கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
பேனையை விட எனக்கு பென்சிலாக இருக்க ஆசை ஏனெனில் நீ சீவி கூர் பார்க்கையில் உன் கன்னங்களில் அடிக்கடி... முத்தமிடலாம்.
-
- 2 replies
- 970 views
-
-
நீ என்னைத் தேடி வருகிறாய் நான் நீயாக மாறி என்னைத் தேடுகிறேன் * நடைபயிலும் குழந்தையாய் வருகிறாய் தாயாய் என் கவனம் எல்லாம் உன் மேல் * நீ எங்கெல்லாம் என்னைத் தேடுகிறாய் என்பதை ரசிப்பதற்காகவே நான் தொலைந்து போகலாம் * நீ வந்தவுடன் கை கொடுப்பதா கன்னம் கொடுப்பதா என்ற குளப்பத்தை சாதுரியாமாய் தீர்த்து வைத்தாய் கைகூப்பி வணக்கம் சொல்லி * உன் தாவணிக்கு எப்போது என் தாயின் கைவிரல்கள் முளைத்தது தடவியதும் குழந்தையாய் உறங்கி விட்டேனே -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 969 views
-
-
யாரது ? இலக்கத் தகடுகள் அடையாளம் சுட்ட குற்றவாழிகளாய் தனித்தனி அடையாளங்களுடன்..... தெரிந்த முகங்களைத் தேடிக்கொண்டு போனதில் அவள் திடீரென ஞாபகத்துக்குள் வந்தாள் பின்னே ஓடியவரிசை முன்னிழுந்துப் பார்த்து உறுதியாகிறது அவள் தான் அது.... மணியாய் ஒலித்த குரல் மறக்காத குரலுக்குரிய மொழி மண்தரையில் ஒலிவாங்கியோ ஏதோ இருமருங்கும் தடுத்திருக்க ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறாள் . செஞ்சோலைக் குழந்தைகளின் சித்தியாய் சிறந்த பாடகியாய் தோழமையின் ஆழமாய் அறிமுகமானவள்...... மூச்சு முட்ட சுதந்திர தேசக்கனவோடு களங்களில் நின்று காவியச் செதுக்கலில் தன் கடமைகள் செய்தவள்..... இன்று..., எல்லாம் எல்லாருமாய் ஆட்தேடும் வரிசையில் அவளும்…
-
- 0 replies
- 969 views
-
-
கவிபாடும் புலவர்களே இங்கே வாருங்கள் யாழ் இணையம் மன்னனுக்கு வாழ்த்துப் பாடுங்கள் தமிழாலே அவனை நீங்கள் குளிப்பாட்டுங்கள் உங்கள் கவிதையலே அவனை நீங்கள் அலங்கரியுங்கள் கப்பம், வரி இல்லாத இந்த மன்னனை வாழ்த்துக்கூறுங்கள் கவிஞர்களை ஊக்குவிக்கும் இவன் பண்பை பாருங்கள் சங்ககாலப் புலவர்போல கவிகள் புனையுங்கள் வீரம் செறிந்த கவிகளையும் இந்தமன்னனுக்குப் பாடுங்கள் வீதி உலா வரும் மன்னன் அழகைப் பாருங்கள் குடிக்கள் குறைகளை எடுத்துக் கூறுங்கள் இந்த தமிழ் மன்னன் நீடூழி வாழ வழிகள் செய்யுங்கள்
-
- 2 replies
- 969 views
-
-
ஓடுமீன் ஓடுமோ....... உறுமீன் வருமோ.......... வாடி நிற்குமாம் கொக்கு.......... வயிறு காய காய! கூரிய முள்ளு தொண்டை............... கிழித்தால் - கொக்கும் செத்துபோகும்! ஏர் கொண்டு உழுத நிலமல்ல......... எலும்புகூடுகளின்மேல் எழுகின்ற பூமி... அத்திவாரத்தின் கீழிருந்து..... அவசரமாய் நீர் அதிர்ந்தால்....... அழிந்து போவது........... யாருமல்ல- நாமேதான்!! (இது மட்டுறுத்தினர் - யாழ்பிரியாவுக்கு)
-
- 1 reply
- 968 views
-
-
