Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கவிதயாலே கவிதை இங்கு புனையாப் பார்க்கிறேன் கவிதை என்னும் பாற்கடலை நக்கி குடிக்கப் பார்க்கிறேன் அந்த பாற் கடலில் பள்ளி கொள்ள ஆசை கொள்கிறேன் பாற்கடலை நானும் கடைந்து பருகப் பார்க்கிறேன் தேவர்கள் அசுர்கள் போல நானும் முயன்று பார்க்கிறேன் விடம் உண்ட கன்டன் போல கவிதையில் சிக்கிதவிக்கிறேன் மொத்தத்தில் நானும் யாழ் இணையம் கவிமழையில் முழ்கிப்போகிறேன்

  2. _______________________________________ தூக்கம் கண்களை நிறைத்த பொழுது குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படும் பூங்காவுக்கு வருகின்றனர். கைகளை இழந்த சிறுவன் செயற்கை கைகளுக்காய் மீதித் துண்டங்களால் ஏந்திக்கொண்டிருக்கிறான். கைகள் பற்றிய கனவுடன் அலைந்துகொண்டிருந்தான். சிதைக்கப்பட்ட முகத்தையும் பிரித்தெடுக்கப்பட்ட கைகளின் மிகுதிப் பகுதியையும் புகைப்படங்களாக்கி உதவி கோரிக்கொண்டிருக்கிறான். எல்லாமே எட்டாத தூரத்திலிருந்து தூங்கிக்கொண்டிருக்கிறது. அந்தச் சிறுவன் கைளோடு தன் புன்னகையையும் இழந்துபோயிருந்தான். பள்ளிக்கூடம் சென்ற ஒன்பது வயதுச் சிறுமி மிருகங்களாகிய படைகளால் வன்புணரப்படுகையில் இந்தக் குழந்தைகள் வழியிலிருக்கும் பூங்காவில் உறங…

    • 3 replies
    • 1.1k views
  3. வானம் கறுத்து வடித்தது கண்ணீர் – மர வேரினை நனைத்து வீழந்தது மண்ணில்! உயிரது வாழ உதவிய அந்நீர் – அன்று மழையைப் போலே மண்ணில் சிலரும்! மானத்தமிழன் வாழ்ந்திட வேண்டி மரணத்தைக்கொடையாக கொடுத்திட்ட பலரில் உயரிய சிந்தனை பல கொண்டு உயர்ந்திட்ட உறவாய் நீயும் நின்றாய் எம் சோதரா! ஈழம் ஒன்றே தாகமாய்க்கொண்டு ஈய்ந்த உயிர்கள் பல எம்மண்ணில் உண்டு! தாயகக் கனவை நெஞ்சில் கொண்டு வாழ்ந்திட்டாய் நீயும் எம்முள் ஒன்று! நல்லது தீயது நெருப்பறியாது – தலைகீழாய் பிடித்தாலும் கீழ் பார்த்தெரியாது – காவிய காலத்தின் பின்னே மீண்டும் அக்கினி பூத்து உன்னால் புனிதமானது சகோதரா! மானத் தமிழரை உறவாய் கொண்டாய்! எங்கள் மனதை தமிழா நீ வென்றாய்! வாழ வேண்டும் ஈழம் என்றே வங்…

  4. முள்ளிவாய்க்கால் முழங்கிய போது மெளனித்துக் கிடந்தாரே... முத்துக்குமார்கள் தீப் பிடித்து எரிந்த போதும் சும்மா கிடந்தாரே.. பூமிப்பந்தில் புனிதராம் மனித உரிமை காப்பவராம்.. வெள்ளாடு வேடம் போட்டு சமாதானம் பேசியே கழுத்தறுக்க அலையும் அந்தக் குள்ள நரிகள் அவர் தம் கொட்டம் அடக்க வெடித்தேன். வன்னி மக்களை சொந்த உறவுகளை விடுதலை.. எரிமலை என்று உசுப்பேத்தி.. போர்க்களம் ஏவிவிட்டு அவர் தம் கதை முடித்து தாம் அசைலம் அடித்து.. இன்று... எதிரி வானில் அவன் விமானத்தில் உல்லாசம் போக நினைத்த ஈனத்தமிழர்களின் ஈவிரக்கமற்ற செயல் கண்டு நெஞ்சு குமுறி வெடித்தேன்.. போட்ட ரிக்கட்டுகளுக்கு பொக்கட் காசு கூட கிடைக்கக் கூடாதென்றே. பூமி …

