நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி? [Tuesday, 2011-07-12 13:53:33] உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும் பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பு இளம் வயதினரை (30 � 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி அதன் வீரியமும் விளைவுகளும் மிகக் கடுமை. மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு? இந்த கேள்விகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம் என்கிறார் மதுரை அப்பல்லோ மருத்துவமனை இதய நோய் நிபுணர் டாக்டர் எஸ்.கே.பி. கருப்பையா. மாரடைப்பு என்றால் என்ன? ஒ…
-
- 3 replies
- 2.6k views
-
-
எனது மகனின் நண்பரின் தகப்பனார் (வயசு 59) கோமா நிலையில் உள்ளார். அவருக்கு இதயக்கோளாறு வந்து 10 நிமிடம் இதயம் இயங்கவில்லை. இதனால் மூளையில் சில செதுள்கள் பழுதாகி (வெடித்து) விட்டன என்கின்றனர் வைத்தியர்கள். நான் நேற்றிரவு போய்ப்பார்த்தேன். அவருக்கு மருந்துகள் மட்டுமே ஏறுகின்றன. செயற்கை சுவாசம் கொடுக்கப்படவில்லை. எல்லாமே இயற்கையாக இருக்கிறது. ஆனால் மூளை மட்டும் வேலை செய்ய மறுக்கிறது என்கிறார்கள். ஆனால் நான் பக்கத்தில் நின்றபோது பல முறை அவரது உடல் சில அதிர்வுகளுக்கு தானாக அசைகிறது. ஆனால் தொடுகையை உணர்ந்து அசைந்தாலே அது சரியான அறிகுறி என்கின்றனர் வைத்தியர்கள். நாளை திங்கட்கிழமை கடைசி பரிசோதனையின் பின கையை விரிப்பார்கள் போலுள்ளது. இது பற்றி தங்களது ஆலோச…
-
- 40 replies
- 2.5k views
-
-
தாயின் கருவறையில் இருக்கும்போதே, இதயத் துடிப்பு ஆரம்பிக்கிறது. நம் இதயம் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் முறை துடிக்கிறது. அதாவது, நிமிடத்துக்கு 60 முதல் 100 வரை. அப்படி ஓய்வே இல்லாமல் துடிப்பதால்தான், ரத்தமும் ஆக்சிஜனும் உடல் முழுமைக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. இதயம் தானாகத் துடிப்பது இல்லை, இதயம் இயங்கவும் ஓர் ஆற்றல் தேவை. அது இல்லை என்றால், இதயம் துடிப்பது நின்றுவிடும். இதயத்தை இயங்கவைக்கும் மின் உற்பத்தி நிலையம் இதயத்தின் மேல் வலது அறையில் உள்ளது. இந்த அறையில் உள்ள சைனஸ் நோட் என்பதுதான், இதயம் இயங்கத் தேவையான மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. இந்த 'சைனஸ் நோட்’டை மனிதனின் ஜெனரேட்டர் என்று சொல்லலாம். இதில் பாதிப்பு ஏற்பட்டால், இதயத் துடிப்பு குறைகிறது. சிலருக்…
-
- 0 replies
- 2.5k views
-
-
மாரடைப்பைத் தடுக்கும் வெள்ளைப் பூண்டு. வெள்ளைப் பூண்டு அபூர்வ மருத்துவ சக்தி படைத்தது. அதன் பெருமையை தமிழர்கள் நீண்டகாலமாகவே அறிந்திருந்தார்கள். அத்துடன் வெள்ளைப் பூண்டு சிறந்த கிருமி நாசினி. இந்தியாவிலுள்ள விவசாய விஞ்ஞானிகள் தாவரத்தை அழிக்கும் பூச்சி வகைகளை வெள்ளைப் பூண்டு கொல்லக் கூடியது என்பதைக் கண்டு பிடித்துள்ளார்கள். வெள்ளைப் பூண்டுக்கு எத்தனையோ அரிய குணங்கள் உண்டு. அது வியர்வையைப் பெருக்கும்இ உடல் சக்தியை அதிகப் படுத்தும்இ சிறுநீர் தாராளமாக பிரிய வகை செய்யும்இ தாய்ப்பாலை விருத்தி செய்யும்இ சளியைக் கரைத்து சுவாசத் தடையை நீக்கும். அத்தோடு இன்னபல நோய்களையும் தடுக்கும் சக்தி கொண்டது வெள்ளைப் பூண்டு. தமிழர்கள் அதிகளவாக இருதய நோய்க்கு உள்ளாகிறார்கள். …
-
- 1 reply
- 2.5k views
-
-
