யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
அட மீண்டும் பச்சை போடாமல் தடை பண்னி போட்டார்கள் ஐயோ நான் யாரிட்ட போய் முறையிட.... ஐநா சபை சிறிலங்காவுக்கு தடை போட 10 வருடத்திற்கு மேல் யோசிச்சு கொண்டிருக்கினம் ஆனால் நம்ம யாழிணையம் ஒரு கிழமை சலாம் போடவில்லை என்றால் பச்சை குத்துவதற்கு தடை .... மீண்டும் பச்சை குத்த அனுமதி தருமாறு அண்புடன் கேட்டுக்கொள்கிறேன்
-
- 12 replies
- 1.9k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2022 அன்று யாழ் இணையம் 23 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 24 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து உலகை முடக்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிக்குள்ளும் உலகத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 24 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக…
-
- 20 replies
- 2.7k views
-
-
வணக்கம் நிர்வாகம். " சங்கவியின் சாதனை " எனும் பதிவை " சிரிப்போம் சிறப்போம் "பகுதியில் மாறிப் பதிந்து விடடேன். அதை " சிந்தனைக்கு சில பதிவுகள்" எனும் பகுதிக்கு மாற்றி விடும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி
-
- 2 replies
- 925 views
- 1 follower
-
-
அனைவருக்கும் வணக்கம், நான் என் குழந்தைக்கு தூய தமிழில் பெயர் சூட்ட ஆசை படுகிறேன். பல நாட்கள் தேடியும் என் மனதிற்கு பிடித்த பெயர் கிடைக்கவில்லை. நல்லதொரு பெயர் சூட உங்களின் உதவி தேவை. நான் வெளிநாட்டில் உள்ளதால் பெயர் சற்று எளிதாக இருந்தால் நன்று, குறிப்பாக "ழ" கரம் இல்லாமல்.
-
- 20 replies
- 13.5k views
-
-
தகவல் அறிய தரவும். யாழ் களத்தில் இடப்படும் விருப்பு அடையாளங்களுக்கு ( சிமைலிகளுக்கு ) புள்ளிப் பரிசு இருப்பதாக அறிகிறேன். அதனை மீண்டும் அறியத்தந்தால் என் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். × Al Like Thanks Haha Confuse Sad
-
- 2 replies
- 562 views
- 1 follower
-
-
வணக்கம், யாழ் கருத்துக்களம் உலகத் தமிழரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாகவும் படைப்புத் திறனைக் காட்டவும் கூடிய ஒரு பொதுவான தளமாக 1999 மார்ச் 30 முதல் இயங்கிவருகின்றது. இவ்வாண்டு கொரோனா வைரஸிற்கான தடுப்பூசிகள் உலகநாடுகள் அனைத்திலும் வழங்கப்பட்டபோதிலும், கொரோனா வைரஸானது திரிபடைந்து நெருக்கடிகளைத் தோற்றுவித்துக்கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வழமையான பதிவுகள், கருத்தாடல்களுடன் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளையும், தடுப்பூசிகள் பற்றிய முக்கிய தகவல்களையும் கருத்துக்கள உறவுகளின் ஆதரவுடன் யாழ் கருத்துக்களம் பகிர்ந்துகொண்டு வருகின்றது. இந்த வகையில் 2021 ஆம் நிறைவுபெறும் இவ்வேளையில் யாழ…
-
- 8 replies
- 865 views
-
-
வணக்கம், யாழ் கருத்துக்களம் உலகத் தமிழரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாகவும் படைப்புத் திறனைக் காட்டவும் கூடிய ஒரு பொதுவான தளமாக 1999 மார்ச் 30 முதல் இயங்கிவருகின்றது. இவ்வாண்டு கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே பாரிய நெருக்கடிக்கு ஆளாகிய வேளையில், வழமையான பதிவுகள், கருத்தாடல்களுடன் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளையும் முக்கிய தகவல்களையும் கருத்துக்கள உறவுகளின் ஆதரவுடன் கருத்துக்களத்தில் பகிர்ந்துகொண்டு வருகின்றது. இந்த வகையில் 2020 ஆம் நிறைவுபெறும் இவ்வேளையில் யாழ் கருத்துக்களத்தில் அலசப்பட்ட திரிகளினதும், புதிதாக யாழுடன் இணைந்து கருத்தாடல்களில் பங்குபற்றோரினதும், அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்றவர்களினதும் பட்டியலை கீழே தருகின்றோம். …
