Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. --> யூனிக்கோட் எழுத்துருவில் வேகமாகத் தட்டச்சு இணைக்க முடிந்தவர்கள் இணைத்தால் நல்லது.

  2. காமினியின் குழந்தைகளே.....! கந்தக வாசனை கசக்கிறதா? பராக்கிரமபாகுவின் பாலகர்களே பொட்டாசிய நாற்றம் பொறுக்கமுடியலையா? கொஞ்சம் முகர்ந்துதான் பாருங்களேன்.... உயிரைக் கொல்லாது என்று உத்தரவாதம் சொல்கிறேன்.. ஒரு கால நீட்சியில்-எங்கள் ஒட்சிசனே இதுதானே.... சேதப்பட்டதற்கே உடனடி வீட்டுத்திட்டம்? நச்சுக் காற்றென்று நாலுநாள் விடுமுறை? தானாக வெடித்ததற்கே தார்மீக விசாரணை? எண்ணி ஏழு ஆண்டுகள்.... என்னதான் நடந்து கண்டோம்.......! முள்ளிவாய்க்காலைப் பார்த்ததுண்டா...? கொஸ்கமவை ஆயிரம் மடங்காக்கிப் பாருங்கள் அங்கே சிதறிக்கிடக்கும் உலோகத் துண்டங்கள்தான் இங்கே உடலங்களாக சிதைக்கப்பட்டவை அங்கே எரிந்து கரிந்த மரங்கள்தான் இங்கே கருக்கப்பட்ட எம் …

  3. கலைஞரே காலைப்பிடித்து கெஞ்சுகிறேன் கவிதையொன்று எழுதுங்கள் கறுப்புக்கண்ணடிடியுடன் கரகரத்த குரலால் கலைஞர் தொலைக்காட்சியில் கட்டுமரமாவேன் என்றதைப்போல கவிதையொன்று எழுதுங்கள் முத்துக்குளிக்கும் மண்ணிலிருந்து முத்துக்குமாரெனும் முத்தான உடன்பிறப்பொன்று முடியாட்சி முற்றத்தில் முடித்துக்கொண்ட மூச்சுக்காற்றில் மு. க. குடும்பத்திற்கு மூலதனம் தேடாமல் முடிந்தால் எழுதுங்கள்

  4. காதலில் தொலைந்தேன்...... கவிதை வலியாக- -இளங்கவி அந்திப் பொழுது அழகன பூஞ்சோலையில்... ரோஜா குளியலில் நான் திழைத்திருக்க மல்லிகைக் குவியலாய் என் மனங்கவர அவள் வந்தாள்.... என் முன்னால் முட்செடியில் ரோஜாக்கள்... முழு நிலவாய் அவள் முகம்... மூன்றாம் பிறை நிலவு... நான் முனிவனா என்ன முகங்குனிந்து செல்ல...! சனங்கள் நெரிசலிலும் அவள் நடையை அழகாய் ரசித்திருக்க...... யாரோ ஒருவன் அடித்துவிட்டான் என் மணிபேசை... அதைத் தேடவா..? அவளைத் தொடர்வதா...? மனதில் உடன் பதில் உடனே தொடர் என்று.... காரணம்..கணப்பொழுதில் உன் கண்களினால் உன் மனதைச் சென்றடைந்தவள்... அவளுக்காய் உனை மறந்து உன் உடமையைத் தொலைத்தவன்... எனவே அவள் …

  5. Started by காந்தன்,

    பொங்கல் தமிழர் மனமெல்லாம் தவித்து ஏங்க பசியும் பிணியும் உயிர்களை வாங்க துன்பமும் துயரும் தழைத்து ஒங்க மனதின் நம்பிக்கை மெதுவாய் மங்க கடமை மறந்தோர் கண்மூடித் தூங்க எமக்கு மனமேது அரிசியைப் பொங்க?

