நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
உடல் எடை அதிகமானவர்களைப் பார்த்து, ’நீ எந்தக்கடையில அரிசி சாப்பிடுகிறாய்?’ என்று கிண்டலாக கேட்பார்கள். அதிகமாகச் சாப்பிடுவதைத்தான் அவ்வாறு கேலி செய்வார். பெண்களாக இருந்தால் திருமணமாகி குழந்தை பிறந்தபிறகு ஏற்படும் தைராய்டு பிரச்னை காரணமாக உடன் எடை அதிகரிக்கலாம். உடற்பயிற்சியின்மை எப்போதும் ஓய்வு, நொறுக்குத் தீனி, போன்றவை எடையைக் கூட்டிவிடும். ஆண்களுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், மது அருந்துவதாலும் எடை கூடும். மனதில் மகிழ்ச்சி அதிகமானால் கூட எடை கூடுவதை நடுத்தர வர்க்கத்தினரிடையே காணலாம். குண்டானவர்கள் தங்கள் பணிகளை உற்சாகமாய் செய்ய முடியாது. மூட்டு வலி, முதுகு வலி, தசை வலி என அடிக்கடி சிரமப்பட நேரிடும். தங்கள் வயதைவிட முதியவராகவும், கவர்ச்சியமான தோற்றமும் இல்லாமல் இருப்…
-
- 4 replies
- 6k views
-
-
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்ற பழமொழி எவ்வளவுக்கு எவ்வளவு உண்மை என்பதை தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிளுக்கு பல்வேறு அரிய குணங்கள் இருப்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மது போதை அடிமைகளை மீட்கவும் கூட ஆப்பிள் உதவுகிறதாம். போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட்டு, நமது உடல் ஆரோக்கியம் மேம்படவும் நம் உண்ணும் உணவிலுள்ள நச்சுகளை நீக்கவும், ரத்தத்தில் கலந்துள்ள நுண்கிருமிகளை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யவும் பழங்களை உண்ணுதல் நல்லது. இந்த பழங்கள் என்று குறிப்பிட்டதில் முதலிடத்தை பிடிப்பவை ஆப்பிள் பழமே. பைரஸ் மேலஸ் …
-
- 17 replies
- 1.4k views
-
-
-
- 9 replies
- 1.4k views
-
-
உடலை கட்டமைப்புடன் வைக்க முயலும் போது கண்டிப்பாக தவறுகளில் ஈடுபடக்கூடாது. நல்ல கட்டமைப்புடன் இருக்கும் ஒரே காரணத்திற்காக தான் உடற்பயிற்சிகள் செய்யப்படுகிறது. ஆனால் உடலை அப்படி கட்டமைப்புடன் வைப்பதில் ஈடுபடும் போது பல ஆண்கள் சில தவறுகளில் ஈடுபடுகின்றனர். இந்த பொதுவான தவறுகளை சுலபமாக தவிர்க்கலாம். ஜிம்களில் ஈடுபடும் சில பயிற்சிகள் பிரத்யோகமாக ஆண்களுக்காகவே உள்ளது. உதாரணத்திற்கு, ஜிம்மில் உள்ள எடை பயிற்சி பிரிவுக்கு சென்றால் அங்கே ஆண்களை மட்டுமே அதிகமாக காணலாம். உடல் கட்டமைப்பில் ஆண்கள் செய்யும் பொதுவான தவறுகள் எடை பயிற்சியுடன் தான் பெரும்பாலும் தொடர்பில் உள்ளது. இதுப்போன்று வேறு: நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!! இவ்வகை கட்டமைப்பு தவறுகள் ஏற்பட கா…
-
- 0 replies
- 10.8k views
-
-
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறைய பேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப் போவதும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்: 1. தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும். 2. எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். 3. வேக வைத…
-
- 15 replies
- 1k views
-
-
.மனித உடலினுள் கண்ணுக்குத் தெரியாமல் செயல்படுகின்ற ஏழு சக்கரங்கள், உடலிலுள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டினையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. இந்த ஏழு சக்கரங்களும் உடலின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஏழு சக்கரங்களையும் அவை கட்டுப்படுத்தும் உறுப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம் மூலாதாரம் முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது. சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டு…
-
- 4 replies
- 1.1k views
-
-
உடலை ஸ்லிம்மாக வைக்க உதவும் 'கிரேப்ஸ்' * எல்லோரும் கண்டிப்பாக திராட்சை சாப்பிட வேண்டும், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். * ஒரு டம்ளர் கிரேப் ஜூஸில் 80 சதவீத தண்ணீரும், 60 சதவீத கலோரிச் சத்தும் உள்ளது. இதனுடன், நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. உடலை `ஸ்லிம்’ ஆக வைத்துக்கொள்ள `டயட்டில் இருப்பவர்கள் இதை தாராளமாக குடிக்கலாம். * பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் சக்தி திராட்சைக்கு இருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வரும்பட்சத்தில் அவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. *`ரெஸ்வெரட்டால்’ என்கிற ஒருவகை இயற்கை அமிலம் திராட்சையில் …
