நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
கனடாவில் பேராசிரியர் ராமு மணிவண்ணன் எழுதிய “SriLanka Hiding The Elephant” நூல் அறிமுகவிழா சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் பொது நிர்வாகத் துறையின் பேராசிரியரும் தலைவருமான ராமு மணிவண்ணன், ஈழத் தமிழர் படுகொலைக்கான ஆதாரங்களை ‘SRI LANKA: HIDING THE ELEPHANT’ என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார். குறித்த நூலின் அறிமுகவிழா 13.12.2014 சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் கனடாவின் ரொறன்ரோவில் 7600 Kennedy Road, Markham, ON L3R 9S5 என்கிற முகவரியில் உள்ள Milliken Mills Community Centre இல் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு சென்னையில் இருந்து வருகை தந்த நூலாசிரியர் பேராசிரியர் ராமு மணிவண்ணன் நேரடியாகப் பங்கேற்கிறார். ஈழத்தமிழர் ஆதரவாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், ஊடகவ…
-
- 4 replies
- 1.9k views
-
-
ம து போதையில் மாரடைத்துப் போன பரமேஸ்வரன் நாயருக்கு, சவரம் செய்து மூக்குச்சளி குண்டிப்பீ துடைத்து குளிப்பாட்டி பவுடர் போட்டு கை கால் பெருவிரல்கள் சேர்த்துக் கட்டி உடை மாற்றி சென்ட் அடித்து பிரேதத்தை கருநீள பெஞ்சில் நீளமாக படுக்கவைத்துவிட்டு கொஞ்சம் அருசியுடன் வந்தார் அப்பா. அன்னைக்கு ராத்திரி வீட்டில சோறு. பூரா பொண நாத்தம். ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள். பெரும் மனச்சிதைவை உருவாக்கிய ஒரு கவிதைத்தொகுதி. முதல் இரண்டு கவிதைகளுடன் வாசிப்பதை நிறுத்திவிட்டு பாரிஸின் புறநகர் நோக்கி சென்றுகொண்டிருந்த நீண்ட தொடரூந்தின் யன்னல் ஊடாக பார்வை வெளியே விழுத்தி என்னை ஆற்றுப்படுத்தினேன். அன்றொருநாள் பெரியம்மாவின் இறுதிக் க…
-
- 4 replies
- 1.1k views
-
-
எனது பார்வை ------------------------- பொருளாதார அடியாட்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்புள்ள மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்கள். உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் கொள்ளையிட்டு வருபவர்கள். அமெரிக்காவில் பிறந்த John Perkins ஒரு பொருளாதார அடியாளாக வேலை செய்து பின்னர் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அந்த வேலையை விட்டு வெளியே வந்து இந்த புத்தகத்தை எழுதினார். இந்த புத்தகம் ஆரம்பத்தில் ஒரு ஜெம்ஸ் பாண்ட் கதை போல் தோன்றினாலும் அடுத்து வந்த ஒவ்வொரு பகுதியும் நாமும் விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்க பேரரசின் அடியாள் வேலையை தான் செய்துகொண்டிருக்கிறோம் என்ற குற்றவுணர்வையே ஏற்படுத்துகின்றது. இதுவரை நாம் பார்த்து வந்த உலகை வேறொரு கண்களால் பார்க்க தூண்டியது. எம் கண்முன்னே…
-
- 4 replies
- 3.4k views
-
-
-
- 4 replies
- 1.6k views
-
-
