Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரான்சில் இருந்து தேர்வாகிய பிரதிநிகளில் ஒரு தொகுதியினர் மே 13 வியாழக்கிழமை அன்று கருதுப் பகிர்வொன்றை நிகழ்த்தினர். நாடு கடந்த தமிழீழ அரசுக்கான முதல் அமர்வு குறித்தும் - எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் மேலும் அனைவரது பங்களிப்போடு நாடு கடந்த தமிழீழ அரசினை பலப்படுத்துவது குறித்துமான தொடர் கருத்துப்பகிர்வுகளின் தொடக்கமாக இச்சந்திப்பு அமையப்பெற்றிருந்தது. இம்முதல் கருத்துப்பகிர்விற்கு ஒரு தொகுதி பொது அமைப்பு பிரதிநிதிகள் சமூக செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நாடு கடந்த தமிழீழ அரசு குறித்தான புரிதலை செயற்பாடுகள் ஊடாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வது - தமிழர்களின் சனநாயக அரசியல் முன்னெடுப்பை வலுப்படுத்த கல்விசார் இள…

  2. நாட்களைக் கடத்தும் தமிழீழ அரசு (நா.க.த.அ) சாத்திரி (ஒரு பேப்பர்) புலிகள் அமைப்பானது ஆயுதங்களை மௌனிப்பதாக விடுத்த அறிக்கையினை அடுத்து அந்த அமைப்பும் செயலிழந்து போனதன் பின்னர். உலகத் தமிழர்கள் அனைவருமே மிகுந்த எதிர் பார்ப்போடும் . நம்பிக்கைகளோடும் எதிர்பார்த்திருந்த நாடு கடந்த தமிழீழ அரசு தோற்றம் பெற்று இரண்டு ஆண்டுகள் கழிந்ததோடு மட்டுமல்லாது .அதன் மூன்று பாராளுமன்ற அமர்வுகளும் நடைபெற்று முடிந்துவிட்டன. இலங்கைத் தீவில் ஆயுதப் போர் முடிவிற்கு வந்ததுமே தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவும், சாத்வீக வழியிலான போராட்டங்களை நடாத்தி தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒரு அமைப்பு அவசியமானது அது நாடுகடந்த தமிழீழ அரசே என வலியுறுத்தி அந்த அமைப்பு உருவாகுவதற்கு மட்டுமல்…

    • 21 replies
    • 1.5k views
  3. இவ்வாறன பூஜைகளை நாம் அனைவரும் செய்வோமாக. தேவாலயங்களிலும் பிரார்த்தனைகள் ஒழுங்கு செய்வோமாக. அவரவர் தத்தம் இறைவனை வழிபட்டு அல்லலுறும் எம்மக்களுக்கு நல்ல தொரு சுபீட்ச்ச வாழ்வு கிடைக்க வேண்டுவோம்.

  4. நாட்டுப் பற்றாளர் அக்காச்சி அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு! On Jun 12, 2020 டென்மார்க் நாட்டில் கடந்த 08.06.2020 திங்கட்கிழமை மாரடைப்பால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் செல்வராசா பொன்னுத்துரை (அக்காச்சி – வயது 57) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு (11.06.2020) வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் டென்மார்க் VIBORG நகரில் இடம்பெற்றது. நாட்டுப்பற்றாளர் செல்வராசா பொன்னுத்துரை அவர்களின் புனித உடலுக்கு தமிழீழத் தேசியக் கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தின் அறிக்கையும்வாசித்தளிக்கப்பட்டதுடன் பல முக்கிய செயற்பாட்டளர்களின் இறுதிவணக்க உரைகளும் இடம்பெற்றன. https://www.thaarakam.com/ne…

  5. நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்களின் வீரவணக்க நிகழ்வு. இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு கீழ் பிராந்திய பொறுப்பாளர் நாட்டுப்பற்றாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் குஞ்சண்ணையின் வீரவணக்க நிகழ்வு 07/03/2021, 10,00 மணிக்கு பலெர்மோவில் நடைபெற்றது. இத்தாலி நாட்டில் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நடைமுறையில் இருக்கும் மிகவும் இறுக்கமான சூழ்நிலையில் பொதுமக்களின் வருகையை தவிர்த்து குடும்ப உறுப்பினர்கள் , தேசிய செயல்பாட்டாளர்கள் , இத்தாலிய அரசியல் பிரமுகர்களுடன் தமிழீழ தேசிய மாவீரர் பணிமனையின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது . இத்தாலி ஊடகங்கள், அரசியல் பிரமுகர்களின் சமூகவலைத்தளங்களிள் நாட்டுப்பற்றாளர…