புலம் பெயர்ந்த என் ஈழத்து நண்பர்களை இப்போது நான் சந்திப்பதில்லை அவர்களது மின்னஞ்சல்களை நான் திறப்பதில்லை கணினியின் உரையாடல் அறையில் அவர்களது வணக்கங்களுக்கு இப்போது நான் பதில் வணக்கம் சொல்வதில்லை வரலாற்றில் இதற்கு முன்பும் இது போல்தான் இருந்ததா அழிவின் மௌனங்கள்? * நிறைய பார்த்தாகிவிட்டது சிதைக்கப்பட்ட உடல்களின் புகைப்படங்களை நிறைய காண்பித்தாகிவிட்டது படுகொலைகளின் படச்சுருள்களை நிறைய படித்தாகிவிட்டது கொரில்லா போர் முறையின் யுத்த தந்திரங்களை வரலாற்றில் இதற்கு முன்பும் இப்படித்தான் சொல்லப்பட்டதா விடுதலையின் கதைகள்? * முப்பதாண்டுகளின் குருதிவெள்ளம் ஒவ்வொரு சதுரமைலாகச் சுருங்கி இப்போது …
-
- 5 replies
- 968 views
-
-
பிறப்புக்கும் இறப்புக்குமான மானுட உனது உரிமைகளை கொண்டாடுவதும் நினைவு கூறுவதும் போன்றே எனது பிறப்புக்கும் இறப்புக்குமான நினைவுகளை நான் கொண்டாடுவதை நினைவு கூறுவதை மறுக்கும் உரிமை உனக்கில்லை. All human beings are born free and equal in dignity and rights
-
- 2 replies
- 967 views
-
-
நினைவுகள் வலியிருக்கும்-உன் நினைவுகள் என்னவோ.... அப்படியில்லை இதுதான்..... உண்மை காதலின் ...... அடையாளம்....!!! வாழ்க்கையில் .... எல்லாம் இழந்துவிட்டேன்..... உன் நினைவையும் இழந்தால்...... அனாதையாகி விடுவேன்...... ^^^ நினைவுகள் இல்லாத காதலே தோற்கும் ^^^ கவி நாட்டியரசர் இனியவன்
-
- 3 replies
- 967 views
-
-
எங்கே என் பிள்ளையென ஏங்கும் ஒரு தாயின் உள்ளம் எங்கே என் அண்ணா என விம்மும் ஒரு தங்கையின் மனசு எங்கே என் அக்கா என சத்தமாய்க்கேட்கிறான் ஒரு தம்பி இதையெல்லாம் பார்த்தும் ..... உள்ளுக்குள் மட்டுமே அழுகிறான் ஒரு தந்தை கந்தக சூட்டினில் சந்தண மேனிகள் கருகின குண்டுமழை நடுவினில் குருதியாற்றின் கரையினில் விதைக்கப்பட்டன காந்தள் விதைகள் கண்ணீரும் செந்நீரும் ஊற்றி தியாகங்கங்களையும் வெற்றிகளையும் உரமாக்கி நிமிர்ந்து வளர்ந்தன கார்த்திகைக்கொடிகள் வெட்டிப்போட்டாலும் புடுங்கி எறிந்தாலும் கார்த்திகை மாதமானால் மண்ணை விலக்கி மீண்டும் மீண்டும் வளர்ந்து பூப்பூக்கும் மண்ணுக்குள் புதைந்துகிடக்கும் சயணைட் குப்பிகள் துருஏறிப்போனாலும் கார்த்திகை கிழங்குகளாய் மீண்டும் மீண்டும் மண்கிழித…
-
- 6 replies
- 967 views
-
-
கல்வாரிப்பூக்கள் உடைந்த மனங்களினை ஒட்ட வைப்போம் உறுதியுடன் அன்பைப் பற்ற வைப்போம் நிறைந்த துயரினையே நிறுத்தி வைப்போம் நெஞ்சில் துணிவுதனை நிலைக்க வைப்போம் சோகச் சுமைகளினை இறக்கி வைப்போம் சொல்லில் இனிமைகனை சுவைக்க வைப்போம் மனதின் காயங்கள் மறக்க வைப்போம் மண்ணின் மனிதத்தை மதிக்க வைப்போம் சிந்திக்கும் ஆற்றலினை வளர வைர்போம் சிரிப்பில் துயரங்கள் துரத்தி வைப்போம் ஞாபகத் திறன்களை குவித்து வைப்போம் ஞானிலம் மகிழ்ந்துமே களிக்க வைப்போம் தீய சிந்தனைகளை அகற்றி வைப்போம் தீமைகள் அணுகிடா விலக்கி வைப்போம் அனுபவப் பாடங்கள் படித்து வைப்போம் ஆசைப் பேய்களினை அடக்கி வைப்போம் வாழ்வின் அர்த்தங்கள் புரிய வைப்போம் வளமாய் வாழ்வுதனை வாழ வைப்போம் ஆன்மீக தேவைகளில் …
