வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
தங்கள் வாக்கை பதிந்துவிட்டீர்களா??? http://www.judgeandjury.org/
-
- 4 replies
- 2.9k views
-
-
இன்று நீங்கள் ஏதாவது ஒரு நிகழ்வைக்கண்டிருப்பீர்கள் அதை இங்கு பதியுங்கள். இன்று நான் பார்த்தது காலையில் வேலைக்கு வந்தபோது கடைக்கு முன் கார் நிறுத்தும் அத்தனை இடங்களும் வெறுமையாக இருந்தன. (சாதாரணமாக இடத்துக்கு அலையணும்) தூரமாக வரும்போதே கார் தரிக்கும் இடத்தினூடாக காரைச்செலுத்தினேன் மகள் இருந்தாள் சிரித்தபடி சொன்னால் கார் தரிப்பிடத்தில் அப்பா கார் ஓடுகின்றார் என. இதுவும் அதிசயம் பரிசில். இந்த மாதம் அநேகமானவர்கள் விடுமுறையில் வெளியில் சென்றுவிடுவதால் இந்த மாதம் மட்டும் கொண்டாட்டம். முன் கார்களை முட்டத்தேவையில்லை அத்துடன் குறித்த நேரத்தில் வேலைக்கும் வரமுடியும்.
-
- 4 replies
- 753 views
-
-
கறுப்பு ஜூலை : பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் கறுப்பு ஜூலை நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கறுப்பு ஜூலை படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதிகோரி நேற்று டவ்னிங் ஸ்ட்ரீட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள் என்றும் இன அழிப்புக்கு நீதி வேண்டும் என பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொடர்ச்சியாக இன்றும் தமிழர் தாயக பகுதிகளில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட இனவழிப்பு தொடர்பாகவும் அவர்கள் அதிருப்தி வெளியிட்டனர். இதேவேளை தமிழின அழிப்புக்கான நீதி விசாரணைகளின் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 288 views
-
-
-
கனடாவில் வட்டுக்கோட்டை மக்கள் ஆணை மீதான வாக்கெடுப்பு நிலையங்களும் வரைபடங்களும்
-
- 1 reply
- 788 views
-
-
இந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில் தடை இந்திய அல்போன்சா மாம்பழங்கள் மற்றும் நன்கு காய்கறிகள் வகைகளையும் மே 1ஆம் தேதிவரை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தற்காலிக தடைவிதித்துள்ளது. இந்தியாவில் இருந்து அல்போன்சா உள்ளிட்ட பல்வேறு உயர்ரக மாம்பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதைப்போல கத்தரிக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளும் வெளிநாடு களுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கணிசமான அளவு மாம்பழம் மற்றும் காய்கறிகள், பூச்சிகள் மற்றும் புழுக்கள் அரித்து அழுகி காணப்பட்டன. இந்த பூச்சிகளால் அந்நாடுகளின் விவசாயம் மற்றும் உற்பத்தி பாதிக்கப்படும…
-
- 14 replies
- 4.7k views
- 1 follower
-
-
நொவம்பர் 13ம் திகதி இடம்பெற்ற நகரசபைத் தேர்தலில், ஈழத் தமிழர்கள் இருவர் வெற்றி பெற்றுள்ளனர். ரொறன்ரோ நகர சபை உறுப்பினர் மற்றும் கல்விச்சபை உறுப்பினர் பதவிகளுக்கு ஈழத் தமிழர்கள் போட்டியிட்டனர். இவை தவிர, பிரதேச சபை உறுப்பினர் பதவிக்காக, யோர்க் பிரதேசத்தில் தமிழர் ஒருவர் போட்டியிட்டிருந்தார். மார்க்கம் நகரசபையில் போட்டியிட்ட தமிழர்கள் விபரம் வருமாறு: மார்க்கம் நகரசபை உறுப்பினராக, 7ம் வட்டாரத்தில் போட்டியிட்ட லோகன் கணபதி அவர்கள், 33.54 வீத வாக்குகளைப் பெற்று, கவுன்சிலர் பதவிக்குத் தெரிவாகியுள்ளார். அதே நகரசபையில், 7ம் 8ம் வட்டாரங்களில், கல்விச்சபை உறுப்பினராகப் போட்டியிட்ட நீதன் சண்முகராஜா, 68.39 வீத வாக்குகளைப் பெற்று, அமோக வெற்றியுடன் தெரிவாகியிருக்க…