தேனும் கறுவாத்தூளும் - கோப்பன்ஹேயன் சர்வகலாசாலையின் ஆராய்ச்சி 1.தேனும் கறுவாத்தூளும் வெவ்வேறு விகிதாசாரங்களில் கலந்து உண்பது பல நோய்களை குணப்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. 2. தேன் எந்த பக்க விளைவுகளையும் தரமாட்டாது. நீரிழிவு நோயாளர்களும் சரியான அளவிகளில் மருந்தாக உண்டால் கெடுதல் வராது. 3. கனடாவில் Weekly World News என்னும் சஞ்சிகை 15 ஜனவரி 1995 ந் திகதில் தேனும் கறுவாத்தூளும் கலந்து உண்பதால் குணமாகும் நோய்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 4. கோப்பன்ஹேயன் சர்வகலாசாலையின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு மேசைக்கரண்டி தேனையும் அரைக்தேக்கரண்டி கறுவாத்தூளையும் கலந்து நடமாட கஷ்டப்பட்ட மூட்டுவாத நோயாளர்களுக்கு கொடுத்து பரீட்சித்ததில் 200 ல் 73 பேர் நோவிலிருந்து விடுப…
-
- 9 replies
- 2.5k views
-
-
செல்போன்கள்பயன் படுத்துகிறவர்கள் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. சாதாரண நடுத்தர மக்க ளுக்கும் செல்போன் அத் தியாவசிய தேவையாகி விட்டது. செல்போன்களை அதிகம் பயன்படுத்துகிறவர்களுக்கு இருதய நோய், மூளை புற்றுநோய் போன்ற கோளா றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சில தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றி இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் புதிய ஆய்வு நடத்தினார்கள். 2000-ம் ஆண்டு முதல் 2004- ம் ஆண்டு வரை தொடர்ந்து செல்போன் பயன்படுத்திய 18 வயதினர் முதல் 69 வயதினர் வரை உள்ளவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது தவிர நல்ல ஆரோக்கிய நிலையில் உள்ள வர்களிடமும் தனியாக ஆய்வு மேற்கொண்டனர். இதில் மூளை புற்றுநோய்க்கும் செல்போனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என…
-
- 6 replies
- 2.5k views
-
-
கை, கால் மூட்டுக்களில் லேசான வலி வந்தால், டாக்டர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. 'இது வாத நோய்; இதற்கு மருந்தில்லை' என, நினைக்க வேண்டாம். அலட்சியம் காட்டினால், முடக்குவாதமாகி, எலும்பு மூட்டுக்கள் இணைந்து, சிக்கலான நிலை ஏற்பட்டு விடும் 1. முடக்கு வாதம் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? கை, கால் மற்றும் விரல்களில் மூட்டுகளில், மெல்லிய ஜவ்வு உள்ளது. இந்த ஜவ்வு வீக்கம் அடைவதால், கை, கால் மற்றும் விரல்களை மடக்குவதில் சிரமம் ஏற்படும். இணைப்பு மூட்டுக்களில் உள்ள வழுவழுப்பு தன்மையுடன் கூடிய, 'ஜெல்' போன்ற திரவம் குறைவாலும், இணைப்பு மூட்டுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதையே, முடக்குவாதம் என்கிறோம்.சிறுவர்களுக்கும் இந்த பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்று,…
-
- 0 replies
- 2.5k views
-
-
சோடியமும் குளோரினும் சேர்ந்தால் உருவாகுவது நம் வாழ்வின் முக்கியமான உணவு பொருளான உப்பு. சோடியம் (Sodium) + குளோரின் (Chlorine) --> சோடியம் குளோரைட் (sodium chloride) 2 Na + Cl2 --> 2 NaCl இவ் உப்பில்லாமல் ஒரு வேளை உணவை கூட நாம் சாப்பிட முடியாது. உப்பில் மொத்தம் பன்னிரண்டு வகை உண்டு. அதில் நான்கு தான் மிக பிரபலமானவை. அவற்றிலும் இரண்டு தான் நம் வீட்டின் உபயோகித்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அவை கடல் உப்பு(sea salt), மேசையுப்பு(table salt). வழக்கம் போல் கால மாற்றத்தில் நாம் நம்முடைய பாரம்பரிய "கல் உப்பு" எனும் கடல் உப்பை மறந்து மேசையுப்புக்கு மாறி பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் கடல் உப்புத்தான் இன்று வரை டாக்டர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை பரிந்துரை செ…
-
- 8 replies
- 2.5k views
-
-
மருத்துவம் தொடர்பான காணொளிகள். பற்ச்சுத்தம்..பற்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? தொடரும்.....
