நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
802 topics in this forum
-
வாசிப்பு என்பது எழுத்தாளனின் திறமைக்கப்பால் வாசகனின் மனநிலையிலும் தங்கியுள்ளது. அதுவும், வாசகன் ஓரு நூலினை வாசிப்பதற்கு முன்னதாக என்ன நூலினை வாசித்தான், நூல் வாசித்துக் கொண்டிருக்கையில் வாசகனின் வாழ்வின் நகர்ச்சி எவ்வாறு இருந்தது எனப் பல விடயங்கள் ஒரு வாசிப்பினை நிர்ணயிக்கின்றன. எதிர்பாரா விதமாக, நிக்கலோ மக்கியவேல்லியின் 'த பிறின்ஸ்' நூலினை வாசித்து முடித்த கையோடு கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவலினை வாசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஒன்றோடு மற்றையது முற்று முழுதாக முரண்படும் இவ்விரண்டு நூல்களோடும் எனக்கு உடன்பாடு உணரப்பட்டபோது, சில நாட்கள் அது பற்றிச் சிந்திக்கத்தோன்றியது. அவ்வாறு சிந்தித்தபோது ஒரு பதிவிடத்தோன்றியதால் இப்பதிவு. இந்த மாபெரும் நூல்கள் இரண்டையு…
-
- 28 replies
- 3.9k views
-
-
படம்: இயான் லாக்வுட் சீனாவில் 2,500 ஆண்டுகளுக்கு முன்னால் லாவோ ட்சு என்பவரால் எழுதப்பட்டது ‘தாவோ தே ஜிங்’. இந்நூலே தாவோயிசத்துக்கு அடிப்படை. கன்பூசியஸைவிட 50 வயது மூத்தவரான லாவோ ட்சு சீனத் தலைநகரில் ஆவணக் காப்பாளாராகப் பணிபுரிந்தார். அரசியல் நிலைமை மோசமானதால் பதவி விலகினார். இவர் தலைமறைவாகப் போக எண்ணி எல்லையைக் கடக்கும் முன் எல்லைப்புற அதிகாரி இவரை வற்புறுத்தி ஏதாவது எழுதித் தரச் சொன்னதால், இவர் 5,000 சித்திர எழுத்துகளில் ‘தாவோ தே ஜிங்’ எழுதியதாகத் தெரிகிறது. இவரைப் பற்றி நிலவும் பலகதைகளில் ஒன்று இது. ‘தாவோ’ என்பதற்குப் பல பொருள்கள், அவற்றுள் இந்த நூலின் தலைப்புக்குப் பொருத்தமானது ‘வழி’ என்னும் பொருள். ‘தே’வுக்கு ‘நேர்மைக்கு உந்துதல் அல்லது ஊக்கம் தேவை’ எ…
-
- 0 replies
- 2.1k views
-
-
1973இல் மூலஸ்தானம் என்ற சிறுகதையோடு எழுத்துத்துறைக்குள் கால்பதிக்கும் ஸ்ரீதரனின் எழுத்துலகப் பயணம் நின்றும் தொடர்ந்தும் ஒரு 40 ஆண்டுகாலப் பயணத்தைக் குறித்துநிற்கிறது.பேராதனைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்த தரிசனங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற ஸ்ரீதரனின் முதல் கதையான மூலஸ்தானம், பிறந்த மென்சூட்டுடன் பேராசிரியர் க. கைலாசபதியின் சிலாக்கியம் பெற்ற கதையாகும். இவரின் சொர்க்கம் என்ற நீண்டகதை திசையில் வெளிவந்தபோதே க. சட்டநாதன், அநு. வை. நாகராஜன் ஆகிய எழுத்தாளர்களின் சிறந்த பாராட்டினைப் பெற்றிருக்கிறது. லண்டனிலிருந்து இ. பத்மநாப ஐயர் வெளியிட்ட இலக்கியத் தொகுப்புகளில் இவரின் பின்னைய ஆக்கங்கள் இடம்பெற்று, புகலிட இலக்கியத்திற்குப் புதிய பரிமாணங்களைச் சேர்த்திருக்கின்றன. ஆனால் …
-
- 0 replies
- 968 views
-
-
