யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
சுய கட்டுப்பாடு யாழ் இணையத்தில் சுய ஆக்கங்கள் இணைப்பதில் இருந்து நான் விலகிக்கொள்கின்றேன். இனிவரும் காலங்களில் (முற்றுமுழுதாக விலகவில்லை. தற்காலிக விலகல்) யாழ் இணையத்தில் எனது சுய ஆக்கங்கள் இடம்பெறமாட்டாது என்பதனை அறியத்தருகின்றேன். மற்றவர்களின் ஆக்கங்களிற்கு நேரம் கிடைக்கும்போது கட்டாயம் பதில் அளிப்பேன். நட்புடன் என்.பரணீதரன்
-
- 25 replies
- 3.9k views
-
-
இவ்வளவு காலமும் யாழ் களத்தினை உருவாக்கி சிறப்பாக நடாத்தி வந்த மோகன் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும், குறிப்பாக இளைஞன், மற்றும் மட்டறுத்துனர்களுக்கும், யாழ் கள உறவுகளுக்கும், வாசகர்களுக்கும் அன்பு கலந்த நன்றிகள். யாழ் களம் தொடர்ந்து இருக்குமா இருக்காதா என்பதற்கு அப்பால்.. இதுவரை காலமும் யாழ் களம் செய்த சேவைகளுக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம். வழமைபோல் யாழ் களம் தொடர்ந்து இயங்குமானால் மிக்க மகிழ்ச்சி. இதற்காக ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். மாறாக பல்வேறு சிக்கல்கள், தனிப்பட்ட காரணங்களினால் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக யாழ் களம் தொடர்ந்து இயங்கமுடியாமல் போனால் அதற்காக வருத்தங்களை தெரிவித்து கொள்கின்றோம். அ…
-
- 25 replies
- 2.5k views
-
-
அநாமதேயமாக மறைந்து நின்று பார்க்க என்ன வழி? கரத்துக்களத்திற்குள் உள்நுழையும்போதே இதற்கு வழி இருக்கிறது என்று நீங்கள் சொல்லலாம் ஆனால் அதில் நான் எப்படித்தான் முயற்சிசெய்தாலும் மறைக்க முடியவில்லை ஒட்டமெற்றிக்கா நான் நிற்பதை வெளிக்காட்டுகிறது... அதனை மாற்ற என்ன வழி?
-
- 25 replies
- 2.1k views
-
-
உங்க கருத்து பதிவுக எல்லாம் பாத்தேங்க . அதில நீங்க சிரிக்கிறீங்க , அழுவுறீங்க என்மோல்லாம் செய்யீறீங்க . நானும் கருத்துங்க எழுதிறப்போ சிரிக்கணும் . வழிசொல்லுவீங்களா கள உறவுகளே ?
-
- 25 replies
- 3.7k views
- 1 follower
-
-
யாழ் களத்தில் இடைப்பட்ட காலத்தில் பச்சைப் புள்ளி மற்றும் சிவப்பு புள்ளி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. பின்னைய காலங்களில் புள்ளி வழங்கும் முறைமைகள் தவறான முறையில் பாவிக்கப்பட்டமையினால் பல அறிவுறுத்தல்களின் பின்னர் சிவப்பு புள்ளி வழற்கும் முறை முற்றாக நிறுத்தப்பட்டது. பின்னைய காலங்களில் பச்சைப்புள்ளி வழங்கும் முறையிலும் சிலரால் விடயத்திற்கு புள்ளிகள் வழங்கப்படாது எழுதியவருக்கு என்று / இணைத்தவருக்கே புள்ளி வழங்கப்பட்டதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிந்தும் புரிந்தும் கொண்டமையால் புள்ளிகள் வழங்கியவர் விபரங்களை மறைக்க வேண்டிய நிலைமைக்கு வந்திருந்தோம். தற்போது மீண்டும் பழைய நிலைக்கு பச்சைப் புள்ளிகள் வழங்கியவர்களை பார்வையிடும் வசதியையும் சிவப்பு புள்ளி…
-
-
- 25 replies
- 2.3k views
- 1 follower
-
-
