கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
தேசத்தின் புன்னகை - இன்குலாப் மறுகரையில் தேற்றுதலின் தணியாத விசும்பல் கேட்கும் மரத்துப் போகாத செவிகளில். மாவீரர் விரும்பாத ஒப்பாரி காலம் காலமாய் மக்களின் மனசிலிருக்கிறது. இன்றென் சொல்லும் கண்ணீரில் நனையட்டும்! பகைநடந்ததற்குச் சாட்சியங்களான கருகிய பனை தென்னை ஊடாக நாங்களும் நடந்திருந்தோம். சிதைந்து கிடந்த டாங்கியும் சிதறிக் கிடந்த ராக்கெட் கூடுளும் பிணமாய் மிதக்கும் எதிரியின் கப்பலும் முடிந்த யுத்தத்தின் மிச்சங்களாகுமோ? கண்ணி வெடிகளுக்குப் பக்கத்திலேயே புதைந்து கிடக்கும் விதைகள் பசுமையாய் முளைவிடும் என்ற எல்லோருக்குமான எனது நம்பிக்கையும் துளிர்க்குமோ? கருகுமோ? உப்பு மிளகாய் அரிசி மருந்துகூட ஆயுதமாய்த் தடைப்பட்ட …
-
- 0 replies
- 989 views
-
-
வழுவழுப்பான யுத்த வீதியின் சலனமில்லா சதுரங்களில் சாம்ராஜ்ய சண்டைகளில் சமத்துவம் தேடி.......... கறுப்பன் வீழ்த்திய வெள்ளையனின் சிரசுகள் களத்தின் ஒரத்தில் கதியின்றி.... துண்டாடிய சிரசுகளில் சிப்பாய்க்கு சில்லறைகள். அரசிக்கு ஏன் ஆயிரங்கள் கட்டங்களில் முன்னேறி வெள்ளை ராஜாவின் கதைமுடித்து களம் இப்போ கறுப்பர் கையில் அளிவிலா பலம் பெற்றும் அரசனவன் போனபின்பு ஏன் ஆளாது அடங்கிப்போனாள் அரசியவள் ஆட்டம் ஓய்ந்து போச்சு மேசை மீதான வன்முறைகள் பலகை மேல் மரண வாடை உணர்வதில்லை குப்புறக் கவிழ்ந்த முகங்கள். …
-
-
- 1 reply
- 989 views
- 1 follower
-
-
அழகிய கனவு.....! கிழைகளைக் குடையக் காற்றுத் தரையில் மிதக்கிறது இலைகள். மஞ்சள் இலைகளின் அழகு போய் மார்களி வருதல் சாத்தியமாய் மரங்கள் வெறித்துப் போகிறது. குளிர்கால ஆரம்பம் மந்தப் பொழுதாக மழையிருள் வானமும் மாரியின் வருகையும் மனசுக்குள் இதமாயில்லை... வசந்தம் வரும்வரை இரவினி நிரந்தரம் ஒளிக்குமிழின் துணையின்றி இந்த நாட்கள் விடியாது. நள்ளிரவும் நாய்களின் ஊளையுமற்ற பின்னிரவில் எழுந்து வேலைக்கு ஓடும் அவசரம் இவ்விரவுகள் மிகக்கொடுமையானவை. கைவிறைக்க கால்கள் நடுங்கும் உறைபனிக் காலத்திலும் ஓய்வில்லை. பணமரமாய் நான் பெற்றவர்க்கும் மற்றவர்க்கும் வெளிநாடு மிகவும் அழகான கனவு. கழுவுதலும் துடைத்தலும் கோப…
-
- 2 replies
- 989 views
-
-
அணையாது விடுதலைத்தீ வஞ்சகர் சிங்களவர் வார்த்தையில் நம்பி-எங்கள் முந்தையர் முடங்கியதால்-எம் தந்தையும் தாயும்-எதிரி சிந்தையில் சிறியரானார் நெஞ்சிலே நெருப்பெடுத்து வஞ்சகர் இருப்பழிக்க குஞ்சுடன் குருமன்களும் வெஞ்சினம் கொண்டெழுந்து வேட்கையில் குதித்திருந்தால் அஞ்சக என்றெழுந்து அன்னையின் அடிமை நிலை இன்றுடன் தொலைந்ததென்று கன்றுடன் தாய்ப்பசுவும் களத்திலே குதித்திருந்தால் இன்று நாம் இவ்வுலகில் இறைமையுள்ள நாடாகி சந்திரன் தாண்டி-பல சாதனை புரிந்திருப்போம் கன்றுடன் தாயையும் கதறிய சேயையும் பிஞ்சுடன் பூவையும் கெஞ்சிய கிழடையும் நெஞ்சிலே ஈரமில்லா நெறிகெட்ட சிங்களம் கொன்றிடத் துடித்தது-முன் கொடி கொண்ட தமிழினம் என்…
