Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. சென்ற வருடம் 2011 இல் கொழும்பில் தோழர் மனோரஞ்சனுடன் சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டிருந்த ஒரு நாளில் பூபாலசிங்கம் புத்தகசாலையில் தோழர் டொமினிக் ஜீவா அவர்களை சந்திக்க வாய்த்தது. புத்தகத்தைக் கையில் தூக்கி வைத்திருக்கமுடியாத கை நடுங்கும் நிலையிலும் உயிரைக் கையில் பிடித்து வைத்திருப்பதுபோல் அப்புத்தகத்தை அவர் பிடித்து வைத்துக்கொண்டிருந்தார். கர்ப்பக்கிரகத்திலிருக்கும் மூலவரை வெளியே நின்று வணங்குவதுபோல மானசீகமாக வணங்கிவிட்டு அவ்விடம் விட்டகன்றேன். யாழ்ப்பணத்தவரின் பொற்கோவிலான பல்கலைக்கழக விருதை அவர் திருப்பி வழங்கியவர். முகத்திலே தூக்கி எறிந்ததிலிருந்து நமது சுயமரியாதையையும் கௌரவத்தையும் போர்க்குணாம்சத்தையும் தனி ஒரு மனிதனாக நின்று காப்பாற்றினார். நாமறிந்து உலகத்தில் எந்தப் …

  2. கற்பு என்னும் திண்மை பதிப்புரை உயிர்கள் பல. அவையனைத்திற்கும் பரமசிவன் பல உடல்களைக் கொடுத்தருளினார். அவ்வாறு படைக்கப்பட்ட உயிர்களில் மனிதன் ஒருவன் மட்டுமே குடும்பமென ஒன்றை அமைத்து ஒழுக்க நெறியில் வாழ்கிறான். நம் முன்னோர் காலத்தில் குடும்பவாழ்வுக்கெனச் சில நியதிகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. அவற்றுள் "கற்பு" என்பது பெண்பாலாருக்கு மட்டில் விதிக்கப்பட்ட ஒன்று. பண்டைக்கால வழக்கில் மனைவியை "அனுசாரிணி" (பின்பற்றுபவள்) எனக் குறிப்பிட்டு வந்தனர். ஆசிரியர் திருவள்ளுவ தேவநாயனாரும் "கொழுநற்றொழுதெழுவாள்" என்று குறிப்பிட்டார். இருபாலாரும் ஒருவரையொருவர் தொழவேண்டுமெனக்கூறினாரில்லை. அவ்வாறு ஆணுக்கு முதன்மையும், பெண்ணுக்கு அடங்கிய நிலையுமே பண்டைக்க…

    • 3 replies
    • 1.9k views
  3. 1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள். 2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று. 3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள். 4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக…

  4. வேலைநிமித்தமா ஏதாவது இன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட Resume கொண்டு போவோம். அதை மட்டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விகள் நம்மகிட்ட கேட்பாங்க. அதுக்கு நாம எப்படி பதில் சொல்றோம்குறத பொறுத்து, நம்மளோட திறமை, மனஉறுதி“னு பல விசயங்கள தீர்மானிப்பாங்க. வழவழ“னு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்மளோட பதில் இருக்கணும்னு அவங்க எதிர்பார்ப்பாங்க. அப்படி இன்டர்வியூ போகும்போது என்ன மாதிரியான கேள்விகள் பொதுவா கேட்கப்படும்னு அலசலாம் வாங்க.. 1. உங்களைப் பற்றிய விபரம் கூறுங்கள்? இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விபரம் சம்பந்தப்பட்டதா இருக்கும். அதாவது உங்களோட பேரு, இடம், கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகு…

