சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2254 topics in this forum
-
"ஒப்பனையியல் / அழகுக் கலை" / "cosmetology" ஒப்பனையியல் பற்றிய பண்டைய அறிவியல் எகிப்திலும் இந்தியாவிலும் ஆரம்பமாகியதாக பொதுவாக ஏற்றுக் கொள்ளப் பட்டாலும், ஒப்பனை பொருட்கள், அதன் பாவனைகள் பற்றிய முன்னைய குறிப்புகளை காண நாம் கி மு 2500-15000 ஆண்டு இந்தியா உபகண்டத்தின் சிந்து சம வெளி நாகரிகத்திற்கு போக வேண்டியுள்ளது. அங்கே, சிந்து சம வெளி பெண்கள் உதட்டுச் சாயம் (Lipstick) பூசினார்கள் என தெரிய வந்துள்ளது. உலகிலேயே முதன் முதலில் உதட்டுச் சாயம் தயாரித்து பயன்படுத்தியவர்கள் இவர்களே என்பதை இது உறுதிப்படுத்துகிறது. ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த இந்த மக்கள் திருமண வைபவங்களின் போது மணப் பெண்களை அலங்கரிக்கச் சில ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆந்திராவின் ஹைதராபாத் நகரில் பத்தாவது பரீட்ச்சையில் தேறினார் பிறவியில் இருந்து பார்வை இல்லாதவரான ஸ்ரீ காந்த் போலா. தேறினார் என்றால், சும்மா இல்லை, விஞ்ஞான பாடத்தில் 93% புள்ளிகளுடன். ஆனால் பிளஸ் 2, என்னும் உயர் வகுப்பில் அவரை சேர்க்க பள்ளிகள் மறுத்தன. ஒரு பிறவிக் குருடருக்கு செய் முறையுடன் கூடிய விஞ்ஞான பாடங்கள் செய்ய முடியாது என்று காரணம் கூறின. ஒத்துக் கொள்ள மறுத்த அவரோ, மாநில அரசுக்கு எதிராக நீதிமன்றம் சென்றார். நீதி தேவதை அவருக்கு கை கொடுக்க, விஞ்ஞான பாடத்தில் 97% புள்ளிகளுடன் சாதனை செய்தார். மறுபடியும் தடை. இந்தியாவின் உயர் கல்வியில் புகழ் மிக்க IIT, NIT போன்ற நிறுவனங்கள் கூட அவருக்கு கதவை திறக்க மறுத்தன. இந்நிலையில் அசராமல் முயல, உலகப் புக…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
இலக்கு வேண்டும் அதற்கு உழைக்கவேண்டும்! ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள். அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம். இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்த…
-
- 8 replies
- 1.2k views
-
-
Germany Hamm ஆலயத் தேர்த்திருவிழாவில் நடந்தது என்ன?
-
- 4 replies
- 1.2k views
-
-
நீங்கள் எதிர்பார்ப்பது போல, பிரிந்த உறவுகள் சேருகின்ற கதை அல்ல! இரு தேசங்களின் எல்லைகள் எழுதப்பட்ட போது, பிரிந்து போன இரண்டு இளமைக்கால நண்பர்களின் மீள் சந்திப்பு! படம் எடுக்கப்பட்ட விதம் எனக்குப் பிடித்திருக்கின்றது! உங்களுக்கும் பிடிக்கும் எனும் நம்பிக்கையில் இங்கு இணைக்கிறேன்! இது தான் கதையின் சுருக்கம்! டெல்லியில் வசிக்கும் முதியவர் பல்தேவ் தனது பால பிராயத்தில் பாகிஸ்தானின் லாகூர் நகரில் நண்பன் யூசுப்புடன் திரிந்த நாட்களை தனது பேத்தியிடம் பகிர்ந்து கொள்கிறார்.அவருக்கு அந்நகர் குறித்த மிக சில விசயங்களே நினைவில் நிற்கிறது.மிக பழமையான வாசல் கொண்ட ஒரு பூங்கா..நண்பன் யூசுப்பின் குடும்பத்தாரின் ஸ்வீட் ஸ்டால்..அங்கே இருவரும் ஜஜாரியா என்னும் பண்டத்தை திரு…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஊரில தங்கட பெண் பிள்ளைகளை ஒழுக்கமாகவும்,ரீசன்டாக வளர்க்க விரும்பும் பெற்றோர்கள் தங்கட பிள்ளைகளை தனிய பெண்கள் மட்டும் படிக்கும் மகளீர் பாடசாலையில் சேர்த்து விடுவார்கள்[அந்தப் பாடசாலையில் படித்தால் போல அந்த பெண்கள் எல்லாம் ஒழுக்கமாய் இருக்கிறார்களா என கேட்கக் கூடாது.] அதே மாதிரி புலம் பெயர் நாட்டிலும் பல பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை மகளீர் பாடசாலையில் சேர்த்து விடுகிறார்கள் இது ஆரோக்கியமானதா? என்னைப் பொறுத்த வரை படிக்கிற பிள்ளை எங்கேயும் படிக்கும் அதே மாதிரி ஒழுக்கமாய் இருக்க விரும்புவர்கள் கலப்பு பாடசாலையில் படித்தாலும் ஒழுக்கமாய் இருப்பார்கள்.