கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
இளைஞனே எழுந்திடு!!!! நாளை வருமென்று நாளைக் கடத்தாதே வேளை வருமென்று வெருண்டு திரியாதே நாளை உனதாக வேண்டும்-அதில் வீரத்தமிழனின் புலிக்கொடி பறக்க வேண்டும் கோழைத்தனம் துறந்து வீர உணர்வோடு எழுந்துவா நீ உனக்கென்று ஒரு நாடுகாண நாளையல்ல இன்றே அதன் ஆரம்பம்காணப் புறப்படு போலி சுகங்களில் பொய்வாழ்வு வாழாதே மதங்களென்று மயங்கித் திரியாதே பிறந்ததிற்காக நல்லதைச் செய் இன்றே நாளை அது உன்வாழ்வைச் சிறப்பிக்கும் உன் கனவு தமிழீழம் நிறைவேற உன் மக்கள் உன் புகழ்பாட உணர்வுகொண்டு எழுந்துவா குழந்தைத் தனம் துறந்து உன் கொள்கை வெறிகொண்டு உலகம் புலி என்று கூற-நீ நம்பி எழுந்துவா உன் கனவு நிறைவேறும் குட்டக் குட்டக் குனிந்தது போதும்-இனி தமிழன் என்ற உணர்வ…
-
- 2 replies
- 1.1k views
-
-
உரிமைக்கு ஒரு குரல் ஞாலத்தில் பரந்து நாற்றிசை வாழும் ஈழத்துத் தமிழா! நில்!! வாழத் துடிக்கின்ற ஈழத்தமிழினத்தின் காலச் சுவடுகளைச் சொல்! மத்துக்குள் சிக்கிய தயிரடா - இன்றெங்கள் தமிழரின் நிலையெங்கும் கடைபவர் கடைகிறார், காடையர் என்கிறார் தடைகளும் போடுறார் பார்! எத்தர்கள் சாட்சியும், ஏவலர் சூழ்ச்சியும் நித்தமும் சூழுது பார்! - இந்த நித்திலத்தில் வாழும் வித்தகத்தமிழரே! விரைந்து நீர் எழுந்து வாரீர்! மற்றவர் . தப்புக்கணக்கோடு எம் தாய்மண் மீட்பை தர்க்கித்துத் தாக்குகையில் உப்பரிகை சுகத்தோடு உல்லாசப் போக்கிருந்தால் உடனேயே செத்துவிடு! - இல்லை செப்புகிற நல்லுணர் நாவிருந்தால் அதை செகத்திற்கு உணர்த்திவிடு! …
-
- 6 replies
- 1.5k views
-
-
தமிழ் படை ஆள் பற்றாகுறையால் பின் வாங்க இலட்சக்கணக்கில் போர்கடவுள் முருகனுக்கு விழா எடுக்கும் போலி பக்திமான்களும் உண்டு, அரை கோடி தமிழர் எதிர்த்து போராட இருபது மைல் தூரத்தில் பார்த்துக்கொண்டிருக்கும் ஏழு கோடி திராவிட தமிழ் வாய் வீர்களும் உண்டு, இரண்டு இலட்சம் தமிழரை இருபது வருடமாக முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கும் வந்தாரை வாழ வைக்கும் தமிழக்கத்தாரும் உண்டு, தமிழ் கோவில்களில் பாரசீக பாசையில் எதோ சொல்ல, விளங்காமல் நேர்த்தி நிறைவேற என்று கடவுளுக்கு இலஞ்சம் கொடுப்போரும் உண்டு, தமிழ் பிட்டையும், தோசையயும், கறி குழம்பையும், ஸ்ரீ லங்கா உணவகம் என்று சிங்கள எதிரிக்கு கோல் போடும் தமிழ் விற்பன்னர்களும் உண்டு, இன வெறியரிடம் இரண்டாயிரம் வாங்கி, தம் ம…
-
- 7 replies
- 2.2k views
-
-