-
- 3 replies
- 988 views
-
-
முள்ளிவாய்க்கால் ஒரு நீண்ட தவத்தை உடைத்தெறிந்து நெடிய பயணத்தின் முடிவுரை எழுதிய தீயினால் வேகாமல் பொய்யினால் வெந்த மண் ஆயிரம் ஆயிரம் கனவுகளை கருக்கியெறிந்த மண் அன்னிய சக்திகளின் பசிக்கு இரையாகி பட்டினியில் வெந்த மண் வேரோடு விழுதுகளையே வீசியெறிந்த மண் வரலாற்றில் தன்மீது கறை படித்த மண் எம் கனவெல்லாம் தன்னுள்ளே கரைத்தெறிநத மண்
-
- 1 reply
- 988 views
-
-
மாவீரரே!! உயிரிலும் மானம் பெரிதென இவ் உலகிற்கு உணர்த்தி நின்றார் செந் தமிழனின் வீரத்தை இந்தப் பாரிலே உயர்த்தி நின்றார்! நெஞ்சிலே நஞ்சினைத் தாங்கியே எம்மவர் மண்ணுக்கு வெளிச்சம் தந்தார் அன்னை மண்ணுக்கு தன்னலம் பாராமல் சாவையே அணைத்து வென்றார்! நல்தலைவன் வழியினில் சென்றுமே நன் நீதியைக் காட்டி நின்றார் வான் என்ன! கடல் என்ன! களத்திலும் கூட வீரத்தை காட்டி நின்றார்! வாழ்க்கையின் தத்துவம் காட்டிய வீரரே உம்மை நினைக்கவே நாளெதற்கு? மறைந்தாலும் மனதினில் நிறைந்திட்ட நீங்களே விடியலில் ஒளிர் விளக்கு! மறப்போமோ உங்களை எங்களின்வீரரே இது விடிகின்ற தருணம் அல்லோ? வீசும் காற்றது என்றுமே உரைப்பது வீரச் சோதரர் பேரை அன்றோ? மண்ணே! மானம்…
-
- 2 replies
- 988 views
-
-
உன்னிடம் இல்லாதபோதும் நட்பு,சொந்தஞ் சொல்லி வருபவருக்கு கேட்பதைக் கொடுத்து உறவைக் காத்துவிடு. உனது „கடன் பட்ட நெஞ்சு“ கலங்கிக் கரையும்போது உன்னை விட்டகன்ற தடங்களின் பின்னே வெறித்துப் பார்ப்பதைத்தவிர உன்னால் என்ன செய்ய முடியும்? இருபது ஆண்டுக்கு முன் தங்கையின் „பட்டப்படிப்பு வெற்றிக்கு“ (ப்) பரிசு அளிக்க கவிஞ நண்பனுக்கு நீ கடன் கொடுத்தாய், சில ஆயிரம்டொச்சு மார்க்கோடு அவனது கவிதை முகமும் கலைந்துபோச்சு! வேலையிழப்பு நஷ்ட ஈட்டுப் பணத்தைக் கண்டபோது கை நீட்டியவர்களை நீ மறக்கவில்லை! நீட்டிய கையை நிறைத்தே உனது அந்த 24000 யூரோவும் கரைந்து காணாமற் போச்சு! அண்ணனுக்குத் தம்பிக்கு,மாமாவுக்கு மச்சாளுக்கென… இப்போ, உனக்குக் கடன் தந்த …
-
- 0 replies
- 988 views
-
-
நான் உன்னை நினைப்பதை மறந்துவிடப் போவதில்லை அது என்னை மறக்கப் பார்க்கிறது * என் எதிரியல்லக் காதல் அனாலும் சுட்டுக் கொண்டேன் அதன் எதிரியால் சாகக்கூடாது என்பதால் * நீதான் அடைகாக்கிறாய் என்பதற்காய் என் காதல் முட்டையை உடைத்துவிடாதே நானாக உடைத்து வெளிவரும் வரை * அவள் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து தொலைத்த பாதையில்_ நான் என்னைத் தேடி எடுத்துக் கொண்டேன் அவளை நினைத்து வாழ * என்னை மறப்பதற்காய் நான் இறந்து விட்டதாக நினைத்து விடாதே ஏனெனில் நீ வாழ்ந்து கொண்டிருப்பது யுத்த பூமியில் -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 987 views
-
-
-
- 4 replies
- 987 views
-
-
