சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
நீங்களும் உலக நாயகன்தான்! மனிதனின் ஆயுள் எத்தனை வருடங்கள்? என்று என் கருத்தரங்குகளில் அடிக்கடி கேட்பேன். 60கள் என்பதுதான் அதிகமாகச் சொல்லப்படும் விடை. சிலர் இப்போது மருத்துவம் வளர்ந்ததால் 70கள் என்பார்கள். சரியான பதில் 120 என்றால் பலர் நம்பமாட்டார்கள். ஜப்பானில் ஒரு தீவில் 100 வயதைத் தாண்டியவர்கள் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள் என்று தகவல் கூறி மருத்துவ, மானிடவியல் ஆராய்ச்சிகள் எல்லாம் சொல்லி விளக்கிய பின் சரி என்பார்கள். ஏன் 60 ? அது சரி, ஏன் எல்லோரும் 60கள் தான் ஆயுள் என்கிறார்கள்? பணி ஓய்வு காலம் 58 அல்லது 60 வயதில். அதற்கு மேல் எதற்கு வாழ்வது என்கிற எண்ணம்தான். சம்பாதிக்காத மனிதன் வாழ்வதில் என்ன அர்த்தம் என்று நம் சமூகம் மறைமுகமாகச் சேதி சொல்கிறதோ? இன்றைய ந…
-
- 0 replies
- 697 views
-
-
கற்பு என்னும் திண்மை பதிப்புரை உயிர்கள் பல. அவையனைத்திற்கும் பரமசிவன் பல உடல்களைக் கொடுத்தருளினார். அவ்வாறு படைக்கப்பட்ட உயிர்களில் மனிதன் ஒருவன் மட்டுமே குடும்பமென ஒன்றை அமைத்து ஒழுக்க நெறியில் வாழ்கிறான். நம் முன்னோர் காலத்தில் குடும்பவாழ்வுக்கெனச் சில நியதிகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. அவற்றுள் "கற்பு" என்பது பெண்பாலாருக்கு மட்டில் விதிக்கப்பட்ட ஒன்று. பண்டைக்கால வழக்கில் மனைவியை "அனுசாரிணி" (பின்பற்றுபவள்) எனக் குறிப்பிட்டு வந்தனர். ஆசிரியர் திருவள்ளுவ தேவநாயனாரும் "கொழுநற்றொழுதெழுவாள்" என்று குறிப்பிட்டார். இருபாலாரும் ஒருவரையொருவர் தொழவேண்டுமெனக்கூறினாரில்லை. அவ்வாறு ஆணுக்கு முதன்மையும், பெண்ணுக்கு அடங்கிய நிலையுமே பண்டைக்க…
-
- 3 replies
- 1.9k views
-
-
அலுவலகம் முடிந்து வீடு வந்த போது, அம்மா வாசலில். பார்சல் ஒன்று வந்திருக்கு என்று சிரித்தார்! புத்தகங்கள் தான். அதனால் தான் அந்த நமுட்டுச்சிரிப்பு. உடைத்தோம்! டிஸ்கவரி புக் ஷாப்பில் இருந்து, நம்ம சவால் சிறுகதை போட்டி பரிசு. என்னடா ஒரு மாசம் ஆயிட்டுதே, வந்து சேரலையே என்று கவலை. ஆதி, பரிசிலிடம் tracking number கேட்டு தொல்லைப்படுத்தவும் இஷடமில்லை. பார்த்து, ஏமாந்து, ஏதலித்து இறுதியில் here you go... ஆவலுடன் ஒவ்வொரு புத்தகமாய் வாசம் பார்த்தேன். கி.ராஜநாராயணனின் “கரிசல் காட்டு கடுதாசி” நிலாரசிகனின் “வெயில் தின்ற மழை” பாஸ்கர் சக்தியின் “கனக துர்கா” கலாப்ரியாவின் உருள் பெருந்தேர் பிரபஞ்சனின் “தாழப் பறக்காத பரத்தையர் கொடி” இவற்றோடு வாழ்த்துச்ச…
-
- 0 replies
- 2.5k views
-
-
நிறமிழக்கும் வண்ணங்கள் சரி எங்குதான் போவது, ஒருவாறு சமாளித்துகொண்டு இருந்துவிடும் எம்மில் பலரும், இரண்டு வருடங்களுக்கு ஒருதடவையேனும், மாறிக்கொண்டே இருப்பர். இருப்பதை ஆங்காங்கே மாற்றிமாற்றி அடுக்கிவைப்பதைத் தவிர, புதிதாக வாங்குவதற்குக் கனவு கண்டாலும், அது கனவிலேயே கலைந்துவிடும். ஏனெனில், சில வாடகை வீடுகளில், மாடிவீட்டுக்கான ஏறுபடிகளைக் கூட, தங்கள் வீட்டுக்குள்ளே ஒழித்துவைத்துக் கொள்வர். அதனால்தான் என்னவோ, “கல்யாணம் கட்டிப்பார்; வீட்டைக்கட்டிப்பார்” என, முன்னோர் கூறிக்கொண்டிருப்பதை இன்னும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். கல்யாணத்தைக் கட்டிக்கொள்ளும் எம்மில் பலருடைய, வீட்டைக் கட்டுவதற்கான ஆசைகள், நிராசைகளாகவே முடிந்துவிடுகின்றன. இருக்கும் வரையிலும் சொந்த வீடிலில்லா…
