சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
பிரிஷ்டி பாசு பிபிசி ஃயூச்சர் நிறவாதம் என்பது ஒரே இனக்குழுவில் மென்மையான நிறம் கொண்டவர்களுக்குச் சாதகமான பாகுபாடாக உள்ளது. உலகம் முழுக்க சமுதாயங்களில் இதனால் பெரிய தாக்கம் உள்ளது என்றாலும், இதுவரையில் அபூர்வமாகத்தான் விவாதிக்கப்பட்டு வருகிறது. நியூசிலாந்தைச் சேர்ந்த ஹர்ஷரின் கௌர் பருவ வயதைக் கடந்த பிறகு, தன்னுடைய முன்னோர்கள் வாழ்ந்த இந்தியாவைப் பார்ப்பதற்காக முதன்முறையாக பயணம் மேற்கொண்டார். அப்போது, தங்களுடைய தோலின் நிறம் மக்களிடம் எந்த அளவுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மென்மையான நிறம் கொண்டவர்கள் மட்டுமே இந்திய திரைத்துறையில் பிரபலமாக இருக்க முடியும் என்று …
-
- 8 replies
- 1.1k views
-
-
என்னினமே என்சனமே என்னை உனக்குத் தெரிகிறதா? என்று ஒரு கவிஞன் பாடல் இயற்றினான். அந்தப் பாடல் வரிகள் குறித்து சில மாற்றங்கள் செய்திருக்க வேண்டும் என்பது நம் நினைப்பு. அந்த மாற்றம்: என்னினமே என்சனமே உன்னை உனக்குத் தெரிகிறதா? என்பதாக இருந்திருக்க வேண்டும்? உன்னையே நீ அறிவாய் என்ற தத்துவம் மிகவும் முக்கியமானது. என்னை எனக்கு அறிவித்தான் எங்கள் குரு நாதன் என்ற தவத்திரு யோகர்சுவாமியின் திருவாக்குக்கு அப்பால் இன்னொரு எடுத்துக் காட்டுத் தேவையில்லை. எனவே என்னை நான் அறிதல் என்பது மிக வும் முக்கியமானதாகும்.எனினும் தமிழ் மக் களாகிய நாம் எங்களை நாங்களே அறிதல் என்பதில் தவறிழைத்து விடுகிறோம். கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் நடந்த த…
-
- 0 replies
- 923 views
-
-
சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்றாகும்.மதுப் பாவனை என்பது சம்பந்தப்பட்ட தனிமனிதனை மட்டும் பாதிப்பதில்லை. அவரது குடும்பம், சமூகம், நாடு என்றெல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மதுப் பழக்கம் முதலில் சாதாரண பழக்கமாகத்தான் ஆரம்பிக்கும். முதலில் பியர் என்று சமாதானம் கூறிக்கொண்டுதான் இந்தப் பழக்கம் ஆரம்பிக்கும். ஆரம்பிக்கும் போதே யாரும் முழு போத்தல் மதுவையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. சில மாதங்கள் அல்லது வருடங்களில் மூளையில் அல்கேஹால் சில இரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, சாதாரண போதையைத் தருவதற்குக் கூட அதிக அளவு மது தேவைப்படும். இதனால்தான் ஆரம்பித்துச் சில வருடங்களில் போத்தல் கணக்கில் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்…
-
- 0 replies
- 711 views
-
-
வேட்டி உடுப்பது எவ்வாறு என்று காட்டும் யுரியூப் இருந்தால் இணையுங்கேன். இது பல பேருக்கு உதவியாய் இருக்கும். வேட்டிக்கு என்ன ஆங்கிலப் பெயர்?