-
- 3 replies
- 1.3k views
-
-
இங்கிலாந்தில் (மேற்கு லண்டனில்) வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தாய் (வயது 34) தனது இரண்டு பெண் குழந்தைகளை (வயது 9 மற்றும் 4) அசிட் கொடுத்து கொன்று தானும் அதே அசிட்டைப் பருகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவரின் குடும்பத்தினரோடு சேர்ந்து வாழப் பிடிக்காமல்.. கணவரைப் பிரிந்து வாழ்ந்த நிலையில் பள்ளிக்கூடம் ஆய்வுகூட உதவியாளரான மேற்படி பெண் பள்ளிக்கூடத்தில் இருந்து பெற்ற அசிட் திராவகத்தை பயன்படுத்தி இவ்வாறு மரணத்தை உண்டுபண்ணியுள்ளார். மேற்படி பெண் குடும்பத்தகராறின் பின் மன அழுத்தத்துக்கு (Stress) (பிள்ளைகளின் படிப்புத் தொடர்பான சர்ச்சையால்) ஆளாகி இருந்ததாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரிலில் நடந்திருந்தது. இது தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்ப…
-
- 66 replies
- 6k views
-
-
ஐ.நா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம்- யேர்மனி Posted on February 14, 2023 by சமர்வீரன் ஐ.நா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம்- யேர்மனி – குறியீடு (kuriyeedu.com)
-
- 0 replies
- 1.1k views
-
-
இத்தாலி தேர்தலில் களமிறங்கியுள்ள இலங்கை தமிழர்கள்! June 26, 2018 இத்தாலியில் இடம்பெற்ற வெளிநாட்டவர்களுக்கான தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு தமிழ் இளையவர்கள் களமிறங்கி உள்ளனர் 17 நாடுகளைச் சேர்ந்த 26 வெளிநாட்டவர்கள் இந்தத் தேர்தலில் களம் இறங்கினர். இத்தாலி பலெர்மோ நகர தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த ரமணி தியாகராஜா, மற்றும் அருள்நேசன் தயாராஜ் ஆகியோரே போட்டியிடுகின்றனர். http://www.pagetamil.com/9653/
-
- 0 replies
- 1k views
-
-
திரு. கி.பி. அரவிந்தன் அவர்கள் புலம் பெயர்ந்து பிரான்சில் வாழும் ஓர் முன்னாள் ஈழப் போராளி. சமுகம், இலக்கியம் போன்ற தளங்களில் தன்னை ஈடுபடுத்தி வருபவர். வஜ்ரம் என்ற இதழுக்காக அவரை நேர்காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. யாழ் இணையத்தள நண்பர்களுக்காக இங்கு தருகிறேன். கி.பி. அரவிந்தன் முதலில் உங்களைப் பற்றிச் சொல்லுங்கள், நீங்கள் எப்போதிலிருந்து பொது வாழ்வில் உங்களை ஈடுபடுத்தி வருகின்றீர்கள். 1972 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதியை நான் குறிப்பிட்டுச் சொல்லலாம். அதற்கு மூன்று நாள்கள் கழித்து 1972 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு இலங்கை குடியரசாக பிரகடனப்படுத்தப் பட்ட நாளை அன்றைய தமிழ் மக்களின் தலைவர்கள் ஒரு கரி நாளாக கொள்வதென மு…
-
- 0 replies
- 1.6k views
-
-
புலம்பெயர் நாடுகளில் உள்ள முக்கிய ஊடகங்கள், சிறிலங்காவில் நடத்தப்பட்ட இனவழிப்பு சம்பந்தமாக செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வரும் இவ்வேளையில், சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினர் தாம் தமிழ்ப்பொதுமக்கள் எனும் பெயரில் இவ்வூடகங்களை திசைதிருப்பவும், பிழையான/பொய்யான தகவல்களை தொடர்ந்தனுப்பிய வண்ணம் உள்ளனர். இதன் ஒரு ... * தன்னை முன்னால் புலி என்பவரும் * இடைநாளில் ஈ.என்.டி.எல்.எப் கும்பலின் முக்கியஸ்தகரும் * நடிப்புலக மாமேதையும் *இடைநாள்(யுத்த நிறுத்த காலங்கள்) புலிகளின் புலனாய்வுத்துறையின் லண்டனின் முக்கிய உறுப்பினர் என தன்னை இனங்காட்டியவரும் * கிழக்கில் ராம் தலைமையில் தப்பியதாக கூறப்பட்ட போராளிகளின் நலன் விரும்பியும் ஆக செயற்பட்டவரும் * நாடு கடந்த அரச…