வாசிப்போம் வாருங்கள் - எஸ். ராமகிருஷ்ணன் ருஷ்ய எழுத்தாளர்கள் மற்றும் கடந்த காலத்தின் புகழ்பெற்ற செவ்வியல் நாவல்கள் பற்றியே அதிகம் எழுதி வருகிறீர்களே, சமகால உலக இலக்கியத்தில் கவனம் கொள்ளவேண்டிய முக்கிய எழுத்தாளர்கள் யார். என்ன புத்தகம் என்று ஒரு சிறிய அறிமுகம் தர இயலுமா ? என இரண்டு நாட்களுக்கு முன்பு சத்யநாராயணா என்ற நண்பர் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், அவருக்கு எழுதப்பட்ட இந்த மின்னஞசலை விருப்பமான வேறு எவருக்காவது பயன்படக்கூடும் என்று நினைத்து அப்படியே வெளியிடுகிறேன் •• கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் வாசித்தவரை முக்கியமான எழுத்தாளர்களாக பத்து பேரைக்குறிப்பிடுவேன், ஆப்ரிக்க இலக்கியம். லத்தீன் அமெரிக்க இலக்கியம். பின்நவீனத்துவம். என்று ஒ…
-
- 4 replies
- 990 views
-
-
வேகமாய் வாசிப்பது எப்படி? ஆர். அபிலாஷ் நேற்று “எப்படி வாரம் ஒரு புத்தகம் படிப்பது?” என்றொரு ஆங்கிலக் கட்டுரை படித்தேன். எழுதினவர் புத்தகம் என்பது அபுனைவுகளையே. தான் ஒரு மெதுவான வாசகன் என்று கூறும் அவர் எப்படி கல்லூரியில் தன் பேராசிரியர் கூறிய அறிவுரை அவரது வாசிப்பை பன்மடங்காக்க பெருக்க உதவியது என விளக்குக்கிறார். ஒருமுறை அவர் வகுப்பில் தன் வரலாற்று பேராசிரியரிடம் பாடத்திற்கான துணை நூல்களை வாசித்து முடிப்பதற்கு தான் திணறுவதாய் கூறுகிறார். பேராசிரியர் உடனே வகுப்பை பார்த்து “எத்தனை பேருக்கு இந்த பிரச்சனை?” எனக் கேட்கிறார். கிட்டத்தட்ட அத்தனை பேரும் கையை தூக்குகிறார்கள். அடுத்து அவர் அபுனைவு நூல்களை எப்படி படிக்கலாம், எப்படி படிக்க கூடாது என விளக…
-
- 4 replies
- 919 views
- 1 follower
-
-
நமது விருப்பத்திற்குரிய அங்கமாயிருக்கும் காதலென்னும் சிலுவையும், பெருந்திணையின் வசீகரமும். – உமா வரதராஜனின் ‘மூன்றாம் சிலுவை’. கதைகள் எப்போதும் தன்னகத்தே ஒரே முகத்தைக் கொண்டிருப்பதில்லை, அதிலும் குறிப்பாக காதல் கதைகள். அவை அனேக முகங்களைக் கொண்டவை. பெருந்திணையும் சேர்ந்துவிட்டால் எண்ணிக்கையில் இன்னும் கொஞ்சத்தைக் கூட்டிக் கொள்வது ஒன்றும் சமூகக் குற்றமில்லை. தமிழில் சொற்கள் அனேகமாய் இருப்பதாலோ என்னவோ நம்மவர்கள் கைக்கிளை, பெருந்திணை, என பல்வேறு வகையாய் காதலைக் கூறுபோட்டு வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு காதல் கதை ஏதோவொரு வகையில் சுவாரஸ்யமானதாகவும், எல்லோருக்கும் பொருந்திப்போகக் கூடியதாகவும் இருக்க வேண்டுமென்பதையே நாம் விரும்புகிறோம். நாம் வாசிக்கும் புத…
-
- 4 replies
- 1.1k views
-
-
பலாலித்தளம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தற்கொலைத்தாக்குதலில் படையினரிடம் அகப்பட்ட கெனடியை மீட்பதற்காக, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்டவர் "சாகரவர்த்தனா" கப்பல் கப்டன் அஜித் போயகொட. 1994 ஆம் ஆண்டு மன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகள் மேற்கொண்ட கரும்புலித்தாக்குதலில் பிடிக்கப்பட்ட அஜித் போயகோட, ஏழு வருடங்களின் பின்னர் விடுதலைப்புலிகளினால் விடுவிக்கப்பட்டார். போயகொட சொல்ல சுனிலா கலபதி எழுதிய A Long Watch என்ற தன்வரலாற்றுக்குறிப்பு 2016 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த நூல் தமிழில் தேவாவின் மொழிபெயர்ப்பில் 'வடலி' பதிப்பகத்தின் ஊடாக "நீண்ட காத்திருப்பு" என்ற பெயரில் தற்போது வெளிவந்திருக்கிறது. யுத்த களத்தில் எதிரிகளால் பிட…
