Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by s.kumaar,

    தீயன தீய தீயும் தீயும் தூயன தூய தூய்மை தூயும் வேயன வேய வேயும் வேங்களம் பாயென புலி பாயும் பாரில் ஓயாத அலையாகி ஓங்காரமாய் ஒலிக்கும். திளைந்திருக்க தினவெடுக்கும் விளைந்திருக்க வினையெடுக்கும் முளைத்திருக்க மனமிருக்கும் உழைத்திருக்க உரமெடுக்கும். களைத்திருக்கும் பகையிருக்கும்.புலி நிலைத்திருக்க களம் விழைத்திருக்கும் வகை புலி இருக்க வாகை கிழக்கிருக்கும் நகை முகிழ்த்திருக்க நாமாய் நெகிழ்ந்திருப்போம். பிரபஞ்சம் பிரமித்து ஏற்ற பிரபாகரம் கொண்ட சாரம், பஞ்ச பூதம் வாழும் வரையும் தஞ்சமாக தரணியில் வாழும். ஏந்திய கொடி சிலிர்க்கும்,எல்லாள மண் துளிர்க்கும் சீந்திய குருதியெல்லாம் குவளயமாய் குதூகலிக்கும். தீயினை தீய்த்த தீரம்,தூய்வினை ஏற்றி ஏந…

    • 2 replies
    • 713 views
  2. நான் பூலோக கன்னியை பார்த்ததும் இல்லை தேவலோக தேவதையை கண்டதும் இல்லை இறம்பை ஊர்வசியை பார்த்ததும் இல்லை உன்னை பார்த்தேன் பெண்ணே நீதான் அந்த தேவதையோ? பிரம்மன் செதுக்கிய சிற்பமும் நீதானோ? விசுவாமித்திரனின் தவத்தை குலைத்தவளும் நீதானோ? இந்திரனை மயக்கிய மோகினியும் நீதானோ? மதுரை மீனாச்சி அம்மனும் நீதானோ? நெல்லை காந்திமதி தேவியும் நீதானோ? தஞ்சாவூர் சிற்பமும் நீதானோ பெண்ணே? என்னை நீயும் ஏன் நாடி வந்தாய்? என் இதயத்தை திருடவா நீயும் வாந்தாய்? வேண்டாம் பெண்ணே நீயும் என்னை விட்டுவிடு!!!

  3. அ. எலும்பும் தோலுமாக தூரத்தில் முட்கம்பி ஒனறில் அம்மா கொழுவப்பட்டிருந்தாள். இருவரது முகங்களையும் முட்கமபி கிழித்துத்கொண்டிருக்கிறது. மெலிந்த கைகள் முட்கம்பிகளுக்குள புகுந்து கலந்துகொண்டிருக்க நடுவில் இரண்டு முட்கம்பிச் சுருள்கள் ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கப்பட்டிருக்கிறது. அம்மா புன்னகையை இழந்துபோயிருக்கிறாள். தாழ்ந்து மறைந்துவிட்ட கண்களுக்குள் படிந்த புழுதியை கண்ணீர் கரைக்கிறது. காலத்தின் பெருந்துயர் நிரம்பி பிள்ளைகளுக்காக ஏங்கும் அம்மாக்கள் பலர் என் அம்மாவின் பின்னால் வரிசையில் நிற்கின்றனர். எல்லா அழுகைகளும் எல்லா விசாரிப்புக்களும் பரிமாறல்களின் துயரங்களும் ஓலைக்கொட்டிலினுள் நிரம்பிக்கொண்டிருக்கிறது. அம்மாவி…

  4. Started by இலக்கியன்,

    ஏன் படைத்தாய் இறைவா என்னை ஏன் படைத்தாய் ஏன் வதைத்தாய் இறைவா என்னை ஏன் வதைத்தாய் பாவி ஜீவனாக என்னை ஏன் இறைவா நீ படைத்தாய் பரலோகத்தில் ஏன் என்னை ஏற்கமறுத்தாய் ஏன் இந்த பூலோகத்தில் என்னைப் படைத்தாய் நான் உன்மீது கொண்ட அன்பினாலா என்னை உதைத்தாய் பாவம் அறியாத என்னை ஏன் இந்த சாத்தானின் பூமியில்படைத்தாய்

