யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
குறிப்பாகத் தமிழீழம் செய்திகள் பிரிவில் ஏற்கனவே ஒருவரினால் இணைக்கப் பட்ட செய்திகள் மீண்டும் மீண்டும் வேறு உருப்பினர்களினால் இணைக்கப் படுகின்றன. இதேபோல ஒரே செய்தி இன்னுமொரு ஊடகங்களில் வரும் போது அதனை வேறு புதிய தலைப்பில் உருப்பினர்களினால் இணைக்கப் பட்டு வருகின்றன. அண்மைக்காலத்தில் அதிகளவில் இவ்வாறு இணைப்புக்கள் நடைபெறுகிறது. இணைக்கும் போது ஏற்கனவே யாழில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்து இணைத்தால் நல்லது. நேற்றும் இன்றும் இவ்வாறு இணைக்கப்பட்ட ஒரே மாதிரியான தலைப்புக்களில் சில. 1) http://www.yarl.com/forum3/index.php?showtopic=18479 http://www.yarl.com/forum3/index.php?showtopic=18487 http://www.yarl.com/forum3/index.php?showtopic=18500 2) http://www…
-
- 65 replies
- 7.5k views
-
-
-
வணக்கம் அனைவருக்கும், இன்று இளையவர் அமைப்பு என்னும் தலைப்புக்குள் குருவிகள் என் மேல் வெறும் அனுமானங்களின் அடிப்படயில் தனி நபர் தாக்குதலை மேற்கொண்டு, அந்த தலைப்பை மூட வைத்துள்ளார்.இது இன்று நடந்த கதை மட்டும் அல்ல நித்தம் யாழ் களதில் நடக்கும் கதை. இதை இன்று தெளிவாக சிவப்பு மையால் நான் அடையாளம் காட்டி உள்ளேன். இவ்வாறான நடைமுறைகளால் நான் யாழ்க களம் வருவதைக் குறைத்துக் கொண்டுள்ளேன், அதற்குக் காரணம் கருத்துக்கு பதிற் கருத்து வைக்காமல் அனுமானதின் அடிப்படயில் வைக்கப் படும் தனி நபர் தாக்குதல்கள்.பொழுது போக்குக் காக அன்றி ஆழமான விடயங்களை முதிர்ச்சியாக கருத்தாட வருவோர் நீண்ட காலமாக யாழ்க் களத்தில் எதிர் நோக்கும் ஒரு பிரச்சினை இது. மேலும் அனைவரும் பட்டி மன்றக் க…
-
- 61 replies
- 9.2k views
-
-
-
அண்மையில், சத்திர சிகிச்சை முடிந்து, வீடு வந்திருக்கும் , நிலாமதியக்கா விரைவில் நலம் பெற பிரார்த்திப்போம்! நானும் எல்லாம் வல்ல இறைவனை, நிலாமதியக்கா,விரைவில் நலம்பெற வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்!
-
- 59 replies
- 4.6k views
- 1 follower
-
-
கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம், நலமறிய ஆவல். இந்த பதிவை ஒரு சகோதர நலம் விசாரித்து, வேற்றுமைகளை மறந்து, நாம் நாமாக இருக்கும் பதிவாக பாவியுங்கள். ஈழத்தை விட்டு தூர இருக்கும் நேரத்தில், எங்களை இணைத்த பெருமை யாழுக்கே. என்னை போல பலருக்கு தமிழ் கற்பித்து எழுத வைத்ததும் யாழே. குடும்பத்தை விட்டு வந்து தனியே இருக்கும் பல சகோதரர்களுக்கு, அக்கா, தங்கை, நண்பர்கள் என நல்ல உள்ளங்களை அறிமுகப்படுத்தியதும் யாழ் தான். யாழில் அப்போ அப்போ சிறிய பிரச்சனைகள் வருவது சகஜம் தானே. எங்களில் யார் தான் இதில் சிக்கவில்லை?! தனி மனித தாக்குதல் சில நேரங்களில் நடப்பது தானே! முடிந்தால் பதில் சொல்லுங்கள், நிர்வாகத்திற்கு தெரிவுபடுத்துங்கள். அல்லது அப்படியே விட்டுவுடுங்கள். பதில் சொன்னால…
-
- 58 replies