-
- 0 replies
- 678 views
-
-
முதியவர்கள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுவதற்கு என்ன காரணம்? மதுரை மாநகராட்சிப் பூங்கா. ஒரு மூதாட்டியும் அவருடைய நடுத்தர வயது இளைய மகனும் பெஞ்சில் அமர்ந்திருக்கிறார்கள். மூதாட்டியின் முகத்தில் அப்படி ஒரு சோகம். இருவரும் சென்னையிலிருந்து வந்திருக்கிறார்கள். மனைவி சொல்கேட்டு அம்மாவை மதுரையிலிருக்கும் அண்ணன் வீட்டில் விடுவதற்காக அவன் வந்திருந்தான். வந்த இடத்தில்தான், அண்ணன் கொடைக்கானலுக்குக் குடிபோய்விட்டது தெரிகிறது. பழைய வீட்டிலிருந்தவர் அண்ணனின் தொலைபேசி எண்ணைத் தருகிறார்.தம்பி மொபைல் போனில் பேச, அண்ணன்காரன், “இங்கேயெல்லாம் அம்மாவைக் கொண்டு வந்து விட்டுவிடாதே...” என்கிறான். அம்மா, போனை வாங்கி அவனிடம் பேச, “இந்தப் பக்கம் வரவே வராதே” என்கிறான். இப்போது இருவரு…
-
- 0 replies
- 922 views
-
-
நீந்த, ஓட, நடனம் ஆட, விளையாட, குத்துச்சண்டை போட, சைக்கிள் ஓட்டத் தயார் நிலையில் நிற்கும் பெண்கள். அவர்களின் உடல் உறுப்புகளிலிருந்து ரத்தம் கசிகிறது. எதுவும் அவர்களைத் தடுக்கவில்லை. ரக்பி விளையாடியவருக்கு நெற்றியில் அடிபட்டு ரத்தம் வழிகிறது. குத்துச்சண்டையிட்டவருக்கு முகத்தில் ரத்தம் பீச்சியடிக்கும்படி குத்து விழ, கீழே தடுமாறி விழுகிறார். நீருக்குள் பாய்ந்தவருக்கு முகம் முழுக்க ரத்தக் காயம். காட்டுக்குள் ஓடும் பெண் இடறி விழுந்து கால் முட்டியிலும் உள்ளங்கையிலும் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தக் காயம். பாலே நடனம் ஆடியவருக்குப் பாத விரல்களில் தோல் கிழிந்து ரத்தம் கசிகிறது. பனிக்காட்டுக்குள் சைக்கிள் ஓட்டியவருக்குத் தொடையில் சதை கிழிந்து ரத்தம் வழிந்தோடுகிறது. எத…
-
- 2 replies
- 932 views
-
-
நல்ல நட்பை இழந்துவிடாதீர்கள் சாவுக்கும் வாழ்வுக்கும் சாணத்தூரம் இருந்தாலும், நட்போடு இருக்கத்தோன்றுவது மனம்! உலகத்து கவிஞர்களிடம் ஒவ்வொரு வரியாக கடன்வாங்கி கவிதை எழுதினாலும், வரிகளுக்குள் அடங்காத ஒன்று நட்பு!! நண்பர்கள் தின வாழ்த்துகள்
-
- 2 replies
- 1.2k views
-
-
கணவன் - மனைவி இடையே பிரியம் விதைக்கும் 10 ஆலோசனைகள்! இப்போதெல்லாம் திருமணமாகி ஒரு வருடத்துக்குள் கணவன், மனைவிக்கு இடையே ஒரு வெறுமை ஏற்பட்டுவிடுகிறது. சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் போன்ற விஷயங்கள் மனிதர்களிடமிருந்து நம்மை பிரித்துவிட்டன. ஓர் இன்பத்தையோ துன்பத்தையோ முழுமையாக, உணர்வுபூர்வமாக அனுபவிக்கவிடாமல் அடுத்தடுத்து மனதை ஆக்கிரமிப்பு செய்யக்கூடிய விஷயங்கள் உருவாகிவிட்டன. கணவனோ மனைவியோ ஒருவருக்கு ஒருவர் கட்டாயத் தேவை இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. ஒருவருக்கொருவர் கொடுக்கக்கூடிய விஷயங்கள் வெவ்வேறு நபர்களிடமிருந்து வெவ்வேறு வடிவத்தில் அவர்களுக்குக் கிடைக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் கணவன்- மனைவி ஒருவருக்கு ஒருவர் அந்யோன்யமானவராக ஆக…