-
- 40 replies
- 3.2k views
-
-
எனது கணனியில் மீண்டும் வழமை போல கடைசி பதிவை பார்க்க கூடியதாக உள்ளது. மாற்றியமைக்கு நனறி
-
- 0 replies
- 404 views
- 1 follower
-
-
-
அன்புடன் யாழ் நிர்வாக பொறுப்பாசிரியர் அவர்களுக்கு. திறமைகள் என்னும் தலைப்பில் எழுதிய எனது கவிதையொன்றை மாறி கதைக்களத்தில் போட்டுவிட்டேன் அதன்பின் கவிதைக்களத்திலும் போட்டுள்ளேன் கதைக்களத்தில் போட்டதை கவிதைக்களத்திற்கு மாற்றிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றேன். நன்றி அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
- 0 replies
- 408 views
-
-
வணக்கம் நிர்வாக உறுப்பினர்களுக்கு, நான் சில மாதங்கள் யாழுக்கு வரவில்லை. அதற்கு உடல், உள காரணங்கள் இருக்கின்றன. ஒரு மாதத்துக்கு முன்னர் ஒருமுறை வந்தபோது என்னால் யாருக்கும் கருத்து எழுத முடியவில்லை. எரிச்சல் தாங்க முடியாது நிப்பாட்டிப் போட்டுப் போய்விட்டேன். இரு கள உறவுகள் என்னிடம் கேட்டபோது நான் காரணத்தைக் கூறிவிட்டு வராமல் எங்கே போவது வருவேன் என்றேன். நேற்று வந்து ஒரு பதிவுக்குக் கருத்து எழுதும்போது கவனிக்கவில்லை. இன்று வந்து பதில் எழுதிவிட்டுப் பார்க்கும்போது எனது படத்துக்குக் கீழே பிங்க் நிறத்தில் பார்வையாளர் என்றும் மற்றவர்களுக்கு நீலத்தில் உறுப்பினர்கள் என்றும் இருந்தது. இது என்ன கோமாளித்தனம்????? நாம் சிலமாதம் வாராதுவிட்டால் எங்களை நீங்கள் கருத்துக்கள உறவிலிர…
-
- 94 replies
- 18.2k views
- 2 followers
-
-
களத்தின் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக மின்னஞ்சல்களைக் கொண்டே எதிர்வரும் காலங்களில் கருத்துக்களத்தில் உள்நுழையும் நடைமுறை கொண்டு வரப்படுகின்றது. வரும் 19ம் திகதி முதல் Display name இனைக் கொண்டு உள்நுழைந்து கொள்ள முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும். இது தொடர்பான கேள்விகளை இங்கே பதிந்து கொள்ளுங்கள்.
-
- 81 replies
- 22.1k views
- 2 followers
-
-
என்னிடம் ஒரு பாடல் எம் பி பதிவில் இருக்கின்றது அடந்த பாடல் சினிமாவிலா அல்லது தனிப்பாடலா எதுவும் தெரியவில்லை அந்த பாடலை இங்கு பதிவிடலாம் என்றால் எப்படி பதிவிட்டு அதன முழுப்பாடலையும் அறிந்து கொள்வது என்றும் தெரியவில்லை ,பாடல் மேட்டு குர்பானி ஹிந்தி பட பாடல் மேட்டில் இருக்கின்றது ,ஆனால் அது தமிழில் இருக்கின்றது ,இந்தியாவின் கனவுக்கன்னி என்று தொடங்கு கின்றது ,இப்பாடல் பற்றிய விபரங்கள் ,இந்த பாடலுடன் வேறும் பாடல்கள் இதே இசைத்தட்டில் வெளிவந்தனவா ?அப்படி வந்திருப்பினவராயும் பகிர்ந்து கொள்ளுங்கள் .நன்றி
-
- 39 replies
- 3.5k views
-
-
-
- 0 replies
- 837 views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2021 அன்று யாழ் இணையம் தனது 23 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து உலகை முடக்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடிக்குள்ளும் உலகத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடியில் இருந்து மீள ஒளிக்கீற்று தென்படும் காலகட்…
-
- 21 replies
- 3.7k views
-
-
எனக்கு வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்டதன் காரணத்தினை இங்கு அறியத் தரவேண்டும். யாருடைய சுய ஆசையில் அல்லது ஆரையாவது திருப்திப்படுத்தி அவர்களின் இன்பத்தை பூர்த்தி செய்யவா இந்த அனுமதி எனக்கு வழங்கப்பட்டது.
