மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம் சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலம் இடிக்கப்படுவது அமெரிக்க மற்றும் விடுதலைப் புலிகளின் கூட்டுச் சதி என்று விஸ்வ இந்துப் பரிஷத் குற்றம் சாட்டியுள்ளது. ராமர் பாலம் இடிக்கப்படுவதைக் கண்டித்து எதிர்வரும் 12ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாகவும் விஸ்வ இந்துப் பரிஷத் அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று விஸ்வ இந்து பரிஷத்தின் அகில உலக செயல் தலைவர் எஸ்.வேதாந்தம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இதன்போது இக்கருத்தை வெளியிட்டார். அவர் கூறியதாவது: ராமர் பாலம் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமைய…
-
- 265 replies
- 30.5k views
-
-
இராமாயணத்தோடு தொடர்புடைய இடங்கள் பற்றிய புனைகதைகள் இளவேனில் இராமாயண நிகழ்ச்சிகள் நடந்த இடங்களாகப் பல இடங்கள் தமிழ் நாட்டில் குறிப்பிடப்படுகின்றன. அல்லது இராமயணக் கதை மாந்தர்களோடு தொடர்பு படுத்தப்படுகின்றன. பல நாட்டு இலக்கிய ஆய்வாளர்களும், அகழ்வாராய்ச்சி அறிஞர் களும் இராமாயணம் குறிப்பிடும் இடங்கள் அனைத் தும் மத்தியப் பிரதேசத்திற்கு வடக்கில்தான் உள்ளன என்று முடிவு கூறியிருக்கிறார்கள். இலங்கைதான் இராமாயணம் குறிப்பிடும் இடங்களில் தென்கோடியிலுள்ளதாகச் சொல்லப்படுவது என்பது அனைவரும் அறிந்ததே. அதுகூட மத்தியப் பிரதேசத்தில் ஓர் ஏரியின் நடுவில் இருந்த தாக எச்.டி.சங்காலியா முதலிய ஆய்வாளர்கள் சான்றுகளோடு முடிவு கட்டியுள்ளார்கள். ஆனால், தமிழ்நாட்டில் பல தீர்த்தங…
-
- 0 replies
- 2k views
-
-
இராமாயணத்தைப் பற்றியும், மற்றும் பார்ப்பனர்களின் வேத சாஸ்திர புராணங்களைப் பற்றியும் சரித்திர ஆராய்ச்சியளார்களும், பேரறிஞர்களும் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்துக் கீழே தந்திருக்கிறோம். தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதவர்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது (ரொமேஷ் சந்திர தத்தர் சி.அய்.ஈ., அய்.சி. எஸ்.எழுதிய புராதன இந்தியா- 52 ஆவது பக்கம்) திராவிடர்கள் தங்கள் மீது படையெடுதது வந்த ஆரியர்களோடு கடும் போர் புரிய வேண்டியிருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன. (டாக்டர் ரொமேஷ் சந்திர மஜூம்தார் எம்.ஏ. வின் பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் 22 ஆவது பக்கம்). இராமாயணக்…
-
- 1 reply
- 7.8k views
-
-
அம்புலிமாமாக் கதை இராமாயணம் ஆக்கப்பட்டது. இராமாயணம் நடந்தாக கூறப்பட்ட காலம் திரேதாயுகம். திரேதா யுகம், துவாபர யுகம் இரண்டிற்கும், முறையே 12,96,000; 8,64,000 ஆண்டுகள். மொத்தம் 21,60,000 ஆண்டுகள். ஆகவே இப்போது நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம். புத்தர் பிறந்து இன்றைக்கு 2600 ஆண்டுகள்தான் ஆகின்றன. இவ்விதம் 2600 ஆண்டுக்குள் இருந்த புத்தரைப் பற்றி திரேதா யுகத்தில் (21,00,000 ஆண்டு களுக்கு முன்) நடந்ததாக கூறப்பட்ட இராமாயணத்தில் காணப்படுவன ஆதாரங்களுடன் கீழே தரப்படுகின்றன:- (சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு) 1. ராமனைப் பார்க்கவந்த பரதனிடம் ராமன் கேட்கும்போது பௌத்தன், சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்கள…