  6. இனப்படுகொலைக்குள்ளான தமிழினத்திற்கும் தமிழீழவிடுதலைப் போராட்டத்திற்கும் அளப்பரிய பணிகளைச் செய்த தமிழீழத்தலைநகரான திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட வெண்புறா மூர்த்தி என அழைக்கப்பட்ட நமசியாயம் சத்தியமூர்த்தி கடந்த புதன்கிழமை பிரித்தானியாவில் இயற்கை எய்தினார். 1980களின் ஆரம்பத்தில் தமிழீழவிடுதலைப்புலிகளுடன் இணைந்து செயல்பட்ட மருத்துவர் மூர்த்தி அவர்கள் சிறிலங்கா அரசால் கைது செய்யப்பட்டு சித்தரவதைக்குள்ளாக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து தமிழ்நாட்டடில் விடுதலைப்போராத்திற்காக பணியாற்றிய நாட்டுப்பற்றாளர் மூர்த்தி அவர்கள் தமிழீழத்தேசியத்தலைவரால் தமிழர் புனர்வாழ்வுகழகம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் தொடக்ககால உறுப்பினர்களில் ஒருவராகவும் இணைந்து பணியாற்றினார். 1987ம் ஆண்டுப்பகுதியில்…

    • 3 replies
    • 510 views
  7. நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு. Posted on October 23, 2025 by சமர்வீரன் 342 0 யேர்மனியின் தலைநகரில் நீன்டகால செயற்பாட்டாளர், நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் தலைநகரில் நடைபெற்றது. பல்முகத் தேசியச் செயற்பாட்டாளராகிய சிறியண்ணாவுக்கு பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தங்கள் இறுதிவணக்கத்தை உணர்வு பூர்வமாகச் செலுத்தினர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளையின் ஆளுகைக்கு உட்பட்டு யேர்மனியின் பேர்லின்மாநிலத்தின் நகரப் பிரதிநிதியாகவும் பல்முகச் செயற்பாட்டாளராகவும் பணியாற்றிக் கடந்த 12.10.2025 அன்று உடல்நலக் குறைவினால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் யேகராசா…

    • 0 replies
    • 280 views
  8. நாட்டை முடக்கிவிட்டு நடந்த விருந்து: மன்னிப்புக் கோருகிறார் ஜோன்சன் பதவியை இழக்கும் இக்கட்டில் அவர் பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா பொது முடக்க காலத்தில் நாட்டு மக்களை வீடுகளில் அடைத்து விட்டுத் தனது டவுணிங் வீதி அலுவல கத்துக்குப் பலரை அழைத்து ஒன்று கூட்டி விருந்துபசாரம் நடத்தினார் எனக் கூறப்படுகின்ற விவகாரம் அவரது பதவிக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. அரசியலில் சூடுபிடித்திருக்கின்ற இந்த விருந்து தொடர்பில் பிரதமர் ஜோன் சன் முதல் முறையாகத் தனது மன்னிப் பை வெளியிட்டிருக்கிறார்.உத்தியோக ரீதியான ஒரு கூட்டம் என்று எண்ணியே பலரை அங்கு அழைத்ததாக அவர் ஒப் புக்கொண்டிருக்கிறார்.நோய்த் தடுப்புப் பணிகளை நிர்வகிக்கின்ற தனது அதிகாரிகளை உற்சாகப்…