உயிர்கள் அற்ற உடல்களோடு உறங்கி இருக்கிறேன் பிணங்கள் எரியும் வெளிச்சத்தில் நிலாரொட்டி உண்டிருக்கிறேன் குண்டு மழைக்குள்ளும் குடையோடு இடம்பெயர்ந்திருக்கிறேன் அசைக்கமுடியாத ஆணிவேரின் உச்சியிலிருந்து சுனாமியால் தப்பியிருக்கிறேன் இருபத்தி நான்கு மாதங்கள் இருட்டறையில் சிவராத்திரி மேளமாய் அடிவாங்கியிருக்கிறேன் பெயர் தெரியாத பனிமலை தேசத்தில் பிணமாய் உருண்டிருக்கிறேன் கைப்பாசை உதவியோடு ஐந்துநாள் பட்டினியை பிச்சை எடுத்து முடித்திருக்கிறேன் விழுந்தால் மீனுக்கு நான் பாய்ந்தால் எனக்கு நான் தெரிந்தும் கப்பல்விட்டு கப்பல் பாய்ந்திருக்கிறேன் ஆனால்..... என்னை மூச்சுவிட்டுக் கொண்டே முயற்சிக்காமல் இருக்கச் சொன்னால் மூ…
-
- 3 replies
- 987 views
-
-
பாரதி கண்ட யாழ்ப்பாணத்துச் சுவாமி.. கோவிந்த சாமி புகழ் சிறிது சொன்னேன்; குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான், தேவிபதம் மறவாத தீர ஞானி, சிதம்பரத்து நடராக மூர்த்தி யாவான் பாவியரை கரையேற்றும் ஞானத் தோணி, பரமபத வாயிலேனும் பார்வை யாளன்; காவிவளர் தடங்களிளே மீன்கள் பாயும் கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன். தங்கதாற் பதுமைசெய்தும் இரத லிங்கம் சமைத்துமவற் றினிலீசன் தாளை போற்றும் துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்; தோழரே!எந்நாளும் எனக்கு பார்மேல் மங்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும் வானவர்கோன்,யாழ்ப்பாணத் தீசன் தன்னைச் சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு சரணடைந்தால் அதுகண்டீர் சர்வ சித்தி. குவளைக் கண்ணன் புகழ் யாழ்பாணத் தையனை…
-
- 0 replies
- 986 views
-
-
தமிழ் ஈழக் காற்றே - புலம்பெயர் தமிழர்களின் வலியை பதிவு செய்த வைரமுத்து.! சென்னை: இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத மனிதத் துயரம் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை. உடலோ வெளிநாட்டில்; உயிரோ தாய்நாட்டில். புலம்பெயர் மக்களின் புலம்பலாக தமிழ் ஈழக் காற்றே என்ற பாடலை கவிபேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இந்த பாடலை விடியோவாக தயாரித்து வைரமுத்து வெளியிட்டுள்ளார். இப்பாடலுக்கு இசையரசன் இசைமைத்துள்ளார். பாடலில் ஈழத்தில் தமிழ் இனத்திற்கு நடந்த அநீதி குறித்து நெருப்பை போல் வரிகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார் வைரமுத்து. ஈழத்தின் வன்னிக்காடுகளையும், வல்வெட்டித்துறையயையும், முல்லைத் தீவையும் நந்திக்கடலையும்ட, நல்லூர் முருகனையும் குறிப்பிட்டு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி உள…
-
- 4 replies
- 986 views
-
-