தவிர ஆண்,பெண் சேர்ந்து படிக்கும் போது ஆண்,பெண் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் போகும்...பெண்கள் தைரியசாலிகளாக,எதற்கும் வெட்கமி…
-
- 7 replies
- 1.2k views
-
-
வேலை, நேர்முகத்தேர்வின் மறுபக்கம் இன்று Furlough முடிந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் வேலைக்கு அழைத்திருந்தார்கள். நான் வருகிற ஜனவரியில் வேறு நிறுவனத்தில் இருவாரங்களுக்கு முன்னரே நேர்முகம் போன்ற ஏற் பாடுகள் செய்து விட்டிருந்தேன். காலையில் மனேஜருடன் சந்திப்பு. எனது பகுதியில் 12 பேரில் 6 ஆக குறைக்க வேண்டும். அதுகுறித்த வேலை தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்றார். கொரோனவனை பயன்படுத்தி, பலரை வீட்டுக்கு அனுப்புகின்றனர். அதேவேளை, திறமை, தகுதி இருப்பவர்களுக்கு, கூடுதல் சம்பளத்தில் வைத்துக் கொள்கின்றனர். மேனேஜர் எனக்கான கொடுப்பனவுகளை ஜனவரியில் இருந்து அதிகரிக்க உள்ளதாகவும், கூடுதல் வேலை சுமையினை எடுக்க வேண்டும் என்றும் சொல்லி விட்டார். மாலை இரண்டு மணிக்…
-
- 13 replies
- 1.2k views
-
-
-
ஸ்ரீலங்காவில் பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பாக உள்ளனரா? ராஜ் கொண்சல்கோரளே தமிழில் :எஸ்.குமார் ஸ்ரீலங்காவில் சமீபத்தில் நிகழ்ந்த இழிந்த ஒரு நிகழ்வாகக் கருதப்படுவது, சென். பீட்டர்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பதின்ம வயதுகளின் மத்திக்கும் இறுதிக்கட்டத்துக்கும் இடையில் உள்ள ஒரு றகர் விளையாட்டு வீரருக்கு அவரது பயிற்சியாளர் பொதுமக்களின் பார்வையில் படும்படியான இடத்தில் வைத்து தொடர்ச்சியாகக் கன்னத்தில் பல முறை அறைந்ததுதான், இது எமது சமுதாயம் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைகிறது அல்லது ஏற்கனவே வளர்ச்சியடைந்துள்ளது என்பதை தெளிவாகத் தெரியப்படுத்துகிறது. சந்தேகமில்லாமல் இந்த நிகழ்வு ஆதரவற்ற குழந்தைகள் பாடசாலையில் இருக்கும்போது அவர்களது ஆசிரியர்களாலும் மற்றும் வ…
-
- 0 replies
- 1.2k views
-
-
வாசிப்பு முக்கியம் எழுதியது: சிறி சரவணா நாம் நிச்சயமாக இளைய சமுதாயத்திற்கு வாசிப்பின் மகத்துவத்தை கற்றுக் கொடுக்கவேண்டும். ஒரு மனிதனின் வாழ்க்கைப் பாதையை செதுக்குவதில் வாசிப்பு என்பது நிச்சயம் ஒரு மிக முக்கியமான பங்கு வகிக்கும் என்பது எனது கருத்து. வாசிப்பு மட்டும் தான் அப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்று இங்கே நன் சொல்லவரவில்லை, மாறாக, வாசிப்பு ஒரு குறிப்பிட்ட அளவு செல்வாக்கை ஒருவரது வாழ்வில் செலுத்தியே தீரும். வாழ்க்கை என்றால் என்ன? ஒரு சவாலான கேள்விதான்! அதற்கு பதிலளிப்பது அல்ல எனது நோக்கம்; ஏன் இந்த கேள்வி? வருகிறேன் விசயத்திற்கு! வாழ்க்கை என்ற ஒன்றை நாம் வாழ்வதில்லை. “நாம் வாழ்கையை வாழ்கிறோம்” என்று சொல்வதில் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. அப்படிச் சொ…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழருக்குத் தேவைதானா குடும்பப் பெயர்? மு.