மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
இந்து சமயம் – ஓர் அறிமுகம் – 1 செம்பரிதி இந்து சமயம் ஒற்றைப் பெருமதம் என்று பலரும் நினைக்கிறார்கள். அது ஒரு சிந்தனை முறைமை. ஏராளமான மதங்கள், நம்பிக்கைகள், பண்பாட்டு மரபுகள், மொழி மரபுகளை தன்னுள்ளடக்கியதாய், வட்டாரம் சார்ந்து பல்வகைப்பட்ட நியமங்களும் ஆதார நம்பிக்கைகளும் கொண்டதாய், மானுட சமுதாயங்கள் அனைத்துக்கும் பொருந்தக்கூடிய உலகளாவிய அடிப்படை விழுமியங்களை முன்னிருத்துவதாய் உள்ள சிந்தனை முறைமை. இது போக இந்து சமயங்கள் குறித்து இன்னும் சொல்ல இருக்கிறது. சிந்து என்ற சொல், நதி, அகண்ட நீர்பரப்பு, கடல் என்றும் பொருள்படும். இந்தியாவின்மீது படை தொடுத்துக் கொண்டிருந்த பாரசீகர்கள், சிந்து என்ற சொல்லை உச்சரிக்க இயலாமல் இந்து என்று அழைத்தனர். இதுவே பின்னர் இந்தியா என்ற…
-
- 7 replies
- 16.5k views
-
-
கணங்களின் அதிபதி வழிபாட்டின் வரலாறு . . . . . . . . . ! September 13, 2018 கணபதி அல்ல பிள்ளையார் வழிபாடு என்பது இன்றைக்குப் பரவலாக இந்து வெறியூட்டும் விதமாக முன்னெடுக்கப்படும் வடிவமாகும். சுதந்திரப் போராட்ட காலத்தில் திலகரே முதன் முதலாக, எளிமையான மக்களின் வழிபாடாக இருந்த இந்தக் கணபதி வழிபாட்டை, விநாயகரை விஜர்சனம் அதாவது அழிப்பது என்கிற சடங்கை நிறைவேற்ற ஆங்காங்கே மக்கள் இயல்பான முறையில் முன்னெடுத்த விழாவை, விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக மக்களைத் திரட்டும் வழிமுறைகளில் ஒன்றாக மாற்றினார். விநாயக வழிபாடு என்பது இந்திய நிலப்பரப்பில் நிலவிய கணசமூகங்கள், பின்னால் எழுந்த தந்தைவழி ஆதிக்க அரசமைப்பால் உள் விழுங்கப்பட்ட ஆதிவரலாற்றின் அடையாளமே. சூரிய, பார்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வைணவப் பாசுரங்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தைப் பாடிய ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள் பின்வருமாறு: பொய்கையாழ்வார்> நம்மாழ்வார் ஆண்டாள் பூதத்தாழ்வார்> மதுரகவியாழ்வார் தொண்டரடிப்பொடியாழ்வார் பேயாழ்வார்> குலசேகர ஆழ்வார்> திருப்பாணாழ்வார் திருமழிசையாழ்வார்> பெரியாழ்வார்> திருமங்கையாழ்வார். இவர்கள் மொத்தம் 4>000 பாசுரங்களைப் பாடியுள்ளனர். அப்பாசுரங்களைப் பின்வரும் 24 தலைப்புகளில் அடக்கலாம்: திருப்பல்லாண்டு அமலனாதிபிரான் நான்முகன் திருவந்தாதி பெரியாழ்வார் திருமொழி கண்ணிநுண் சிறுத்தாம்பு திருவிருத்தம் திருப்பாவை பெரிய திருமொழி திருவாசிர…
-
- 11 replies
- 2.5k views
-
-
-
இந்து தமிழ்’ ஆன்லைனில் ஒளிபரப்பாகிறது மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: வீட்டிலிருந்தபடியே தரிசிக்க ஏற்பாடு மதுரையில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் சித்திரைத் திருவிழாவுக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, பிரம்மாண்டமும் கொண்டாட்டமும் நிறைந்தது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துஏப்ரல் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக இருந்தசித்திரைத் திருவிழா நடைபெறாதுஎன இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. அதேநேரம், லட்சக்கணக்கான பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும…
