நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
பொதுவாக ஒரு சாதாரண மனிதன் இரண்டு முறை அல்லது ஐந்து முறை தும்முவதுடன் தும்மல் நின்று விடுகிறது. சிலருக்கு ஒரு நேரம் பத்து பதினைந்து தடவையாவது தும்மல் வரும், தும்மியே களைத்து விடுகிறார்கள்... மூக்கு அடைத்தும் விடுகிறது... இது ஓரிரு நாட்களுக்கு மட்டும் இல்லை பல ஆண்டுகளாக இருக்கிறது. வீட்டில் இருக்கும் போது தும்மல் வாறது ஒருபக்கம் இருக்க, பொது வாங்கனங்களில் இருக்கும் போது தும்மல் ஆரம்பித்து சங்கடப் படுத்துகிறது. தும்மல் தானே என்று இதுவரைக்கும் வைத்தியரின் ஆலோசனை கேட்கவில்லை. - எதனால் இப்படி ஏற்படுகிறது? - சுவாசக் குழாயில் ஏதும் பிரச்சனையா? - அல்லது பயப்பிட வேண்டிய அளவுக்கு பெரிதாக ஒன்றும் இல்லையா? விளக்கம் தெரிந்தால், தயவு செய்து அறியத் தாருங்கள். -நன்றி
-
- 12 replies
- 3.9k views
-
-
"அழுகிய முட்டை நாற்றம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்' நியூயார்க், அக். 24: அழுகிய முட்டையிலிருந்து வெளியாகும் துர்நாற்ற வாயு, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் என்று கனடா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முட்டை என்றாலே சிலருக்கு அலர்ஜியாக இருக்கும். அதுவும் அழுகிய முட்டை என்றால், கேட்கவே வேண்டாம், யாராக இருந்தாலும் பல மைல் தூரத்துக்கு அப்பால் ஓடி விடுவார்கள். ஆனால் அந்த "கூமுட்டையில்' ஏராளமான மருத்துவக் குணம் இருப்பதாக கனடாவைச் சேர்ந்த லேக்ஹெட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அழுகிய முட்டையிலிருந்து வெளியாகும் ஹைட்ரஜன் சல்பைட் வாயு, மனித ரத்த நாளங்களைத் தளர்வாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது என்று அந்த பல்கலைக்கழகத்தின் மூத்த விஞ்…
-
- 8 replies
- 3.9k views
-
-
கிரான் பெர்ரி என்பது வட அரை கோளத்தில் உள்ள குளிர் நாடுகளில் கிடக்கும் ஒரு பழம். மேலதிக தகவல் : http://en.wikipedia....iki/Cranberry�� படம் : http://taketwoofthese.com/?p=220 படம் : http://terminalberit...ion-in-children இந்த பழச்சாறை / அல்லது பழத்தில் செய்த மாத்திரைகளை உள்ளெடுப்பது சிறு நீர்க் குளாய்கள் அல்லது சிறு நீர்ப்பை ([size=3]urinary tract infection)[/size] போன்றவற்றில் ஏற்படும் தொற்றுக்களை குறைக்கும் அல்லது தோற்று ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கும் என சொல்லப்படுகிறது. எவ்வாறு தடுக்கிறது என்பதை காட்டும் காணொளி. முழுமையாக தமிழக்கம் செய்ய நீண்ட நேரம் செல்லும். மேலே சொன்னது தான் சுருக்கமான உள்ளடக்கம் மேலதிகமாக வசிக்…
-
- 4 replies
- 3.9k views
-
-
யாழ் களத்தில் உள்ள மருத்துவர்கள் யாராவது இதைப்பற்றி சொல்லமுடியுமா
-
- 37 replies
- 3.9k views
-
-
சிக்கன், மட்டனை விட கடல் உணவுகளில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் அதிகளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது, இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கும். இறாலில் ஹெபாரின் என்ற பொருள் அடங்கியுள்ளதால், கண் பார்வை சிதைவிலிருந்து காக்கும். முக்கியமாக கணனி முன் நீண்டநேரம் வேலை செய்பவர்களுக்கு சிறந்தது. இறாலில் உள்ள கனிமங்கள் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும், தசைகள் வலுவடையும். இதில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால் எலும்பு சிதைவுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். இறாலில் அயோடின் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது. சருமம் வயதா…
-
- 11 replies
- 3.9k views
-
-