நான் பிறந்த மண்ணை தொட்டுப்பார்க்க ஆசை வேப்பமரத்து நிழலில் படுத்து உறங்க ஆசை பலாமரத்து கனியை பறித்து திண்ண ஆசை பனை மரத்துக்கள்ளை களவாகுடித்துப் பார்க்க ஆசை ஒடியல் மா புட்டு சாப்பிடத்தான் ஆசை தேக்க மரத்துக்கிளியை பிடித்து வளர்க்க ஆசை தமிழ் வாத்தியாரிடம் குட்டு வாங்க ஆசை கோவில் மணியை ஒருக்கா அடித்துப்பார்க்க ஆசை புளியமரத்து பழத்தை சூப்பித்திண்ண ஆசை மாமரத்துக் காயை குத்திதிண்ண ஆசை கிணத்து தண்ணிரில் அள்ளி குளிக்க ஆசை கொடிகாமத்து தேங்காய் கொறித்து திண்ண ஆசை கீரி மலைக் கேணியில் நீச்சல் அடிக்கத்…
-
- 23 replies
- 2.5k views
-
-
-
- 27 replies
- 5.5k views
-
-
தமிழீழம் எங்கள் தேசம் தமிழீழம் எங்கள் தேசம் தமிழரென்று சொல்லி நாங்கள் தலை நிமிர்ந்த தேசம் தங்கத் தமிழன் தம்பி தன்னை தந்து நின்ற தேசம் தலைவன் வழியில் தமிழர் சென்று தலை நிமிர்ந்த தேசம் வித்தாகிய வேங்கைகளின் விளைநிலம் இத்தேசம் வரிப்புலியின் வீரமதில் பெருமை கொண்ட தேசம் (தமிழீழம் எங்கள் தேசம்) அன்னவயல் தானியங்கள் அருங்கனிமம் கொண்டு அலைகடலின் தாலாட்டில் அமைதிகொண்ட தேசம் இந்துமகா கடல்நடுவே இயற்கையன்னை பெற்ற இனியதிரு கோணமலை துறைமுகத்தின் தேசம் (தமிழீழம் எங்கள் தேசம்) எவ்வினமும் நம்மினமே எங்கள் மண்ணிலே! எம்மதமும் சம்மதமே எங்கள் நெஞ்சிலே! எங்கும்தமிழ் ஈழம் பெறும் வெற்றியென்பதே! என்றும் பெறும் தமிழீழம் வெற்றிவெற்றியே! (தமிழீழம் …
-
- 7 replies
- 2.1k views
-
-
;;மகிந்தாவிற்கு எச்சரிக்கை ..;; எங்கள் புலி வானமதை ஏளனங்கள் செய்தவரே கையேந்தி உலகமதில் கை பிச்சை எடுக்கிறீரோ...?? வேண்டி வந்த போர் கருவி வேளையின்றி கிடைக்கையிலே எங்கள் புலி வானமதை எட்ட நின்று முடிப்பீரோ....??? கம்பெடுத்து நாங்கள் வந்தால் களைந்தோடும் படைகளய்யா உங்களது கோட்டைகளை இன்றுயிவை காக்குமாய்யா....??? பகலிரவாய் வானமேறி பாவி உயிர் பறித்தவரே உந்தன் உயிர் காவெடுக்கா உறுமும் புலி அடங்கிடுமோ...?? எங்கள் புலி வீரரை என்னவென்று நீ நினைத்தாய்...? காத்திருந்தோம் உனையழிக்க கள முனைகள் திறந்து விட்டோம்... ஏற்றமுடன் நாம் நிமிர்வோம்- இனி ஏழரையே உனக்கு காண்- உன் கோட்டைகளே இனி சரியும் உனக்கு கோவணமும் இல்லை போ... …
-
- 3 replies
- 1.1k views
-
-
இரத்தம் எழுதிய கவிதை மே பதினைந்தில் இந்துமா கடலில் வானம் அதிர ஓலமிட்டது புயல் தீண்டிய கருங்கடலல்ல. என்னரும் தீவின் மக்கள் அறிவீர்! அன்று என் கரைகளில் சிவப்பாய்ச் சுடர்ந்தது மேதினத் தன்றென் தோழர்கள் கட்டிய தோரணங்களும் கொடிகளுமல்ல. உருண்ட நம் தலைகள் சிந்திய குருதி! கண்கள் அகன்று பிதுங்கிய முகங்களில் கடித்துக் கிடந்த நாவுகள் தோறும் இரத்தம் எழுதிய கவிதையைச் சொல்வேன். போர்த்துக்கீசரை எதிர்த்து வீழ்ந்த என் மூதாதையரின் கிராமியப் பாடலில் முன்னரும் இதுபோற் கவிதைகள் கேட்டுளேன். கொதித்து எழுந்த நம் இளைஞரைப்போல வெண்மணல் போர்த்த முருகைக் கற்களில் தலைவிரித்தடின கறுத்த பனைகள். நெடுந்தீவின் பசும்புல் வெளியெலாம் காட்டுக் குதிரைகள் கனைத்த…
-
- 3 replies
- 1.5k views