-
- 19 replies
- 2.5k views
-
-
இன்றைய சூழலில் இயற்கையின் ஐம்புலன்களும் விற்பனை பொருளாகிவிட்டது. அதில் நிலமும், நீரும் தான் மக்களை பிரித்து வைத்து சண்டைகளை உண்டாக்கும் பொருளாக உருமாறி நிற்கிறது. உணவு இன்றி கூட மனிதன் வாழ்ந்து விட முடியும் ஆனால், நீர் இன்றி மூன்று நாள் தாக்குப்பிடிப்பதே சிரமம். இன்று, நீரில் மாசுப்பாடு அதிகரித்து வருவதனால், நிறைய சுத்தீகரிப்பு நீர் விற்பனையும், கருவிகளும் சந்தையில் விற்கப்படுகிறது. இதில் மிக முக்கியமாகவும், பிரபலமாகவும் விற்கப்படுவது ஆர்.ஓ குடிநீர். இம்முறையில், நீர் நல்ல முறையில் சுத்தீகரிக்கப்படுவதாய் மக்கள் நம்பி வாங்கி பயன்படுத்துகின்றனர். ப்ளீஸ்... பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி குடிக்காதீங்க!!! ஆனால், இப்போது இந்த ஆர்.ஓ சுத்தீகரிப்பு முறையில் நீரை பருகுவது பொது …
-
- 2 replies
- 2.5k views
-
-
-
தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாவும் இருக்கு. அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச, கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா? Image credit: www.flickr.com அப்படி எனக்கு தெரிஞ்ச ஒரு யுக்தி என்னன்னா, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டுமாம். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள உறக்கம் வந்துவிடுமாம். இதை நான் எத்தனையோ தரம் முயற்சி செஞ்சி பார்த்திருக்கேன். பலன் என்ன…
-
- 8 replies
- 2.5k views
-
-
பெண்களின் உடலமைப்பினை பிரபலங்களின் தனிப்பட்ட உடற்பயிற்சி ஆசிரியர் மட் ரொபேர்ட்ஸ் பின்வரும் 4 வகையாகப் பிரிக்கின்றார்: 1. பியர்ஸ் வடிவம் 2. அப்பிள் வடிவம் 3. மணற்கடிகை வடிவம் 4. குழாய் வடிவம் http://www.dailymail.co.uk/femail/article-2532407/The-four-body-shapes-hold-key-womans-weight-loss-according-celebrity-personal-trainer.html
-
- 4 replies
- 2.5k views
-
-
பல் மருத்துவம் பல் மருத்துவம்- டாக்டர் பதில்கள் Dr தாயப்பன் என் வயது 26. பற்கள் நிஜமாகவே வெள்ளை நிறமாகத்தான் இருக்குமா? ஏனென்றால் என் பற்கள் சிறிது பழுப்பு நிறமாக உள்ளன? - பரிமளா, கொரட்டூர். ஆரோக்கியமான மற்றும் முழுமையாக உருவாகிய பற்கள் வெள்ளை நிறமாக இருக்காது. இருக்கவும் கூடாது. சிறிது பழுப்பு நிறமாகத்தான் இருக்கும். உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? பலமான பற்கள் சிறிது பழுப்பு நிறமாகவே இருக்கும். அதனால் கவலைப்படாதீர்கள். பால் பற்கள் எந்தப் பருவத்தில் முளைக்கும்? நிரந்தரப் பற்கள் எந்தப் பருவத்தில் முளைக்கும்? தெரிந்து கொள்ள சற்று ஆர்வமாக உள்ளது? - தினேஷ், மவுண்ட்ரோடு. கீழ் முன்வெட்டுப் பற்கள் - 6 மாதம் முத…
