Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. நெருக்கடி என்ன – தீர்வு என்ன? முன்னிலை சோஷலிஸக் கட்சியின் வேலைத்திட்டம் சம்பந்தமாக அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளுக்கான பதில்கள் 01. இலங்கையில் பல அரசியல் கட்சிகள் இருக்கும்போது முன்னிலை சோஷலிஸக் கட்சி என்ற பெயரில் இன்னொரு கட்சி எதற்கு? இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பல கட்சிகள் உண்டு. அவற்றிற்கு மத்தியில் நூறுக்கும் மேற்பட்ட கட்சிகள் பதிவிற்காக விண்ணப்பித்துள்ளன. அரசியல் கட்சிகள் எவ்வளவு இருந்தாலும், அவற்றை இரு வகையாகப் பிரிக்கலாம். அதாவது, தற்போதைய பொருளாதாரம், அரசியல் மற்றும சமூக முறையை இப்படியே நடாத்திச் செல்வதற்காக தோற்றி நிற்கும் கட்சிகள் மற்றும் இந்த முறையை மாற்றுவதற்காக தோற்றி நிற்கும் கட்சிகள். படித்தவர்களை பாராளுமன்…

  2. தேசிய வாதத்தின் நாசகாரப் பரிணாமங்கள்(1):அ.கௌரிகாந்தன் 01/03/2021 இனியொரு... அத்தியாயம் 1 பாசிசவியல் ஒரு கதம்பம், இருந்த போதும் அது ஒரு தேசிய முழுமை பாசிசவியலானது, தனக்குத்தானே முரண்பாடுகளைக் கொண்டுள்ள சித்தாந்தங்களினதும், முக்கியத்துவமிக்க நிர்வாக, நிறுவன, பொருளா தார மற்றும் சமூக நிர்பந்தங்களினது கட்டளைகளுக்கு ஈடுகொடுக்கக் கூடிய முறையில், சித்தாந்தத்தில் ஏற்படுத்தப்பட்ட நடைமுறைத் திருத்தங் களினதும் அபூர்வமானதோர் கலவையாக பார்க்கப்பட வேண்டியது கட்டாயமாகிறது. பாசிசவியல், முன்பின் முரண்களின் அபூர்வ கலவை ஹிட்லரும்A1, முசோலினியும்M2 கடந்து போன நிகழ்வுகளாகும். ஆனால் பாசிசவியல் ஒரு கடந்துபோன நிகழ்வல்ல. அது கடந்த காலத்தில் இருந்தது, …

  3. இந்த நாள் இனிய நாள் http://www.youtube.com/watch?v=cx89nyROqu8&feature=player_embedded

    • 1 reply
    • 1.6k views
  4. உ சிவமயம் திருச்சிற்றம்பலம் தட்சிணாமூர்த்தி "கல்லாலின் புடையமர்ந்து நான்மறைஆறங்க முதற்கற்ற கேள்வி வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டிச் சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைத்து பவத்தொடக்கை வெல்லாம்" - பரஞ்சோதி முனிவர்: திருவிளையாடற் புராணம். சிவபெருமான், யோகம் இசை மற்றும் ஏனைய அறிவியற் கலைகளைக் கற்பிக்கும் திருக்கோலத்தில் ஞானாசிரியனாக - தட்சிணாமூர்த்தி என வழிபடப் பெறுகிறார். தட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு, ஞானம், சாமர்த்தியம் என்ற பொருள் உண்டு. தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். இறைவன் தெற்கு நோக்கி அமர்ந்து…