-
-
யாருக்கும் பிரச்சனை இல்லை... --------------------------------------------------------- பாலஸ்தீனப் போராளிகள் பற்றி நான் பேசலாம். அயர்லாந்து சுதந்திரப் போராட்டம் பற்றி நான் எழுதலாம். தியான் மென் சதுக்கக் கொலைகளுக்கும் நான் குரல் கொடுக்கலாம்... யாருக்கும் பிரச்சனை இல்லை ஈராக் பற்றி நான் கவலைப் படலாம் திபெத்தியர்களுக்காக நான் கண்ணீர் விடலாம்.. பர்மியப் பெண்ணுக்கும் நான் பரிந்து பேசலாம். யாருக்கும் பிரச்சனை இல்லை சேகுவேராவை நான் கொண்டாடலாம்.. பிடல் காஸ்ட்ரோவை நான் வணங்கலாம்.. கொசோவா விடுதலையை நான் ஆதரிக்கலாம்.. யாருக்கும் பிரச்சனை இல்லை உலகின் எந்த மூலையில் இனக் கொலை நடந்தாலும் ந…
-
- 4 replies
- 1k views
-
-
தியாகம்.. கார்த்திகை பூ எடுத்து வாடா.! கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...! இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.! இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.! உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமரே..! உங்கள் 'உயிர்விலைக்கு' எது இங்கே ஈடாகும்? உமைக்கருவில் சுமந்த தாய் வயிற்றில் நெருப்பெரியும்..! அந்த நெருப்பினில் விடுதலைத்தீ மூண்டெரியும். ஆறடிக்குள் துயிலும் அற்புதங்களே-எங்கள் ஆணிவேரான ஆலமரங்களே..! வாழ்ந்தாலும் ம(வ)ரமாக... வீழ்ந்தாலும் விதையாக மாவீரன் மறைவதில்லை மாவீரம் அழிவதில்லை ஆண்டுக்கொருமுறையா உமை நினைக்கிறோம் இல்லை தீயெரியும் தேசத்தில் தினம் தினம் உம் நினைவும் சேர்ந்தெரியும். கல்லறைக்கு வருகையிலே கால் கூசும்-உமைக் கண்டவுடன் கட்டியணைத்து மெய் சோரும். மணியோசை க…
-
- 0 replies
- 1.9k views
-
-
----விலைமாது விடுத்த கோரிக்கை----- ராமன் வேசமிட்டிருக்கும் பல ராட்சசனுக்கு என்னை தெரியும். ... பெண் விடுதலைக்காக போராடும் பெரிய மனிதர்கள் கூட தன் விருந்தினர் பங்களா விலாசத்தை தந்ததுண்டு. என்னிடம் கடன் சொல்லிப் போன கந்து வட்டிக்காரகளும் உண்டு. சாதி சாதி என சாகும் எவரும் என்னிடம் சாதிப் பார்ப்பதில்லை. திருந்தி வாழ நான் நினைத்தபோதும் என்னை தீண்டியவர்கள் யாரும் திரும்பவிட்டதில்லை. பத்திரிக்கையாளர்களே! விபச்சாரிகள் கைது என்றுதானே விற்பனையாகிறது.. விலங்கிடப்பட்ட ஆண்களின் விபரம் வெளியிடாது ஏன்...? பெண்களின் புனிதத்தை விட ஆண்களின் புனிதம் அவ்வளவு பெரிதா? காயிந்த வயிற்றுக்கு காட்டில் இரை தேடும் குருவியைப் போ…
-
- 11 replies
- 2.9k views
-
-