  9. என் வீட்டிலிருந்து கொஞ்சத் தூரம் சென்றால் அந்தப் பெருவெளி கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பரந்து விரிந்திருந்தது. அந்த வெளியின் நடுவே புற்களைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால் சுற்றிவர பெரு மரங்கள் கிளைபரப்பி கோடையில் இலைகள் நிறைந்துபோய் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமான காட்சி. காலையில் நடப்பது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் விரும்பியோ விரும்பாமலோ செய்யவேண்டிய ஒரு கடனாக மாறியிருந்தது. எனக்கு மற்றவர்களுடன் சேர்ந்து நடப்பதும் சரிவராது. ஏனெனில் எப்படியும் இருவர் அமைதியாக நடக்கவே முடியாது. ஏதாவது ஒரு கதையில் ஆரம்பித்து மற்றொன்றில் தாவித் தொடரும். நான் இரு கைகளையும் அரைவாசி தூக்கியபடி விசுக் விசுக்கென நடக்கத் தொடங்கி இருப்பது ஆண்டுகளாவது ஆகியிருக்கும். எப்போதுமே மற்றவர்களுக…

  10. எனக்கு உந்தப் பூங்கன்றுகளில விருப்பம் எண்டு உங்களுக்குத் தெரிஞ்சது தானே. வீட்டோட சேர்த்து பூக்கண்டுகளுக்கு ஒரு கொன்சேவேற்றி கட்டவேணும் எண்ட என் நீண்டநாள் கனவு இந்த ஆண்டுதான் நிறைவேறினது. குளிர் தொடங்கினாலும் அதுக்குள்ளே வச்ச கண்டுகள் எல்லாம் இப்பவும் பூத்துக் குலுங்குறதை காலையில் எழுந்து போய்ப் பார்த்து சந்தோசப்பட்டுகொண்டு இருந்த எனக்கு வெள்ளிக்கிழமை வந்த கவுன்சில் கடிதம் இடியை இறக்கிச்சுது. என்ன பிரச்சனை எண்டா, இங்க மேலதிகமாக கட்டடம் கட்ட வேணும் எண்டால் கவுன்சிலில அனுமதி எடுத்து பிளானிங் பெமிசன் எடுத்து வரைபடம் வரஞ்சு கொடுத்து அதுக்குப் பிறகுதான் கட்டலாம். எங்கடைஆட்கள் பற்றித் தெரியும் தானே. £450-500 எடுக்கிறவை ப்ளான் கீற. கட்டினபிறகும் கவுன்சிலில இருந்து ஒரு பொறிய…

  11. நானும் போனனான். சாத்திரி ஒரு பேப்பரிற்காக நவரச உணர்வுகளிலை ஒரு நாலைஞ்சு ரச உணர்வுகளை எனக்குள்ளை ஏற்படுத்தின ஒரு நிகழ்சி அதுக்கு நானும் போனான் அதைப்பற்றித்தான் எழுதவாறன்.கடந்த 26 .சித்திரை சனிக்கிழைமை இலண்டனிலை நடந்த சர்வதேச ஊடகவியலாளர் ஒன்றியம் நடத்தியிருந்த .ஊடகமும் இலங்கை முரண்பாடும் உண்மை எங்கே..என்கிற தலைப்பிலை நடந்த நிகழ்விற்கு எனக்கும் அழைப்பிதழ் கிடைச்சிருந்தது.இப்ப நாலுபேர் ஒண்டாய் சேந்து கதைக்கிறதையே பலர் மகாநாடு எண்டுதான் விளம்பரப்படுத்தினம் அதாலைதான் நான் இதை மகாநாடு என்று எழுதாமல் நிகழ்வு எண்டு எழுதினனான்.அந்த நிகழ்விற்கு ஊசலாடல்வியலாளனான என்னையும் ஒரு ஊடகவியலாளன் எண்டு மதிச்சு எனக்கு அழைப்பிதழ் அனுப்பிருந்ததை பாத்ததும் எனக்கு மூளை முழங்கால் புரிய…