-
- 33 replies
- 16.2k views
-
-
வேண்டுதல்களும் வாழ்த்துகளும் ஒருவர் உடல் நலக்குறைவால் வருந்தும்போது அவர் நலம் பெற பிரார்த்திப்போம் அதேநேரம் பிரார்த்தனை மீது நம்பிக்கையற்றவர்கள் அல்லது கடவுள் நம்பிக்கையற்றவர்கள் நலம் பெற வாழ்த்துவார்கள் இது சரியா?? ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதபோது வாழ்த்துக்கள் மட்டும் எப்படி பலிக்கும் என்று எதிர்பார்த்து வாழ்த்தமுடியும்??? (உண்மையில் தெரிந்து கொள்ளவே கேட்கின்றேன்)
-
- 2 replies
- 1.2k views
-
-
கால்நூற்றாண்டுக்கு முன்னர் பெண் சிசுக்கொலைகள் நடந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய தமிழ்நாட்டில் இன்று பெற்றோர் கொலைகள் நடக்கத்துவங்கியிருக்கின்றன. தமிழ்நாட்டின் முதியோர் பராமரிப்பின் மோசமான நிலைமையே இத்தகைய மவுனக்கொலைகள். இந்த நிலைமை உருவானதற்கான சமூக, பொருளாதார, கலாச்சார பின்னணியை ஆராயும் பெட்டகத்தொடரின் முதல் பகுதி. "100 கிராமங்களில் மட்டும் 200 பேர் கொலை?" மதுரையை ஒட்டிய உசிலம்பட்டி பகுதியில் செயற்படும் தொண்டு நிறுவனமான யுரைஸ் என்கிற நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் நூறு கிராமங்களில் மட்டும் 150 முதல் 200 முதியோர் கொலைகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலைமை வெறும் மதுரைப்பிராந்தியத்தில் மட்டும் நடக்கவில்லை. தமிழ்நாட்டின் வேறு இடங்க…
-
- 0 replies
- 636 views
-
-
https://trendsnapnews.com/ai-fuels-surge-in-tech-company-earnings-in-europe-and-the-us/
-
- 0 replies
- 529 views
- 1 follower
-
-
https://trendsnapnews.com/ai-fuels-surge-in-tech-company-earnings-in-europe-and-the-us/ எனக்கு சரியாக போடத்தெரியவில்லை தேடிச்சென்று பாருங்கள்
-
-
- 1 reply
- 707 views
- 1 follower
-
-
வேலை உங்களை எரிக்க அனுமதிக்காதீர்கள்! ஸ்ரீதர் சுப்ரமணியம் இங்கிலாந்தில் பணிபுரிந்தபோது எங்கள் டீமில் டிம்* என்று ஒருவர் இருந்தார். நன்றாக வேலை செய்துகொண்டிருந்தவர் திடீரென்று சொதப்ப ஆரம்பித்தார். யுஐ டிசைனராக இருந்த அவரிடம் இருந்து, டிசைன்கள் அரைகுறைத் தரத்துடன் வர ஆரம்பித்தன. ஏதாவது கமென்ட் சொன்னால் அதை வைத்து ரொம்ப மன அழுத்தத்துக்கு ஆளாகிவிடுவார். "என்னால் இவ்வளவுதான் முடியும் ஸ்ரீ" என்று சிடுசிடுப்பார். ரொம்ப அழுத்திக் கேட்டால், கோபக் கணையுடன் எதிர்மறை கமென்ட்டுகள் பாய்ந்து வரும். ஒருகட்டத்தில் இந்த ஆளை வேலையை விட்டுத் தூக்கிவிட வேண்டியதுதான் என்கிற முடிவுக்கே வந்துவிட்டேன். டிம்மைப் பற்றி என் மேனேஜரிடம் சொன்னேன். முழுவதையும் நிதானமாகக் கேட்ட அவர், "டிம் ஒருவ…
-
- 2 replies
- 693 views
-
-
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி ஊகத்திற்கு அப்பால் உள்ளது. ஃபேஸ்புக், டுவிட்டர், கூகுள் ப்ளஸ் போன்ற பல சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளன. அலுவலகங்களில் பெரும் பிரச்சினையாக விவாதிக்கப்பட்டும் விஷயங்களில் ஒன்று வேலை நேரத்தில் ஊழியர்கள் தனிப் பட்ட விஷயங்களுக்காக இத்தகைய வலைத்தளங்களை மேய்ந்துகொண்டிருப்பதுதான். பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் வேலை நேரத்தைச் சமூக வலைத்தளங்கள் அபகரித்துக் கொள்வதாக நினைக்கின்றன. எனவே அலுவலகத்தில் சமூக வலைத்தளங்களை முடக்கிவைத்துள்ளன. இது பெரும்பாலும் கீழ்நிலையில் உள்ள ஊழியர்களுக்குத்தான். ஏனெனில் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் பொறுப்பு மிக்கவர்களாகவே எப்போதும் கருதப்படுகிறார்கள். எனவே அவர்களுக்கு இப்படித் தடையேதும் விதிக்கப்படுவ…