நோய்களைக் குணப்படுத்தும் நகைகள் நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை... அதில் மருத்துவ ரீதியான பலன்களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். ‘‘குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது...!’’ என்கிறார் கோவை கே.ஜி. மருத்துவ மனையின் அக்குபஞ்சர் துறை டாக்டர் சி.வி. அருணா சுபாஷினி.. அவர் சொன்னார்... ‘‘நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதைகளும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. ‘நாடி ஓட்டப் பாதை’ என்று இதற்குப் பெயர…
-
- 3 replies
- 3.9k views
-
-
தொழில் சம்பந்தமான பணிகளால் இரவில் நன்றாக தூங்கவில்லையா? இரவில் வெகுநேரம் கண்விழித்து படிக்கிறீர்களா? இது பிற்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. மூளையின் நுட்பமான பகுதிகளின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்க வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள். எலிகளை நீண்ட நேரம் தூங்க விடாமல் செய்து அவற்றின் மூளை செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று ஆய்வு செய்தனர். அப்போது எலியின் மூளையில் தசைகள், பீட்டா செல்கள் பாதிக்கப்பட்டன. இதன்மூலம் “அல்சிமர்” நோய் ஏற்படுவதும் தெரிகிறது. எனவே இரவில் சரியாக தூங்காவிட்டால் மூளையை பாதிக்கும். http://www.lankasritechnology.com/index.ph...amp;ucat=2&
-
- 29 replies
- 3.9k views
-
-
வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான். அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம். ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில உணவுக்கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும். அத்தகைய டயட்…
-
- 0 replies
- 3.8k views
-
-
ஒல்லி பெல்லி! சாத்தியமா? உடான்ஸா? எடை குறைய என்ன வழி? 'மச்சி, ரெண்டு கிலோ எடையைக் குறைக்கிறதுக்கு... ஊரெல்லாம் தெருத் தெருவா ஓடுறேன்டா! அந்த டி.வி. புரோகிராம்ல 30, 40 கிலோனு எப்பிடிடா குறைச்சாங்க?' - விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில், நூறு நாட்களில் உடல் எடையை 40 கிலோ வரை குறைத்த ஒரு பெண்மணியைப் பார்த்து வந்த பொறாமைப் புலம்பல் இது. 'ஒல்லி பெல்லி’ நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் பலரின் கேள்வி இதுதான்! ஜிம்முக்குப் போகாமலேயே, உடல் எடையைக் குறைக்க மாத்திரைகளில் ஆரம்பித்து ரோப், எலக்ட்ரானிக் பெல்ட் என ஆசை வார்த்தை காட்டும் விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகம். ''ஆறேழு கிலோ எடையைக் குறைப்பதற்கே அல்லாடுபவர்கள் இருக்கும் நிலையில், மிகக் குறுகிய காலத்தில் எப்படி இவ்வளவு எடைய…
-
- 3 replies
- 3.8k views
-
-
வெளிநாட்டில் வசிக்கும் ஒரு அலோபதி மருத்துவர் தன் மகனுக்கு இதய அடைப்பு இருக்கிறது அஞ்சியோகிராம் செய்யலாம் என்று சக மருத்துவர் பரிந்துரைத்தாலும் இயற்கை முறையில் இதை குணப்படுத்த மருந்து இருக்கிறதா என்று நம்பிக்கையுடன் இமெயில் அனுப்பி இருந்தார். மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான இதயவலி, இதய அடைப்பு, இதயபலவீனம் போன்ற அத்தனை நோய்களுக்கும் எளிய மருந்து ஒன்றை அகத்தியர் தம் நூலில் தெரிவித்திருப்பதை அப்படியே அவருக்கு தெரிவித்தோம், மருந்து பயன்படுத்த தொடங்கிய 35 நாட்களில் நல்ல முன்னேற்றம், தொடர்ந்து இரண்டு மாதம் பயன்படுத்தி எந்த அறுவைசிகிச்சையும் செய்யாமல் முழுமையான குணம் அடைந்துள்ளார், மருந்தை தெரியப்படுத்திய குருநாதருக்கு நன்றி. மருந்து என்ன என்பதை தெரியப்படுத்தும் முன் ஒரு சில வ…
-
- 3 replies
- 3.8k views
-
-