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்61-ம் ஆண்டு பிறந்தநாள்:26.11.2015வாழ்த்து-----------இயற்கை எனது நண்பன்...!வாழ்க்கை எனது தத்துவாசிரியன்...!வரலாறு எனது வழிகாட்டி...!மொழிந்தாய் முன்னாளில் தெளிந்தேதறிகெட்ட தமிழர் தமக்கோஅனைத்து மானாய் நீயே!வாழ்க நின்தவம் பல்லாண்டு!!அறம் அறிவு வீரம்சேர்ந் ததோர் வடிவாய்...ஈனம்சார் உலகில் மானம்சார்தலைவன்! தம்பியு மானாய்!!தமிழ்வீர மரபின் விளைவாய்போருலகில் புதுமை கண்டுஉலகில் தமிழர் முகமானாய்!வாழ்க நின்வீரம் பல்லாண்டு!!பெளத்த நெறிவிடுத்து மகாவம்சகதைப்படித்த மொக்குச் சிங்களன்பகைமுடித்து ஈழம் வென்றெடுத்துஆளவா தமிழி னத்தைபுவி போற்றவா நம்குலத்தை!வாழ்க நின்புகழ் பல்லாண்டு!!-----------------------------------இவண்: வன்னிவேலன்
-
- 0 replies
- 986 views
-
-
கண்கள் அழகிய காதலியைத் தேடியலைகிறது. அழகிய பெண் இவள் அழகியா காமக் காதலி. அவள் அழகென்பதற்கல்ல, அவளை பார்க்கின்றேன். அவள் என் காதலை ஏற்க்க மறுத்த காதலியை விட அழ்காய் இருப்ப்தால். இது இயற்கையாகவே இருக்கிறது. காதலியை மறப்பதற்கு அவைலை விட அழகிய காதலி தேவைப்படுகிறது. அவளுக்கு இளந்துவிட்டோமே என்ற உணர்வு உண்டாக்குவதற்கு. நினைவுகளை சரிசெய்து கொள்ள ஒரு சதி. இயற்க்கைக்கு அற்ப்பாட்ட மனஉறுதி தேவைபடுகிறது. கற்பனையின் நினைவை கொள்வத்ற்கு ஆயூதம் தா மனமே www.tamil4u.wordpress.com உன்னை மறப்பதற்கு முயற்சிகள் படுதோல்விகலாகுதடி உன்னை மறப்பதற்கு முயற்சிகள் படுதோல்விகலாகுதடி. மனம் துடிக்கிறது மறப்பதன்ற சிந்தை மூளையில் தோன்றமுன். உன்னை மீண்டும் சந்திக்க ஆர்வம் கொள்லுது…
-
- 1 reply
- 985 views
-
-
எங்கள் விடுதலையின் பொருளறியும் கண்முன் விரிந்து கனவுவெளியெங்கும் விதைந்து கிடக்கிற எங்கள் மீதான வன்மங்கள் ஒருநாள் ஓர்மமாய் எழும். அன்று எங்கள் தீ விரல்கள் இப்பூமியெங்கும் தணலேற்றும்….. தமிழச்சிகளின் மார்பையறுத்தவனும் பிறப்புறுப்பை மிதித்தவனும் மரணத்தின் வலியறியும் விதியெழுதும் நாளின் பொழுதறியும் - எங்கள் விடுதலையின் பொருளறியும்.... 12.03.2012 (நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்போராளிகளின் ஒளிப்படங்கள் பார்த்த வலியின் வெளிப்பாடாய் இக்கவிதை)
-
- 3 replies
- 984 views
-
-
வள்ளுவன் காதல் 8 அடுப்படியில் நிற்கின்றாள் அரம்பை போல்வாள் ஆசுகவி வாசுகியாள் பின்னே வந்தான் இடுப்பையணைத்தவள் பிடரி தனை நெருங்கி இதழ் பதித்தான் சிலிர்த்தவளோ என்ன நீங்கள்? திடுக்கிட்டுப் போய்விட்டேன் தள்ளிப் போங்கள் தீக்கொழுந்து சுட்டுவிடும் என்று சொல்லி வெடுக்கென்று விலகிவிட முயன்றாள் ஆனால் விட்டுவிடாதவளையவன் பற்றிக்கொண்டான். கிட்டநின்றால் உன்னுடலின் தண்மையென்னைக் கிறங்க வைக்கும் விலகாதே என்னைவிட்டு எட்ட நின்றால் தான் எனக்குத் தீ போல் காய்வாய் என்னுயிரே என்றவளை முத்தமிட்டு கட்டியணைத்துத் தன்றன் பாசமெல்லாம் காட்டியவள் சிலிர்த்திடவே செந்நாப்போதன் கொட்டுகிறான் அன்பையெலாம் குளிர்ந்தாள் அங்கோர் குறள் பிறந்ததனை இங்கு குறித்தேன் காணீர்: …
-
- 0 replies
- 984 views
-
-