- 6.9k views
-
-
வணக்கம் உறவுகளே, அண்மைக்காலத்தில் அவதானித்த வரை யாழ் களத்தில் இந்திய செய்திகளுக்கு பாரிய வரவேற்ப்பு இருப்பதை அதனை பார்வையிடும் எண்ணிக்கைகளை வைத்து அறியக்கூடியதாக இருக்கின்றது குறிப்பாக பல்லாயிரக்கணக்கான இந்திய தமிழ் உறவுகளும் யாழ் களத்தை பார்க்க தொடங்கி இருப்பதையே இது காட்டுகின்றது...... அந்த வகையில் இந்த களத்தை இன்னும் மாபெரும் களமாக மாற்ற எமது செய்திப்பிரிவினர் இன்னும் அதிகமான இந்திய மற்றும் தமிழக செய்திகளை இணைக்கும் பட்சத்தில் இன்னும் பல வாசகர்களை நாம் சென்றைடைய முடியும்...... யாழின் வளர்ச்சிப்பாதையில் அனைவரும் இணைந்து பயணிப்போம் வாழ்க யாழ் என்றும் உங்களில் ஒருவன் சுண்டல்
-
- 58 replies
- 4.6k views
-
-
அன்புடையீர், யாழ்களத்தில் கருத்து வெட்டுக்களால் காயம் படாத முன்னணிக் கருத்தாளர்கள் மிகவும் அரிது. களத்தின் தரத்தை உயர் நிலையில் பேண வேண்டி சில கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்ற போதும், அது தனிநபரின் கருத்துக்களை முளையிலேயே கருக வைப்பதும், குறுகிய எல்லைக்குள் மட்டுமே நிற்க நிர்பந்திப்பதும் முன்னேற்றகரமானது அல்ல என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. காலத்திற்கு காலம் சில கருத்தாளர்களின் கருத்துக்களை கத்தரிக்குமாறு சக கருத்தாளர்களே கோருவதும், நிர்வாகம் சில விதிகளை விதித்து பின்னர் தளர்த்தும் மேலும் இதுபோன்ற பல நடவடிக்கைகள் இரு தரப்பிலும் தவறுவிடும் இயல்பு உள்ளதை உணர்த்துகின்றது. நோக்கம் 1) எனவே மக்களால் மக்களுக்காக என்ற ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படையில் ஒவ்வோர…
-
- 57 replies
- 7.1k views
-
-
இந்தக் களத்தைப் பார்வையிடுபவன் என்ற வகையில் சில குறிப்புக்கள் 1. இங்கு தமிழ் தேசிய ஆதரவின் பயன் என்பது தகாத வார்த்தைகளில் பேசுவதா? 2. இங்கு தமிழீழ அரசியல் சாணக்கிய ஆய்வு என்பது ஏட்டிக்குப் போட்டியாக கற்பனைக்கு ஆதாரங்கள் இன்றி இங்குள்ள சிலருக்கு பெருமைக்கு எழுதுவதுதானா? 3. தமிழ் தேசியம் என்பது இங்குள்ள பலரின் விருப்பப்படி விமர்சனங்கள் தாண்டிய ஒன்றாக இருக்க வேண்டும் அப்படியா? 4.சிலர் தமிழ் தேசிய ஆதரவு என்ற படியே நக்கல் நளினம் செய்வதும் புலிகளின் போராற்றல் படைவலு என்பவை குறித்து தம் பாட்டிற்கு வைக்கும் நளினத்தனமான கருத்துக்களுக்கு இக்களம் ஆதாரம் காட்ட முடியுமா? இதனால் இவர்கள் வளர்க்கும் தேசிய பலம் என்ன? 5. ஒரு பக்கம் தேசியதுக்கும் தாயகத்துக்காவு…
-
- 56 replies
- 7.1k views
-
-
பேப்பர் கணணியில்.. ஒற்றைப் பக்கத்தில்.. கண் இமை அசைவால்.. முக அசைவால்.. நோண்ட நோண்ட வந்து போகும்.. ஓர் அற்புதமாகக் கூட எதிர்கால யாழ் இணையம்.. இருக்கலாம். யாழ் இணையம்.. இணைய உலகில்.. தமிழ் இணைய போறம்.. (இதற்கு தமிழ்சொல் என்னென்று தெரியவில்லை. கருத்துக்களம் என்றே சொல்வோமே) வகையில்.. ஒரு முன்னோடி என்றால் அது மிகையல்ல. மேலும்.. இணையத் தமிழ் வரவின் பெருக்கத்தின் ஒரு ஆரம்ப அத்தியாமுமாக அது இருந்து வருகிறது. தமிழ் மொழி 21ம் நூற்றாண்டுச் சவால்களை சந்தித்து மெருகு பெற்று முன்னேறி நிற்க.. ஒரு சிறப்பான பங்களிப்பையும் யாழ் தான் சார்ந்த மொழிக்கு செய்துள்ளது... செய்தும் வருகிறது. யாழ் கருத்துக்கள இணையத் தளமாக தோற்றம் பெற்ற 1998/99 காலப்பகுதிகளிலும் சரி.. பின்னரும் சரி.. இணைய உல…
