்கை, புற்றுநோய், டிமென்ஷியா மற்றும் இதய நோய் போன்ற உடல்நலப் பிரச்னைகளின் அபாயம் குறைவதற்கும், இந்த எண்ணிக்கைக்கும் தொடர்புள்ளது என கண்டறிந்துள்ளது. மக்கள் தங்களது ஆரோக்கியத்த…
-
-
- 8 replies
- 586 views
- 1 follower
-