நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3015 topics in this forum
-
கண்களைப் பேணும் காய்கறிகள் நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது. அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது. வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழ…
-
- 1 reply
- 1k views
-
-
உடல்நலத்தை காக்கவல்ல அற்புத மருத்துவ மூலிகை நீர் முள்ளி...!! இரத்த சோகையால், உடல் இளைத்து, முகம் வற்றி, ஒடுங்கிய கண்களுடன் சோர்ந்து காணப்படும் சிறுமியர், பெண்கள் புதுப்பொலிவு பெற இந்த நீர்முள்ளி பயன்படுகிறது. சிறுநீரை பெருக்கும். வியர்வையை தூண்டும். உடலை ஊட்டம் பெறவைக்கும். நீர் முள்ளி விதையுடன் முருங்கை விதை, தாமரை விதை, வெங்காய விதை சம அளவு சேர்த்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி பெருக தாம்பத்யத்தில் முழு பலன் கிடைக்கும். இதன் விதையைத் தனியாக அரைத்துப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும். நீர்முள்ளிச்செடியின் விதைகள் உடல்நல பாதிப்புகளுக்கு, சிறந்த தீர்வு தருபவை. வறண்ட உடலுக்கு நீர்ச்சத்தை அளித்து, உடலில் தேங்கிய நச்சு …
-
- 0 replies
- 1k views
-
-
உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறைய பேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப் போவதும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ்: 1. தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும். 2. எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். 3. வேக வைத…
-
- 15 replies
- 1k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images பெரும்பாலான டீ பிரியர்கள் சர்க்கரை இல்லாமல் டீ குடிக்கமாட்டார்கள். ஆனால், டீயில் சர்க்கரையை கலந்து குடிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, டீ பிரியர் ஒருவர் நீண்டகால அடிப்படையில் முயற்சிக்கும்போது, எவ்வித பிரச்னையுமின்றி, சர்க்கரையோடு டீ குடித்தபோது இருந்த உற்சாகத்துக்கு குறைவின்றி, சர்க்கரை இல்லாமலே இருக்க முடியுமென்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஒரேயடியாகவும் மற்றும் படிப்படியாகவும் டீயில் சர்க்கரையின் தேவையை குறைப்பது இதற்கான முயற்சியில் குறிப்பிடத்தக்க பல…
-
- 1 reply
- 1k views
-
-
ஜெனிஃபர் கோப்ரெட்ச்க்கு தனது 17 வயதில்தான் 'தன்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது' என்ற செய்தி தெரிய வந்துள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த 33 வயது பெண்ணான ஜெனிஃபர் கோப்ரெட்ச் சமீபத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். இறந்த பெண் ஒருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கர்ப்பப்பை மூலம் ஜெனிஃபருக்கு இந்தக் குழந்தை பிறந்துள்ளது. இதன் மூலம் "அமெரிக்காவில், இறந்த கொடையாளரிடமிருந்து பெற்ற கர்ப்பப்பைமாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு, பிறந்த இரண்டாவது குழந்தை" என்ற சிறப்பையும் இந்தக் குழந்தை பெற்றுள்ளது. ஜெனிஃபர்-ட்ரு தம்பதியினர் அமெரிக்காவில் கர்ப்பப்பைமாற்று அறுவைசிகிச்சையில் பிறந்த முதல்…
-
- 0 replies
- 1k views
-
-
மசாஜ் செய்வதன் மூலம் உடலும் மனமும் புத்துணர்ச்சியடையும், மனஅழுத்தம் நீங்கி தெளிவு பிறக்கும் என்பார்கள். ஸ்பா போன்ற இடங்களில் மசாஜ் செய்வதற்கென்றே தனி ஆட்கள் இருக்கின்றனர். 6 மாதத்திற்கு ஒருநாள் அல்லது வசதியைப் பொருத்து மாதம் ஒருநாள் மசாஜ் செய்து கொள்ளலாம். இதனால் உடல் சுறுசுறுப்பாகும். மசாஜ் பலவிதங்களில் செய்யப்பட்டாலும், ஆயில் மசாஜ், மில்க் மசாஜ், நத்தை மசாஜ் என பிரசித்தி பெற்ற மசாஜ்கள் வரவேற்பு பெற்றவை. தற்போது பாம்பு மசாஜ் என்ற புதுவித மசாஜ் இஸ்ரேல் அழகு நிலையங்களில் செய்யப்படுகிறது . அமேசான் பாம்புகள் இஸ்ரேலில் வழங்கப்படும் மசாஜ், வேறு எங்குமே கேள்விப்பட்டிராதது. அமேசான் காடுகளில் பிடிக்கப்பட்டு, பழக்கப்படுத்தப்பட்ட பாம்புகளைக் கொண்டு அங்கு மசாஜ் செய்கிறார்கள் .…