எம் தேசத்தின் விடியலுக்காக வித்தான வீர மறவர்களே..! கல்லறை விட்டு எழுந்து வாருங்கள்.. கரிகாலனின் வழியில் சென்று போர்க் களங்களில் எதிரியை வீழ்த்தி சந்தன பேழைக்குள் உறங்கும் எங்கள் மாவீரர்களே எழுந்து வாருங்கள்.. புதிய சரித்திரம் படைப்போம் உயிர்த்து விடுங்கள்… அன்னியரின் அடிமை விலங்கை உடைத்து எரிமலையாக எழுந்த சூரிய புதல்வர்களே தமிழீழ மண்ணில் உயிர்த்து விடுங்கள் .. கண்கள் மூடி உறங்கும் எங்கள் தோழனே கல்லறையை விட்டு வெளியே வாருங்களேன்… கார்த்திகை தீபம் ஏற்றும் வேளையிலே எங்கள் உள்ளம் துடித்து அழுகின்றோம் கார்த்திகை பூக்களே எழுந்து வாருங்கள்…. ஈழத்தின் வித்துக்களாய் தமிழீழத்தின் காவற் தெய்வங்களாய் தேசிய தலைவனின் பிள்ளைகளாய் .. தமிழீழம்தா…
-
- 1 reply
- 984 views
-
-
இறந்த காலத்தை மறப்பதற்கான கருவி கவிதை: தமிழ்நதி - ஓவியம்: ரமணன் அரசே, நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை! உங்கள் கட்டளைப்படி கைகளை உயர்த்தியபடி அம்மணமாக வெளியேறிய பாதை செப்பனிடப்பட்டுவிட்டது துருத்தி நின்ற எலும்புகளை சதை வளர்ந்து மூடிவிட்டது மண்மேடுகளினுள்ளிருந்து `வா’வெனக் கை அசைத்த உடுப்புகளும் உக்கிப்போயின துருப்பிடித்த தகரத்தால் தொப்பூள்கொடி அறுக்கப்பட்ட குழந்தை ஒன்பது வயதுச் சிறுவனாகி மீண்டும் பள்ளிக்கூடமாகிவிட்ட அகதி முகாமில் படிக்கச் செல்கிறான் ‘உலகின் மிக நீண்ட கழிப்பறை’யாகவிருந்த கடற்கரையில் சூள்விளக்குகள் மினுமினுக்க மீன்பிடி வள்ளங்கள் தளும்பித் திரிகின்றன இன்னமும் செப்பனிடப்படாத வீடுகளுள் தங்கள் …
-
- 0 replies
- 984 views
-
-
கு.முத்துக்குமாரனுக்கு ஈழத்தமிழரின் வீரவணக்கம்... (முத்துக்குமரனின் வீரவணக்க மேடையில் வினியோகிக்கப்பட்ட ஒரு துண்டுப்பிரசுரம்) ஈழத்தமிழர்களின் விடிவிற்காய் ஈழமைந்தர்கள் குருதி சிந்தி இலங்கையில் இரத்த ஆறு பெருக்கெடுத்தோடி இன்னுயிர்கள் பல வேள்வியாகி விட்டன உன் உயிர் தியாகம் இன்று உலகையே எட்டிப்பார்க்க வைத்திருக்கிறது. உனக்காக ஒரு கவிதை எழுத - நம் பேனாக்களுக்கு பலமில்லை - ஏனெனில் எம் உணர்வுகள் என்றோ மரணித்து விட்டன. ஈழத்தமிழர்களெல்லாம் இன்று நடைப்பிணங்கள் கண்ணீரில் எழுந்த பல புரட்சிகள் காற்றோடு காற்றாய் பறந்து விட்டன மறத்தமிழனாய் இன்று - நீ ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில்.... ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களிலிருந்து - முத்துக்குமாரனே …
-
- 0 replies
- 984 views
-
-
நானாக வரப்போவதில்லை... எல்லோரையும்விட உன்னையதிகம் நேசித்திருப்பினும், என்கைப்பிடித்தபடி கூடவே வரும் உரிமையை உனக்கு கொடுத்தபின்னும் மனமுறித்துப் போதலேன்பது நீ நிகழ்த்தியது. எனவே, நானாக வரப்போவதில்லை. உன் பிரிவையிட்டு நான் வருந்தியதைவிட, நம் பிரிவையிட்டு அதிகம் வருந்தியிருக்கும் காதல். உன்னோடினிப் பேசுவதில்லை என்கிற பொல்லாவிரதம் முறிக்க இந்த பின்னிரவுகள் பிரயத்தனப்படுவதை நீ அறியமாட்டாய். பரவாயில்லை.... வழமைபோல இப்போதும் நீ என்னை திமிர் பிடித்தவன் என்றே கடந்துபோகலாம். எனினும், நானாக வரப்போவதில்லை.