  5. தாரிலும் சுண்ணாம்பிலும் குறியிட்டு செத்த கிளுவங் கதியாலிலும் பனைமட்டை வேலி இடுக்கிலும் கொழுவிவைத்த மூக்குப்பேணியெல்லாம் ஒரே உலோகத்தினால் ஆனவைதான். திசைகள். வடக்கென்றும், கிழக்கென்றும் என்னதான் கதியால் போட்டுக் கூத்தாடினாலும் ஆண்ட பரம்பரை மகுடக் கனவு எல்லா தரப்புக்கும் அழிந்து போகாதவைதான். யாழாதிக்க வசந்தமும் கிழக்கு மேட்டின் முல்லையும் ஏகபோக ஆளுகையின் வெண்புறாவும் கறுப்பு வெள்ளைக் காலத்துக்கும் முன், வெளியிலாடிய வட்டக்களரி, வரப்பிலாடிய கும்மி, கோல், அலையில் பாடிய அம்பா காலத்துக்கு முன்பிருந்தும் இன்றைய உய்யிலாலா வண்ணங்கள் வரை ஒரே தோலினாலானவைதான். வசந்த முல்லை போலே வந்து எத்தனை புறாக்கள் சதிராடினாலும், நடை மாற்றினாலு…

  6. நாம் நாமாகவில்லை எமது கைகள் மட்டும் தான் முதலில் கட்டப்பட்டது இப்போ எமது காலும் கட்டப்பட்டுவிட்டது இனி எம்மால் எழுந்து நடக்க முடியாது எழுதமுடியாது பேசமுடியாது நாம் இனி மேல் நாமாகவே இல்லை எம் விடுதலையும் வெகு துரமாகிவிட்டது நாம் இப்போ எம் அடையாளத்தை தொலைத்த ஓர் அடிமை மனிதர்.

    • 5 replies
    • 1.1k views
  7. Started by nochchi,

    அகோர கோரம் மரணத்தின் ஓலங்களினாலானதாயிருக்கிறது அங்கு படர்ந்திருக்கும் கனத்த இருள் குருதியின் கருஞ்சிவப்பாயிருக்கிறது அந்த இருளின் நிறம் ரத்த மயமான அந்நிலம் சூழ் ஆழியிலிருந்து அலைகளுக்கு பதிலாய் பிரேதங்களெழும்பிக் கொந்தளித்து கொடும்மரணத் தடம் பதிக்கின்றன காலூன்ற இடமின்றி நிலமெங்கும் உறைந்த ரத்தப் புள்ளிகளிட்டு தெறித்துச் சிதைந்த மனித நரம்புகளால் அகோர கோலம் இட்டிருக்கும் துப்பாக்கியேந்திய கொடுங்கரங்கள் உணர்வின் வேள்வி குண்டத்திலிருந்து ரணங்களின் பெரும் ஓலம் எதிரொலிக்க அக்கினியில் ஆகுதியாயின மரித்த சடலங்கள் யுத்தச் சரித்திரங்களின் சிதிலக் குவியல்களிலிருந்து மரணத்தின் மஹாகுரூர முகம் தனது ஆட்காட்டி விரலால் உதட்டை …

