வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5790 topics in this forum
-
வணக்கம் லண்டனில் கறுப்பின[கலப்பின]இளைஞர் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி அனைவரும் அறிந்ததே...அவ் இளைஞர் போதைவஸ்து கடத்தல்,காங் லீடராக இருந்தாலும் பின் தொடர்ந்த காவல் துறையினர் அவரை கைது செய்யாமல் பொது மக்கள் முன்னிலையில் அவரை சுட்டுக் கொண்டது சரியா? பிழையா? ஊர்வலமாக போன மக்களுக்கு தகுந்த பதிலை கொடுத்திருந்தால் பிரச்சனை இந்த அளவிற்கு போய் இருக்குமா?... இவ் இளைஞர் வெள்ளையாக இருந்திருந்தால் காவல் துறையினர் அவரை சுட்டுக் கொண்டு இருப்பார்களா? லண்டன் காவல்துறையினரும்,பிரித்தானியா அரசும் வேண்டும் என்றே இக் கலவரத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்...பொருளாதார பிரச்சனையை திசை திருப்புவதற்காக அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்பது கருத்து.
-
- 33 replies
- 2k views
-
-
என் வீட்டுக் குளத்தில் பத்தொன்பது மீன்கள் நேற்றுவரை இருந்தன. மீன்கள் ஓடி விளையாடும் அழகைப் பார்த்துக்கொண்டே எத்தனை நேரமானாலும் இருக்கலாம். கடந்த குளிர் காலத்தில் யாழ் இணையமே கதியென்று கிடந்ததால், குளத்தைக் கொஞ்சம் கவனியாது விட்டுவிட்டேன். தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரமும் பழுதடைந்து, புதிது வாங்க நேரமின்மையும், போய் வாங்கப் பஞ்சியாயும் இருந்ததால், நரி மீன்களை உண்ணாமலிருக்க மேலே போட்டிருந்த வலையிலும் சேர்த்துப் பாசி பிடித்துவிட்டது. ஒழுமுறை கழுவிப் பார்த்தும் பாசி அப்படியே இருந்ததால், வலையைச் சுருட்டி குப்பை வாளியுள் போட்டாயிற்று. தொட்டியுள் மேலதிகமாக இருந்த தாவரங்களையும் அகற்றி மீன்தொட்டி இப்ப சுத்தமாகிவிட்டது. வலை வாங்கி மேலே போடவேண்டியது ஒன்றுதான் குறை. எனக்கு வலை…
-
- 33 replies
- 4.2k views
-
-
இனப்படுகொலைக்கெதிரான கூட்டங்களின் போது செத்துக்கொண்டிருக்கும் நம் உறவுகளின் பதாதைகளை விட புலிகளின் கொடியே அதிகம் காணப்படுகின்றது இது நமது போராட்டத்தில் நிறைய பின்னடைவை ஏற்படுத்துகின்றது,உண்மையில் இதை ஒரு ஆரோக்கியமான விவாதமாக கருதி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.இதுவே உலக நாடுகளில் மட்டுமன்றி, சர்வதேச அமைப்புகளும் நமது போராட்டத்திற்கு ஆதரவு குறைவதற்கு காரணமாக இருக்கலாம். நான் இவ்வாறு சொல்வதால் துரோகி முத்திரை குத்தப்படலாம் ,ஆனால் இது முக்கிய பிரச்சனை ஆகவே ஆரோக்கியமான விவாதமாக கருதி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் உதாரணத்திற்கு...... http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 32 replies
- 3.9k views
-
-
ஜெயானந்த மூர்த்திக்கு ஒரு இரகசிய மடல். சாத்திரி ஒரு பேப்பர். முன்னை நாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாரளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி அவர்களே . கும்புடுறேனுங்கோ. வெளிநாட்டிலையிருந்து அடிக்கடி பகிரங்க மடலும் அறிக்கையும் எழுதுபவர்களில்நீங்களும் ஒருவர். கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்க வேண்டுமென அண்மையில் ஒரு அறிக்கை விட்டிருந்தீர்கள். அதுதான் உங்களிற்கு நான் ஒரு இரகசிய கடிதம் எழுதலாமென நினைத்தேன்.இதனை படிப்பவர்களும் சத்தமாக படிக்காமல் மனதிற்குள்ளேயே படிக்கவும். ஜெயா அண்ணாச்சி இலண்டனில் இருந்து அதி தீவிர தமிழ்த்தேசியம் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் கதைக்கிறீங்களே அப்படியே உங்களை ஒரு நாலு வருடத்த…