  5. உறவுகள் மேம்பட A to Z* மனிதன் தன் அறிவியல் ஆற்றல் மூலம் வாழ்க்கையை வசதியாக்கிக் கொண்டான். ஆனால் இனிமையாக்கிக் கொள்ள தவறிவிட்டான். இனிய வாழ்க்கைக்கு சுமுகமான உறவு அவசியம். அது மேம்பட வழிகாட்டுகிறது இந்த 26 வார்த்தைகள்! *A - Appreciation* மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள். *B - Behaviour* புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள். *C - Compromise* அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள். *D - Depression* மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள். *E - Ego* மற்ற…

  6. என் துரோகம் -சுப.சோமசுந்தரம் வாழ்வில் இளமை வந்தது; கல்வி வந்தது;செல்வமும் வந்தது. என்னதான் வரவில்லை? நோயும் வந்தது. முதுமையால் அல்ல....பயணத்தால். அண்டை மாநிலம் சென்று பண்டம் வாங்கி வருவதைப் போல கண்ட வைரஸும் தொற்றி வந்தது. அறிகுறிகளைப் பார்த்து தமிழில் காக்கைக் காய்ச்சல் என்றார்கள். ஆங்கிலத்தில் West Nile என்றார்கள். தீர்வு என்று மருந்து இல்லாவிட்டாலும் ஆறுதலாக அபாயம் இல்லை என்றார்கள்; மனிதனிடம் இருந்து மனிதனுக்குப் பரவும் ஆற்றல் அதற்கு இல்லை என்றார்கள்; பறவையிடமிருந்தே மனிதனுக்குப் பரவும் என்றார்கள். இடையிடையே ஒரு காய்ச்சல் மாத்திரை என்னை வழக்கம் போல் இயங்க வைத்தது. விருப்பமானதை உண்ண அனுமதித்தத…

  7. நீங்கள் வீட்டுப்பாடம் செய்யாமல் 'அதோ பார் காரு, காருக்குள்ள யாரு' என்று பாட்டுப்பாடிய வயதில் உங்கள் குழந்தைகள் இணையத்தில் உலகைக் காண ஆரம்பித்து விடுகிற அளவிற்கு இணையமில்லா இல்லங்கள் இல்லையென்றாகிவிட்டது. இணையமென்பது மின்சாரம் மாதிரி, எந்த அளவுக்கு உபயோகமாக, மிக திறன்மிக்கதாக இருக்கிறதோ அதே அளவுக்கு மிக மிக ஆபத்தானதும் கூட. தமிழ் பேசும் நல்லுலகின் தெருக்களில் இணையம் முதன் முதலில் பவனி வந்த காலகட்டத்தில் மட்டுமின்றி, இன்றும் புதிதாக இணையத்தினைப் பயன்படுத்த ஆரம்பிக்கும் வாலிப, வயோதிக அன்பர்களே கண்டதையும் பார்த்து விட்டு கண்ணைக் கெடுத்து, ஒரு வாரம் காய்ச்சலில் கிடக்கும் சம்பவங்கள் பல நமக்கு பழக்கமானவையே. இப்படி வயது வந்தோருக்கான விஷயங்கள் மட்டுமின்றி, பலருக்குச் சாதரணமா…

  8. ஐயா கமல் சாரு!!!! சொந்த லாபத்திற்காக மதத்தை சாடும் உங்களுக்கு!!!! சந்திராயன் இன்னும் பல விண்வெளி ஆராய்சிகள் இந்தியாவுக்கு தேவையா? செவ்வாயில் கிடங்கு கிண்டி மிதேன்வாயு ஆராய்ச்சி தேவையா? பல கோடிகளில் திரைப்படம் எடுத்து மக்களை வசீகரப்படுத்த/களிப்பூட்டுவதன் அவசியம் என்ன? காஷ்மீர் விரயத்தனங்கள் உங்களுக்கு தெரியவில்லையா? உலகத்தையே தூக்கிப்போடும் அளவிற்கு ஊழல்கள் நடக்கின்றது.தமிழ்நாட்டிற்கு பத்து வருசம் சாப்பாடு போடும் பணத்தை கொள்ளை அடித்திருக்கின்றார்கள். இதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? இதுபோன்று பல...... இவை எல்லாவற்றையும் இரு வருடங்களுக்கு தற்காலிகமாக நிறுத்துங்கள்!!!!! நீங்கள் சொன்ன பசி தானாக பறந்து போகும். இனிவரும் காலங்களில் யாழ் உறவுகளும் செய்திகளை…