    • 1 reply
    • 1.1k views
  8. [size=5]ஹைக்கூக்கள் 2 அப்பல்லோ இல்லை சந்திரனையும் கடந்து காதலர்கள். இணைபிரியா தோழன் ஏழைக்கு பசி சும்மா இருந்தாலும் இருக்க முடிவதில்லை இணையம். கடவுளும் பயந்தான் கொடுப்பதற்கு கடன் நாற்று நடுகையில் நனைந்தது மனசு இடைவிட்டு இறங்கத்துடித்தன காற்சட்டைகள் வாலிபவயசு சிதறின சில்லறைகள் இறந்தவன் பிச்சைக்காரன் வல்வையூரான்.[/size]

  9. பாங்கியும் நம்பியும் தம்பி நாராயணனும் போட்ட திட்டம் தமிழர் குருதி பெருக்கி.. சிவந்தது செங்கடல் அல்ல நந்திக் கடல்..! எல்லாம் முடிந்த பின் மூடி மறைக்க ஓர் அறிக்கை மறைத்ததை மூட ஓர் அறிக்கை மூடியதை மறைக்க இன்னோர் அறிக்கை.. மொத்தம் எத்தனை..??! இடைக்கிடை அருண்ட தேசத்துள்.. அமைதிப் புறாவை கட்டி இழுத்து வர ஆயிரம் தோறணைகள். சிங்களப் பேரினப் பசிக்கு சீனத்து ரகன்களின் தீச் சுவாலைக்கு அசோகச் சக்கரத்தின் அரக்கத்திற்கு அத்தனையும் பலி..! காலத்தே தெரிந்து ஓர் தப்பு காலம் கடந்து ஓர் அறிக்கை.. காலம் கடத்தி கற்பது பாடம்..! கற்றபின் பதவி உயர்வு தந்து நிற்பது கடன்...! இப்படியே போனால் உலக அமைதி என்பது …

    • 9 replies
    • 1.1k views
  10. Started by தாரணி,

    நிலாவே நீ ஏன் தேய்கிறாய் நீயும் என்னைப்போல் யாரையும் காதலிக்கிறாயா!

  11. உனக்கென்ன இனி பேச்சு....??? நாடு நாடாய் ஏறி ஓடி நாட்கணக்காய் பேசியாச்சு.... ஆனாலும் இன்று அங்கு கண்ட தீர்வு என்ன ஆச்சு....??? சுற்று சுற்றாய் வந்து நீங்க சுற்றி சுற்றி பேசியாச்சு.... இன்று வந்து சிங்களமோ தந்த தீர்வு என்னாச்சு....??? எம் தமிழர் இன்னல்களை தாங்கி தாங்கி ஓடினீக..... அந்த மக்கள் அவலங்களை அங்கு வைத்து உரைத்தீர்களே.... உலகத்தார் செவிகளிலே சங்கெடுத்து ஊதினீரே.... மூன்றாம் தரப்பாய் அவரை முன்னுக்கு இருத்தினீரே.... இருந்தும் என்ன பயன் என்ன தீர்வு கண்டீரோ....??? சமாதாணம் வந்ததென்று சந்தோசம் அடைந்த மக்கள்..... தெருக்களிலே பிணங்களாகி தின…

  12. உறுதி இது தமிழீழம் உருவாகும் வரலாற்றில். கல்லூரி செல்லும் கன்னிப் பெண் சட்டையில் கைக்குண்டு தேடுது காவாலி இராணுவம் சந்தியில் சென்ரியில் சவப்பெட்டிப் பயணம் ஜ.டி யில் தானே-எங்கள் ஆத்மா வாழுது அண்றைக்கு சென்ரியில் நிண்றவன் கண்ணுக்கு தம்பியின் தோற்றத்தில் ஏதோ தவறாம் இன்றைக்கும் அவன் இருப்பிடம் தெரியாமல் ஈழத்தில் தவிக்கிறாள் ஈரஞ்சு மாதங்கள் கருவிலே சுமந்தவள் எட்டப்பன் கூட்டம் எல்லாளன் தேசத்தில் கொட்டம் விடுகிறது கொடுமை பல புரிகிறது வெட்டிச்சரிக்கிறது-இனத்தை வேருடன் அழிக்கிறது காவலர்கள் காடேக கடிநாய்கள் புகுந்ததனால் வாடி வதங்கி வலி மிகக்கொண்டு கூடு திரும்பும் குஞ்சிழந்த பறவைபோல் காக்க ஏதுமின்றி கவனிப்…