-
- 0 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 415 views
-
-
நி ஒரு நாள் ஒரு பிறவுண் நிற ஆள் கடை ஒன்றில தேத்தண்ணி வாங்கி குடிக்கப் போனாராம் அப்ப அங்க இருந்த எல்லாரும் வெள்ளையாக்களாம்.பக்கத்தில நின்ற வெள்ளையாள் சொன்னாராம் நிற ஆக்களை யாருள்ளுக்க விட்டது என்று. உடன அந்த பிறவுண் ஆள் அவரைப் பார்த்து சொன்னாராம் நான் பிறக்கும்போதே பிறவுண்தான் வளரும்போதும் பிறவுண்தான்.வருத்தம் வரும்போதும் பிறவுண் தான்.வெயிலிலும் பிறவுண்தான் பனியிலும் பிறவுண்தான்.இறக்கும்போதும் பிறவுண் தான். ஆனால் நீங்கள் பிறந்தபோது பிங் வளரும்போது வெள்ளை வருத்தம் வந்தா பச்சை வெயில்ல சிவப்பு குளிரில நீலம்/சிவப்பு இறக்கும்போது நாவல். ஆனால் மற்ற ஆக்களில நிறம் பார்க்கிற வல்லமை இருக்கு உங்களிட்ட என்று சொல்லிப்போட்டு தேத்தண்ணி குடிக்கத் தொடங்கினார…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஒரு காலத்தில் புறா வழியாகச் செய்தி அனுப்பிக்கொண்டு இருந்தார்கள். ஒரு புறாவை ஒரு நேரத்தில் பாயின்ட் டு பாயின்ட் பஸ்போல மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது முக்கியக் குறைபாடு. இதுபோக, கட்டப்படும் நூலின் தரம், பசியோடு வட்டமிடும் பருந்துகள், புறாக் கறியை விரும்பும் அரசர்கள்(!) என்று பலவிதமான ரிஸ்க் இருந்தது. தபால் வசதி உலகம் முழுதும் வந்த பின்னர், பேனா நட்பு என்ற புதிய அத்தியாயம் பிறந்தது. ஈரோடு கலா அக்கா, ஸ்டுடியோவில் ஒரு கையை இன்னொரு கையால் பிடித்தபடி புன்னகைக்கும் புகைப்படத்தைத் தனது பேனா தோழியான பாரிஸில் இருக்கும் பெக்கிக்கு அனுப்ப, ஈஃபில் டவருக்குக் கீழ் பெக்கி குட்டியூண்டு தெரியும்படி நிற்கும் புகைப்படம் திரும்பி வரும். உலகில் எத்தனை பேனா நண்பர்கள் …
-
- 0 replies
- 1.4k views
-
-
கண் இருக்கிறது ஆனால் வழி தெரியவில்லை எங்கே போவது என்பது தெரியும் ஆனால் எப்படி போவது என்பது என்று தெரியாது எல்லா திறமைகளும் இருக்கின்றது அதை எப்படி செயற்படுத்துவது என்பது தெரியாது இப்படித்தான் பல திறமை சாலிகள் தங்களிடம் இருக்கும் பல வரங்களை வைத்து கொண்டு அவற்றை எப்படி இந்த உலகிற்கு காட்டுவது என்பது தெரியாமல் அடைக்கப்பட்ட பாதையில் நிற்பதை போல விழித்து கொண்டிருக்கிறார்கள் . பல மனிதர்கள் தமக்கு தெரிந்ததை பிறருக்கு சொல்லி கொடுக்க விரும்புவதில்லை தான் மட்டும் சாதிக்க வேண்டும் தான் மட்டும் சம்பாதிக்க வேண்டும் மற்றவர்கள் தங்களை போல் வரக்கூடாது என நினைக்கிறார்கள் சில வெற்றியாளர்கள் தன்னை பற்றி சொல்லும் போது மிகவும் கடுமையான உழைப்பில்தான் நான் உயர்ந்து நிற்கிறேன் என்று மட்டுமே ச…
-
- 2 replies
- 633 views
-
-
