நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் எலும்பு பலவீனத்தை பெற்று இருக்கிறார்கள். அதாவது எலும்பில் வலு இல்லாமை. பெரும்பாலான குழந்தைகள் ரிக்கெட்ஸ் எனப்படும் (கால் கைகள் வளைந்த நிலைமை) நோய்க்கு ஆட்பட்டிருக்கிறார்கள். பெரியவர்களும் இந்நிலையைப் (Osteomalacia) பெற்றிருக்கிறார்கள். இந்நோய்க்கு காரணம் விட்டமின் D பற்றாக்குறைதான். இந்த ரிக்கெட்ஸ் ஆண்குழந்தைகளை விட பெண்குழந்தைகளையே பெரிதும் பாதிக்கிறது. விட்டமின் டி பற்றாக்குறையால் இவ்வாறு பாதிக்கப்பட்டு வருவது பெரிதும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைக் கவனித்து சிகிச்சை எடுக்காவிட்டால் எலும்பு பலவீனம், தசை பலவீனம், கை, கால்கள் வளைந்த தோற்றம் ஆகிய பாதிப்பகள் வரும். விட்டமின் டி போதுமான அளவில் எடுத்துக் கொண…
-
- 2 replies
- 1.8k views
-
-
சென்னை, அறிஞர் அண்ணா மருத்துவமனையின் இயற்கை நல மருத்துவ பேராசிரியர் ஹிமேஷ்வரி: நல்ல உடம்பு, தெளிவான மனசு இரண்டும் இல்லாமல், ஒருத்தரால், தான் நினைச்சதை அடையவே முடியாது.உங்க உடம்புக்கு, என்ன நேரத்தில், என்ன செய்யணும்னு, "செல்'களுக்கு நல்லா தெரியும். கண்ணுல தூசி விழுந்தா, கண்ணை, "டேமேஜ்' பண்ணாம, அந்த தூசியை வெளியே தள்ள, உங்களுக்கு தெரியாது. ஆனா குறிப்பிட்ட செல்கள், கண்ணீர் மூலமா வெளியே கொண்டு வந்துடும். இப்படி பார்த்துப் பார்த்து, பல வேலைகளை செய்ற செல்களோட அறிவுத் திறன், செயல் திறன் மழுங்கிப் போகும் போது தான், நோய்கள் அதிரடியா நம்மை தாக்குது.நம்மகிட்டே, "நெகட்டிவ் மென்ட்டாலிட்டி' அதிகரிக்க அதிகரிக்க, நம் செல்களோட செயல்திறன் குறையத் தொடங்குது.168 விதமான, "நெகட்டிவ் மெ…
-
- 2 replies
- 769 views
-
-
இருதய நோய்க்கான வாய்ப்புக்களை அதிகரிக்கக் கூடிய அல்ட்ரா பேட் (ultra bad) கொலஸ்ட்ரோலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சாதாரணமாக இரத்தத்தில் காணப்படும் பேட் கொலஸ்ட்ரோலை விட இது தடிப்பானது. இது இருதயத்துக்கான இரத்த நாளங்களைப் பெரிதும் பாதிக்கக் கூடியது. இரண்டாம் நிலை நீரிழிவு நோயின் பாதிப்புக்கு ஆளாகியுள்ள முதியவர்கள் மத்தியிலேயே இது பெரிதும் காணப்படுகின்றது. ஏற்கனவே இது வருடாந்தம் ஆயிரக்கணக்கான மரணங்களை ஏற்படுத்துகின்றது. வேர்விக் பல்கலைக்கழக ஆய்வாளர்களே இந்தப் புதிய கொலஸ்ட்ரோல் வகையைக் கண்டுபிடித்துள்ளனர். பல்வேறு வகையான கெட்ட கொலஸ்ட்ரோல் அல்லது LDL பற்றிய விரிவான ஆய்வின் போதே இது தெரியவந்துள்ளது. இந்தப் புதிய கொலஸ்ட்ரோலை MGmin-LDL எனக் குறிய…
-
- 2 replies
- 766 views
-
-
என்னால் வெளிப்படையாக அனைத்துவிடயங்களையும் பேசமுடியாதுவிட்டாலும் உங்களுக்காக சில செய்திகள் செய்தி 1) பேராதனையில் 21 வயதான மாணவி ஒருவர் Ceftriaxone என்ற மருந்து ஏற்றப்பட்டபோது ஏற்பட்ட ஒவ்வாமையால் சிகிச்சைபலனின்றி இறந்தார். மருந்து மாறி ஏற்றப்பட்டுவிட்டது, தாதி தவறான மருந்தை ஏற்றிவிட்டார் என்ற வழமையான புராணங்களின் பின்னர் மருந்தால் ஏற்பட்ட ஒவ்வாமையென உறுதிப்படுத்தப்பட்டது. செய்தி 2) அண்டி பயோட்டிக்ஸ் அலேர்ஜியினால் இதுவரை 15 மரணங்கள் ஏற்பட்டிருந்தாலும் 2 மரணங்களே பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. செய்தி 3) பல நோயாளர்களுக்கு அண்டிபயோட்டிக்கால் ஒவ்வாமை ஏற்படுவது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தரமற்ற மருந்து…