-
- 4 replies
- 1.6k views
-
-
மனு நீதி என்று பரவலாக அறியப்படும் மனுஸ்மிருதி தற்போது தமிழ்நாட்டில் விவாதப் பொருள் ஆகியிருக்கிறது. இந்த மனுஸ்மிருதியில் பெண்களைப் பற்றி இழிவாக கூறப்பட்டிருப்பதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஓர் இணைய வழிக் கூட்டத்தில் பேசிய பேச்சின் ஒரு பகுதியை இந்து வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக ஊடங்கங்களில் பகிர்ந்தனர். திருமாவளவன் பெண்களை அவமதித்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த நடிகை குஷ்புவும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் திருமாவளவனை விமர்சித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனுஸ்மிருதி நூலைத் தடை செய்யவேண்டும் என்று கோரி சென்னையில் சனிக்கிழமை போராட்டம் நடத்தியது. இதற்கிடையில் தி…
-
- 0 replies
- 763 views
-
-
பகவத் கீதை கற்று தரும் பாடங்கள் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும். காரணம் இல்லாமல் ஏன் கவலைப்படுகின்றாய்? யாரைக் கண்டு காரணம் இல்லாமல் பயப்படுகின்றாய்? யார் உன்னை கொல்ல முடியும்? ஆத்மா பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை. ஆக இந்த தேவையற்ற கவலைகளைத் தாண்டி விடுங்கள். மிரட்டும் கவலைகளை மறந்து விடுங்கள். உங்கள் வேலைக்கான இன்டர்வியூ சரியாகப் போகவில்லையா விட்டுத் தள்ளுங்கள். அன்பான உறவிலே திடீரென விரிசலா? வேதனைப்படாதீர்கள். எல்லாமே ஏதோ ஒரு காரண காரியத்திற்காக நடக்கின்றது. உங்களுக்கு நன்மை நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது. தீயது நடந்தாலும் ஒரு காரணம்…
-
- 0 replies
- 723 views
-
-
7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வரலாறு நெடுகிலும் நிறைந்து கிடக்கின்றன. இவற்றில் இருந்து உண்மையைப் பிரித்துத் தர முயன்றிருக்கிறார் ஸ்பென்சர் மிசென். இன்றைக்கு உலகிலேயே அதிகமாகக் கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்துமஸ். இருநூறு கோடிக்கும் அதிகமான மக்கள் இந்தப் பண்டிகைக் காலத்தைத்தான் ஆண்டின் மிகப்பெரிய விடுமுறைக் காலமாகக் கருதுகிறார்கள். பூமியில் அதிகம் பேரால் கொண்டாடப்படும் பண்டிகை இது. உலக நாள்காட்டியில் அதிக விடுமுறை அளிக்கப்படும் காலமும் இதுதான். ஆனால் இந்தக் கொண்டாட்டங்களின் மையமாக இருக்கும் சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையான கத…
-
- 1 reply
- 1.6k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 525 views
-
-
உளவியல்: பாராட்டுகளைவிட விமர்சனங்களின் நினைவுகள் ஆயுள் முழுதும் நம்மோடு வருவது ஏன்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FREDERIC CIROU/GETTY IMAGES நம்மில் பெரும்பாலானோர் அன்றாட வாழ்க்கையில் அவமானங்கள், கேலிகள், மோசமான கருத்துக்களை எதிர்கொண்டிருப்போம். ஆனால், அப்படி மலைபோல் குவியும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து நமக்கு சொல்லித் தரப்படவில்லை. குழந்தைகளாக இருக்கும்போது நம்மிடம் ஒருவர் நம்மை தாக்கினால் மட்டுமே நமக்கு வலி ஏற்படும், வார்த்தைகள் நம்மை காயப்படுத்தாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால், நாம் வளரும்போது ஏற்படும் அனுபவங்களின் வாயிலாக, இது உண்மைக்கு அப்பாற்பட்டது என்பதைய…