    • 2 replies
    • 865 views
  6. Started by Thinava,

    என் காதலனே!! கவிதை வரைந்தேன் உண்மை மூடி காதல் கொண்டேன் கண்ணை மூடி படிக்கச் சென்றேன் பையை மூடி பட்டம் பெற்றேன் பைத்தியம் என்று என் காதலனே!! உன்னையே உலகமென நினைத்தேன் - ஆகையால் உன்மீது பாசத்தைப் பொழிந்தேன் உன்னையே வாழ்க்கையையென நினைத்தேன் - ஆகையால் உன்மீது ஆதரவாக நடந்தேன் என் காதலனே!! காதலிக்கும் போது உன் வயதை மறைத்தாய் - என்னைக் காண வரும் போது உன் நரையை மறைத்தாய் கதைக்க வரும்; போது உண்மையை மறைத்தாய் - என்னைக் காரில் ஏற்றும் போது கண்ணாடியை மறைத்தாய் என் காதலனே!! காதல் து}ய்மையானதென்று அடிக்கடி கூறுவாய் காதல் இனிமையானதென்று அடிக்கடி சொல்வாய் காதல் சுகமானதென்று அடிக்கடி அறிவாய் காதல் பலமானதென்று அடிக்கடி விளக்கினாய் …

    • 3 replies
    • 2.2k views
  7. Started by வர்ணன்,

    செத்துப்போ! ஆட்லறியின் அடியில் - தூங்கினாலும் மூதூரில் உன் அண்ணன் இறக்கிறான் பேசாமல் இருக்கிறாய் - ஏன் இனி எமக்கு? நீ செத்துப்போ! ஜோசப் இறந்த போதும் பேசாமல் இருந்தாய்! உரிமை உலையில்- உயிர்- எரித்துப்போன ...... விக்னேஸ்வரன் மாண்ட போதும்... வீணே என்று நீ கிடந்தாய்! அன்று தர்சினி எரிந்தபோது........ அவள் தாவணி எடுத்து முகம் மறைத்தாய்..... இன்று தமிழர் நிலமெல்லாம் - மீண்டும் குண்டு சத்தம் - இன்றும் பேசாமல் கிடக்கிறாய் ..... இனியும் எமக்கு ஏன் நீ ? செத்துப்போ ....... மானமே! 8)

    • 4 replies
    • 1.3k views
  8. என்னைபத்து மாதங்கள்கருவில் சுமந்து பெற்றெடுத்த அன்னையே என்னை பாராட்டி சீராட்டி வழர்த்தாயே என்னை இரவில்பலகதைகள் சொல்லிஉறங்கவைப்பாயே நான் தூக்கம் விட்டு எழும்பும் வேளையில் என் அருகில் இருந்து அன்புடன் என் தலையை வாரி முத்தம் கொடுப்பாயே ---- நான் அது வேண்டும் இது வேண்டும் என்று அடம் பிடித்தர் நீஅனைத்தையும் வேண்டித் தருவாயே பல ருசியான சமயல்களை செய்து ஊட்டிவிடுவாயே எனக்கு பாடங்கள் சொல்லித்தருவாயே உன் இடுபப்பில் சுமந்து கொண்டு பாட்டுப்பாடி என்னை மகிழ வைப்பாயே நீ எனக்குசின்ன வயதில் செய்த நினைவுகள் இப்போழுது நினைத்துப்பாக்கும் போதெல்லாம் சந்தோசமாக இருக்கின்ற இருந்தாலும் நீ என் பக்கத்தில் இல்லை என்றதும் கொஞ்சம் வருத்தம் த…