-
- 15 replies
- 1.9k views
- 1 follower
-
-
இலங்கைத் தமிழருக்கு லண்டனில் விருது [ வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015, 01:14.21 PM GMT ] இலங்கையைச் சேர்ந்தவரான கலாநிதி. சுந்தர் மகாலிங்கம் (சுந்தரவதனன் மகாலிங்கம்) பொருளறிவியல் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுக்காக சர்வதேச இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான விருதை வென்றுள்ளார். மேற்படி விருதானது (Elsevier and Materials Science and Engineering C Young Researcher Award) உயிரியல் விஞ்ஞானம், பொருள்சார் பொறியியல் தொடர்பான ஆய்வியல் மற்றும் கோட்பாடுசார் விடயங்கள் பற்றிய சிறப்பு ஆராய்ச்சிகளை அடையாளங்கண்டு அவற்றை அங்கீகரிக்கும் பொருட்டு, 35 வயது அல்லது அதற்கு குறைவான தனிநபர்களுக்கு லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியினால் வழங்கப்படுகின்றது. சுந்தர் தனது கலாநிதி பட்டத்தை லண்டன் பல்கலைக்கழகக் கல…
-
- 8 replies
- 2k views
-
-
என்னுடைய வீடிற்கு பக்கத்து வீட்டில் மைக்கிலும் எலிசபத்தும் ஒன்றாக தான் இருகிறார்கள் என்று நான் நினைத்தேன் அப்ப தான் நம்ம சண்முகத்தார் சொன்னார் அவர்கள் விவாகரத்து செய்தவர்களாம்,உடனே சந்தேகம் வந்து விவாகரத்து செய்தவர்கள் என்றா எப்படி ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருகிறார்கள் என்று கேட்டேன் அதற்கு அவர் சொன்னார் அது வந்து செப்ரேசன் அன்ட வன் ரூவ்(sepration under one roof).எனக்கு கொஞ்ச நேரம் ஒன்றும் புரியவில்லை முழித்து கொண்டிருந்தேன்.அதை புரிந்து கொண்ட சண்முகத்தார் அதாவது இந்த நாட்டில் ஒரு சட்டம் இருகிறது விவாகரத்து பெற்றாலும் ஒரே வீட்டில் இருக்கலாம் அப்படி இருப்பதால் பிரிந்தவர்களுக்கு சில வசதிகள் இருக்குதாம் அதாவது வீட்டுவாடகை மற்றும் அன்றாடசெலவுகள்,பிள்ளைகளின் எதிர்காலத…
-
- 17 replies
- 2.5k views
-
-
கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் இலக்கியப் பரப்பில் நடந்த முக்கியத்துவம் வாய்ந்த படைப்பு நிகழ்வு ஷோபா சக்தி. ஈழத் தமிழர் போராட்டம் பெற்றெடுத்த குழந்தை என்று ஷோபா சக்தியை நிச்சயமாகக் கூறலாம். இவர் முன்னணிக் கதாபாத்திரம் ஏற்று நடித்த, அகதிகள் படும் துயரத்தைப் பேசும் பிரெஞ்சுத் திரைப்படமான ‘தீபன்’, கான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருதும் பெற்றுள்ளது… சமீபத்தில் சென்னை வந்த அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து… உங்களது புதிய நாவலான ‘பாக்ஸ் கதைப் புத்தகம்’ குறித்து சொல்லுங்கள். முள்ளிவாய்க்காலில் நடந்த பேரழிவுக்குப் பிறகு வன்னி பகுதி கிராமம் ஒன்றில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் யுத்தத்தின் வடுக்கள் குறித்த கதை இது. யுத்தம் எமது மக்களிடையே ஏற்படுத்திய பாதிப்புகள், பேரழிவுகள் எல்லாமும…
-
- 0 replies
- 292 views
-
-