-
- 9 replies
- 1k views
-
-
யோகா பயிற்சிகள் யோக முத்திரா ஆசனங்கள், தியானம், உடற்பயிற்சி என்று எதுவாக இருந்தாலும் வயிற்றில் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது அவசியம். அதற்கு யோக முத்திரா உதவுகிறது. யோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது. முதுகு தண்டுவடம் வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றன. நல்ல ஆரோக்கியத்தை எட்டுகின்றன. நாள் முழுவதும் சுறுசுறுப்பு தொடர்கிறது. முகத்தில் பொலிவும், தேஜசும் ஏற்படுகிறது. முக்கியமாக இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் இந்த ஆசனத்தின் போது நன்றாக அழுந்துவதால் நீடித்த மலச்சிக்கலும் நீங்குகிறது. “குடலை கழுவினால் மட்டுமே உடலை வளர்க்க முடியும்” என்பது தமிழ்வாக்கு.…
-
- 2 replies
- 1k views
-
-
நீரில் இறங்காமல் நீச்சலா? பிரஸர், கொலஸ்ட்ரோல், நீரிழிவு என மூன்றும் கலந்துழலும் பெண் அவள். 5 அடி உயரத்தில் 80 கிலோ எடையும் சேர்ந்ததால் நிலைமை மேலும் மோசமாயிற்று. "நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்" என்றவுடன் அவளது முகத்தில் கோபம் கொப்பளித்தது. "விடிஞ்சு பொழுது சாயு மட்டும் வீட்டிலை வேலை, வேலை... இதுக்கு மேலை என்ன பயிற்சி செய்யுறது." இன்னுமொருவர் தனியார் துறையில் பொறுப்பு வாய்ந்த வேலையில் இருப்பவர். வேளையோடு வேலைக்குப் போனால் இரவான பின்தான் வீட்டிற்கு வர முடியும். உடற்பயிற்சி பற்றி யோசிக்கவே நேரம் இல்லையாம். உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்பதை இருவருமே அறிந்திருந்தார்கள். ஆயினும், நேரம் இல்லாததால் பயிற்சி செய்வதில்லை. ஆனால், நீரில் இறங்காமல் நீந்த…
-
- 0 replies
- 1k views
-
-
முதுகு வலி எனப்படும் ‘பேக் பெயின்’ ஒரு காலத்தில் முதியவர்களுக்கான பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய நிலைமை தலைகீழ். 25 - 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்குக்கூட இந்தப் பிரச்சினை தற்போது பரவலாகிவிட்டது. பெருகிவரும் இந்தப் பிரச்சினைக்கு ஆயுர்வேத சிகிச்சையை நாடுவோர் அதிகரித்து வருகிறார்கள். ஆயுர்வேத சிகிச்சையில் முதுகு வலி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியுமா? அது எப்படிச் சாத்தியம்? இந்த அவசர உலகில் 80 சதவீதம் பேருக்கு ஏதோ ஒரு வகையில் முதுகு வலி இருக்கிறது. முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படும் வலிதான் பேக் பெய்ன் எனப்படும் முதுகு வலி. இதில் பல வகைகள் உண்டு. ஜவ்வு வீங்குல், ஜவ்வு விலகுதல், எலும்புத் தேய்மானம், எலும்பு பலவீனம் அடைதல், அடிபடுதல் எனப் பல காரணங…
-
- 0 replies
- 1k views
-
-
தொடர்ந்து Paracetamol உட்கொள்பவர்கள் மரணிக்கும் ஆபத்து.! தொடர்ந்து அளவுக்கதிகமாக பரசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டு வரும் ஆட்களுக்கு சில சந்தர்ப்பங்களில் உடலில் தேங்கும் அந்த மருந்தின் அளவு அதிகமாகி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். அண்மைய ஆண்டுகளில் 150 க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறாக உயிரிழந்திருப்பதை அமெரிக்காவின் எடின்பர்க் நகர மருத்துவமனைகள் பதிவுசெய்துள்ளன என்று அந்நகர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நபர் உட்கொள்வதற்குரிய அளவை விட சற்று கூடுதலான அளவில் பாரசிட்டமால் மருந்தை உட்கொள்கிறோம் என்பதை…
-
- 0 replies
- 1k views
-
-