கம்ப்யூட்டர் ஜாதகம் கணிப்பது எப்படி? மூடநம்பிக்கை -- கம்ப்யூட்டர் ஜாதகம் கணிப்பது எப்படி? இங்கு ஜோதிடம் பார்க்கப்படும், என்ற பலகையைக் கண்டால் போதும், உடனே கையை நீட்டி விடுவார்கள் தமிழர்கள்! எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு! வாழ்க்கையில் ஏற்படும் ஆசையும், அச்சமுமே ஜோதிடத்திற்குக் காரணம். ஜோதிடம் அறிவியல் பூர்வமானது என இந்து மதத்தினர் கூறுவார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் ஜோதிடம் அறிவியல் போலவே இருக்கும். ஆனால் அது அறிவியல் இல்லை. வள்ளுவர் சொன்னார், கயவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை, ஏனெனில் அவர்களும் மனிதர்களைப் போலவே இருக்கிறார்கள் என்றும் அதைப் போலத்தான் இந்த ஜோதிடமும்.ஜோதிடத்தைப் பலரும் நம்புகிறார்கள் என்றால் …
-
- 0 replies
- 11.8k views
-
-
வணக்கம், கீழ இருக்கிற உதட்டு குவியல் – உதுதான் இப்ப முகநூலில பிரபலம் ஆனது. A typical Tamil teen age பொண்ணுங்களிண்ட படங்களை பார்த்தீங்கள் எண்டால் உந்த உதட்டு குவியல் அபிநயத்தை தாராளமாய் காணலாம். நான் ஒரு பிள்ளையை கேட்டன். அழகான முகத்தை ஏன் உப்பிடி செய்து படத்துக்கு pose குடுக்கவேணும், அப்பிடி செய்ய அரியண்டமாய் இருக்கிதே எண்டு. இல்லையாம், இப்பிடி உதட்டை குவிச்சு வச்சுக்கொண்டு pose குடுக்கிறதுதானாம் அழகாம். தாங்கள் exicitedஆய், funஆய், happyஆய் இருக்கிற நேரங்களில உந்த அபிநயம் தானாகவே இயற்கையாய் வந்திடுதாம், அந்த நேரங்களில தங்களை யாராச்சும் படம் எடுத்தால் என்ன செய்கிறதாம். சரி ஏதோ ரீன் ஏஜ் சின்னனுகள். அவைக்கு விருப்பமானமாதிரி எப்பிடியாவது முகத்தை வச்சு சந்தோச…
-
- 4 replies
- 1.2k views
-
-
பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். மாமா, சித்தப்பா, பெரியப்பா யாராக இருந்தாலும் சரி. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளை யாரும் என்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும். உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவ…
-
- 0 replies
- 626 views
-
-
ஒருவர் காதலிக்கிறார் என்பதை அவரது காதையும், செல்பேசியையும் வைத்துச் சொல்லிவிடலாம். எங்க அவர் காதைப் பார்க்க முடிகிறது. எப்போதும் காதில் செல்பேசி ஒட்டிக் கொண்டிருக்கிறதே என்று சொன்னால், அவர் நிச்சயம் காதலில் விழுந்தவராகத்தான் இருப்பார். இது டெலி மார்க்கெட்டிங் வேலை செய்பவர்களுக்குப் பொருந்தாது. பெரும்பாலான காதலர்கள் வெகு நேரம் தொலைபேசியில் அரட்டை அடிப்பதை வழக்காமாகக் கொண்டுள்ளனர். நிற்கும் போது, நடக்கும் போது பயணிக்கும் போது என எப்போதும் ஏதாவது ஒன்று இவர்கள் வாயிலும், காதலும் போய்க்கொண்டே இருக்கும். கூட இருப்பவர்கள்தான், மணிக்கணக்கா அப்படி எ…
-
- 1 reply
- 792 views
-
-
1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள். 2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று. 3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள். 4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக…
