Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காதல் அழுகிறது ... என்னை காதலித்த என் உயிர் ... தேவதாஸை காணவில்லையே ....? அவன் காதலியை விரும்பியதை .... காட்டிலும் என்னையே (காதல் ).... காதலித்தான் .......!!! கையிலே ஒரு காதலி ..... கைபேசியில் ஒரு காதலி .... கைவிட்டு காதல் போனால் .... கைகுலுக்கும் காதலர்கள் ..... இதை காதல் என்று சொல்லும் .... காதலர்களே - தேவதாஸை கேவல படுத்தாதீர் .....!!! காதலில் தோற்றால் ... நாங்கள் தேவதாஸ் இல்லை .... காலத்துக்கு ஏற்றால் போல் காதல் ... செய்கிறோம் என்று கூறும் .... காதலர்களே ..... காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை .... காமத்தை காதலாக கருதாதீர் .... காதல் என்றும் காதல் தான் ....!!!

  2. [size=2][/size] நான் காதலெனும் தடாகத்தில் தகுதியின்மை கண்டு தரையில் விடப்பட்ட ஒற்றை மீன் உனது நீதிமன்று குற்றப்பத்திரிகையே இல்லாமல் மரணதண்டனை விதித்தது எனக்கு. இலங்கையின் இன்றைய சிறைகளைப்போலவே காரணமில்லாமல் நம் உறவில் கத்திரி போட்டவளே சொல் என்ன குற்றம் கண்டாய் என் அன்பின் ஆழத்தில். அடியேய் மரியான ஆழி உன் மனதிடம் மடிப்பிச்சை கேட்க வேண்டும். வைரமானவற்றை வைரத்தால் அறுப்பார்களாம் வைரத்தை தோழி உன்னால்தான் அறுக்க முடியும். ஏய் உழவன் மகளே என் நெஞ்சில் வேதனையை விதைத்தவளே வந்து பார் விளைச்சலை அற்புதமாய் இருக்கிறது. நீ கனவுகளை அடைமானம் வாங்கி கவிதைகள் தரும் அடைவுக்காறி. வ…

  3. POETRY OF THE ANGELS தேவதைகளின் கவிதை . இது என்னுடைய முக்கியமான கவிதைகளில் ஒன்று. என்றும் பதினாறான என் வாழ்வுதான் என் கவிதைகள். பாதி மானுடமாகப் படைக்கப் பட்டு பாதி மனசு பாதி அறிவு பாதி அனுபவமென வாழ்கிற என் ஒத்தைக் கண் ஆண்பால் வாழ்வில் எதை முழுமையாக கற்றுக்கொள்ள முடியும்? . ஆனால் பெண்களுக்கு ஒரு அனுகூலமிருக்கு. ஆண்களோடு வாழ்ந்து, ஆண்களைப் பெற்று. ஆன்களைக் கைவிடாமல் வளர்த்து பேணுவதால் ஆண்களின் பாதி உலகை அவர்களால் தரிசிக்க முடியுது. . என் வாழ்வில் என் போராட்டங்களில் என் கலைகளில் என் கவிதைகளில் எங்காவது சற்று முழுமையிருந்தால் அது என் தாயிடமிருந்தும் என் பெண்பால் உறவுகளிடமிருந்தும் பின்னர் இன்றுவரை என் வாழ்வின் பாதையில் கண்டு கேட்டுப் பழகிய தோழியரிடமிருந்தும் கற்று…