டெல்ரா வைரஸ்: தொற்றுத்தடுப்பிற்கு உதவும் புதிய தகவல்கள். (முக்கியத்துவம் கருதி இந்தப் பதிவை நான் ஆரம்பித்த டெல்ரா தொடரில் இருந்து தனியாக இணைக்கிறேன். அவசியமெனின் அந்தத் தொடரோடு நிர்வாகம் இணைத்து விடலாம்!) உலகின் பிரதானமான கோவிட் 19 தோற்றுவிக்கும் வைரசாக டெல்ரா வகை வைரஸ் உருவாகியிருக்கிறது. மேற்கு நாடுகள் சிலவற்றில், முகக் கவசம் அணியும் அவசியம், மூடிய இடங்களில் ஒன்று கூடும் ஆட்களின் எண்ணிக்கை மீதான கட்டுப் பாடு என்பவற்றை மீள அமல் படுத்தும் தேவை ஆகியவை டெல்ரா வைரஸ் பரவலால் ஏற்பட்டிருக்கின்றன. இது வரையில் டெல்ரா வைரஸ் வேகமாகப் பரவும் சக்தி கொண்டது எனப் பொதுவாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தாலும், அப்பரவலின் உயிரியல் ரீதியான பின்னணி சரியாக இனங்காணப் பட்டிருக்கவில்லை.…
-
- 0 replies
- 1k views
-
-
சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்ம…
-
- 1 reply
- 1k views
-
-
மாற்றி மாற்றி பயன்படுத்த வேண்டும்! சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணெய் குறித்து கூறும், சூழல் பாதுகாப்பு குழு மருத்துவர் புகழேந்தி: 'நான் இந்த எண்ணெயை தவிர, வேற எதையும் தொடறதே இல்லை'னு பெருமையாக கூறிக் கொள்வர். இது, முழுக்க தவறான நம்பிக்கை.ஒரே வகையான எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தும் போது, அதிலிருக்கும் கெடுதல் தன்மை, உடலில் சேர்ந்து கொண்டே இருக்கும். எண்ணெய்களில் உள்ள நற்குணங்கள் மட்டுமே உடம்பில் சேர வேண்டும் எனில், எல்லா வகை எண்ணெய்களையும் மாற்றி மாற்றி கொஞ்சமா பயன்படுத்த வேண்டும்.மார்க்கெட்டில் விற்கப்படும் சூரியகாந்தி ரீபைண்டு எண்ணெய், சிறுநீரகத்துக்கு நல்லது இல்லை. எந்த எண்ணெயாக இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல், ஒரே எண்ணெயை தொடர்ந்து பயன்படு…
-
- 2 replies
- 1k views
-
-
வீட்டில்.. கணவன்.. மனைவி.. பிள்ளைகளை.. உறவினர்கள்.. நண்பர்களிடையே கடுப்பாகி.. அடிக்கடி சண்டையும்.. வாதங்களும் நடந்தால் (யாழுக்கும் பொருந்தும் போல) அது ஆயுளின் பெரும்பகுதியை குறைக்கலாம் என்று சமீபத்தில் நடுத்தர வயதினரை வைத்து மேற்கொண்ட ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது. இது ஆண்கள் பெண்கள் என்று இருபாலாருக்கும் பொருந்தும். அடிக்கடி கடுப்பாவதால்.. உயர் குருதி அழுத்தம்.. மன அழுத்தம்.. மன உளைச்சல்.. கவலை.. போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அது இதயம் மற்றும் மூளை சார்ந்த பாதிப்புக்களை உண்டு பண்ணி... மரணத்தையும் துரிதப்படுத்த வழிவகுப்பதாக இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதில் உள்ள முக்கிய ஆபத்து என்னவென்றால்.. இது 50% - 100% வரை இறப்பை விரைவு படுத்துவதுதான். எனவே சண்ட…
-
- 13 replies
- 1k views
-
-
நானும் பீட்சாவும், துரித உணவில் சிக்கித் தவிக்கும் சமூகமும் – ந.சர்மியா… February 16, 2019 அம்மா…. நான் இண்டைக்கு பீட்சா சாப்பிட்டே ஆகனும். பீட்சா இல்லாட்டிக்கு இண்டைக்கு சாப்பிட மாட்டன்….. என அம்மாவிடம் அடம் பிடித்து விட்டு பீட்சா சாப்பிட காசை வாங்கிக் கொண்டு சாப்பாட்டுக் கடைக்கு அவாவாடு சென்றேன்… கடைக்குள் சென்றதும் வட்ட வடிவில் மேசை கதிரை போடப்பட்டு அழகாக இருந்தது. நானும் அக் கடையின் அலங்காரங்களை ரசித்துக் கொண்டு நாற்காலியில் போய் உட்காந்தேன். ஏதோ சாதித்தது போல் ஒரு சந்தோசம் அந்த பெருமிதத்தோடு இருக்க சிவப்பு நிற மேற்சட்டையும் கறுப்பு நிற பான்ட் போட்டு அங்கு பணிபுரியும் அழகான பையன் என் அருகில் வந்தான். “மேடம் ஓடர் ஃப்ளீஸ்” என கேட்க நானும் …
-
- 1 reply
- 1k views
-
-