    • 5 replies
    • 1.5k views
  9. Started by கந்தப்பு,

    மனிதா! - என்.சுரேஷ், சென்னை தமிழினத்தின் அழிவைக் கண்டு குருடனாக வாழ்வோன் உனக்கு கண்களெதற்கு? கைகுட்டையை உடையாய் அணியும் நடிகைகளின் சதையழகை கண்டதும் அவர்களோடு ஆடுவதாய் கனவு காண உறங்கச் செல்லும் மனிதா! உந்தன் சகோதரிகள் விதவைகளாகும் நிஜம் கண்டு எந்த உணர்ச்சியுமில்லையே உன்னிடம்? அன்பை மறந்த மனிதா! உணர்ச்சியும் உணர்வுமில்லாத ஒரே இடம் கல்லறை தானே? உனக்கிந்த பூமியிலென்ன வேலை நரகத்திற்கு ஓடிச்செல்! கனிவே இல்லாத மனிதா! உந்தன் இதயம் பாறைகளாயிருப்பின் அவைகளும் அழுதிருக்கும் பட்டினி மரணத்தால் ஆங்காங்கே சாகும் தமிழினத்தின் நிலை கண்டு! ஆனால் உன் இதயம் எதைக்கொண்டு தான் செய்துள்ளதோ? தமிழ் பேச வெட…

  10. என் தலையெழுத்தினை பிழையாய், எழுதத் தொடங்கிய காதல்... என் தலைவாசல் தனைத் தட்டிநிற்கின்றது! வரவேற்க முடியாமலும்... தூக்கியெறிய முடியாமலும்... நான் படும் பாடு, என் எதிரிக்கு கூட... வந்துவிடக் கூடாது இந்த நிலைமை!!! பூட்டி வைத்த நான்கு சுவர்களுக்கு நடுவில்... நான் கதறி அழுத சத்தத்தையும், என் விரல் மொழிகள் வரைந்த குருதிச் சுவரோவியங்களையும், என் தலையணை தனைத் தோய்த்த நீரோவியங்களையும், மற்றவர் மனமறியாமல் புதைத்துவிட்ட... ரகசியமானவனாய் நான்!? எனக்கு, ஒரு இதயத்தினையும் ஒரேயொரு எண்ணத்தினையும் கொடுத்த, இறைவனுக்கும் என்மேல் இரக்கமில்லையோ!??? அன்பையும் ஆதரவையும் அன்போடு எதிர்பார்ப்பது... எத்தனை ஏமாற்றங்களைக் கொடுத்தாலும், அத்தனை வலியையும் நெஞ…

  11. உன் மெளனம் கூட ஆசைப்படுகிறது நீ பேசுவதைப் பார்த்து கவிதையாக வேண்டுமென்று * பூச் செடிக்கு பக்கத்தில் வைத்து உன்னை படம் எடுத்ததில் உன்னைப் பறித்த பூவின் புன்னகை தெரிகிறது * இரவு வந்தால் போதும் கவிதை நேரத்துக்காய் காத்துக் கிடக்கிறேன் வானொலிக்கு பக்கத்தில் அல்ல என் கைபேசிக்கு பக்கத்தில் * உனக்கு பிடித்த எல்லாம் எனக்குப் பிடிக்கும் உனக்கு பிடித்த கவிஞர்களைத் தவிர * வாசல் அழகுக்காய் கோலம் போடுகிறாய் நீ கோலம் போடும் வரைதான் அழகாக தெரிகிறது வாசல் -யாழ்_அகத்தியன்

    • 3 replies
    • 1.2k views
  12. மாவீரர்கள் இவர்கள் மரணித்தவர்கள் அல்லர் மரணத்தை மரணிக்க வைத்தவர்கள் தெய்வங்களுக்கும் தெய்வங்கள் இவர்கள் இவர்கள் வீரம் சாகாது, தியாகம் மறையாது தமிழீழம் மலரும் வரை இவர் விதைகுழிகளும் உலராது. இவர்கள் சுவாசித்த மூச்சுக்காற்றைத் தமிழீழம் வெல்லும் வரை இவர்களுக்காக நாம் சுவாசிப்போமென்று இந்நாளில் உறுதி பூணுவோம் இதுவே இவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் 2008ல் அண்ணன் இட்ட ஆணையை இவர்கள் மேல் நாம் இடும் ஆணையாக்கி முன்னகர்வோம் உலகத் தமிழா எழுந்து வா!!!....