-
- 1 reply
- 967 views
-
-
விடுதலையை நேசித்த எத்தனையோ விருட்ச்சங்களை தின்றுவிட்டது அநீதி ஆயினும் இன்னமும் விடுதலைக்கான வேட்கையை சுமந்து கொண்டு வீச்சுடன் எரிகிறது விடுதலைத்தீ சுதந்திரத்திற்கான கனவுகள் பொய்த்துப்போன கணங்களில் இருந்து கணன்று கொண்டேயிருக்கிறது எங்களின் இதயம் விடுதலை பெறும் நாளில் வீடுவருவோம் என்று சொல்லிச்சென்ற தோழர்களின் வருகைக்காய் எங்களின் வாழ்க்கையைப்போலவே இருண்டு கிடக்கும் வீட்டினை சுத்தம் செய்து வைத்திருப்பாள் தங்கை இப்பொழுதும் எப்பொழுதும்போல் தோழர்களுக்காய் இயலாமையில் எங்கள் இதயங்களைப்போலவே கொதித்துக்கொண்டிருக்கும் அடுப்பில் சமைத்துக்கொண்டிருப்பாள் என் தாய் நேற்றையைய்ப்போலவே இன்றைக்கும் தேடுகிறேன் இன்னமும் …
-
- 0 replies
- 967 views
-
-
தலையணையினடி- சர்ப்பம்! எலிகள்......... கீரிகளை பற்றி ....... கிண்டலாம்..! தமாசு! இனத்தோடு இனம் சேருமாம்(? ) எழுதி சென்றவனை ... இழுத்து வந்து குரல்வளை... நெரித்து கொன்றால்தானென்ன? காக்கைகூட தன்னினம் அழிந்தால் அழுமே....! ஈசல் கூட தன் இனத்தோடுதான் சேர்ந்து பறக்குமே! நடந்ததா....? இனமாம்- சேருமாம்............ வாய் கிழிய சொன்ன ஞானியே... வந்துபார்..ஈழ தமிழரிடை... நீ செத்தே போனாய்!! நடக்கிறது..... உன் வரிகளுக்கு வாய்க்கரிசி! சந்தோசமாய் மெல்லு!! உளறி தள்ளினாய்....... தருகிறார் பரிசு...... தாங்கி கொள்!!
-
- 2 replies
- 967 views
-
-
ஒன்றென எழுவோம் வாடா! ஈழம் விடுதலை பெறும் வரை வேறு சிந்தனை எனக்கில்லை! சூழும் கலி யாவுமே மாளும்! "ஈழம்" மீளுமே!. பாழும் பிரிவினை கொண்டதால் எம் இனம் பட்ட பாடுகள் போதுமே! இனி! வீழும் துன்பம்" சொல்லியே இணைவோம் வா என் தோழனே! கொத்துக்கொத்தாய் உன் இனம் செத்து மடிதல் கண்டுமே! வேறு திசை நீ பார்க்கின்றாய் வரலாற்றில் ஏன் பழி ஏற்கிறாய்?!! தனி ஒரு மனிதனுக்கிங்கே உணவில்லை என்று கொண்டால் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான்" அந்த பாரதி எங்கே சென்றான்?! உணவில்லை, உடையில்லை உறையுளும் நிலையில்லை! தினம் தினம் பொழிகின்ற குண்டுக்குள் எம் உயிர்!!. இனம் என் தமிழினம் வோரொடு அழிக்கினம் இதைக் கண்டுமா சோதரா கண் மூடிக்கிடக்கினம்?! விடு விடு பகைமைகள் …
-
- 2 replies
- 966 views
-
-