-
- 4 replies
- 2.3k views
-
-
இலங்கையின் சிறுசஞ்சிகைகளின் எழுச்சியும்,வீழ்ச்சியும். இலங்கையிலிருந்து வெளிவரும் சிற்றிதழ்களின் ஆயுள் மிகக் குறைவு என்பது கசப்பானஉண்மையே.திட்டமிடப்படாமையினாலும், நிறுவனமயப்படுத்தாமையினாலும் இலங்கையில்சிற்றிதழ்களினால் நீண்ட தூரம் பயணிக்கமுடியவில்லை.பிரபல்யமான சில நிறுவனங்கள்அவ்வவ்போது சில சிற்றிதழ்களை வெளியிட்டன.தகுதியான ஆசிரியரும்,ஆசிரியபீடமும்,இல்லாமையால் அவையும் கால ஓட்டத்தில் மறைந்து போயின.இதே வேளை பிரபல எழுத்தாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டசிற்றிதழ்களும் கால ஓட்டத்தில் மூழ்கிவிட்டன. உதயதாரகையுடன் 1841ஆம் ஆண்டு இலங்கையின் பத்திரிகைத் துறை ஆரம்பமானது.கலை,இலக்கியம்,சமூகம்,மருத்துவம்,விஞ்ஞானம்,அரசியல், நகைச்சுவை,இசை, விவசாயம்,சிறுவர்,வானொலி ஆகிய த…
-
- 4 replies
- 3.1k views
-
-
பிரபாகரனோடு இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உருவாக்கிய கணேசன் (ஐயர்) தனது அனுபவங்களையும் அதன் பின்னணியில் பொதிந்திருந்த அரசியலையும் பகிர்ந்துகொள்கின்ற நூல் பிரித்தானியாவில் வெளியிடப்படுகின்றது. “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” என்ற ஐயரின் நூல் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பொதிந்து கிடந்த மர்மமங்களை மட்டுமன்றி, அவற்றிலிருந்து எதிர்கால அரசியல் வெற்றிக்கான திறவுகோலையும் எம் மத்தியில் முன்வைக்கிறது. போராட்டத்தின் தோல்வி குறித்த எதிர்மறைக் கூச்சல்களும், சந்தர்ப்பாவதிகளின் அணி சேர்க்கைகளும் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான உளவியல் யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த நிலையில் போராட்டத்தைச் செழுமைப்படுத்தல் குறித்த புதிய நம்பிக்கைகளை வழங்கும் ஐயரின் நூல் அ…
-
- 4 replies
- 1.6k views
-
-
பொதுவாக புத்தக வாசிப்பிற்குப் பிறகு அதைப் பற்றிய விமர்சனத்தை இவ்வலைப்பூவில் பதிப்பது வழக்கம். ஆனால் இம்முறை விமர்சனத்தை முன்வைக்காமல், நாவல் பற்றிய எனது அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். பிரபஞ்சம் என்பது ஒரு அதிர்வு. அந்த அதிர்வை வானம் சங்கீதமாக்குகிறது. காற்று மனம் ஆக்குகிறது. ஒளி வண்ணங்களாக ஆக்குகிறது. நீர் சுவைகளாக ஆக்குகிறது. ஜடம் வடிவங்களாக ஆக்குகிறது. விஷ்ணுபுரம் ஒரு கற்பனை நகரம், இதற்குப் பிறப்பும் இறப்பும் உண்டு. மகாவிஷ்ணு ஒருமுறைத் திரும்பிப் படுப்பது ஒரு யுகம் என்று ஐதீகங்கள் குறிப்பிடுகிறது. காலத்தின் சுழற்சியான யுகம் தொடங்கி அழிவது - இந்நாவலின் மூலம். பல விவரிக்க முடியாத கற்பனைகளையும் தத்துவ ஞானங்களையும் உள்ளடக்கிய பிரம்மாண்டம் விஷ்ணுபுரம். …