-
- 0 replies
- 383 views
- 1 follower
-
-
"எனது பார்வையில் 'ஓம்' [ௐ]" வேத மதத்தின் [vedic religion] - ஆரிய அல்லது பிராமண இந்து சமயத்தினரின் -ஆதார நூல்களான வேதங்களில் இறுதியாக வந்த உபநிடதங்கள் அல்லது உபநிஷத்துக்களில் (Upanaishads) முதன் முதலில் 'ஓம்' என்ற மந்திரம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. உபநிடதங்கள் கி.மு. 700 ஆம் ஆண்டில் இருந்து கி.மு. 100 ஆம் ஆண்டுவரை படிப் படியாக உருவாக்கப் பட்டவை. உதாரணமாக, முன்பு என்ன நடந்தது, இப்ப என்ன நடக்கிறது, இனி என்ன நடக்கும் - எல்லாம் 'ஓம்' தான் [What had happened before, What is now and What will be later - Everything is just 'OM'] என்கிறது மாண்டூக்கிய உபநிடதம் [”மாண்டூகம்” என்பதற்கு சமற்கிருத மொழியில் தவளை என்று பொருள்]. இந்த 'ஓம்' என்ற சத்தம் [ஒலி], இ…
-
- 0 replies
- 454 views
-
-
நியதிக் கொள்கை தொடர்பாக நீண்டநாட்களாகவே கருத்துக்களத்தில் ஒரு தலைப்பைத் தொடங்கவேண்டும் என்கிற அவா இருந்தது. இந்த உலகத்தில் பல வகையான நம்பிக்கைகள், கோட்பாடுகள் உள்ளன. அவை எல்லாம் சரியா பிழையா என்பதற்கப்பால், அவை பற்றி அறிந்திருத்தல், கருத்தாடல் செய்தல் என்பது புதிய சிந்தனைகள் நோக்கி எம்மை உந்தித்தள்ளும். அந்தவகையில் இந்த நியதிக் கொள்கையும் அறிந்துகொள்வதற்கு அவசியமான ஒன்றே. "அனைத்துமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை", "இந்த பிரபஞ்சத்தின் இயக்கம் என்பது ஓர் ஒழுங்கமைப்பின் படி நிகழ்வது" என்று நியதிக் கொள்கை சொல்கிறது. இது தொடர்பாக தமிழில் ஆக்கங்கள் வந்துள்ளனவோ என்று தேடியபோது, இராம.கி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை அகப்பட்டது. அதனை இங்கே இணைக்கிறேன். Determinism அதாவ…
-
- 10 replies
- 3k views
-
-
குப்பிழான் அன்னை ஈன்று எடுத்த அற்புதம் தான் எங்கள் விசுவாம்பா விசாலாட்சி மாதாஜி அம்மையார். அம்மையாரின் முத்து விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா கடந்த 04-02-2012 சனிக்கிழமையன்று குப்பிழான் சொக்கவளவு சோதி விநாயகர் ஆலய மணி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் தலைவராக ஆலய பரிபாலன சபை தலைவர் திரு சீ.குணலிங்கம் அவர்கள் கலந்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மிகப் பெரிய பொது நிகழ்வாக இது கணிக்கப்படுகிறது. குப்பிழான் மக்கள் மட்டுமல்ல இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் இருந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வு, நல்லை திருஞானசம்பந்தர் ஆதின முதல்வர், ஆலய குரு ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர். வரவேற்புரையை திரு.செ.ரவிசாந் அவர்களும், த…
-
- 0 replies
- 888 views
-
-