-
- 5 replies
- 2.5k views
-
-
புகை பிடிப்பவர்களுக்கு வழுக்கை விழும் - ஆய்வு திங்கள்கிழமை, நவம்பர் 26, 2007 லண்டன்: புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட ஆண்களுக்கு வழக்குத் தலை ஏற்படும் என்று தைவானில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. புகை பிடிப்பதால் புற்று நோய் வரும், சுவாசக் கோளாறுகள் வரும், நரம்புத் தளர்ச்சி வரும், ஆண்மைக் குறைவு ஏற்படும் என்பது பொதுவான அபாயங்கள். ஆனால் இப்போது புகை பிடிப்பதால் வழுக்கைத் தலை ஏற்படும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட ஆண்களில் மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு தலை வழுக்கை ஏற்படுகிறதாம். அவர்களின் செக்ஸ் ஹார்மோன்களில் பாதிப்பு ஏற்படுவதால்தான் இந்த வழுக்கை பிரச்சினை வருவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. …
-
- 5 replies
- 2.5k views
-
-
வயிற்றில் செரிமானத்திற்கு பயன்படும் அமிலங்கள், வயிற்றையும் வாயையும் இணைக்கும் ஈஸோபாகஸ் எனும் பகுதியில் புகும் போது ஒரு புளிப்பு தன்மையோடு, எரிச்சல் ஏற்படுகிறது. புண்களும் ஏற்படலாம். பொதுவாக, இந்த பகுதிக்கும் வயிற்றிற்கும் இடையில் இருக்கும் ஸ்பிங்க்டர் என்ற குழாய் சரியாக வேலை செய்யாவிட்டால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. குடலிறக்கம் போன்ற சில காரணங்களாலும் நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம். கொழுப்பு, மதுபானங்கள், புகை பிடித்தல் இனிப்புகள், சாக்லெட் மற்றும் மிண்டுகள், இந்த பகுதியில் திசுவை வலுவிழக்க செய்து, வயிற்றிற்கும் ஈஸோபாகஸிற்கும் உள்ள திறப்பை குறைக்கிறது. இதனால் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். அதிகமாக சாப்பிடுதல், வேக வேகமாக சாப்பிடுதல், ஒழுங்காக மெல்லாமல் விழுங்குதல், சரியாக சம…
-
- 4 replies
- 2.5k views
-
-
Carpal tunnel surgery செய்தவர்கள் இருக்கிறீங்களோ? எவ்வளவு காலத்திற்கு பிறகு கை இயல்பான செயற்பாடு வரும்? 6 வாரம் முதல் Carpal tunnel surgery செய்தேன். காயம் ஆற 5 வாரங்கள் சென்றது. Carpal tunnel surgery செய்த கையில் 2 விரல்கள் ஏற்கனவே உணர்வு இல்லாமல் போய் விட்டது. தற்போது உணர்வு வந்துள்ளது ஆனால் விரல்கள் மடிக்கவோ வேலை செய்யவோ முடியாது இருக்கிறது. மணிக்கட்டு உள்ளங்கை தேனீ குற்றினால் இருக்கும் வலிபோன்று வலிக்கிறது. உங்கள் அனுபவங்களை பகிருங்கள்.