  13. சிதையும் தமிழ் கலாசாரம் சீர்மிகு தமிழினம் இன்று சிதைந்ததை எண்ணித் துடிக்கையில் விளைந்த தமிழ் மானமது வீழ்ந்ததடா சாக்கடையிலே மானத்திற்காய் உயிர்தந்த எம் மாந்தையரோ மதிகெட்டு இன்று மயங்கி வீழ்ந்தனரே மேற்கத்திய நாகரிகத்தினிலே கட்டிக்காத்த கலாசார நிலவதுவோ கருமுகிலில் புகுந்து மறைகிறதே சுதந்திரமாய் சுத்திவந்த தென்றலோ சுத்தம் கழைந்து செல்கிறதே பாவப்பட்ட மண்ணினிலே பாவச்செயல்கள் எத்தனையோ கருவைச் சுமந்த கன்னியரின் கருகளைவுகள் எத்தனையோ தொட்டிலிலே தூங்க வேண்டிய திசுகளோ தொட்டியிலே குப்பைத் தொட்டியிலே தலை குனிந்து சென்ற பெண்களோ தரம் கேட்டு சந்தையிலே மந்தைகளாய் மதுவினிலே மயகியதால் மானம்தனை மறந்துவிட்டான் வீரத் த…

  14. தீபச் செல்வன் கவிதைகள் ஓவியம் : பொன்வண்ணன் போர் நிலம் வெறும் நிலத்திற்கு பொம்மைகள் திரும்புகின்றன பிரயாணிப்பவர்கள் எல்லோரது கைகளிலும் பெருத்த வண்டிகளிலும் அவர்களிடமுள்ள அகலமான குறுக்குப் பைகளிலும் நிலத்தை அள்ளிச் செல்லுவதாக வயது முதிர்ந்தவர்கள் பிதற்றுகிறார்கள். போர் நிலத்தில் குழந்தையின் பொம்மை இறந்து சிதைவுகளுடன் கிடக்கிறது கொல்லப்பட்டிருக்கிற தாயைக் குறித்தோ தன் தந்தையைக் குறித்தோ எதுவும் கேட்காமல் மறந்துபோன குழந்தை தன் பொம்மை தேடி பாதியாய் மீட்டிருக்கிறது. தரப்பால் துண்டுகளுடன் சில பூவரசம் தடிகளையும் எடுத்துக்கொண்டு பொம்மை வீடுகளைக் குழந்தைகள் மூட்டிக்கொண்டு அதனுள் இருக்கின்றனர் சுவர்களோ தடுப்புக்களோ இல்லாத பொம்ம…

  15. தமிழர்களும் மனிதர்கள் தான்!!! அண்ணாவை காணவில்லை என அழுதாள் "தங்கச்சி" அவளும் காணாமல் போனாள்..!!! என்ர பிள்ளையை திருப்பித்தாங்கோ என கதறினாள் ஒரு "தாய்" அவளும் காணாமல் போனாள்..!!! இதயமே இல்லாத இரும்புமனிதர்கள் தேசத்தில் கண்ணீர் வடிப்பது தண்டனைக்குரிய "குற்றம்"! மனிதமே இல்லாத மிருகங்கள் தேசத்தில் விழி நீரின் "வலி" தெரியாது அழுபவனுக்கு மரண "தண்டனை"! நாக்குகள் அறுக்கப்படும் நரக பூமியில் கேள்வி கேட்பவன் "தீவிரவாதி" நீதியே இல்லாத "நிர்வாண" நாட்டில் கோமணத்தோடு திரிபவன் "குற்றவாளி"! கேட்க நாதியற்ற இனமாய் இருப்பதால் நாய் கூட துணிந்து காலைத்தூக்கும் "நரக தேசம்"! விசர் நாய்க்கு தண்ணீருக்குப் பயம் வெறிநாய்களுக்கு தமிழனின் கண்ணீ…