    • 1 reply
    • 1.2k views
  4. தேடிப் பார்த்தது கிடைக்கவில்லை! பேசி முடித்ததில் திருப்தியில்லை! "கண்டவன்" என பெற்றவர் சொன்னதை, "வந்தவன்" கொண்டதாய் இல்லை! வாழ்ந்து கொண்டவரை... தொல்லை!!! வாழும் காலம் முழுதும், அவன் வாழ்வதைப் பார்த்து... கண்களைக் கசக்கியபடியே... கசக்கிய விழிகளிலும், "அவன்" என்பவனே வந்து நிற்கின்றான்!!! என்னவென்று சொல்லியழ முடியாமலும், "ஓ"வென்று கதறியழ இயலாமலும், இதயத்தின் நான்கறைகளுக்குள்ளும்... நசுங்கிப் போகின்றது - தேவதைகள் கசக்கி எறிந்த காதல்கள்!!! அதைப் பொறுக்கியெடுத்து... பொக்கிஷமாய் பாதுகாக்கும், தேவைகளின் தேவர்களுக்கு... தேவதைகளின் அழுகுரல்கள், என்றைக்கும் கேட்பதில்லை!!! தேவதைகளின் இரவுகள்... முதல் இரவிலிருந்தே தொடர் கதைதான்…

  5. எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள் எதுவுமே நடக்கவில்லை...! வந்தவர்கள்... வரம் கொடுக்க வரவில்லை...! வாங்க வந்தார்கள்!! தேவதைகளுக்கும் தேவை அதிகம் தேவையில்லாமல் தேடி வந்தார்கள்! அழைக்காமலேயே அன்பாய்(?) வந்தார்கள்! வந்துபோனபின்... எம்மிடம் மிச்சம் மீதியாய் இருந்ததையும் அழிக்காமல் விட்டிருக்கலாம்...!!! வரம் கொடுப்பதாய் சொல்லிக்கொண்டு காட்சிதரும் தேவதைகளே! பாவம் நாங்கள்... சாபங்களை அள்ளியிறைத்துவிட்டுப் போகாதீர்கள்!! போர் என்றும் சமாதானமென்றும் போர்க்குற்றமென்றும் விசாரணையென்றும் தீர்வென்றும் தீர்மானமென்றும் எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள்! எதுவுமே நடக்கவில்லை! சாவின் விளிம்பில் நின்று கதறியபோது சாப்பிட ஏதுமின்றி திணறியபோது செல்வீச்சில் சின்னாபின்னமாய் சிதறி…

    • 6 replies
    • 801 views
  6. Started by pakee,

    தேவதையாய் நீ வந்த போதே நான் தெரிந்திருக்க வேண்டும் எனக்கு தெரியாமலே போய்விடுவாயென்று...♥

    • 0 replies
    • 626 views
  7. ‘அடைமழை ஓய்ந்த நாளின் மாலைக்கும் இரவிற்கும் இடைபொழுதில் வாசலில் வந்து நின்றாள் தேவதை . . தொலைதூர பிரயாணத்தின் வழியிடையே எப்போதும் போல் ஏதாவதொரு விடுபடுதலின் நிமித்தமாக இருக்கலாம் . . அடித்து பெய்த மழையின் இறுதி பொழிவுகள் அவளது அதரங்களினூடே . . தேநீர் குவளைகள் இரண்டிலொன்றில் இயலுமான வெப்பம் இதமாயிருக்கும் அவளது உறைகுளிர் போக்க . . பகலிரவு காலத்தை மாற்றிடும் இமை கதவுகள் மூடி திறந்ததும் பெருக்கெடுத்தது வெள்ளி நிரோடை . . ஆசுவாசப் படுத்திக் கொள்ளட்டுமென கன்னங்களை துடைத்து விட்டு மெல்லிய கைகளை பற்றினேன் . . தேவதை மொழியால் விம்மியபடி மாநகர பேருந்தின் லாவகமான காய்நகர்த்தல்களை சொல்லி பேச்சுடைந்தால் . . ஒ! வென அழ…