குண்டு மழையோடு மாமழையும் பொழிகிறது மகிந்தாவின் அநியாத்தால் குண்டு மழையும் வான்பிதாவின் புண்ணியத்தால் மாமழையும் பொழிகிறது ஒரு குடையின் கீழே குடியிருந்த எங்கள் வாழ்வு வன்னிக் காட்டில் வெள்ளக்காடாய் மிதக்கிறது நேற்றிருந்த வீட்டையும் இன்றிருந்த குடிலையும் இழுத்துப் போனது வெள்ளம் இனியென்ன செய்வது? முன்னேறி வரத்துடிக்கும் எதிரிகளின் காலடிச் சத்தம் முன்னரங்க முறியடிப்பில் பிள்ளைகளின் யுத்தத்தால் தொலைகிறது ஆயிரம் அர்பணிப்புகள் அடைமழை போல் புரட்சிகள் ஆடு நனையுது என்று ஓநாய்களும் அழுகிறது தூக்கிப் போக முடியாத சொத்தாக நிமிர்ந்து நின்ற தென்னையும் பனையும்கூட சரிந்துபோய்க் கிடக்கிறது எத்தனை முறை இடம்பெயர்ந்தாலும் …
-
- 1 reply
- 966 views
-
-
ஜாதிகளும்.... மதங்களும்..... தூக்கிப் பிடிக்கும் கொடிகளாகிவிட்ட பின்னர், "ஜனநாயகம்" என்ற போலிச்சாயம் பூசிய அழுக்குத் துணிகளுக்கு, ஏன் வெள்ளைச் சிறகுகள்....???????
-
- 0 replies
- 966 views
-
-
பஸ்சில் போனாலும் - எனக்கு கப்பலில் போவது போலவே இருந்தது. அலைகள் இருக்கவில்லை - ஆனால் ஆட்டம் இருந்தது. குன்றும் குழியுமான அந்த வீதிகளில் மழை நீர் தேங்கி... ஓரத்து வாய்க்காலோடு ஒன்று சேர்ந்து குளக்கரையை...நோக்கி சலசலக்கிறது. லொறிகள் ஒன்றிரண்டு ஆங்காங்கே புரண்டு கவிண்டு கிடந்தன. இருபக்கமும் நாட்டப்பட்டிருந்த விளம்பரப்பலகைகளிலும்... சேறு படிந்து புது வர்ணம் பூசப்பட்டிருந்தது. இடையிடையே "நன்றி மீண்டும் வருக " என்பது மட்டும் மகுட வாக்கியமாக... பொறிக்கப்பட்டிருந்தது. குலுக்கிற குலுக்கலில் குடல் வெளியே வந்து.. விடும் போல் இருந்தது. சாளரம் ஊடாக சிலர் கழுத்தை நீட்டி வாந்தி எடுத்தார்கள். பலர் இருக்க முடியாமல் துள்ளித்துள்ளி…
-
- 6 replies
- 966 views
-
-
உயிர்க்கூடு அதிர்கிறது உணர்வுகள் அழுகிறது இமை மடல் சிவக்கிறது கண்ணீர்ச்சுரப்பி வற்றி இரத்தம் கசிகிறது சாவுச்செய்திகளை கேட்டுக் கேட்டே காது என்புகள் அறுந்து போகிறது ஈழ மண்ணில் இரத்த ஆறு ஓடுகிறது சவக்குழிகள் நிறைகிறது நடுவீதியில் இறங்கி பதாகை சுமந்து உரத்து கத்தி ஒரு பயனுமில்லை நடு வீதியில் உச்சி வெயிலில் நின்று உரிமைக்காய் உரத்து கத்தியவரி;ன் உயிர் மூச்சு பட்ட பகலில் பறிக்கப்பட்டுள்ளது இலங்கைத்தீவு ஜனநாயக போர்வையுடன் கண் காதுகளை இறுக மூடிய சர்வதேசம் குருட்டு மனித உரிமை பேசுகிறது கதிர வெளியில் காட்டு மிராண்டிகள் தின்று குவித்த உறவுகளுக்காய் நீதி கேட்டவன் உயிரிழந்து கிடக…
-
- 3 replies
- 965 views
-
-
அன்னையின் ஆஸ்தி போராட்டம் என்பது சோத்துக்கல்ல நாம் போராட்டப்புறப்பட்டது படிப்புக்கும் அல்ல தொழில் வாய்ப்பு, மொழிப்பற்று ......இவைக்குமல்ல மனிதனாக வாழவிடாமை என்னை, என் குடும்பத்தை, என் உறவுகளை,... உயிர்வதை செய்தமை சிங்களம் அப்படியேதான் உள்ளது அதற்கு மனிதமொழி புரியாது தர்மவழி தெரியாது கடைசி சாட்சி எனது அன்னையின் இறுதி ஆஸ்தி இது போதும் நாம் ஒன்றாகி புறப்பட.......