-
- 32 replies
- 5.7k views
-
-
http://www.youtube.com/watch?v=SajMXbl6T9Q
-
- 32 replies
- 6.5k views
- 1 follower
-
-
இதை பற்றி எழுத வேணும் என பல நாள் ஏக்கம். ஒரு கறுப்பினத்தவருடன் கதைக்கும் பொது அவர் சொன்ன வார்த்தைகள் தான் என்னை இதை எழுத தூண்டியது. அவர் UKல் பிறந்தவர். அவரின் அடி அவருக்கே தெரியாது. அவர் தான் British Citizen என சொல்வதில் பெருமை கொள்கிறார். ஆனால் அவரை ஒரு பொது இடத்தில் மற்ற வெள்ளைகள் கீழ்தரமாக தான் பார்க்கினம். இங்கு லேபர் கவேர்மென்ட் இருந்த பொது, நிதி அமைசர் ஒரு சீன பெண். அவர் ஆஸ்திரேலியாவில் பிறந்தவராயினும், பார்த்தவுடம் அவரை ஒரு சீனத்தவர் என்றுதான் எல்லோரும் சொல்லுவர், வெள்ளைகள் உட்பட. அவரோ தான் ஆஸ்திரேலியன் என பெருமையுடன் சொல்லி கொழ்வார். ஆனால் அதை இங்குள்ள வெள்ளைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுதான் முஸ்லிம்களின் நிலை கூட. இந்த நிலை தான் வெளிநாடுகளில் உள்ள எங்க…
-
- 32 replies
- 2.5k views
-
-
உறவுகளிடம் ஒரு வேண்டுகோள்... தமிழ் மீதும் தமிழ் தேசியத்தின் மீதும் பற்றும் பாசமும் கொண்ட பிரான்ஸ் வாழ் நண்பர்களால் "முகடு" என்ற பெயரில் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை சஞ்சிகை ஓன்று வெளிவர இருக்கின்றது அதற்க்கு அன்பு உறவுகளிடம் இருந்து ஆக்கங்களை எதிர் பாக்கின்றோம்...... முதல் சஞ்சிகைக்கான ஆக்கங்களை இந்த மாதம் முடிவதற்குள் அனுப்பி வைப்பீர்களானால் வசதியாக இருக்கும் மேலதிக விபரங்களுக்கு எமது கள உறவு அஞ்சரன் அவர்களை தொடர்புகொள்ளவும் நன்றிகள் இந்த இளைஞர்களின் முயற்ச்சிக்கு அதரவு அளிப்பீர்கள் என்று நம்புகின்றோம்
-
- 32 replies
- 2.9k views
-
-
ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்! மன்னார் – விடத்தல்தீவு கிராமத்தை சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். 1998ஆம்ஆண்டு பிறந்த அனுஜன், தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கல்வி கற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது உயர் கல்வியினை அவர் பின்லாந்து தேசத்தில் தொடர்ந்துள்ளார். அங்கு மின்னியல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தில் தொழில் சார்ந்த உயர்நிலை இரண்டாம் நிலை தரத்தின் தகுதியையும் மின்னியல் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். பின்னர் ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் (EASA) விமானங்களுக்கான வணிக விமானி உரிமம், EASA CPL(A) MULTI-…
-
-
- 32 replies
- 1.7k views
- 1 follower
-
-