நான்கு வயது சிறுமியின் உயிரை பறித்த தமிழ்பெண் வாகன சாரதி கைது. Mohanay October 23, 2015 Canada கனடா- 39-வயதுடைய மார்க்கத்தை சேர்ந்த தமிழ்பெண் சாரதி ஒருவர் ஆபத்தான முறையில் வாகனமோட்டி இறப்பு மற்றும் அபாயகரமான முறையில் வாகனத்தை செலுத்தி உடலிற்கு தீங்கு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டார். வியாழக்கிழமை பிற்பகல் நான்கு வயது சிறுமி ஒருத்தி பாடசாலையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் வாகனமொன்றினால் மோதப்பட்டு கொல்லப்பட்டாள். சிறுமியும் அவளது 7வயது சிறுமியும் எஸ்யுவி வாகன மொன்றினால் இடிக்கப்பட்டு நான்கு வயது சிறுமி மரணமடைந்ததுடன் மற்றய சிறுமி உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். கைது செய்யப்பட்ட சாரதி நவம்பர் மாதம் 2…
-
- 0 replies
- 615 views
-
-
முதல் முத்தம்-கார்: நினைவில் இருப்பது எது? பிரிட்டிஷ் இண்டர்நேஷனல் மோட்டார் கண்காட்சி அமைப்பாளர்கள் வித்தியாசமான ஒரு ஆய்வை நடத்தினார்கள். பொதுவாக மனிதர்கள் தங்கள் பெண் நண்பிகளுக்கோ / ஆண் நண்பர்களுக்கோ அளித்த முதலாவது முத்தம் ஞாபகமிருக்கிறதா? அல்லது தாங்கள் முதலாவதாக வாங்கிய கார் நினைவிருக்கிறதா? என்பதே அந்த ஆய்வு. பிரிட்டனில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பெரும்பாலான மனிதர்கள் தங்களின் முதல் முத்தத்தை விடவும், முதல் கார் பற்றி அதிகம் நினைவு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. 60 சதவீதம் பேர் தங்கள் காரை நினைவு வைத்திருந்ததாகவும், 25 சதவீதம் பேர் தங்களது காரின் பெயரை தெரிவித்ததாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. தங்களின் காதலன், காதலி, 18வது பிறந்த நாளைக் காட்டில…
-
- 46 replies
- 6.1k views
-
-
மாவீரர்களின் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தற்போது சிக்கலானதொரு காலகட்டத்தைச் சந்தித்திருக்கிறது என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், மாவீரர் நமக்கு விட்டுச் சென்ற இலட்சிய அரசியலை தார்மீகக் கடமையாக ஏற்று எமது அரசியற் தலைவர்கள் உண்மையுடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மாவீரர்கள் வேண்டும் இலட்சிய அரசியல என்பது, ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதற்கும், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகம் என்பதற்கும், நாம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதற்கும், அங்கீகாரம் தேடும் வகையில் எமது அரசியற் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதும், இவ் அடிப்படையில் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு க…
-
- 0 replies
- 403 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்கள் நவ்றூத் தீவில் ஆர்ப்பாட்டம் நவ்றூ தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதி தஞ்சக் கோரிக்கையாளர்கள் தம்மீதான விசாரணைகளை விரைவுபடுத்தி அவுஸ்திரேலிய அரசு தமக்கு தீர்வு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளனர். அல்லது தம்மை அவுஸ்திரேலிய பெருநிலப்பரப்புக்குள் உள்ள முகாம்களுக்கு மாற்றி அங்கு வைத்து தம்மீதான விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். கிறிஸ்மஸ் தீவிலிருந்து அண்மையில் நவ்றூ தீவிலுள்ள பரிசீலனை முகாமுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்கள் நேற்று அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அங்கிருந்து பேசிய இலங்கைத் தமிழர் ஒருவர் தெரிவித்தார். நவ்றூ தீவு முகாமில் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை வ…
-
- 0 replies
- 542 views
-
-