    • 5 replies
    • 1.8k views
  12. சொத்துப் பிரிக்கும் போது குடும்பங்களுக்குள் அடிதடி, வெட்டுக்குத்து என்று சண்டைகள் நடப்பதுண்டு. அதற்காக நீதிமன்றம் போய் அங்கே ஒரு தீர்ப்புக் கிடைத்தாலும் அதன் பிறகும் அவர்களது சண்டைகள் சில இடங்களில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். வாதியும் பிரதிவாதியும் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தால் கூட அது நீதிமன்ற வளாகமானாலும் வாய்த் தர்க்கமோ அல்லது கைகலப்போ அல்லது ஒருவருக்கு ஒருவர் முறைத்துக் கொள்ளும் நிலையோ கண்டிப்பாக இருக்கும். இதையெல்லாம் தமிழக சினிமாக்களில் காட்சிகளாகவும் அடிக்கடி நாங்கள் பார்ப்பதால் எங்களுக்கு இது பழகிப் போன ஒன்று. ஆனால் இவற்றை எல்லாம் பார்க்கும் யேர்மனியருக்கு இது புதிதாக இருக்கும். பொதுவாக அவர்கள் வெளிப்படையாக சட்டத்தை மதிப்பவர்கள் மட்டுமல்ல சட்டத்துக்க…

    • 13 replies
    • 2.2k views
  13. பாடகி தீயின் புதிய பாடல், பாடல் முழுவது யாழ்ப்பாணத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  14. எனக்கு இப்ப கொஞ்ச நாட்களாகவே யாழ்இணையத்துக்கு வர விருப்பமே இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வரவேண்டும் வரவேண்டும். ஏதாவது எழுதவேண்டும் என்று எத்தனையோ முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை. எனக்கு யாழில் யாருடனும் பகையும் இல்லை. மனம் முழுவதும் எதோ வெறுமை சூழ்ந்தது போலவே எந்நேரமும் உள்ளது. என் மனதை எப்படியாவது பழைய நிலைக்குக் கொண்டுவர முயன்றும் முடியவில்லை. முகப்புத்தகத்தில் மனதைத் திருப்பினாலும் அதுகூட ஆர்வமாக இல்லை. என்ன செய்யலாம்??????????

  15. நான் ஏன் நாடுகடந்த அரசு தேர்தலில் நிற்கின்றேன்? திருச்சோதி அவர்கள் முள்ளிவாய்காலில் எல்லாவற்றையும் முடித்துவிட்டோம் என்று சிங்கள அரசு ஒரு புறமும், உலகநாடுகள் மறுபக்கமும் கூறிக்கொண்டீருந்த நேரத்தில் புலம்பெயர் நாடுகளில் எம்மக்கள் மனத்தளர்வுடன் தாம் செய்த போராட்டங்கள் மூலம் எம் தாய் மண்ணை காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலைகளுடன் இருந்த போது அங்கே முகாம்களிலும், சிறைகளிலும், வதைமுகாம்களிலும் வாடும் எம்மக்களுக்கு குரலாகவும் அங்கே அழிக்கப்பட்ட அரசை மீண்டும் கட்டியயெழுப்பவும் புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் தமிழீழ தேசியக்கட்டமைப்புகளை உருவாக்கி அதன் முலமாக நாம் வாழும் நாடுகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் எமது அரசியல் வேலைத்திட்டங்களை செயல்படுத்தும் முகமாக மே 26ம் திகதி…

  16. Beefsteak செய்யலாம் என்று மாட்டு இறைச்சி வாங்கி வந்திருந்தேன். Steakக்கு இறைச்சி நல்லதாக இருக்க வேண்டும் என்பதால் பண்ணைக்கு நேரடியாகவே போய் இறைச்சியை வாங்கி இருந்தேன். கொஞ்சம் காசு அதிகம்தான். Steakக்குக்கு Red wine sauce செய்வதற்காக சந்தையால் வரும்போது red wineம் வாங்கிக் கொண்டு வந்தேன். பொதுவாக wine sauce செய்வதற்கு நல்ல தரமான wine தேவை என்றில்லை. ஆனாலும் நான் தரமான Weinஐயே வாங்கி வந்திருந்தேன். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. Sauceக்குப் போக மீதமான wineஐ வாய்க்குள்ளேயும் ஊத்திக் கொள்ளலாம் என்ற ஒரு ஆசைதான். அரத்தை எடுத்து கத்தியை தீட்டிக் கூராக்கும் போதே அருகில் இருந்த இன்ரநெற் வானொலியைத் தட்டிவிட்டேன். கிளாஸுக்குள் றெட் வைன். தீட்டிய கத்தி. அழகாக வ…