  8. தேவனுக்கு ஒரு திறந்த மடல் அன்பான பாலகனுக்கு , உலகமே உம் வரவை உற்சாகமாய் கொண்டாட என் மண் மட்டும் ஏன் ஐயா சிரிப்பைத் தொலைத்தது ??? ஆழிப் பேரலையாய் ஆவேசமாய் வந்தீரோ ? ஆரவாரமாய் என்மக்களை உம்மிடம் இழுத்தீரோ? பல வடுவை சுமந்த எமக்கு உம் வருகை உவப்பாய் இல்லை....... வெளியே நாம் சிரித்தாலும் உள்ளே நாம் உறைந்துதான் போனோம். வருடங்கள் பல பறக்கும் காலங்கள் கலகலக்கும் ஆனாலும் நீர் வைத்த ஆழ வடு ஆறவில்லை எங்களுக்கு. வாரும் பாலகனே வாரும் .. என்மக்கள் நிலையில் மற்றதை தாரும்.. கோமகன் மார்கழி 24 2013

  9. என்ர பைரவிக்கு அனைத்தும் வரும் இருந்தும் எனக்கும் “சிந்து”க் கிறக்கம் . பௌதீகம் இதுவரை பைரவி மட்டும். சித்தத்தில் மட்டும் சிந்து சிலநேரம்! பச்சசைக்கிளி முத்துச்சரம் இரயிலிற்குள் எனைக் கட்டும் படிச்ச பாவபுண்ணியம் என் கனவினில் எனைக் கட்டும் பிடிச்ச பைரவி நொந்திடக்கூடாது என, சரிக்க முடியாது இதுவரை என் பயணம் என் பைரவி என் உசிர்... சொல்லிச் செய்தது போல் அப்பிடி ஒரு பொருத்தம் நான் கொஞ்சிக் கொஞ்சி அவள் சொக்கிலும் புதுக் குழி உதட்டு முத்தமும் கன்னத்துமுத்தமும்...கன்னமே அதிகம்! ...பைரவி என் உசிர்! எந்தன் இரசிகை, விவாதக் காரி, விளையாட்டும் காரி சில்மிசம் சிருங்காரம்... அவள் சிரிப்புச் சில்லறை போல் சிதறும் என் அகந்தை உடைத்துச், சிறுமை திருத்திச…

    • 9 replies
    • 1.6k views
  10. Started by Rasikai,

    தை திருநாளா? தை திரு நாளா? இல்லை.. எங்கள் வாழ்வதை ஊசியாய் .. சிங்களம் தைக்கின்ற போதில் வரும் ஒரு நாளா! பானையில் பால் பொங்கி வழிந்தால் ... உழவர் திருநாள் என்கிறோம்... இதயம் எல்லாம் இரத்தம் வழியும் ஒரு நாளாய் போனதே.. எம் வாழ்வு.... இந்நாளதில்... இதை என்ன பெயர் கொண்டு சொல்லியழைப்போம்?? மனங்கள் பொங்கி வழியும் நாளில் ............... பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா? சிறகில் தீ பிடித்தாலும் ... அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்! வருக தை பொங்கலே...!! அனைத்து கள உறவுகளுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

    • 9 replies
    • 2.1k views
  11. தை - திருமகளே வருக வருக .... தைரியம் சிறக்க வருக வருக .... தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக .... தைத்தியரை அழிக்க வருக வருக ....!!! முற்றத்தில் கோலமிட்டு ..... முக் - கல் அடுப்பு வைத்து .... முத்திரி விளக்கேற்றி ..... முக்குணத்தை அழிக்க ... முக்காலமும் சிறப்பாக அமைய .... கரம் கூப்பி அழைக்கிறேன் தை- திருமகளே வருக வருக ....!!! உன்னையே உயிராய் ..... உன்னையே தொழிலாய் .... உன்னையே மூச்சாய் வாழும் .... உன்னையே தெய்வமாய் ..... உழைத்து வாழும் உழவு விவசாயம்... செழித்து வாழ என் உயிர் தாயே .... தை- திருமகளே வருக வருக ....!!! ^ பொங்கல் கவிதை கவிப்புயல் இனியவன் 2018 . 01 .14