-
- 0 replies
- 527 views
-
-
உடலைக் குளிர வைக்கும் வெள்ளரிக்காய்! வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியையும், நீர்ச்சத்தையும் வழங்க வல்லது. இத்தகைய வெள்ளரிக்காய் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் சிறந்த காயாகும். கோடைகாலத்தில் ஏற்படும் அதிகமான நா வறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். வெள்ளரியில் வைட்டமின்களும், கலோரிகளும் குறைவாக உள்ளது. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு. இதில் பொட்டாசியம் மிகுதியாக இருப்பதால் இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகமாக உருவாக்கும். மேலும் புகைப்பிடிப்போரின் குடலை சீரழிக்கும் நிக்கோடின் நஞ்சை அழிக்கும் ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. வ…
-
- 1 reply
- 678 views
-
-
உடல் அரிப்பு என்பது குழந்தைகள் முதல் பெரியவர் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. இதனால் அடிக்கடி மருத்துவரை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் வீட்டிலிருந்தபடியே இந்த அரிப்பை விரட்ட அற்புதமான மூலிகை தாவரம் கீழாநெல்லி. இது பல நோய்களை தீர்க்ககூடிய வல்லமை படைத்தது. இது ஒரு சிறு தாவர வகையை சேர்ந்தது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர். இதை பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர். இந்த செடியின் தண்டு, வேர் மற்றும் இலைகள் என அனைத்தும் பயன்தரக் கூடியவை. கீழாநெல்லியின் மகத்துவங்கள் கீழாநெல்லியினால் தயாரித்த தையலம் கை,கால் எரிச்சல், கண்களின் உஷ்…
-
- 0 replies
- 814 views
-
-
உடல் அறிவியல்: இதய, நீரிழிவு நோய்களுக்கும் தண்ணீரில் நனைவதால் விரல்களில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NEIL JUGGINS/ALAMY சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்தாலும் நமது கை, கால் விரல்களில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த சுருக்கங்கள் நம் பரிணாம வளர்ச்சிக்கு உதவியதா? உங்களின் ஆரோக்கியம் குறித்து இந்த சுருக்கங்கள் சொல்வது என்ன? இந்த சுருக்கங்கள் குழப்பமான ஒன்று. தண்ணீரில் நனையும்போதும் நம் விரல்களில் மட்டுமே சுருக்கங்கள் ஏற்படுகின்றன. கால்கள், கைகள், முகம் என மற்ற உடல் பாகங்களில் சுருக்கங்கள் ஏற்படுவதில்லை. வெந்நீரில் 40 டிகிரி செல்சியஸ் சூட்…
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே... சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும். இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது. இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன. இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இ…
-
- 1 reply
- 1.1k views
-
-
உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு உதவும் புதிய முறை - முயன்று பாருங்கள்! [Friday, 2013-06-14 12:51:55] தங்களது உடல்நலத்தைப் பேணிப் பாதுகாப்பதில் சிலருக்கு அதீத ஆர்வம் இருக்கும். உடல் மெலிந்து காணப்படவேண்டும் என்பதற்காக எந்த வழிமுறைகளை வேண்டுமானாலும் பின்பற்றுவார்கள். அத்தகைய ஆர்வலர்களுக்கு மத்தியில் இப்போது ஒரு வித்தியாசமான உணவுமுறை வரவேற்பைப் பெற்றுள்ளது. வாரத்தின் ஏழு நாட்களில் முதல் ஐந்து நாட்களுக்கு எந்த மாதிரியான உணவு வகைகளையும் உண்ணலாம், ஆனால், கடைசி இரண்டு நாட்களும் 600 கலோரிக்கு மேற்பட்டு உண்ணக்கூடாது என்பதே அந்தப் புதிய முறையாகும். இங்கிலாந்து மக்களிடையே அதிகமாகக் காணப்படும் இந்த உணவுமுறை தற்போது அமெரிக்காவிலும் பரவத் தொடங்கியுள்ளது. ஃபாஸ்ட் டயட் அல்லது 5:2 எ…
-
- 5 replies
- 915 views
-
-
இவர் சொல்கிறார் காலை சாப்பட்டைத் தவிப்பதால் ஒரு பிரச்சனையும் இல்லையாம் .