ஈவ் டீஸிங், ஊழல், கொலை, கொள்ளை இதெல்லாம் யார் செய்தாலும் குற்றம் தானே? இதுபோன்ற குற்றங்கள் மட்டுமல்லாது மோசடி, பலதாரமணம் என்று பல குற்றங்களையும் நிறைய செய்திருக்கிறார்கள் நம் இந்துமத கடவுளர்கள். குற்றங்களை செய்துவிட்டு அவையெல்லாம் நம்முடைய திருவிளையாடல் என்று பெருமை வேறு அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பலதாரமணம் என்பது குற்றமெனில் அறுபது ஆயிரம் மனைவிகளை மணந்த தசரதனையும், ஐந்து கணவர்களை மணந்த பாஞ்சாலியையும் குற்றவாளி என்றுதானே சொல்லவேண்டும்? சிவனுக்கு ரெண்டு, முருகனுக்கு ரெண்டு என்று ஆரம்பித்து எல்லா கடவுளருக்கு ஆளுக்கேற்ற மாதிரி மனைவிகளின் எண்ணிக்கை மாறுபட்டிருக்கிறது. வெண்ணை திருடிய குட்டி கிருஷ்ணனை சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்த்திருக்க வேண்டாமா?கோபியர்களின் ச…
-
- 7 replies
- 2.4k views
-
-
2020; இந்த ஆண்டைப் பலர் சாபமான ஓர் ஆண்டாகவே நினைக்கிறோம். உலகளாவிய ரீதியில் சிறந்த ஆண்டாக இது அமையாவிட்டாலும், பலருக்கு இவ்வாண்டு ஓர் restart / reset / pause buttonகளாகவே அமைந்திருக்கிறது எனக் கூறலாம்; எதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறோம் எனத் தெரியாமல் ஓடியவர்களை நின்று நிதானமாகச் சிந்திக்கவும், ஓடும் நோக்கத்தை, பாதைகளை தமக்குகந்தவாறு மாற்றியமைக்கவும் உகந்த ஆண்டாக இந்த 2020அமைந்திருக்கிறது. இன்னும் பலருக்கு மறந்துபோன நம் கலை, கலாசார விழுமியங்களை, வாழ்க்கை முறைகளைத் தூசி தட்டி மீண்டும் அதிசய உணர்வோடும், ஆர்வத்தோடும் அனுபவித்தும், செயற்படுத்தியும் பார்க்கும் ஆண்டாக இது அமைந்திருக்கிறது; தாய்மண்ணை விட்டுப் பிரிந்த ஒருவர் மீண்டும் வந்து தாய்மண்ணின் வாசனையை குதூகலத்துடன் நு…
-
- 40 replies
- 3.9k views
-
-
புதுவாழ்வு தரும் இயேசுவின் உயிர்ப்பு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட மூன்றாம் நாளில், மீண்டும் உயிரோடு வந்ததை நினைவுகூரும் ஈஸ்டர் பெருவிழாவை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று (4-ந்தேதி) கொண்டாடுகின்றனர். இயேசுவின் உயிர்த்தெழுதல் குறித்து பைபிள் தரும் நிகழ்வுகளை இங்கு காண்போம். இந்த உலகில் இறையரசை நிறுவும் நோக்கத்துடன் மனித உரிமையை நிலைநாட்ட குரல் கொடுத்த இறைமகன் இயேசுவை, ரோமானியரின் உதவியுடன் யூத சமய குருக்கள் சிலுவையில் அறைந்து கொன்றனர். உண்மையையும், உரிமைக்குரலையும் கொன்று புதைத்து விட்டதாக பெருமைப்பட்ட அவர்களால், ஒரு நாள் கூட நிம்மதியாக உறங்க முடியவில்லை. கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு மீண்டும் உயிரோடு வந்து விடுவாரோ என்ற பயம் அவர்களைத் தொ…
-
- 0 replies
- 638 views
-
-
நேரடியாகவே விடயத்திற்கு வருகிறேன். நான் பதினாறு வயது வரை மிகுந்த மத நம்பிக்கை உள்ளவன். கடவுள் பக்தி உள்ளவன். நிறைய தேவாரங்கள், சிவபுராணம், கந்தசஸ்டி என்று மனப்பாடம் செய்து வைத்திருந்துள்ளேன். கோவில்களில் பூசாரி தேவாரம் ஓதுக என்று சொன்னதும் தேவாரம் நான்தான் பலமுறை பாடியிருக்கிறேன். அப்படி இருந்த நான் இப்படி ஆனது ஏன்? இந்து மதத்திலும், அது தருகின்ற கடவுள்களிலும், புராணங்களிலும் மிகுந்த நம்பிக்கையும், மதிப்பும் வைத்திருந்த என்னுடைய மாற்றத்திற்கு முதலவாதக வித்திட்ட புத்தகத்தின் பெயர் "தமிழீழம்" 1990களின் ஆரம்பத்தில் அந்தப் புத்தகம் என்னுடைய கையில் கிடைத்தது. பாவலரேறு பெருஞ்சித்தனார் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் தமிழீழப் போராட்டம் குறித்து எழுதியவற்றின்…
-
- 9 replies
- 3k views
-
-
