உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26730 topics in this forum
-
நவநீதம்பிள்ளைக்கு எதிராக இலங்கை போர்க்கோடி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதில் நவநீதம்பிள்ளையும் அவரது அலுவலக அதிகாரிகளும் உதவியதாக குற்றம்சாட்டி, அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அந்நாட்டில் வெளிவரும் டெய்லி மிர்ரர் என்ற ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நவநீதப்பிள்ளையின் இத்தகைய செயலால் இலங்கை அரசின் நியாயங்களை எடுத்துரைக்க முடியாமல் போய்விட்டதாகவும், இதற்கு காரணமான நவநீதப் பிள்ளை மற்றும் அவரது ஊழியர்களின் பங்கை அடிப்படையாக கொண்டு போராட்டம் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகளை ஜெனிவாவில் உள்ள இலங்கையின் …
-
- 0 replies
- 878 views
-
-
அமெரிக்கா- 29-வயதுடைய பெண் ஒருவர் நவம்பர் மாதம் 1-ந்திகதிக்கு முன்னர் இறந்துவிட எதிர்பார்க்கின்றார். இப்பெண்ணை வருத்திக்கொண்டிருக்கும் மூளை புற்று நோய் ஒக்டோபர் மாதத்தில் அவரை கொல்லாது விட்டால் தனது வாழ்க்கையை தானே முடித்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார். தனது கணவனின் 30-வது பிறந்த நாள் முடிந்து சில நாட்களில் நவம்பர் மாதம் 1-ந்திகதி உயிரை விட தீர்மானித்துள்ளார். கலிபோர்னியாவை சேர்ந்த Brittany Maynard இவரும் இவரது கணவர் Dan Diaz-ம் கலிபோர்னியாவை விட்டு Oregon சென்றுள்ளனர். ஏனெனில் அங்கு முடிவு கட்டத்தில் இருக்கும் நோயாளிகள் வைத்தியர் ஒருவரால் பரிந்துரைக்கப்படும் உயிர் நீக்கும் மருந்துகள் மூலம் தங்களது உயிரை போக்கி கொள்ள அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 1997-ல் ய…
-
- 5 replies
- 693 views
-
-
நவராத்திரி நோன்பு : பிரதமர் குடித்த தண்ணீருக்கு செலவு ரூ. 10 கோடி! பிரதமர் நரேந்திர மோடி, நவராத்திரி பூஜையின் போது வெறும் தண்ணீர் மட்டுமே அருந்துவார். சில சமயங்களில் ஜூஸ் அருந்துவார். கடந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையின் போது பிரதமர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த விருந்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, எந்த உணவையும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் குடித்து விருந்தை முடித்துக் கொண்டார். இந்நிலையில் டெல்லியை சேர்ந்த' ஜுன்தா கா ரிப்போர்ட்டர் ' என்ற பத்திரிகை, மோடி தலைமையிலான பா,.ஜனதா அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து நவராத்திரி காலங்களில் பிரதமர் மோடிக்காக மினரல் வாட்டர் மற்றும் ஜூஸ் வாங்குவதற்கு…
-
- 0 replies
- 963 views
-
-
நவல்னி சிறை விவகாரம்: சுவீடன், ஜேர்மனி- போலந்து தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவிப்பு கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியை சிறையில் அடைத்ததற்கு எதிராக கடந்த மாதம் சட்டவிரோத போராட்டங்களில் பங்கேற்றதாக குற்றம் சாட்டி, சுவீடன், ஜேர்மனி மற்றும் போலந்து தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாஸ்கோ இராஜதந்திரிகளின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கருதுவதாகவும், கிரெம்ளினுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் நாடுகளிலிருந்து வரும் இராஜதந்திரிகள் சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பி…
-
- 0 replies
- 326 views
-
-
நவல்னி, துன்பெர்க் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரை அலெக்ஸி நவல்னி, காலநிலை பிரச்சாரகர் கிரெட்டா துன்பெர்க் ஆகியோர் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்களுடன் உலக சுகாதார ஸ்தாபனம் இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் நோர்வே சட்டமியற்றுபவர்கள் பரிந்துரைத்துள்ளனர். உலகளவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் முன்னாள் வெற்றியாளர்கள் வரை ஆயிரக்கணக்கான மக்கள் வேட்பாளர்களை முன்மொழிய தகுதியுடையவர்கள். நோர்வே சட்டமியற்றுபவர்கள் 2014 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இறுதி பரிசு பெற்றவர்களை பரிந்துரைத்துள்ளனர். நோர்வே சட…
