யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
enathu computer paluthanathal naan paavittha ekalappai um pootuthu.enaku bamuni than plakam.yaravthu uthavi saijunko.pls
-
- 9 replies
- 1.7k views
-
-
யாழ் கருத்துக்களத்தில் உறவுகளையோ ஏனைய மக்கள் கூட்டத்தையோ புண்ணாக்கு/புண்ணாக்குகள் என அழைப்பதைத் தடைசெய்யவேண்டும் எனக் கள நிர்வாகத்திடம் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன். இப்படிக்கு புண்ணாக்கு எதிர்ப்புப் போராட்டக்குழு யாழ் கருத்துக்களம்
-
- 23 replies
- 2.9k views
-
-
நான் கன காலமாக கியுபாவின்ரை முன்னாள் தலைவ் பிடல் கஸ்ரோவின்ரை படத்தை என்ரை அவதாராகப் போட்டிருந்தன். தம்பி புலிக்குரல் தெரிஞ்சோ தெரியாமலோ அந்தப் படத்தை எடுத்திட்டுது. ஒரே படத்தோடை ரெண்டு பேர் இருந்தால் பிரச்சினை வரும் எண்டு போட்டு நான் எனக்குப் புடிச்ச புரட்சியாளர்களில் ஒருத்தரான சேகுவேராவின்ரை படத்தை அவதாராக மாத்தியிருந்தன். இப்ப பாத்தால் இன்னொரு உறவு அந்தப் படத்தைப் போட்டிருக்குது. இதென்னடா கோதாரி எண்டு போட்டு நான் இப்ப வடிவான ஒரு அவதாரைத் தெரிஞ்செடுத்துப் போட்டிருக்கிறன். தயவு செய்து இந்த அவதாரையும் ஒருத்தரும் எடுத்துப் போடாதேங்கோ. எனக்குக் கெட்ட கோவம் வரும் சொல்லிப் போட்டன்....
-
- 70 replies
- 5.2k views
-
-
-
அண்மைக் காலமாக வேறு தளங்களில் எழுதும் என்னையும், வேறு சிலரையும் தனிமனிதத் தாக்குதல் செய்வது அதிகரித்துள்ளது. யாழில் இணைந்துள்ள உறுப்பினர்கள் வேறு எந்தத் தளங்களிலும் எழுதக்கூடாது என்று எந்த விதிமுறையும் இல்லை, அதே வேளை யாழின் எந்தவொரு கருத்துக்களும் என்னால் திருடப்படவும் இல்லை எனது சொந்தக்கருத்துக்களை எழுதுவது எவ்வாறு தவறாகும்? எனது கருத்துக்கள் குறித்து எழும் முரண்பாடுகளை அந்தந்தக் களங்களில் விமர்சிப்பதும்,கேள்வியெழுப்புவதும் நியாயமானதே அதை விடுத்து வேறொரு தளத்தில் எழுதியதை பிரதி பண்ணி யாழில் போட்டு அநாகரீகமாகவும், தனி மனிதத் தாக்குதலில் ஈடுபடுவதையும் யாழ் எவ்வாறு அனுமதிக்கிறது? இதில் யாழின் நிலைப்பாடு என்ன? இது குறித்து ஏதும் விதிமுறைகள் கொண்டுவரப்படுமா? யாழ் உறவு…
-
- 15 replies
- 2k views
-
-
தமிழுலகம் இன்று எனற இணையத்தை வாசிக்கின்றோமா? யாழ் களத்தை பார்ப்பதுமட்டுமல்லாது வேறு ஒரு இணையத்தையும் போய் பார்க்க வேண்டிய சூழ்நிலை தற்பொழுது உள்ளது ...இதை தவிர்க்கமுடியாதா?யாழில் செய்தியை முழுமையாக இணைத்துவிட்டு நன்றி மட்டும் போடலாம் தானே மேலும், http://tamilworldtoday.com/?p=17428
-
- 4 replies
- 953 views
-
-
நிர்வாகம் வெளிப்படையாக பதில்தருமா ? அதாவது 1 கனடா தமிழ் தேசியதலைவருடைய கருத்து என்ற தலைப்பில் உள்ள திரி 2 இசைப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமை ஹரிணிக்கு என்ற தல ப்பில் உள்ள திரி
-
- 6 replies
- 1.2k views
-
-
நான் யாழ் களத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் விளையாட்டும் அரசியலும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை இணைத்திருந்தேன். அந்த ஆக்கத்தை இப்போது தேடிக் கொண்டிருக்கிறேன். அதனைக் கண்டுபிடிப்பதற்கு ஏதாவது இலகுவான வழி ஏதாவது இருக்கிறதா? தெரிந்தவர்கள் செப்புங்கள்....