  13. வாழ்த்துகின்றோம் எம் அண்ணா! ஆழ்கடல் தன்னில் அவதரித்த முத்தே! ஈழத் தமிழரின் நிகரற்ற சொத்தே! வாழ்திடும் போதே வரலாறு தந்தவன் மானத்தோடு எம்மை தலை நிமிரச் செய்தவன்! எங்கள் மண்ணின் கிழக்குச் சூரியன் ஈழத்தாயவள் தந்த வீரத் திருமகன்! கரிகாலனே! கடும்பகை எல்லாம் வெறும் தூசென்று காட்டி நிற்கும் தீரனே! தரையோடு தொடங்கினாய் இயக்கம்! இன்று வான், தரை,கடலெங்கும் தலைவா உன் முழக்கம்! பகை வெடிக்கும் ஈழம் விரைவில் மலர்ந்து சிரிக்கும்! 'அண்ணா! உன் பெயர் சொல்ல புல்லும் கூடப் புலியென எழும்! அடிமைத் தளையை அறுக்கப் பிறந்த தலைவா! உன்னால் ஈழம் வாழும்! தமிழ் மானம் காத்த தலைவா வாழி! தமிழ் வீரம் நிலைநாட்டிய தலைவா வாழி! ஈனர் படையை எரிக்கப் பிறந்த எங…

  14. வித்தியாசமாக இந்தத் திரி சின்னச்சின்னதாக கவிதைகளும் காட்சிகளும் பேசும் தொடர்

  15. அந்தி சாயும் அந்த வேளை.. அருவி கீதம் இசைக்க அணில்கள் குத்தாட்டம் போட அண்டங் காக்கைகள் ஆர்ப்பரிக்க அழகிய தோப்பதில் அன்புடன் நான்..! ஆதவனின் மறைவோடு ஆதாம் ஏவாள் நினைவோடு - நிலவை ஆரத்தழுவும் ஆதங்கத்துடன் ஆகி நின்றது செக்கச் சிவந்து வானம்..! இலைகளின் நடுவே இளகிய இதழ் விரித்து இனிமையாய் தேன் சொரிந்து இளமையின் இறுதி நேர உச்சம் கண்டு.. இன்புற்றுக் கொண்டிருந்தன பூக்கள்..! ஈக்களின் கூட்டம் ஈரம் கண்டு மொய்க்க ஈகமே கொள்கை என்று ஈடுகொடுத்து நின்றது காளான்..! உற்றுப் பார்க்கிறேன்... உறவுகள் யாரும் இல்லை உதவிகள் எதுவுமில்லை.. உணவின்றி ஒட்டிய வயிறு உயிரின் இறுதி முனகல்.. உணர்வுகள் மட்டும் எஞ்சிய நிலையில்.... உயிர்ப்புக…

    • 24 replies
    • 2.6k views
    • 0 replies
    • 1.4k views
  16. வஞ்சியிடை வளைந்தாட பிஞ்சுக்கையில் வளையாட கொஞ்சியவன் விளையாட மிஞ்சியிருந்த வெட்கமும் உரசிய மூச்சுக்காற்றில் பஞ்சாய்! கட்டியவன் களைந்தாட கட்டிலிலே அளைந்தாட இன்பத்தில் திளைத்தாட உடலெங்கும் வேர்த்தோட காமக் கடலெங்கும் உணர்வலைகள்! கார்கூந்தல் கலைந்தாட கருவிழிகள் கலந்தாட அங்கங்கள் எழுந்தாட உணர்வுகள் திண்டாட மனவானமெங்கும் வாண வேடிக்கை! தாபங்கள் சேர்ந்தாட தாகங்கள் தீர்ந்தாட தேகங்கள் போராட உரசியுரசிப் பற்றிய தீயில் பற்றிக்கொண்டது மோகத்தீ! கையிரும்பு கோர்த்தாட மெய்நரம்பு தெறித்தோட தொட்டுடல் விரித்தாட கட்டுடல் நீர் உடைத்தோட பட்டுடல் நிலம் நனைந்து... ஈரலித்துப் பேதலித்தது! *************************************************** சில எழுத்துப…