இன்று லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் தமிழீழமும், இந்தியாவின் பாதுகாப்பும் என்கின்ற நூலின் அறிமுகவிழா சிறப்பாக இடம்பெற்றது. இதில் ஆய்வாளர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். பிரதானசுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் 29-11-14 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நிகழ்வு ஆரம்பமானது. தமிழீழமும் இந்தியாவின் பாதுகாப்பும் என்ற நூலின் வெளியீட்டுரையினை ஆய்வாளர் திரு.திபாகரன் அவர்கள் தலைமையேற்று ஆற்றினார். இந்நூலின் சிறப்புரைகளை அரசியல் ஆய்வாளர் திரு.காதர், மூத்த ஊடகவியலாளர் திரு.சிவா சின்னப்பொடி, ஒரு பேப்பரின் ஆசிரியர் திரு.கோபிரட்ணம், நாடுகடந்த தமிழீழ அரசின் முந்நாள் உதவிப்பிரதமர் திரு. தயாபரன் ஆகியோர் நிகழ்த்தினர். இந்நூலின் சிறப்புப்பிர…
-
- 0 replies
- 698 views
-
-
ஸலாம் அலைக் : ஒரு கிளைக்கதை by அரவின் குமார் 2009 இல் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நிகழ்ந்த உச்சக்கட்டப் போர் காட்சிகளை நாள்தோறும் காலையில் ஒளிப்பரப்பாகும் மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்துக் கொண்டிருப்பேன். அதை போல, செய்தித்தாள்களிலும் போர் குறித்த செய்திகளை வாசித்துக் கொண்டிருப்பேன். இனம்புரியாத சோகமும், பீறிட்டு வரும் சினமும் எனக் கொஞ்ச நேரத்துக்கு மாறி வரும் உணர்வலைகளிலிருந்து மீண்டிருக்கிறேன். அந்த நேரத்து உணர்வைக் கலைக்கும் எதனையும் குற்றவுணர்வாகக் கூட கற்பனை செய்திருக்கிறேன். பின்னாளில், ஷோபா சக்தியின் நாவல்களைப் படிக்கிற போதுதான், இலங்கையில் நிகழ்ந்த போராட்டத்தைப் பற்றிய மாற்றுப்பார்வைத் தெளியத் தொடங்கியது. தனிந…
-
- 0 replies
- 218 views
-
-
A bloodstained label Stuck to his lapel Reads: In... Does it mean 'Indian, Informer, Intruder, Insurgent?' It bewilders to make it read 'Innocuous Innocent.' சொந்த ஊர், சொந்த மண் என்பது அங்கே இருக்கும் உங்கள் வீடு மட்டுமானது அல்ல. அல்லது அந்த ஊரில் உங்களுக்கு இருக்கும் நிலங்கள், சொத்துக்கள் என்பவையும் அல்ல. அங்கே குடியிருக்கும் உங்கள் உறவினர்களோ, நண்பர்களோ அல்ல. காலம் காலமாக அந்த மண் சந்தித்து வரும் மாற்றங்கள், இழந்து வரும் புராதனங்கள், எதிர்கொள்ளும் துயரங்கள், அமிழ்த்தி வைக்கப்பட்ட சோகங்கள்... இவைகளினூடே இருக்கும் ஒடுக்கப்படல் நிகழ்வுகளும், விடுதலைக்கான கனவுகளுமாகச் சேர்ந்து புவிப்பரப்பில் தனக்கான எல்லைகளை வரைந்து கொண்டு மதம், இனம், கலாச்சாரம் போன்ற…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழ்நாட்டிற்கு வெளியிலிருக்கும் தமிழ் எழுத்தாளனுக்கு எழுத ஏராளமான கதைகளிருக்கின்றன! லக்ஷ்மி சரவணக்குமார்: தற்போது தமிழில் இயங்கிவரும் குறிப்பிடத்தகுந்த இளம்படைப்பாளிகளில் ஒருவர். நீல நதி (2009), யாக்கை (2010), வசுந்தரா என்னும் நீலவர்ண பறவை (2011), மச்சம் (2012), மயான காண்டம் (2015), யானை (2015) தேர்ந்தெடுத்த கதைகள் ஆகியவை இதுவரை வெளியான சிறுகதைத் தொகுப்புகள். 