    • 3 replies
    • 4.3k views
  5. அரண்மனையில் அரசியின் நகை ஒன்று காணாமல் போனது. குறிப்பிட்ட நாட்களுக்குள் கண்டு பிடித்துக் கொடுத்தால் தக்க பரிசு வழங்கப்படும் என்றும், அதன்பின் யாரிடமாவது இருப்பது தெரிய வந்தால் மரண தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்றும் மன்னனால் அறிவிக்கப்பட்டது. ஞானி ஒருவர் அந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். வழியில் ஒரு நகை கிடை ப்பதைப் பார்த்து எடுத்தார். அது பற்றி விசாரித்தபோது அது அரசியின் நகை என்பதும் அது குறித்த அறிவிப்பு பற்றியும் அறிந்தார். மன்னன் பரிசு கொடுக்க தீர்மானித்த நாளுக்கு முன்னரே ஞானியின் கையில் நகை கிடைத்து விட்டது. ஆனால் அவர் உடனே கொண்டு போய் கொடுக்காமல் அந்த நாள் கடந்ததும் மன்னனிடம் கொண்டு போய்க் கொடுத்தார். மன்னன் முழு விபரமும் கேட்டுத் தெரிந்து கொண்டு,''நீங்…

  6. தோல்வி என்றால் உண்மையில் என்ன? 1. தோல்வி என்றால் நீங்கள் தோற்றபின் என்று பொருள் அல்ல!! நீங்கள் இன்னும் வெற்றியடையவில்லை என்று தான் பொருள் படும்!! 2. தோல்வி என்றால் நீங்கள் எதையும் சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல!1 சில பாடங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று தான் பொருள்!! 3. தோல்வி என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாகப் பொருள் அல்ல!1 முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் இருக்கிறது என்பது பொருள்!1 4. தோல்வி என்றால் உங்களிடம் அறிவு இல்லை என்று பொருள் அல்ல!! வேறு உத்திகளைக் கையாள வேண்டிய அவசியத்தினை உணர்ந்துவிட்டீர்கள் என்பது தான் பொருள்!! 5. தோல்வி என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் அல்ல!! மீண்டும் ஆரம்பிக்க ஒர…

  7. பிரதோஷ காலத்திலே சிவலிங்கப் பெருமானை எப்படித் தரிசித்தல் வேண்டும்? இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், இடமாகச் சென்று, சண்டேசுரரைத் தரிசித்துச் சென்று வழியே திரும்பி வந்து, மீண்டும் இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும், வலமாகச் சென்று வட திசையைச் சேர்ந்து, கோமுகையைக் கடவாது, முன் சென்ற வழியே திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அங்கு நின்றும் இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்து, அங்கு நின்றுந் திரும்பி, இடபதேவரைத் தரிசியாது, வலமாகச் சென்று, வடதிசையைச் சேர்ந்து அங்கு நின்றுந் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசியாது, இடமாகச் சென்று சண்டேசுரரைத் தரிசித்துத் திரும்பி வந்து, இடபதேவரைத் தரிசித்து, அவருடைய இரண்டு கொம்பினடுவே பிரணவத்தோடு கூட ஹர ஹர என்று சொல்லிச், சிவலிங்க…

  8. இனி நீ என்னுடன் இருக்கக் கூடாது..! அகத்திய சித்தர் தென்பாண்டி நாட்டில் தங்கியிருந்த சமயம் அது. பாண்டிய மன்னன் ஒருவன் அவரை வணங்க வந்தான். அவனுக்கு முதுகில் கூன் இருந்தது. தனது பரம்பரையே இப்படி கூன் விழுவதாக அவன் அகத்தியரிடம் சொல்லி வருத்தப்பட்டான். அகத்தியர் அவனுக்கு ஆறுதல் சொல்லி, பிறவிக்கூனை குணப்படுத்த தன்னிடம் மூலிகைகள் உள்ளதாகவும், சில நாட்கள் கழித்து ஆஸ்ரமத்திற்கு வரும்படியும் சொல்லி அனுப்பினார்.மன்னன் நம்பிக்கையுடன் சென்றான். தேரையரை அழைத்த அகத்தியர், சீடனே! கூனை நிமிர்த்தும் மூலிகை வகைகளின் பெயர்களைச் சொல்கிறேன் கேள். அவற்றை காட்டிற்குள் சென்று பறித்து வா, எனச்சொல்லி, மூலிகைகளின் அடையாளம் மற்றும் குணத்தையும் எடுத்துச் சொன்னார். தேரையரும், அகத்தியர் கூறியப…