கருத்துக்களத்தில் உள்ள கையொப்பங்கள் பகுதியில் சில மாற்றங்களைக் கொண்டு வரவேண்டிய தேவையில் உள்ளோம். யாழ் மற்றும் கருத்துக்களம் வேகமாக இயங்க வேண்டும் என்று முடிந்தவரை அதிக எண்ணிக்கையில் படங்கள் இடுவதைத் தவிர்த்து தேவைப்படும் இடத்தில் மட்டும் படங்களை இணைத்து தளம் வேகமாக இயங்க வகை செய்தோம். ஆனால் கையொப்பம் பகுதியில் பல உறுப்பினர்கள் படங்களை இணைத்துள்ளதால் பின்வரும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இணைய இணைப்பு வேகம் குறைந்தவர்கள் தளம் முழுமையாகத் திறக்க மேலும் சில செக்கன்கள் / நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. -வாசிக்க வரும் கருத்துக்களை பல்வேறு விதமான (அசையும்) படங்கள் குழப்புகின்றன / இடையூறாக அமைகின்றது. ஆகையால் நீங்கள் இணைத்துள்ள …
-
- 25 replies
- 2.9k views
- 1 follower
-
-
கள உறுப்பினர்கள் கவனத்திற்கு. நான் இங்கு கன காலமாக பாண்டியன் எனும் பெயரில் கருத்தெழுதுகிறேன் ஆனால் மற்றொருவருக்கும் கள நிர்வாகம் இதே பெயரைக்கொடுத்திருக்கிறது. இதனால் தேவையில்லாத பிரச்சினகள் வரலாம். கள நிர்வாகம் உடனடியாக புதியவரின் பெயரை மாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன் -எனது பெயர் paandiyan புதியவரின் பெயர் pandiyan. ஒரு எழுத்துதான் வித்தியாசம். மோகனுடன் தொடர்பு கொள்ளமுடியாமல் உள்ளது. யாராவது மோகனின் தொடர்பை தர முடியுமா.
-
- 25 replies
- 4.6k views
-
-
யாழில் hackers அன்பான உறவுகளே நேற்றிரவில் இருந்து எனது பெயரில் யாரோ யாழில் உலாவுகிறார். அத்தோடு திண்ணையில் பல உறவுகளை புண்படுத்தியும் உள்ளார். எனது பாஸ்வேட் களவாடப்பட்டுள்ளது. யாரையும் புண்படுத்தி இருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.(நான் உண்மையில் எனது உறவுகளின் மனதை புண்படுத்தாமல் இருந்த போதும்). எனவே மோகன் அண்ணாவோ அல்லது வலைஞனோ ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். நானும் தமிழ்லினிக்ஸ்ம் திண்ணையில் தர்க்கப்பட்டது மட்டும் உண்மை. எனது நிலையை புரிவீர்கள் என எண்ணுகிறேன். மிக்க நன்றி.
-
- 25 replies
- 2.9k views
-
-
அடர் அவைக்குள் ஆதி நுழைந்து பதிவுகளை இட உதவி செய்யுங்கள். நகைச்சுவைப்பகுதியில் உள்ள ஆதியின் அடர் அவை அல்ல, blog உள்ளே புகுந்து எழுத முடியாமல் உள்ளது. ஆவன செய்யுங்கள்
-
- 25 replies
- 3.7k views
-
-
யாழ் கள தமிழ் அறிஞர்களிற்கு வணக்கம்! தங்களிடம் ஒழுங்கான தமிழில் எழுதுவதற்கு சில உதவிக்குறிப்புக்களை நான் எதிர் பார்த்து நிற்கின்றேன். எனது சந்தேகங்களை கேள்விகளாக, கேள்வி இலக்கத்துடன் போடுகின்றேன். உங்களுக்கு நல்ல பதில் தெரிந்தால் அதை அறியத்தந்தால் போகிற வழிக்கு உங்களுக்குப் புண்ணியமாகப் போகும். கேள்வி 01: நான் எழுதும் போது தான், கொண்டு, என்று ஆகிய சொற்பதங்களை அடிக்கடி பாவிக்கவேண்டியுள்ளது. இச்சொற்களை தவிர்த்து எழுதும் போது நான் சொல்ல வரும் கருத்தை, சொல்ல விரும்பும் வகையில் என்னால் சொல்ல முடியாமல் போகிறது. தான், கொண்டு, என்று ஆகிய சொற்பதங்களிற்கு மாற்றீடாக வேறு என்ன சொற்களை நீங்கள் பாவிக்கிறீர்கள்?