  9. சென்னை:""அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில், எந்த கலாசாரத்தை பின்பற்றுவது என்பதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இதனால், எதிர்கால வாழ்க்கைக்கும், சந்ததிகளுக்கும் அவர்களால் பயனில்லாமல் போகிறது,'' என, அமெரிக்காவின் ஜியார்ஜியா பெரிமீட்டர் கல்லூரி பேராசிரியர் சால்லி வர்கீஸ் கூறினார். சர்வதேச சமூக அறிவியல் மாநாடு, சென்னை எத்திராஜ் கல்லூரி நேற்று துவங்கியது. மூன்று நாள் மாநாட்டில், சமூக அறிவியலின் புதிய கோணங்கள், அம்சங்கள், வளர்ச்சி முறைகள், புதுமை புகுத்தல் உள்ளிட்ட குறித்து, கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் விவாதிக்கின்றனர்.மாநாட்டை எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளை தலைவர் சுவாமிநாதன் துவக்கி வைத்தார். அமெரிக்கா ஜியார்ஜியா பெரிமீட்டர் கல்லூரி பேராசிரியர் சால்லி …

  10. Started by Nathamuni,

    51 வயதில், தீடீரென, திருமதி வோங், வீதியில் தினமும் ஓடத்தொடங்கினார். வீதியால் போவோர், எதுக்கு இந்த மாதிரி உடலை வருத்தி ஓடுகிறார் என்று பேசினார்கள். தினமும் ஓடி, நாளைடைவில் 20 கிலோமீட்டர் ஓடினார். இந்த பெண் எதுக்கு இப்படி உடலை வருத்தி, எடையினை குறைக்கிறார். வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் போது எதுக்கு?. கணவன் இல்லாதால், புதிதாக யாரையும் பிடிக்க முயல்கிறாரோ என்று நினைத்தனர், பேசினர். மூன்று மாதத்தின் பின்னர், டாக்டரிடம் போய் நின்றார் அவர். அவரது எடையினை அளந்து, ஆகா 20 கிலோ குறைத்து விட்டீர்கள். நாளையே அறுவைச்சிகிச்சையினை வைத்துக் கொள்ளலாம். நான்கு மாதங்கள், மட்டுமே வாழ முடியும் என்று சொல்லப் பட்ட மகனுக்கு, சிறுநீரக தானம் செய்ய முன்வந்த தாயிடம், 20 கிலோ குறைத்தால் தான் …

    • 3 replies
    • 829 views
  11. ஒரு அரசாங்கத்தாலே நடத்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலை ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் யூதர்கள் மேல் நடத்தப்பட்டதாகவே இருக்கும்,இந்தப் இனப்படுகொலை மூலம், நாஜிக்கள் கொன்று குவித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 15.003.௦௦௦ இருந்து 31.595.000 பேர், இதில் பெண்கள், ஊனமுற்றவர்கள், வயதானவர்கள் ,உடல்நிலை மோசமானவர்கள் ,போர் கைதிகள், கட்டாய தொழிலாளர்கள்,விமர்சகர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், யூதர்கள், ஸ்லேவ்ஸ்,செர்பியர்கள், ஜெர்மனி, செக், இத்தாலியர்கள், போலந்தினர், பிரஞ்சு,உக்ரைனியர்கள், மற்றும் பலர். இதில் எண்ணிக்கையில் 1,000,000 பதினெட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தனர். முதலாம் உலகப் போரில் ஏற்பட்ட கடும் தோல்வி ஜெர்மனியை திருப்பி போட்டது,இந்த தோல்விக்கு யூதர்களும் கம்யூனிஸ்ட்களும…