-
- 1 reply
- 2.8k views
-
-
இராமாயணம் மறைக்கப்பட்ட உண்மைகள் : வி.இ.குகநாதன் 09/10/2018 இனியொரு... பொதுவாக வான்மீகியினை ராமயணத்தை இயற்றியவராகவும், பின்னர் கம்பர் அதனைத் தமிழில் மொழிபெயர்த்தவராகவும் பலரும் அறிந்து வைத்திருப்பார்கள். உண்மையில் ராமாயணம் வான்மீகியால் எழுதப்படுவதற்கு முன்னரே மக்களிடம் நாட்டுப்புறக் கதையாக பல்லாண்டுகளாக இருந்துவந்துள்ளது. இதனாலேயே இந்தியாவினைத் தாண்டியும் யாவா,சீனா, தாய்லாந்து போன்ற பல இடங்களில் வேறுபட்ட வகைகளில் ராமாயணங்கள் உள்ளன. வான்மீகி ராமாயணத்திலிருந்து மாறுபட்ட பவுத்த ராமாயணம் இன்னொன்று இந்தியாவிலேயே உண்டு(அதில் ராமனும் சீதையும் உடன்பிறந்தவர்கள்). இவ்வாறு ராமாயணக் கதையானது வேறுபடுவதற்கு நெடுநாட்களாக வாய்வழியாகக் கடத்தப்படும்போது ஏற்பட்ட திரிப…
-
- 0 replies
- 1.1k views
-
-
இராமாயணம்: பல்கலை பாடத்திட்டத்தில் சர்ச்சை டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் இளங்கலை பட்டம் படிப்பு பாடத்திட்டத்தின் பகுதியாக இருந்த ராமாயணம் குறித்த ஆய்வுக் கட்டுரை வலதுசாரி சார்புடையவர்களின் எதிர்ப்பு காரணமாக நீக்கப்பட்டுள்ளதை நாட்டின் முன்னணி வரலாற்று அறிஞர்கள் கண்டித்துள்ளனர். மறைந்த ஏ கே ராமானுஜன் அவர்களால் எழுதப்பட்ட "300 இராமாயணங்கள் - ஐந்து உதாரணங்கள் - மொழிபெயர்ப்பு குறித்த மூன்று சிந்தனைகள்" என்ற புத்தகத்தில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் இராமாயண கதைகளில் உள்ள மாறுபாடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதில் வரும் கருத்துக்கள் இந்துக்களை புண்படுத்துவதாக இருப்பதாகக் கூறி ஒருவர் வழக்கு தொடுத்ததை அடுத்து இந்த விடயம் குறித்து ப…
-
- 1 reply
- 662 views
-
-
இராமாயண, மகாபாரதங்கள் சொல்லுவதும் புராணங்கள் பேசும் தொன்மங்களும் தென்னகத்தில் புழங்கி அது பின்னர் வடமொழியில் எழுதப்பட்டது என்றொரு முன்னீடு (Proposal) சில தமிழறிஞர்களால் வைக்கப்படுகின்றது. எனக்கும் பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போது அப்படித் தான் தோன்றுகிறது. பழைய இராமாயணங்கள் என்று திரு. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதியுள்ள 'மறைந்து போன தமிழ் நூல்கள்' என்ற நூலில் காட்டப்படும் சில எடுத்துக்காட்டுகள் அந்தக் கருத்திற்கு வலு சேர்ப்பதாக இருக்கின்றன. அதில் என் கவனத்தை மிகவும் கவர்ந்த ஒரு எடுத்துக்காட்டை இந்த இடுகையில் எடுத்து எழுதுகிறேன். இலம்பாடிழந்த என் இரும்பேர் ஒக்கல் விரல்செறி மரபின செவித்தொடக்குநரும் செவித்தொடர் மரபின விரற்செறிக்குநரும் அரைக்கமை மரபின…
-
- 11 replies
- 7.8k views
-
-
இன்று என் நண்பரான ஒரு சமூகவியல் பேராசிரியருடன் நாட்டு நடப்புகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் அவர் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வலுவான எதிர்க்கருத்துக்கள் நாட்டில் திரண்டு வருவதாகவும், தென்னிந்தியா - வட இந்தியா என ஒரு பிரிவினை தோன்றி வருவதாகவும் விரைவில் உள்நாட்டுக் கலகம் தோன்றக் கூடும் என்றார். நான் அவரிடம் எனக்கு வேறொரு பார்வை இது குறித்து உள்ளதாக சொன்னேன். இன்று பாஜகவின் சித்தாந்தத்துக்கு சார்பாகவோ எதிராகவோ மக்கள் சிந்திப்பதாகத் தோன்றவில்லை, மாறாக மக்களுக்கு சிந்திப்பதில் நம்பிக்கை போய்க்கொண்டிருக்கிறது என்றேன். நான் இதை என்னைச் சுற்றி உள்ளவர்களின் உளவியல், போக்குகள், நான் கற்பிக்கும் இளைஞர்களிடம் தென்படும் இயல்புகள், நாட்டுநடப்பு ஆகியவற்றை வைத்து சொல்கிறேன். ஜெயமோகன் ச…