  17. தீபமே எங்கள் திலீபமே! தமிழீழ விடியலென்ற தீராத பசியோடு தண்ணீரும் அருந்தாது தியாக வேள்வியிலே தீபமாய் எரியும் திலீபமே யாரடா உள்ளனர் உந்தன் உணர்வையும் தமிழீழ உயிரொன்றையும் மறக்கடிக்கச் செய்வதற்கு யாரடா உள்ளனர்! நிலம் மீட்கும் துணிவோடு மண்ணின் மக்களின்று அகிம்சைப் போர் தொடுத்து ஆங்காங்கே நகர்கின்றார்! வேதியலுக்கும் புரியாத வேங்கையரின் வீரத்தை வீறுடனே பதியமிட்ட அகிம்சையின் வேந்தனே காந்தியைத் தலைகுனிய வைத்த கிந்தியத்தின் முகத்திரையைக் கிழித்தெறிந்து முரசறைந்தாய் திலீபமே! பெரும் புயலாக மேலெழுந்து திலீபமாய் மூட்டிய தீயின்று அணைந்து விட்டதாய் யார் யாரோ சொல்கின்றார் சிங்கத்தின் கால் கழுவி யானையின் கை தடவி அரசியல் பிழைப்புக்காய் அலைகிறது ஒரு கூட்டம் அ…

  18. உன்னையும் என்னையும் இங்கே இணைத்தது ஈழம் எனும் நேர்கோடு இடையில் பல எதிர்கோடு இவற்றை தண்டி நீ ஓடு இதற்கு மேல் நீ எழுது கருத்தோடு

    • 4 replies
    • 915 views
  19. போய்வரவா பிரியத்துக்கினிய தோழமையே ? கடற்காற்றின் மௌனம் உனது காலத்தை எழுதிச்சென்ற தடங்கள் கனவின் மீதத்தை இந்தக் கரைகளில் வந்தலையும் அலைகள் வந்து சொல்லியலைகிறது....! கால்புதையும் மணற்தரையில் உனது மௌனங்கள் நீ கரைந்த காற்றோடு வந்தலையும் வார்த்தைகளின் அர்த்தங்கள் ஒரு வரலாற்றின் சாட்சியாய்...! வழி நீளக்கிடக்கிற நினைவுத் துளிகளில் நீயும் நானும் எழுதத் துடித்த வாழ்வு ஈழக்கனவாய் ஆனபோது இடைவெளியின் நீளம் காலக்கரைவில் கண்ணீராய்....! நீ(மீ)ழும் நினைவுகளில் நிலையாய் காலம் கரையும் இந்தக் கடற்காற்று போய் வாவென்கிறது போய்வரவா பிரியத்துக்கினிய தோழமையே ? மறுபிறவி உண்டென்றால் மறுபடியும் இதே கரைகள் தொடும் அலைகளோடு அலையாவ…

  20. எனக்கும் கவிதை எழுத ஆசையாய்க்கிடக்கு. ஆராவது உதவி செய்வியளோ? அதுக்காக மண்டையுக்கை களிமண் உள்ளதெல்லாம் கவிதை எழுத ஆசைப்படுதுகள் எண்டு புறுபுறுக்காமல்............ எப்பிடி ஆரம்பிக்கோணும்?வசன நடையள் எழுத்துநடையளை ஒருக்கால் சொல்லித்தருவியளே?