  5. Started by thamilmaran,

    அன்னதானம் தாய் மண்ணிலே குஞ்சும் குருமானும் குமரியும் கர்பிணியும் பெற்ரவளும் வழர்த்தவனும் உடல் அவயவங்களை இழந்தவர்களும் தள்ளாடும் வயோதிபமும்.......... தினம் தினம் கையிலே வெற்றுத் தட்டேந்தி ஒட்டிய வயிற்றுடன் ஒரு நேர உணவு கேட்டு தெருத்தெருவாய் கால் வலிக்க கை கடுக்க அலைந்து திரியும் போது............... புலத்திலே அன்னதானம் என்ற பெயரில் குப்பைத் தொட்டிகளுக்கும் கறுப்பு பைகளுக்கும் உணவு திணிக்கப்படுகின்றன!!!!!!!! அன்புடன் தமிழ்மாறன்

  6. கொஞ்சங் கொஞ்சமாய்க் கொள்ளை அடிக்கிறாள்! என் மனசுக்குள்ளே வெள்ளை அடிக்கிறாள்! வண்ணங்களை அள்ளித் தெளிக்கிறாள்! என் எண்ணங்களைக் கிள்ளி எடுக்கிறாள்! மீண்டுமொரு புயல் வருதா? உயிரோடு சாகடிக்க! இன்னுமொரு முறை வருதா? காதலித்துப் பேதலிக்க! நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - அதுபோல நொந்த மனசுக்கு ஒரு காதல்! தோல்விகள் தருவது... வலிகளை மட்டுமல்ல, நல்ல அனுபவங்களையும்தான்!! காதலித்துத்தான் கட்டுறாங்கள்...! பிறகேன்... சத்தம் போட்டு கத்துறாங்கள்?! காதலித்தபோது இருந்ததெல்லாம், கல்யாணத்தோடு காணாமல் போச்சா?! அவளைத் 'தேவதை' என்றவன்- இப்போது 'அவளே தேவையில்லை' என்கிறான்! இவளே என் வாழ்வென்றவன் - இனி வாழ வழியில்லையென பிரிகின்றான்! காதல் எங்கே போச்சுது? அதுக்கு என்ன ஆச்சுது? காத…

  7. [size=5]கார்த்திகை நாயகரே கைதொழுகின்றோம்[/size] கோரங்கள் கண்டு கொதித்து விடுதலைக் கொள்கைக்காகவே துடித்து வீட்டினை உறவினை மறந்து விடுதலை மண்காக்க விரைந்து நேரிய எம் தலைவன் பாதையில் நிமிர்ந்து களமாடி விழி தமூடி மண்மாதா மடிமீது துயில்கொள்ளும் கார்த்திகை நாயகரே – உமை கண்ணிலொற்றுகின்றோம் கைதொழுகின்றோம் - தூய தீபம் ஏற்றியே வணங்குகின்றோம்… கார்த்திகை மாதமது எம்மூரில் கனத்த மழை பொழியும் நீர் நிரம்பி நிலமெல்லாம் மெதுமையாய்த் தானிருக்கும்… பூச்சொரியும் மரங்களெல்லாம் புன்னகைத்துக் காத்திருக்கும் காற்று வந்து காதோரம் மாவீரரர் கதைபேசும்… ஆர்ப்பரிக்கும் அலைவந்து நுரை நுரையாய் தானிரைக்கும் நேற்றிருந்த வீரர் நினைவு தனைச்சுமந்து …

  8. கவிபாடும் புலவர்களே இங்கே வாருங்கள் யாழ் இணையம் மன்னனுக்கு வாழ்த்துப் பாடுங்கள் தமிழாலே அவனை நீங்கள் குளிப்பாட்டுங்கள் உங்கள் கவிதையலே அவனை நீங்கள் அலங்கரியுங்கள் கப்பம், வரி இல்லாத இந்த மன்னனை வாழ்த்துக்கூறுங்கள் கவிஞர்களை ஊக்குவிக்கும் இவன் பண்பை பாருங்கள் சங்ககாலப் புலவர்போல கவிகள் புனையுங்கள் வீரம் செறிந்த கவிகளையும் இந்தமன்னனுக்குப் பாடுங்கள் வீதி உலா வரும் மன்னன் அழகைப் பாருங்கள் குடிக்கள் குறைகளை எடுத்துக் கூறுங்கள் இந்த தமிழ் மன்னன் நீடூழி வாழ வழிகள் செய்யுங்கள்