    • 0 replies
    • 2.8k views
  9. ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒன்று பட்ட உணர்நிலை பற்றி கூறுவது பற்றிய விளக்கம்

  10. பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி தொன்மை மிக்கது. நம் முன்னோர்கள் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன் தாழியினுள் தன் தாத்தா/பாட்டி உடலை வைத்துப் பாதுகாப்பாக அடக்கம் செய்துள்ளனர். அடக்கம் செய்தனர் என்பதை விடப் பாதுகாப்பாக வைத்துள்ளனர் எனலாம். இது மாதிரி எகிப்தின் மக்கள் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்னரே வலிமையான பிரமிடை அமைத்துப் பதப்படுத்தப்பட்ட இறந்த உடலைப் பாதுகாத்து வைத்துள்ளனர். இது மட்டுமல்ல நம் ஊர் தாழிகளிலும் பிரமிடுகளிலும் இறந்தவர்கள் உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்துவைத்துள்ளனர். பண்டையகால மக்கள் ஏன் இப்படி இறந்தவர்கள்…

  11. இன்று நயினை நாகபூசணி அம்மன் ஆலயக் கொடியேற்றம்

  12. கீதை காட்டும் பாதை - இளங்கோ நம்மில் பலர் ஏதாவது நூலை படிக்கும் முன்பே அது தொடர்பான அதீத மயக்கத்தில் ஆழ்ந்திருப்பார்கள். அண்மையில் எனது நண்பர் ஒருவர் பகவத் கீதையைப் பற்றி என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தார். கீதை ஒரு தலை சிறந்த நூல் என்றும் அது போதிக்கும் தத்துவங்கள் மகத்தானவை என்றும் அவர் கூறிக் கொண்டிருந்தார். அவரிடம் ஐந்து நிமிடங்கள் பேசிய பின்தான் எனக்குத் தெரிந்தது கீதையானது போர்க்களத்தின் நடுவில் கண்ணனால் அருச்சுனனுக்கு சொல்லப் பட்டது என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் அவருக்கு தெரிந்திருக்கவில்லை என்று. அது மட்டுமல்ல எது நன்றாக நடந்ததோ அது நன்றாகவே நடக்கும் என்று தொடங்கும் கீதையின் அந்த வரிகள் இல்லாத ஈழத் தமிழர் வீடுகள் இருக்குமோ என நான் ஐயுறும் அளவிற்கு நான் சென்ற அத…

  13. படத்தின் காப்புரிமை Universal History Archive Image caption கிறித்துவ தூய்மைவாதிகள் மதத்தின் கடும் விதிகளை பின்பற்றி வாழ்ந்தனர் அது ஒரு காலம். அப்போது கிறிஸ்துமஸ் கொண்டாடுவது என்பது ஆங்கிலேயர்களால் கிறித்தவர்கள் செய்யக்கூடாத ஒரு செயலாக பார்க்கப்பட்டது. கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் எண்ணினார்கள். ஒவ்வொரு டிசம்பர் மாதமும், பொதுமக்கள் மத்தியில் வழக்கத்து மாறான வகையில் ஆடம்பரமான ஒரு உண்டாகும். மக்கள் சற்று அதிகப்படியான நடத்தையை வெளிப்படுத்துவார்கள். அது கிறித்தவ வாழ்வுக்குச் செய்யும் அவமானம் என்றெல்லாம் எண்ணினார்கள். …

  14. மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது . நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள். இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது, ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று …

  15. வணக்கம் கள உறவுகளே ! இந்த இறுதிப் பதிவுடன் " மறந்த நாயன்மார் அறுபத்துமூவர் " என்ற தொடரை முடிவுக்குக் கொண்டு வருகின்றேன் . இந்தத் தொடர் பலவாசகர்களை சென்றடைந்து , தொடரின் நோக்கம் நிறைவேறியதில் மிகவும் மகிழ்சி அடைகின்றேன் . இத்தொடருக்கு ஆதரவினை வளங்கிய அனைத்து கள உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . நேசமுடன் கோமகன். *************************************************************************** [size=5] 63 விறன்மிண்ட நாயனார் . [/size] “விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை . சேரநாட்டுச் செங்குன்றூரில் வேளான்குடி விளங்க அவதரித்தவர் விறன்மிண்டர். அவர் சிவனடியே பற்றாகப் பற்றி ஏனையபற்றெல்லாவற்றையும் முற்றாகத் து…