-
-
- 2 replies
- 541 views
-
-
நான் அண்மையில் பார்த்த ஒரு அருமையான ஆவணப்படம். என்னை பாதித்த பலவிடயங்கள் இதில் உண்டு. supersize me http://video.google.com/videoplay?docid=-1432315846377280008&ei=yOflSrf5CKLwqAPui72vCQ&q=supersize+me&hl=en# முதலில் பாருங்கள்.தொடர்ந்து பேசுவோம்.
-
- 2 replies
- 1.4k views
-
-
ஸ்மார்ட்போன்கள் நம் அன்றாட வாழ்க்கை முறையில் பல விஷயங்களை மாற்றிவிட்டது. எப்படி மற்றொருவரை தொடர்பு கொள்கிறோம் என்பதிலிருந்து, நியூஸ் பேப்பர், புத்தகங்கள் படிப்பது வரை அனைத்தையுமே ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி மாற்றியமைத்துள்ளது. இது நம் அன்றாட வாழ்க்கை முறை, ஸ்மார்ட்போன்களின் பயன்பாடென்பது இவற்றில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை, நம் உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்கிறது ஒரு ஆய்வு. இந்த ஆய்வின்படி, ஸ்மார்ட்போனின் அதீத பயன்பாட்டால் இளைஞர்கள் தலையின் மண்டையோட்டு பகுதியில் கொம்பு போன்ற ஒரு எழும்பு முளைக்கிறது என்பது தெரியவந்துள்ளது. சிறு வயதில் தலையும் தலையும் இடித்துக்கொண்டால் கொம்பு முளைக்கும் என்பார்கள். அதை இப்போது நினைத்து,'கொம்பு முளைக்குமா!' என சிற்ப்பதுண்டு. ஆன…
-
- 2 replies
- 1.1k views
-
-
எனக்கு வயது 30 அடிக்கடி மூச்சு விடுவதில் சிரமமாக இருக்கிறது. டாக்டர் பரிந்துரையின் படி எல்லா டெஸ்ட் செய்ததில் ஒன்றும் இல்லை. ஆன்னால் எப்பொழுதும் தொண்டை அடைதுகொண்டே இருக்கிறது. பின் மண்டையில் அவ்வப்போது லேசான வலி ஏற்படுகிறது. ப்ளூட் பிரஷர் நார்மல். மூச்சு பிடிப்பாக இருந்தால் அதற்க்கேன விடையை சொல்லுப்ங்க ப்ளீஸ். ஏன் என்றால் அவ்வப்போது இதயத்தில் ஊசி குத்து வது போன்று வலிக்கும். எல்லவற்றிர்க்கும் மேலாக மரண பயம் பயங்கரமாக இருக்கிறது. psychiatrist பார்த்தேன் அவரு anxity என்று tablets கொடுத்தார். இந்த மாத்திரைகளை சாப்பிட்டால் என்னே என்னே விளைவுகள் வரும் என்று தெரியவில்லை. இரவு நன்றாக உறக்கம் வருகிறது. காலையில் எழுந்திரிக்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வேண்ட…
-
- 2 replies
- 724 views
-
-
உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா? இதுபுத்திசாலிகளுக்கான காலம்! பிறக்கிற குழந்தை புத்திசாலி-யாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது எல்லாப் பெற்-றோர்களின் கனவு! கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்துக்காக தாய் உணவு எடுத்துக்கொள்வது சரி; ஆனால், அது எந்த அளவுக்குக் குழந்தையின் புத்திசாலித்தனத்தைத் தீர்மானிக்கும்? ‘‘கரு உருவான 20&வது நாளில் வளர ஆரம்பிக்கும் மூளை, 28 &வது நாளுக்குள்ளேயே அந்தக் குழந்தை அதன் வாழ்நாள் முழு வதும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்-கான அடித்தள வேலை-கள் மொத்தத்தையும் முடித்துவிடுகிறது. இதனால், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே பெண் ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வது அவசியம் என்று இப்போது கண்டுபிடித்திருக்கிறார்க…
-
- 2 replies
- 4.1k views
-
-