-
- 0 replies
- 679 views
-
-
வேலை போனால் என்ன? என்னால் வடாபாவ் விற்றுக் கூட கோடிகளில் சம்பாதிக்க முடியும்! நிரூபித்த மும்பை இளைஞர்! 2007 ஆம் ஆண்டில் இந்தியாவை உலுக்கிய ஆட்குறைப்பு அபாயத்தில் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் பணிபுரிந்து கொண்டிருந்த இந்தியர்கள் பலரும் கூடத் திடீரெனத் தங்களது வேலையை இழந்து அவதியுறும் நிலை ஏற்பட்டிருந்தது. வேலையிழப்புக்கு முதல் மாதம் வரையிலும் கை நிறைய பையையும் நிரப்பிக் கொண்டிருந்த வருமானத்தை நிரந்தரம் என்றெண்ணித் தங்களது உழைப்பை அயராது வாரி வழங்கிக் கொண்டிருந்த இளைஞர்கள் பலர் வேலை இழப்பின் பின் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி செய்வதறியாது திகைக்கும் நிலை ஏற்பட்டது. அப்படித் தவிப…
-
- 0 replies
- 2.8k views
-
-
சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் தில்லைராஜன்: வாழ்க்கை - வேலை இரண்டுமே முக்கியமான விஷயங்கள் தான். ஒரு நாளில் எத்தனை மணி நேரம் அலுவலக வேலைகளை கவனிக்க வேண்டும், எவ்வளவு நேரம் குடும்பத்தோடு செலவிட வேண்டும் என்பதைத் திட்டமிட்டால், உங்களது வேலை மற்றும் குடும்பத்துடனான நேரம், சம நிலையில் அமையும். ஒரு வேலையை செய்து முடிக்க, அதிக நேரம் தேவைப்படுகிறது அல்லது நீங்கள் திட்டமிட்ட நேரத்துக்குள் அந்த வேலையை முடிக்க முடியவில்லை எனில், உங்களுக்கு சோர்வு தான் ஏற்படும். இவ்வாறான சூழ்நிலையில், அந்த வேலைக்கு சிறிது அவகாசம் தந்து, நீங்கள் புத்துணர்ச்சி அடைந்தவுடன் அதே வேலையை செய்தால், எந்தத் தவறும் இல்லாமல் சிறப்பாக செய்து முடிக்கலாம். வேலையே கதி என்று இருந்து விடாமல், ஊரில் நடக்கும் திருவிழா …
-
- 0 replies
- 1.7k views
-
-
வேலை, நேர்முகத்தேர்வின் மறுபக்கம் இன்று Furlough முடிந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் வேலைக்கு அழைத்திருந்தார்கள். நான் வருகிற ஜனவரியில் வேறு நிறுவனத்தில் இருவாரங்களுக்கு முன்னரே நேர்முகம் போன்ற ஏற் பாடுகள் செய்து விட்டிருந்தேன். காலையில் மனேஜருடன் சந்திப்பு. எனது பகுதியில் 12 பேரில் 6 ஆக குறைக்க வேண்டும். அதுகுறித்த வேலை தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்றார். கொரோனவனை பயன்படுத்தி, பலரை வீட்டுக்கு அனுப்புகின்றனர். அதேவேளை, திறமை, தகுதி இருப்பவர்களுக்கு, கூடுதல் சம்பளத்தில் வைத்துக் கொள்கின்றனர். மேனேஜர் எனக்கான கொடுப்பனவுகளை ஜனவரியில் இருந்து அதிகரிக்க உள்ளதாகவும், கூடுதல் வேலை சுமையினை எடுக்க வேண்டும் என்றும் சொல்லி விட்டார். மாலை இரண்டு மணிக்…
-
- 13 replies
- 1.2k views
-
-