நீர் தேங்கி நீண்டு கிடக்கிறது வயல்வெளி, தீண்டுவாரில்லாத ஒற்றைப்பனையில் தூக்கணாங்குருவிக்கூடுகள் நிறைந்துபோய் கிடக்கின்றன சிதைந்த வயல்வரம்புகளில் வெண்கொக்குகளும் காகங்களும் இறகுகோதி உலாத்துகின்றன, கலப்பைகீறாத எங்கள் நிலமதில் அல்லியும் நீர்முள்ளியும். மண்டிக்கிடக்கிறது, உடலங்களை உண்ட மதமதப்பில். நெல்லுத்தூத்தல்களும் அறுவடைக்கால கூச்சல்களும் இல்லாத வெளிபார்த்து சலித்துக்கடக்கிறது பருவக்காற்று, நார்கடகங்களும் சாக்குகளும் மக்கி மண்னேறிப்போகிறது வண்டில் சில்லுகளில் வலைபின்னி சிலந்தி கிடக்கிறது. அசைமீட்கும் எருதுகளின் ஏரிகளில் கரிக்குருவியின் எச்சங்கள் கோடுகளாய், விலைகென்று வளர்த்த கிடாயும் விழியுயர்த்தி மிரள்கிறது. …
-
- 18 replies
- 1.1k views
-
-
புத்தாடை கட்டி ஊரில் புதுப்பானை வைத்து கோலம் போட்டு மாவிலை கட்டி திருச்சி வானொலியை திருகிவிட்டு கவியரங்கம் கேட்டு அப்பா அம்மா அம்மாச்சி சின்னன் பொன்னன் ஆளடுக்கு புடை சூழப் பொங்கலோ பொங்கல் என்று பொங்கிய காலமும் உண்டு..... இடையில், கதிரவனுடன் என்வானில் புதிதாய் எட்டிபார்த்த இயந்திரப்பறைவைகள் பறந்து வட்டமிட்டு என் பொங்கலை வேவு பார்த்து எச்சங்களாய் உலோகக் குண்டுகளை உமிழ்ந்து விட பொங்கலோ பொங்கல் என்றிருந்த என்வாழ்வும் மங்கலாகிப் போனதும் உண்டு..... இன்று, விடிந்தும் விடியாத பனிப் புகாரில் என் நினைவுகள் கண்ணாம் மூஞ்சி காட்ட வேலைக்குப் போகும் அவதியில் என் உதடு பொங்கலோ பொங்கல் என்று இயந்திரத் தனமாய் முணுமுணுக்கும்........
-
- 20 replies
- 2k views
-
-
எனக்குள் எரியும் ஓர் நெருப்பு செந்தீயில் என் தேசம் வெந்தணலில் என் மக்கள் பந்தாட வந்தோரால் நொந்தேதான் மெய்சோர்ந்தார் வந்தோடி வந்தோர் நாம் சிந்திக்க ஏன் தயக்கம்? என் மண்ணின் மீட்புக்காய் அங்கே ஓர் பெரும் யாகம் இங்கோ நாம் களிப்போடு உல்லாசம் தரும் கோலம் சோகங்கள் எம் மண்ணில் தொடர்கின்ற இந்நேரம் போகங்கள் ஏன் இங்கு பாரங்கள் தான் அங்கு என் மண்ணின் வசந்தங்கள் எங்கோ போய் ஒளிந்ததனால் என்றுமே நிரந்தரமாய் இலையுதிர் காலங்கள் விரக்தியின் விளிம்பினிலே துடித்திடும் உயிர்க் கூட்டை விடுத்திட விரும்புகின்ற மிடிமையில் என் மக்கள் சொந்தங்கள் சுடராகத் துடிக்கின்ற பொழுதிங்கு நெஞ்சங்கள் உருகாமல் நிலைக்கின்ற நிலைகண்டு என்நெஞ்சி…
-
- 6 replies
- 1.3k views
-
-
வன்னி வெடிகளுக்காய் உனக்கு இடிகள் காத்திருக்கு..... கவிதை.... சுனாமியில் அன்று வெள்ளத்தில் மிதந்தோம்..... சுட்டெரித்த பிணங்களாய்;வன்னியிலே இரத்தத்தில் மிதக்கின்றோம்.... பிணக்கும்பலின் மத்தியிலே மழலையொன்று தன் தாய் தேட சிதறிவிட்ட சதைக் கும்பலிலே தாயும் தன் பிள்ளை தேடும் ; இந்த அழிவை எங்கும் கண்டதில்லை எதிலும் பார்த்ததில்லை திரைப்படத்தில் பார்தால் கூட தேம்பி அழுததுண்டு... வீதியிலே பதுங்கு குழி; அதில் உயிருக்காய் பதுங்கிவிட்டு ஓட்டத்தை தொடரவென்றால்; வீதியிலே உறவுகளின் சிதறல்கள்.... எந்தப் பிள்ளை இறந்ததென்று பார்ப்பதற்கும் நேரமில்லை..... எந்த உடை உடுத்ததென்று கண்டுவிட முடியவில்லை; காரணம் எங்குமே