யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
-
எல்லாருக்கும் வணக்கம், யாழில மற்றவர்களை நக்கல் அடிப்பது - நையாண்டி செய்வது எப்படி எண்டு எனக்கு கொஞ்சம் சொல்லித்தாங்கோ தெரிஞ்ச ஆக்கள். பெரிய, பெரிய மேதாவிகள், அறிவாளிகள், தேசியவாதிகள், தூய்மையானவர்கள், கெட்டிக்காரர்கள் எல்லாரும் இஞ்ச இருக்கிறீங்கள் எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்கோ... எனக்கும் கொஞ்சம் தெரியும். ஆனால் உங்களில சிலரிண்ட ரேஞ்சுக்கு அடிக்கிற அளவுக்கு எனக்கு அறிவு காணாது. நிறைய தமிழ் சினிமா படங்கள் பார்த்தால் நக்கல் அடிப்பதில எங்கட அறிவை பெருக்கிக்கொள்ளலாமோ? இல்லாட்டி நிறைய இங்கிலிஸ் படங்கள் பார்த்தால் உதவியாய் இருக்குமோ? தெரிஞ்ச ஆக்கள் கொஞ்சம் சொல்லுங்கோ. உங்கள் நக்கல்களிற்கு நன்றி!
-
- 20 replies
- 4k views
-
-
மாவீரர் நினைவு சுமந்து யாழ் முகப்பு அழகாக இருக்கிறது. தேசப்புதல்வர்கள் நினைவு சுமந்து யாழ்பயணிப்பது சிறப்பு, வடிவமைத்த யாழ்நிர்வாகத்திற்கும் நன்றிகள்.
-
- 5 replies
- 838 views
-
-
யாழ் இணயத்தள நிர்வாகிகளிடம் ஓர் வேண்டுகோள். மே 18 ம் திகதிக்காக ஓர் உணர்ச்சிப்பாடலை இசையமைத்து வைத்திருக்கின்றோம்.அதனை தென்னங்கீற்றில் பதிவு செய்வதற்கு தரவிறக்கம் செய்யமுடியாமல் உள்ளது.எப்படிச்சாத்தியப்படும் என்பதை விளக்குவீர்களா. நன்றி பணிவுடன் தமிழ்ச்சூரியன்.
-
- 2 replies
- 2.5k views
-
-
quote ஐ இணைப்பது எப்படி ??????????? எழுதுவதில் உதவி தேவை ???? மத்தியகுழு உறுப்பினர்கள் உதவ முடியுமா??????????????
-
- 9 replies
- 2k views
-
-
வணக்கம் யாழ் கள உறவுகளே... உதயசூரியன் பத்திரிகை சார்பாக யுத்தத்தால் பாதிக்கபட்டு கனவனை இழந்த பெண்களுக்கு உதயசூரியன் பத்திரிகை சர்பில் ரூபா 10.000 மாதம் ஒருவருக்க என்ற ரீதியில் வழங்கபட இருக்கின்றது... உங்கள் பிரதேசங்களில் அதாவது இலங்கையில் யுத்தத்தால் கனவனை இழந்து அல்லலபடும் யாரவது இருப்பின் எமக்கு பரிந்துரைக்கவும்....விதானையார?ன் உறுதிபத்திரம் இருப்பது அவசியம்.... இப்படிக்கு உதயசூரியன் பத்திரிகை சார்பாக சுண்டல்..... மேலதிக விபரம் வேண்டின் தனி மடலில் தொடர்புகொள்ளவும் தெரிவுசெய்யபடுபவர்களுக்க நேரடியாக பணம் அணுப்பி வைக்கபட இருப்பதால் தயவுசெய்து வங்கி விபரம் அணுப்பி வைக்கவேண்டும்..... திருப்திகரமான முறையில் விபரங்கள் நிரூபிக்கபடவேண்டும் என்றும்…
-
- 3 replies
- 1.5k views
-
-
-
எனது கணணீயில் எக்கலப்பை தமிழ் எழுத்துரு பாவிக்கின்றேன். வின்டோஸ் 10 விருந்தாளீயாய் வந்ததில் இருந்து "ல் ல ள் ள ளீ ற் ற றீ ண் ணீ போன்ற எழுத்துக்கள் குறீல் நெடில் பிரச்சனையாய் இருக்கு.அதிலும் குறீல் வருகுதில்லை. அத்துடன் தட்டச்சுப் பலகையிலும் வேகமாகக் குத்தவேண்டி இருக்கு. https://www.google.com/inputtools/windows/ இதைப் பாவிக்கும்போது தட்டச்சுப் பலகையில் வேறூ வேறூ எழுத்துகள் வருகுது....! தயவுடன் பிரச்சனை தீர வழி காட்டவும்.....!