  12. தாமினியும் திவ்யாவும் இந்தியக் காதலின் சிக்கல்கள் ஆர்.அபிலாஷ் சேரனின் மகள் தாமினியின் காதல் ஒரு பொது சர்ச்சையாக மாறினதும் எழுந்த முதல் கேள்வி, காதலைக் கொண்டாடிப் படம் எடுக்கிற சேரன் எப்படி தன் மகள் காதலை மட்டும் பிரிக்க நினைக்கலாம் என்பது. மேலோட்டமாகத் தோன்றி னாலும் இது ஒரு முக்கிய கேள்வியே. சேரனின் படங்களுக்கு வருவோம். அவரது "ஆட்டோகிராப்", "பாரதி கண் ணம்மா" மற்றும் "பொக்கிஷம்" போன்ற படங்களில் காதலியின் அப்பா சேரனை போன்றேதான் காதலுக்கு விரோதமாக நடந்து கொள்கிறார். ஆக, சேரன் சினிமாவில் ஹீரோ, நிஜவாழ்க்கையில் வில்லனா? அல்ல. அவர் என்றுமே லட்சியக் காதலின் மகத்துவங்கள் பேசி னது இல்லை. தன் படங்களில் என்றும் சுயமாய் சம்பாதிக்க முடியாது அவஸ் தைப்படுகிறவரின்…

  13. இளைஞர்கள் இணையத்தின் ஊடாக அதிகளவில் பாலியல் படங்களை பார்ப்பதால் தங்கள் பாலியல் வாழ்க்கையை ஆபத்துக்கு உள்ளாக்குவதாக முன்னணி பிரிட்டிஷ் உளவியல் சிகிச்சை வல்லுனர் ஒருவர் தெரிவித்துள்ளார். 18 முதல் 25 வயதுடையவர்கள் தீவிர பிரச்சினைகளுக்கு உதவ வேண்டி ஆலோசனை கேட்டு வருவது அதிகரித்து வருகின்றது. இது பத்து ஆண்டுகளுக்கு முன், இளம் நோயாளிகளிடம் இல்லாத ஒன்று என்று நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக வைத்தியசாலை சேர்ந்த ஏங்கெல்லா கிரகோரி தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில், ஆணுறுப்பு விறைப்பு தன்மை செயலின்மை பிரச்சினையின் நிமிர்த்தமாக வைத்தியசாலைகளுக்கு வந்த ஆண்களில் பெரும்பாலானவர்கள், நீரிழிவு நோய், மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் எனப்படும் உடல் இயக்கத் திறனை குறைக்கும் நோய் மற்றும் இத…

  14. யாராவது உங்களுக்கு தெரியாதவர்கள் அல்லது புதியவர்கள்(strangers) உங்களுக்கு உதவினார்களா? இச்சம்பவம் பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது.காலை 5 மணிக்கு வேலை.4.30 அளவில் புறப்பட்டு போகும் வழியில் நண்பர் ஒருவரையும் ஏற்றிக்கொண்டு தான் வேலைக்கு செல்வேன்.அன்று பொலிஸ் என்னை மறித்தார்.எங்கே இந்த நேரம் போகிறாய் எனக்கேட்டார்."வேலைக்கு என சொல்லி வேலை அடையாள அட்டையை (badge)காட்டினேன்.சரி வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை( Driving licence) எடு என்றார்.என்னிடம் இல்லை அனுமதி பத்திரம் மட்டுமே உண்டென்றும் கூறினேன்.அவர் சொன்னார் உன்னால் வாகனத்தை ஓட்ட முடியாதே இந்த பத்திரத்துடன்(permit) என்றார்.திடீரென காரின் உள்ளுக்குள் நோட்டமிட்டார்.பின்னுக்கு இருக்கும் பாக்கில்(school bag) என்ன என்றார்.பு…