  12. வடக்கால உள்ள காணியை அடகுக்கு விட்டு ஊர் சாகட்டும் நீ பத்திரமா.. வடக்கை விட்டு ஓடு என்று ஆத்தா விரட்டி அடிக்க.. ஓடி வந்து.. சிங்களக் குகையினில் சிங்கிள் றூமில.. பதுங்கிக் கிடந்து.. எனக்கு முதலாவே செல்லடிக்க முதலே 83 யூலையோட.. வசதியா தாம் வாழ என்று இருந்த இரண்டு மாடி வீட்டை வித்துப் போட்டு.. மேற்கால ஓடி வந்த குடும்பத்தில வந்த ஒருத்தனை செற்றப் பண்ணி.. நானும் மங்கை என்று வந்து செற்றிலாகி இப்ப நாலு குழந்தை பெத்து அதுகளும் குழந்தை பெறும் நிலைக்கு வந்திட்டுதுகள்..! ஒரு நாள் தற்செயலா.. கண்ணாடி முன்னாடி நிதானமா நிற்க.. தலைமுடி ஓரமா டை பூசாமல் விட்டதால தெரிஞ்ச அந்த நரைக்கும் வெள்ளை முடிகள்... ஊரில.. வெத்தில…

  13. எதிர்கொள்ளல் ஒன்றின் எதிர்பார்ப்புகள் சிதைந்துபோகாமலிருக்க நிகழ்வுகளின் அழைப்பிதழ்களை எரியூட்டியபின் , நினைக்கப்படுதல் நிகழாதிருக்க காலவோலையில் தடங்களை அழித்துக்கொண்டிருக்கிறேன், இயல்புகள் கடந்த இருத்தலுக்கான எழுச்சிதேடி இயங்குதல் தொடர்கையில் _சிந்தும் உணர்வுநீரில் உப்புக்கரிக்கிறது . எல்லாம் கடந்து புன்னகையோடு ஒரு பிரிதலை யாசிக்கிறேன் ............................... உள்ளுணர்வுகளின் முரண்களால் கிழிக்கப்படும் காலவாழ்வில் , எல்லாம் சாத்தியமாகாத சம்பவங்களாய் கடந்துபோகிறது . சடங்குகளாய் தொடர்ந்து நீழ்கிறது .

  14. ஆக்கிரமிப்பு நிலங்கள் .... மீளளிப்பு செய்யப்படுகின்றன .... ஆவலுடன் சென்ற மக்களின் ... திகைப்பும் திண்டாட்டமும் ..!!! எது என் குடியிருப்பு ...? எது எங்கள் சுடுகாடு ...?

  15. உன் மெளனம் கூட ஆசைப்படுகிறது நீ பேசுவதைப் பார்த்து கவிதையாக வேண்டுமென்று * பூச் செடிக்கு பக்கத்தில் வைத்து உன்னை படம் எடுத்ததில் உன்னைப் பறித்த பூவின் புன்னகை தெரிகிறது * இரவு வந்தால் போதும் கவிதை நேரத்துக்காய் காத்துக் கிடக்கிறேன் வானொலிக்கு பக்கத்தில் அல்ல என் கைபேசிக்கு பக்கத்தில் * உனக்கு பிடித்த எல்லாம் எனக்குப் பிடிக்கும் உனக்கு பிடித்த கவிஞர்களைத் தவிர * வாசல் அழகுக்காய் கோலம் போடுகிறாய் நீ கோலம் போடும் வரைதான் அழகாக தெரிகிறது வாசல் -யாழ்_அகத்தியன்

    • 3 replies
    • 1.2k views
  16. மண்ணின் அந்தரங்க இருளில் புணர்ந்திருக்கும் மரத்தின் வேர்களைப்போல் ஆட்சிப்பீடம் சேர்ந்தே இருக்க காற்றின் உதைப்பில் முட்டுண்டு தான் முறிந்ததென்றால் மரம் அழியும் என எண்ணி தன்னை தானே முறிக்கும் கிளைகளைப் போல் மண்தின்னும் மலமாகுறான் தொண்டன்