-
- 4 replies
- 1.2k views
-
-
[size=5]ஈழம் மக்களின் கனவு ஆசிரியர் தீபச்செல்வன்[/size] வெளியீடு முதற்பதிப்பு 2010 தோழமை வெளியீடு ஈழம் பிரபாகரனின் கனவு என்று இனவாதிகள் முதல் சமாதானம் பேசியோர்வரை கூறினார்கள், கூறிக்கொண்டுமிருக்கிறார்கள். ஆனால் கறுப்பு யூலையை ஒத்த வயதுடைய தீபச்செல்லவன் அவர்களது முகங்களில் 'ஈழம் மக்களின் கனவு' தலைப்பினூடாக அறைந்துள்ளார். கறுப்பு யூலைக்கும் தீபச்செல்வனுக்கும் ஒரே வயதென்பதை சோபாசக்தியுடனான நேர்காணலில் அவரது அறிமுகத்தில் உணரமுடிகிறது.(அவரது அறிமுகத்தில் தீபச்செல்வன் 1983 எனவும் உள்ளது) புனைவுகளற்ற அவலங்களை பதிவுசெய்தல் என்பது அலங்காரங்களற்ற உண்மைகளைப் பேசும் சத்தியமாகும். அதனைப் பொத்தக அமைப்பிலும் காட்டியுள்ளார். வழமைகளுக்கப்பால் பா.செயப்பிரகாசம் அவரகள் 'மீண்டெழுத…
-
- 4 replies
- 791 views
-
-
அதிகாரத்தில் தெறிக்கும் வன்மம் 1. 'Road to Nandikadal' என்பது புலிகளை ஆயுதப்போராட்டத்தின் மூலம் வெற்றிகொண்டதை சிங்கள இராணுவத் தரப்பிலிருக்கும் ஒருவர் கொண்டாடிக் குதூகலிக்கின்ற ஒரு நூலாகும். முகமாலையில் தரித்து நின்ற 53 டிவிசனுக்குத் தலைமை தாங்கிய கமல் குணரட்னே நான்காவது ஈழப்போரில் இறுதியில் புலிகளின் தலைவர் கொல்லப்படுகின்ற தாக்குதலை நிகழ்த்தியதுவரை பலவற்றை எழுதிச் செல்கின்றார். புலிகளின் தலைவரைப் புகழ்ந்திருக்கின்றாரென 2ம் அத்தியாயம் மட்டும் வாசித்துவிட்டு 'புகழ்' பரப்பியவர்கள், இந்நூலை முழுமையாகக் கடைசி அத்தியாயம் வரை வாசித்திருந்தால் அவர்களுக்கு நிச்சயம் கடும் சினம் வந்திருக்கும். ஒரு நாய் தன் காலின் மீது கிடக்கிறது எனவும், நாயின் அடையாள அட்…
-
- 4 replies
- 575 views
- 1 follower
-
-
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்-Elanko DSe ) .................. ஒருநாள் நண்பர் ஒருவரோடு பயணித்தபோது டிக்-டொக்கில் ஒரு பெண் நன்றாகப் பேசுகிறார் என ஒரு காணொளியைக் காட்டினார். அட, இவரை நன்கு தெரியுமே, எனது முகநூல் நண்பர் என்று சொன்னேன். அது தனுஜா. அவர் பல்லாயிரக்கணக்கனோர் பின் தொடர்கின்ற ஒரு பிரபல்யமாக டிக்-டொக்கில் இருக்கிறாரெனவெனவும் அந்த நண்பரினூடாகக் கேள்விப்பட்டேன். அப்படித்தான் பிறகு லெனின் சிவத்தின் 'ரூபா' திரைப்படம் வந்தபோது அது தனது வாழ்வின் பாதிப்பில் இருந்து உருவான கதையென்று தனுஜா தனது முகநூலில் எழுதியிருந்ததும் நினைவிலிருக்கிறது (?). இப்படியாகத் தொலைவிலிருந்து நான் அவதானித்துக் கொண்டிருந்த தனுஜாவினது சுயவரலாற்றுப் …
-
- 4 replies
- 1.5k views
-
-
அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். என்னுடைய அகவை 29. நான் கடந்த 12 ஆண்டுகளாக இலக்கியம் வாசித்து வருகிறேன். தமிழ் இலக்கியம் மாத்திரம் அல்லாமல் தாஸ்தாவ்ஸ்கி, டால்ஸ்டாய், மாப்பசான், போர்ஹெஸ், கொர்த்தஸார், காம்யூ, மார்க்கேஸ், ஓரான் பாமுக், சார்த்தர் போன்றோரின் இலக்கிய ஆக்கங்கள் மீதும் தீராத தாகமுண்டு. ஆனால் எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற வேட்கை ஓராண்டுக்கு முன்புதான் என்னுள் எழுந்தது. எனினும் அதை என்னால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இதற்கு ஃபேஸ்புக் ஒரு காரணமாக இருக்குமோ என்ற ஐயம் சில நாட்களாக என்னை அரித்துக்கொண்டிருக்கிறது. ஃபேஸ்புக்கில் எழுதுவதும், லைக் வாங்குவதும், பலர் நம்மை கவனிக்கிறார்கள் என்ற எண்ணமும் தீவிர எழுத்துக்கு என்னை வரவிடாமல் தடுக்கிறது என்றே கருதுகிறேன். மேலும் ஃபேஸ்ப…
-
- 3 replies
- 1.6k views
-
-
இந்த நாவலைப் பல நாட்களுக்கு முன் வாசித்திருந்தேன்.எனது கருத்தைப் பதிவு செய்யலாம் என்றிருந்த வேளையில் தான் அந்தக் கருத்துப் பகிர்வு முகநூலில் வெளிவந்தது. அதுதான் பிரதம எழுத்தாளரும்,எனக்கும் பிடித்தவரான "நிலக்கிளி"தந்த ஆசிரியர் திரு பாலமனோகரன் அவர்களது விமர்சனம். இதைவிட நான் என்னதான் எழுதப் போகிறேன் என்று தள்ளிப்போட்டேன். அவர் மிகவும் சிறப்பாகப் பதிவு செய்திருந்தார். அதன் பிறகும் எழுதலாம் என்றிருந்த வேளையில் மீண்டும் ஒரு விமர்சனம் வந்தது. மேலும் கொஞ்சம் தாமதமானது. அவர்கள் சொல்லாததை நான் என்ன சொல்லிவிடப் போகிறேன் . இனியும் தாமதமாக்கக் கூடாது என்பதை நினைத்தே இதனைப் பதிவு செய்கிறேன். இது ,நடந்து முடிந்த …
-
- 3 replies
- 696 views
-
-
எங்கிட்ட ஒரு காசிருக்கு அபிலாஷ் சந்திரன் சின்ன வயதில் என் அப்பா அடிக்கடி ஒரு நாட்டுப்புற கதை சொல்வார். ஒரு குருவிக் கதை. அதை அண்ணாத்துரை ஒரு மேடையில் சொன்னதாக கூறுவார். ரொம்ப நகைச்சுவையான அட்டகாசமான கதை. கதை இப்படி போகிறது. ஒரு ராஜாவும் அவர் மந்திரியும் வேட்டைக்கு வனத்துக்கு போகிறார்கள். வேட்டை முடித்து இருவருமாக ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு குருவி இவ்வாறு பாடுவது கேட்கிறது: “என் கிட்ட ஒரு காசிருக்கு யாருக்கு வேணும் யாருக்கேனும் தேவையிருந்தா வாங்கிட்டு போங்கோ” முதலில் ராஜா இந்த பாடலை ஆர்வமாய் கேட்கிறார். பாவம் குருவி ஒரு காசை வைத்துக் கொண்டு என்ன பாடு பட்டு பாடுகிறது என யோசிக்கிறார். ஆனால் குருவி ரிப்பீட்டில் பாடிக் கொண்…
-
- 3 replies
- 1k views
-
-
சில வருடங்களிற்கு முன் எனது ஆசரியர் ஒருவர் இந்த புத்தகத்தை படித்து பார் பின்னர் உலகில் நடக்கும் பல சம்பவங்களை நீ வேறொரு கண்ணால் பார்ப்பாய் என்றார். இதையே இந்த புத்தகத்தை படிக்காதவர்களிற்கும் நான் கூற விரும்புகின்றேன். இந்த புத்தகம் தமிழில் வெளிவரவில்லை. யாராவது இதை மொழிபெயர்க்க வேண்டும். பூமியில் நடைபெறுகின்ற இயற்கையான/செயற்கையான அழிவுகள் அனைத்துமே யதார்த்தமாக நடந்துவிடுவதில்லை. இயற்கை அழிவுகளை எதிர்பார்த்து ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கின்றது. அதனை வைத்து பணம் சம்பாதிப்பதற்கு. இந்த பணத்தாசை பல மக்களின் உயிரை பலி கொடுக்கவும் தயங்காது. இந்த கூட்டம் உலகத்தின் அதிகார நாற்காலியில் தொங்கிக்கொண்டிருக்கின்றது. ஈராக் போரின் காலத்தில் அமெரிக்க ராணுவத்திற்கு ஆயு…