  17. உடன் பிறப்பே! இணையத்தில் என்னைப்பற்றி வரும் செய்திகளை நீயும் படித்திருப்பாய் என்று நம்புகிறேன். கருணாநிதி ஒரு துரோகி, முதுகில் குத்துபவன் என்றெல்லாம் இவர்கள் பேசுவதை கேட்கும்போது, தமிழினத்திற்கே என்னை தாரை வார்த்திட்ட நீண்ட நெடும் பயணங்களை, அறிஞர் அண்ணாவின் பாதையை பின் பற்றி என் ஈழத்து ததம்பிகளை காக்க நான் மேற்கொண்ட இடைவிடா முயற்சிகளை சற்றே எண்ணிப்பார்க்கிறேன். இலங்கையிலே எம்மினம் படும் துயர்களை எல்லாம் கேள்வியுற்று இன்று நீ கலங்குவதை போலவே நானும் கலங்கினேன். அய்யகோ, என் செய்வேன், அன்று நான் முதல்வர் நாற்காலியில் இல்லை. இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? வேதனையில் வெம்பினேன். துடித்தேன். துவண்டேன். கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக, வரைந்திட்டேன் உனக்கொரு மடல…

  18. இரண்டாவது உலக யுத்தத்தின் போது நான் வசிக்கும் நகரமான Schwäbisch Hall, அந்த மாநிலம் முழுவதற்குமே உணவுப் பொருட்களை வழங்கியது மட்டுமல்லாமல் குண்டுத் தாக்குதலுகளுக்குத் தப்பிய ஒரு அழகான நகரமும் கூட. ஒரு சிறிய நகரமானாலும் தனது கடந்த கால கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள், விளையாட்டுக்கள் கலைகள்,கலாச்சாரங்கள் என எல்லாவற்றையும் காத்து அதை இன்றும் பேணி வருகிறது. நான் இருப்பது சின்ன நகரம் என்பதாலோ என்னவோ ஒரே ஒரு தமிழ்க்கடை மட்டும்தான் இருக்கிறது. பணப் பரிமாற்றங்களால் பெருமளவளவில் இலாபம் கிட்டுவதால் பொருட்களை கொள்வனவு செய்வதில் முதலாளி அம்மாவுக்கு அவ்வளவு நாட்டம் இல்லை. ஏதாவது மனதுக்கு விருப்பமானதை சமைத்து சாப்பிட விரும்பி அந்தப் பொருளைக் கேட்டால், “முடிஞ்சுது அண்ணை. வியாழக்கிழ…

  19. கிட்டத்தட்ட 190ற்கு அதிகமான நாடுகள் இந்த உலகத்தை பிரித்தாளுகின்றன. ஜரோப்பாவின் இதயப்பகுதியில் 8.5 மில்லியன் மக்களுடன் அமைந்திருப்பது தான் சுவிட்சர்லாந். உத்தியோகபூர்வமான பெயர்: சுவிஸ் கூட்டமைப்பு குறியீடு: Confoederatio Helvetica வேறு பெயர்கள்: Schweiz, Suisse, Svizzera, Svizra சுவிசில் நான்கு மொழிகளும் நான்கு கலாச்சாரங்களும் உள்ளன. 4இல் 3பேர் ஜேர்மன் மொழி (Orange நிறம்) பேசுகிறவர்கள். மேற்கு பகுதியினர் பிரெஞ் மொழி பேசுபவர்கள் (பச்சை நிறம்). றேத்தோறோமான்ஸ் (Rätoromans) ஒரு குறுகிய நிலப்பரப்பில் 1வீதம் மக்களால் பேசப்படுகின்றது.(ஊதா நிறம்) கொசுறு செய்தி: இவர்கள் FC Raetia என்று ஒரு உதைபந்தாட்ட அணியை அங்கிகரிக்கப்டாத நாடுகளின் உதைபந்தாட்ட போட்டியில…