நான் கிட்டடியிலை ஒரு நிகழ்சி பாத்தன் . அதிலை வேலைசெய்யிற பொம்பிளையள் சமைக்கிறதை பத்தி ஒரு விவாதம் நடந்திது . இது சம்பந்தமாய் எனக்கு சொந்தமாய் கருத்து இருக்குது எண்டாலும் உங்களிட்டையும் கேக்கிறன் . அந்த விவாதம் இதுதான் ...................... ************************************************ நம்ம கோபிநாத் வெகு கவனமாக, முழுநேர வீட்டரசிகளை எல்லாம் களை எடுத்துவிட்டு, படித்து வேலைபார்த்துக்கொண்டு சமையலையும் கவனிக்கும் அந்தக்காலத்தில் புதுமைப்பெண்ணாக திகழ்ந்த அம்மாக்களையும், வேலை பார்த்துக்கொண்டே சமைப்பது கடினம் என்று வாதிடும் இந்தக்காலத்துப் புதுமைப்பெண்ணாக வாழும் அம்மாக்களையும் ஒன்று கூட்டி எதிர் எதிரணியில் உட்காரவைத்து வாதிடவிட்டு வேடிக்கை பார்த்தார். இந்த ஷோவை நடத்த…
-
- 41 replies
- 7k views
-
-
வேலை பார்க்கும் இடத்தில் நீங்கள் சிறப்பானவராகத் திகழவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்கு பதில் தெரியாமல்தானே தவிக்கிறோம்; தெரிந்தால் ஜமாய்த்துவிடுவோமே என்றுதானே நினைக்கிறீர்கள்! கேரியர் வார்ஃபேர் என்கிற இந்தப் புத்தகத்தைப் படித்தால், உங்கள் பாஸை உங்களை நோக்கி நிச்சயம் திரும்பிப்பார்க்க வைப்பீர்கள். வெற்றிச் செருக்கு எதுவுமில்லாமல், அலங்காரமற்ற, அனுபவப்பூர்வமான யோசனைகளுடன் பிராக்டிக்கலாக எழுதப்பட்ட இந்தப் புத்தகம் உங்களுக்கு சொல்லும் முதல் விஷயம், நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் உங்களை மதிப்பீடு செய்பவர்களின் பார்வையிலேயே நீங்கள் பார்த்துச் செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் பிராண்டை நீங்கள் வளர்த்துக்கொள்வதன் மூலம் ஆபீஸ் வேலையில் ஜெயிக்க, நீங்கள் எ…
-
- 5 replies
- 1.2k views
-
-
வேல்ஸில்... பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை அடிப்பது... சட்ட விரோதமானது! வேல்ஸில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிப்பது இன்று (திங்கட்கிழமை) முதல் சட்டவிரோதமானது. ‘குழந்தைகளுக்கு இது ஒரு வரலாற்று நாள்’ என முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார். இதன்மூலம் வேல்ஸ் உடல் தண்டனையை தடை செய்யும் இரண்டாவது பிரித்தானிய நாடாகிறது. தங்கள் பராமரிப்பில் இருக்கும் குழந்தையை யாரேனும் அடித்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு தாக்குதலுக்காக வழக்குத் தொடரப்படலாம். 2020ஆம் ஆண்டு நவம்பரில் ஸ்கொட்லாந்து சட்டவிரோதமான முதல் பிரித்தானிய நாடாக மாறுவதற்கு முன்பு, ஏப்ரல் 2020ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தீவுகளின் முதல் பகுதியாக ஜெர்சி இருந்தது. 1979ஆம் ஆண்டில் …
-
- 0 replies
- 425 views
-
-
தமிழகத்தில் வாழும் தேவேந்திரகுலவேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் போன்ற தாழ்த்தப்பட்ட பிரிவினரின் அவலநிலை குறித்து இப்பெட்டக நிகழ்ச்சியின் கடந்த பகுதிகளில் பார்த்தோம். தலித்துகள் என்றழைக்கப்படும் இச்சமூகம் காலாகாலமாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறது. திராவிட இயக்க எழுச்சியின் விளைவாக பிராமண ஆதிககம் கணிசமான அளவு தகர்க்கப்பட்டும்கூட, தலித்மக்களுக்கு சமூக அந்தஸ்து இன்றளவும் மறுக்கப்படுகிறது. இந்து மத வரையறைகளுக்குள் சிக்கியிருப்பதால்தான் தங்களுககு இப்படிப்பட்ட அவமானங்கள், எனவே மதம் மாறுவதே தங்கள் பிரச்சினைக்கு சரியான தீர்வு என பல தலித் சிந்தனையாளர் கூறிவந்திருக்கின்றனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பலர் கிறித்துவர்களாக மாறியிருக்கின்ற…