  16. திருவெம்பாவை பெண் போட்ட நிபந்தனை பாவை நோன்பு நோற்பது நல்ல கணவனை அடையவும், நல்ல மழை பொழிய வேண்டும் என்பதற்காகவும்தான். தன்னை ஒரு பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்ட மாணிக்கவாசகர், தனக்கு எப்படிப்பட்ட கணவன் வேண்டும் என்று இறைவனிடம் நிபந்தனை விதிக்கிறார். இப்போது பரவலாக ஒரு பேச்சு என்னவென்றால் பெண்கள் திருமணத்திற்கு நிறைய கண்டீஷன்கள் போடுகிறார்கள் என்பது. ஆனால் நம் நாட்டில் அந்தக் காலத்திலேயே நிபந்தனை விதித்து திருமணம் செய்து கொண்ட பெண்களை நாம் குமார சம்பவத்திலும், மகாபாரதத்திலும் பார்த்திருக்கிறோம். இங்கே திருவெம்பாவை பெண் என்ன நிபந்தனை விதிக்கிறாள்? மணமகளை கைபிடித்து இன்னொருவன் கையில் ஒப்படைக்கும் தாரை வார்த்தல், அல்லது கைத்தலம் தருதல் என்னும…

  17. நம் பாவ - புண்ணியக் கணக்கை எழுதும் சித்ரகுப்தன்! சித்ரா பெளர்ணமியில் அன்னதானம் செய்தால் சொர்க்கம்! சித்ரா பெளர்ணமியன்று (7.5.2020 வியாழக்கிழமை) சித்ரகுப்தனை மனதார வழிபடுங்கள். அவரை வேண்டிக்கொண்டு தான தருமங்கள் செய்தால், சித்ரகுப்தனின் அருள் கிடைக்கப்பெறலாம். எம பயம் விலகி நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது ஐதீகம்! திருக்கயிலாயத்தில், பார்வதிதேவி, தோழியருடன் இருந்தாள். அப்போது பொற்பலகையில் சித்திரம் ஒன்றை வரைந்தாள். மிகவும் அழகாக இருந்த சித்திரம் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்று ஆவலுடன் பேசிக்கொண்டார்கள். அதன்படி பார்வதிதேவி தான் வரைந்த ஓவியத்துக்கு உயிர் கொடுத்தாள். அந்தச் சித்திரத்தில் இருந்து வெளிப்பட்டான் ஒருவன். …

  18. மனமே! சிந்தனை செய் 1. திருவருட்பா பாடிய இராமலிங்கர் அருளாளரா? 2. அப்பாடல்களை அருட்பா என்று சொல்லலாமா? 3. சொன்னால் பாபமில்லையா? 4. படித்தால், பாடினால் ஆன்மலாபம் கிட்டுமா? தெளிந்து செயலாற்று

  19. ஆபாசமா?: இந்துப் பெண் கடவுள்களை ஆபாசமாக சித்தரித்ததாக புகழ்பெற்ற ஓவியர் எஃப்.எம். உசேன்மீது தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்புஅளித்துள்ளது. இந்து மதத்தின் கடவுள்களே ஆபாசத்தில் பிறந்து, ஆபாசத்தில் திளைக்கக் கூடியவைதான். அகலிகையை நிர்வாணமாக வரவேண்டும் என்று மும்மூர்த்திகள் கேட்கவில்லையா? தன்முதுகில் இவ்வளவு அழுக்குப் பத்தைகளை வைத்துக்கொண்டு, ஓர் ஓவியர் இந்து மதக் கடவுள்களை ஆபாசமாக வரைந்துவிட்டார் என்று வழக்குத் தொடுப்பதில் அர்த்தம் உண்டா?