ஆண்கள் கருத்தடைக்கு பயன்படும் இந்தியாவில் தயாராகும் புதிய ஊசி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவில் வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டுள்ள ஊசி மருந்து ஆண்களுக்குச் சிறந்த கருத்தடை மருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், அமன் யாதவ் பதவி, பிபிசி இந்தி 8 மணி நேரங்களுக்கு முன்னர் அண்மையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மேற்கொண்ட ஒரு பரிசோதனை மருத்துவ உலகில் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. ஏழு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட ஆண் கருத்தடை ஊசியின் மருத்துவப் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அதா…
-
- 5 replies
- 1k views
- 1 follower
-
-
- பொன்.விமலா ''முன்ன எல்லாம் காய்ச்சல்னு டாக்டர்கிட்ட போனா... மாத்திரை எழுதித் தர்றதோட, 'பால் குடிக்கக் கூடாது, காரம் கூடவே கூடாது, எண்ணெய்ப் பொருட்கள் வேண்டாம், கஞ்சி சாப்பிடலாம், பிரெட் சாப்பிடலாம்’னு இப்படி சாப்பாட்டைப் பற்றியும் மறக்காம சொல்லி அனுப்புவார். ஆனா, சமீபத்துல நான் இரண்டு வேறுபட்ட நோய் காரணமா டாக்டர்கிட்ட போனப்போ, நோய்க்கான மருந்தை பரிந்துரைத்தவர்கிட்ட, 'என்னவெல்லாம் சாப்பிடலாம், எதெல்லாம் கூடாது டாக்டர்?’னு நான் கேட்க, 'அப்படிஎல்லாம் எந்தக் கட்டுப்பாடும் தேவையில்ல, எதை வேணும்னாலும் சாப்பிடுங்க!’னு சொல்லி அனுப்பினார். உடல் நலக்குறைவால சிகிச்சை எடுத்துட்டு இருக்கும்போது, இப்படி எதை வேணும்னாலும் சாப்பிடறது சரியா இருக்குமா..?'' - இப்படி ஒரு கேள்வியை நம் வாசக…
-
- 0 replies
- 1k views
-
-
* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறுது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும். * வெங்காய நெடி சில தலைவலிகளை குறைக்கும். வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். * வெங்காய சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல்வலி, ஈறுவலி குறையும். * வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் பலமாகும். * வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும். * படை, தேமல் மேல் வெங்காயம் சாற்றை தடவினால் மறைந்துவிடும். * வெங்காய ரசத்தை …
-
- 0 replies
- 1k views
-
-
விபத்துகள் இன்றைய நவீன உலகில் மலிந்துவிட்டன. விபத்துகள் எங்கள் வீட்டை வரமாட்டாது என்று யாரும் அடித்து கூற முடியாது எனவே எல்லோரும் முதலுதவியை பற்றி அறிந்திருந்தால் உயிர்களை அவயங்களை காப்பாற்ற முடியும். அறிந்திருந்தால் அவசரத்துக்கு உதவும்; [size=1]தி[/size]டீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினால் உண்டாகும் எலும்பு முறிவு போன்ற ஆபத்தான காலகட்டங்களில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் ஆபத்திலிருந்து நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முதல் உதவி சிகிச்சை செய்ய வேண்டும். மாரடைப்பு: மாரடைப்பிற்கான அறிகுறிகள்: நெஞ்சுவலி. நெஞ்சினைக் கசக்கிப்பிழிவதுபோல் திடீரென்று தாங்கமுடியாத வலி நெஞ்சின் நடுவே தோன்றுதல். இரண்டு தோள்பட்டை…
-
- 1 reply
- 1k views
-
-
முதுகு வலி எப்படி - ஏன் வருகிறது? நவீன வாழ்க்கையில் உள்ள அழுத்தம் (Stress) தான் முதுகுவலியின் முதற்பெரும் காரணமாகக் கூறலாம். எப்போதுமே நாம் தலைதெறிக்க ஓடும் அவசரத்திலும் பல்வகைச் சூழ்நிலை அழுத்தங்களுக்கு ஆளாகி இருக்கிறோம். எதிர்பாராமல் அதிகப் பளுவை ஒருவர் தூக்க முயலும்போது முதுகெலும்பை நிலை நிறுத்தியுள்ள தசைகள் போதிய இணக்கத்தைத் தரத் தவறிவிடுகின்றன. அது முதுகைப் பாதித்து வலியில் முடிகிறது. முதுகைக் குனியவைத்த நிலையில் பொருள்களைத் தரையில் இருந்து தூக்க முயற்சிப்பது, அதிக உயரத்தில் இருந்து குதித்து சடாலென்று தரையில் இறங்குவது,இவை இரண்டுமே அபாயகரமானவை. திடீரென்று திரும்புவது, அதுவும் ஒரு கனமான பொருளை வைத்த நிலையில் திரும்புவது முதுகுவலிக்கு வழி வகுக்கும். …
-
- 1 reply
- 1k views
-
-