  17. ஈழம் என் உயிர் என்பார் தடைகள் உடைத்து தலைவன் வழியில் ஈழம் காண்போம் என்பார் வீர வசனம் பேசித் தம்மை விசுவாசி என்றும் கூறி வீணே காலத்தைக் கழிக்கின்றார் உணவின்றி மக்கள் உழல்கையில் உள்ளம் இரங்கார் ஒருபிடி உணவும் கூட உண்மையில் கொடார் கள்ளமனைத்தும் தம் உள்ளம் கொண்டு காப்பாற்றுவார் போல் மாற்றார் முன் கதறித் துடித்து நாடகமும் ஆடுவார் தன்னைத்த் தானே பீற்றித் தண்டோராப் போட்டுத் தம்பட்டம் அடித்து தானே தன்மானத் தமிழன் என்றுவேறு எக்காளமிடுவார் வார்த்தைகளில் வண்ணம் வைத்து வருவோரை மயக்கி வக்கணையாய்ப் பேசி வலைவீசி வார்த்தைகளைக் கடன் வாங்கிடுவார் இத்தனை கேடு கேட்ட தமிழனை தெரிந்தும் போற்றுவோர் மனிதம் தெரியாத மூடர்களே உணர்ந்தும் உறவு கொள்வோர் உலகறியா மூடர்கள் …

  18. இன்றைய நட்சத்திரமாக இளைஞனை தமிழ்சிறி பதிந்ததும், முன்பொருநாள் யாழ்கள உறவுகளிடம் இளைஞன் பெரிதும் சிறிதுமான இரு மேசை விளக்குகள் பேசுவதாக ஒரு சம்பாசனை கேட்டிருந்தார். அப்ப எழுதிய கவிதை போன்ற சம்பாசனை. 01/08/2007 எழுதியது. இன்று இணைப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. தொப்புள்கொடியுறவு. பெரிய மேசை விளக்கு தாய்! சிறிய மேசை விளக்கு சேய்! குழந்தை: ம்.ம்.ம்ம்மா, ம்.ம்.மா, தாய் : என்ன கண்ணே பசிக்கிறதா; குழந்தை; தெரியவில்லையம்மா, தாய் : ஓம் எனக்குத் தெரியும் உனக்குப் பசி என்று, குழந்தை: அதற்கு என்ன செய்ய வேண்டும் அம்மா, தாய் : இதோ! எனது மார்பில் சுரக்கும் பாலைக் குடி , குழந்தை : எப்படி எனது தொப்பிளாலா, தாய் : இல்லை ! உனது வாயால், குழந்தை : அம்மா! முன்…

  19. கசிந்துகொண்டிருக்கிறது தொலைக்கப்பட்ட அன்பின் மீதான கடைசி துளிகளும். முதல் சில நாட்களைப்போலவே இல்லை இந்த பிந்திய நாட்கள், அதீதமான அரவணைப்பை வெறுத்தொதுக்கும் மழலையொன்றின் பக்குவமற்ற நாட்களாய் கடந்துபோனது முந்தைய சில நாட்கள். எல்லை நோக்கி வளர்ந்துகொண்டிருக்கும் மரணமொன்றை, எல்லைகடந்து வளர்ந்துகொண்டிருக்கும் வாழ்தலொன்றை, உணர்த்தியழுதத்துகின்றன இந்த நாட்கள். தொலைக்கப்பட்ட அன்பு அழிந்துபோய்விடுவதில்லை - அது வேர்களில் அடங்கிக்கிடக்கிறது பின் அதுவே இலைநுனிகளில் நீராய் திரண்டும் வருகிறது. யாரவது ஒருவருடைய கண்களை பார்க்கும் போதும், யாராவதொருவர் முகத்தினை தடவும் போதும், யாரவது ஒருவர் கை அசைக்கும் போதும். தொலைக்கப்பட்ட அன்பு மிக கனதிய…