ஈழ மணித் திருநாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள தனிச்சைவ கிராமம் குப்பிழான். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்,சிங்களவர் ஆகியோரால் ஈழநாடு அடிமை கொள்ளப்பட்ட போது பல ஊர்கள் தங்கள் தனித்துவத்தை இழந்தது. ஆனாலும் குப்பிழான் கிராமம் தன் தனித்துவத்தை என்றும் இழக்கவில்லை. எமது கிராமம் ஆனது தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய பங்கு மிக அதிகமாகும். சின்னஞ் சிறிய எமது கிராமத்தில் பல சைவ ஆலயங்கள் உள்ளன. இது தான் எமது மக்களின் தனித்துவமான அடையாளத்திற்கு சாட்சி. இன்றும் புலம்பெயர்ந்தாலும் எமது ஆலயங்களை கை விடவில்லை பலர் நிதி உதவிகளை வாரி வழங்கி ஆலயங்களின் புனர்நிர்மானத்திற்கு செய்யும் பங்களிப்பு அளப்பரியது. எமது பாரம்பரிய பண்பாடுகள் அழிந்து விடாமால் எமது புலம்பெயர் உறவுகள் கர்னனிடம் உள…
-
- 0 replies
- 678 views
-
-
பட மூலாதாரம், Facebook/DravidarKazhagam கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கியது பெரியார் என்றாலும் அந்த இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதிலும் அதன் சித்தாந்தங்களைத் தொடர்ந்து வடிவமைப்பதிலும் ஆண்களும் பெண்களுமாக பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து செயல்பட்டனர். அவர்களைப் பற்றி அறிமுகப்படுத்தும் ஒரு தொகுப்பு. (சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு பிபிசி தமிழ் வெளியிடும் சிறப்புத் தொடரின் மூன்றாவது கட்டுரை இது.) 1925ஆம் ஆண்டில் காங்கிரசில் இருந்து வெளியேறியதும் சுயமரியாதை இயக்கத்தை பெரியார் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் நீதிக் கட்சியினருடன் இணைந்து செயல்பட்டார் பெரியார். பல தருணங்களில் அவர்க…
-
- 0 replies
- 124 views
- 1 follower
-
-
நாம் ஏன் கடவுளை நம்மவேண்டும்..? 1.கடவுளுக்காக மனிதனை மனிதன் கொன்று குவிக்கும் காட்சிகள் கடவுளுக்கு தெரியாதா..? இல்லை அவர் ஆதரிக்கிறாரா..? 2.அப்பாவி மக்கள் லெபனான்,இலங்கை,ஈராக் என்று கொல்லபடும்போது கடவுள் சுற்றுலா சென்றுவிட்டாரா..? 3.கடவுளை காட்டுகிறேன் என்று சொல்லி பெண்களை அனுபவித்திலும், சொத்துகள் சேர்ப்பதையும் முழுநேர தொழிலாக ஆக்கிவிட்டவர்கள் கடவுள் ஏன் தண்டிப்பதில்லை..? 4. பச்சிளம் குழந்தைகள் கொடுரமாக கொலை செய்யப்டுகிறாரகள்..! ஒரு பெண்ணை 6 பேர் பாலியல் கொடுமை செய்கிறார்கள்..! இதை எல்லாம் கடவுளின் திருக்கண்ணுக்கு தெரியாதா..?-இல்லை.. இதெல்லாம் ஏற்றுக்கொள்ளும் ஒன்றை எப்படி கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியும்..? தயவு செய்து யாரும் அடுத்த…
-
- 4 replies
- 1.8k views
-
-
இன்றைய காலகட்டத்தில் கோயில்கள் அனைத்தும் நவநாகரீகத் தன்மை மிக்கதாகவும் பொருளாதார ரீதியில் உயரிய வருமானங்களைப் பெற்றுக் கொள்ளும் நிறுவனங்களையும் மாறியுள்ளதோடு வருமானத்தினைக் கொண்டு எவ்வாறு செலவு செய்வது எனத் தெரியாமல் ஆடம்பரமான செயற்பாடுகளுக்கு அதனை பயன்படுத்தும் வகையில் அமைவதோடு கோயில்சார் நிர்வாகக் குழுக்களுக்கு இடையேயான சுரண்டலும் அதன் காரணமான மனக்கசப்புக்களும் போட்டி மனப்பாங்குகளும் மிகஅதிகமாகவே காணப்படுகின்றன. ஆனால் இங்கு தெய்வங்களின் அருள்வாக்குகள் தெய்வங்கள் பேசுவது என்பது இவ்வகை கோயில்களில் மந்தகதியாகவே காணப்படுகிறன. ஆனாலும் பழமை வாய்ந்த ஆடம்பர, அலங்காரங்கள் இல்லாத எளிமையான கோயில்களில் காணப்படும் மனச்சந்தோஷம் மேற்குறித்த வகைக்கு உட்ப்பட்ட கோயில்களில் கிடைப்பத…