  16. தேநீர் கவிதை: எனக்குள் ஒலிக்கும்கொலுசு தூக்கி எறிந்துவிட்டுப் போ ஒரு புன்னகையை. தூர தேசங்களுக்குப் பயணிக்கிறேன் நான். உன் கூந்தல் இரவில்தான் தேடிக்கொண்டே இருக்கிறேன்... எனக்கான வெளிச்சத்தை. கடந்த காலத்தின் கண்ணீர்த் துளிகளில்தான் நிகழ்காலத்துக்குள் நீந்திக் கொண்டிருக்கிறேன். தனிமை வலைபின்னுகிறது. சிலந்திப் பூச்சியாய்ச் சிக்கித் தவிக்கிறேன். மணலற்ற ஆறாய் வறண்ட வாழ்க்கையில் வந்து வ…

  17. காணாமல் போன அண்ணன்! தீபச்செல்வன்… ஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக் கொண்டு செல்லும்பொழுது வாகனத்தின் பேரிரைச்சல் கேட்கையில் அண்ணன் எங்கே என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தெருவில் அண்ணனைப் போன்றவர்களைப் பார்க்கும்போதும் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் விளையாடச் செல்லும்போதும் அண்ணன் வந்துவிட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்வில்லை யாராவது திருவிழாவுக்கு செல்லும்போதும் கொண்டாட்டநாட்கள் வரும்போதும் அண்ணன் வரமாட்டானா? என்பதைத் தவிர அவள் வேறெதுவும் கேட்கவில்லை தூங்கி எழும்பும்போதும் பள்ளிக்கூடம்செல்லும்போதும் அண்ண…

  18. ஒற்றைப் புத்தகம் வைச்ச இடம் மறந்தாலேஉள்ளம் பதை பதைக்கும்எங்கள் ஊரின் மொத்தப் புத்தகமும்அங்கைதான் குவிச்சுக் கிடந்ததாம்ஓலைச்சுவடி முதல்ஊர்களின் வரலாறும் தொன்மையும்சொல்லும் அத்தனை நூலும்...குறிப்பா இலங்கைத் தீவே தமிழன்ரைஎண்டதை பொழிப்பாச் சொல்லுற ஆவணமெல்லாம்தென்னாசியாவிலை பெரிய நூலகம்இதுவெண்டு எல்லாரும்புழுகமாச் சொல்லிச் சொல்லிசெருக்குப் படுறவையாம்கல்வி அறிவிலை உலக அறிவிலைதமிழன் கொடி கட்டிப் பறக்கஇதுதான் காரணமெண்டதைஎல்லாரும் அறிஞ்சதாலைஎப்பவும் அதுக்கு தனி மவுசுதானாம்கல்வி அறிவைச் சிதைச்சால்கண்டபடி தமிழனாலை வளரேலாதுஎண்டு கற்பனை கட்டின சிங்களம்இரவோடு இரவா வந்து உயிரோடைகொள்ளி வைச்சுப் போனதாம்அப்பிடிச் செய்து அரிய பொக்கிசத்தைஅழிச்சு ஒழிச்சாலும் தமிழன்ரைஅறிவுத் தேடலை அழிக்க முடி…