மெல்பேர்ன் கைதுகளைத் தொடர்ந்து சிட்னியில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். A SYDNEY man has been charged with multiple terrorism charges over alleged links with the Sri Lankan terrorist organisation the Tamil Tigers. The 41-year-old was arrested this morning as part of an ongoing investigation by Australian Federal Police. He is due to appear at Sydney's Central Local Court and is expected to be extradited to Victoria at a later date. He has been charged with being a member of a terrorist organisation, providing support or resources to a terrorist organisation and making an asset available to a proscribed entity. The charges bring maximum …
-
- 32 replies
- 3.9k views
-
-
இந்திய, மோசடியாளர்களினால் இலக்கு வைக்கப்படும், பிரித்தானிய மக்கள். தீடீரென, ஈசல் கூட்டம் போல, பல அழைப்புக்கள் வருகின்றன. அதுவும் மொபைல் இலக்கத்தில் இருந்து. கடந்த வாரம் எனக்கு இரண்டு அழைப்புக்கள் வந்தன. ஒன்றினை HMRC (Her majesty's Revenue and Customs) என்றவுடனே வைத்துவிட்டேன். அடுத்து, சிறிது நேரம் இருந்ததால், ஹலோ என்றேன். பெயர் கேட்டார். நரேந்திர மோடி என்றேன். அவரே தூசணத்தால் பேசி விட்டு வைத்து விட்டார். இன்று எனது நண்பர், டாக்டர் ஒருவர். அழைப்பு வந்தது. அவர் அதனை வைத்துக் கொண்டே எனக்கு லேண்ட் லைனில் அழைத்தார். சிறிது தடுமாறி, ஆலோசனைக்கு அழைத்திருந்தார். மோசடி தடுப்பு பிரிவினர் பேசும்போது, வேறு யாருடன் பேசுவது, தண்டைக்குரிய குற்றம் என்று சொல்வது கேட்ட…
-
- 32 replies
- 2.8k views
-
-
Jaffna Hindu College Association Canada Annual Gala Dinner - 2014 will be held on Saturday, April 26th, 2014, at 5.30 pm at Chandni Grand Banquet 3895 McNicoll Ave., Scarborough, ON, M1X 1E7 (Near Markham Road & McNicoll Ave / Tapscott Rd) Agni Singers – Live music and dance All old students, staff and well wishers are kindly invited to attend this event with their families.
-
- 32 replies
- 3.8k views
-
-
அண்மையில் ஒரு புத்தகம் சிட்னியில் வெளியிட்டிருந்தார்கள் அதற்கு சமூகமளிப்பதிற்குரிய சந்தர்ப்பம் கிடைத்தது.புத்தகத்தை நுனிபுல் மெய்வதிற்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது புத்தகத்தை வெளியிட்டவர் இலங்கையின் தலை சிறந்த எழுத்தாளர் தற்பொழுது புலம்பெயர் வாழ் இலக்கிய வாசகர்கள் மத்தியில் பிரபலமான மாத்தளை சோமு அவர்கள்.புத்தகத்தின் பெயர் வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். அதில் எனக்கு பிடித்தது. அவுஸ்ரெலியாவில் வாழ்கின்ற கறுப்பின ஆதிவாசிகளுக்கும் திராவிடர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் அவுஸ்ரெலிய கறுப்பின ஆதிவாசிகளின் பண்பாடு பழக்க வழக்கங்கள் பழந்தமிழர்களோடு ஒத்து போகின்றது மலைகளை,பெரிய மரங்களை பாம்புகளை,சூரியனை,சந்திரனை அவர்கள் வியந்து மரியாதை வணக்கம் செய…
-
- 32 replies
- 6.1k views
-
-