-
- 1 reply
- 530 views
-
-
நவால்னி விவகாரத்தில் ரஷ்யா ஒத்துழைக்கத் தவறினால் கடலடி குழாய் திட்டம் கைவிடப்படும்: ஜேர்மனி எச்சரிக்கை ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், விசாரணைகளுக்கு ரஷ்யா ஒத்துழைக்கத் தவறினால் ‘நார்ட் ஸ்ட்ரீம் 2’ கடலடி குழாய் திட்டத்தை நாங்கள் கைவிட வேண்டியிருக்கும் என ஜேர்மனி எச்சரித்துள்ளது. அலெக்ஸி நவால்னி விவகாரத்தில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துவரும் ஜேர்மனியின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹீக்கோ மாஸ் இதுகுறித்து கூறுகையில், ‘நவால்னி மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக நாங்கள் நடத்தி வரும் விசாரணையில், ரஷ்யா தனது பங்களிப்பை அளிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அவ்வாறு ரஷ்யா ஒத்துழைக்கத் தவறினால், …
-
- 4 replies
- 612 views
-
-
நவாஸ் ஷெரீப் | கோப்புப் படம் நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்கும் விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொள்ளவுள்ள நிலையில், இந்திய மீனவர்கள் 151 பேரை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது. இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதன் அடையாளமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காராச்சியின் மாலிர் சிறை அதிகாரி சையத் நஸீர் ஹுசைன் கூறும்போது, பாகிஸ்தான் உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களின் எழுத்துப்பூர்வமான உத்தரவின்பேரில் இந்தியக் கைதிகள் 59 பேர் விடுதலை செய்யப்படுவதாக தெரிவித்தார். இந்தக் கைதிகளில் பெரும்பாலானோர், பாகிஸ்தான் கடல் எல்லையில் மீன்பிடித்ததால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் என்று அவர் மேலும் தெரிவ…
-
- 1 reply
- 452 views
-
-
புதுடெல்லி: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை, பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். அப்போது மும்பை தாக்குதல் மற்றும் பயங்கரவாத பிரச்னைகளை அவர் எழுப்பினார். தனது பதவியேற்பு விழாவுக்கு வந்த சார்க் நாட்டு தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசி வருகிறார். அதன்படி ஆப்கானிஸ்தான் அதிபர் ஹர்சாய், இலங்கை அதிபர் ராஜபக்சே ஆகியோரை மோடி இன்று காலை அடுத்தடுத்து சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் பகல் 12.45 மணி அளவில் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை மோடி சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து இர…
-
- 0 replies
- 377 views
-
-
நவாஸ் ஷெரீப் தாயார் காலை தொட்டு ஆசி பெற்ற பிரதமர் மோடி! லாகூர்: பாகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி, அங்கு நவாஸ் ஷெரீப்பின் தாயார் காலை தொட்டு வணங்கி ஆசி பெற்றார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்ப இருந்த நிலையில் நேற்று, திடீர் பயணமாக பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்றார். லாகூர் விமான நிலையம் சென்றடைந்த அவரை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்டித்தழுவி வரவேற்றார். நவாஸ் ஷெரீப்க்கு நேற்று பிறந்த நாள் என்பதால், அவருக்கு பிரதமர் மோடி, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பின் நவாஸ் ஷெரீப், தனி ஹெலிகாப்டர் மூலம் மோடியை லாகூரின் புறநகர் பகுதியில் உள்ள தனது ரைவிண்ட் மாளிகைக்கு அழைத்துச் சென்றார். அங்…
-
- 0 replies
- 778 views
-
-