‘‘பல்லுப் போனால் சொல்லுப் போச்சு!’’ என்பது பழைய மொழி! ‘‘பல்லுப் போனால் தன்னம்பிக்கை போச்சு!’’ என்பதுதான் உண்மையான ‘பல்’ மொழி! நல்ல, உறுதியான, சுத்தமான, வெண்மையான பல் வரிசை −ருந்தால், எங்கேயும் எப்போதும் புன்னகை அரசியாய், உற்சாகமாய் நீங்கள் வளைய வரலாம். நிறமிழந்த பற்களையும் டாலடிக்க வைக்கும் நவீன சிகிச்சைகள் பற்றித் தெரிந்து கொள்வோமா? ‘‘நான் நல்லாதான் பல் தேய்க்கிறேன். ஆனா பல் வரிசை பளிச்சுன்னு மின்ன மாட்டேங்குதே! −ப்ப ஏதோ புதுசா ப்ளீச்சிங் டெக்னிக் வந்துருக்காமே! அதை செஞ்சு விடுங்க டாக்டர்’’ என்று வரும் −ளம்பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது. எஸ்.. டூத் ப்ளீச்சிங் செய்தால், பற்களை அரை மணி நேரத்திலேயே முத்துப் போல பிரகாசிக்க செஞ்சுடலாம் தான். ஆனால்…
-
- 18 replies
- 3.8k views
-
-
ஓட்ஸ்யில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. இதில் இயற்கை இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு மிகவும் நல்லது. இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்பை உறிஞ்சி வெளியேற்றுகிறது. மேலும் இதில் உள்ள கரையக்கூடிய நார்பொருள், வயிறு, குடல் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒழுங்கு செய்வதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் உடலின் வெப்பநிலை சீராக இருப்பதால் முகத்தில் பருக்கள் வருவதை தடுக்கிறது. ஓட்ஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது. நரம்பு சம்மந்தமான …
-
- 24 replies
- 3.8k views
-
-
கண்கள் என்ன அறிகுறி? : கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும். என்ன அறிகுறி? : கண் இமைகளில் வலி என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து க…
-
- 3 replies
- 3.8k views
-
-
நாளாந்தம் மல்ரி வைற்றமின் உள்எடுப்பது எங்கள் உடலுக்கு உண்மையில் ஆரோக்கியமானதா?? வணக்கம், நீங்கள் நாளந்தம் மல்ரி வைற்றமின் குளிகைகள் எடுக்கிறனீங்களோ? இது உடலுக்கு உண்மையில ஆரோக்கியமானதா / இல்லாததா? தினமும் உள்ளெடுக்கப்படும் மல்ரி வைற்றமின் குளிகைகள் எங்கட உடலில விரும்பத்தகாக இரசாயண மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஓர் கருத்து நிலவுகின்றது. மல்ரிவைற்றமின் குளிகைகளாக இருந்தாலும் சரி குடும்ப வைத்தியரிடம் ஆலோசனை கேட்பது சிறந்தது எங்கட பாட்டுக்கு நாங்களாக மல்ரி வைற்றமின் குளிகைகளை போடுவது ஆரோக்கியமானது அல்ல என்றும் ஓர் கருத்தை கட்டுரை ஒன்றில் பார்த்தேன். எங்கட உடம்பில் ஓர் இரசாயண சமநிலை நிலவுகின்றது. ஒழுங்கான, சீரான உடம்பின் இயக்கத்திற்கு இந்த சமநிலை மிகவும் ம…
-
- 13 replies
- 3.8k views
-
-
சாப்பிடும் உணவுப் பொருளுக்கு ஏற்ப ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் என்பதால், அன்றாடம் சாப்பிடும் உணவில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே கிளைசிமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்ற உணவு ஒப்பீட்டு அட்டவணை உள்ளது. அதாவது ஏற்கெனவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவோடு நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களால் கூடுதலாகும் சர்க்கரை அளவை 100 கிராம் குளுக்கோஸ�டன் ஒப்பிடுவதே கிளைசிமிக் இண்டெக்ஸ் ஆகும். உதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 மி.கி. இருப்பதாகக் கொள்வோம். அவர் 100 கிராம் குளுக்கோஸ் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மேலும் 100 மி.கி. கூடுதலாகி மொத்தம் 200 மி.கிராமாக அதிகரிக்கும். அவர் ஒரு குளோப் ஜாமூன் சா…
-
- 3 replies
- 3.8k views
-
-