  19. உன்னை எல்லாம் பெண்ணென்று கூறுவதா....??? அம்மணியின் ஆட்சியிலே ஜயோ பாவி நீ இழந்தாய்... கட்டியவன் தனையிழந்து கண்ணீரதை நீ வடித்தாய்.... நெஞ்சத்து குமுறல்களை கொட்டியன்று நீ எறிந்தாய்.... விதவை என்ற பட்டமதை விருப்பின்றி நீயும் ஏற்றாய்... அத்தனையும் மறந்து வந்தா அவ் அணியில் நீ இணைந்தாய்....??? உன்னவனை ஏன் கொன்றார் என்னவென்று கேட்கலயே.... கொலை காற கூட்டனியில் வந்து கூட்டு வைத்தாயே.... வெட்கம் கெட்டு மதியிழந்து வெட்கமின்றி வாழிறியே.... சதி காற கூட்டமுடன் சம்பந்தம் வைக்கிறியே.... சீ...தூ.... உன்னை எல்லாம் பெண்ணென்று உலகமதில் செப்பலாமோ....??? …

  20. நீ பயனற்றுப் போகையில் எல்லா பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விடுகிறாய் உன்மீதான மனக்குறைகள் நிரந்தரமாக நீங்கிவிடுகின்றன உன்னைப் பற்றிய புகார்கள் என்றென்றைக்குமாக ரத்து செய்யப்பட்டுவிடுகின்றன நீ பயனற்றுப்போகும்போது வேலியில் பூத்துக்கிடக்கும் ஒரு கொடிபோல ஆகிவிடுகிறாய் உனக்கு யாரும் நீரூற்றுவதில்லை உனது மலர்களுக்காக யாரும் காத்திருப்பதில்லை ஆனாலும் நீ ஒரு செடியாகவோ மலராகவோ இருக்கத்தான் செய்கிறாய் உன் மேல் திணிக்கப்பட்ட குற்ற உணர்வுகளை இறக்கி வைப்பதற்கு உனக்கு இதைவிட வேறு சந்தர்ப்பம் வரப்போவதில்லை நீ செய்யத் தவறிய ஒவ்வொன்றிற்கும் பதிலளிக்கும் கடமையிலிருந்து நீ விடுவிக்கப்பட இதைவிட்டால் உனக்கும் வேறொரு தருணம் வர…

  21. '' அஞ்சி வாழேன்..'' சிங்கள கூட்டு வைத்து சில காலம் வாழ வந்து சேர்த்து வைத்த பணமதையும் தெருவில் போட்ட கதை காணய்.... மாடாக இங்குழைத்து மாளிகைகள் வேண்டிவிட்டு தான் வாழ முடியாமல் தவிக்கின்ற நிலை பாராய்..... பகலிரவு தான் பாரா பட்டினிகள் தான்கிடந்து ஊன் உருகி உழைத்த பணம் யாருக்கு போகுது காண்... காட்டி கொடுப்பவர்கள் கரியாராய் இவராக்கி- இவர் வாய்க்கரிசியிட்டு - அவர் வாழ்கின்ற காலம் காண்... கொழும்பினில் வாழ்வதாய் கொழுப்பாக பேசிநின்ற எம் தமிழர் வாழ்வியலில் எறி வந்த இன்னல் கேள்... ஏறி வந்து வீதியிலே ஏற்றமுடன் உலவிடதான் முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கிய நிலை காணாய்.. முக மூடியணிந்தவர்கள் முன்னாடி தலையாட்டி …

    • 1 reply
    • 1.1k views
  22. என்னை நம்பவைத்து என் கழுத்து நரம்புகளை நறநற வென அறுக்கும் உன்னை எனக்கு பிடிக்கும். எதிர்பார்த்து காத்திருந்த என் கண்களை கூரிய முனையால் குத்தியிழுத்தெடுக்கும் உன்னை எனக்கு பிடிக்கும். நா நுனியில் நட்பென்று பேசி நீ நிலைநாட்டும் நயவஞ்சகம் எனக்கு பிடிக்கும். கனிவாய் நீ பேசி கன்னத்தில் தடவி கண்களால் சைகை செய்து என் கணங்களை நீ எண்ணிக் கொண்டிருப்து பிடிக்கும் உன் வலையில் நான் வீழ்ந்து விட்டதை உணர்ந்தும் உண்ணாமல் உறங்குவது போல் இரசிப்பது பிடிக்கும் உன்குலமே அழிந்தாலும் உன் காலம் கனிந்து வரும்வரை உள்ளுக்குள் நகைத்தபடி என்னை போட எத்தனிக்கும் உன் குணம் பிடிக்கும் என் முதுகை தடவியபடியே எந்த இடத்தில் குத்தலாமென சர…