-
- 1 reply
- 965 views
-
-
ஓரு கைய்தியின் கண்ணீர்.....!! ( களுத்துறை. வெலிக்கடை .புசா..அவலம்) சுற்றி வளைத்தொரு முற்றுகையிட்டு சுற்றி பிடித்தான்... பற்றியே பிடித்து தேகம் மீதிலே பறைகள் அடித்தான்... கை களை கூட்டியே விலங்கினை மாட்டியே கட்டியே இழுத்தான்... கோர சொற்களை கத்தியே உரைத்து எட்டியே உதைத்தான்... கொட்டியே கொட்டியே என்றென கத்தியே முட்டியை உடைத்தான்.... நாளங்கள் உடைத்து குருதிகள் பாயவே குலுங்கியே சிரித்தான்.... எரிதனல் போலவே வலியினில் துடிக்கையில் ஏறியே அடித்தான்... தளும்புகள் மீதிலே பெற்ரோலை ஊத்தியே அலறவே வைத்தான்.... நினைவுகள் இழந்து நிலத்தினில் வீழ்கையிலும் நிமிர்தி…
-
- 1 reply
- 964 views
-
-
முத்துக்குமரனுக்கு ஒரு அஞ்சலி ................ தாய் தமிழகம் தந்த முத்து தரணியில் வந்துதித்து தொப்புள் கொடி உறவுகளுக்காய் ஈந்த மாபெரும் பரிசு தன் இனிய உயிர் , பத்திரிகையாளனாய் சாதித்தது போதாதென்று தமிழ் ஈழ சரித்திரத்திலே முத்தாக பதிந்து விடான் தமிழக முத்துக்குமரன் ஐயா முத்துக்குமரா .... நட்புக்கு இலக்கணம் உயிர் கொடுத்தல் இதை மிஞ்சியும் ஒரு கொடை உண்டோ ? உன் ஆன்மா சாந்தியடையட்டும் , உன் எண்ணம் நிறைவேறும் , ஆழ் துயிலில் ,நீ சாந்தி அடைவாய் சாந்தி... சாந்தி ...சாந்தி ........... ,
-
- 1 reply
- 964 views
-
-
[size=5]மண்ணுக்காய் மரணித்த மாவீரரே மண்டியிடுகின்றோம் உங்கள் முன் மரணத்தை மகிழ்வாய் ஏற்று மார்பில் குண்டேந்தி மாவீரரானீர் தேசம் என்னும் தேனடைக்காய் தெருவெங்கும் நீர் தேரிழுத்தீர் பால்ப் பருவம் மாறாத பதினாறு வயதிலும் பட்டினி கிடந்து பதமாய் ஆனீர் பகைவர் கோட்டைகள் பாங்குடன் தகர்த்து பாரினில் எம்மக்கோர் பாதையானீர் பள்ளிசெல்லும் பருவத்தில் பட்டு மெத்தை சுகம் துறந்து பெண்ணும் ஆணும் சரிநிகராய் பெருமை கொள்ளச் செய்திட்டீர் பெற்றவள் முகம் மறந்து உற்றவர் தனைத் துறந்து உம் தேசம் காப்பதற்காய் உயிர் தந்த உத்தமரே உம்மை நாம் எப்படி வணங்கிடுவோம் பேதைமை கொண்டவர்கள் பேர் வாங்கப் பணம் கொடுப்பார் பொன் கொடுப்பார் பொருள் கொடுப்பார் …
-
- 14 replies
- 963 views
-
-