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள நவாஷ் ஷெரீப், பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விடுத்த அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நிராகரித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள நவாஸ் ஷெரீப்பிற்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்தியா பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவேன் என்ற உங்களது கருத்துக்கு, இந்திய மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். உங்களுடனும், உங்களது அரசுடனும் இணைந்து பணியாற்ற தாம் ஆர்வமாக உள்ளதாக கூறியிருந்தார். மேலும் நவாஸ்ஷெரீப் இந்தியா வர வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார், இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப்பிற்கு இந்தியா வர பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளது குற…
-
- 0 replies
- 367 views
-
-
நவாஸ் ஷெரீப்புடன் ராணுவ தளபதி திடீர் சந்திப்பு- பதவி விலக வலியுறுத்தல்? பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப் பதவி விலகும்படி பாகிஸ்தான் ராணுவ தளபதி நேரில் சந்தித்து வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதை பாகிஸ்தான் அரசும் ராணுவமும் மறுத்துள்ளன. நவாஸ் ஷெரீப் பதவி விலகக் கோரி இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும், மதகுரு தாஹிர் உல் காத்ரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சியும் இணைந்து தீவிர போராட்டத்த்தை நடத்தி வருகின்றன. இதனால் தலைநகர் இஸ்லாமாபாத் போர்க்களமாக காட்சி தருகிறது. இந்த கலவரம் லாகூர், கராச்சி நகரங்களுக்கும் பரவி உள்ளது. ஆனால் நவாஸ் ஷெரீப் பதவி விலகப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். கிளர்ச்சியாளர்களுக்கும் போலீசா…
-
- 2 replies
- 452 views
-
-
நவி பிள்ளையை இந்திய உளவுத் துறை தொடர்ந்தது ஏன்? ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக நேரில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்கும் முகமாக இலங்கை சென்ற போது அவரை இந்திய உளவுத் துறையான ரோ(RAW - Research and Analysis Wing)வைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்ததாக சிங்களப்பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைப் படைத்துறையினரின் உளவுப்பிரிவினரின் அறிக்கை ஒன்றில் இந்திய உளவுத் துறையான ரோ(RAW - Research and Analysis Wing)வைச் சேர்ந்தவர்கள் நவி பிள்ளை அவர்களை யார் யாரெல்லாம் சந்திக்கின்றார்கள் என்பதைப்பற்றியும் நவி பிள்ளை என்ன அறிக்கை விடுகிறார் என்பதைப்பற்றியும் தகவல்கள் திரட்டினார்கள் எனத் தெரிவிக…
-
- 8 replies
- 1.8k views
-
-
ஐ.நா. மனித உரிமை சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை பதவியிலிருந்து விலகுமாறு அமெரிக்கா கோரியதாக இன்னர் சிட்டி பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனும், அமெரிக்காவும் இந்தக் கோரிக்கையை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இவ்வாறானதொரு அழுத்தம் தனக்கு தரப்படவில்லை.என்னை பதவி விலகுமாறு கேட்கப்பட்டதான செய்தியில் உண்மை கிடையாது என நவநீதம்பிள்ளை கருத்து வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் வேறு உயர் பதவி ஒன்றை வழங்குவதாகத் தெரிவித்து, இப்போது வகிக்கும் பதவியிலிருந்து விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே நவநீதம்பிள்ளையின் இரண்டாம் தவணைப் பதவிக்காலம் குறைக்கப்பட்டுள்ளது என தெரி…
-
- 1 reply
- 564 views
-
-
-
- 4 replies
- 1.2k views
-
-
வாஷிங்டன்: அமெரிக்க நவீன வரலாற்றில் முதல் முறையாக அந்த நாட்டு கரென்சியான டாலரில் பெண் ஒருவரின் படத்தை இடம்பெறச் செய்யப்போகிறார்களாம். இதற்கான அறிவிப்பை அந்த நாட்டு கருவூலகத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அமெரிக்க டாலர் உலக அளவில் புகழ் பெற்றது. நம்மூர் பணத்தில் காந்தி தாத்தா படம் இடம்பெற்றுள்ளதை போல அமெரிக்க நாட்டு டாலரில் பல்வேறு தலைவர்கள் படங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனாலும், பெண் தலைவர்கள், பெண்களில் புகழ் பெற்றோர் படங்கள் இடம் பெறவில்லை.இந்நிலையில், முதல்முறையாக பெண் படத்தை பிரசுரிக்க அந்த நாட்டு கருவூலகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்து 2020ம் ஆண்டில், நூறாண்டுகள் ஆக உள்ளது. எனவே, அப்போது பெண் படத்துடன் புதிய டாலர் நோட்டை வெளியிட அமெரிக்க க…
-
- 0 replies
- 445 views