  21. உன் இடுப்பில் எனைச் சுமந்து நிலாச்சோறு ஊட்டிய நாட்களில் உன் பொறுமையின் வ‌லி நான் உண‌ர‌வில்லை… தாவ‌ணிப்ப‌ருவ‌த்தில் தோழி வீடுசென்று தாம‌த‌மாக‌ திரும்பும் நாட்க‌ளில் உன் அவ‌ஸ்தையின் வ‌லி நான் உண‌ரவில்லை… க‌ல்லூரிப்ப‌ருவ‌த்தில் கண்ணாடியுடன் சினேகித்து பட்டாம்பூச்சியாய் பறந்த நாட்களில் உன் அறிவுரையின் வலி நான் உணரவில்லை… ம‌ண‌ப்ப‌ந்த‌லில் உன் காலில் விழுந்தெழுந்த‌ போது என் உச்சி முக‌ர்ந்த‌ உன‌து முத்த‌த்தில்தான‌ம்மா உண‌ர்ந்தேன் நம் பிரிவின் வலியை ***************************************************************************************************************************** எனதருமை மகனே ! எனதருமை மகனே ! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்.. முதுமையின் வாசலில் - நான் ம…

  22. இது துக்கமான விடயமல்ல என்றாலும் அறிந்திடுங்கள்... செம்மனி சுடலை என்றால் பேய்களும் வெருண்டிடும்... பக்கதிலேயே ஒட்டிக்கொண்டு சித்துபாத்தி சுடலை வேறு... யாழ்வரவில் பங்கர் வெட்டி தூங்குவதெல்லாம் செம்மனிக்குள்ளதான்... பார்சலில சோறு வரும் சாப்பிடுவதும் செம்மனிக்குள்ளதான்... பாடசாலை விட்ட பிறகு விளையாடுவதும் செம்மனிக்குள்ளதான்... காணாமல் போன எனது நண்பன் சேரன் உறங்குவதும் செம்மனிக்குள்ளதான்... நான் இந்திய ஆமியிடம் வாங்கிய அடி அதுவும் இந்த செம்மனிக்குள்ளதான்... நண்பா நீ உறங்கும் சுடுகாடு இப்போ சுடுகாடு இல்லையடா... ஈழமே சுடுகாடாகி நாள் ரொம்ப ஆச்சுதுடா... விடுதலைக்கான தேதி இன்னமும் கிடைக்கவில்லை... வீண்கதை பேசும் கூட்டமு…

    • 11 replies
    • 2k views
  23. Shine தமிழ் இளைஞர்களின் படைப்புகள்... கேட்டுப்பாருங்கள்.... பாடல்கள்(ஒலி வடிவம்) Right click and select "Save as.." to download http://www.roughrhythm.com/filestore/Shine...heendoftime.mp3 http://www.roughrhythm.com/filestore/Shine...nwillwerise.mp3 http://www.roughrhythm.com/filestore/Shine...meflywithme.mp3 http://www.roughrhythm.com/filestore/Shine...swillchange.mp3 பாடல்(ஒளி வடிவம்) http://www.roughrhythm.com/Artister/Shine/Video/ மேலதிக தகவல் http://www.roughrhythm.com/Artister/Shine/ நன்றி சாணக்கியன்

  24. என் தொப்பியையும், துப்பாக்கியையும் தொலைத்துவிட்டு... சட்டைப் பையில் மீதமாய் இருப்பது, என் வியர்வையின் ஈரம் ஊறிய பாண் துண்டு மட்டுமே... இங்கே அறைகள் சுத்தமாகவும், சுவர்கள் கதகதப்பாகவும் இருக்கின்றன நான் தேநீர் குடிக்கின்றேன், என் வாய் யாரையும் சபிக்கவில்லை கொஞ்சம் புகை பிடிக்கின்றேன் ஆம், இப்படித்தான் ஒருமுறை இருந்தது..... „நான் என் பயத்தை தொலைத்துவிட்டேன் இங்குள்ள தாங்க முடியாத வெக்கையால் எழும் பயம், ஒவ்வொரு குளிகாலப் பயத்தை நினைவுபடுத்திச் செல்கிறது அங்கே எங்கோ ஓர் இடத்தில் தொலைத்த என் பயத்தை நான் தேடவில்லை.... வயிறு நிறைய உண்டபின் உறங்க விரும்புபவர்கள் போல மரணத்தைக் காதலித்து வீழ்ந்துகிடந்த என் நண்பர்களைக் கடந்து செல்கின்றேன் ஆம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.