2013 ல் வெளியான மோக்லியைத் தொலைத்த சிறுத்தை– இவருடைய கவிதைத் தொகுப்பு. உப்புநாய்கள் (2011), கானகன் (2014), நீலப்படம் (2015) ஆகியவை இவர் எழுதிய நாவல்கள். திரைத்துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றிக்கொண்டே இலக்கியத்திலும் தொடர்ந்து இயங்கி வருபவர். உப்புநாய்கள் நாவலுக்காக 2012 ஆம் ஆண்டு சுஜாதா விருது பெற்றவர…
-
- 0 replies
- 497 views
-
-
எனது கனவு நனவாகி நூல்களாகி வந்துள்ளது. நான் எழுத ஆரம்பித்ததும் என் எழுத்து மெருகேறியதும் யாழ் களத்திநூடாகத்தான். அதனால் முதலில் எனக்குத் தளமாக இருந்த யாழ் இணையத்துக்கும் என் எழுத்துக்கு ஊக்கம் கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.
-
- 36 replies
- 2.5k views
-
-
எனது மூன்றாவது சிறுகதைத் தொகுதி தயாராகிறது. அட்டைப்படத்தை வடிவமைத்துத் தந்தவர் மூணா அண்ணா. அவருக்கு நன்றி. நிறம் தான் சிறிது மாறிவிட்டது. என்னுரை பத்து ஆண்டுகளின் முன்னர் என் முதலாவது சிறுகதைத்தொகுதியும் நான்கு ஆண்டுகளின் முன் என் இரண்டாவது சிறுகதைத்தொகுதியும் வெளிவந்தபின் ஐந்து ஆண்டு ஆண்டுகால இடைவெளியில் மூன்றாவது தொகுதி வெளிவருகிறது. பெண்களால் தொடர்ந்து எழுத முடியாதவாறு பல தடைகள் குடும்பச் சூழலில் இருந்தாலும் அதையும் தாண்டி நான் காண்பவற்றை, கேட்பவற்றை எழுதும் ஆற்றல் எனக்குள்ளும் இருக்கின்றது. யாரின் புக…
-
-
- 19 replies
- 1.4k views
- 2 followers
-
-
'அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்': நூலுரையாடல் 'Fear: Trump in the White House' என்கிற நூல் வெளிவந்து ஓராண்டு கூட ஆகவில்லை. 2 மில்லியன் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்துவிட்டது. இதில் முதல் ஒரு மில்லியன் முதல் வாரமே விற்றது. இப்போது அடுத்த தேர்தலுக்கு சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் இந்த நூலைப் பற்றிய பேச்சு மீண்டும் கூடும். டிரம்ப் அரசு எப்படிப் பட்டது, டிரம்பும் டிரம்பின் ஆட்களும் எப்படிப் பட்டவர்கள் என்பதை அவர்களுடனேயே பேசி வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வேலையைச் செய்திருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் பாப் வூட்வர்ட் (Bob Woodward). பாப் வூட்வர்ட் யார்? இவர் ஓர் எழுபது வயதுக்கும் மேலான, அமெரிக்க அரசியலைப் பழம் தின்று கொட்…
-
- 0 replies
- 702 views
-
-