-
- 2 replies
- 829 views
-
-
எனது கணனியில் மீண்டும் வழமை போல கடைசி பதிவை பார்க்க கூடியதாக உள்ளது. மாற்றியமைக்கு நனறி
-
- 0 replies
- 407 views
- 1 follower
-
-
இன்று அதிகாலை முதல் சுமார் 12 மணிநேரங்களுக்கும் மேலாக யாழ் களத்தில் நெடுக்காலை போவானுக்கான தணிக்கை தொடர்பான வாக்கெடுப்பு பொதுவில் நடை பெற்றது. சுமார் 30 க்கும் மேற்பட்டோர் பேர் அதில் கலந்து கொண்டனர். இதன் போது 25க்கும் மேற்பட்டவர்கள் நெடுக்கால போவான் முழுதும் தடை செய்யப்பட வேண்டும் எனவும் தணிக்கைக்க பின்னர் அவரது கருத்துக்கள் வெளியிடப்பட வேண்டும் எனவும் வாக்களித்திருந்தனர். 7 பேர் அவர் களத்தில் தொடர்ந்து எழுத வேண்டும் எனவும் கருத்து தெரிவித்திருந்தனர். நெடுக்கால போவான் தொடர்ச்சியாக 10 மணி நேரம் களத்தில் நின்று ஏதேதோ உளறிக்கொட்டிக் கொண்டிருந்தார். களத்தில் நெடுக்கால போவான் தொடர்பில் பலரின் கருத்தினை பிரதிபலித்த இந்த மட்டுப்படுத்தப்பட…
-
- 4 replies
- 1.3k views
-
-
வணக்கம்... இந்த வருடம் மார்ச் 30, 2008 உடன் யாழ் இணையத்துக்கு அகவை பத்து ஆகின்றது. சென்ற வருடம் அகவை ஒன்பதை மிகவும் சிறப்பாக கொண்டாடி இருந்தோம். இது சம்மந்தமாக யாரோ ஏதோ புத்தகம் எல்லாம் வெளிவிடப்போவதாய் சென்ற வருடம் சொன்னார்கள். பிறகு ஆக்களின் சத்தத்தையே காண இல்லை. அடியேன் முன்பு புதுசு புதுசாக பல கருத்தாடல்கள் யாழில் துவங்கி யாழ் கள கல்விமான்கள், பகுத்தறிவாளர்கள், தேசியவாதிகளிடமிருந்து கல்லெறிகளும், துரோகி என்ற பட்டங்களும் வாங்கி நன்றாக அனுபவப்பட்டு விட்டதால் இந்தத்தடவையும் ஏதாவது வித்தியாசமாக செய்யத்தொடங்கி கடைசியில் பலகோடி உலகத்தமிழ் மக்கள் முன்னிலையில் எனது கோவணத்தை பறிகொடுக்கும் முட்டாள்தனமான வேலையை செய்யாமல் கொஞ்சம் கவனமாக இருக்கலாம் என்று பார்க்கின…
-
- 19 replies
- 2.7k views
-
-
-
வணக்கம் உறவுகளே, ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது, ஒரு பாடல் ஒலிப்பதிவு நாடாவொன்று வன்னியில் வெளியானது என்பதை நான் அறிந்துள்ளேன். இவ் ஒலிப்பதிவு நாடாவிலே "சுக்குநூறானது சிக்குறு", "மாமரத்தின் மேலே கூவிடும் சின்னப் பூங்குயிலே" போன்ற பாடல்கள் அடங்கியுள்ளன. ஆனால் இன்றுவரை இப்பாடல்களை எந்தவொரு இணையங்களிலும் கண்டுபிடிக்க முடியவில்லை! உங்களிடம் இப்பாடல்களின் விபரங்கள்/ஆவணங்கள் அல்லது கோப்புகள் ஏதும் இருந்தால், தயவுசெய்து என்னிடம் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, சிவநேசன் சுந்தரம்
-
-
- 9 replies
- 1.4k views
- 1 follower
-
-
அனைவருக்கும் அன்பு வணக்கம், எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து யாழ் தளத்தை நானும் (நிழலி), இணையவனும், வலைஞனும் பொறுப்பெடுத்து தொடர்ந்து நிர்வகிக்க தீர்மானித்துள்ளோம். மோகன் அண்ணா எமக்கான ஆலோசனைகளை தந்து உதவுவதுடன் தொழில்நுட்ப ரீதியிலான அனைத்து ஆதரவு மற்றும், உதவிகளை வழங்குவார். எதிர்வரும் நாட்களில் யாழ் தொடர்பாக ஒரு சில மாற்றங்களை கொண்டு வரவும், யாழ் களத்தினை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும் சில மாறுதல்களை, கள விதிகளிலும், ஏனைய விடயங்களிலும் செய்ய விரும்புகின்றோம். இது தொடர்பாக உங்களின் அனைத்து ஆதரவினையும் வேண்டுகின்றோம். நன்றி
-
- 163 replies
- 12.9k views
-
-
ஒரு பதிவுக்கு பச்சை அல்லது சிகப்பு புள்ளி குத்துவோரை அடையாளம் காணக் கூடியதாக இருக்கு ஆனால் அதை எல்லோரும் பார்க்கும் படி இருக்கே? அது சரியா ? அல்லது தவறா? நான் சொல்ல வாறது எனது கருத்துக்கு குத்தப்படும் புள்ளிகள் யாரால் என்று நான் மட்டும் பார்க்கும்படி செய்வது நல்லதா? அது சாத்தியமானதா? இது வெறும் கேள்விதான் . ஆனால் யாரால் புள்ளிகள் வழங்கப்படுகிறது என்று பார்க்கும் இந்த முறையானது நல்லது என நினைக்கின்றேன். நன்றி.....