இராமநாதன் ஆதியில் பான் (PAN) அட்டை வந்தது. அதை ஒன்றிய அரசு தயாரித்துக் கொடுத்தது. அடுத்து ஆதார் அட்டை வந்தது. அதைத் தயாரிக்கிற பணி சில உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு புலர் காலைப்பொழுதில் அட்டைகள் இரண்டையும் இணைக்கச் சொல்லி ஆக்ஞை வந்தது. காஷ்மீர் முதல் திருப்பதி வரை புகார் ஒன்றுமில்லை. குடிமக்கள் இணைத்தனர். ஆனால், திருத்தணி முதல் தென்குமரி வரை வாழும் ஜீவராசிகளுக்கு அட்டைகளை ஒட்டவைப்பது எளிதாக இல்லை. பான் அட்டை விண்ணப்பத்தில் இரண்டு பெயர்கள் கேட்டார்கள். முதற்பெயர் (first name) ஒன்று. குடும்பப் பெயர் (surname) மற்றொன்று. தமிழர்களுக்கு ஆக உள்ளது ஒரு பெயர்தான். இரண்டில் ஒன்றிற்கு அதை எழுதினார்கள். மற்ற…
-
- 1 reply
- 1.2k views
-
-
உறவுகளே இந்தப்படங்களை கொஞ்சம் பாருங்கள் மிருக வதையின் உச்சக்கட்டமாக இது தெரியவில்லையா? உலக ஐனநாயக அல்லது வளர்ந்த அல்லது மனித மற்றும் உயிரினங்களின் வதையை வெறுக்கின்ற நாடுகளிலேயே இவை செய்யப்படுகின்றன. இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அண்மையில் பிரான்சில் இதை தடை செய்ய சட்டம் கொண்டு வந்தும்அது நிறை வேற்றப்படாது போய் விட்டது. ஏனெனில் ஆதரவு பாராளுமன்றத்தில் இல்லை. அன்று வானொலியில் வந்த அமைச்சர் ஒருவர் இந்தக்கேள்விக்கு தான் பதிலளிக்கவிரும்பவில்லை என்று பலமுறை மறுத்தும் வானொலி நடாத்துனரின் பிடிவாதத்தால் இறுதியில் ஒன்றைக்குறிப்பிட்டார். இந்த விளையாட்டு என்பது பல சமூக கலாச்சார இசை நடனம் என பலவற்றை பிரதி பலிக்கின்றது என்று. அத்த…
-
- 3 replies
- 1.2k views
-
-
முற்பிறவியின் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை, ஆனாலும் கருமம் பின்தொடர்வது போன்ற ஐயப்பாடு. ‘எண்ணித் துணிக கருமம்’ – வினையின் பலனை முன்கூட்டியே எண்ணிச் செயல்பட்டிருந்தால் ஒருவேளை இதிலிருந்து தப்பியிருக்கலாம். சிந்தித்துப் பார்த்தால் இதுபோன்ற தவறுகளை எவ்வித குற்றவுணர்வும் இன்றி தொடர்ந்து செய்து வந்துள்ளேன். காலப் போக்கில் செய்த தவறுகளெல்லாம் மறைந்து அழிந்துவிடும் என்ற அசட்டு தைரியத்தில்! இவ்வாறான தொடர் சிக்கல்கள் என்னை மேலும் மேலும் பாதித்துக் கொண்டே இருக்கிறது. மனச்சிக்கலில் இருந்து வெளிவர முயற்சிக்கும் போதெல்லாம் என் நிலையை எண்ணி அவமானமாக உணர்கிறேன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு! தவறினால் விளைந்த சங்கடங்கள் திருமணத்தில் வந்து முடியுமென்று எள்ளளவு…
-
- 4 replies
- 1.2k views
-
-
நெட்டிசம்: இணையத்தில் வலை விரிக்கும் போலிகள்! ஆசிரியர்களும் சில பல ‘லைக்’குகளும்! - சரா சுப்ரமணியம் செய்தி ஊடகங்களில் மட்டுமல்ல, சமூக வலைதளங்களிலும் என்றுமே நெஞ்சை நெகிழ்ச்சியுடன் வருடும் ‘பாசிட்டிவ் ஸ்டோரி’களுக்கு மவுசு அதிகம். எட்டுத் திசைகளிலிருந்தும் ‘நெகட்டிவ்’ மிகு செய்திகளே நம்மைத் தாக்குவதுதான் இதற்குக் காரணம். தாகமாக இருக்கும் சாலையோர முதியவருக்கு ஒரு சிறுவன் தண்ணீர் தரும் தருணத்தைப் பதிந்த புகைப்படம் ஒன்று பல்லாண்டுகளாகப் பரவசத்துடன் பகிரப்படுவதைப் பார்த்திருப்போம். அது ஓர் இயல்பான நிகழ்ச்சி. எந்த அளவுக்கு நம் நெஞ்சில் ஈரம் வற்றிக்கொண்டிருந்தால், அந்தப் படத்தை இன்றளவும் பகிர்ந்து நம் நெகிழ்ச்சி தாகத்தைத் தீர்த்துக்கொண்டிருப்போம்? நான் பணிபுரிந்த…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 4 replies
- 1.2k views
-
-
நீங்க எவ்வளவு வீதம் முட்டாளா இருக்கிறிங்க ?