90களின் முற்பகுதியில் எழுத்து தமிழ் ஊடகங்களின் வளர்ச்சி ஐரோப்பாவில் கோலோச்சிய காலம். செய்திகளை அறிந்து கொள்வதற்கான ஒரே வழியாக எழுத்து ஊடகங்களும் அந்தந்த நாடுகளில் இயங்கிய புலிகளின் கிளைகளினால் இயக்கப்பட்டு வந்த தொலைபேசி வாயிலான செய்திச் சேவையுமே இருந்து வந்தன. அத்தகைய காலத்தில் பல வார, மாத சஞ்சிகைகளும் பத்திரிகைகளும் வெளிவந்த போதிலும் பரிசிலிருந்து வெளிவந்த 'ஈழநாடு' 'ஈழமுரசு' ஆகிய பத்திரிகைகள் அதிகளவு வாசகர்களைக் கொண்ட செய்தித்தாள்களாக இருந்து வந்தன. ஒவ்வொரு பதன் கிழமையும் இவ்விரு செய்தித்தாள்களும் அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும். பெரும்பாலும் மாலைக்குள் செய்தித்தாள் விற்றுத் தீர்ந்து விடும். நேரம் தவறிப்போனால் செய்தித்தாள் கிடைக்காது ஏ…
-
- 2 replies
- 564 views
-
-
அப்ப நான் அம்புலிமாமா, பாலமித்திராக்களின்ர அரச கதைககளையும், விக்கிரமாதித்தனும் வேதாளமும் படிச்ச காலத்தில, ஒருநாள் அம்மம்மா வீட்டில எடுத்த ஈழநாடு வாரமலரைப்பிரித்து சிறுவர் பக்கத்தைத் தேடும் போது கண்ணில பட்டது ஒரு தொடர்கதை. "கிடுகு வேலி" எண்ட தலைபோட செங்கை ஆழியான் எழுதின கதை தான் அந்த இதழில இருந்து ஆரம்பிச்சிருந்தது. முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/05/blog...og-post_18.html
-
- 15 replies
- 5.5k views
-
-
வாழ்நிலத்தை இழப்பது ஆர். அபிலாஷ் அ. முத்துலிங்கத்தின் “கடவுள் தொடங்கிய இடம்” நாவலில் விஸா இல்லாமல் கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு இடம்பெயர முயற்சிக்கும் ஈழ அகதிகளை ஒரு முகவர் உக்ரேனில் ஒரு வீட்டில் தங்க வைக்கிறார். அவர்கள் தம் பெரும்பாலான நேரத்தை சாப்பிடுவதில், தூங்குவது, ஒரே தமிழ்ப் படத்தை வீடியோ கேஸட்டில் திரும்பத் திரும்பப் பார்ப்பது என கழிக்கிறார்கள். அவர்களுடைய சமையலுக்கான கறி, மீன், காய்கனி உள்ளிட்ட பொருட்களை வாங்கும் பொறுப்பை கேயார் என்பவர் மேற்கொள்கிறார். துபாயில் வேலை செய்து அங்கிருந்து நாடுகடத்தப்பட்டு உக்ரெய்ன் வந்த புஷ்பநாதன் என்பவர் தன்னை வீரசைவ வேளாளர், ஊரில் பெரிய குடும்பம் என பெருமைப்ப…
-
- 0 replies
- 373 views
-
-
முதலில் என்னைப்பற்றி… விமர்சனம் எழுதிப்பழக்கம் இல்லை. விமர்சனத்தின் பார்வை எப்படி இருக்கவேண்டும் என்ற தெளிவான பார்வையும் என்னிடம் இல்லை ஆதலால் இங்கு நான் எழுதப் போகும் கருத்துகள் விமர்சனப்பார்வைக்குள் அடங்குமா இல்லயா என்றும் எனக்குத் தெரியாது. ஏனெனில் ஒரு படைப்பாளியின் ஆக்கல் பிரசவம் என்பது அவ்வளவு இலகுவானதல்ல. சிறுகதைகள் எழுதும் போதே திக்குமுக்காடும் நிலைகளும் அக்கதையைப்பல கோணத்தில் இருந்து பார்க்கும் பார்வைகளையும் திருப்திப்படுத்துவது என்பதும் எத்தகையது என்பதை அறிவேன் எனக்கும் அனுபவங்கள் உண்டு. ஒரு பெண்ணாகவும், ஒரு படைப்பாளியாகவும் பிரசவத்தின் அவஸ்தையை உணர்ந்திருக்கிறேன். இத்தகைய ஒரு நிலையிலிருந்தே எனது பார்வை இந்நாவலில் மீதான பார்வையாகப் படர்கிறது. “கரையைத் தேடும…
-
- 10 replies
- 2k views
-
-