-
- 24 replies
- 4.2k views
-
-
கள உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள், யாழ்க்களத்திலே (புரியவேண்டியவர்களுக்கு பிரியும்) பல *** இருக்கு, அதில சிலர் பல பெயர்களை பதிவு செய்துவருகின்றனர், ஆனால் அந்த பெயர்களில் கருத்துகள் எழுதாமல் நிண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.. இப்பொழுது வேண்டுகோள் என்னெவென்றால் புதிதாக களத்தில் இனைபவர்கள் களப்பொறுப்பாளர் அனுமதியுடன் களத்துக்குள் உள் நுழையும் முறையை கொண்டு வந்தால் என்ன? ஒரு கருத்துக்களத்தில் புதிதாக இனைபவர்கள் 3 வழிகளில் இனைந்துகொள்ளலாம், 1.ஏதேனும் ஒரு (பிழையான) இமயிலை குடுத்து உள் நுழைதல் 2.உண்மையான அல்லது அவரிடமுள்ள இமயில் முகவரியை குடுத்து உள் நுழைதல் (இமயிலிற்கு சென்று அங்கே அதை அக்ரிவிற்றி பன்னுதல்) 3.களப்பொறுப்பாளரின் அனுமதியுடன் (அதாவது ஒருவர் பு…
-
- 24 replies
- 4.1k views
-
-
காலம் கடந்து எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை பணத்துக்காக....... என்ற தலைப்பிலும் இது போன்ற வேறு தலைப்புகளையும் உருவாக்கி ஒட்டு மொத்தப் பெண்களையும் வசை பாடும் நிலை யாழ் களத்தில் அதிகரித்து வருகிறது. இது யாழ் களத்தில் ஆர்வத்துடன் பதிவுகளைப் பதிந்து வந்த பல பெண்களையும் புண்படுத்தி பலரும் இந்தப் பக்கம் வருவதையும் நிறுத்தக் காரணமாக அமைந்திருக்கிறது. எனவே இது போன்ற தலைப்புகளின் பால் நிர்வாகம் அக்கறை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பணத்துக்காக... என்ற தலைப்பை நிர்வாகத்திற்கு நகர்த்தியதற்கு (காலங் கடந்தாவது) நன்றி
-
- 24 replies
- 3.8k views
-
-
அனைவருக்கும் மீண்டும் இழவு வணக்கங்கள், தாயகத்தில் ஏற்பட்ட, ஏற்பட்டுள்ள போராளிகளின், மக்களின் மாபெரும் பேரிழப்புக்கள் கணக்கில் அடங்காதவை. இங்கிருந்து கற்பனை செய்துபார்க்கப்பட முடியாதவை. எங்கள் துயரைப் பகிரும்முகமாகவும் போரளிகள், மக்களின் உயிர்களிற்கு மதிப்பு கொடுக்கும்முகமாகவும் யாழ் இணையமும் ஆகக்குறைந்தது ஒரு மாதத்திற்காவது ஊர்ப்புதினம், கவனயீர்ப்பு, மக்கள் அவலங்கள், யாழ் செயலரங்கம் பகுதிகள் போன்ற மிகவும் அவசியமான பகுதிகள் தவிர கருத்துக்களத்தில் உள்ள மிகுதி அனைத்துப்பகுதிகளையும் சில காலத்திற்கு முடக்கி வைப்பது // பூட்டுபோட்டு மூடுவது நல்லது என்று நினைக்கின்றேன். தயவுசெய்து யாழ் நிருவாகம் இந்த வேண்டுகோளை கவனத்தில் எடுக்கவும். நன்றி! அண்மையில் வீரச்சாவு அடைந்…