  15. பதின்பருவத்தை அடையும் குழந்தைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்களை சந்திக்கின்றனர். குரல் மாறுகிறது, உடல்களில் வனப்பு அதிகரிக்கிறது. இதனால் பதின்பருவத்தினர் கலவரமடைகின்றனர். குழந்தைகளாய் கைகளை பிடித்து சுற்றிக்கொண்டிருந்தவர்கள் திடீரென தனிமையை நாடுவது இயல்பானது. இந்த சமயத்தில் குழந்தைகளின் அச்சத்தைப் போக்கும் வகையில் அவர்களுக்கு கவுன்சிலிங் தரவேண்டியது பெற்றோர்களின் கடமை என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அவர்களுடன் நட்புரீதியான புரிதல் இருந்தாலே பதின்பருவத்தினர் – பெற்றோர் இடையே இடைவெளி ஏற்படாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். பதின்பருவ மாற்றங்கள் பதின்பருவம் என்பது 12 வயதிற்கு மேற்பட்டதாகும். அந்த காலகட்டத்தில் ஆண், பெண் இருவரின் உடலிலும் மாற்றங்கள் ஏற்…

  16. தயவுசெய்து பொறுமையாக முழுமையாகப் பாருங்கள். விளங்கும்.

  17. முன்பெல்லாம் கை நிறைய பணம் கொண்டு சென்றோம், பை நிறைய பொருட்களை வாங்கி வந்தோம் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். இது சும்மா பேச்சு வழக்குக்காக சொல்லப் பட்டதல்ல, அதுதான் உண்மை. ஆனால் இப்போதோ பை நிறைய பணம் கொண்டு சென்றாலும், கையளவு பொருட்களைத்தான் வாங்க முடிகிறது. எந்த விதமான திட்டமும் இல்லாமல் செலவிட நேரும்போது உடனே பர்சில் கை வைத்து பார்க்க வேண்டியிருக்கிறது. வரவுக்கு மீறி செலவு செய்வது நம்மை கடன் பொறியில் சிக்க வைக்கும் என்பதுதான் அனுபவ உண்மை. இந்த மாதம் வீட்டுச் செலவுக்கு ஒதுக்கிய தொகையைப் போல அடுத்த மாதத்துக்கு ஒதுக்க முடியவில்லை. அடுத்த மாதத்தில் 1,000 ரூபாயாவது கூடுதலாக ஒதுக்கினால்தான் விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க முடியும் என்பதாக இருக்கிறது. மார்க்கெட்டில் இ…

  18. பண்புக்கு கிடைத்த பரிசு மரியாதையுடனும் நாகரிகமாகவும் நடந்து கொண்ட ஒரு எளிமையான செயல் பிலிப்பைன்சில் ஒருவருக்கு பெரும் பலனை அளித்திருக்கிறது. அந்தநபர் தேசிய லாட்டரியில் 17 மில்லியன் டாலர்கள் இந்த செய்கையால் வென்றுள்ளார். லாட்டரி சீட்டை வாங்க வரிசையில் நின்ற அவரை, நாகரிகமில்லாமல் தள்ளிவிட்டு முந்திக்கொண்டு பரிசுச்சீட்டை வாங்கினார் ஒரு பெண்மணி. ஆனால் அவரோ, அந்தப் பெண்ணை மிகவும் வினயமாக முன்னால் செல்ல அனுமதித்தார். அந்தப் பெண் வாங்கிய சீட்டுக்கு ஒரு பரிசும் விழவில்லை. ஆனால் இவர் வாங்கிய சீட்டுக்கு பெரும் பரிசுத் தொகை கிடைத்தது. பரிசை வென்ற இந்த ஆண் யார் என்ற விவரம், அங்கு ஆள் கடத்தல்கள் நடக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதால், ரகசியமாக வைக்கப்பட்…