-
- 1 reply
- 400 views
- 1 follower
-
-
குருவிடம் வந்தான் ஒருவன். ‘‘குருவே, என்னால் சந்தோஷமாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு’’ என்றான் வந்தவன். ‘‘அப்படியா?’’ ‘‘ஆமாம் குருவே. ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப சந்தோஷமா இருக்கான். எந்தக் கவலையுமில்லாம இருக்கான். எப்படினே தெரியல. என்னால அப்படி இருக்க முடியல.’’ குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார். ‘‘இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கிறது. இதை உன் பக்கத்து வீட்டுக்கஹீ£ரன் வாசலில் போடு. அதன்பிறகு என்ன நடக்கிறது என்று சொல்’’ என்றார். குரு சொன்னபடியே செய்தான் வந்தவன். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான். ‘‘குருவே, அவன் நிம்மதியே போச்சு.’’ ‘‘அப்படியா, ஏன்? அவனுக்குத்தான் ஒன்பது தங…
-
- 0 replies
- 874 views
-
-
இருள்சேர் இருவினை வினை செய்யப்படும் போது ஆகாமியம், பயன் தரும் வரை மறைந்த வடிவினதா யிருக்கும்போது சஞ்சிதம், சன்மானம், தண்டனை அதாவது இன்பத்துன்பமாய் அனுபவத்துக்குவரும்போது பிராரத்தம் எனப்படும். இவ்வாகாமிய சஞ்சித பிராரத்தங்கள் மூலகன்மம் என்பதை உபாதானமாய்க் கொண்ட காரியமாய்ப் பலவகையாம். சத்தியம் பேசினால் சன்மான முண்டு என்பது சட்டம். அரிச்சந்திரன் சத்தியம் பேசிச் சன்மானிக்கப்பட்டான் என்பது நிகழ்ச்சி. இவ்விரண்டனுள் காலத்தால் முந்தியது இந்நிகழ்ச்சியா? அச்சட்டமா? கொலை செய்தால் தண்டனை யுண்டு என்பது சட்டம். கொற்றன் கொலை செய்து தண்டிக்கப்பட்டான் என்பது நிகழ்ச்சி. இவ்விரண்டினுள் முந்தியது இந்நிகழ்ச்சியா? அச்சட்டமா? சட்டங்களே நிகழ்ச்சிகளுக்கு முந்தியனவாதல் வேண…
-
- 2 replies
- 1.6k views
-
-
சிவபுராணத்தின் படி, ஒருவன் இறக்கப் போகிறான்... என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!! இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைவோம். சாதிக்கும் யாருக்கும் இறக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது. இருப்பினும், நிச்சயம் ஒரு கட்டத்தில் அனைவரும் இறக்க நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது. இத்தகைய இறப்பை சந்திக்கும் முன்பு ஒருசில அறிகுறிகள் தென்படும். மேலும் சிவபுராணத்தில் ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சிவபுராணத்தின் படி, பார்வதி தேவி சிவனிடம் ஒருவன் இறக்க போகிறான் என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்டுள்ளார். அப்போது சிவன் ஒருசிலவற்றை…
-
- 27 replies
- 14.4k views
-
-
இறப்போர் நல இல்லம்- அருட் தேவதை அன்னை தெரெஸா தோன்றிய வரலாறு: 1950 ஆண்டில் அன்னை தெரேசாவின் இலட்சிய பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது... அவர் இதுவரை ஏழை எளியவர் பற்றிய சிந்தனைகளிலேயே முழ்கி இருந்தார்..அவர்களின் அறியாமையை அகற்றி கல்வி வெளிச்சத்தினை தருவதையே முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்தார்.இவ்வாறு வறியவர்களுக்கு மட்டும் உதவினால் போதாதாது சாக இருக்கின்றவர்களுக்கும் உதவிட வேண்டும் என்ற எண்ணம் இந்த நாட்களில் தான் ஏற்பட்டது. ஒரு முறை அன்னையும் அவர் குடியிருந்த வீட்டு உரிமையாளர் மிக்கேல் கோமஸும் ஒர் அலுவல் பொருட்டு டிராம் வண்டியில் ஏறுவதற்காக நின்றிருந்தனர்.அந்த டிராம் வண்டி நிறுத்ததற்கு எதிரேயே அரசு மருத்துவமனை இருந்தது. இதன் பெயர் …