அறிவும் அனுபவமும் : பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் கூத்த யாத்திரை நூல் - ஒரு பார்வை By Ravindramoorthy -கவிக்கோ வெல்லவூர்க் கோபால்- தேசியக் கலைஞர் சீ.கோபாலசிங்கம் அறிவும் அனுபவமும் : பேராசிரியர் சி.மௌனகுரு அவர்களின் கூத்த யாத்திரை நூல் - ஒரு பார்வை மட்டக்களப்புத் தேசத்தின் முதன்மையான கல்வியாளர்களுள் ஒருவராகத் திகழ்பவர் பேராசிரியர் மௌனகுரு அவர்கள். அவருடன் கடந்த ஆறு தசாப்தங்களுக்கும் மேலான நெருங்கிய தொடர்பு எனக்கு உண்டு. நான் 1957ல் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று வந்தாறுமூலை அரசினர் மத்திய கல்லூரிக்குச் சென்றபோது அவர் 9ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார். அன்றிலிருந்து அவருடன் ஏற்பட்ட அண்ணன் தம்பி எனும் ம…
-
- 0 replies
- 614 views
-
-
சாகித்திய அகாதெமி விருது 2013 2013 ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ஜோ டி குருஸ் - இன் 'கொற்கை' நாவலுக்குக் கிடைத்துள்ளது என்பதை வாசகர்களுடன் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறோம்.
-
- 3 replies
- 3.1k views
-
-
புகலிடத்து வாழ்வுக் கோலங்களில் எம்மை நாம் சுயவிமர்சனம் செய்துகொள்ளத்தூண்டும் புதினம். கருணாகரமூர்த்தியின் அனந்தியின் டயறி. Friday, 19 June 2015 23:18 - முருகபூபதி ஒருவர் மற்றும் ஒருவருக்கு எழுதிய கடிதம், ஒருவரின் நாட்குறிப்பு ஆகியனவற்றை மற்றவர்கள் பார்ப்பது அநாகரீகம் எனச்சொல்பவர்களுக்கு மத்தியில், சிலரது கடிதங்களும் நாட்குறிப்புகளும் உலகப்பிரசித்தம் பெற்றவை என்பதையும் அறிந்து வைத்திருக்கின்றோம். காந்தியடிகளின் நாட்குறிப்பு, நேரு சிறையிலிருந்து தமது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் என்பன உலகப்பிரசித்தம். தினமும் நிகழும் சம்பவங்களை குறித்து வைப்பதற்காக அறிமுகமான Diary ( Daily record of event) தமிழில் மட்டுமன்றி பிறமொழிகளிலும் அ…
-
- 1 reply
- 517 views
-
-
[size=6]பின்நவீனத்துவம் – ஓர் அறிமுகம்[/size] புத்தகம் எனும் நான்கு கரை ஆற்றில் வலப்பக்கமும். இடப்பக்கமும் எல்லாமும் பார்த்துக்கொண்டு எதிலும் கலக்காமல் நிற்கும் ஒல்லிப் பனைகள் வரிசையில் - தேவதச்சன் “பின் நவீனத்துவம்” என்ற வார்த்தையை இன்றைய சூழலில் ஒருவர் தன் விருப்பத்திற்கேற்ப எந்த அர்த்தத்திலும் பயன்படுத்தலாம் என்றாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் “பின்” என்ற சொல் இருப்பதனால் அதை மேலும் மேலும் நவீனக் காலத்திலிருந்து பின்னோக்கிக் கொண்டுப்போவதற்கான ஒரு முயற்சி கூட நடக்கிறது. முதலில் அந்த வார்த்தை கடந்த இருபது ஆண்டுக்காலமாக செயல்பட்டு வந்த எழுத்தாளர்கள் அல்லது கலைஞர்களை குறிக்கப் பயன்பட்டது. அதற்கு பிறகு இந்த நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திற்கு அந்த வார்த…
-
- 34 replies
- 20.3k views
-
-