-
- 3 replies
- 780 views
-
-
எனது முப்பது சிறுகதைகள் அடங்கிய *நிழற்குடை * சிறுகதைத் தொகுதி வெளியாகி இருக்கிறது. இந்த நூலை வெளியீடு செய்த தடாகம் பதிப்பகத்தினருக்கு மனம் நிறைந்த நன்றி. 2009 தொடக்கம் 2016 காலப்பகுதியில் எழுதப்பட்ட போரின் கதைகள். ஒன்லைனில் புத்தகத்தை வாங்கலாம். கீழ் வரும் இணைப்பில் சென்று பாருங்கள் : https://www.panuval.com/nizharkudai-izhathu-sirukadhaikal-10020436 2009ஆம் ஆண்டு மே மாதம் நடந்த ஈழப்போரில் வாழ்வும் வளமும் பறிக்கப்பட்டு நிர்க்கதியான ஈழத்து மக்களின் துயரங்களும், வேதனை இந்தச் சிறுகதைகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு சந்ததியின் பெருவாழ்வு. இந்த எழுத்துகள் மூலம் ஒவ்வொரு கதைமாந்தர்களுக்கான ஒரு ந…
-
- 3 replies
- 643 views
-
-
தமிழக புத்தகக் கண்காட்சியில் புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து கி.செ.துரையால் அலைகள் இணையத்தளத்தில் பதினெட்டு தினங்கள் தொடர்ச்சியாக எழுதப்பட்டு தற்போது தமிழகத்தில் நூல் வடிவில் வந்துள்ள புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து என்ற நூல் தமிழக புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வந்துள்ளது. கண்காட்சியில் நூல்களை வாங்குவோரிடையே இந்த நூல் பெரிதும் ஆர்வமாக வாங்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஒரு கோடி நூல்கள் விற்பனைக்கு வந்துள்ள பெரும் புத்தகச் சந்தையில் ஈழத் தமிழரின் புதுமாத்தளன் சோகம் ஆர்பாட்டங்கள் எதுவுமின்றி அமைதியான பயணத்தை தொடங்கியுள்ளது. இந்த நூலின் வெளியீட்டுவிழாவும் அறிமுக விழாவும் விரைவில் டென்மார்க்கில் நடைபெறவுள…
-
- 3 replies
- 2.3k views
- 1 follower
-
-
பழந்தமிழ்ப் பதிப்புகள் வரலாறு முன்னையோரின் புலமையையும் அவர்களுடைய கல்வி பண்பாட்டுப் பெருமை முதலியவற்றையும் அறிந்து கொள்வதற்குத் துணை நிற்பது அவர்கள் விட்டுச் சென்ற அறிவுசார்ந்த சொத்துக்களேயாகும். கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும், ஓலைச்சுவடிகளிலும் அவர்கள் தங்களுடைய எண்ணங்களைப் பொறித்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச் சென்றனர். அவற்றின் வழியாகவே நாம் இன்று பண்மையோரின் வரலாற்றுப் பெருமையை உணர்ந்து கொள்ள முடிகின்றது. தமிழின் தொன்மையை அறிவதற்குத் துணையாக நிற்கும் சங்க நூல்களைச் சுவடிகளில் எழுதிப் போற்றிப் பாதுகாத்தனர். பனை ஓலையை நன்கு பதப்படுத்தி ஒழுங்குபட நறுக்கிச் சுவடி வடிவில் அமைத்து எழுதினர். இன்றும் தமிழகத்தில் பல்லாயிரக் கணக்கான ஓலைச் சுவடிகள் பண்டையோரின் புலமை ந…
-
- 3 replies
- 14.2k views
-
-