சின்ன சின்ன முத்துக்களாக, உண்ணக்கூடிய வகையில் இருக்கும் ஒரு பொருளை கண்டு வியக்காதவர்களே இருக்க முடியாது. சமைக்கும் முன் வெண்ணிறத்தில் பளிச்சிடும் இது சமைத்த பின் கிட்டத்தட்ட ஒளிஊடுருவும் வடிவத்தை பெற்றுவிடும். ஆம், நீங்கள் யூகித்தது சரியே - இந்த சின்ன முத்துக்களை நாம் 'ஜவ்வரிசி' என்று அழைப்போம். பொதுவாக விரதம் இருக்கும் போது எடுத்து கொள்ளும் உணவு வகைகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை பல வகை உணவு தயாரிப்பின் போது பயன்படுத்தப்படுகிறது. இனிப்பு மற்றும் காரம் என இரண்டு வகையான பலகாரங்களிலும் இது சேர்க்கப்படுகிறது. மேலும் அனைவராலும் ரசித்து ருசித்து உண்ணப்படும் பொருளாகவும் இது விளங்குகிறது. ஜவ்வரிசி பாயாசம் என்றால் யாருக்காவது எச்சில் ஊறாமல் இருக்குமா? ஆம், குழந்தைகள் முத…
-
- 1 reply
- 3.8k views
-
-
இரவு நேரத்தில் அதிகமாக சுரக்கும் "செக்ஸ்" ஹாமோன்கள்: எச்சரிக்கை இரவு நேரத்தில் பணிபுரிவர்களுக்கு செக்ஸ் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கப்படுவதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவை சேர்ந்த Pompeu Fabra University இரவு நேரத்தில் பணிபுரிபவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் சாத்தியம் அதிகமாக இருப்பதற்கு காரணம் ஏன் என்பது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதற்காக 100 பேரை தெரிவுசெய்து 24 மணி நேரத்தில் அவர்கள் கழிக்கும் சிறுநீரை ஆய்வு செய்தது. அதில், செக்ஸ் ஹார்மோன்களான ‘டெஸ்டோஸ்டிரோன்’ மற்றும் ‘ஈஸ்ட்ரோஜன்’ ஆகியவை தவறான நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவை விட அதிகமாக சுரப்பது கண்டறியப்பட்டுள்ளது. இயல்பு வாழ்க்கையில் காலை 6 மணி முதல் 10 வரை சுரக்கும் இந்த…
-
- 11 replies
- 3.8k views
-
-
உங்க எடை கூடிக்கிட்டே இருக்கா..? காரணங்கள் என்ன... கரை சேர்வது எப்படி? சா.வடிவரசு 'ஒபிஸிட்டி’ எனப்படும் உடற்பருமன், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று அதிகரித்துள்ளதாக மருத்துவத் தகவல்கள் அலறுகின்றன. உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட ஒபிஸிட்டிக்கான காரணங்கள், இதன் விளைவுகள், குறிப்பாக பிசிஓடி (Polycystic Ovary Disease) எனப்படும் நோய் முதல் குழந்தைப்பேறின்மை வரை பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், ஒபிஸிட்டிக்கான தீர்வுகள் என்று நிபுணர்களின் வழிகாட்டலை விரிவாகப் பார்ப்போம்! பிழையாகிப் போன உணவுப் பழக்கம்! இந்த விபரீத நோய் பற்றி பேசும் பெண்கள் சிறப்பு மருத்துவர் பிரேமலதா, ''ஒபிஸிட்டி இன்று இந்தளவுக்கு அதிகரித்து வருவதற்குக் காரணம், மாறிவரும் வாழ்க்கை முறைதான் (Modi…
-
- 1 reply
- 3.8k views
-
-
வாயூறி என்ன பயன்..... 30 வகை எண்ணெய் இல்லாத சமையல் – சமையல் கலை நிபுணர் ரேவதி சண்முகம் ”எதுக்குத்தான் இப்படி எண்ணெயைக் கொட்டி கத்திரிக்காயைச் சமைப்பியோ..?!” என்று தெறித்து ஓடும் அளவுக்கு பலரையும் பாதித்துக் கொண்டிருக்கிறது, உணவில் மிதமிஞ்சி பயன்படுத்தப்படும் எண்ணெய்! எண்ணெய் என்றால் என்னவென்றே தெரியாத காலத்தியே விதம்விதமான சமையல் இருக்கத்தான் செய்தது. எள்ளு தாத்தா-எள்ளு பாட்டியிடம் (உயிரோடு இருந்தால்) கேட்டுப் பாருங்கள்… பல தலைமுறைகளாக தாங்கள் சப்புக்கொட்டி, ரசித்து, ருசித்து சாப்பிட்டு, நோய் நொடியில்லாமல் வலம் வந்த அந்த ரகசியத்தைச் சொல்வார்கள்! அப்போதெல்லாம், பண்டிகைகளுக்கு மட்டுமே எண்ணெய் என்பது வீடுகளை எட்டிப் பார்க்கும். இன்றைக்கோ… தோசை, பூரி, வட…
-
- 1 reply
- 3.8k views
-
-