  20. [size=5]02 செல்லப்பா சுவாமிகள் .[/size] http://inuvilkovil.w...690/1690831.jpg ஈழத்துச் சித்தர்கள் பாகம் ஒன்றைப் பார்க்க இங்கே அழுத்துங்கள் http://www.yarl.com/...howtopic=105328 செந்தமிழும் சைவநெறியும் வளர்த்த யாழ்ப்பாணத்தின் தலைநகராய் விளங்கியது நல்லூர். நல்லூர்க்கந்தன் இருந்து அருள் பாலிக்கும் இவ்வூரில் நல்லூர் தேரடிக்கு தென்புறத்தே வயல்நிலங்கள் பல இருந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலே யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்த வல்லிபுரம் என்னும் வேளாளர் நல்லூரைச்சேர்ந்த பொன்னம்மா என்பாரை மணந்து இங்கே வேளாண்மை செய்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமாக நான்கு பிள்ளைகள். ஆண்களில் ஒருவரின் பெயர் செல்லப்பா. செல்லப்…

  21. [size=2] [size=4]போதிதர்மர் என்னும் துறவி தமிழகத்திலிருந்து கிளம்பி பௌத்த தொண்டாற்ற சீனா வருவதாகவும், அவர் பல்லவ நாட்டின் தலைசிறந்த பிக்கு என்றும், ஏற்கெனவே போதிநிலையை அடைந்தவர் என்றும், அவர் பல்லவ இளவரசராகப் பிறந்து பௌதத்தை ஏற்று துறவி ஆனவர் என்றும், தீர்க்கதரிசி என்றும், எங்கள் உடன்பிறந்தவர் என்றும் தமிழகத்திலிருந்து பல்லவர்கள் புறாக்கள் மூலமாக சீனா முழுவதும் உள்ள நாடுகளுக்கு செய்தி அனுப்பினர்.[/size][/size] [size=2] [size=4]எனவே, சீன அரசர்களும் போதிதர்மருக்கு உலகமே போற்றும் விதம் வரவேற்பு அளிக்கவேண்டும் என்று முடிவு கட்டிக் காத்திருந்தனர். போதிதர்மர் தென்சீனம் சென்று சேர்ந்தபோது மாபெரும் மக்கள் கூட்டம் அவரை வரவேற்கக் காத்திருந்தது.[/size][/size] [size=2] [siz…

  22. - என்.கணேசன் ”எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?” என்று பாடினான் பாரதி. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று வியந்து மகிழ்கிறானே எப்படி? அவன் கண்ட ஆனந்தம், அவன் கண்ட இன்பம் எங்கிருந்தது? எப்படி வந்தது? வீதியில் நின்று சற்று நேரம் வருவோர் போவோரைக் கவனியுங்கள். எத்தனை முகங்களில் ஆனந்தம் தெரிகிறது? விரையும் மனிதர்கள் முகத்தில் கரைக்க முடியாத கவலைகளும், சிந்தனைகளும் அல்லவா தெரிகிறது? இதில் பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் ஏதும் தெரிவதில்லையே. இருப்பவன், இல்லாதவன் என்ற இரண்டு வகை மனிதர்களும் ஆனந்தத்தைத் தேடி அலைவது போலல்லவா இருக்கிறது? எங்கே அந்த ஆனந்தம் கிடைக்கும்? பதிலைத் தேடும் முன் முல்லா நஸ்ருதீன் கதை ஒன்றைப் பார்ப்போம். முல்லா நஸ்ருதீன் வெளிச்சமான இடத்தில் ஏதோ தே…

    • 4 replies
    • 1.4k views
  23. வாக்குண்டாம், பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் கடவுள் வாழ்த்து உட்பட 31 வெண்பாக்கள் உள்ளன. கடவுள் வாழ்த்து வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. பொருள்: பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும் நூல் நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி 'என்று தருங்கொல்?' என வேண்டா - நின்று தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத் தலையாலே தான் தருதலால். பொருள்: ஒருவர்க்கு உதவி செய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.