எதற்கும் கட்டுப்படாமல் உங்களின் தலைக்கு உள்ளே தொடர்ந்து வரும் இந்த ஒற்றைத் தலைவலியை விரட்ட நம்முடைய பாரம்பரிய பாட்டி வைத்தியம் இருக்கும் பொழுது கவலை எதற்கு. உடலையும் உள்ளத்தையும் உருக்குலைக்கும் ஒற்றைத் தலைவலி – மைக்ரோன் தலைவலி (Migraine) என்பது உடல் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள், தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்யாகும். குறிப்பிடத்தக்க ஒற்றைத் தலைவலியானது, தலையின் ஒருபக்கமாக ஏற்படும், துடிப்புடைய (pulsating), 4 தொடக்கம் 72 மணித்தியாலங்களுக்கு நீடித்திருக்கக் கூடிய கடுமையான தலைவலியால் அடையாளம் காணப்படுகின்றது. இந்த ஒற்றைத் தலைவலியை தூண்டி விடும் காரணிகளை கண்டறிந்து தடுப்பது என்பத…
-
- 2 replies
- 1.6k views
-
-
கோடைக்காலம் என்றாலே மக்கள் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகுவார்கள். உடற்களைப்பால் ஏற்படும் சோர்வு, வியர்க்குரு, வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் சின்னம்மை, தட்டம்மை போன்ற நோய்களால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இதில், சின்னம்மை மிகவும் அபாயகரமானது, உடல் முழுவதும் கொப்பளங்களை ஏற்படுத்திவிடுகிறது. சின்னம்மையை முதல் முதலில் அடையாளம் கண்டுபிடித்தவர் (1510-1580) மருத்துவர் Giovanni Filippo Ingrassia ஆவர். பரவும் விதம் varicella-zoster virus எனும் வைரசால் பரவும் சின்னம்மை நோயால் அதிகம் பாதிக்கப்படுவது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர். இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது, மேலும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருமுவதால் அவர்களின் உமிழ்நீர், சளி மற்றவர்கள…
-
- 2 replies
- 2.1k views
-
-
-
- 2 replies
- 881 views
-
-
வாசனைத் திரவியங்களில் அரசி என்று இதைச் சொல்வார்கள். டீயில் இதைச் சேர்த்தால் அதன் ருசியே தனி! உணவின் ருசியை அதிகமாக்கும். செரிமான சக்தியைக் கூட்டி, பசியைத் தூண்டும். ஏலக்காயை நசுக்கி, சும்மாவே வாயில் போட்டு மெல்வது சிலருக்குப் பழக்கம். நாவறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு என பல பிரச்சினைகளிலிருந்து, ஏலக்காயை சும்மா மெல்லுவதாலேயே நிவாரணம் பெறமுடியும். எனினும் இதை அதிகமாக, அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லதல்ல. ஏலக்காய்க்கும் மூக்கடைப்பு சிகிச்சைக்கும் சம்பந்தம் இருக்கிறது. ஆமாம்! ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஏலக்காய…
-
- 2 replies
- 523 views
-
-
தேமல் மறைவதற்கான மருத்துவக் குறிப்புக்கள் எமது உடலில் தேமல் வந்தால்இபார்ப்பதற்கு அழகில்லாமல் இருக்கும் ஆகவே தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும். தேமல் மறைவதற்கான சில மருத்துவக் குறிப்புக்கள் நீங்களும் இவற்றைச் செய்து பார்த்தால் உங்களுக்கு வந்த தேமல் காணாமல் மறைந்து போயிடும். இளம் கூடான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும். எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வர வேண்டும். ஆடாதோடை இலையை தேங்காய் எண்ணெய்யில் போட்டு 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் இல்லாமல் போய்விடும். மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தா…
-
- 2 replies
- 9.8k views
-
-
எவ்வளவு சீனி ஒரு குவளை coca cola வில் உண்டு??