-
- 54 replies
- 7.4k views
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம், யாழ் கருத்துக்களத்தில் தமிங்கிலத்தில் எழுதுவதை இனிவரும் காலங்களில் தவிர்க்க முயற்சி செய்வது நல்லது. படைப்புகளில் அவை தேவையொட்டி வருவது தவிர்க்கமுடியாதது. அதேபோல், அறிவியற் சொற்களுக்கு தமிழ் தெரியாதபோது ஆங்கிலத்தில் அவற்றை எழுதுவதும் பிரச்சனைக்குரியதில்லை. ஆனால், நாம் எழுதும் கருத்துக்களில் அவசியம் இன்றி நாமே இவற்றைத் திணிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்று கருதுகிறோம். எடுத்துக்காட்டு: காய் கவ் ஆர் யூ? வட் ஆர் யூ டூஇங் பேர்த்டே டவுட் நோர்மலா ... இப்படிக் களத்தில் ஆங்காங்கு தமிங்கிலத்தில் எழுதுவது அவசியமற்று திணிக்கப்பட்டு வருகிறது. நகைச்சுவைக்காக இப்படி எழுதுவதே பிறகு நாளடைவில் பெருகி வழமையாகிவிடும். What are yo…
-
- 54 replies
- 6.7k views
-
-
இது ஒரு ஆரம்ப யோசனை. மாற்றங்கள் இன்னமும் வரலாம். அத்துடன் உங்கள் ஒவ்வொருவரது ஆலோசனைகளும் தேவை. அனைவருக்கும் வணக்கம், மீண்டும் ஒரு புதிய ஆண்டில் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எம்மக்கள் படும் துயரங்களால் மனசு நிறைய வலிகள் இருந்தாலும் யாழை கொண்டு நடாத்துவதால் சில விடயங்களை தற்காலிகமாக மறக்க முடிகின்றது. எனினும் மிக நீண்ட காலமாக தள முகப்பில் புதுப்பித்தல்கள் எதுவும் செய்யப்படவில்லை. வரும் புதிய ஆண்டில் இருந்து சில மாற்றங்களைக் கொண்டு வரலாம் என நினைக்கின்றேன். களத்தினைக் கொண்டு நடாத்த நிழலி மற்றும் இணையவன் ஆகியோரது ஒத்துழைப்புக்களால் தான் களத்தினை இன்னமும் ஓரளவுக்காவது கட்டுப்பாடுடனும், நேர்த்தியுடனும் கொண்டு நடாத்த முடிகின்றது. அத்துடன் கள உறுப்…
-
- 54 replies
- 4.5k views
-
-
அன்பு நண்பர்களே, வணக்கம் சில நாட்களுக்கு முன் தமிழ்மணம் பதிவாளர்கள் சந்திப்பு ஒன்று சென்னையில் ஏற்பாடாகியிருந்தது. அதற்காகவும் வேறு சில பணிகளுக்காகவும் சென்னை சென்றிருந்த நேரத்தில் யாழ்கள உறுப்பினர் திரு.லக்கிலுக்கை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அது குறித்து நேற்று ஒரு பதிவாளர் இங்கு கிண்டல் தொனியில் பதிவு செய்திருந்தாகவும் அதை தான் நீக்க கோரியதாகவும் லக்கி என்னிடம் தொலைபேசியில் இரவு தெரிவித்தார். அந்த அன்பருக்கும் உறவுகளுக்கும் விளக்கம் அளிக்கும் முகமாகவே இந்த விளக்கம். 1) லக்கியுடனான சந்திப்பு முன்பே முடிவு செய்யப்பட்டதல்ல 2)இந்த சந்திப்பு ஒரு உளப்பகையை முடிவுக்கும், ஒரு நட்பை துளிர்ப்புக்கும் வித்திட்டது 3) லக்கி எழுத்தில்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்…