    • 3 replies
    • 1.7k views
  19. மூன்றாவது தனிமை August 21, 2021 வயதடைதல் வனம்புகுதல் நான்கு வேடங்கள் அன்பு ஜெ, வணக்கம். எனக்கு 60 வயதாகிறது. 33 வருட குடும்பவாழ்க்கை. தற்பொழுது சில காரணங்களால் அடிக்கடி தனிமையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. என் மகள் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியையாக பணிபுரிகிறார். ஒன்றரை வயதில் பேத்தி இருக்கிறாள். மகளையும், பேத்தியையும் கவனித்துக்கொள்ள, என் மனைவி மாதத்தின் பல நாட்கள் மகள் வீட்டிலேயே இருக்கவேண்டிய நிலை. (எனக்கு பெண் மட்டுமே, மகன் இல்லை) இதனால் நான் மட்டும் தனியாக வீட்டில் இருக்க வேண்டி உள்ளது. ஓரளவு சமைப்பேன். வீட்டை பராமரிப்பதிலும் எந்த சிரமும் இல்லை. புத்தகங்கள் படிப்பது, இசை கேட்பது, prime video, zee5, hotstar போன்ற OTT தளங்கள…

  20. Monday, February 18, 2008 உங்களைத் தொலைத்து விடாதீர்கள்! ஒரு மனிதனின் குழந்தைப் பருவத்தில் இருந்தே அவனை மற்றவர்கள் போல் மாற்றும் முயற்சி ஆரம்பிக்கிறது. "அந்தப் பாப்பாவப் பாரு எப்படி சமத்தா இருக்கு". குழந்தையில் இருந்தே மற்றவர் சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் அவன் திணிக்கப் பெறுகிறான். "அவனைப் போல் இரு. இவனைப் போல ஆகு....." என்ற கட்டளைகள் வார்த்தைகளாகவும், சூட்சுமமாகவும் அவன் மனதில் ஏற்றப்படுகின்றன. இது தான் சிறந்தது, இது பிரயோஜனமில்லாதது என்பதை மற்றவர்கள் அவனுக்காக தீர்மானித்து விடுகிறார்கள். மற்றவர் வகுத்த பாதையில் பயணம் நடக்கிற வரையில் அவன் விமரிசனங்களை சந்திக்க வேண்டியதில்லை. தனித்துவம் என்பதை பொதுவாக சமூகம் சகித்துக் கொள்வதில்லை. தப்பித் தவறி ஒருவன் தன் தன…

    • 3 replies
    • 2.1k views
  21. சீதனம் - பெருகும் பிரச்சனை நமது ஊரில் சீதனம் பெரும் பிரச்சனை தான்.... இப்போது வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதால் ஓரளவுக்கு பெரிதாக தெரிவதில்லை. அண்மையில் நண்பர், இலங்கையில் மருத்துவம் முடித்தவர். அவருக்கு ஒரு நகைக்கடை வியாபாரி, மகளை கட்டி வைத்து, கொடுத்த சீதனத்தினை கேட்டால், அவர் வேலையை விட்டு வீட்டில் காலாட்டிக் கொண்டு இருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது. கந்தர்மடத்தினை சேர்ந்த ஒரு மொறட்டுவையில் பொறியியல் படித்தவருக்கு, இருப்புக்கடைக்காரர், கொடுத்த சீதனம், மயக்கம் போடும் ரகம். படித்தால் காசு என்று நினைகிறார்கள். பெண் தகுதியானவளா என்று நினைப்பதில்லை. யாழில் புகழ் மிக்க ஒரு தியேட்டர் முதலாளி, மகளுக்கு டாக்டர் வேண்டும் என்றாராம். வந்தார் ஒரு டாக்டர்…