-
-
நவீன ஏவுகணை தடுப்பு ஆயுதங்களை... வழங்குவதில், நட்பு நாடுகள்... தாமதிப்பதில் நியாயமில்லை: உக்ரைன் ஜனாதிபதி! உக்ரைனுக்கு நவீன ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள் தேவை என்ற நிலையில் அவற்றை வழங்குவதில் நட்பு நாடுகள் தாமதிப்பதில் நியாயமில்லை என உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். முக்கிய நகரங்களை கைப்பற்றுவதில் ரஷ்யப் படைகள் தீவிரம் காட்டி வருகின்ற நிலையில், உக்ரைன் ஜனாதிபதியின் இந்த கருத்து வெளிவந்துள்ளது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ரஷ்யாவின் ஏவுகணைகள், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சீவிரோடோநெட்ஸ்க் நகரில் கடைசி பாலத்தையும், ரஷ்ய படைகள் தகர்த்தபின், அங்குள்ள மக்களை உக்ரைன் ராணுவம் அப்புறப்படுத்த…
-
- 0 replies
- 237 views
-
-
நவீன துபாயை கட்டமைக்க ரத்தமும் வேர்வையும் சிந்திய இந்தியர்கள் யாரேனும் தனியாகப் பேசும்போது துபாய் அமைத்துள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை கட்டமைத்தது யார் எனும் விவாதம் அங்குள்ள அனைவரின் மத்தியிலும் நீடித்துக்கொண்டே இருக்கும். ஆனால், பொது வெளியில் யாரும் பேச மாட்டார்கள். பேசினால் அதிகாரிகளின் கோபத்துக்கு அவர்கள் ஆளாக நேரிடும். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபுர்ஜ் கலீஃபா அங்கு வாழும் இந்தியர்கள் அல்லது தெற்காசியர்களிடம் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டால், தாங்கள்தான் அந்நாட்டை கட்டமைத்ததாகக் கூறுவார்கள். அங்கு வாழும் அரேபியர்களிடம் கேட்டால், தங்கள் தலைவர்களும் அவர்களின் தொலைநோக்கு பார்வையுமே பல நாட்டவர்களும் வந்து செல்லும் அந்…
-
- 3 replies
- 716 views
-
-
நவீன பிச்சைக்காரிகள் கைது July 14, 2011 மஹாராஷ்டிர மாநிலம் லத்தூரில் படு நாகரீகமாக உடை அணிந்து, லாட்ஜில் தங்கியிருந்து கொண்டு, ஆண்களைக் குறி வைத்து பிச்சை கேட்டு தொல்லை செய்த 43 ராஜஸ்தான் பெண்களை போலீஸார் கைது செய்தனர்.லத்தூர் நகர வீதிகளில் ஜீன்ஸ், டீ ஷர்ட் அணிந்து படு நாகரீகமான கோலத்தில் 43 பெண்கள் சுற்றிக் கொண்டிருந்தனர். எந்தக் காலேஜீல் படிக்கிறீங்க என்று கேட்கக் கூடிய அளவுக்கு அவர்கள் படு நாகரீகமாகவும் காணப்பட்டனர். ஆனால் அப்படி ஆச்சரியத்துடன் பார்த்தவர்களிடம் நெருங்கி வந்து, அம்மா, தாயே என்று கையை தூக்கியபோதுதான் அவர்கள் பிச்சை எடுப்பவர்கள் என்று தெரிந்தது.அந்தப் பெண்கள் ஆண்களை மட்டுமே குறி வைத்து அணுகினார்கள். தாங்கள் கஷ்டப்படுவதாகவும், பசிக் கொடுமையால் அவதி…
-
- 3 replies
- 1.3k views
-
-
பல நாட்டு காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர் உலகளவில் இயங்கும் குற்றக்கும்பல் ஒன்று சில மணி நேரங்களில் வங்கி-பண அட்டை ( ஏடிஎம்- டெபிட் கார்ட்) தகவல்களை மோசடி செய்து 45 மில்லியன் (நாலரைக் கோடி) அமெரிக்க டாலர்களை திருடியுள்ளது. இணையதள ஹாக்கிங் மூலம் வங்கிக் கணக்கை ஊடறுத்து நுழைந்தே குற்றக்கும்பல் இந்த பெரும் பணத் திருட்டை நடத்தியுள்ளது. இதுவரை நடந்துள்ள வங்கித் திருட்டுகளில் மிகப்பெரிய சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் நியுயோர்க்கில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆனால் பெரும் உலகளாவிய கும்பலின் உள்ளூர் ஆட்களாக மட்டுமே இவர்கள் இருக்கமுடியும் என்றும் 'பெருந்தலைகள்' வெளிநாடுகளில் இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் நம…
-
- 0 replies
- 673 views
-
-
நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம் - உலக நாடுகள் வர்த்தக உறவுகளை துண்டிக்கவேண்டும் - ஐநா அறிக்கையாளர் 03 JUL, 2025 | 03:52 PM காசா நிலவரம் தொடர்பில் உலக நாடுகள் இஸ்ரேலுடனான வர்த்தக தொடர்புகளை துண்டிக்கவேண்டும் என ஐநாவின் அறிக்கையாளர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் தனது அறிக்கையை வெளியிட்டுள்ள உரையாற்றியுள்ள ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன பகுதிகளிற்கான ஐநாவின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் நவீன வரலாற்றில் மிகவும் ஈவிரக்கமற்ற இனப்படுகொலைக்கு இஸ்ரேலே காரணம் என தெரிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் நிலைமை ஊழிக்காலம் போன்றது என அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவை உறுப்பினர்கள் …