-
- 0 replies
- 1.5k views
-
-
இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது. இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் "வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடி…
-
- 0 replies
- 910 views
-
-
ஸ்டீபன் ஹாக்கிங் பிரிட்டனில் 1942ம் வருடம் பிறந்த ஸ்டீபன் படிப்பில் படு சுட்டியாக இருந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டு இருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். 21ம் வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும் மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள். துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர்வார்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டான். சில நாள்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின் மரணம், பயம் தருவதற்குப் பதிலாக தைரியம் கொடுத்தது. அந்தச் சிறுவனைவி…
-
- 3 replies
- 1.4k views
-
-
இந்நாட்டிலேயே மிகவும் மலிவானவை மனித உயிர்கள்தாம் என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது! இம்முறை குருதி தோய இந்த உண்மையை உறுதிப்படுத்திக் காட்டியிருப்பது மனித உரிமைக்குப் பெயர் பெற்ற தமிழ்நாடு! 99 நாட்களாக அறவழியில் நடந்த போராட்டத்துக்கு நூறாவது நாளில் துப்பாக்கிக் குண்டுகளால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. “வன்முறையில் ஈடுபட்டார்கள் அதனால்தான் சுட்டோம்” என்கிறது காவல்துறை. இதற்கு எதிராகக் குரல் எழுப்பும் சமூக அக்கறையாளர்களோ, “மக்கள் அமைதிப் பேரணிதான் நடத்தினார்கள். காவல்துறைதான் எடுத்த எடுப்பிலேயே சுடத் தொடங்கி விட்டது” என்கிறார்கள். காவல்துறை சொல்லும் சாக்கை விட அக்கறையாளர்களின் இந்த வாதம்தான் அதிக ஆபத்தானது! நண்பர்களே, இது என்ன நிலைப்பாடு? அப்படியானால்,…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஸ்மார்ட் போன்கள் மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் நாம் அதை எப்படிப் பயன்படுத்துகின்றோம்? செல்பேசியில் அலைவரிசை சரியாகக் கிடைக்காமல் போனாலோ, பேட்டரி தீர்ந்து விட்டாலோ, செல்பேசியைக் காணவில்லை என்றாலோ மிகவும் அதிகமாகப் பதட்டப்படுகிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு 'நோமோபோபியா' இருக்கிறது என்பது நிச்சயம். செல்பேசி இல்லையென்றால் தேவைக்கதிகமாக பயப்படுவது ''நோ மொபைல் போன் போபியா'' என்று அமெரிக்காவில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 2019-ல் 651 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் புழக்கத்துக்கு வந்துவிடும் என்று 'சிஸ்கோ' என்னும் தொழில்நுட்ப நிறுவனம் கணித்திருக்கிறது. டிஜிட்டல் உலகத்தில் தொழில்நுட்ப வசதிகளோடு பிறக்கும் குழந்தைகள் மற…
-
- 0 replies
- 521 views
-
-