-
- 23 replies
- 2.5k views
- 1 follower
-
-
விஞ்ஞான முடிவுகளுடன் முரண்படும் சமூகக் கடப்பாடுகள் அப்பாவாகப் போவது எப்போது? ஒரு மனிதன் தந்தையாவதற்கு ஏற்ற வயது என்ன? எனது பாட்டா அப்பாவாகும்போது வயது 18 வயது மட்டுமே. எனது அப்பா 23 வயதில் அப்பாவானார். அப்பாவாகும்போது எனக்கு 32 வயதாகிவிட்டது. இன்றைய இளைஞர்களுக்கு இன்னமும் அதிக காலம் தேவைப்படுகிறது. நல்ல கல்வி, போதிய வருவாயுள்ள வேலை, புதிய மணவாழ்வில் சற்றுக் காலம் தொல்லையின்றி உல்லாச வாழ்வு. இவற்றையெல்லாம் முடித்துக் கொண்டு குழந்தை பெறுவதையிட்டு சிந்திக்கத் தொடங்குவதற்கு காலதாமதமாகி விடுகிறது இன்றைய இளைஞர்களுக்கு. வயது அதிகரிப்பும் அப்பாவாதலும் மேலும் முதிர்ந்த வயதில் அப்பாவாகும் பலர் மேலை நாடுகளில் இருக்கிறார்கள். வேலைப் பளு, இரண்டாவது தரம் மூன்றாவது தரம் என மணம்மு…
-
- 24 replies
- 2.4k views
-
-
பிரசவத்தின் படிமுறைகளும் பிறப்பின் வழிமுறைகளும் பிரசவம் எவ்வாறு நிகழ்கிறது என்று யாரையாவது கேட்டால் திரைப்படங்களில் காட்டப்படும் காட்சியைப் போல தாய் ஒருவர் பெரும் வேதனையுடன் (வயிற்று வலியுடன்) வைத்தியசாலையில் அனுமதிக்க்படுவது போலவும் உடனே அவர் பிரசவ அறைக்கு எடுத்துச் செல்லப்படுவது போலவும் சில நிமிடங்களில் ஒரு தாதி வெளியே ஓடி வந்து உங்களுக்கு ஒரு பையன் அல்லது பெண் பிறந்திருக்கிறார் என்று சொல்வது போலவும் காட்சிகள் ஓடலாம் ஆனால் குழந்தைப் பேறு என்பது திரைப்படங்களில் காட்டப்படுவது போல் அவ்வளவு வேகமாகவும் சாதாரணமாகவும் நிகழ்ந்து விடுவதில்லை . சாதாரணமாக யோனிவழிப் பிரசவம் (Normal Vaginal Delivery)என்பது பிரசவ வலி வந்தவுடன் பிரசவ அறைக்குள் தாய் குழந்தையைப் …
-
- 0 replies
- 2.4k views
-
-
பீற்றூட் இதை ஆங்கிலத்தில் (Beta Vulgaris) என்று சொல்லுவார்கள். இதன் பிறப்பிடம் மத்திய ஐரோப்பாவும்,ஐக்கிய அமெரிக்காவும் ஆகும் இருந்தாலும் தற்பேது இந்தோசீனா,பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்கா,மற்றும் இந்தியாவிலும் பயிரிடப் படுகிறது. இதில் காபோஹைட்ரேட்கள் சர்க்கரை வடிவில் இருக்கும். சிறிதளவு புரதமும்,கொழுப்பும் உண்டு. ஈரப்பதம்-87.7 கிராம் புரதம்-1.7 கிராம் கொழுப்பு -0.1 கிராம் தாதுக்கள்-0.8 கிராம் காபோஹைட்ரேட்கள்-8.8 கிராம் கால்சியம்- 200 மி.கி மக்ளீசியம்- 9 மி.கி ஆக்ஸாலிக் அமிலம்- 40 மி.கி பாஸ்பரஸ்- 55 மி.கிஅயம்- 0.4 மி.கி சோடியம்- 59.8 மி.கி பொட்டாசியம்- 43 மி.கி செம்பு- 0.20 மி.கி சல்பர்- 14 மி.கி தயமின்- 0.04 மி.கி ரைபோஃப்ளேவின்- 0.09 மி.கி …
-
- 9 replies
- 2.4k views
-
-
பழைய பயங்கரச் சம்பவத்தின் நினைவு மீளமீள தொல்லைப்படுத்துகிறதா? உங்கள் வாழ்வில் எப்பொழுதாவது மிகப் பயங்கரமானதும், உங்கள் மனத்தில் ஆழமாக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமான சம்பவம் எதையாவது எதிர் காண்டிருக்கிறீர்களா? நிச்சம் இருக்கும்! ஈழத் தமிழர்களது வாழ்வு சென்ற இருபது வருடங்களாக தினம் தினம் இடர்பாடுகளுக்கு ஊடாகத் தான் நகர்கிறது. குண்டு வெடிப்பு, விமானத் தாக்குதல், எறிகணைவீச்சு, அந்நிய இராணுவத்தினது அடாவடித்தனம், உடல் ரீதியான தாக்குதல், சிறையில் அடைபடல், பாலியல் பலாத்காரம் போன்ற ஏதாவது வன்முறை ஒன்றினால் எங்களில் எவராவது ஒருவருக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருந்திருக்குமேயானால் அது அதிசயம்தான். உடல் ரீதியான பாதிப்பு ஏற்படாவிட்டால் கூட உளரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக் க…