-
- 9 replies
- 1.4k views
-
-
உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி? ``உடல் உறுப்பு தானம்'' " தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?'' ``உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும். நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன். "பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கம் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதி…
-
- 4 replies
- 1.4k views
-
-
'உடல் உறுப்பு தானம்' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும். நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன். "பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கள் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?" உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது…
-
- 1 reply
- 1.1k views
-
-
உடல் எடை அதிகமாக உள்ளதா? - இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான் படத்தின் காப்புரிமை Getty Images மன உறுதியுடன் இருந்தால் உடல்பருமனை குறைக்க முடியும் என மக்கள் நம்பலாம் ஆனால் ஆராய்ச்சிகள் வேறு சில உண்மைகளை சொல்கின்றன. உடல்பருமன் உண்மைகள் எனும் ஆராய்ச்சியில் வெளிப்பட்டுள்ள உடல் எடையை பாதிக்கும் ஐந்து ஆச்சர்ய உண்மைகளை இங்கே படிக்கலாம். படத்தின் காப்புரிமை J…
-
- 0 replies
- 842 views
-
-
உடல் எடை குறைக்கும் கொள்ளு சூப் செய்முறை. தேவையான பொருள்கள் : கொள்ளு – 4 ஸ்பூன் பூண்டு – 5 பல் தக்காளி – 2 மிளகு – 1 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் துவரம்பருப்பு – 1 ஸ்பூன் பெருங்காயம் – 1ஃ2 ஸ்பூன் கொத்தமல்லித்தழை – சிறிது கறிவேப்பிலை – சிறிது தாளிக்க நல்லெண்ணெய் – சிறிது கடுகு – சிறிது வரமிளகாய் – 2 செய்முறை : மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும். (ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வறுத்துக்கொள்ளவும்) அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்த…
-
- 6 replies
- 9.1k views
-
-
சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது என்ற விவாதம் இப்போது ஓடிகொண்டிருக்கிறது. தேங்காய் எண்ணெய் பயன்படுத்துகிறீர்களா... உங்களை மாரடைப்பு வர வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. நல்லெண்ணெய் பயன்படுத்துகிறீர்களா? உங்களின் ரத்தக்கொதிப்பு அதிகமாக வாய்ப்புகள் உள்ளது என மருத்துவர்களும் பயம் ஏற்படுத்துகிறார்கள். இதைப் பற்றி இணையத்தில் தேடும்போது பல தகவல்கள் கிடைத்தன. அதையே இந்த பதிவில் அலசப்போகிறோம். சிலர் நான் இந்த எண்ணெயைத் தவிர வேற எதையும் தொடறதே இல்லை-னு பெருமையா சொல்லிப்பாங்க. இது முழுக்க தவறான நம்பிக்கை. ஒரே வகையான எண்ணெயைப் பயன்படுத்துறதைவிட, எல்லா வகை எண்ணெய்களையும் கலந்து பயன்படுத்துறது நல்லது. ஒரே வகையான எண்ணெயைத் தொடர்ந்து எடுத்துக்கும்போது அதிலிருக்கிற கெடுதல் தன்மை உடல…
-
- 0 replies
- 966 views
-
-
பெண்களின் உடலமைப்பினை பிரபலங்களின் தனிப்பட்ட உடற்பயிற்சி ஆசிரியர் மட் ரொபேர்ட்ஸ் பின்வரும் 4 வகையாகப் பிரிக்கின்றார்: 1. பியர்ஸ் வடிவம் 2. அப்பிள் வடிவம் 3. மணற்கடிகை வடிவம் 4. குழாய் வடிவம் http://www.dailymail.co.uk/femail/article-2532407/The-four-body-shapes-hold-key-womans-weight-loss-according-celebrity-personal-trainer.html
-
- 4 replies
- 2.5k views
-
-
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானவர்களின் பிரச்னையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான். உடல் எடையை குறைக்க எத்தனையோ முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஒருசில உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை நிச்சயம் குறைக்கலாம். மேலும் இத்தகைய உணவுகள் உடல் எடையை மட்டும் குறைப்பதோடு, உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன. பூண்டு உடலில் சேரும் கெட்டக் கொழுப்புக்களைக் கரைக்கும் உணவுப் பொருளான அல்லீசின்(Allicin) என்னும் பொருள் பூண்டில் உள்ளது. எனவே ஆண்கள் இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறைவதோடு, இதய நோய் வராமலும் தடுக்கலாம். முட்டை ஆண்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்களில் முட்டையும் ஒன்று. ஏனெனில் முட்டை உடலில் உள்ள கெட்ட…