-
- 53 replies
- 6.2k views
-
-
யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில். அண்மையில் யாழ் செயல் இழந்த நிலையில் , மோகன் அண்ணவுடன் பேசினேன் ,அதன் அடிப்படையில் ,சில கருதுக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். யாழின் அவசியம் பற்றி, யாழை நான் தற்போது பாவிப்பது, பல்வேறு சாராரின் கருத்துக்களை அறிந்து கொள்ள.தேசிய விடுத்தலைப் போராட்டத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றியவர்கள் இன்று பல குழுக்களாக அணிகளாக பல்வேறு கருத்துக்களுடன் செயற்படுகிறோம்.இதில் அவர் அவரின் கருத்துக்களை நிலைப்பாடுகளை கருத்தாடுவதன் மூலம் ஒரு பொதுக்கருத்தை புரிந்துணர்வை நோக்கிப் பயணிப்பதற்க்கு யாழ் அவசியம்.ஆனால் இதனை வெறும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களையோ ,துரோகி என்னும் பட்டங்களாலோ செய்ய முடியாது என்பது யாவரும் அறிந்ததே.குற்றச்சாட்டுக்கள்…
-
- 53 replies
- 4.6k views
-
-
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மெளனத்தோடும் - ஏக்கத்தோடும் - விடுதலைக்காய் வீழ்ந்தவர் நினைப்போடும் - துயரத்தோடும் - எதிர்காலத்தை எண்ணிய பயத்தோடும் - எங்காவது தெரியாதா நம்பிக்கையின் சிறு கீற்று என்கிற எதிர்பார்ப்போடும்... யாழ் இணையம் தனது 12ஆவது ஆண்டை நிறைவு செய்து கொண்டு - இன்று (30.03.2011) 13ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. "நாமார்க்கும் குடியல்லோம்" என்பதைத் தவிர சொல்வதற்கெதுவும் இல்லை. மண்ணோடும் மக்களோடும் மாவீரர் நினைவோடும் என்றென்றும் இணைந்திருப்போம். நன்றி யாழ் இணைய நிர்வாகம்
-
- 51 replies
- 5.1k views
-
-
எங்கே போய்விட்டார்கள்? வணக்கம் எல்லோருக்கும். யாழ்களம் ஆரம்பித்த நாள்முதல் எத்தனையோ உறவுகள் அறிமுகத்துடனும் அல்லது அறிமுகம் செய்யாமலும் காணாமல் போயிருக்கின்றார்கள். ஆனாலும் பல பழைய உறவுகள் பலர் நீண்ட காலமாக பல விடயங்களில் அதுவும் எமது ஈழம்விடயமாக ஆரோக்கியகருத்துக்களை முன்வைத்து வாதாடியவர்களை இப்போது இங்கே இன்றைய நிலையில் காணவில்லை? இவர்கள் ப ச்சோந்திகளா? அல்லது பொழுது போக்கிகளா? எத்தனையோ அவலதலைப்புகள் வந்தபோதும் இவர்களின் ஒரு கருத்துக்கூட வரவில்லையே? ஏன்? இன்றைய காலகட்டத்தில் உங்களுடைய கருத்துக்களும் ஆதங்கங்களும் பலவிதத்தில் இங்கேயும் பலம் பெறும் என நினைக்கின்றேன். கூடமாட இருந்து போட்டு கஸ்டம் வர ஓடி ஒளிச்ச மாதிரி கிடக்கு. இல்லாட்டி புத…
-
- 51 replies
- 5.2k views
- 2 followers
-
-