  9. Started by nunavilan,

    கவிதை தேடி...? இரவின் சுவர்களில் வண்ணமின்றி - எழுதப் படுகின்றன நம் கனவுகள்.. எவனோ ஒருவன் வெறும் - இருட்டென்று சொல்லிவிட்டுப் போகிறானதை.. ----------- ஆம்; நிறையப் பேர் அப்படித் தான் இருக்கிறார்கள், நாம் எப்படி வேண்டாமென்று நினைக்கிறோமோ அப்படி; காரணம் நாமும் – அப்படியென்பதால்!! ----------- நட்பினால் - பெரிய தேச மாற்றம் எல்லாம் வேண்டாம்; நம் அருகாமை நண்பனை முதலில் காப்போம்; அவனிலிருந்து துவங்கும் – நம் தேசமாற்றம்!! ----------- விடியலின் அலாதியில் ஈரம் சேர்த்த கொடூரங்களால் சமூகத்தை குற்றவாளியெனக் கூறி தேடி அலைகிறது மனசு.. கள்ளச் சமூகம்; மனசிடம் பிடிபடுவதே இல்லை!! ----------- காலையில் ஒர…

    • 2 replies
    • 1.4k views
  10. Started by yaal_ahaththiyan,

    நீ வரும்வரை என்னை எவரும் கவனிப்பதில்லை உன்னோடு இருக்கையில் கவனிக்காததென்று எதுவும் இல்லை அதற்காகவாவது உன்னோடு கூட வரலாம் நான் * உன்னோடு பார்க்கவேண்டிய உலக அதிசயங்கள் எல்லாமே எங்கே என் அதிசயம் என்று கேக்கிறது அதற்கு எப்படித் தெரியும் உன்னை நான் சுற்றிச் சுற்றி ரசிப்பது * தினம் நீ சாய்ந்து தூங்கும் என் தோல்களை தடவித் தடவித்தான் என்னையே நான் தூங்க வைக்கிறேன் * உன்னை நிற்க வைத்து யார் புகைப்படம் எடுத்தது அதை பார்க்கும் போதெல்லாம் எனக்கல்லவா கால் வலிக்கிறது * நீங்க தூங்கவே மாட்டிங்களா என்கிறாய் நான் தூங்கினால் என்னை உன் மடியில் இருந்து தூக்கிவிடுவாயே -யாழ்_அகத்தியன்

    • 2 replies
    • 949 views
  11. ஈழப் போரில் ஆயுதப் படையலுடன் இந்தியம் தன் சிங்கள விவாசம் தலைக்கேற செய்து முடித்தது வன்னியில் ஓர் இன அழிப்பு முள்ளிவாய்க்கால் பேரவலம்..! முரசொலியில் கடன்வாங்கி எழுதித் தள்ளிய காகிதத்தாள்கள் போக.. பிரணாப் முகர்ஜி தந்த மந்திர ஆலோசனையில் முதுகு வலி பிறக்க.. மூன்று மணி நேர உண்ணா நோன்போடு ஈழம் காத்த கடமை செய்தது திராவிடம்..!! அங்கோ... ஈழமதில் ஆயிரம் ஆயிரமாய் அப்பாவிகள் உயிர் புதைகுழி ஏகின சிங்களப் பகைவர்களால்..! இன்றோ... ரெசோ ராசா என்ற விளம்பரங்கள்.. அண்ணலின் பெயர் வளர்க்க அண்ணலோ மீண்டும் அண்ணாவின் பெயரால் அடிக்கிறார் ஒரு குட்டிக்கரணம்... "பிரணாப் முகர்ஜிகே என் ஆதரவு" போடுகிறார் முழக்கம்..! …

  12. படைத்தவன் வாயடைத்துச் சென்றான். படைத்தவன் புூமி வந்தான் மனிதர்களைப் பார்த்து ஒரு வரம் தருகிறேன்.. கேளுங்கள் என்றான்.... ஆனால் ஒரு நிபந்தனை என்றான் உங்கள் அனைவரின் எண்ணமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றான் அனைவரும் சேர்ந்து சொன்னார்கள் நான் மட்டும் நல்லா இருக்க வேணும் படைத்தவன் வாயடைத்துச் சென்றான்.