-
- 3 replies
- 7.2k views
-
-
1) இப்பொழுது டிசிஎஸ் நிறுவனம் கைகளில் கோடாரியை எடுத்திருக்கிறது. கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரத்திலிருந்து முப்பதாயிரம் வரையிலான பணியாளர்களை வெட்டப் போகிறது. ரத்தச் சகதி. மிகச் சமீபத்தில் யாஹூ இதைச் செய்தது. அதற்கு முன்பாக ஐபிஎம். அப்புறம் ஆரக்கிள். இப்படி பெரும்பாலான நிறுவனங்கள் இதைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் டிசிஎஸ் இதுவரைக்கும் தங்களைப் புனித நிறுவனமாகக் காட்டிக் கொண்டிருந்தது. பத்து வருடங்களுக்கு முன்பாக டிசிஎஸ்ஸில் சேர்ந்தால் ‘அது கவர்ன்மெண்ட் வேலை மாதிரி’ என்பார்கள். சம்பளத்திலும் பதவி உயர்விலும் தாறுமாறான வளர்ச்சி இருக்காது என்றாலும் கூட முரட்டுத்தனமாக வெளியே தள்ளிவிட மாட்டார்கள் என்கிற நம்பிக்கை அது. முதல் சில வருடங்களுக்கு இந்தியாவில் இருப…
-
- 1 reply
- 1.3k views
-
-
எனக்கு மீசை இல்லை, முழச் சவரம் தான். உடலில் வளரும் மயிர்களை சேவ் பண்ணுகிறது சரியா, உடல் இதனால் வெப்பத்தை இழக்குறதா & உடல் கழிவுகளை இலகுவாக அகற்றுகிறதா சேவ் பண்ணுவதால். மருத்துவரீதியாக தகுந்த காரணங்கள் தரமுடியுமா? (மீசை வைத்தவர்கள் அதிலும் குறிப்பாக எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுபவர்கள் தயவுசெய்து இக்கட்டுரையை படிக்க வேண்டாம்) சிலருக்கு அண்டை வீட்டுக்காரர்களiனால் பிரச்சினை வரும். சிலருக்கு சொந்த பந்தங்களால் பிரச்சினை எழும். சொன்னால் நம்ப மாட்டீர்கள் எனக்கு பிரச்சினையே என் மீசைதான். மீசை வைப்பதா? வேண்டாமா? என்று குழம்பியே நடுத்தர வயதை எட்டியாகிவிட்டது. எத்தனையோ முறை வளர்த்தாகி விட்டது. வளர்த்த வேகத்தில் மழித்தும் பார்த்தாகி விட்டது. வேறென்ன? கம்பள…
-
- 60 replies
- 15k views
-
-
ஆண்கள் பார்வையில் என்றும் பெண்கள் - ராமச்சந்திரன் உஷா காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. மனிதர்களின் மன ஓட்டங்களும், வெளி தோற்றமும் முற்றிலும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. நேற்று எல்லோராலும் ஒத்துக் கொண்ட ஒரு விஷயம் இன்று தவறு என்று நிரூபிக்கப்படுகிறது. ஆனால் எவ்வளவு காலம் ஆகியும் மாறாமல் இருப்பது ஒன்றே ஒன்றுதான். நூறு, ஆயிர வருட பழங்கால சிற்பத்தைப் பாருங்கள். அது பெண்ணோ, வழிபடும் தெய்வமோ, கண்ணகி போன்ற கற்புக்கரசியோ அல்லது இக்காலத்திய பெண் சித்திரமோ எல்லாமே இடை சிறுத்து, மேலாடை பேருக்கு சுற்றிய பெருத்த மார்பகத்தைக் காட்டிக்கொண்டு இருக்கும். சிலைகளை உருவாகியவனோ, சித்திரக்காரனோ சரி எத்தனை நூற்றாண்டு ஆகியும் அவன் கற்பனை மாறவேயில்லை. அத்தனை பெண் சிற்பங்களும் சிறுத்…
-
- 15 replies
- 8.7k views
-
-