41-வது தென்னிந்திய புத்தகக் கண்காட்சி: ஜன.10 முதல் 22 வரை சென்னையில் நடக்கிறது புத்தக கண்காட்சி - கோப்புப் படம் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது. 40 ஆண்டுகளாக நடந்த கண்காட்சி 41-வது ஆண்டாக வரும் 10-ம் தேதி துவங்க உள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சென்னை புத்தகக் கண்காட்சியை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. சென்னை தவிர மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் பபாசி புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. ஆண்டு தோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் 700 அரங்குகள் வர…
-
- 3 replies
- 1k views
-
-
இந்த மாத ஆட்காட்டியில் வெளியாகியிருந்த என் நூல் பற்றிய விமர்சனம் நிவேதாவின் நிறம் மாறும் உறவோடு கோசல்யாவின் சிற்றுராய்வு மரபாக வாழ்ந்த இடத்திலிருந்து புலத்தில் வாழ்வை ஆரம்பித்த காலங்கள் பலரைப் படைப்பாளிகளாக . ஆக்கதாரர்களாக தோற்றம் பெற்றவர்கள் எம்மத்தியில் பல படைப்பாளிகள் . இவர்கள் வாழ்வியல் பட்டறிவு வாயிலாக வாய்ப்புப் பெற்றது மெய்யானதே எனலாம் அந்த வகையில் இங்கே நிவேதா உதயராயன் +நிறம் மாறம் உறவு + படைப்பிலக்கியம் சிறப்புப் பெறுகின்றது ..சீரிய உரை நடை வீரிய வார்த்தைகள் ..வட்டார வழக்கான வசனயார்ப்பு. இங்கு கூறப்படும் பதினனைந்து படைப்பாக்கமும் பறைசாற்றி நிற்பது -மெய்யானது. . கதையல்ல மெய்யான மெருகான சம்பவங்களே --- இவைதான். அந்த வகையில் இவரும் மெய்ப்பாடான படைப்பிலக்கிய க…
-
- 3 replies
- 828 views
-
-
பி. விக்னேஸ்வரன் 1970ஆம் ஆண்டு கே.எஸ். பாலச்சந்திரன் இலங்கையில் வானொலிக் கலைஞராகத் தெரிவுசெய்யப்பட்டு, நாடக ஒலிப்பதிவுகளுக்கு வரும்போது ஏற்பட்ட அறிமுகம் பின்னர் நான் தயாரிப்பாளனாக வானொலியிலும் தொலைக் காட்சியிலும் தயாரித்த பல நாடகங்களில் அவர் பங்குபற்றியதன் மூலம் மேலும் நெருக்கமானது. அங்குள்ள கலைஞர்களில் நான் மிக நெருக்கமாகப் பழகிய ஒருசிலரில் பாலச் சந்திரனும் ஒருவர். சினிமா, நாடகம், எழுத்திலக்கியம் என்று எந்தத் துறை பற்றியும் சம்பாஷிக்கக்கூடியவர் பாலச் சந்திரன். கலைத்துறையில் அவரது பன்முக ஆற்றல், ஈடுபாடு பற்றியெல்லாம் மிக விளக்கமாக பி.எச். அப்துல் ஹமீது அவர்கள் ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ நாவலின் முகவுரையில் விவரித்திருக்கிறார். பாலச்சந்திரனின் …
-
- 3 replies
- 1.7k views
-
-
“பெயரிடாத நட்சத்திரங்கள்” – சூழும் அரசியல் ரவி மற்றைய நாடுகளின் விடுதலைப் போராட்ட அமைப்புகளில் நிகழ்ந்த இந்த அவலத்தை எத்தனையோ உதிரிப் புத்திஜீவிகள் அந்நேரம் சுட்டிக்காட்டியபோதும் வாழாவிருந்தனர் புலிகள். இந்த நிலைமைகள் இன்று பெண்போராளிகளை இக்கட்டான நிலையில் சமூகத்துள் விட்டிருக்கிறது. பெயரிடாத நட்சத்திரங்கள் கவிதைத் தொகுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து அல்லது இணைக்கப்பட்டு ஆயுதப்போராட்ட களத்தில் இயங்கிய பெண்களின் குரலாக வந்த கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. எனவே இந்தக் கவிஞைகளிலும் புலி அடையாளத்தை மட்டும் வைத்து நோக்கும் எளிமையான போக்கு மறைமுகமான எதிர்ப்பாகவும், கள்ள மௌனமாகவும் பேணப்படுகிறதா என்ற சந்தேகம் எழவே செய்கிறது. இந்த ‘மறுப…
-
- 3 replies
- 1.2k views
-