சிவப்பு நிறம் எல்லாமே ச…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஆலாபனையொன்றின் சிதைவுகளிலிருந்து எழுகின்றது சீரான முனகல் ஒலியொன்று இன்றைய பொழுதுகளில், கரிய இருளூடு அந்தரித்தலையும் மெல்லிய வெண்மையொன்றை போல, நீண்ட அமைதிகளை ஊடறுத்து ஒலித்தோயும் தெருநாயொன்றின் ஊளையைப்போல, வைகறையொன்றை நோக்கி தவமிருக்கும் ஒரு பறவையின் பசியைப்போல, நிகழ்த்திப்போகிறது உணர்த்தமுடியாத எதோ ஒன்றை, மதர்த்தெழும் அடுத்தடுத்த பொழுதுகளில் எழும் அச்சங்களை தொலைக்கும் அபயகரமொன்றின் ஓங்கார ஒலியை தடுக்கமுடியாத ஊனங்களை கடக்கும் யாதார்த்த கணங்களில் தேவகணங்களின் ஆதரவுப்பார்வைகளை, எதிர்பார்த்து கிடக்கிறது ஒலி எழுப்பிய அந்த சிதைவுகள். இருந்தபோதும்.................... ஆலாபனைகளூடான நீடிக்கும் அந்த ஒலிமட்டும் ஒலித்துக்கொண்டே …
-
- 7 replies
- 663 views
-
-
இன்னும் உயிரோடிருக்கிறேன்! ஏதோ ஒன்றை உணர்த்தியபடியே நகர்ந்து கொண்டிருக்கிறது காலம்! இனி மீதமென்ன இருக்கிறது என்று நிகழ்காலத்தை துகிலுரிந்த படியே துச்சாதனர்கள்! தொடரும் ஏமாற்றங்களால் பிடித்தவர்கள் கூட அந்நியமாகிவிடும் அபாயத்தில் உறவுகள்! படித்ததும் பார்த்ததும் ஒரே தளத்தில் ஆனாலும் 'உண்மையா"? என்று துழாவும் தொலைபேசி அழைப்புக்கள் இன்னும் விட்டுப்போகாமல் கண் சிமிட்டியபடி இருக்கிறது நம்பிக்கை! " அதனால் இன்னும் நான் உயிரோடிருக்கிறேன்"!
-
- 3 replies
- 1.5k views
-
-
இவ்வார ஆனந்தவிகடன்(aug 9th) இதழில் வெளிவந்த கவிதை ''கள்ளத்தோணி"
-
- 3 replies
- 659 views
-
-
-
- 33 replies
- 4.8k views
-
-
உன் நினைவுகள் * உன் பெயர் எழுத என் பேனா ஓடும் போதெல்லாம் கேலிச் சிரிப்போடு வந்து பிள்ளைக் குறும்பாய் பிடுங்கி எரிந்தாய்! * உன் மெல்லிய உதடுகளால் புன்னகையிட்டு மேனியெங்கும் மின்சாரம் பாய்ச்சி என் போர்வைக்குள் புகுந்து நித்திரை கலைத்தாய்! * என் ஜன்னல் வழி நழுவி வந்து சில்மிஷக் கணங்களில் என் பெண்மை பூக்கச் செய்து உயிரை உருக்கி உலையிலிட்டு ஜீவன் பருகி தாகம் தீர்த்தாய்! * உன் முத்தங்களை பொக்கிஷமாய் மார்புக்குள் பொத்தி வைத்தேன் பிரிவின் துயரில் அவை கரைந்து போயின! * ஞாபகச் சின்னமான நம் நிழல்படம் சிதிலமாகி சிதைந்து கிடக்கிறது! * வீத…
-
- 8 replies
- 3.7k views
-
-
காதலே நீ எனக்கு... காதலே எனக்கு நீ முதலாவது இறைவன்.. இரண்டாவது சுூரியன்... மூன்றாவது பால்... நான்காவது மூர்த்தி.. ஐந்தாவது முத்தி... ஆறாவது புலன்.. ஏழாவது தரிசனம்.. எட்டாவது கிழமை... ஒன்பதாவது நமஸ்காரம்.. பத்தாவது கிரகம்.. பதினோரவது அவதாரம்.. பதின்மூன்றாவது மாதம்.. பதினேழாவது பேறு.. இருபத்திஐந்தாhவது மணி.. அறுபத்தியோராம் நிமிடம்.. அறுபத்தியேழாம் கலை.. ஆயிரத்தோராங்காலத்துப்பயிர்..