A three-year-old boy and his parents have died at a flat in west London. The bodies of Poorna Kaameshwari Sivaraj, 36, and son Kailash Kuha Raj were found at Golden Mile House on Clayponds Lane, Brentford. Scotland Yard said it believed both had been dead for some time. They were last seen on 21 September. It is thought Kuha Raj Sithamparanathan, Kalish's father and Ms Sivaraj's husband, fatally injured himself when officers forced entry. The 42-year-old was found with stab injuries and pronounced dead by paramedics at the scene. The family's deaths mean London has recorded 100 violent de…
-
- 31 replies
- 3.9k views
-
-
இதில் நாம் பங்கு பற்ற வேண்டுமா? இதால் நமக்கு என்ன நன்மை? யாராவது விளக்குங்களேன். நன்றி தலைப்பை திருத்தியுள்ளதுடன் துயர்பகிர்வு/நினைவுகூறல் பகுதியிலிருந்து புலம் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன். - மதன்
-
- 31 replies
- 6k views
-
-
லண்டனில்... விசா இல்லயென்ற ஒரே காரணத்திற்காக, புதருக்கு அருகிலுள்ள கராஜ் ஒன்றினுள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்று மறைவாகப் படுத்துறங்கி, ஒரு மணி நேரத்திற்கு... ஒரு பவுண்ட் மட்டுமே, சம்பளமாக வாங்கும் தமிழ் இளைஞர்களைச் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். 2018 ம் ஆண்டு Sky TV, அதை ஆவணமாக்கி ஒளிபரப்பியிருந்தது. மனம் பதறி, ஒரு தடவை நிலை குலைந்திருக்கும். அவர்களையே ஒத்த இளைஞர்கள்... இங்கு ஃபிரான்ஸிலும். சில தமிழ் முதலாளிகளிடம் சிக்கிச் சொல்லெண்ணாத் துன்பத்திற்கும். மன அழுத்தத்திற்குமுள்ளாகி வருகிறார்கள். சொந்த நிலங்களை விட்டு அகதிகளாய்ச் சிதறினாலும்... இன்னொரு வாழ்க்கையை எப்படியாவது அமைத்துக் கொள்ள…
-
- 31 replies
- 3.9k views
-
-
கனடாவுக்கு நான் வந்ததில் இருந்து ஆச்சரியப்படும் விதமாக பார்ப்பது என்னவென்றால், இங்கேயே பிறந்து வளர்ந்த தமிழ் பிள்ளைகள் தமிழில் கதைப்பது தான். சில நேரங்களில் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளின் உச்சரிப்புகளை கேட்பதே இரவின் மிச்சம் இருக்கும் துளிகளில் இளையராஜாவின் இசையைக் கேட்பது போன்று அலாதியானது. அண்மையில் நான் காண நடந்த ஒரு சின்ன உரையாடல் எனக்கு சுவாரசியமாக இருந்தது என் நண்பனின் 3 ஆண் குழந்தைகளும் கனடாவில்தான் பிறந்தனர். அவர்களின் மூத்தவன் உட்பட அனைத்து பெடியங்களும் தமிழ் தான் வீட்டில் அப்பனுடன் கதைப்பினர். பெடியள் தமக்குள் ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டாலும், தம் தமிழ் உறவுகளுடனும் அப்பனுடனும் தமிழில் தான் கதைப்பினம். விரைவாக தமிழில் கதைத்தால் விளங்கக் கடினப் பட…
-
- 31 replies
- 4.3k views
-
-
இதே பகுதியில் இன்னொரு திரியில் பிரான்ஸில் தமிழ் இளைஞர்கள் சட்டத்தினை கையிலெடுத்த விடயம் தொடர்பாக உரையாடப்பட்டுக் கொண்டு இருக்கும் போதுதான் இந்த விடயம் பற்றி எழுதுவம் என்று நினைத்தேன். அத் திரியில் எழுதினால் அது திசைமாறி விடும் என்பதால் புதுத் திரியில் எழுதுகின்றேன். அண்மையில் என் மகனது பள்ளிக்கூடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு என் மனைவிக்கு வந்தது. மகன் ஏதோ குழப்படி செய்து விட்டான் என்றும் தன்னை வந்து சந்திக்கும் படி அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார். மூன்றாம் வகுப்பு படிக்கும் பெடியன் பெற்றோர்கள் வந்து சந்திக்கும் படி என்ன தவறைச் செய்து இருப்பான், அதுவும் அதிபரே தொலைபேசியில் பேசும் அளவுக்கு என்று யோசனையுடன் மனைவி பாடசாலைக்கு போயிருக்கின்றார் (என் பெற்றோர் நான் ஐந்தாம்…