  22. வா மணிகண்டன் நாய்க்குட்டி ஒன்று வீட்டுப்பக்கமாக சுற்றிக் கொண்டிருந்தது. இந்த ஊரில் தெரு நாய்களுக்கு பஞ்சமே இல்லை. வருடத்தில் முக்கால்வாசி மாதங்கள் குளிராகவே இருக்கிறது. குளிரடிக்கும் மாதங்கள் எல்லாம் மார்கழி என்று நினைத்துக் கொள்கின்றன போலிருக்கிறது. வதவதவென பெருகிக் கிடக்கின்றன. இப்படி பெருகிக் கிடந்தாலும் பெங்களூர் கார்பொரேஷன்காரர்கள் கருணை மிகுந்தவர்கள். அலேக்காகத் தூக்கிக் கொண்டு போய் திரும்பக் கொண்டு வரும் போது காது நுனியை கத்தரித்துவிட்டிருப்பார்கள். அப்படியென்றால் ‘சோலி’யை முடித்துவிட்டார்கள் என்று அர்த்தம். ஆனால் சோலி முடிக்கும் விகிதத்தை ஒப்பிடும் போது நாய்களின் பர்த் ரேட் பல மடங்கு அதிகம் போலிருக்கிறது. அதனால்தான் இத்தனை குட்டிகள். இரவு பத்து மணிக்கு ஆரம்பி…

    • 3 replies
    • 1.4k views
  23. எதிர் வரும் வாரம் 5 ஆம் ஆண்டுக்கான புலைமைப் பரீச்சை நடைபெற உள்ளது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களை பந்தையத்துக்க தயார் படுத்தும்.விலங்குகளை விட அதிகமாக வதைத்து தயார் படுத்ததில் நீன்ட காலத்துக்கு முன்பே ஆரம்பித்து விட்டார்கள்.அத்துடன் இந்தப் பரீச்சைக்காக பாடசாலையும் பெற்றோர்களும் சேர்ந்து கோவிலில் பொங்கலும் வைத்து வழிபாடு நடாத்தியுள்ளார்கள்.இந்த வயதில் பிள்ளைகளை இப்படி வதைப்பது தேவை தானா.

  24. நமது அன்றாட வாழ்வும் பாலியலும் .... இன்றைய காலகட்டத்தில் உலகில் பெரும்பாலானோர் அவசர வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அந்த குடும்ப வாழ்க்கையிலே எவ்வளவு சிரமங்கள்,சலிப்புகள்,தடங்கல்கல்கள் என கடந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். வேலை சிரமங்களினால் குடும்ப அன்னியோன்யங்கள் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் இது. பல இடங்களில் விவாகரத்திலும் கதைகள் முடிகின்றன. இதற்கான காரணங்களில் முக்கியமாக பாலியல் சம்பநதப்பட்ட விடயங்களும் அமைகின்றன நான் நினைக்கின்றேன். உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள். பேச வெட்கப்படும் விடயங்களை பேசுவோம்.💕

  25. "உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா?" நாம் இந்த கேள்வியை பல திசைகளில் அலசி, அதற்கான விடையை ஓரளவு சமூக, அறிவியல் ரீதியாக உங்களுடன் பகிர முன், உறவு, அன்பு என்றால் என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். ஒருவருக்கொருவர் இடையில் உள்ள தொடர்பு உறவு என்று அழைக்கப் படுகிறது. இது அதிகமாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே அமையும் குழாம், இணைப்பு, தொடர்பு மற்றும் பிணைப்பை [association, connection, interaction and bond] குறிக்கிறது எனலாம். பலவிதமான உறவுகளை நாம் நாளாந்த வாழ்வில் காண்கிறோம். எனவே நம் உறவு வட்டம் மிக மிகப் பெரியது எனலாம். உதாரணமாக, பெற்றோர் ,சகோதரங்கள், துணைவர் [கணவன் அல்லது மனைவி], குழந்தைகள், சொந்தக்காரர்கள், நண்பர்கள், பக்கத்து வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.