-
- 24 replies
- 2.7k views
-
-
யாழ் கருத்துக்களத்தில் உறவுகளையோ ஏனைய மக்கள் கூட்டத்தையோ புண்ணாக்கு/புண்ணாக்குகள் என அழைப்பதைத் தடைசெய்யவேண்டும் எனக் கள நிர்வாகத்திடம் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன். இப்படிக்கு புண்ணாக்கு எதிர்ப்புப் போராட்டக்குழு யாழ் கருத்துக்களம்
-
- 23 replies
- 2.9k views
-
-
மோகன் அண்ணா... நான் யாழின் வளர்ச்சியைக்கண்டு பெருமை. ஆனால் ஒரே ஒரு குறை.. யாழின் மற்ற பகுதிகளுக்கு சென்று என்னால் ஏன் கருத்து எழுத முடிகிறதில்லை ? அதற்கென்று ஏதேனும் தனிப்பட்ட வாசகர் சந்தா கட்ட வேண்டுமா யாழின் பிற பகுதிகளுக்கு எவ்வாறு செல்வது ? தயவுசெய்து உதவி செய்யவும். தங்கள் அன்புள்ள யாழ் கள உறுப்பினன்
-
- 23 replies
- 3.2k views
-
-
யாழ் கள நிர்வாகம் ஆன்மீகத்துக்கு ஒரு பகுதியை தொடங்கினால் என்ன?
-
- 23 replies
- 3.3k views
-
-
ஜமுனா இங்க மட்டுமா இதை செய்யிறார்? (அரட்டை), குழந்தை பரிதாபமாக இறந்தது எண்டு செய்தி வந்தாலும் அந்த பிரிவில போயும் அரட்டை தான் செய்வார். ஆனா ஒண்டு, சில கருத்து பிரிவுகளில் அரட்டை வந்தால் (தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் கருத்துக்கு) உடனுக்குடன் கடாசும் நிர்வாகம் இப்படியானவற்றை அகற்றாமல் வடிவு பார்ப்பதைத்தான் சகிக்கமுடியல்ல.. :angry: சிலவேளைகளில் சிறிது நேரத்தில் மேலே உள்ள அரட்டைகள், நையாண்டிகளை தணிக்கை செய்வார்கள் எண்டு நினைக்கிறேன். ஏனெனில் ஒரு சிலரின் கருத்துக்களை கள நிர்வாகம் உன்னிப்பாக அவதானிப்பதால் (எங்க கள உறவுகளை தாக்கி எழுதி விடுவார்களோ என்று என்னி). இப்பகுதியில் எனது கருத்துக்கள் வந்துவிட்டதல்லவ. எனி உடனடியாக விழித்துக்கொள்வார்கள். இதை எழுந்தமானத்த…
-
- 23 replies
- 3.5k views
-
-
யாழ் கள பொழுது போக்கு பகுதியில் எழுதப்பட்டிருந்த யாழ் கள அவுஸ்திரேலிய செய்திகள் நீக்கப்பட்டு இருக்கின்றது? யாழ் கள நிர்வாகம் அதில் என்ன தவறு கண்டது? நாங்கள என்ன வற்புணர்சிகளை தூண்டும் கருத்துகளை அதில் எழுதினோமா நீக்கு வதற்க்குஃ? இல்லை பாவிக்க கூடாத வாத்தைகளை பாவித்தோமா நீக்குவதற்க்கு? நகைச்சுவைக்காக போடப்பட்ட அந்த செய்திகளை நீக்குவதற்கான காரணம் என்ன? நாங்கள் சந்தித்ததை தானே எழுதினொம் நீங்கள் அதில் என்ன குற்றம் கண்டீர்கள்? கேட்டு கேள்வி இல்லாமல் அதில் கை வைக்கப்பட்டு இருக்கின்;றது விருப்பமானவர்கள் அதை பார்பார்கள் விருப்பம் இல்லாட்டி எழுதாமல் போவார்கள் நீங்கள் நீக்க வேண்டிய அவசியம் என்ன? உடனடியாக யாழ் கள நிர்வாகம் பதில் அளிக்காவிட்டால் அவுஸ்திரெலிய யாழ் கள…