-
- 15 replies
- 1.7k views
-
-
இன்றை நவீன உலகிலும்.. எமது சில அரசியல்வாதிகள் மக்களின் விருப்புக்குப் புறம்பாக.. தமது சொந்த எண்ணங்களை மக்களின் விருப்புப் போலக் காட்டிக்கொண்டு செயற்படும்.. எதிரிகளுக்கு.. எஜமானர்களுக்கு விசுவாசமாகக் குரைக்கும் நிலையையும் காண்கிறோம். இப்படியான அரசியல்வாதிகள்.. நேரடியா மக்கள் கருத்துக்களுடன்.. உண்மையான சனநாயக வழியில் இவர்கள் நிற்பவர்களாக இருந்தால்.. மோத முடியுமா..?! யாழ் களம்.. இப்படியான விவாதங்களுக்குள்.. இந்த அரசியல்வாதிகள்.. பங்கேற்க ஒரு சிறப்பு முன்பக்க.. கருத்துப் பரிமாறலை செய்ய முடியாதா..??! அரசியல்வாதிகள் தம்மை பதிவு செய்யாமல்.. தம்மை சரியாக அடையாளப்படுத்தி.. தமது இருப்பிடத்தை உறுதி செய்யும் வழிமுறை மூலம்.. நேரடிக் கருத்துப் பரிமாற்றத்தை மக்கள் மன்றில் வைக்…
-
- 30 replies
- 2.5k views
-
-
மற்ற பகுதிகளில் எளுத அனுமதி தர இயலுமனால் மிக்க உதவியாக இறுக்கும்..
-
- 11 replies
- 1.4k views
-
-
திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு இணையத்தில் இருக்கிறது. எனக்கு மொழி பெயர்ப்பு புத்தகமாக வேண்டும். புத்தகாகமாக கிடைக்கிறதா? இணைய தளத்தில் ஆங்கில மொழி பெயர்ப்பு புத்தகத்தை வாங்க வசதியுள்ளதா? தெரிந்தவர்கள் அறிய தாருங்கள். நன்றி
-
- 4 replies
- 2k views
-
-
-
இப்படியொரு தனிப்பகுதி, யாழில் தொடங்கி அனைத்து செய்திகளையும் தொகுத்து பயனர்களின் பார்வையை ஈர்க்கும் வண்ணம்உடனுக்குடன் வழங்கினால் பயனுள்ளதாக இருக்குமே? Just a thought..
-
- 3 replies
- 799 views
-
-
ஒரு தடவை யாழ் விதிகளை மீறி பெரிய அளவிலான படத்தை இணைக்க முயற்ச்சி செய்தேன் அன்றிலிருந்து இன்றுவரை என்னால் படங்களை இணைக்க முடியவில்லை. என்ன காரணம் என்று யாராவது கூறமுடியுமா?