யாழில் நான் இணைக்கின்ற ஜரோப்பிய அவலம் நாடகதொடரால் புதியதொரு சர்ச்சை உருவாகியுள்ளது சர்ச்சை எனக்கொன்றும் புதியதல்ல ஆனால் இது வேறுவிதமான சர்ச்சை எனது இரண்டாவது அங்கத்தில் ஒரு நாற்பது வயது காரர் ஆடம்பரமாக மண்டபம் எடுத்து பிறந்தநாள் கொண்டாடுவது போல எழுதியிருந்தேன். யெர்மனியில் அந்த நாடகத்தை யாழினுடாக கேட்டஒருவர் அதில் குரல் குடுத்திருந்த ஒரு குழந்தையின் வீட்டிற்கு தொலை பேசி எடுத்து அந்த வீட்டு காரரை மிரட்டியுள்ளார்.காரணம் அவர் நாற்பதாவது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியிரந்தாராம். பிறந்தநாள் கொண்டாடுவது அவரவர் தனிப்பட்ட சுதந்திரம் நாற்பதிலும் கொண்டாடலாம்.எண்பதிலும் கேக்கை வெட்டி கட்டுப்பல்லால் கடித்து சாப்பிடுவது அவரவர் சுதந்திரம் ஆனால் எங்கள் குழந்தைகள் உரில…
-
- 50 replies
- 5.9k views
-
-
-
அனைவருக்கும் வணக்கம், நேரப்பிரச்சனை காரணமாக யாழ் இணையப் பொறுப்புக்களில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கிக் கொள்கின்றேன். இதுவரை காலமும் பல வழிகளிலும் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. இனி வரும் காலத்தில் இளைஞனின் பொறுப்பில் யாழ் இணையம் இயங்கும் என்பதையும் அறியத் தருகின்றேன். நன்றி, வணக்கம். மோகன்
-
- 48 replies
- 3.8k views
-
-
வணக்கம் போர் முடித்து வைக்கப்பட்ட பின்னரும் ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாது படும் துயரங்களை அவ்வப்போது அறிந்து கொள்வதும் அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பதும் பின்னர் அவை அப்படியே தொடர்ச்சியாக விடுபட்டுக் கொண்டிருப்பதுவுமாகத் தான் நடைமுறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் ஒரு சில அவசர உதவிகளுக்காக உறவுகளுடன் கேட்டு அவர்கள் நிறையவே உதவிகளும் செய்து அந்த உதவிகளும் உரியவர்களுக்குப் உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்திருந்தது. யாழ் இணையம் மூலம் நேரடியாக தொடர்ந்தும் தாயக மக்களுக்கு உதவி செய்ய விரும்பினாலும் அது பல்வேறு சட்டச் சிக்கல்களும் நிர்வாகச் சிக்கல்களும் உள்ள ஒரு விடயமாக உள்ளபடியால் …
-
- 48 replies
- 11k views
- 1 follower
-
-
வணக்கம் மோகன்! இன்று மாலையிலிருந்து யாழ் இணையம் பார்ப்பதில் பல சிரமங்கள் இருந்தன! யாராவது ஏதும் செய்து விட்டார்களா? என்ன நடந்தது யாழிற்கு?
-
- 48 replies
- 6.3k views
-
-
-
- 48 replies
- 5.2k views
-
-
அண்மையில் ஆறுமுகம் என்னும் ஒரு உறுப்பினர் பல வடமொழி கலந்த ஆக்கங்களை பிரதான களத்தில் இணைத்து வருகிறார், இது சம்பந்தமாக நிர்வாகத்திடம் சில கேள்விகள். 1) வட மொழி தமிழ் மொழியா? 2) அப்படி இல்லாது விடின் கள விதிகள் மொழி சம்பந்தமாக இவ்வாறு இருக்கிறது, 3. மொழி யாழ் கருத்தில்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள் அனைத்தும் தமிழிலேயே எழுதப்படல் வேண்டும். ஏனைய மொழி ஆக்கங்களாக இருப்பின்: அவற்றுக்குரிய பகுதியில் மட்டும் இடப்படல் வேண்டும். அல்லது மொழிபெயர்க்கப்பட்டு இணைக்கப்படல் வேண்டும் அல்லது செய்திகளாக இருப்பின் அவற்றின் உள்ளடக்கத்தை தமிழில் சுருக்கமாக எழுதி, மூலச் செய்திக்கு இணைப்புக்கொடுக்கப்படல் வேண்டும். மேற்படி கள விதிக்கு அமைவாக இந்த ஆக்கங்கள்…
-
- 48 replies
- 6.3k views
-