ஸ்ரீலங்காவில் பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பாக உள்ளனரா? ராஜ் கொண்சல்கோரளே தமிழில் :எஸ்.குமார் ஸ்ரீலங்காவில் சமீபத்தில் நிகழ்ந்த இழிந்த ஒரு நிகழ்வாகக் கருதப்படுவது, சென். பீட்டர்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பதின்ம வயதுகளின் மத்திக்கும் இறுதிக்கட்டத்துக்கும் இடையில் உள்ள ஒரு றகர் விளையாட்டு வீரருக்கு அவரது பயிற்சியாளர் பொதுமக்களின் பார்வையில் படும்படியான இடத்தில் வைத்து தொடர்ச்சியாகக் கன்னத்தில் பல முறை அறைந்ததுதான், இது எமது சமுதாயம் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைகிறது அல்லது ஏற்கனவே வளர்ச்சியடைந்துள்ளது என்பதை தெளிவாகத் தெரியப்படுத்துகிறது. சந்தேகமில்லாமல் இந்த நிகழ்வு ஆதரவற்ற குழந்தைகள் பாடசாலையில் இருக்கும்போது அவர்களது ஆசிரியர்களாலும் மற்றும் வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஹிந்துக்களின் சாதிவெறிக்கு வெள்ளைக்காரன் தான் காரணம் ? மதங்களைத் தாண்டி எழுத நினைத்தாலும் பலதடவை முடிவதில்லை, தினமும் மதங்களின் பெயரால் சொல்லப்படும் பரப்புரைகளைக் கேட்கும் போது சிரிப்பதா, கோப்படுவதா எனத் தெரியவில்லை. ஹிந்து அடிப்படைவாதிகளால் கூட பலமுறை சாதி முறை சரியான ஒன்றில்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் அவற்றை களைவதற்கு முன்வருவதில் தயக்கம் காட்டியே வருகின்றார்கள். பலர் நமது பாரம்பரியத்தில் பெருமிதம் உடையவர்களாக இருக்கின்றார்கள், சாதியத்தையும் அதன் அங்கமாகவே பார்க்கின்றார்கள். ஆனால் அண்மையக் காலமாக எழுந்துள்ள புதிய ஹிந்து அறிவுஜீவிகள் பலர் இந்தியாவின் சாதியத்துக்கு முகாலயர்களும், பிரித்தானியர்களும் தான் காரணம் என்ற புதுவித விளக்கங்களை முன்வைக்கத் தொட…
-
- 1 reply
- 2.4k views
-
-
சிறப்புக் கட்டுரை: ஹேப்பி பொங்கல்... யாருக்கு ஃபிரெண்ட்ஸ்? மின்னம்பலம் கப்பிகுளம் ஜெ.பிரபாகர் தை பிறந்தால் வழி பிறக்கும், பொங்கலோ பொங்கல் என்பதெல்லாம் சற்றே வளர்ந்து இன்று, ஹேப்பி பொங்கல் ஃபிரெண்ட்ஸ் என்ற நிலையை எட்டியுள்ளது. பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் அறுவடைத் திருநாள். ஆடிப் பட்டம் தேடி விதைச்ச உழவர் குடிகள் ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என்று ஆறு மாத காலம் வேளாண் நிலங்களில் உழைத்து, அறுவடை செய்து, தை முதல் நாள் இயற்கைக்கு நன்றி செலுத்துகின்ற திருநாள். அதுதான் தமிழர் திருவிழா. மழையோடு ஒன்று கலந்த வாழ்க்கைதான் தமிழர்களின் வாழ்வியல். கோடையில் பொன்னேர் பூட்டுதல், பங்குனி உத்திரத்தில் சாஸ்தா எனும் குலதெய்வ…
-
- 0 replies
- 949 views
-
-
பரீட்சையில் பாஸாக வேண்டுமா? வேலை கிடைக்க வேண்டுமா? வெளிநாடு போக வேண்டுமா? தீராத நோய்கள் தீர வேண்டுமா? காதலன்/காதலியைக் கைப்பிடிக்க வேண்டுமா? பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டுமா? சினிமாவில் சேர ஆசையா? கவலை வேண்டாம். உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள எளிய வழி உங்கள் மசிரை திருப்பதிக்கு வந்து மழுங்க வழித்துக் கொள்வது. ஏற்கெனவே மொட்டையடித்தவர்கள் பயன் பெற்றுளார்கள். பயன்பெற்றவர்கள் மீண்டும் மொட்டையடிக்க வருகிறார்கள். * உலகத்தில் வத்திக்கானுக்கு அடுத்தபடியான பணக்கார ஆலய நிர்வாகம் திருப்பதிதான் என்கிறார்கள். கோயில் நிர்வாகம் சுமார் 120 கோடி டொலர்களை வருடாந்தம் செலவழிக்கிறதென்றால், கிடைக்கும் வருமானம் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பக்த கோடிகளால் கிடைக்கும் கோடிக்கணக்…
-
- 2 replies
- 1.7k views
-