-
- 1 reply
- 770 views
-
-
வணக்கம் அனைவருக்கும், யாழ் இணையத்தில் சில உதவிக் குறிப்புகளையும் மென்பொருட் தொகுப்புகளையும் செய்யலாம் என்று தீர்மானதித்துள்ளோம். அதாவது, யாழ் இணையத்திலோ அல்லது யாழ் இணைய கருத்துக்களத்திலோ ஒரு ஆக்கத்தை இணைக்கும் போதோ, அல்லது அதற்காக ஒரு படைப்பை உருவாக்கும் போதோ தேவைப்படுகிற உதவிக் குறிப்புகளாக அவை அமையும். அத்தோடு அவற்றுக்கு தேவைப்படுகிற இலவச மென்பொருட்களையும் யாழ் இணையத்தில் தொகுத்து வைக்கிற போது அதுபற்றி அறியாதவர்கள் பலருக்கு பேருதவியாக இருக்கும். மென்பொருளைத் தேடி அலையாமல் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். எனவே, கருத்துக்கள உறவுகளே இதனை கூட்டுமுயற்சியாக செய்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறோம். உதவிக் குறிப்புகள்: * உதவிக் குறிப்புகள் த…
-
- 7 replies
- 2.5k views
-
-
யாழ்கள உறவுகளிற்கும் யாழ்கள நிருவாகத்திற்கும் வணக்கங்கள். யாழ் இணையத்தில் எனக்கு வழங்கப்பட்ட இரண்டுவாரகாலத் தடைக்கு எதிராக என்சார்பாக கருத்துக்களை வைத்தவர்களிற்கும். தடையை ஆதரித்தவர்களிற்கும். என்னை முற்றாகவே தடைசெய்யவேண்டும் என கோரிக்கை வைத்தவர்களிற்கும். எனது அன்புகலந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு எனது தரப்பு நியாயத்தினை இங்கு வைக்கிறேன். யாழ்களம் என்பது எனது எழுத்துக்களை நானே புடம்போட்டுக்கொண்டதொரு தீக்குண்டம். யாழ் வாசககர்களிற்கென்றே நான் பல படைப்புக்களை எழுதியிருக்கிறேன்.நான் யாழில் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே யாழின் மட்டிறுத்தினரகளாகவிருந்த இராவணன். வலைஞன் தொடக்கம். இன்று இணையவன் நிழலி வரை அனைத்து மட்டிறுத்தினர்களும் எனது படைப்புக்கள…
-
- 35 replies
- 2.6k views
-
-
வணக்கம், குழந்தைகள், சிறுவர்களுக்கான ஓர் தமிழ்த்தளத்தை வலையில் உருவாக்குவது சம்மந்தமாக சிறிதுகாலமாக சிந்தித்தோம்; குழந்தை வளர்ப்பு, தமிழ்மொழி கற்பித்தல்.. குழந்தைகள், சிறுவர்களுக்கான இதர அடிப்படை விடயங்களை பகிர்ந்து கொள்ளுதல், அறிவூட்டுதல் போன்றவை. பொழுதுபோக்கு, பகுதிநேர அடிப்படையில் செயற்படக்கூடிய ஆர்வம் உள்ள உறவுகளின் இயக்கத்தில் இப்படியான ஓர் வலைத்தளத்தை விரைவில் இயங்க வைக்கலாம் என்று யோசிக்கின்றோம். இணைந்து செயற்பட விரும்புகின்ற யாராவது ஆர்வம் உள்ள யாழ் உறவுகள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு வசதியான நேரங்களில் குறிப்பிட்ட இந்த வலைத்தளத்தில் ஆக்கங்கள் எழுதி போடலாம். மற்றும், வடிவமைப்பு, மற்றும் இதர விடயங்களிலும் பங்காற்றலாம். யா…
-
- 20 replies
- 1.6k views
-
-
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=170378#170378 புலம்பெயர் தமிழர்கள் நாடு திரும்புவார்களா..? எண்கிற தலைப்பு எதற்காக மூடப்பட்டுள்ளது.? வலைஞன் சொல்வது யாரைப்பற்றி எண்றும் விளக்கம் வேண்டும்....! :?: மற்றயோரின் கருத்தை அறிய அந்த தலைப்பு திறக்கப்படவேண்டும். அது நானாக இருந்தால்...! ஊமை, தனது கருத்தைக் கூறினார் நான் எனது கருத்தை எனது பாணியில் கூறி இருக்கிறேன். தவிர தமிழீழம் என்னது எங்களின் தாயகம். என்னை விட எனக்கு மிகமுக்கியமானது. நாட்டுக்காய் தங்கள் இன்னுயிர்களை என் உறவுகளை இளந்தவனாய் என்னால் 3ம் தர இடமாக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது... நான் அங்கு திருத்தம் மேற்கொள்வதாயும் இல்லை. அது தேவையும் இல்லை. வேண்டுமானால் வெட்டுறுதினர்கள் தூ…
-
- 47 replies
- 6.1k views
-