சேர்ந்துவாழும் உறவு திருமணத்துக்கு மாற்றாகுமா? ஆர்.அபிலாஷ் சேர்ந்துவாழும் (Live-in together) உறவுகள் பற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் முன்னேயே இதைப் போன்று திருமணமற்ற உறவுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் தீர்ப்புகள் 2008இல் இருந்தே சில வந்துள்ளன. ஆனால் சமீப தீர்ப்பு, அதில் செக்ஸுக்கு தரப்பட்ட அதிகாரபூர்வ அந்தஸ்து காரணமாக பரபரப்பான விவாதத்துக்கு உள்ளானது. ஏற்கனவே விவாதங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதைப் போல இத்தீர்ப்பு செக்ஸ் வைத்தால் திருமணம் என எளிமைப்படுத்தவோ வலியுறுத்தவோ இல்லை. தொடர்ந்து குறிப்பிட்ட ஒரு கால அளவுக்குத் தம்பதியினர் சேர்ந்திருந்தால் அது திருமணமாக அங்கீகரிக்கப்படலாம் என்கிறது. கூடவே “உடலுறவு கொண்டிருந்தால்” எனும் சொற்களும் சேர, சிலர் அதை…
-
- 1 reply
- 1.7k views
-
-
Carmen Carrera என்பவர் விக்ரோறியா சீக்ரட்டின் முதலாவது திருநங்கை மொடலாவர். இவர் அமரிக்காவிலுள்ள நியூஜெர்சி என்னும் இடத்தச் சேர்ந்தவர். பிறப்பால் Christopher Roman என்னும் ஆணான இவர் பெண்ணாக மாறி தற்போது விக்ரோறியா சீக்ரட்டின் பெண் மொடலாக வலம்வருகின்றார்!! http://www.cnn.com/video/data/2.0/video/living/2014/02/04/natpkg-orig-ancil-carmen-carrera-transgender-model-fashion.cnn.html
-
- 1 reply
- 5k views
-
-
சிறுவயதில் படும் கஷ்டம் வாழ்வில் நல்ல நிலையை அடைய வைக்கும்.
-
- 2 replies
- 398 views
- 1 follower
-
-
படித்ததில்.... (From : Maattru.com) ---------------------------- அன்பானவனே! “நலமா? … என் ஒரு நாள் அனுபவத்தை இந்தக் கடிதத்தில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு பெண்ணின் அங்கங்கள் என்னென்ன அளவில் இருக்க வேண்டுமென்பதை நீ அறிவாய். என் மார்பகங்கள், என் இடை மற்றும் உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் அறிந்தே வைத்திருப்பாய். தினம் தினம் நீ தெரிந்துகொள்ள விருப்பத்துடன் இருக்கிறாய். அதிகம் தேடப்படும் வாசகங்களில் ஒன்றாக இணையத் தேடுபொறிகள் எங்கள் அந்தரங்கங்களின் பெயர்களைத்தான் சொல்கின்றன. என் நண்பனாய், கணவனாய், தகப்பனாய், காதலனாய், சகோதரனாய் இன்னும் எல்லாமுமாய் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட உனக்கு பெயர் போட்டு கடிதம் எழுதும் அளவுக்கான சுதந்திரத்தை இன்னும் சமூகம் வழங்கவில்லை.…
-
- 0 replies
- 722 views
-
-
சமீபத்தில் மேலைநாட்டு பெண்களிடம் நீங்கள் உங்கள் நண்பரை காதலனாக ஏற்றுகொள்வீர்களா? என்று ஒரு சர்வே நடத்தபட்டது. அதில் பங்கு எடுத்த பல பெண்கள், 'முடியவே முடியாது, அதற்கு வாய்ப்பே இல்லை எல்லை' என்று பதில் தந்தனர். ஏன் அப்படி சொல்கிறீர்? என்று திருப்பி கேட்டதுக்கு அவர்கள் அத்தனைப் பேரும் கோரசாக சொன்ன பதில் 'ஷெல்லி வொயிட் ஹெட்'. சமீபத்தில் ஷெல்லியிடம் அவரது பால்ய தோழன் இவான் 'உன்னுடன் வாழ்ந்த ஏழு வருட திருமண வாழ்க்கையை இதோடு முடித்து கொள்வோம்' என்று விலகியிருக்கிறார். அவர் விலகிய பின் ஷெல்லிவிட்ட அறிக்கைதான் பெண்களை, இனிமேல் நண்பர்களை நண்பர்களாகவே பார்ப்போம் என்று சொல்ல வைத்திருக்கிறது. இதைப் பற்றி ஷெல்லி பேசுகையில் "நானும் இவானும் திருமணம் செய்து கொண்டு ஏழு வருடம் ஆகிறது. எ…
-
- 12 replies
- 1.8k views
-