ஆண்களை விடவும் இளம்பெண்கள் அதிகமான மன அழுத்ததிற்கு உள்ளாவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கின்றது. இதற்கு காரணம், ஆஸ்ட்ரோஜென் என்னும் பாலியல் ஹார்மோன் பெண்களின் மூளையில் ஏற்படுத்தும் மாற்றத்தால், அதிகமான ரத்தம் செலுத்தபட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது. இதுபோன்ற பாலியல் மாற்றங்கள், இளம்பெண்கள் பருவத்தை எட்டும்போது, அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதனால், முரண்மூளை நோய் (schizophrenia), நரம்பியல் குறைபாடுகள், மனநல குறைபாடுகள் போன்ற நோய்கள் ஏற்படுவதாக, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தியோடர் சட்டெர்த்வைத் தெரிவிக்கிறார். பொதுவாக, பெண்களுக்கு அதிக அளவில் மனக் கவலையும் மன அழுத்தமும் ஏற்படுக்கின்றன. அதே போல், ஆண்களுக்கு முரண்மூளை நோய் போன்ற மூ…
-
- 31 replies
- 3.7k views
-
-
பொதுவாக பெண்களின் கைகளில் குறிப்பாக உள்ளங்கைகளில் ஆண்களை விட 50% அதிகமான நோய் விளைவிக்கும் பக்ரீரியாக்கள் வாழ்வதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு மனிதனின் கையில் 150 இனங்களைச் சேர்ந்த பக்ரீரியாக்கள் வாழ்வது இனங்காணப்பட்டுள்ளது. இருப்பினும் மனிதர்களின் கைகளில் மொத்தமாக 4700 க்கும் மேலான வேறுபட்ட இனங்களைச் சேர்ந்த பக்ரீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுள் பல நோயாக்கிகள் ஆகவும் விளங்குகின்றன. ஆண்களின் கைகள் அதிகம் அமிலத்தன்மை உடையவையாக இருப்பதால் பெண்களோடு ஒப்பிடும் போதும் ஒப்பீட்டளவில் அங்கு பக்ரீரியாக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றன. இருந்தாலும் ஆண்களும் பெண்களைப் போலவே பல வகை பக்…
-
- 21 replies
- 3.7k views
-
-
உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். எனவே உடலை குறைக்க இனிமேல் ஜிம்மிற்கு சென்று குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் (capsaicin), உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்துவிடுகிறது. மேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருள். ஆகவே இந்த பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைத்துவிடும். http://www.seithy.co...&language=tamil
-
- 1 reply
- 3.7k views
-
-
வீட்டில் யாரேனும் அதிகம் தூங்கினால், பெரியவர்கள் அவர்களைக் கண்டித்து, "இப்படித் தூங்கினால் உடல் பருமன் ஆகிவிடும். ஒரு வேலையும் செய்யாமல் தூங்கினால் உணவி#ருந்து பெறப்பட்ட சக்தி செலவழியாமல் உடம்பு பெருத்துவிடும்'' என அறிவுரை கூறுவதைப் பார்த்திருக்கிறோம். மாறாக, ஒல்லியான, அழகான உடல்வாகு பெற நன்றாக உறங்க வேண்டும் என்று ஒரு புதிய ஆராய்ச்சி மூலம் தெரிகிறது. "உடல் எடையைக் குறைக்க ஓர் உன்னதமான திட்டம் இதோ: ஒரு தூக்கம் போடுங்கள்'' என்று செய்தியாக நாம் அறிவது சஞ்சய் படேல் என்ற விஞ்ஞானியின் ஆராய்ச்சியிலிருந்து. அவர் அமெரிக்காவில், ஒஹையோ மாநிலத்தில் உள்ள கிளீவ் லேண்ட் நகரின் Case Western Reserve University யில் பணிபுரிகிறார். 68,000-க்கு அதிகமான பெண்களை இந்த ஆராய்ச்சியில் உட்படுத்…
-
- 1 reply
- 3.7k views
-
-
கோபம் ஏன் ஏற்படுகின்றது? உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும் "ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும்" என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள். கோபம் ஏன் ஏற்படுகின்றது? கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது. நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது... நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது... நாம் சொல்வது (தவறாக…
-
- 5 replies
- 3.7k views
-
-
மீன் எண்ணெயை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்.. [sunday, 2014-03-23 21:11:28] உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும். அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும். ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி மு…
-
- 6 replies
- 3.7k views
-