-
- 2 replies
- 683 views
-
-
உணவுப்பாதை, மூச்சுப்பாதை, தோல் போன்றவற்றின் வாயிலாக நமது உடலுக்குள் நுழையும் நுண்கிருமிகள் ரத்த அணுக்களுடன் சண்டையிடும் போது அழிந்துவிடுகின்றன அல்லது ரத்த அணுக்களால் தூக்கியெறியப்பட்டு தோலின் வாயிலாக வெளியேற்றப்படுகின்றன. இவை வியர்வை துவாரங்களை அடைத்து கட்டிகளை உண்டாக்குகின்றன. அதுமட்டுமின்றி தோலின் வாயிலாக உடலுக்குள் செல்லும் நுண்கிருமிகளும் ரத்தத்தை சென்றடைய முடியாமல் தோலிலேயே தங்கி ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டு தோலில் கட்டிகளாக மாறுகின்றன. இந்தக் கட்டிகள் நாட்கள் செல்லச் செல்ல பெரிதாகி, சிவந்து, உடைந்து சீழாக வெளியேறி பின் புண்களாக மாறி ஆறுகின்றன. இதனால் இயற்கையாகவே கிருமிகள் கிருமிகளாலே அழிக்கப்பட்டு உடல் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு தோன்றும் கட்டிகள் சிலந்தி கட்டிகள், …
-
- 2 replies
- 5.8k views
-
-
கிராமப்புறங்களில் பெரும்பாலான வீடுகளிலும் வேப்பம் மரம் இருக்கும். அதனால் தான் கிராமப்பகுதிகளுக்கு சென்றாலேயே, நன்கு குளிர்ச்சியான மற்றும் சுத்தமான காற்றினை சுவாசிக்க முடிகிறது. மேலும் கிராமப்புறங்களில் பற்களை துலக்க வேப்பங்குச்சியைத் தான் பயன்படுத்துவார்கள். அதுமட்டுமின்றி, அக்காலத்தில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வேப்பிலை, வேப்பம் விதை, வேப்பம் பூ, வேப்பம் பட்டை என வேப்பம் மரத்தின் அனைத்து பகுதிகளும் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இக்காலத்தில் அந்த இயற்கை வைத்தியங்களெல்லாம் மறந்து போய்விட்டன என்பதை விட நவீன மருத்துவத்தால் மறைந்து போய்விட்டன எனலாம். இருப்பினும் தமிழ் போல்ட் ஸ்கை ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேப்பம் மரத்தினை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று …
-
- 2 replies
- 1.7k views
-
-
கெளுத்தி மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? ஆரோக்கிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கெளுத்தி மீனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துகொள்ளுங்கள். ஆரோக்கிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கெளுத்தி மீனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துகொள்ளுங்கள். புரதச்சத்து, ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் பேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள் உங்களுக்கு தேவையெனில் கெளுத்தி மீனை சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். குறிப்பாக, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கெளுத்தி மீனை சாப்பிடலாம். அடங்கியுள்ள சத்துக்கள் 100 கிராம் கெளுத்தி மீனில், Saturated fat 3.3 கிராம், Polyunsaturated fat 3.3 கிராம், Monounsaturated fat 6 கிராம் அடங்கியுள்ளன…
-
- 2 replies
- 2.1k views
-
-