-
- 1 reply
- 604 views
-
-
ப(பி)ச்சை வேண்டாம் நாயை பிடி. எல்லாருக்கும் வணக்கம். முக்கியமாய் நியானிக்கு வணக்கம். இப்ப கொஞ்ச நாளாய் ஒரு தலையிடி புடிச்ச பிரச்சனை உந்த பச்சை புள்ளி பிரச்சனை. அதை வைச்சே கன உறுமல் குமுறல் எல்லாம் நடக்குது.பல நாட்களுக்கு முன் ஒரு உறவு யாழ்களத்தில் நல்ல கருத்தாடல் செய்பவர்களுக்கு இங்கே பச்சைப்புள்ளிகளும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை எண்டு ஆதங்கப்பட்டார். இதை வாசிக்க சம்பந்தப்பட்டவர் கட்டாயம் கொடுப்புக்கை சிரிப்பார்.😁 அது ஒரு பக்கம் கிடக்கட்டும். இந்த பச்சை புள்ளி விவகாரங்களால் சிலர் காரணம் அறியாமல் பல இடங்களில் சினம் கொள்வது வெளிப்படையாகவே தெரிகின்றது அல்லது யாவரும் அறிந்ததே. விருப்ப வாக்குகளை வைத்தே உள்ளது புரியாமல் குழுவாதம் என பழிசுமர்த்த தலைப்பட்டு விட்டன…
-
- 29 replies
- 3.7k views
- 1 follower
-
-
வணக்கம் போர் முடித்து வைக்கப்பட்ட பின்னரும் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது படும் துயரங்களை அவ்வப்போது அறிந்து கொள்வதும் அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதும் பின்னர் அவை அப்படியே தொடர்ச்சியாக விடுபட்டுக் கொண்டிருப்பதுவுமாகத் தான் நடைமுறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் ஒரு சில அவசர உதவிகளுக்காக உறவுகளுடன் கேட்டு அவர்கள் நிறையவே உதவிகளும் செய்து அந்த உதவிகளும் உரியவர்களுக்குப் உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்திருந்தது. யாழ் இணையம் மூலம் நேரடியாக தொடர்ந்தும் தாயக மக்களுக்கு உதவி செய்ய விரும்பினாலும் அது பல்வேறு சட்டச் சிக்கல்களும் நிர்வாகச் சிக்கல்களும் உள்ள ஒரு விடயமாக உள்ளபடியால் …
-
- 48 replies
- 10.9k views
- 1 follower
-
-
நிர்வாகிகளின் கவனத்துக்கு முதற்பக்கத்தில் இருக்கும் காப்புரிமை ஆண்டை மாற்றிவிடவும். காப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 1.2k views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே! “கலாச்சாரம்” என்பது தமிழ்ச்சொல்லே என்பதன் விளக்கம் இதோ: https://youtu.be/TD0F2EWqWFc
-
- 1 reply
- 1k views
-
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2020 அன்று யாழ் இணையம் தனது 22 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 22 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின…
-
- 31 replies
- 5.2k views
-
-
மேலே உள்ள திரியில் கடஞ்சா கூறுகிறார், ” காணொளி வடிவில் காணொளி வடிவில் காணொளி upload விட்டேன். எப்படி இணைப்பது? ஆனால், எனது upload லிமிட் 1 கிலோ bytes என வரையறுக்கப்பட்டுள்ளது.” இதே பிரச்சினை எனக்கும் உளது. ஒரு போட்டோவை இணைக்க முடியாது. யாருக்கும் விளக்கம், தீர்வு தெரியுமா?
-
- 22 replies
- 3.8k views
-
-
இப்படியொரு தனிப்பகுதி, யாழில் தொடங்கி அனைத்து செய்திகளையும் தொகுத்து பயனர்களின் பார்வையை ஈர்க்கும் வண்ணம்உடனுக்குடன் வழங்கினால் பயனுள்ளதாக இருக்குமே? Just a thought..
-
- 3 replies
- 793 views
-
-
வணக்கம் ... எனக்கு பச்சை புள்ளிகள் குத்த முடியாமல் இருக்கின்றது ..நிர்வாகம் நிவர்த்தி செய்தால் மகிழ்ச்சியடைவேன்..
-
- 9 replies
- 1.8k views
- 2 followers
-