  23. விடை பெறச் சொல்கிறாயா ?? நெஞ்சில் வரைந்த ஓவியம்.....!! பூமிக்கு வந்த பனி துளி நான்... விடை பெறச் சொல்கிறாயா ? உன் சித்தம் போல புள்ளி மானாக கோலம் போட்டேன்..... வேதனை வடியவில்லை ...... அருவியாய் என்னை காலமெல்லாம் - அழ வைத்து விட்டாய்......., ஞபகம் வருது..... ----காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே!! சிறகுகள் நானும் உடைந்து , திசை தெரியாமல் திண்டாடி மோதிடுதே.. தூறல் பட்டம் அறுந்து , மூங்கிலாய் .......... இசை.....ஓசை மறந்து அடங்கியதே!! என்னென்று சொல்வேனோ முன்ஜென்ம பகையோ ..... ஏன்? காத்லே நீ வந்து கொன்றாய்? ... மீண்டும் வருவாயா ? என் செல்லமே ? ----நிஜங்களின் தரிசனமாய் கண்களினை கடன் கொடுத்து.... வ…

  24. யாழ் நகர் இந்துக்கல்லூரி பல கலை பயில் கழகமும் அதுவே தமிழர் தலை நிமிர் கழகமும் இதுவே கீதம் இசைத்த கல்லூரி...! நல்லூரின் வீதியிலே இராசையா திலீபனை பட்டினிப் போரிலே கிடத்திய கல்லூரி..! பொன்னம்மான் தொடங்கி... பல நூறு வேங்கைகள் தமிழீழக் களத்தில் அணிவகுக்க அழகு பார்த்த கல்லூரி..! ஒப்பரேசன் லிபரேசனிலே ராதா என்ற சாதனையாளனை சரித்திரமாக்கிய கல்லூரி..!! இன்று.. கிரிக்கெட் தொடர் என்று ஆனந்தாவோடு போடுவதென்ன.. சதிராட்டமா..???! ஆனந்தாவின் சிங்கள மைந்தர்கள் கோத்தபாய முதல் பொன்சேகா கண்டு பசில் ராஜபக்ச வரை.. பேரினச் சிங்களச் சேனையின் மூத்த இனவெறியர்கள்..! அன்னையே தெரியுமா அந்தச் சேதி உந்தனுக்கு..! தமிழினக் கொலையின் போர்க்குற்றவாளிகள் வேறு யா…

  25. பல ஆண்டுகளுக்கு முன்பு வாசிக்கவும் எழுதவும் நேரமும் மன வெளியும் இருந்த காலங்களில், சில கிறுக்கல்களை நான் தாள்களில் பதிய, அவை கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கின்றன. எழுதிய எதற்கும் மூலப்பிரதி என்னிடம் இல்லை. பிரசுரமான இதழ்களின் பிரதிகளும் பல்வேறு இடம்பெயர்வுகளின் போது ஒவ்வொன்றாகத் தொலைந்து போய் விட்டன. இவையெல்லாம் சிறு வயது மணல் வீடு ஞாபகங்கள் மாதிரி மனதில் மங்கி மறைந்து போய்க் கொண்டிருக்கையில் அண்மையில் எனது பழைய கவிதை ஒன்றை யாரோ ஒரு நண்பர் முகநூல் வழியாக நினைவு படுத்தியிருந்தார். அக்கவிதையின் தடங்களைப் பின்பற்றித் தேடல் செய்த போது தான் நூலகம் என்ற அரிய தமிழ் நூல்/இதழ் ஆவணக்காப்பக இணையத் தளமொன்று இருப்பது தெரிய வந்தது (www.noolaham.org). இந்த இணைய…

    • 7 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.