-
- 31 replies
- 2.2k views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே / பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் எனது ஊரை சேர்ந்த ஒரு அண்ணா தமிழ் கடையில் வேலை செய்கிறார் , மாசம் 400 மணித்தியால வேலை சம்பளம் 1200 இயுரோ ( மிருக வதை ) என்ர நண்பனுக்கு அந்த அண்ணாவை நல்லா தெரியும் , என்ர நண்பன் அவரின் வேலையையும் மணித்தியாலத்தையும் சம்பளத்தையும் சொல்ல என்னடா கொடுமை இது என்று எனக்கு தோனிச்சு 😓, அந்த 1200 இயுரோவில் தான் பேருந்து கட்டனமும் கட்டனும் , ஊரில் அவரின் மனைவி பிள்ளையலுக்கு மாசம் 400 இயுரோவை அனுப்பி மீதம் உள்ள காசில் தான் சாப்பாடு வீட்டு வாடகை / என்ர மச்சான் அவனும் இங்கை உணவகம் வைச்சு நடத்துறான் , அவனுக்கு சொன்னேன் எங்கட ஊரை சேர்ந்த அண்ணா பிரான்ஸ…
-
- 31 replies
- 4.5k views
- 1 follower
-
-
பிரித்தானியத் தமிழ் எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் புதிய கண்டுபிடிப்பு. தமிழன் செத்துமடியக் காரணமாயிருந்தவர்கள் இந்த சிங்களப் பெருந்தேசியவாதிகள் என்பதில் தமிழருக்கு ஐயமில்லை. ஆனால் தற்போதைய அரசியல் களநிலமையை கருத்திலெடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு இடைக்கால நகர்வாக பலமான எதிரியான மகிந்த குடும்பத்தையும் அவருடன் இணைந்து தமிழரது அழிவுக்குத் துணைபோன துணைக் குழுக்களையும் பலவீனப்படுத்தவே இக்களமென இறங்கியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து எங்கட அறிவுச்செம்மலுகள் மகிந்தவிடம் பணம்பெற்று தமிழை விற்கும் முகவராக உள்ள டன் காணொளியில் மகிந்தவுக்கு வாக்களியுங்கோ என்ற பரப்புரை நடைபெறுகிறது. இதிலென்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம், இதிலே இலண்டனில் உள்ள எழ…
-
- 31 replies
- 4.1k views
-
-
ஒரு திரியில் அகூதா குறிப்பிட்டு இருப்பது போல் 100 டொலர் வருமானத்திற்கு 140 டொலர் செலவழிக்க வேண்டிய தேவைகள் காணப்படும் கனடா நாட்டில் இப்ப நான் செய்யும் வேலையில் இருந்து கிடைக்கும் வருமானம் கையைக் கடிக்க தொடங்கி விட்டதால். 3 மாதத் திட்டம் ஒன்று போட்டு மும்முரமாக புது வேலை தேடுகின்றேன். ஒரு சில வேலைகளுக்கு முயன்று இரண்டு நேர்முகப் பரீட்சைக்கு முகம் கொடுத்து அதன் பெறுபேறுகளுக்காக காத்திருக்கின்றேன். மேற்கு நாடுகளில் நேர்முகத் தேர்வு எமது நாடுகளில் நடப்பதை விட மிகவும் வேறுபாடாக இருக்கும் என்பதை உங்கள் அனுபவங்களில் இருந்தே அறிந்து இருப்பீர்கள். வழக்கமாக எனக்கு என் தொழில் சம்பந்தமான கேள்விகள் எப்பவும் கடினமாக இருப்பதில்லை. ஆனால் Behavioral questions எனப்படும் எம் குணவியல்ப…
-
- 31 replies
- 5.4k views
-