சென்னை புத்தக கண்காட்சியில் தாமரைச்செல்வியின் ‘உயிர்வாசம்’ நாவல். தாமரைச்செல்வியின் “உயிர்வாசம்” நாவல் இரண்டாம் பதிப்பு சென்னை புத்தக கண்காட்சியில் சிந்தன் புக்ஸ் காட்சியறையில் கிடைக்கின்றது. கடந்த கார்த்திகை 23ம் திகதி கிளிநொச்சி பரந்தனில் முதலாவதாக “உயிர்வாசம்” வெளிவந்தது. சமகாலத்தில் இரண்டாவது பதிப்பு சென்னையில் புதிய அட்டை வடிவமைப்பில் வெளிவந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி மற்றும் ஆடுகளம் திரைப்பட உதவி இயக்குனர் ஹஸீன் ஆகியோர் பிரதிகளை இன்று பெற்றுக்கொண்டுள்ளனர். இதேவேளை எதிர்வரும் 16ம் திகதி சென்னையில் கண்காட்சி வளாகத்தில் அறிமுக நிகழ்வு நடைபெற உள்ளது.. ஈழத்தின் கிளிநொச்சியை சேர்ந்த புகழ்பூத்த எழுத்தாளர் தாமரைச்ச…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஆதித் தமிழனைத் தேடி ஒரு அகதியின் பயணம் 'கர்ப்பநிலம்' நாவல் கூறும் இலங்கை அனர்த்தப் பதிவுகள் பல்லாயிரம் ஆண்டுகளாக ஈழநிலம் அடைகாத்து வைத்திருக்கும் அறத்தவிப்பை அதன் ஓட்டை உடைத்து வெளிக்கொணரும் முயற்சியில் முதல் வெற்றியை அடைந்திருக்கிறார் குணா கவியழகன். ‘கர்ப்பநிலம்’ நாவல் மூலம் இலங்கையில் நடைபெற்ற அனர்த்தங்களைப் பதிவு செய்வதோடு, ஈழத் தொல்குடிகளின் வேர்களையும் அதன் பண்பாடுகளையும் தேடித் தொகுக்கும் முயற்சியில் அவர் இறங்கியிருக்கிறார். …
-
- 0 replies
- 385 views
-
-
மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி பேட்டிவாசிப்பிலிருந்து தான் சிறந்ததாகக் கருதும் படைப்புகளை மொழிபெயர்ப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் அபூர்வமான மொழிபெயர்ப்பாளர்களுள் ஜி.குப்புசாமியும் ஒருவர். ஒரு படைப்பை மொழிபெயர்க்க வேண்டுமென்றால் அந்தப் படைப்பாளியின் எல்லா படைப்புகளையும் வாசித்திருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பவர். அதனாலேயே, இவரின் மொழிபெயர்ப்புகள் வாசகர்களின் நம்பிக்கைக்குரிய தேர்வாக இருந்துகொண்டிருக்கிறது. அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று முழு நேர மொழிபெயர்ப்பாளராக ஆகியிருக்கும் வேளையில் அவருடன் உரையாடியதிலிருந்து... கிட்டதட்ட 30 வருட அரசுப் பணி. இப்போது என்ன தோன்றுகிறது? ஒவ்வொருநாளும் கரடுமுரடான சாலைகளில் ஓட்டை பஸ்களில் குலுங்கிக் குலுங்கி 130 கி.மீ.…
-
- 0 replies
- 596 views
-
-
'போர்ச்சூழலில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் போர் இலக்கியங்கள் மூலமே வெளிக்கொணரப்படுகின்றன. போர் இலக்கியத்தின் முக்கிய பரிமாணம் அவை போரின் சாட்சியங்களாக அமைவதுடன் போரின் நிலைமைகளை, கள நிலவரங்களை வெளி உலகிற்குத் தெரியப்படுத்தி உலகின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்புவதுதான். 'ஞானம்" சஞ்சிகையின் 150 -வது இதழை, போர் இலக்கியச் சிறப்பிதழாக 600 பக்கங்களில் வெளிக்கொணர்ந்தோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுதப்படும் இலக்கியங்கள் தொகுக்கப்படல் வேண்டும். சங்க கால புறநானூறுப் பாடல்கள் தொகுக்கப்பட்டதால்தான் நாம் அன்றைய தமிழரின் போர்பற்றி அறிய முடிகிறது. இத்தகைய பாரம்பரியத்தில் தொகுக்கப்பட்டதுதான் 'ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்" என்ற தொகுப்பாகும்." இவ்வாறு 'ஞானம்" சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் தி. …