பயோடேற்ரா ஒரு பேப்பரிற்காக ஓவியம் கீறியவரிற்கு நன்றிகள். பெயர். போல் பொய்நேசன் வயது. எட்டுக்கழுதை வயசு தொழில். யாருக்குத்தெரியும் பொழுது போக்கு. அனைத்து தமிழர் நிகழ்வுகளிலும் பங்குகொள்ளுதல் நினைப்பு. இங்கிலாந்தின் பிரதமர் பிழைப்பு. உதவி மேயர் நண்பர்கள். இலங்கையரசின் புலனாய்வுத்துறையும்.ஒட்டுக்??ுழு உறுப்பினர்களும். ரசிப்பது. மாற்றான் தோட்டத்து மல்லிகையை ருசிப்பது. ஓசியிலை எது கிடைச்சாலும். பிடித்த பொருட்கள். மேடையும் மைக்கும். ப…
-
- 10 replies
- 2.8k views
-
-
நேற்று மாவீரர் தின நினைவஞ்சலிக்கு போவதற்காக அலுவலகத்தில் இருந்து அரை நாள் விடுப்பு எடுத்து இருந்தேன். விடுப்பு எடுப்பதற்கான காரணமாக tamil martyrs day இற்கு போவதாகக் கூறி இருந்தேன். காரணத்தினை சொல்லும் போது ஒரு வித மனத் திருப்தியும் மனதுக்குள் வந்து போனது. என்னுடன் வேலை செய்கின்றவர்களில் இருவர் இந்தியர்கள். அதில் ஒருவர் மலையாளி (28 வயது இளைஞன்). அவருக்கு இது புதிய விடயமாக இருந்தது. ஏன் மாவீரர் தினம் அனுட்டிக்கப்படுகின்றது என விளக்கமளிக்க எனக்கு நேற்று நேர அவகாசம் இருக்கவில்லை. தான் கனடாவில் மூன்று வருடங்களுக்கும் மேலாக இருப்பதாகவும் தனக்கு இது ஒவ்வொரு வருடமும் நடப்பது தெரியாது என்றும் கூறி இருந்தார். அத்துடன் கனடா வர முதல் 5 வருடங்கள் இங்கிலாந்தில் வசித்ததாகவும், அங்க…
-
- 28 replies
- 2.7k views
-
-
கனடா தலை நகர் ஒட்டாவாவில் வருகிற 4ம் திகதி விழிப்பு பேரணி
-
- 2 replies
- 1.3k views
-
-
https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx https://www.tamilsagainstgenocide.org/Donate.aspx
-
- 1 reply
- 1k views
-
-
ஒன்ராரியோவின் டுறம் பிராந்தியத்தில் உள்ள விற்பியில் வசித்து வந்த கார்த்திக் மணிமாறன் எனும் தமிழர் ஒருவர் குழந்தைகளின் ஆபாசப் படங்களை சமூக வலைத்தளங்களின் மூலம் தரவேற்றி பரப்பினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளார். குழந்தைகளின் ஆபாசப் படங்கள் தொடர்பான கனடிய தேசிய குற்றப்பிரிவின் தகவல்களை அடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் இவை கைது செய்துள்ளனர். கைது செய்யும் போது சிறுவர் ஆபாச படங்கள் எடுப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பல இலத்திரனியல் கருவிகளையும் கைப்பற்றியுள்ளனர். இவர் 2020 இல் இருந்து Snapchat, TikTok, Omegle, Likee மற்றும் KIK Messenge போன்ற சமூக வலைத்தளங்களில் dirtyboy, dirtyboui, Daddy Dirty, Virus Redbeast and Rock Shan Rock ஆகிய மற்றும் இதையொத்த பய…
-
- 18 replies
- 2.3k views
-
-
கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு கனேடியத் தமிழர் கொல்லபப்ட்டுள்ளார்.இறந்த நபர் 38 வயதுடைய சுரேந்திரா வைத்திலிங்கம் என போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். இவருக்கு 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. மார்பிலே குண்டுகள் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இவர் கொல்லபட்டுள்ளார். இதை பற்றி மேலும் தெரியவருவது யாதெனில், இன்று மாலை 3 மணியளவில் (May 30, 2013) தன்னுடைய வீட்டு பின்புறத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது வாகனத்தில் வந்த மூவரே இந்த துப்பாக்கி தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த துப்பாக்கி தாக்குதலுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவரவில்லை என்றபோதும் 3 பேர் கொண்ட குழுவே வந்து தாக்குதல் நடத்தியதாகவும், நடத்தியவர்கள் இவரையே குறிவைத்து வந்து தாக்கி…
-
- 10 replies
- 1.7k views
-