உனக்கென்று - ஒரு கொள்கை உள்ளவரை உன்னை யாரும் கொல்ல முடியாது! தரிசாய் கிடந்தாலும் எரிந்து போக துணியும் ! அடுத்தவன் வந்து........ எம் நிலத்தில் ஆர்பாட்டமாய் ......... ஏதும் செய்ய நினைத்தால் ....... மொத்தமாய் வெறுக்கும்! முடியாமல் போனாலும்.. மோதி முக்கி தன்னை அழிக்கும்....... தாயை விற்று பிழைக்க நினைக்காது! கோவம் கொள்வாய் நீ முடக்கிய விரல்களில் கோவம் - நீளம்.. கொன்றுதான் ஆகணும்......... யாரை -? தெளிவில்லை! அது இருக்கட்டும்- அண்ணாக்கு திவசம் கொடுக்கணுமே இன்று- முடிந்ததா? கவனம் - சடங்கு என்று ஏதோ செய்கிறாய் உன் சமையல் அறையில் சிங்களன் ஏவிய செல்- விழகூடும்! மொத்தமாய் - உன் சந்தத…
-
- 1 reply
- 962 views
-
-
மீட்டுத் தருமா??? இந்திய மண்ணின் மானத்தைக் காக்க கார்கிலுக்குப் புறப்பட்டான் காவிரியாற்றுத் தஞ்சை மண் வீரன் தடுத்தான் அவனது தம்பி இனமான இளவேள் அண்ணா! நீ புரியும் போர் மீட்டுத் தருமா நம் தமிழர் இழந்த தேவிகுளம், பீர்மேடு, வேங்கட மலை, கோலார் தங்கவயல் கச்ச தீவு போன்றவற்றை ஏன் நம்மின மக்களின் காவிரியாற்று நீரையாவது சிந்திக்கத் தொடங்கினான் கார்கில் வீரன். - இளங்கோ (பிரித்தானியா) வாளை எடுக்கட்டும் கரங்கள்! பாலுக்கு பாலகன் வேண்டி அழுதான் கல்லுக்கு பாலூற்றி தமிழன் தொழுதான் வேலுக்கு முருகன் எம் இனத்தின் தந்தை புல்லுக்கு தம்பியாய் செய்தான் நிந்தை தமிழன் ந…
-
- 1 reply
- 962 views
-
-
உயிர் குடிக்காதே.. தீயே தன்னினத்தினில் அன்பும் தன்னையழித்தாலும் பிறரையழித்திடாப் பண்பும் இதயத்தில் நிகரில்லா உரமும் உன்னத உயிரினை ஈய்கின்ற வரமும் உள்ளவன் முனையினும் நீ நல்லதோர் தீயெனில் அக்கினி தேவனே..பஞ்ச பூதங்களில் பாகனே.. நல்லதோர் தமிழனின் உயிர் குடிக்காதே.. மாறாய் தீயவர் பொசுங்கிடும் தீயாயிரு.. கண்ணியம் மீறினால் கரியாக்கிடு.. அநியாயங்கள் செய்வோரை மாய்த்திடும்.. மரணக்குழியாயிரு..தீயே நல் நெஞ்சம் கொண்ட மனிதர் உயிர் மட்டும் குடியாதிரு
-
- 4 replies
- 961 views
-
-
எங்கள் சாம்பல் மேட்டில். காட்டுமிராண்டித்தனமாகவும் நயவஞ்சகமாகவும் எம் முன்னோர்கள் தோற்கடிக்கப்பட்ட எங்கள் மண்ணில், கனவான்களாகவும் கடவுளர்களாகவும் எங்களில் தம்மைத் திணித்தபடி இன்னும் எங்கள்மேல் தம் வன்மங்களைக் கொட்டித் தீர்க்கப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். மீட்பர்கள் என்று தம்மை அழைத்தபடி தமக்குத் தாமே பட்டங்கள் சூட்டிப் பாணங்கள் ஏவி எம்மைச் சூழ்ந்து கொண்டனர். தம்பக்கம் சார்ந்தால் அரியாசனம் இல்லையேல் அரக்கர் நாமம் காலங் கடந்தும் இதுவே தொடர்கதையாய் நீண்டு கொண்டிருந்தது. மறைந்திருந்து பாணங்கள் ஏவுவதில் வல்ல ராமர்கள் மீண்டும் நாவாய்கள் ஓட்டிப் புதர்களைக் கடந்து கரையைத் தொட்டனர். அம்புகள் வீழ்ந்து மீண்ட…
-
- 3 replies
- 961 views
-