    • 2 replies
    • 1.5k views
  13. மார்கழிப் பொழுதினில் பூக்குதோர் வாழ்வு மரியாளின் மடியிலே தவழ்கிறான் ஜேசு அடிமையின் விலங்கினை அறுத்திட பாலகன் அவதாரம் எடுத்து இங்கு வருவானே தூதன் தேவனின் வருகையால் தெருவெங்கும் பாட்டு தெரியுதோர் விளக்கு ஒன்று வானதில் பாரீர் கவிதையாய் எங்குமே பூக்களாய் பூக்குதே காலை புலர்கையில் தெரியுதோர் வெளிச்சம் பூக்களே பூக்களே புனிதனை பாடு புனித மரியாளின் மடியிலே பூக்களை தூவு குருவியும் குயில்களும் கூடியே பாடுது குறை ஒன்றும் இல்லை இனி மனிதர்க்கு என்றே வானத்து நிலவிலே பூக்களாய் சொரியுதே தேவன் வருகிறான் என்று வெளிச்சத்தை கொளுத்துதே கடலினுள் அலைகளும் கவிதைகள் எழுதுதே கர்த்தரின் வரவினை கரையிலே வரையுதே எங்குமே சமத்துவம் எல்லோர்க்கும…

  14. வசந்தன் மில்லராகி....! ----------------------------------- வசந்தன் மில்லராகி வரைந்தான் ஈழம்தேசம் தொலைத்தான் தாயின் வாசம் சுமந்தான் தாய்நாட்டின் வாசம் ஏற்றான் வெடிகுண்டின் பாரம்! விடியல் படைக்கும் முடிவாய் வெடித்தான் தமிழர் மனதுள் தடுத்தான் பெரும் அழிவின் வரவை பதித்தான் வீரச் சுவட்டை பார்த்தோம் வாழ் நாளிலன்று! வியந்தோம் விழிகள் உயர தொடர்ந்தார் களங்கள் சரிய நிலைத்தார் மனங்கள்தோறும் நிமிர்வோம் அவரீகத்தாலே!

    • 2 replies
    • 623 views
  15. காத்திருப்பேன் அவள் வருவாள் ..பக்கத்தில் அவள் அண்ணன் ...சைக்கிளில் வருவார் ..அருகிலே செல்வேன் ..கண்ணால் கதைப்பேன் ..அவள் யாடையால் கதைப்பாள் ..அண்ணன் கிட்டவரும் போது..என் நடை வேகமாகும் ...பாடசாலைதான் எனக்கு காதல் சாலை ..கொப்பியை பரிமாறும் போது ..கடிதமும் பரிமாறும் ...விழுந்தது கடிதம் நிலத்தில் ..கண்டார் ஆசிரியர் தந்தார் ..முதுகில் நல்ல பூசை ..நண்பர்கள் கிண்டல் நண்பிகள் அவளை கிண்டல் ..காலம் காதலாகியது ..கல்வி கரைக்கு வந்தது ..காதலும் கரைக்கு வந்தது ...^பள்ளி காதல் தொடரும் பள்ளிவரை இல்லை பள்ளி படலைவரை --------------------------------------------------------------------------------------------------------- தாத்தா நான் நல்லா சைக்கிள் ஒடுறானா ..? என்ற பூட்டனின் க…

  16. தமிழ் மோகத்திலே செயல் வேகத்திலே கொண்ட நேசத்திலே நல்ல பாசத்திலே நெஞ்சின் ஈரத்திலே அன்பின் சாரத்திலே அகத்தின் இளமையிலே அறிவின் முதுமையிலே உள்ளத் தண்மையிலே பேசும் உண்மையிலே நாவின் வன்மையிலே செய்யும் நன்மையிலே உனக்கு நிகர் உலகில் உண்டோ ஈடு செய்ய ஏதும்வழி உண்டோ http://gkanthan.wordpress.com/index/nikar/

  17. "என் பிறந்த நாளுக்கு மனதில் உதித்தது" "அழகான வாழ்வு முடிவுக்கு பயணிக்குது அன்பான இதயங்களை எண்ணிப் பார்க்குது அதிகாரம் செலுத்திய காலமும் உண்டு அறிவு கொண்டு உணர்ந்ததும் உண்டு!" "ஆரம்பித்த எதுவும் முடிவு காணுமே ஆத்திரம் குறைத்தால் வாழ்வு சிறக்குமே ஆசை கொண்டு ஈடுபட வேண்டும் ஆணவம் துறந்து செயல்பட வேண்டும்!" "இன்பம் துன்பம் நீயே தேடியது இருப்பதைக் கொண்டு வழியை அமை இதயம் திறந்து வரவேற்க பழகு இல்லாத ஒன்றுக்கு ஏங்குவதைத் தவிர்!" "ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே ஈகை என்பது வறியவர்க்கு கொடுப்பதே ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன் ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை!" "உயர்ந்த நோக்கம் மனதில் எழுக உரிமை கெடாமல் ஒப்பந்தம் செய்க …