-
- 4 replies
- 1k views
-
-
இறுதியாக விவேகானந்தரின் சிக்காகோ சொற்பொழிவு! மனதை மட்டுமல்ல; மக்களையும் திருத்த நினைத்த ஆன்மிகவாதி. உள்ள வலிமைக்கு இணையாக உடல் வலிமையையும் தூண்டிய பலசாலி. அரங்கிலும் அந்தரங்கத்திலும் நிறம் மாறாத நிஜ சாமி! நரேந்திரநாதன் வீட்டார் வைத்த பெயர். நரேன் என்றே அதிகமாக அழைக்கப்பட்டார். நண்பர்களுக்கு 'குட்டிப் பிசாசு'. அந்தக் காலத்து சென்னைவாசிகளுக்கு அவர் 'பயில்வான் சாமி'. அமெரிக்காவில் இருந்து எதிரொலித்த பிறகு 'விவேகானந்தர்' என்ற பெயரே உலகம் முழுமைக்கும் ஒலித்தது! கோச் வண்டி ஓட்டுபவனாக வர வேண்டும் என்று நரேன் நினைத்தார். அப்பா விசுவநாத தத்தர், வழக்கறிஞராக்க முயற்சித்தார். தன் மகளைத் திருமணம் செய்துகொண்டால் ஐ.சி.எஸ்., ஆக்குவதாக மாமனார் சொன்னார். 'என்னோடு…
-
- 0 replies
- 1.2k views
-
-
இறைமை இயற்கை புதிய தொடர்: இறைமை என்பது கரை காண முடியாத கடல். முடிவில்லாத பாடல். இறைத் தவம் என்பது காலத்தை மறந்து அல்லது காலத்தைக் கடந்து காத்திருப்பது அல்ல; காலங்கள் அற்ற காலத்தில் உலாவுவது. அத்தகைய இறைமையை இடைவெளியில்லாத, இறுகத் தழுவிய நெருக்கத்தில் புரிந்துகொள்ள வேண்டுமானால், பாலோடு தேனாக, காற்றொடு மணமாக ஒன்றுகலக்க வேண்டுமானால், இயற் கையைப் புரிந்துகொள்வதும் இயற்கையோடு கரைந்து கலந்துபோவதும் அவசியம். ஏனென்றால், இறையும் இயற்கையும் வேறு வேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான். ஒன்றோடு ஒன்றாகவும், ஒன்றுக்குள் ஒன்றாகவும் இருப்பவை அவை. இறை என்பது இயற்கை…
-
- 12 replies
- 5k views
-
-
ஒருவர், தான் செய்த கொலைக்கு பரிகாரமாக, கொலை செய்யப்பவரின் குடும்பத்தினர் சம்மதித்தால், ஈட்டுத்தொகை கொடுத்து கொலை குற்றத்திற்கான தண்டனையில் இருந்து தப்பிவிடலாம் என்பது அறிவுசார்ந்த சட்டமாக இருக்க முடியுமா..? அடிப்படையில் இது பணவசதி உடைய, பொருளாதாரத்தில் சமூக அடுக்கில் உயரத்தில் இருப்பவர்களுக்கு சாதகமாகவும், ஏழைகளுக்கு பாதகமானதுமான சட்டம் இல்லையா..? சாதாரண மனிதர்கள் இயற்றும் சட்டத்திலேயே இம்மாதிரியான வர்க்க பேதத்தை தூக்கிப்பிடிக்கும் சட்டங்கள் இல்லாதபோது, இறவனால் அருளப்பட்டதாக நம்பப்படும் சட்டத்தில் இது இருப்பது அபத்தம் இல்லையா..? குரான் 4:92 ஒரு முஃமின் பிறிதொரு முஃமினை கொலை செய்…
-
- 2 replies
- 1.1k views
-
-
இறைவனிடம் கையேந்துங்கள்! இஸ்லாமிய பாடலை சாமியார்கள் பாடுகின்றனர் ! கேளுங்கள் பாருங்கள்! https://www.youtube.com/watch?v=M1A8nKBxZ2g
-
- 3 replies
- 1.2k views
-
-
-
- 22 replies
- 3.4k views
-
-