-
- 8 replies
- 2.4k views
-
-
எலி மருந்து, பூச்சிக்கொல்லி மருந்து என்று விஷத்தை ஒருவர் சாப்பிட்டு இருந்தால் விஷம் ரத்தத்தில் கலப்பதற்கு முன்பு அதை வாந்தியாக வெளியேற்ற வேண்டும். விஷம் ரத்தத்தில் கலந்துவிட்டால் உடல் முழுக்கப் பரவி உடல் இயக்கத்தை முடக்குவதோடு உடனடி மரணத்துக்கும் வழிவகுத்துவிடும். விஷம் சாப்பிட்டவரின் வாயினுள் விரலை நுழைத்துச் செயற்கையாக வாந்தி எடுக்கச் செய்யலாம். வேப்ப எண்ணெய் அல்லது சமையல் உப்புக் கரைசலைக் குடிக்க வைத்தால், வாந்தி மூலம் இரைப்பையில் தங்கி இருக்கும் விஷம் வெளியேறிவிடும். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளிக்க வேண்டும். விஷம் அருந்தியவர் நினைவு இழந்த நிலையில் இருந்தால் அவருக்கு வேப்ப எண்ணெய் அல்லது உப்புக் கரைசலைக் கொடுக்கக் கூட…
-
- 0 replies
- 2.4k views
-
-
ஆப்பிள் எனும் அருமருந்து ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. நோய்க்காலங்களில் ஆப்பிள்கள் சாப்பிடுபவர்களையும், மருத்துவர்கள் ஆப்பிள் கொடுங்கள் என்று கூறுவதையெல்லாம் நாம் பார்த்திருக்கறோம். ஆனால் குறிப்பாக அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதோ, அதன் ஒரு சில குறைவான தீமைகள் பற்றியோ அறிந்ததில்லை என்றே தோன்றுகிறது. பயன்கள் கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது. ஃபைட்டோ கெமிக்கல்ஸ் ஆப்பிள்களில் அதிகம் காணப்படுகிறது. அதாவது குறிப்பாக `குவர்செடின்' (ளூரநசஉநவin) அதிகமாக இருப்பதால், இருதய நோயையும், புற்றுநோயையும் த…
-
- 10 replies
- 2.4k views
-
-
[size=5]பிளம்ஸ்(plums) பழங்கள்..![/size] மிகுந்த இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி, பள்ளங்கி, வடகவுஞ்சி, பெருமாள்மலை, செண்பகனூர் உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் விரைகின்றன. பல்வேறு சுவைகளில் பல்வேறு பெயர்களில் இப்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பிளம்ஸ் பழ விளைச்சல் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் ஜூலை மாத வரை நடைபெறும்.சீசன் சமயத்திலேயே இப்பழங்களின் விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் இ...வற்றினை விரும்பி பயிரிடுகின்றனர். தற்போது முதல் தர பிளம்ஸ் பழங்கள் கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. பிளம்ஸ் பழத்தின் நன்மைகள் !! சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை…
-
- 0 replies
- 2.4k views
-
-
பல்லுப்போணா சொல்லுப்போச்சு கன்னதில் குளிவிழும், கதைக்க சொக்கை ஆடும், நினைத்ததனை லபக் என்று சப்பி சப்பிடமுடியாமல் போகும். ஆகவே பற்கள் தான் முகத்துக்கு அழகு. இரவு சாப்பிடு விட்டு இரண்டு ஸ்பூன் நல்லெண்ணையை வாயில் விட்டு ஒரு பத்து நிமிடம் வாயினில் வைத்து இருக்கவேண்டும்.( பேசக்கூடாது ஆனா ரிவீ பார்க்கலாம் ) .பத்து நிமிடம் கழித்து கொப்பளித்து துப்பி விடலாம். பல்லும் பளிச்சென்று வந்துவிடும். வாயில் உள்ள புண்ணும் குண்மைந்துவிடும், பற்கள் உறுதியாக வேற இருக்குமாம். இது ஒரு பல் டாக்டரின் அறிவுரை.
-
- 14 replies
- 2.4k views
-