-
- 4 replies
- 751 views
-
-
தமிழக மாணவர்களின்ஈழ ஆதரவுப் போராட்டம் தீவிரமடைந்து வரும் இந்த நிலையில் நாம் பொறுப்பான முறையில் செயலாற்ற வேண்டுமல்லவா? தமிழகத்தின் பிரதான கட்சிகள்,சங்கங்கள்என்பவற்றின் ஆதரவு எதுவுமின்றி சுய உணர்வுடன்போராடிக் கொண்டும் உண்ணா நோன்பிருந்தும் தம்மை ஒறுத்துப் போராடும் எம் தமிழ் சொந்தங்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் முன்னணி வாய்ந்த தமிழ் இணைய ஊடகமான யாழ் களமும் செயலாற்ற வேண்டியது அவசரமும் அவசியமானதுமான பணி என நினைக்கிறேன். அந்த வகையில் யாழ் களத்தின் முழுமையான செயற்பாடுகளையும் இந்த உணர்வு மிக்க போராட்டம் செம்பந்தப்பட்டதாக செயற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறேன். மிகவும் முக்கியமான இந்தக் கால கட்டத்தில் திண்ணை உள்ளிட்ட பகுதிகளில் தேவையற்ற அரட்டைகளைத் த…
-
- 34 replies
- 2.9k views
- 1 follower
-
-
யாழுக்கு ஒரு சிமாட்போன் அப்ஸ் செய்யனுன்னு ஆசை. ஆனால் வெகு சின்ன முயற்சி தான் என்னால் எடுக்க முடிஞ்சுது. முன் மாதிரிக்கு ஒன்று செய்துள்ளேன். இதனைப் போல இன்றி நல்ல விரிவான வசதிகள் நிறைந்த ஒரு அப்ஸை.. செய்து உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைச்சு.. யாழும்.. சிமாட்போன் மற்றும் ராப்லெட் உலகில் அழகே உலா வர செய்தால் நன்றே அமையும் இல்லையா..??! யாராவது.. இத்துறையில் சிறந்தவர்கள் முயன்றால் யாழை நடத்திறவங்களுக்கு ஒரு உற்சாகமாக இருக்கும்..! ஆன்ரொயிட் போனுக்கு என்று எனது சின்ன முயற்சியில்.. செய்த யாழ் நியூஸ் பீட் அப்ஸ்... கீழ் வரும் இணையத்தளத்திற்கு சென்றால் இலகுவாகச் செய்யலாம். ஆனால் வினைத்திறனாகச் செய்ய கொஞ்சம் அப்ஸ் பற்றிய ஆழமான அறிவு இருத்தல் அவசியம் என்று நினைக்கிறேன். h…
-
- 27 replies
- 3.2k views
-
-
அண்மைய நாட்களாக நேசக்கரம் நிறைய நல்ல விடயங்களை போரால் பாதிப்பட்ட மக்கள்.. மாணவர்களை நோக்கி நடத்த தலைப்பட்டுள்ளது. அவை இங்கு யாழிலும் தனித் தனி தலைப்புகளாக.. பகிரப்படுகின்றன. அவையும்.. தலைப்புகளோடு தலைப்புகளாக... ஊர்ப்புதினம் பகுதியில் வைத்துச் சிலாகிக்கப்பட்டு விட்டு மறக்கடிக்கப்பட்டுப் போகின்றன. அந்தத் திட்டங்களுக்கான பங்களிப்பையும்.. பயன்பாட்டையும் அதிகரிக்கக் கூடிய வகையில் யாழ் ஒரு வழி செய்தால் என்ன..??! அப்படிச் செய்வதன் மூலம்.. யாழ் வாசகர்கள் மூலமும்..இணைய வழி தேடல் செய்வோர் மத்தியிலும்.. நேசக்கரத்தின் பங்களிப்பு.. பயன்பாட்டு வீச்சை.. அதிகரிக்க முடியும் என்று நினைக்கிறேன். இது அந்த அமைப்பினதோ.. யாழினதோ செயற்பாடுகளில் தலையீடு செய்யும் தலைப்பு அல்ல. பொதுமக்களாக…
-
- 1 reply
- 660 views
-
-
இனிய யாழ் உறவுகளுக்கு என் வணக்கம்.. நான் யாழ்க்கு புதிது அல்ல.. ஆனால் நான் இப்போழுது பாவிக்கும் இந்த உறுப்பினர் கணக்கு (account id) புதிது.. பொது பகுதிகளில் திரிகளை திறக்க அனுமதி எனக்கு இன்னும் கிடைக்க இல்லை!! இதைவிட, நான் பதிந்த கருத்துக்களில் ஏற்படும் தவறுகளைக்கூட திருத்தம் செய்ய முடியாமல் தவிக்கிறேன்!!! திருத்தியமை (edit)பொத்தானை காணவில்லை!!!!! இத்துடன் எந்த கருத்து பதிவிற்க்கும் விருப்பம் (like this)தெரிக்கவும் முடியவில்லை..???!!! [ undefined- you have reached your quota of positive votes for this day] என்று வருகிறது... உதவிகிடைக்குமா????