-
- 23 replies
- 4.4k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், நான் யாழ் இணையத்தில் சேர்ந்து சுமார் ஒரு வருடமும் நான்கு மாதங்களும்தான் ஆகின்றது. எனவே, எனக்கு யாழ் நிருவாகம்பற்றி அதிகம் தெரியாது.. உங்கள் யாருக்காவது கீழ்வரும் பதில்களுக்கு பதில் தெரிந்தால் அறியத்தாருங்கள். 1. யாழ் நிருவாகம் என்று கூறப்படுகின்றது. இந்த நிருவாகத்தில் யார் யார் அடங்கி இருக்கின்றார்கள்? 2. யாழ் நிருவாகம் என்பது எதைக் குறிக்கின்றது? 3. யாழ் நிருவாகம் சொல்லும் விதிகள் என்று கூறப்படுகின்றது. இந்தவிதிகளை உருவாக்குவது யார்? தனிநபரா? அல்லது ஒரு குழுவா? 4. யாழ் இணையத்தின் பெறுமதி தற்போது $100,000 ற்கு மேல் தேறும் என்று இளைஞன் அவர்கள் கண்டுபிடித்து சொல்லி இருக்கின்றார். அப்படியாயின் இதன் சொந்தக்காரன் யார்? அல்லது சொந்…
-
- 23 replies
- 3.6k views
-
-
வணக்கம், யாழ் கருத்துக்களம் உலகத் தமிழரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக அரசியல் சமூக விடயங்களை தமிழில் விவாதிக்கவும், நட்போடு பழகிடவும், தேடல் கொள்ளவும், சுயமாக கவிதைகள், கதைகள் என்று படைப்புத் திறனைக் காட்டவும் கூடிய ஒரு பொதுவான தளமாக 1999 மார்ச் 30 முதல் இயங்கிவருகின்றது. சமூகவலைத் தளங்களின் ஆதிக்கம் பெருகியுள்ள இந்தக் காலகட்டத்திலும் கருத்துக்கள உறவுகளினதும், பார்வையாளர்களினதும் ஆதரவுடனும் தனித்துவமாக மிளிர்கின்றது. இந்த வகையில் 2019 ஆம் நிறைவுபெறும் இவ்வேளையில் யாழ் கருத்துக்களத்தில் அலசப்பட்ட திரிகளினதும், புதிதாக யாழுடன் இணைந்து கருத்தாடல்களில் பங்குபற்றோரினதும், அதிகம் விருப்பப் புள்ளிகள் பெற்றவர்களினதும் பட்டியலை கீழே தருகின்றோம். சில தொழ…
-
- 23 replies
- 2.6k views
- 1 follower
-
-
இன்று ஒரு தலைப்பின் கீழ் எழுதப்பட்ட விடயம் எந்தவொரு காரணமும் கூறப்படாது வேறிடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. எங்கே அத்தலைப்பு. அது பிறிதொரு இடத்தில் இடப்பட்டிருந்தால் அது பற்றி ஏன் தலைப்பிட்டவரிற்கு அறிவிக்கவில்லை. களவுறுப்பினர்கள் கடைப்பிடிக்கவேண்டும் எனக்கூறப்படும் விதிகள்போன்று நிர்வாகம் கடைப்பிடிக்கவேண்டிய விதிகளிற்கு என்னாச்சு.....