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை! நோர்வேயின் எல்வெரும் பகுதியில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். உள்ளூர் வைத்தியசாலைக்கு வெளியே காரில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது காரில் மற்றுமொரு நபரும் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளார். அவரை மீட்ட காவற்துறையினர் ஒஸ்லோவில் உள்ள வைத்தியசாலைக்கு விமானம் மூலம் கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைத்துப்பாக்கி ஒன்றும் காரின் உள்ளே கிடந்து மீட்கப் பட்டுள்ளது. அந்தத் துப்பாக்கியே கொலைக்குப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது எனச் சந்தேகிக்…
-
-
- 31 replies
- 3.9k views
- 1 follower
-
-
எனக்குக் கன நாளா மண் சட்டியில் கறி சமைக்க வேணும் எண்டு ஆசை. இந்தியா இலங்கை என்று போன நாட்களில வாங்கிக் கொண்டு வருவமெண்டு நினைச்சாலும், சட்டி வாங்கும் பலன் இருக்கேல்ல. உந்த யாழில மைதிரேயியின் சமையல் குறிப்பைப் பாத்திட்டு, கன நாளா அடங்கியிருந்த ஆசை திரும்பவும் மனதை நிரப்ப, போகும் கடைகளில எல்லாம் சட்டி இருக்கோ என்று கேட்டு சலிப்படைஞ்சு, சரி எனக்கு இன்னும் சட்டி யோகம் வரவில்லையாக்கும் என்று மனதைத் தேற்றியும் விட்டன். ஒரு கிழமைக்கு முதல் எனது அரையல் இயந்திரம் பழுதாப் போனதால், மீண்டும் அதைத் தேடி கடை கடையாய் ஏறி இறங்கினன். ஒரு கடையில பாத்தால் ஒரு தட்டு முழுக்க சட்டியள் அடுக்கி வச்சிருக்கு. எனக்கு முகமெல்லாம் சந்தோசத்தில பூரிச்சுப் போச்சு. ஒரு சட்டி £5.99. எனக்கு எப்பவு…
-
- 31 replies
- 6.3k views
-
-
தமிழர்களுக்கு மொழிவெறி உண்டா இல்லையா என்பதைப் போல நண்பர் சுரேஷ் வெங்கடாத்ரி ஒரு பதிவு எழுதி இருந்தார். அதன் எதிர்நிலையில் இருக்கும் இன்னொரு முகமாக இந்தப் பதிவை வாசிக்கலாம். நான் தற்போது வசிப்பது பெங்களூரு ரூரல் பகுதியில். முழுக்க கன்னடம் மட்டுமே சார்ந்து இயங்கக்கூடிய ஒரு கிராமப்பகுதி. இங்கு நகுலனுக்கு விளையாட்டுத் தோழர்கள் என ஓரிருவர் மட்டுமே இருக்க மற்றவர்கள் பெரும்பாலும் தோழிகளே (அது குறித்த விசாரணையைப் பின்னர் வைத்துக் கொள்வோம்.) அவர்களில் ஒரு பெண்ணுக்கு பத்து அல்லது பனிரெண்டு வயது இருக்கலாம். ஒரு நாள் மாலை சாலையில் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென்று என்னிடம் வந்து பேசியவள் சொன்ன வார்த்தைகள் இவை: “அங்கிளுக்கு ஒரு விசயம் தெரியுமா? கூகிளில் உலகின் …
-
- 31 replies
- 3.7k views
- 1 follower
-
-
-
இலங்கைக்கு திருப்பி அனுப்பவேண்டாம்' லண்டனில் 28 தமிழ் இளைஞர்கள் உண்ணாவிரதம் [22 - July - 2007] லண்டன் கீத்ரு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கார்மன்வேத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 28 தமிழ் இளைஞர்கள் நேற்று சனிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் தற்போதய அரசியல் நெருக்கடி நிலைமை காரணமாக லண்டன் சென்று புகலிடம் கோரிய நிலையில் கார்மன்வேத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் இளைஞர்கள் 28 பேரே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தொடரும் தற்போதைய மிக மோசமான நிலைமைகளுக்கு மத்தியில் தம்மை நாடு கடத்த வேண்டாமெனக் கோரியே …
-
- 30 replies
- 5.3k views
-