-
- 21 replies
- 1.6k views
-
-
மிக்க நன்றி ............... அரட்டைக் களம் பூட்டப் படத்தையிட்டு மிக்க நன்றி . நியானி க்கும் நிர்வாகத்துக்கும் நன்றி. இந்த பந்தி பந்தி யாய் கருத்து எழுதும் பேர் வளி என்று கருத்துக்கு கருத்து எழுதும் ..நபர்களால் சிதைக்க படுகிறது பல நல்ல உள்ளங்கள். பின்பு வருந்துகிறோம் ..என் சமாளிப்பு வேறு .. இப்படி ஒரு திரி தேவையே இல்லை. வார்த்தைகளை அளந்து கொட்டு ங்கள். மனசு என்ன இரும்பா இறுகி போய் விட ...தீ நாக்குகளால் தீய்த்து விடாதீர்கள். ( எல்லோரையும் சொல் வில்லை தொப்பி அளவானவர்கள் மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்)
-
- 9 replies
- 1.8k views
-
-
கள உறவுகளே, "புலம்பெயர்ந்த பெண்கள் வேலைக்கு செல்வதால் எதிர் நோக்கும் பிரச்சனைகள்" என்ற தலைப்பில் எதாவது ஆக்கங்கள் உங்களிடம் இருந்தால் அறியத்தரவும் .இணைப்புக்கள் இருந்தாலும் அறியதரவும்.. நன்றிகள்
-
- 5 replies
- 819 views
-
-
புதிய உறுப்பினராக இங்கு எழுதும் போது பல விடயங்கள் எப்படி ? என்ன? என்று விளங்கவில்லை. உதாரணமாக, பச்சை , 3 likes , பச்சை குத்துவது, இதெல்லாம் சாதாரணமாக யாழில் வருவதாயினும், என்ன பச்சை? இது எப்படி கிடைக்கும்? ஒருவரது கருத்து பிடித்தால் எப்படி பச்சை குத்துவது? எமக்கு எத்தனை பச்சைகள் யாழில் உள்ளது என்பதை எப்படி எங்கே பார்ப்பது ? இதற்கான விளக்கங்களை புதிய உறுபினர்களுக்கு , அவர்கள் இணைந்ததும் ஒரு மின்னஞ்சல் வழி யாக தெரிவித்தல் நல்லது என்று நினைக்கின்றேன் ஒருவேளை , இதற்கான விளக்கங்கள் ஏற்கனவே யாழில் இருந்தால் , இப்படி ஒரு திரி எழுதியதற்கு மனித்து, அது எங்கே இருக்கிறது என்று அறியத் தரவும்.