நாம் சாப்பிடும் உணவானது நமது உணவுக் குழாயில் குளுகோஸாக மாறி இரத்தத்தில் கலக்கிறது என்று முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இந்த குளுகோஸ் இரத்தத்தின் மூலமாக நமது உடம்பின் ஒவ்வொரு திசுக்களுக்கும் சென்று அடைகிறது. (மனித உடலில் சுமார் 10 லட்சம் கோடி திசுக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்). ஒவ்வொரு திசுவும் ஒரு ரசாயனத் தொழிற்சாலை போல செயல்படுகிறது. இரத்தத்தின் மூலம் இவைகளுக்கு மனிதனின் எரிபொருளான குளுகோஸ் மற்றும் பிராணவாயு சென்று அடைகின்றன. இரத்தத்திற்கு பிராணவாயு நுரையீரலிலிருந்து கிடைக்கிறது என்ற ரகசியம் உங்களுக்கு முன்பே தெரியும். நாம் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விறகு எரிதலைப் பார்த்திருக்கிறோம். அதிலுள்ள ரசாயன மாற்றத்தைப் பற்றி எத்தனை பேர் சிந்தித்திருப்போம? விறக…
-
- 2 replies
- 1.9k views
-
-
-
வெயில் காலங்கள் அல்ல மழைக்காலம் என்றல்ல தினசரி கூல்டிரிங்க் எதையாவது குடிப்பது பலருக்கு இருந்து வரும் பழக்கம் இதனை நாம் நம் ந்ண்பர்களில் பலரிடமும் பார்த்திருப்போம். ஆனால் இனிமேல் அவர்களை எச்சரிப்பதுதான் சிறந்த நட்புக்கு அடையாளம். அனைத்தையும் விடவும் மதுபானம் அருந்துபவர்கள் 'நாற்றம்' தெரியாமல் இருக்க பெப்சி, கோலா போன்ற பானங்களை மிக்ஸ் செய்து மது அருந்துகின்றனர். இது ஒரு மிகப்பெரிய நடைமுறையாக ராட்சதமாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் ஸ்வீடனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்த ஒரு விஷயம் நமக்கு எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. நாளொன்றுக்கு 200 மிலி அல்லது 300மிலி கூல் டிரிங்க் அருந்துவது என்பது மிகவும் ஆபத்தானது என்கிறது அந்த ஆய்வு. இவர்களுக்கு மிகவும் உ…
-
- 2 replies
- 523 views
-
-
நீரிழிவுக்கு தீட்டப்படாத கைக்குத்தல் அரிசி சனி, 21 ஜூலை 2007( 12:09 ஈஸ்T ) நீரிழிவு நோயாளிகள் தீட்டப்படாத புழுங்கல் அரிசியை உட்கொண்டால் நல்லது என்று மருத்துவர் மோகன் தெரிவித்துள்ளார். மெட்ராஸ் நீரிழிவு நோய் சிறப்பு மையத்தின் தலைவர் மருத்துவர் வி.மோகன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் கூறினார். இந்தியாவில் 4 கோடி பேர் நீரிழிவு (சர்க்கரை) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை 2025-ம் ஆண்டு 7 கோடியை தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். பெற்றோர்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் வருவது நிச்சயம் ஆனால் பெற்றோருக்கு இல்லாமலும் இப்போது உள்ள உணவு பழக்க வழக்கத்தினாலும் உடற்பயிற்சி இல்லாததாலும…
-
- 2 replies
- 2.8k views
-
-
இந்த புதுவகை எண்ணெய்க் குளியல் பற்றி உங்களுக்கு தெரியுமா? எண்ணெய்க் குளியல் என கேட்டவுடன் யாரும் கச்சா எண்ணெயைப் பற்றிக் கற்பனையும் செய்து பார்த்திருக்க மாட்டார்கள். எனினும், ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் இடையிலான அஸர்பைஜானிலுள்ள (Azerbaijan) நஃப்த்தலான் (Naftalan) என்ற நகரில் பல நோய்களுக்கு கச்சா எண்ணெய்க் குளியல் வழி தீர்வு காண்கிறார்கள் பலர். உடல் வெப்பத்திற்குச் சற்றே அதிகமான வெப்பநிலையில் கச்சா எண்ணெய் சூடாக்கப்படும். அதில் 10 நிமிடங்கள் மூழ்கி வெளியில் வருவதற்காகச் சுற்றுப்பயணிகள் பலரும் கச்சா எண்ணெய்க் குளியல் விடுதிகளுக்குச் செல்கிறார்கள். அஸர்பைஜானின் வர்த்தகத்தில் பெரும் பகுதி எண்ணெய் ஏற்றுமதி. ஆனால் நஃப்த்தலானில் கிடைக்கும் கச்சா எண்ணெய், ஏற…