  18. அறிவுமதி அண்ணனின் க(அ)ண்ணன் பாட்டு ------------------------------------------------------------------------------------------------ என்ன குறையோ என்ன நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! என்ன தவறோ என்ன சரியோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! என்ன வினையோ என்ன விடையோ அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்! நன்றும் வரலாம் தீதும் வரலாம் நண்பன் போலே கண்ணன் வருவான்! வலியும் வரலாம் வாட்டம் வரலாம் வருடும் விரலாய் கண்ணன் வருவான்! நேர்க்கோடு வட்டம் ஆகலாம் நிழல்கூட விட்டுப் போகலாம்! தாளாத துன்பம் நேர்கையில் தாயாக கண்ணன் மாறுவான்! அவன் வருவான் …

    • 2 replies
    • 1.5k views
  19. விட்டில் பூச்சியே.... உனக்குத்தெரியமா? நீ நேசிப்பது நெருப்பின் ஒளியை எரிந்து போவாய் என அறியாமல் என் காதலும் அப்படித்தான் கடசியில் எரிந்து போவது ஆண்கள்தான் உன்னைப்போல ;)

  20. [size=5]புன்னகையின் காரணமாயிருந்தவளுக்குப் புற்றுநோய் [/size] பதின்மக்கனவுகள் பிணங்களும் அழுகையும் பிணியகலாப் பொழுதின் விடியலைத் தேடிய வீரரின் தடங்களில் 13வயது அவளுக்குக் காட்டிய வாசல் களமுனை கைத்துப்பாக்கி கனரக ஆயுதக் கையாள்கை..... வெற்றியே அவளது வெறிக்கனவு விடுதலையே அவளது விழிக்கனவு விளக்கி முடியுமுன் கொடுத்திடும் காரியம் முடித்திடும் தைரியம் அவளைப் பிடித்தது எல்லோர்க்கும்.... அசாத்தியத் துணிவும் ஆழுமையும் பகையின் வீட்டுக் குகைக்குள் பணி.... சிறைகளும் , சித்திரவதைக் கூடங்களும் அவளுக்கு வலித்ததில்லை வலிமையை விதைத்து வீரமாய் உரமாக்கி கறுப்பாய் வெடிக்கும் களம் தேடிக் கனவுகள் விரிந்தது.... கனவுகள் பலித்திடக் கைத்துப்ப…

    • 2 replies
    • 771 views
  21. பெண்ணின் பெருமை பேசி பெண்ணை அடிமை கொள்வார் பெண்ணைப் புகழ்ந்து பாடி பேதைமை கொள்ள வைப்பார் பொன்னே மணியே என்றும் பூவின் வாசமென்றும் பேசிப் பேசிப் பெண்ணைப் பேச்சிழக்க வைத்திடுவார் பூரணை நிலவுபோல் புகுந்தவீடு வருபவள் பத்தும் தேய்த்து தான் தேய்ந்து பழையதாய் ஆகியபின் பெண்ணா நீ என்று பேசியே கொன்றிடுவர் பாலைவனத்தின் பசுந்தளிரே போதை கொள்ள வைக்கும் பணக்கள்ளே பவளமே பென்னரங்கே பொன்மணியே போற்றி உனைத் தொழுவேன் பவளமே எனக் கூறிப் பத்திரமாய்ப் பூட்டிவைப்பார் பாவையரை வீட்டினுள்ளே பாழாய்ப் போன பெண்கள் பூட்டியது தெரியாது பெண்ணென்றால் இதுவென்று பெருமை மிகக் கொண்டிடுவார் பண்பாடு இதுவென்று பட்டிகள் போல் நடத்துவதை பெருமிதமாய் எண்ணி பொங்கும் மனதடங்க புத்தகமாய் ஆகிடுவார் பேதைப் பெண்ணே …