-
- 11 replies
- 983 views
-
-
புரியாத புரிதல். புரிதல்கள் இரண்டு தமக்குள் சந்தித்துக்கொண்டன தமக்குள் புரிந்துணர்வில்லாமலே பேசிக்கொள்ள ஆரம்பித்ததன புரிதல்கள்; புரிதல் பற்றியே புரிதல்கள் பற்றிய சர்ச்சை புரிதல்கள் இல்லாததால் புரிதல்களுக்குள் முற்றிக்கொண்டிருந்தது ஒரு புரிதல் தன் பங்குக்கு புரிதல் பற்றிய தன் விளக்கத்தினை பல்வேறுவகையில் புரியவைக்க முயற்சித்தது இன்னொரு புரிதலிடம் கொஞ்சமும் புரிந்துகொள்ள முடியாத இரண்டாம் புரிதல் முதலாம் புரிதலின் புரிதல் பற்றிய கொள்கைகளை புரிதல் இல்லாமலே விமர்சித்துக் கொண்டது. இந்த முறை புதிய கொள்கைகளோடு இரண்டாம் புரிதல் தன் பங்குக்கு ஆரம்பித்தது. முதலாம் புரிதலின் புரிதல் பற்றிய கொள்கைகள் எப்படி…
-
- 4 replies
- 983 views
-
-
Tamil civilian lives are in your hands the Diaspora pleaded in desperation; To Canada, US, Britain, EU, Norway and the UN; had you heeded with compassion; Twenty to forty thousand need not have perished in one sweep without identification; From a cruel regime’s and its ally’s fire power, chemical weaponry and ammunition. You have to act fast before it’s too late we wailed and protested; Lay down on highways, burnt our bodies, fasted, begged and prayed; In a tiny sliver of land our people are holding out, we cried, To their last vestige of freedom and dignity, still brave but petrified. You would have prevented a HOLOCAUST from happening; If you did…
-
- 0 replies
- 983 views
-
-
-
எம் தேசம் மீட்டெடுத்தே... ------------------------- உலகின் கண் திறக்க உயிரை விதையாக்கி பெரும் சபதம் எடுத்தவரே மரணம் வருகையிலும் தமிழர் வாழ்கவென உரைத்தவரே உம் பாதம் தொழக்கூட அருகதையற்றோனாய் அன்னியத் தெருக்களில் அலையும் நிலையினிலும் உங்களை மறவோமே! தலைவன் வாழுமிடம் தமது இருப்பிடமாம் என்று அணியம் செய்தவரே பெரும் மனிதப் புதிர்கள் ஐயா மானம் மண் மீட்பில் என வாழ்ந்த தமிழ் மானிடரே உங்கள் பாதம் தொழுகின்றோம்! எமக்கும் சேர்த்தே நீவிர் ஒரு தேசம் படைக்கவென உயிர் தானம் செய்தீரே உமைச் சுமக்க முடியவில்லை! உம் நினைவைச் சுமந்தபடி எம் தேசம் மீட்பதென உறுதி எடுக்கின்றோம்! வலியின் துயர் சுமந்து உம் நினைவின் கருச்சுமந்து எம் தேசம் மீட்ட…
-
- 4 replies
- 983 views
-
-
[size=3][size=4]அன்பு மகனுக்கு,[/size][/size] [size=3][size=4]உன் தந்தை எழுதுவது, இது நீண்ட கடிதம்தான் ஆனால்,[/size][/size] [size=3][size=4]இதுவே இறுதியாகலாம்.[/size][/size] [size=3][size=4]ஏனெனில் உன் நினைவுகள் நெஞ்சடைக்க இருமுறை சுவாசம் இழந்துவிட்டேன்.[/size][/size] [size=3][size=4]உனக்கு நேரமில்லை எனக்குத் தெரியும். முடியும்போது முடிந்தால் படி.[/size][/size] [size=3][size=4]இந்த நிலவினைப் பார்க்கும் போதெல்லாம் உன் ஞாபகம்தான்.[/size][/size] [size=3][size=4]மேலே தெரியும் உத்தரத்து வெண்ணிலவும், கயிற்றுக் கட்டிலும், நான் சொன்ன நட்சத்திரக் கதைகளும், உனக்கு நினைவிருக்குமோ என்னவோ...[/size][/size] [size=3]…
-
- 9 replies
- 982 views
-