இரண்டு நண்பர்கள் பயணம் செய்தார்கள் ...........இடையில் இருவர்க்கும் நல்ல பசி .....ஒருவன் உணவு எடுத்துச்சென்றான் மற்றவன் உணவு கொண்டு செல்ல மறந்துவிட்டான் .............உணவு எடுத்துச்சென்றவன் சாப்பிடத்தொடங்கினான் ...மற்றவனுக்கு கொடுக்கவில்லை ................அவனுக்கு பசி வயிற்றை கிள்ளியது ...அவனிடம் இருந்து உணவு கிடைக்குமா என்று ஏங்கினான் ...........ஆனால் அவன் கொடுக்காமல் ஒரு வெட்டு வெட்டிக்கொண்டிருந்தான் .............தாங்க முடியாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தவனிடம் கூறினான் .....உன்னைப்போல் உன் அயலானையும் நேசி ..........................அதற்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் கூறினான் ..................பிறை பண்டங்களின் மேல் ஆசைப்படாதே என்று ...................... இரண்டும் மனித ந…
-
- 0 replies
- 646 views
-
-
இறைவனை எட்டுதல்! கடும் பசியுடன் இருந்த சிறுவன் ஒருவன் ஒரு வீட்டை தட்டினான். இளம் பெண் ஒருத்தி கதவைத் திறந்தாள். "குடிப்பதற்கு தண்ணீர் கொடுங்கள்" என்று கேட்டான். ஆனால் அவன் பசியுடன் இருப்பதை உணர்ந்து கொண்ட அந்த பெண் ஒரு கோப்பையில் சூடான பால் கொண்டு வந்து கொடுத்தாள். நன்றியுடன் பெற்றுக்கொண்ட அந்த சிறுவன், கட கட வென குடித்து முடித்தான். பிறகு, " இதற்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும்?" என்று கேட்டான். "ஒன்றும் வேண்டாம், அன்புடன் கொடுக்கும் எந்த பொருளுக்கும் பணம் பெறக்கூடாது என்பது என் தாயின் அறிவுரை" என்றால் அந்த பெண். அவன் நன்றியுடன் விடை பெற்றான். காலம் பறந்தது. அந்த பெண் திடீரென்று நோய்வாய் பெற்றாள். அந்த ஊர் மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் அவளது…
-
- 8 replies
- 1.8k views
-
-
அப்படியான ஒரு நாழுக்காகத்தான் பலர் காதிருக்கின்றார்கள். உங்களுக்கு மட்டும் ஏன் இந்த நப்பாசை. இறைவன் இருக்கிறார் எனக் கூறும் எவரும் இறைவனை இதுவரைக்கும் யாருக்கும் காட்டியதில்லை தாமே பார்த்ததாகத் தான் சொல்கின்றனர். நான் அண்மையில் கேள்விப்பட்ட ஒரு சமபவம். இலங்கையின் மட்டக்களப்பில் ஒரு கிராமத்தில் நடந்தது. ஒருவர் இரவு பதினொரு மணிக்கு ஒரு ஆரசமரத்தை தாண்டி நடந்து வந்திருக்கிறார். அதைத்தாண்டிவந்தவர். தனது ஊரை வந்தடைந்தவுடன் எல்லோரையும் கூட்டி "நான் இரவு முருகனை இந்த ஆலமரத்தடியில் கண்டேன். தனக்கொரு கோவில் இந்த ஆலமரத்தின் கீழ் கட்டவேண்டும். அப்பொழுதுதான் நான் இந்த கிராமத்தினை பாதுகாக்க முடியும்" என முருகன் தன்னிடம் கூறியதாக கூறினார். அவர் சொன்னது சில வேளை உண்மையாக் கூட இர…
-
- 12 replies
- 3.2k views
-
-
"இறைவன் நம்மை தேடி வருவார்..." "இறைவன் நம்மை தேடி வருவார்..." புதிதாக தன்னிடம் வந்து சேர்ந்த சீடனிடம் குரு கேட்டார், “ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?” புதிய சீடன், “இறைவனை அறிவது தான், அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம்...” “அப்படியா?” “என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்... அப்படித்தானே இருக்க முடியும்?” “சரி. இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ?” “இல்லை. ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்.” “நல்லது... உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?” சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான். “நம்புகிறேன்... இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவ…
-
- 0 replies
- 620 views
-
-