-
- 9 replies
- 916 views
-
-
அண்மைக் காலமாக கமலஹாசனுக்கு அடுத்தபடியாக (கொஞ்சம் ஓவரோ) யாழில் பேசப்படும் நபராக மாறியுள்ள நபரான நியானி அவர்களுக்கு ஒரு சபாஸ் போடத்தான் இந்தத் தலைப்பு. ஒவ்வொரு நாளும் யாழில் பதியப்படுகின்ற பதிவுகளில் பாதியை அல்லது கால்வாசியைக் கூட முழுமையாகப் பார்ப்பதற்கு காலமும் நேரமும் அனுமதிக்காத ஒரு கடுகதிப்பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிற நான் பதிவுகளை எல்லாம் வாசித்து அதைப் பக்குவப்படுத்துவதற்காக நியானி செலவழிக்கின்ற நேரத்தை எண்ணி வியக்கிறேன். நியானியின் கத்தரிக்கோலுக்கு இரையாகி கொலை வெறியுடன் திரிகின்ற உறவுகள் அதற்காக கொதித்தெழ வேண்டாம். நான் சொல்ல வருகின்ற விடயம் வேறு. ஏற்கனவே குறிப்பிட்டது போல இன்றைய பதிவுகளையே பார்ப்பதற்கு முடியாமல் பலர் இருக்கின்ற போது பழைய பெட்டிக…
-
- 46 replies
- 4.5k views
-
-
வணக்கம் உறவுகளே, அண்மைக்காலத்தில் அவதானித்த வரை யாழ் களத்தில் இந்திய செய்திகளுக்கு பாரிய வரவேற்ப்பு இருப்பதை அதனை பார்வையிடும் எண்ணிக்கைகளை வைத்து அறியக்கூடியதாக இருக்கின்றது குறிப்பாக பல்லாயிரக்கணக்கான இந்திய தமிழ் உறவுகளும் யாழ் களத்தை பார்க்க தொடங்கி இருப்பதையே இது காட்டுகின்றது...... அந்த வகையில் இந்த களத்தை இன்னும் மாபெரும் களமாக மாற்ற எமது செய்திப்பிரிவினர் இன்னும் அதிகமான இந்திய மற்றும் தமிழக செய்திகளை இணைக்கும் பட்சத்தில் இன்னும் பல வாசகர்களை நாம் சென்றைடைய முடியும்...... யாழின் வளர்ச்சிப்பாதையில் அனைவரும் இணைந்து பயணிப்போம் வாழ்க யாழ் என்றும் உங்களில் ஒருவன் சுண்டல்
-
- 58 replies
- 4.6k views
-
-
இப்ப கொஞ்ச நாளா எனக்கு ஒரு பிரச்சினை. நான் வடிவால் பந்தி பிரிஞ்சு எழுதிப் போட்டு இங்கை கொண்டு வந்து போட்டால் எல்லாம் ஒரே குண்டக்க மண்டக்கவா அரியண்டமா வந்து நிக்குது. கீழை திருத்திற அழுத்தியையோ பச்சைகளைப் பாக்கிற இடத்தையோ காணேல்லை. ஆராவது ச+னியம் கீனியம் வைச்சிட்டினமோ. அல்லது ஆரின்ரையாவது கண்ணூறு பட்டிட்டுதோ தெரியேல்லை. ஆராவது விசயம் தெரிஞ:ச ஆக்கள் வந்து சொல்லுங்கோ பிள்ளையள்....
-
- 19 replies
- 2.4k views
-
-
உறவாடும் ஊடகம் பகுதியில் நான் நேற்று ஒர் புதிய திரி ஆரம்பித்தேன் அதை காணவில்லை, நிர்வாகம் அதை தூக்கியிருந்தால் தூக்கிய காரணத்தை அறிய தந்தால் நன்று.
-
- 7 replies
- 941 views
-
-
புது வருசமும் பிறக்கப் போகுது. யாழும் புது மாற்றங்களோடை வரப் போகுதான். நல்ல விசயம்... இந்த நேரத்திலை எங்கடை பிள்ளைகளிட்டையும் யாழ் இப்படிச் செய்தால் நல்லாயிருக்கும்... அப்படிச் செய்தால் நல்லாயிருக்கும் எண்டு கன பிளானுகள் இருக்கும். அதைப் பற்றிக் கதைக்கத் தான் இந்தத் திரி.. அதுகளை நாங்கள் இங்கை பகிர்ந்து கொள்ளுவம். புத்தி சொல்லுறதும் பிழை பிடிக்கிறதும் தானே உலகத்திலை லேசான வேலைகள். சரி நானும் என்ரை மனசிலை பட்டிறதைச் சொல்லுறன்.... முதலாவது சொந்தப் படைப்புகளும் ஆக்கங்கம் வாறது குறைவு எண்டு பன பேர் அங்கலாய்க்கினம்.நியாயமான அங்கலாய்ப்புத் தான். யாழும் சொந்தப் படைப்புக்களுக்கு ஒரு முக்கியத்துவம் குடுக்க வேணும். இப்ப என்னண்டா முகப்புப் பக்கத்திலை கடைசியாப் பதிஞ்ச கொஞ்ச விசயங…