-
- 0 replies
- 740 views
-
-
செங்கற்பட்டு மாவட்டம் உத்தரமேரூரிலுள்ள முதலாம் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டொன்று குடவோலைத் தேர்தல் முறையைப்பற்றி மிகத் தெளிவாக விளக்குகிறது. ஊர்க்குழுவில் நிற்பவர்க்குறிய தகுதிகளையும், தேர்தல் விதிமுறைகளையும் அக்கல்வெட்டில் காணலாம். ஊர்க்குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுக்க தகுதிகள்:- 1. கால்காணி நிலத்துக்கு மேல் அரைக்காணி நிலத்தை உடையவர். 2. தனக்கு உரிமையுள்ள மனையில் வாழ்பவர். 3. 35 வயதுக்கு மேல் 75 வயதுக்குட்பட்டவர். 4. வேத சாத்திரங்களை கற்று பிராமணியத்தில் வல்லவர். 5. வேதாகம விருத்திகளை ஓதுவிக்கும் பயிற்சியை பெற்றவர். 6. அரைக்கால் காணி நிலமுடையவராக இருந்தாலும், நான்கு பாடியத்திலும் ஒரு பாடியத்தை முழுமையாகக் கற்றுணர்ந்தவர். …
-
- 0 replies
- 961 views
-
-
முத்துக் குளிக்க வாரீகளா...1 கவிக்கோ அப்துல் ரகுமான் கடவுள் துகள்! இந்தப் பிரபஞ்சம் எப்படிப் பிறந்தது? இதன் ஆதிமூலம் எது? ஆதிகாலத்தில் இருந்தே இதைப் பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கிரேக்க ஞானி டெமாக்ரிடஸ் காலத்தில் இருந்தே அணுதான் பிரபஞ்சத்தின் ஆதிமூலம் என்று விஞ்ஞான உலகம் நம்பி வந்தது. 1964-ம் ஆண்டு பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானி இந்த அணுக்கொள்கை மீதே ஓர் அணுக்குண்டைத் தூக்கிப் போட்டார். 40 ஆண்டுக் காலம் ஆராய்ச்சி செய்து, அணுவுக்கும் மூலமாக ஒரு பொருள் உண்டு என்று அவர் கூறினார். அந்த மூலத் துகள் அவர் பெயராலேயே ஹிக்ஸ் போஸான் என்று அழைக்கப்பட்டது. ஹிக்ஸ் சரி, …
-
- 31 replies
- 8.9k views
-
-
இந்த இரண்டு இணைப்புகளிலும் உள்ள காணொளிகள் விஞ்ஞானமும் சமயமும் வேறுபடுகிறது, ஏன் விஞ்ஞானம் வளர்கிறது, ................. எனும் விவாதம் விஞ்ஞானம் எதையும் முடிந்த முடிவு என ஏற்று கொள்வதில்லை, தொடர்சியாக ஏற்கனவே இருக்கும் கண்டு பிடிப்புகளை, கருத்துகளை விமர்சனத்துக்கும் கேள்விக்கும் உட்படுத்துகிறது ...... இப்படி நிறைய இருக்கிறது. முதல் 2.46 நிமிட காணொளி இரண்டாவதில் இருந்து எடுத்த சிறிய பகுதி.
-
- 2 replies
- 3.3k views
-
-
வணக்கம், நான் சில மாதங்களுக்கு முன்னர் யூரியூப்பில் இஸ்லாம் சம்மந்தமான மிகவும் கடுமையான தாக்குதல் செய்கின்ற காணொளிகளை பார்த்து இருந்தேன். அதில் பிரித்தனியாவைச் சேர்ந்த ஒரு நகைச்சுவையாளர் தான் இஸ்லாம் பற்றி நினைக்கின்ற எண்ணங்களை பரிமாறி இருந்தார். அடிப்படையில இஸ்லாம் மதத்தினரை இவரது பேச்சு, காணொளிகள் கோபம் செய்யக்கூடும் என்றாலும், இவரது பல கருத்துக்கள் சீர்தூக்கிப் பார்க்கப்படவேண்டியவை. நீங்களும் இவரது காணொளிகளை தற்செயலாக பார்த்து இருக்கலாம். அல்லது இவர்பற்றி அறிந்து இருக்கலாம். இவரது காணொளிகள் சிலவற்றை இங்கு இணைக்கின்றேன். யூரியூப் தளத்தில் இப்போது திருத்தவேலைகள் நடப்பதால் Dailymotion தளத்தில் உள்ள இவரது மூன்று காணொளிகளை இஞ்ச இணைக்கிறன். 49 காணொளிகளை யூரியூப்பில் இவர…
-
- 4 replies
- 1.8k views
-