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்வது சிறுநீரகம். அதனை செய்ய முடியவில்லை என்றால், உடலில் அதிக நீர்மம் சேர்ந்து கை, கால்கள், முகம் போன்ற இடங்களில் வீக்கம் ஏற்படும். எனவே சிறுநீரை குறிப்பிட்ட நேர இடைவெளியில் கழிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சிறுநீரக கல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படும். உடலில் உள்ள கழிவுகள் மற்றும் அதிகளவில் உள்ள நீர்மத்தை அகற்றுவதே சிறுநீரகத்தின் வேலை. சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது சிரமமாக இருக்கும். சிலருக்கு வலி, எரிச்சல் ஏற்படலாம். சிறுநீரக பாதையில் தொற்று காரணமாக இந்த பாதிப்புகள் ஏற்படும். இந்த தொற்று சிறுநீரகங்களுக்கு பரவினால் காய்ச்சல் உண்டாகி, பின்பக்கம் வலியும் உண்டாகும். சிறுநீரக நோயின் முதல் அறிகுறியே சிறுநீர…
-
- 0 replies
- 1k views
-
-
மூட்டு வலி (மூட்டு தேய்மானம்) பாட்டி வைத்தியம் - சுரேஷ் குமார் மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்: 1)மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும். 2)முடக்குவாதம்(rheumatoid arthritis): இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போ…
-
- 2 replies
- 1k views
-
-
முன்பெல்லாம் புற்றுநோய் தாக்கியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இன்றைக்குப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை புற்றீசல்போல் பெருகிக்கொண்டே வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் 1.4 கோடிப் பேருக்குப் புற்றுநோய் வருவதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் புதிய புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரிக்கலாம் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாகவும், உலக அளவில் பாதிக்கப்படும் புற்றுநோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் இருப்பதாகவும் சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி முகமை அபாயச் சங்கு ஊதியிருக்கிறது. இப்படிப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை கட்டுக்கடங…
-
- 0 replies
- 1k views
-
-
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடலுக்கும் ஆரோக்கியம் தருவது கீரைவகைகள் தான். அனைத்துவகை கீரைகளிலும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது, அதில் ஒன்றான பசலைக்கீரை மூளைவளர்ச்சிக்கு உதவுகிறது. மருத்துவ பயன்கள் பாலக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் கீரை வேறெதுவும் இல்லை. இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன. இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலை போக்கிறது. இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது. ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உ…
-
- 0 replies
- 1k views
-
-
குழந்தைக்கு பால் கொடுக்க முடியாம கஷ்டப்பட்டேன் - Breast Cancer-ல் இருந்து மீண்ட தன்னம்பிக்கை பெண் பாபி ஷகியாவிற்கு மார்பக புற்றுநோய் இருப்பது முதன்முதலில் கண்டறியப்பட்ட போது அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து ஒன்பது மாதங்களே ஆகியிருந்தன. ஆனால் மார்பக புற்றுநோயுடன் போராடினால் கூட, முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் குழந்தைகளை வளர்ப்பது சாத்தியம் தான் என்பதை அவரது கதை நிரூபிக்கிறது. பாபி ஷகியா மார்பகங்கள், எலும்பு மற்றும் தோலில் நான்கு முறை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தவர். அவருக்கு 27 வயதில் முதல்முறையாக மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்டது. 2022இல், உலகளவில் 2.3 மில்லியன் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக உலக சு…
-
- 0 replies
- 1k views
- 1 follower
-