-
- 2 replies
- 1.2k views
-
-
தனிப்பட்ட சுதந்திரம் ?. இது ஒரு மாறுபட்ட விவாதப்பொருள். நம்மில் எத்தனை பேர் நமது மனைவிக்காக, கணவருக்காக, காதலிக்காக, காதலனுக்காக நமது தனித்துவ அடையாளத்தை, சுதந்திரத்தை இழந்ததாக கருதுகிறீர்கள் ?. இதைப்பற்றி நாம் ஈல்லோரும் நன்கு அறிந்த புரட்சியாளர் சே குவாரா தனது முதல் காதலி சிச்சினாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் ...... " நான் எந்த அளவுக்கு உன்னை காதலிக்கிறேன் என்று உனக்கு நன்றாக தெரியும். ஆனால் ஒரு விஷயம். உனக்காக நான் என்னுடைய சுதந்திரத்தை விட்டு கொடுக்க விரும்பவில்லை. அப்படி நான் செய்தால் அது என்னையே விட்டு கொடுப்பதற்கு சமமாகும். இந்த உலகத்தில் உன்னை விட முக்கியமான ஒரு நபர் இருக்கிறார். அது நான்தான்" இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கி…
-
- 8 replies
- 1.2k views
-
-
நீதியினை அணுகுதலும் முஸ்லிம் பெண்களும் (பாகம் 1) இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டமானது (MMDA) பல ஆய்வுகளினதும் கற்கைகளினதும் கருப்பொருளாக இருந்து வருகின்றது. எவ்வாறாயினும், மிகவும் மனம் வருந்தத்தக்க வகையில் நடப்பது என்னவென்றால் மறுசீரமைப்பதற்கு எடுக்கப்படுகின்ற சகல முயற்சிகளும் ஏதோ ஒரு குழு மட்டத்தில் அல்லது குழுக்கள் பரிந்துரைகளை விடுப்பதுடன் முடிவடைந்து விடுகின்றன. இவற்றிற்கு அப்பால் எதுவும் நடப்பதில்லை. இதனால், தமது கணவன்மாரினால் முஸ்லிம் பெண்கள் மோசமான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாவது தொடர்ந்த வண்ணமாகவே உள்ளது. தமது மனைவிமாரை அடித்துத் தண்டிப்பது தமது உரிமை என்று கூட சில கணவன்மார்கள் நினைக்கின்றனர். தற்கொலை செய்வத…
-
- 1 reply
- 1.1k views
-
-
[size=2] [size=4]இந்தியா போன்ற மக்கள் தொகை பெருக்கமுள்ள ஒரு நாட்டில் அரசாங்கத்தால் எல்லோருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கமுடியாது. இந்த இடைவெளியைத் தொழில்முனைவோர்தான் நிரப்பவேண்டும். அந்தத் தார்மிகக் கடமை அவர்களுக்கு இருக்கிறது. இந்த உணர்வை அவர்கள் எப்பொழுதும் மறக்கக்கூடாது. அதனால் எத்தனை சவால்கள் வந்தாலும் எப்பாடுபட்டாவது தொழில் முயற்சியைத் தொடரவேண்டும்.[/size][/size] [size=2] [size=4]ஆரம்பித்த ஒரு தொழில் முயற்சியை எக்காரணம் கொண்டும் கைவிடவே கூடாதா? [/size][/size][size=2] [size=4]நான்கு காரணங்களுக்காகச் செய்யலாம். முதல் காரணம், தொழில் நடத்துபவரின் மரணம். இரண்டாவது காரணம், பெரிய அளவிலான உடல் ஊனம். மூன்றாவது, அரசாங்கத்தின் அநாவசியக் குறுக்கீடு. நான்காவது,…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஆலவிளாம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் பல தலைமுறைகளாக மது அருந்தாமல், வரதட்சணை வாங்காமல் வாழ்ந்து வருகின்றனர். சிவகங்கையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது மதகுபட்டி. இங்கிருந்து