  22. Started by Kaviipriyai(Ziya),

    பகல் கனவு கன்னிப் பருவத்தின் வாசலிலே அவள் பொற்ச்சிலையாக நிற்கையிலே வீர நடை போட்டுக் கொண்டே அங்கே அழகிய வாலிபன் போகையிலே சந்தன வாசம் அவன் மூக்கைத் துளைக்கையிலே அத்திசை நோக்கியும் அவன் பார்க்கையிலே பட்டென பதிந்திட்ட அவள் முகம் உணர்ந்து அவன் தன்னிலை மறந்து கனவின் வாசலிலே..... இராத்திரி அவன் பார்த்த திரைப் படத்தினிலே காதலர்களாக வந்து ஆடிப்பாடியவர்கள் போலே அவனும், அவனை தன்னிலை மறக்க வைத்த பெண்ணுடனே காதல் கொண்டு ஆடிப்பாடினான் அமெரிக்காவினிலே.......... ஆடிபாடின வேளையிலே சட்டென யாரோ கைகள் அவன் தோளைத் தொடுகையிலே சிலிர்த்தவன் நெஞ்சினில் பல எண்ணங்களிலே தொட்டவர் கைகளை இறுகப் பற்றையிலே சடாரென விழுந்தது அறைகள் அவன் கன…

  23. ‘அடைமழை ஓய்ந்த நாளின் மாலைக்கும் இரவிற்கும் இடைபொழுதில் வாசலில் வந்து நின்றாள் தேவதை . . தொலைதூர பிரயாணத்தின் வழியிடையே எப்போதும் போல் ஏதாவதொரு விடுபடுதலின் நிமித்தமாக இருக்கலாம் . . அடித்து பெய்த மழையின் இறுதி பொழிவுகள் அவளது அதரங்களினூடே . . தேநீர் குவளைகள் இரண்டிலொன்றில் இயலுமான வெப்பம் இதமாயிருக்கும் அவளது உறைகுளிர் போக்க . . பகலிரவு காலத்தை மாற்றிடும் இமை கதவுகள் மூடி திறந்ததும் பெருக்கெடுத்தது வெள்ளி நிரோடை . . ஆசுவாசப் படுத்திக் கொள்ளட்டுமென கன்னங்களை துடைத்து விட்டு மெல்லிய கைகளை பற்றினேன் . . தேவதை மொழியால் விம்மியபடி மாநகர பேருந்தின் லாவகமான காய்நகர்த்தல்களை சொல்லி பேச்சுடைந்தால் . . ஒ! வென அழ…

  24. என்னை எப்போதும் ..... உன்னுடனேயே வைத்திரு ...... உயிர் பிரியும் வேளைவரை ..... என்னை உன்னுடனேயே ..... வைத்திரு - உன்னை விட ..... யாரும் துணையில்லை ...... எனக்கு - மற்றவர்களில் ..... நம்பிக்கையுமில்லை ............!!! யான் பெற்ற அறிவு ...... யான் பெற்ற செல்வம் ..... யான் பெற்ற புகழ் ....... எல்லாம் உன்னிடமிருந்தே ....... கிடைத்தவை என்பதை ..... யான் நன்றாக புரிவேன் .......!!! மாயையில் மயங்காமல் இருக்க ....... போதையில் பேதலிக்காமல் இருக்க ..... ஆணவத்தில் நடனமாடாமல் இருக்க ...... என்னை எப்போது உன்னோடு ....... வைத்திரு இறைவா ...... என்னை எப்போதும் ..... உன்னுடனேயே வைத்திரு ...... உயிர் பிரியும் வேளைவரை ..... என்னை உன்னுடனேயே ..…

  25. வழக்கமாக எழும் நேரத்திலேயே இன்றும் எழுந்து விட்டேன்...! விழிக்கும் போதே கடவுளிடம் பிராத்தனை செய்து கொண்டேன் நேற்று நடந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழாதிருக்க... இன்னும் கொஞ்சம்நேரம் தூங்கி இருக்கலாம் என கெஞ்சுகிறது அந்த கீழிமைகள்... நேற்றைய தினங்களின் பிடிக்காமல் போன முன் அனுபவங்களால் மனதுக்குள் சொல்லிக் கொண்டேன் இன்றாவது ஒழுங்காக இரு என்று... இருந்தும்., தேவதை ஒருத்தியின் உதாசீனப் பார்வையிலும், கசக்கி, பிழிந்து வெளியேத் தள்ளி பின்பு வழக்கம் போல புறப்பட்ட பேருந்து பயணத்திலும் .. டேய்.. வீட்ல, சொல்லிட்டு வந்துட்டியா என சபித்துவிட்டுப் போன ஆட்டோக்காரனிடமும்... அலுவலகம் சென்று மறதியால் செய்த பிழை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.