-
- 0 replies
- 725 views
-
-
பருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம். பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள். சத்துக்கள் நிறைந்தது பச்சை பயற்றில் இரும…
-
- 0 replies
- 459 views
-
-
அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய உடல் மற்றும் அழகு நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியும். அதிலும் இந்த புளிப்புச் சுவையுடைய பழம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து, உடலை ஸ்லிம்மாகவும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள உதவும் என்பதும் தெரிந்த விஷயமே. எனவே உடல் எடை மற்றும் அழகைப் பராமரிப்பதற்கு எலுமிச்சை ஜூஸை மட்டும் குடிக்காமல், உண்ணும் உணவிலும் எலுமிச்சையைப் பயன்படுத்து நல்ல பலனைத் தரும். எலுமிச்சை டயட் மேற்கொள்ளும் போது திட உணவுகளான அரிசி அல்லது கோதுமையால் செய்யப்படும் உணவுகளை சிறிது நாட்கள் அதிகம் சாப்பிடக் கூடாது. இதே போன்று கார உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கார உணவுகள் உடலில் டாக்ஸின்களின் அளவை அதிகரிப்பதோடு, செரிமான மண்டலத்தையும் பாதிக்கும். க…
-
- 2 replies
- 2.1k views
-
-
கொத்தவரங்காய் சத்தான உணவு மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் அளிக்கிறது. 1. கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது. பிறப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை இதன் மருத்துவ குணம் குறைக்கிறது. ஆகையால் இதை நிச்சயம் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க வேண்டும். 2. கலோரி அளவுகளில் மிக குறைந்த உணவாக இருந்தாலும், வைட்டமின்களையும் மற்றும் தாதுக்களையும் அதிகமாக கொண்டிருக்கும் உணவு இது. ஆகையால் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை ஒரு உணவாக சேர்த்துக் கொள்ள வேண்டும். 3. இரத்தச் சோகை இருப்பவர்கள் இதை சாப்பிடும் போது அதிக இரத்தம் சுரக்கும். இது இரத்த பற்றாக்குறையை நீக்கி உடலை நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறது. 4. இதில் உள்ள நார்ச்சத்து உடம்பில் உள்ள …
-
- 0 replies
- 501 views
-
-
உடல் எடையை பாதிக்கும் 5 விஷயங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உடல் பருமன் பிரச்சனையுடன் போராடுவதற்கு அசாத்திய மனோதிடம் தேவை என்பது நம்மில் பலரின் கருத்து. ஆனால் மருத்துவ ஆய்வுகள் வேறு மாதிரியாக கூறுகின்றன. உங்கள் உடல் எடையை பாதிக்கும் ஐந்து விஷயங்கள் குறித்து இப்போது பார்ப்போம். 1) குடல் நுண்ணுயிரிகள் கில்லியனும் ஜாக்கியும் இரட்டையர்…
-
- 0 replies
- 651 views
-
-
உடல் எடையைக் குறைக்க நடவுங்கோ உப்பினை குறைத்து சாப்பிடுங்கோ, விடிய எழும்பி நடவுங்கோ பெரும்பாலானவர்கள் உடல் எடையைக் குறைக்க பெரும் முயற்சிகளில் ஈடுபடுலிறார்கள். ஆனால் சிம்பிளான மெதேட் ஒன்று இருக்கு ஒருதரும் அதை பின்பற்றுவதே இல்லை. அதாவது உணவில் உப்பை மட்டும் குறைத்து தினமும் 2 கி.மீ தூரம் "ஸ்பீட் வாக்" நடப்பதின் மூலம்மாக 10 கிலோ எடை குறைந்த தோடல்லாமல் , மிகவும் இளமையான தோற்றத்தினை பெற்றிருக்கிறார்கள். நீங்களும் முயற்ச்சித்துப்பாருங்களேன். -தினசரி அரைமணி நேரம் வாக்கிங் போய் வந்தால் போதும். சர்க்கரை, இரத்த அழுத்தம், கொழுப்புச்சத்து ஆகியவை வெகு சீக்கிரம் கட்டுக்குள் வந்து விடும். மன இறுக்கமும் தளரும். அதுவும் அதிகாலை நேர வாக்கிங் ஒரு வித தியானம் போன்ற பலனைத்த…
-
- 4 replies
- 3.3k views
-