-
-
- 16 replies
- 832 views
- 1 follower
-
-
நவீன வேவு விமான சேவையை அமெரிக்கா இலங்கையுடன் பகிரவுள்ளது வீரகேசரி இணையத்தளம் ஆசிய பசுபிக் வலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா அதிநாவீன வேவு பார்க்கும் விமானத் தொழினுட்பத்தை இலங்கை உட்பட ஏனைய ஆசிய நாடுகளுடன் பகிரவுள்ளது. இவ்விடயம் தொடர்பில் அமெரிக்கா மற்றும் இலங்கை அதிகாரிகளிடையே உத்தியார்பூர்வ கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. குளோபல் ஹெவாக் எனும் இவ் அதி நவீன வேவு விமானம் 2001 செப்டம்பர் 11ம் திகதிக்கு பின் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இவ் விமானம் துல்லியமாக இலக்குகளை 65,000 அடி உயரத்திலிருந்து 35 மணித்தியாலங்கள் வரை வேவு பார்க்கவுள்ளது. அத்துடன் சேகரித்த தரவுகளை விரைவாக தரைப்படைக…
-
- 13 replies
- 3k views
-
-
நவீனகால நாட்காட்டியை உருவாக்குவதற்காக வரலாற்றில் தொலைக்கப்பட்ட 10 நாட்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 25 டிசம்பர் 2022, 08:21 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1870ஆம் ஆண்டு ஐயர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்த சித்தரிப்பு ஓவியம் இன்று நாம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படும் புத்தாண்டு கொண்டாட்டம் எப்போது தொடங்கியது? இன்று நாம் பின்பற்றும் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான நாட்காட்டி முறை எப்போது தொடங்கியது? நாட்காட்…
-
- 1 reply
- 854 views
- 1 follower
-
-
நவ்ரு தடுப்பு நிலையத்தில் 2,000க்கு மேற்பட்ட துன்புறுத்தல்கள் நவ்ருவிலுள்ள அகதிகளுக்கான அவுஸ்திரேலிய தடுப்பு நிலையத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், பாலியல் துன்புறுத்தல், தாக்குதல் மற்றும் முயற்சிக்கப்பட்ட தானாக தாக்கிக் கொள்ளுதல் உட்பட 2,000க்கு மேற்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகையொன்று நேற்றுப் புதன்கிழமை (10) தெரிவித்துள்ளது. மேற்கூறப்பட்ட சம்பவங்களில், அரைவாசிக்கும் மேலானவை, சிறுவர்களுடன் தொடர்புடையவை எனக் கூறப்பட்டுள்ளது. கார்டியன் அவுஸ்திரேலியாவால் பிரசுரிக்கப்பட்டுள்ள கசிந்த ஆவணங்களின் மூலம், அவுஸ்திரேலியாவினால், அயலிலுள்ள தென் பசுபிக் தீவுகளில் நடாத்தப்படும் இரண்டு அகதிகள் தடுப்பு நிலையங்களில் ஒன்றான நவ்ருவில் மேற்கொள்ளப்…
-
- 1 reply
- 261 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images நவ்ரூ அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடைசி நான்கு குழந்தைகளும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். அவர்கள் அமெரிக்காவுக்கு செல்கின்றனர் என்கின்றனர் ஆஸ்திரேலிய அதிகாரிகள். அமெரிக்காவுடன் போடப்பட்டுள்ள மீள்குடியேற்றம் ஒப்பந்தத்தின் விளைவாக அந்த குழந்தைகள் தங்கள் குடும்பத்தினருடன் செல்கின்றனர் இந்த சிறிய நாட்டில் பாஸ்ப…
-
- 0 replies
- 598 views
-
-
November 25, 2013 1:41 am அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கோர்ட். இந்த தொகை முழுவதையும் 30 லாரிகளில் சில்லரை காசுகளாக அனுப்பி பழி வாங்கியுள்ளது கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம்.சாம்சங் நிறுவனம் தனது ஆன்ட்ராய்டு போன்களில், ஆப்பிள் போனின் தொழில்நுட்பத்தை காப்பியடித்து விற்பனை செய்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பதிலுக்கு ஆப்பிள் நிறுவனம்தான் தங்கள் தொழில்நுட்பத்தை திருடி பயன்படுத்தி வருவதாக சாம்சங் நிறுவனம் வாதாடியது. கலிபோர்னியாவின் சான் ஜோஸ் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சாம்சங் நிறுவனம் காப்புரிமை விதிமுறைகளை மீறி விட்டதாகவும் அதனால் ஆ…
-
- 2 replies
- 716 views
-