-
- 2 replies
- 947 views
-
-
“மகள் என்னைக் கனடாவுக்கு வரச் சொல்லுறா. இந்தச் சளிக்காரி நான் அங்கை போய் என்ன செய்யிறது” மூக்கால் சளி சிந்தவில்லை. வார்த்தைகளில் நம்பிக்கையீனம் ஓட ஓடச் சிந்தியது. அழாத குiறாயாகச் சொன்னார் அந்த அம்மணி. இதே அம்மணி சென்ற மாதம் வந்தபோது, “வாழ வழியே தெரியவில்லை. தனிய கிடந்து மாயிறன். கூப்பிட்ட குரலுக்கு ஏனென்ன யாருமில்லை. என்ன வாழ்க்கை” எனச் சலித்துக் கொண்டார். தனியே வாழ்வது சிரமம் எனக் கவலைப்பட்ட அதே அம்மா இப்பொழுது மகளுடன் வாழச் சந்தர்ப்பம் கிடைத்தபோதும் திருப்பதியடையவில்லை. போதுமென்ற மனசு போதுமென்ற மனசு பொன் போன்றது என்பார்கள். மாறாக எதிலும் திருப்பதிப்படாத மனசு நரகமாகத்தான் இருக்கும். கோப்பையும் தண்ணீரும் நல்ல உதாரணம். “எனது கோப்பையில் தண்ணீர் அரைவா…
-
- 2 replies
- 1.1k views
-
-
நீரிழிவு நோய் இன்று உலகில் பலரையும் அச்சுறுத்தும் ஒரு நோயாக காணப்படுகிறது. எமது உடம்பில் காணப்படும் இன்சுலின் என்ற மிக முக்கியமான ஹோமோன் உற்பத்தியாதல் மற்றும் அதன் செயற்பாடுகளில் ஏற்படும் குறைபாடுகளால், இரத்தத்தில் காணப்படும் சக்கரையின் அளவு அதிகரிக்கின்றது. இவ்வாறு உடம்பில் சக்கரையின் அளவு அதிகரிப்பதே நீரிழிவு நோய் எனப்படுகிறது. உணவுக்கட்டுப்பாடு, மருந்துவ சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி என்பவற்றின் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் அதன் சாத்தியம் நோயாளர்களின் கைகளில் தான் உள்ளது. நோயாளர்கள் அலட்சியமாக இருப்பார்களேயானால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் பாரதூரமானதாகி விடும். அவற்றில் ஒன்று தான் நீழிவு நோயாளர்களுக்கு ஏற்படும் காயங்கள். இது தொடர்பில் அவர்க…
-
- 2 replies
- 839 views
-
-
சைனஸ் பிரச்சனையை தவிர்க்க என்ன செய்யலாம்? சைனஸ் என்பது நம் முகத்தில் மூக்கின் உட்புறத்தில் உள்ள காற்றறை ஆகும். நமது மூக்கிற்கு இரண்டு பக்கமும் ஒரு ஜோடி சைனஸ் அறைகளும், நடு நெற்றிக்கருகினில் ஒரு ஜோடி சைனஸ் காற்றறைகளும் இருக்கின்றன. நாசி துவாரத்தின் உள்ளே மேடு பள்ளங்களும் காணப்படுகின்றன. நாம் சுவாசிக்கும் காற்றினில் உள்ள கிருமிகளை இந்த பகுதியில் உள்ள செல்கள் தடுத்து விடுகிறது. இதன் உட்பகுதியில் உள்ள காற்றிடமே சைனஸ். இதில் அலர்ஜி அல்லது நோய் தாக்குதல் ஏற்பட்டு நீர் கோர்த்துக் கொள்வதால் சைனஸ் என்கின்ற காற்றறைகளில் பாதிப்பு வருகின்றது. இந்த பாதிப்பிற்கு த்தான் சைனஸைடிஸ் என்று பெயராகும். காரணங்கள்: நச்சு காற்றை தொடர்ந்து சுவாசிப்பதால் அலர்ஜி ஏற்ப…
-
- 2 replies
- 5.6k views
-