கல்லல் செல்லும் சாலையில் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆலவிளாம்பட்டி. இக்கிராமத்தில் மூப்பர் சமுதாயத்தை சேர்ந்த 170 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது முன்னோர்கள் இக்கிராமத்திற்கு 13ம் நூற்றாண்டில் குடியேற திருச்சி கொள்ளிடம் பகுதியிலிருந்து (வடநாடு) வந்தவர்கள், அப்போது அங்குள்ள ராமசுவாமி, பொன்னழகி அம்மாள் தெய்வங்களிடம் எப்போதும் மது அருந்துவதில்லை என சத்திய வாக்கு கொடுத்துள்ளனர். அதை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். இக்கிராமத்தில் போதை பொருள்கள் யா…
-
- 2 replies
- 1.1k views
-
-
கணிதம் அறிவியல் போல இனி மரணம் குறித்த பாடங்களும் பள்ளிகளில் கற்பிக்கப்படும் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கணிதம் அறிவியல் போல இனி மரணம் குறித்த பாடங்களும் பள்ளிகளில் கற்பிக்கப்படும் படத்தின் காப்புரிமைREUTERS எதிர்வரும் நாட்களில் ஆஸ்திரேலிய குழந்தைகள், பள்ளியில் கணிதம், அறிவியல் வரலாறு போன்ற பாடங்களோடு மரணம், இறப்பு போன்றவற்றையும் ஒரு பாடமாக படிப்பார்கள். …
-
- 0 replies
- 1.1k views
-
-
செய்திதுறத்தல் ஜெயமோகன் நேற்று ஸ்ரீகலாவின் இறப்புச் செய்தியை ஒட்டி இரவெல்லாம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவருடைய இறப்பு உள அழுத்தத்தால். இந்தத் தலைமுறையில் உள அழுத்தங்கள் மிகுதியாகிக் கொண்டே இருக்கின்றன. நானறிந்த ஐந்தில் ஒருவர் உள அழுத்ததிற்கான மருந்துக்களை ஏதேனும் ஒரு தருணத்தில் எடுத்துக்கொண்டவர்கள், தொடர்பவர்கள் பலகாரணங்கள். முதன்மையாக பொறுப்பு. சென்ற நூற்றாண்டில் தனிமனிதன் மேல் இத்தனை பொறுப்பு இல்லை. கூட்டாகவே அவன் உலகைச் சந்தித்தான். குடும்பமாக, குலமாக. தனியாளுமை பெரும்பாலும் அன்று இல்லை. அதன் குறுகல் ஒருபக்கமென்றாலும் அது பொறுப்பை குறைத்தது. தனிமையை இல்லாமலாக்கியது. முடிவெடுக்கும் பொறுப்பே பொறுப்புகளில் முதன்மையானது. இதைச்சார…
-
- 3 replies
- 1.1k views
-
-
Age of sexual consent குறித்து உடல், உளவியல் மற்றும் சமூகவியல் நோக்கோடு திறந்த உரையாடலை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். `செக்ஸ்’ என்கிற சொல்லே மிகுந்த பதற்றத்துக்கு உரியதாக இருக்கிற நம் இந்திய மன அமைப்பில், கடந்த சில ஆண்டுகளில் சிறிதளவு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. பாலியல் குறித்து முழு புரிந்துணர்வுடனான உரையாடல் தேவை என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. பாலியல் கல்வி அவசியம் என்கிற குரல் தொடர்ச்சியாக எழுவதைக் கேட்க முடிகிறது. அவ்வரிசையில், பாலுறவுக்கு இசைவு தெரிவிக்கும் வயது (Age of sexual consent) குறித்தும் சில விவாதங்கள் எழுந்து வருகின்றன. பாலுறவுக்கு இசைவு தெரிவிக்கும் வயதை 18 என நிர்ணயித்திருக்கிறது இந்திய அரசு. உலக நாடுகளில் …
-
- 1 reply
- 1.1k views
-
-
பிள்ளைகளுக்கு முன் அடிபட்டால், விளைவு
-
- 2 replies
- 1.1k views
-