-
- 1 reply
- 538 views
-
-
[size=5]மின்வலையில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-711-5.html[/size] [size=5]Author: Dr.R.Niranjchanadevi[/size] [size=5]காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணை கட்டியும் காவிரியின் இரு கரைகளையும் உயர்த்தியும் தமிழ்நாட்டின் நெற்குவியலுக்கு வித்திட்டவர் மாமன்னன் கரிகாலன். இலங்கையை வென்று, 12,000 சிங்களரைக் கைதியாகக் கொண்டுவந்து, கல்லணை கட்டுவதற்கு அவர்களையும் மற்ற மன்னர்களையும் ஈடுபடுத்தினான். காவிரி, கொள்ளிடம் இரு ஆறுகளும் பிரியும் இடத்திலும், மீண்டும் சேரும் இடத்திலும் உள்ள கரை மட்டங்களை நுணுக்கமாக ஆராய்ந்து புரிந்துகொண்ட ‘புனல் நாடன்’ கரிகாலன் தகுந்த இடத்தில் பொருத்தமான கல்லணையைக் கட்டியது இந்தக் கால அணை வல்லுனர்களுக்கும் வியப்பை …
-
- 3 replies
- 1.7k views
-
-
தொலைவில் எழுதியவர். வாசுதேவன் பாரீஸ் நகரிற்கு ஒரு அலுவலாக நான் போக வேண்டியிருந்தது போய் எனது அலுவல்களை முடித்து கொண்டு அன்று எனது நகரத்திற்கு திரும்ப முன்ன பாரீசில் தமிழர் வர்த்தக நிலையங்கள் அதிகமாக அமைந்திருக்கும் லா சப்பல் என்கிற இடத்திற்கு போனபோது தான் இவ்வனவு தூரம் வந்தனான் சில நிமிடம் வாசனையும் சந்தித்து விட்டு போகலாம் என்று அவனது அலுவலகத்தில் நுளைந்தேன் பலவருடங்களின் பின்னர் மீண்டும் கண்டாலும் உடனே அடையாளம் கண்டு எப்பிடி இருக்கிறாய் எங்கே இரக்கிறாய் என்று வழைமையான விசாரிப்புகள் ஒரு பத்து நிமிட சந்திப்பு அதன் இடையில்தான் பகட்டேன் என்னடா நீ ஏதோ புத்தகம் ஏதோ வெளியிட்தாய் எங்கோ வலைப்பூக்களில் படித்த ஞாபகம் என்ன புத்தகம் என்றேன். ஒரு புத்தகத்தை எடுத்…
-
- 3 replies
- 2.4k views
-
-
திருக்கோணேஸ்வரம் நூல் பற்றி... By PONMALAR 16 NOV, 2022 | 02:40 PM திருக்கோணேஸ்வரம் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பல நாடுகளில் கோணேஸ்வரம் பற்றிய தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், பிரான்ஸியர் என்ற அன்னியரின் ஆதிக்கத்துக்குள் திருக்கோணமலை கொண்டுவரப்பட்டமை அதற்குரிய காரணங்களாக இருக்கலாம். இதனால் தான் என்னவோ 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான போர்த்துக்கீச பாதிரியார் குவைறோஸ் தன் குறிப்பொன்றில் ‘கீழைத்தேயத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாத மக்களின் ரோமாபுரி திருக்கோணேஸ்வரம்’ என வர்ணித்துள்ளார் என்ற தொடரும் திருக…
-
- 0 replies
- 466 views
-