-
- 23 replies
- 3.3k views
-
-
பல விடயங்கள் சம்பந்தமாக என்:னிடம் பல்வேறு கருத்துகள் உண்டு. இத்தளத்தில் அவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம் என்பது எனது நம்பிக்கை. அதற்கான உரிமையை எனக்கு வழங்குவீர்களா ? எனது கருத்துகளுடன் உடன்பாடற்ற நிலையில் என் கருத்துரிமையை மறுப்பதற்குத் தங்களுக்கு உரிமையுண்டுதானே ! எதற்கு அஞ்சுகிறீர்கள் ?
-
- 23 replies
- 3.6k views
-
-
வணக்கம்! சில உறவுகள் அடிக்கடி தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் காணாமல் போகின்றார்கள். இதனால் இவர்கள் முதலாவதாகவும், கடைசியாகவும் யாழில் கூறிய கருத்துக்களை இங்கு மீட்டுப் பார்க்கின்றேன். இதன்மூலம் இவர்கள் மீண்டும் யாழுக்கு விரைவில் வருவார்கள் என எதிர்பார்ப்போம். ஒருவர் சொல்வதில் முதலாவதாகவும், கடைசியாகவும் சொல்பவை எப்போதும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் இந்த கருத்துக்களை மாத்திரம் இங்கு மீட்டுப் பார்க்கின்றேன். உங்களுக்கும் விருப்பமான கள உறவுகளை காணவில்லையானால் நீங்களும் அவர்கள் முதலாவதாகவும், கடைசியாகவும் கூறிய கருத்துக்களை இங்கு இணைக்கலாம். [குவோட்டை பாவிக்கலாம்] நன்றி! இது லிசான் சொன்னவை.. லிசானை இப்போது அடிக்கடி காணக்கிடைக்கிது இல்லை. இதனால் லிசா…
-
- 22 replies
- 3.5k views
-
-
மேலே உள்ள திரியில் கடஞ்சா கூறுகிறார், ” காணொளி வடிவில் காணொளி வடிவில் காணொளி upload விட்டேன். எப்படி இணைப்பது? ஆனால், எனது upload லிமிட் 1 கிலோ bytes என வரையறுக்கப்பட்டுள்ளது.” இதே பிரச்சினை எனக்கும் உளது. ஒரு போட்டோவை இணைக்க முடியாது. யாருக்கும் விளக்கம், தீர்வு தெரியுமா?
-
- 22 replies
- 3.8k views
-
-
கள உறவுகளே!!!!!!!!!!! எனக்கு தமிழில் ஒரு சில இடங்களில் எழுதிவதில் மயக்கம் ஏற்படுகின்றது . ஒரு சில உறவுகள் அதை சுட்டிக்காட்டிய பொழுதிலும் , சில எழுத்துப் பிரையோகங்களில் மனக்குளப்பமே ஏற்படுகின்றது . அதாவது சுற்ரம் , சுற்ருலா , பற்ரவைத்தல் , இது எனது எழுத்து . ஆனால் எனது நெருங்கிய , எனது வளர்சியில் அக்கறை கொண்ட நண்பர் , எனது எழுத்தைப் பினவருமாறு மாற்ரியமைக்கப் பரிந்துரை செய்கின்றார் . சுற்ரம் = சுற்றம் , சுற்ருலா = சுற்றுலா , பற்ரவைத்தல் = பற்றவைத்தல் , என்று திருத்தச் சொன்னார் . ஆனால் , எனது அறிவோ இலக்கணப்படி ர + உ = ரு , ர +அ = ர , என்று சொல்கின்றது . உங்களில் யாராவது தமிழில் , கலைமாணி அல்லது முதுகலை மாணிப் பட்டப் படிப்பை மேற்கொண்டவர்கள் இருந்தால் எனது ஐய்யப…
-
- 22 replies
- 2.5k views
-