-
- 33 replies
- 2.8k views
-
-
ஆதிக்கு மட்டும் இங்கு கீழே இணைக்கும் அங்ரி முகத்தை உபயோகிக்க ஏதாவது சிறப்புச் சலுகை தாங்கப்பா.....எப்பவுமே சிமைலியைத் திறந்தால் இது தெரியக்கூடிய மாதிரி ஆதிக்கு மட்டும் :lol:
-
- 5 replies
- 865 views
-
-
கருத்துக்களமானது பாதுகாப்பிற்காகவும் மேலதிக வசதிகளுக்காகவும் புதிய பதிப்புகள் வெளிவந்த உடன் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த புதிய பதிப்பு நேற்று இணைக்கப்பட்டது. நேற்றைய கருத்துக்கள புதுப்பித்தலின் பின்னர் சில பழைய template ல் எதிர்பாராத வகையில் சில சிக்கல்கள் ஏற்பட்டு அவை சரியான முறையில் இயங்க மறுத்ததால் உடனடியாக புதிய tempate ஒன்று yarl2013 என்ற பெயரில் இணைக்கப்பட்டு யாழ் களம் இயங்க வைக்கப்பட்டது. அத்துடன் சரியாக இயங்காத பழைய template முற்றாக நீக்கப்பட்டதுடன் அனைவருக்கும் புதிய template காண்பிக்கும் வசதியும் செய்யப்பட்டது. எனினும் சில உறுப்பினர்களுக்கு கருத்துக்கள் பதிவதில் சிரமங்கள் இருப்பதனை அறிய முடிகின்றது. எவ்வ…
-
- 188 replies
- 12.9k views
-
-
மாவீரர் நினைவு சுமந்து யாழ் முகப்பு அழகாக இருக்கிறது. தேசப்புதல்வர்கள் நினைவு சுமந்து யாழ்பயணிப்பது சிறப்பு, வடிவமைத்த யாழ்நிர்வாகத்திற்கும் நன்றிகள்.
-
- 5 replies
- 838 views
-
-
அனைவருக்கும் அன்பு வணக்கம், அண்மையில் யாழ் உறவோசையில் ஓர் விடயம் பற்றி கருத்தாடல் செய்யலாமா என்று யோசித்தேன். "கிணறு வெட்டப்பூதம் கிளம்பிய கதையாய்.. அந்தவிடயம் போகவேண்டாமே" என்று நினைத்த வேகத்திலேயே அதை மறந்துவிட்டேன். புதிய கருத்தாடல்களை மாத்திரமல்ல, இங்கு பதிற்கருத்துக்கள் எழுதநினைக்கும்போதும் இவ்வாறான உளநிலையே எனக்குள் உள்ளது. ஆயினும், சுகன் இன்று எழுதிய கீழுள்ள கருத்தைப்பார்த்ததும் நான் முன்பு நினைத்த விடயம்பற்றி உங்களுடன் சிறிது உரையாடலாமா என்று யோசித்தேன். சுகனின் கருத்தின் ஓர் பகுதி: நான் கூறவரும் விடயம் என்ன என்றால் எனது கடந்த ஆறு ஆண்டுகால யாழ் கருத்தாடற்தளத்தின் அனுபவத்தில் பார்க்கும்போது கருத்துக்களால் பிரிந்துநின்று மட்டுமல்ல, பங்குபெறும…
-
- 15 replies
- 1.8k views
-
-
யாழ்களத்தில் பல செய்திகள் பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுகின்றன. அத்தோடு, இவர்களே எழுதி தங்களின் தளங்களினை விளம்பரப்படுத்தும் வகையில் இணைக்கவும்படுகின்றது. அத்தோடு சுயமான பல கருத்துக்களும் இணைக்கப்படுகின்றது. என்னுடைய கருத்து என்னவென்றால், இப்படி இணைப்படும் செய்திகளின் நம்பகத்தன்மை பற்றி யாராவது வாசகர்கள் கேள்வி எழுப்பினால், குறித்த செய்தியை இணைத்தவர் தரவேண்டும். அன்றேல் முயலவேண்டும். எல்லாச் செய்திகளுக்கும் தேவையில்லை. ஆனால் பிரச்சனைக்குரிய செய்திகள் என்றாலோ, ஒருவரின் தனிப்பட்ட கருத்துக்களில் பிழையான தகவல்கள் பரிமாறப்படுவது கண்டு கேட்கப்படும் கேள்விகளுக்கு நிச்சயம் குறித்தவர் விளக்கமளிக்க வேண்டும். இல்லை எனில் குறித்தவரைத் தடை செய்யலாம்.. அல்லது எச்சரிக்கை செய்யல…
-
- 15 replies
- 1.2k views
-