    • 9 replies
    • 1.9k views
  20. நான் வாழும் சுவிஸ் - அஜீவன் எதிரிகள் புகா வண்ணம் காவல் தெய்வங்கள் காவல் காத்து நிற்பது போல் நாட்டை சுற்றி நிற்கும் அழகிய அல்ப்ஸ் மலை மட்டுமல்ல மனதின் இனிமைக்காய் இசை எழுப்புவது போல சல சலத்து ஓடி பவனி வரும் ஆறுகளாலும் புடை சூழ்ந்து நின்று ரம்மிய காட்சியாய் எம் மனங்களை கொள்ளை கொள்ளும் குளங்களும் இயற்கை வனமும் நாடு தழுவிய சுத்தமும் நிறைந்து யுத்த மேகமே மூளாமல் சிலிர்த்து காட்சி தரும் நாடு என்று உலகில் ஒன்று உண்டு என்றால் அது சுவிஸ் நாடாகத்தான் இருக்கும். நாட்டுப் பற்றுக் கொண்ட இனிய மக்கள் எளிமை போல் நாட்டின் முதுகெலும்பாய் காட்சி தரும் கிராமங்கள். நேரம் தவறாமல் பவனிக்க உதவியாய் இருக்கும் போக்கு வரத்து துறை இப்படி இந் நாட்டின் புகழ் பாடிக் கொண்டே போக…

    • 33 replies
    • 6.5k views
  21. வணக்கம் உறவுகளே! அண்மையில் "எனது ஊர் இலக்கணாவத்தை" http://www.yarl.com/forum3/index.php?showtopic=69896 என்ற தலைப்பில் ஒரு பதிவை இணைத்து உங்களது வரவேற்பை பெற்றுக்கொண்ட நான் உங்களது ஊக்குவிப்பினால் இன்று "வாழும் புலம்" பகுதியில் "நான் வாழும் மண்" என்ற தலைப்பில் நாணறிந்த சில விடயங்களை பதிவு செய்து எனக்கு தெரியாத விடயங்களை உங்களிடம் இருந்து பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். என்னால் இங்கு தரப்படும் தரவுகள் அண்ணளவானவையே தவிர, உறுதியானவை அல்ல. நான் வாழும் இடம் கனடாவில் (Canada) ஒன்ராறியோ(Ontario)மாநிலத்தில் North பக்கமாக Brampton என்ற இடமாகும், இது Toronto வில் இருந்து கிட்டத்தட்ட 40கிலோமீற்றர் தூரமாகும். இங்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வதிவிடமாக கொண்டுள்ள…

  22. நான்கு வயது சிறுமியின் உயிரை பறித்த தமிழ்பெண் வாகன சாரதி கைது. Mohanay October 23, 2015 Canada கனடா- 39-வயதுடைய மார்க்கத்தை சேர்ந்த தமிழ்பெண் சாரதி ஒருவர் ஆபத்தான முறையில் வாகனமோட்டி இறப்பு மற்றும் அபாயகரமான முறையில் வாகனத்தை செலுத்தி உடலிற்கு தீங்கு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டார். வியாழக்கிழமை பிற்பகல் நான்கு வயது சிறுமி ஒருத்தி பாடசாலையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் வாகனமொன்றினால் மோதப்பட்டு கொல்லப்பட்டாள். சிறுமியும் அவளது 7வயது சிறுமியும் எஸ்யுவி வாகன மொன்றினால் இடிக்கப்பட்டு நான்கு வயது சிறுமி மரணமடைந்ததுடன் மற்றய சிறுமி உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். கைது செய்யப்பட்ட சாரதி நவம்பர் மாதம் 2…

  23. நாப்டா ஒப்பந்தத்தில் சீர்திருத்தம் – அமெரிக்கா, கனடா உடன்பாடு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிடையே தடையில்லா வர்த்தகம் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறுவதற்காக கடந்த 1994ம் ஆண்டு ‘வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்’ (நாப்டா) அமல்படுத்தப்பட்டது. ஆனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்தார். மிக மோசமான ஒப்பந்தங்களில் இதுவும் என்று என கூறிய அவர், தற்போதையை சூழலில் நாப்டா ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு எந்த நன்மையும் இல்லை என தெரிவித்தார். மேலும் இந்த ஒப்பந்தத்தில் தனக்கு திருப்தியளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யாவிட்டால் நாப்டா ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என டிரம்ப் அறிவித்தார். இத…

    • 0 replies
    • 572 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.