  20. உன்னை நினைக்க மறந்த இரவொன்றில் நிலவின் துணை கொண்டு எழுதிய கவிதை இது தயவு செய்து வாசித்துவிடாதே உன் கண்ணீரை ஏந்தினால் என் கவிதை இறந்துவிடும் காலங்கள் கரைந்தாலும் கரை சேராத நதியாய் தேங்கியபடியே கிடக்கிறது என் காதல் உன்னால் காதல் எனும் வானத்தில் நாமிருவரும் பறந்து திரிந்த காலங்களை எண்ணியபடியே சிறகுகள் இன்றி தனிமரமாய் இன்று நான் என் காதல் உன்னை மட்டும் காதலிக்க கற்றுத்தரவில்லை உன்னைத் தவிர யாரையும் காதலிக்க கூடாது என்பதையும்தான் கற்றுத்தந்தது உன் இரவுகளின் தாலாட்டு எது என்பதை நானறியேன் ஆனால் என் ஒவ்வொரு விடியலின் ஓசையும் என் கவிக்குழந்தையின் அழுகுரல்தான் உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை நீ என்னோடு இருந்தபோது ஒவ்வொர…

  21. "அந்த பிள்ளையைத் தெரியுமாடா? " நண்பனிடம் கேட்டேன் "நந்தினியைத்தானே சொல்கிறாய்? பாவப்பட்ட குடும்பமடா ஒரு அண்ணன் வீரச்சாவு அக்கா போராளியாய் போய் இறுதி யுத்தத்தோடே இல்லாமல் போய் விட்டாள் இவள் மட்டும் தான்டா மிச்சமாயிருந்தாள் தகப்பனைக்கூட இந்தியாமி தனங்கிளப்பில் வைத்து சுட்டுட்டான் இவளையும் நாய்கள் விடவில்லையே" ஈரவிழிகளோடு சொல்லி முடித்தான் நண்பன் இவளுக்கு ஏதோ நடந்திருக்கிறது இல்லையென்றால் ஏனந்த பிஞ்சு தன்னையே கருக்கிக் கொண்டிருக்கும் நண்பனுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் நாலு வீடு தள்ளித்தானே இருக்கிறான் "என்னடா நடந்தது அவளுக்கு?" "எதையடா சொல்வது? எப்படியடா சொல்வது? எங்கட தெருவின் செல்லப்பிள்ளை அவள் அழகாய் இருப்பாள் என்ட மூத்த…

    • 2 replies
    • 430 views
  22. தொலைந்த மனிதனை தேடிக்கொள்... உன்னுடைய பாதைகளை நீயே அமைத்துக்கொள் அடுத்தவன் பாதைகளில் ஆசைப்படாதே.. உன்னுடைய சிலுவைகளை நீயே சுமந்துகொள் அடுத்தவன் தோளுக்கு அதிகாரமிடாதே.. உன்னுடைய செடிகளை நீயே வளர்த்துக்கொள் அடுத்தவன் தோட்டத்தில் பூக்களைப்பறிக்காதே.. உன்னுடைய குறைகளை நீயே சொறிந்துகொள் அடுத்தவன் குறைகளை சொறிய நினைக்காதே.. உன்னுடையா மதத்தில் உண்மகளை தேடிச்செல் அடுத்தவன் மதத்தில் ஓட்டைகளைத்தேடாதே.. உன்னையே நீ தேடி உண்மைகளைக்கண்டு உன்னுள் தொலைந்த மனிதனை மீட்டுக்கொள்

  23. மின்னல்கள் கூட இடைபிரிந்து திசைவழியிறங்கி உனை தேடுகின்றன- என் தொலைந்து போன காதலை மீட்டுக்கொடுப்பதற்காய். - from my blog -

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.