-
- 13 replies
- 2.2k views
-
-
ஓப்ரா கவுசில் ஒரு மாலை பொழுது ஒலித்தது ஒரு கணீர் குரல் ஒவசீஸ் தமிழன் தனை இழந்தான் ஓப்பாரியும் ஓலங்களும் களத்தில் ஒப்ரா கவுசில் தேனிசை மழை ஒமந்தையில் குண்டு மழை ஒரு சாண் வயிற்று பசியிலும் போராட்ட உணர்வு அங்கு ஓய்யார பகட்டிலும் களியாட்டம் இங்கு ஓசி தமிழன் நாம் ஓடி விளையாடி,பாடி பாரதி கனவினை நனவாக்கிடுவோம் ஓடு ஓடு என்று விரட்டுகிறார்கள் ஓப் போடுகிறோம் நாம் ஒப்ரா கவுசில் தமிழ் வாழ்க தமிழன் வாழ்க
-
- 12 replies
- 1.9k views
-
-
'' போரை தொடங்கும் புலிகள்..'' உள்நுழைந்து உளவெடுத்து ஊந்துகணை தாக்குது பகையரனின் காவலரன் பலிகளமாயாகுது..... முன்னேற வந்த பகை முதுகுடைந்து சாயுது கண்ணு முன்னே தளபதிகள் களப்பலிகள் ஆகுது... எங்கள் புலி வீரமின்று ஏறியங்கு ஆடுது உலகத் தமிலெல் லாமின்று கை கொட்டி பாடுது.... வானமேறி வந்த பகை வானமது காவுது பாதி வழி போகுமுன்னே படை உயிர்கள் போகுது... நான்கு முனை திறந்தடிக்க நம்ம படை கூடுது வேண்டி கட்டி வந்தபடை வெளியேற போகுது... பரிட்சாத்த தாக்குதல்கள் பரவலாக நடக்குது பறையடித்து புலிகளணி போரை தொடுக்க போகுது....! ' -வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 1.3k views
-
-
தமிழீழம் கிடைத்தது போல் ஈழமண் துள்ளியது! எமதீழம் வந்து குந்தி... இந்தியமும் சொல்லியது! அமைதி என்று வந்ததற்காய், கொஞ்சக் காலம்... சொந்தங் கொஞ்சித்தான்... கோலம் போட்டார்கள்!!! சில காலை விடிவதற்குள்... கோலங் கலைந்து, அலங்கோலமான காலங்களில்... அரி மிஞ்சிய அசிங்கங்களை அரங்கேற்ற ஆரம்பித்த பாரதம், பாதகம் தனைமட்டும் பதறாமல் தொடங்கியது!!! பஞ்ச வேண்டுதலோடு பட்டினி கிடந்து போராடி... நலிந்து குறுகி, பார்த்தீபன் மடிந்த போதுதான்... உணர்ந்திருப்பார் மகாத்மா, கோட்சேயின் துப்பாக்கிக் குண்டில்... தான் சாகவில்லையென்று! வீணர்கள் பார்த்து ரசிக்க ...வீணாகிப் போனதோர் தியாகம்!!! பாரத தேசத்தின் பாதகங்கள்... புலி தரித்த ஆயுதங்களையும், பறித்து விட்டல்லோ தொடங்கியத…
-
- 14 replies
- 1.7k views
-
-
இரண்டு ஈர உதடுகள் என்னை முத்தமிட்டு நீங்கின ஒன்றில் பொத்தி வைத்த காதலும் வெளிப்படுத்தி வெளிப்படுத்தி அடங்கா(த) காமமும் நிறைந்து இருந்தன இன்னொன்றில் வெள்ளை நிறத்தில் அன்பு இருந்தது "இவன் என் அப்பா" என கட்டிப் பிடித்து இறுக்கி சிரிக்கும் சின்னச் சிறுக்கியின் பாசம் இருந்தது இரண்டு முத்தங்களிலும் என் வாழ்வு தொங்கி நின்றது ******** அவர்களை அனுப்பிவிட்டு வீடு செல்கின்றேன் வாசல் திறக்கும் போது சூனியம் அப்பிக் கொள்கின்றது கட்டிலும், தொட்டிலும் சோபாவும், சட்டியும் முட்டியும், முட்டை பொரித்த பின் எஞ்சிப் போன தாச்சியும் சிந்தப் பட்ட ஒரு சொட்டு எண்ணெயும், என்னவள் கழட்டிப் போட்ட பனிச் சப்பாத்தும் என்…
-
- 77 replies
- 18.4k views
-