[size=3][size=4]பல இறை அவதாரங்கள் நிகழ்ந்துள்ளது என்றும் பல இறைதூதர்களை இறைவன் அனுப்பியுள்ளான் என்றும் சில பல மதங்கள் கூறுகின்றன. இந்தஇறைவன்களும் இறைத்தூதர்களும் சாதித்தது என்ன[/size][/size] [size=3][size=4]என்று சற்று திறந்த மனதுடன் சிந்தித்து பார்த்தால் இவர்கள் இறைவன்களும் அல்ல இறைத்தூதர்களும் அல்ல என்ற முடிவிற்கு நம்மால் வரமுடிகிறது. அல்லது அவர்கள் போல நம்மாலும் இறைவனாகவும், இறைத்தூதர்களாகவும் வரமுடியும் என்ற அபரிமிதமான நம்பிக்கையை அளிக்கின்றது. முதலில் இறைவன்கள்,இறைத்தூதர்கள் என்ன செய்தார்கள் என்று பார்ப்போம். ௧.இறைவனின் அவதாரங்கள் என்று கூறப்படுபவர்கள் சிலபல அரக்கர்களை கொன்றதாக நாமறிவோம். அரக்கர்களை கொன்று மக்களுக்கு நன்மை செய்தனர். இன்று இந்த வேலையை…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஏட்டில் எழுதி வைத்தேன், எழுதியதை சொல்லி வைத்தேன்.. இறைவா, காட்சி சொல்லும் கதை ஏதடா..? தொடர்ச்சியான தோல்வியின் விளைவுகளால் மனம் நொந்த ஒருவன்,(பாஞ்சு, கவனிக்க - அது நானல்ல! ) கடவுளிடம் மிகுந்த சலிப்பும் கோபமும் கொண்டு அவரை கூவி அழைத்தான். அவனின் ஆழ்ந்த கேவல் கண்டு, கடவுளும் அவன் முன் தோன்றி ஏனென்று வினவினார்.. இனி அவர்களின் உரையாடல்! அவன்: கடவுளே, நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? கடவுள்: தாராளமா..! என்ன கேள்வி? அவன்: கேட்டால் சிரிக்ககூடாது! கடவுள்: ம்..இல்லை, சொல்லுங்கள்! அவன்: ஏன் இன்று எனக்கு எதுவுமே சரியாக நடக்கவில்லை...? கடவுள்: புரியும்படி விளக்கமாக சொல்லவும். அவன்: இன்று நான் தாமதமாகவே படுக்கையை விட்டு எழ முடிந்…
-
- 14 replies
- 1.4k views
-
-
இலங்கை உபன்யாசம் அய்ரோப்பா, ஆப்பிரிக்கா, ரஷ்யா முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, இலங்கை வழியாக இந்தியாவுக்குத் திரும்புகையில், 1932ஆம் வருடம் அக்டோபர் 17ஆம் தேதி கொழும்பு வந்திறங்கிய தந்தை பெரியார் அவர்களுக்கு இலங்கையில் கொழும்பு, கண்டி, நாவல்பட்டி, ஹட்டன், யாழ்ப்பாணம், பருத்தித் துறை முதலிய இடங்களிலும், இந்தியாவில் தூத்துக்குடி, மதுரை முதலாகிய இடங்களிலும் பல நிறுவனங்களின் பேரால் அளித்த பல வரவேற்பு நிகழ்ச்சிகளிலும், பொதுக் கூட்டங்களிலும் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரைகளிலிருந்து கடவுள் பற்றி திரட்டியது, (குடிஅரசு, 20.11.1932). தோழர்களே! கடவுள், மதம், ஜாதியம், தேசியம், தேசாபிமானம் என்பவை எல்லாம் மக்களுக்கு இயற்கையாக தானாகவே ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்…
-
- 0 replies
- 957 views
-
-
இலங்கையில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்கள்.... 01...நல்லூர் கந்தசுவாமி கோயில்.,,, நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில்இ யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது... 02...மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்.,,,, இலங்கையில் காணப்படும் இந்து திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த திருத்தலமாக மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் காணப்படுகிறது. மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் இலங்கையின் வடபாகத்தில் காணப்படுவதுடன் யாழ் - காங்கேசன்துறை வீதியில் சுமார் 9 மைல் தொலைவில் உள்ளது . 03...செல்வச் சந்நிதி…
-
- 0 replies
- 1.7k views
-